வரையறுத்த T.M. கிருஸ்ணா கம்பனியின் 2014.03.31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான இலாபம் ரூபா 900 000 மாகவும் செலுத்திய இடைக்காலப் பங்கு இலாபம் ரூபா 1 200 000 மாகவும் நிறுத்தி வைக்கப்பட்ட வருவாய்கள் ரூபா 1 800 000 மாகவும் (2014.03.31இல்) இருந்தது.
2013.03.31 இல் முடிவுற்ற ஆண்டு காலத்தில் கொள்வனவுப் பட்டியல் தவறவிட்டதன் காரணமாக கடன் கொடுத்தோர் மீதியானது ரூபா 200 000 இல் குறைவாக எழுதப்பட்டிருந்தது. இப்பிழை திருத்தப்பட்டிருக்கவில்லை. 2013.04.01 இல் உள்ளபடியான திருத்தப்பட்ட இலாபநட்டக்கணக்கு மீதி?