

- உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பிரதிகளை வழங்குவது நிரம்பல்
ஊக்குவிப்புக் கொள்கை என அழைக்கப்படும்.
- நிரம்பல் அதிகரிப்புக் கொள்கையினைச் செயற்படுத்தும் போது
முதலீடு அதிகரிக்கும் உற்பத்திச் செலவு குறைந்து உற்பத்திக்
காரணிகளின் விளைதிறன் அதிரிக்கும்.
- இவ்வாறு பிரதான பேரினப் பொருளாதார மாறியினை எதிர்பார்த்த
மட்டத்துக்குக் கொண்டு வருவதற்கு நிரம்பல் ஊக்குவிப்புக்
கொள்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு நிரம்பல் அதிகரிப்புக்
கொள்கை நடவடிக்கைகளைப் பயன்படுத்த முடியும்:
- வரிச் சீரமைப்பு
- தனியார் மயமாக்கல்
- சட்டதிட்டங்களைத் தளர்த்துதல்
- ஊழியர் சந்தை மறுசீரமைப்பு
- மூலதனச் சந்தை மறுசீரமைப்பு
உலகமயமாதல்



வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டு தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் நாடுகள் உலகப் பொருளாதாரத்துடன் இணைதல் மற்றும் பொருளாதாரங்கள் திறந்துவிடப்படல். ஆகும்.
சக்திகள் –
- போக்குவரத்துத்துறை வளர்ச்சி
- தொழில்நுட்ப வளர்ச்சி
- பேரளவுச் சிக்கனங்கள் நீக்கப்படல்.
- பாதுகாப்பு கொள்கைகள் நீக்கப்படல்.
- பொருளாதாரங்கள் ஒன்றிணைதல்.
நன்மைகள் –
- உலக வர்த்தகத்தின் அளவு உயர்தல்.
- தொழில் வாய்ப்புக்கள் உயர்தல்.
- நேரடி முதலீட்டு வருகை
- புதிய நுட்பங்கள் உரிமையாதல்.
- போட்டியும் உற்பத்தி தரங்களும் உயர்தல்.
தீமைகள் –
- சர்வதேச ரீதியாக வருமானப்பரம்பலில் ஏற்றத்தாழ்வு
- சுற்றாடல், சுகாதார பிரச்சினை
- உள்நாட்டு பிள்ளைப்பருவ கைத்தொழில்கள் பாதிப்பு
- சர்வதேச பயங்கரவாதம்
- கலாச்சார சீரழிவு
அரசாங்கத்தை இனங்காணல் 













- அரசின் இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் முழு ஒழுங்கமைப்பையும் அரசாங்கம் எனலாம்.
- இறைமை அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லது மக்களின் விருப்பங்களை கொள்கையாக மாற்றுவதனையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதனையும் மேற்கொள்ளும் அரசின் செயல்ரீதியான பகுதி அரசாங்கமாகும்.
அரசாங்கம் பற்றிய வரைவிலக்கணங்கள்
- மனித சமூகமொன்றின் கருமங்களை நிர்வகிக்கும், நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட நிறுவனம்.
- அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மரபுரிமையாளராகும். ( அரசின் இறைமையைப் பிரயோகிக்கும் சட்டரீதியான அதிகாரம் பெற்ற தாபனமாகும்.)
- ஒரு அரசை ஆளும் நபர்களின் குழு அல்லது ஒரு நபர்.
- மனித சமூகத்தை ஆளும் நிறுவனம்.
- அரசு அல்லது சமூகத்தை நிர்வகிக்கும் முறை
அரசாங்கத்தின் இயல்புகள்
- அரசு எண்ணக்கரு ரீதியானது, கட்புலனாகாதது, நடைமுறைச் சாத்தியமற்றது அத்தகைய அமைப்பை நடைமுறை சாத்தியமானதாக மாற்றியமைப்பது அரசாங்கமாகும்.
- அரசின் நோக்கங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தும் ஒரு நிறுவனம்.
- கண்ணுக்குப் புலனாகாத அரசை கட்புலனாக்கும் கருவி
- அரசின் நோக்கங்களும் செயற்றிட்டங்களும் அரசாங்கத்தினூடாகவே மக்களை சென்றடைகின்றன.
நடைமுறையில் பயன்பாட்டிலுள்ள இலத்திரனியல் பண வகைகள்



இலத்திரனியல் பண கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய பிரிவினர்
- அட்டையின் உரிமையாளர்
- அட்டைகளை வழங்கிய வங்கி
- விற்பனையாளர் வியாபாரி
- கடனட்டைச் சங்கம்
இலத்திரனியல் பண அட்டையின் முகப்பில் காணப்படும் பண்புகள்
- வழங்கப்பட்ட வங்கியின் இலச்சனை
- முப்பரிமாணப் படம்
- அட்டையின் இலக்கம்
- கடனட்டையின் வியாபாரக் குறி.
- காலம் முடிவடையும் திகதி
- கடனட்டை உரிமையாளர் பெயர்
அட்டையின் பின்புறத்தில் காணப்படும் விபரங்கள்
- காந்தப் பட்டி
- கையொப்பப் பட்டி
- கடனட்டையின் பாதுகாப்புக் குறி
- Customer Service தொலைபேசி இலக்கம்
கடனட்டையினால் வாடிக்கையாளருக்கும் வணிகங்களுக்கும் கிடைக்கும் நன்மைகள்
வாடிக்கையாளருக்கு
- இலகுத் தன்மை
- வெளிநாட்டு கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படும்.
- கழிவுகள் உபகாரப் புள்ளிகள் கிடைக்கும்.
- ATM வசதி
வணிகங்களுக்கு
- புரள்வு அதிகரித்து இலாபம் அதிகரிக்கும்.
- கடன் விற்பனை என்பதால் பணம் கிடைப்பதில் நிச்சயத் தன்மை
- கொடுக்கல் வாங்கல் இலகு
- இலவசமாக விளம்பரம் கிடைக்கும்.
கடனட்டைக் கொடுக்கல் வாங்கலின் தீமைகள்
வாடிக்கையாளருக்கு
- செலவொன்று ஏற்படுவதை பொறுக்க வேண்டி ஏற்படல்.
- அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் கொடுப்பனவு செய்ய இயலாது இருத்தல்.
- கொடுப்பனவு செய்ய கால தாமதம் ஏற்படின் தாமதக் கட்டணம் உயர் வட்டி அறிவிடப்படும்.
வணிகங்களுக்கு
- தொழிற்படு மூலதன பற்றாக்குறை ஏற்படும்.
- வங்கித் தரகு கட்டணம் செலுத்த வேண்டும்.
- விசேட பயிற்சியுடன் கூடிய ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும்.
வரவட்டைப் பயன்பாட்டால் வாடிக்கையாளர் பெறும் நன்மைகள் தீமைகள்
நன்மைகள்
- கொடுக்கல் வாங்கலை பூர்த்தி செய்தல்.
- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அறிக்கையிடல்.
- கழிவுகள் கிடைத்தல்.
- ATM வசதி
- பணத்தைக் கொண்டு செல்லும் அச்சமில்லை.
தீமைகள்
- செலவுகளைப் பொறுக்க வேண்டி ஏற்படும்.
- தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படல்.
- மோசடிகள் நடைபெற இடமுண்டு
- கணக்கில் பண மீதி அற்றுப் போகும் போது கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியாது.
இலங்கை மத்திய வங்கியின் நோக்கங்கள்
- பொருளாதாரத்தையும் விலையையும் நிலைத்த தன்மையில் பேணிச் செல்லல்.
- நிதி முறைமையின் உறுதித் தன்மையைப் பேணல்.
மத்திய வங்கி தமது நோக்கங்களை நிறைவேற்ற மேற்கொள்ளும் பணிகள்
பிரதான பணிகள்
- நாணயக் கொள்கையை அமுல் செய்தல்.
- நாணய மாற்று வீதத்தை அமுலாக்கல்.
- நாணய வெளியீடு
- வங்கிகளினதும் வங்கியல்லா நிறுவனங்களினதும் கண் காணிப்பாளராகச் செயற்படல்.
- அரசின் பொருளாதார ஆலோசகராக, வங்கியாளராக, நிதி முகவராகச் செயற்படல்.
முகவராண்மைப் பணிகள்
- அரச கடன் முகாமைத்துவம்
- அந்நிய செலாவணிக் கட்டுப்பாடு
- ஊழிய சேமலாப நிதியத்தை முகாமை செய்தல்.
- சிறியளவு நிதியீட்டல் செயற்றிட்டம் , கிராமிய கடன் திட்ட முறை தொடர்பாக அடிப்படை நிறுவனமாகத் தொழிற்படல்.
மூடப்பட்ட பொருளாதாரம் வெளிநாட்டு வர்த்தகத்துக்காக திறந்து விடப்படும் போது திறந்த பொருளாதாரம்.


















திறந்த பொருளாதாரம் ஒன்றின் சமநிலையைக் கணிக்கும்போது பயன்படுத்தப்படும் மாறிகள்
- சேமிப்பு (S)
- முதலீடு (I)
- அரச நுகர்வு (G)
- மாற்றங்கள் (TR)
- தன்னியல்பான வரிகள் (T)
- இறக்குமதி (M)
- ஏற்றுமதி (X)
இங்கு இறக்குமதி எனக் கருதப்படுவது தன்னியல்பான இறக்குமதி மட்டும்.
திறந்த பொருளாதாரம் ஒன்றின் சமநிலை கீழே தரப்படும் இரண்டு அணுகுமுறைகள் மூலம் விபரிக்கப்பட முடியும்.
- வருமான – செலவு அணுகுமுறை
- உட்பாய்ச்சல் – வெளிப்பாய்ச்சல் அணுகுமுறை
வருமான – செலவு அணுகுமுறையின் கீழ் திறந்த பொருளாதாரம் ஒன்றின் சமநிலை![screenshot-66]()
திறந்த பொருளாதாரம் ஒன்றில் மொத்தச் செலவு
![screenshot-67]()
திறந்த பொருளாதாரம் ஒன்றில் மொத்த வருமானம்![screenshot-68]()
திறந்த பொருளாதாரம் ஒன்றில் சமநிலை வெளிப்பாய்ச்சல் – உட்பாய்ச்சல் அணுகுமுறை![screenshot-69]()
மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் வெளிப்பாய்ச்சல் மற்றும் உட்பாய்ச்சல் அணுகுமுறையின் கீழ் சமநிலை
![screenshot-70]()
- இங்கு சேமிப்பு (S), தன்னியல்பான வரி (T), இறக்குமதி (M) என்பன வெளிப்பாய்ச்சலாக கருதப்படும்.
- முதலீடு (I) அரச நுகர்வு மற்றும் ஏற்றுமதி (x) என்பன உட்பாய்ச்சலாக கருதப்படும்.






பேரினப் பொருளாதார நோக்கங்கள்
- நிறைதொழில் மட்டம்
- பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தல்
- விலை உறுதிப்பாடு
- சென்மதி நிலுவைச் சமநிலை
- நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி
பேரினப் பொருளாதார மாறிகள்
- பேரினப் பொருளாதார மாறிகளின் மட்டங்கள் வேறுபடும் விதத்துக்கேற்ப பொருளாதாரத்தின் செயற்பாடு தீர்மானிக்கப்படும்.
- பிரதான பேரினப் பொருளாதார மாறிகள் பல பொருளாதாரத்தினுள் காணப்படுகின்றது.
- உற்பத்தி
- வேலைமட்டம்
- விலைமட்டம்
- நுகர்வு
- பேரினப் பொருளாதார மாறிகளின் மட்டங்களும் அவை கால மாற்றத்துடன் வேறுபடும் விதமும் உள்ளக, வெளிக்காரணிகளால் தீர்மானிக்கப்படும்.
- பேரினப் பொருளதார மாறிகள் சாதகமான முறையில் மாற்றமடையாத போது பொருளாதார செயற்பாடு பாதகமடையும்.
பேரினப் பொருளாதாரப் பிரச்சினைகள்
- பொருளாதாரமொன்றின் மொத்தச் செயற்பாட்டினூடாக ஏற்படும் பிரச்சினைகள் பேரினப் பொருளாதாரப் பிரச்சினைகளாகும்.
- வேலையின்மை
- பணவீக்கம் உயர்வடைதல்
- நாணயமாற்றுவீதம் வீழ்ச்சியடைதல்
- பேரினப் பொருளாதார மாறிகளை எதிர்பார்த்த மட்டத்தை
அடையச் செய்வதனால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
பேரினப் பொருளாதார முகாமைத்துவம்
- பேரினப் பொருளாதார நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பொருளாதாரத்தை நெறிப்படுத்தல் பேரினப் பொருளாதார முகாமைத்துவம் என அழைக்கப்படும்.
பேரினப் பொருளாதார கொள்கைகள்
- பேரினப் பொருளாதார முகாமைத்துவத்தின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பேரினப் பொருளாதார கொள்கைகள் என அழைக்கப்படும்.
- பணக்கொள்கை
- அரசாங்க நிதிக் கொள்கை
- வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை
அரசின் அடிப்படைகள்
- வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, மக்கள்தொகை, அரசாங்கம், இறைமை இந்நான்கு பண்புகளும் இணைந்த ஒரு ஒழுங்கமைப்பைக் குறிக்கவே அரசு என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.
- இவற்றுள் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் அரசு என்ற பதம் உருவாகமுடியாது.
- சர்வதேச அங்கீகாரம் என்ற அம்சமும் இன்றைய அரசுகளை அரசாக இனம்காண்பதற்கான அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
- இதனைத் தவிர நாணயஅலகு, அரசியலமைப்பு, முத்திரை என்பவற்றையும் குறிப்பிடலாம்.
வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு
- அரசொன்றின் நிலப்பேற்றுக்கு எல்லை வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அவசியமானதாகும். இதனூடாகவே அங்கு வாழ்கின்ற மக்கள் அரசின் எல்லையை உறுதி செய்து கொள்வார்கள்.
- வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு என்பது நாட்டின் எல்லைக்குட்பட்ட தரைப்பிரதேசம் அதற்குரிய கடற்பரப்பு, ஆகாயம் என்பன உள்ளடக்கிய சகல விடயங்களையும் உள்ளடக்கியது.
- இந்நிலப்பரப்பு அளவில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற பாரியளவு நிலப்பரப்பு கொண்டுள்ள நாடுகளையும் வத்திக்கான், நவுறு போன்ற மிகக்குறைந்தளவிலான நிலப்பகுதியைக் கொண்ட அரசுகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
மக்கள் தொகை
- மக்கள் இல்லாத நிலப்பரப்புக்களை அரசு என்று கூறுவதில்லை.
- அரசு என்பது மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு மானுட ஒழுங்கமைப்பு எனின் மக்களின்றி அரசு ஒன்று தோன்றவோ, தொழிற்படவோ முடியாது.
- அம்மக்கள் தொகை இவ்வளவு இருக்கவேண்டும் என்ற வரையறை இல்லை. நடைமுறையில் சீனா, இந்தியா போன்ற அதிகமான சனத்தொகையையும் கொண்ட நாடுகளும் வத்திக்கான், நவுறு,சென்மரினோ, மனாக்கா போன்ற மிகக்குறைந்த சனத்தொகையைக் கொண்ட நாடுகளும் காணப்படுகின்றன.
- அரிஸ்டோட்டில் கிரேக்ககால நகர அரசுக்கு பொருந்தும் வகையில் “ஒரு நாட்டில் சனத்தொகை பத்தாகவும் இருக்கக்கூடாது, பத்தாயிரமாகவும் இருக்கக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம்
- அரசின் விருப்பங்களை நடைமுறையில் செயற்படுத்துவது அரசாங்கமே ஆகும். இதனாலேயே அரசாங்கம் “அரசின் முகவர்” “அரசின் கருவி” என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகின்றது.
- அரசின் இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ளதோடு அரசுக்குள் சட்டத்தையும், ஒழுங்கையும், பாதுகாப்பையும் குடிமக்களை ஒரு நோக்கத்தின் பால் நெறிப்படுத்துவது அரசாங்கமாகும்.
- தெளிவில்லாமல் இருக்கின்ற ஓர் அரசுக்கு உருவம் கொடுப்பதாக இவ்வரசாங்கம் அமைகிறது.
- ஒவ்வொரு அரசாங்கமும் மூன்று விதமான பணிகளை மேற்கொள்கின்றன. சட்டமியற்றுதல், நீதிபரிபாலனம் செய்தல், நிர்வகித்தல் என்பனவே அம்மூன்று பணிகளுமாகும்.
இறைமை
- ஒரு அரசானது தனது நிலப்பரப்பிற்குள் கொண்டுள்ள முழுநிறைவானதும் முடிவானதுமான சட்டரீதியான அதிகாரமே இறைமை ஆகும்.
- இவ்இறைமை அதிகாரத்தைப் பயன்படுத்தியே அரசு சட்டங்களை இயற்றுவதோடு அச்சட்டங்களுக்கான மக்களின் அடிபணிவையும் பெற்றுக் கொள்கின்றது.
- உள்இறைமை என்பது உள்நாட்டில் குறிப்பிட்ட அரசிற்கு சமமான வேறு எந்த ஓர் அதிகார நிறுவனமும் இருக்கமுடியாது என்பதைக் குறிக்கின்றது.
- வெளி இறைமையானது ஒரு அரசு வெளிநாட்டு சக்தியின் கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாகவும் தன்னாதிக்கத்துடனும் சர்வதேச சமூகத்தில் மேலான அதிகாரத்துடன் செயற்படுவதாகும்.
- அரசு ஒன்றிற்கு உள்நாட்டில் உயர்ந்த ஸ்தானத்தையும் வெளிநாடுகளில் சமநிலையையும் வழங்குவதால் இறைமை என்பது அரசின் இன்றிமையாத ஒரு மூலக்கூறாகின்றது.
- உள்இறைமைக்கு அமுக்கக்குழுக்களும், வெளிஇறைமைக்கு வல்லரசுகளும் தடையாக உள்ளது.
சர்வதேச அங்கீகாரம்
- சர்வதேச அங்கீகாரம் என்பது ஒரு அரசை ஏனைய அரசுகள் ஏற்றுக்கொள்வதாகும்.
- சர்வதேச அங்கீகாரம் எனும் விடயம் அரசு என ஓர் அரசியல் அலகை இனங்காண்பது தொடர்பான சர்வதேச ஒருமைப்பாடு “மொண்டிவீடியோ” எனும் ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- வர்த்தகம், பொருளாதாரம், கலாசார பரிவர்த்தனைகள் என்பவற்றிற்கு இவ்வங்கீகாரம் மிக மிக அவசியமானதாகும்.
- பிறநாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு அரசு தொடர்ச்சியாக நிலைபெறுவதும் கடினமாகும். உதாரணம் : றொடீசியாவில் (சிம்பாப்வே) “அயன்சிமித்தின்” அரசாங்கத்தை உலகநாடுகள் அங்கீகரிக்காததினால் தொடர்ச்சியாக நிலைபெறமுடியவில்லை.
- நவீன காலங்களில் பிறநாடுகளின் அங்கீகாரம் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது.










அறிமுகம்
உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாய நாடாகவும் ஜரோப்பாவில் மிக முக்கிய நாடாகவும் சுவிஸ் விளங்குகின்றது. சுவிஸானது ஏழரை மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அரசியல் பொருளாதார சமுக ரீதியாக தன்னிறைவைப் பெற்று விளங்குகின்றது. 13 ஆம் நூற்றாண்டில் 3 மாவட்டங்கள் அல்லது காட்டு கோட்டங்கள் இணைந்து பின்னர் இது 13 கோட்டங்களாக விரிவடைந்துள்ளது.
இதன் பின்னர் 1796 ஆம் ஆண்டு சுவிஸை பிரான்ஸ் கைப்பற்றியது நீண்டகாலம் பிரான்சினுடைய ஆதிக்கத்திலிருந்து இந்த நாடு 1815 ஆம் ஆண்டு வியன்னா உடன்படிக்கை முலம் சுதந்திரம் அடைந்தது. இதன்பின்னர் வலிமையான நாட்டினை உருவாக்கும் பொருட்டு 1848 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு வரையப்பட்டது. எனினும் அது தளர்ச்சியான ஒரு யாப்பாக காணப்பட்டதனால் 1874 ஆம் ஆண்டு பெரும் பகுதி திருத்தி அமைக்கப்பட்டு இன்று வரை அவ் யாப்பே நடைமுறையில் உள்ளது.
சுவிஸ் அரசியமைப்பின் சிறப்பியல்புகள்
◊ எழுதப்பட்ட நெகிழாத சமஸ்டி யாப்பு
உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்து மிகப் பழமையான எழுதப்பட்ட யாப்பாக இது காணப்படுகின்றது. இவ் அரசியல் யாப்பினை மாற்ற திருத்த வேண்டுமாயின் மத்திரயரசினது பெரும்பாண்மையும் கன்ரன்களின் பெரும்பாண்மையும் மக்களின் சம்மதத்தினையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவிற்கு அடுத்து பழமையான சமஸ்டியாகவும் இது காணப்பட்டது.
◊ நேரடி ஜனநாயக முறை
புராதன கிரேக்க நகர அரசுகளைத்தொடர்ந்து நேரடி ஜனநாயகத்தை சிறப்பாக செயற்படுத்தி வருகின்ற நாடாக சுவிஸ் காணப்பட்டது. இதன்படி குடியொப்பம், குடிமுனைப்பு, மீளழைத்தல், ஆரம்ப பேரவை ஆகிய நேரடி ஜனநாயக ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
◊ கூட்டு நிர்வாக குழு அரசாங்க முறை
உலகிலேயே எந்தவொரு நாட்டிலும் காணப்படாத தனித்துவமானது ஒரு அரசாங்கம் இங்கு நடைமுறையில் உள்ளது. சட்டத்துறையிலிருந்து தெரிவு செய்யப்படும் 7 உறுப்பினர்களைக் கொண்ட சமஸ்டி பேரவை நாட்டின் நிர்வாகத்துறையாக செயற்படுகின்றது.
◊ ஈரவை சட்டத்துறை
சுவிஸ் சட்டத்துறையான சமஸ்டி மன்றம் தேசிய அவை என்ற முதலாம் மன்றத்தையும் மாநிலங்கள் அவை என்ற இரண்டாம் மன்றத்தையும் கொண்டுள்ளது.
◊ இரண்டாம் மன்றத்தில் கன்ரன்களுக்கு சம பிரதிநிதித்துவம்
சுவிஸ் சட்டத்துறையின் இரண்டாம் மன்றமான மாநிலங்களவைக்கு சம பிரதிநித்துவம் கொடுக்கப்படுகின்றது. இங்கு 26 கன்ரன்களில் 20 முழுக்கன்ரன்களிலிருந்து 40 உறுப்பினர்களுக்கு ஆறரை கன்ரன்களிலிருந்து 06 உறுப்பினர்களும் அங்கத்துவம் பெறுகின்றனர்.
◊ பல கட்சி முறை
தீவிர ஜனநாயக கட்சி, சுவிஸ் மக்கள் கட்சி, கிறிஸ்தவ குடியரசுக்கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் சட்டசபையில் பிரதிநித்துவம் பெறுகின்றனர்.
மேலும் மாநிலங்கள் தமக்கென யாப்பினை கொண்டிருத்தல், மாநிலங்கள் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், மாநிலங்கள் தமக்கென பாதுகாப்பு படையினை வைத்திருத்தல், மக்களின் அடிப்படை உரிமைகள் ஆகிய சிறப்பியல்புகளை சுவிஸ் அரசியலமைப்பு கொண்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடு















1. நேரடி முதலீடு – ஒரு நாட்டின் தனிநபரோ நிறுவனமொன்றோ பிறதொரு நாட்டில் காணிகளை கொள்வனவு செய்தும் கைத்தொழிற்சாலைகள், மூலதனப்பொருள் இருப்புக்கள் போன்றவற்றினை கொள்வனவு செய்து ஏற்படுத்தும் தேறிய முதலீடுகள் ஆகும்.
இதன் போது வெளிநாட்டு மூலதனம், முகாமைத்துவம், தொழில்நுட்பம் என்பன முதலீகள் இடம்பெறும் நாட்டினை நோக்கி பாயும்.
2. பட்டியலிட்ட முதலீடு – ஒரு நாட்டின் தனிநபரோ நிறுவனமொன்றோ பிறதொரு நாட்டின் உள்நாட்டு பணத்தினால் வெளிப்படுத்தப்படும் நிதிப்பொறுப்புக்கள் மீது ஏற்படுத்தும் முதலீடுகள். ( கம்பனிப் பங்குகள், பிணைப்பத்திர கொள்வனவு )
நன்மைகள் –
வெளிநாட்டு மூலதன வருகை
புதிய முகாமைத்துவ வருகை
புதிய தொழில்நுட்ப வருகை
நாட்டின் கடன் சுமை குறையும்.
பாதீட்டுப்பற்றாக்குறை குறையும்.


















அறிமுகம்
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், தெற்காசிய முதல் தர வல்லரசு நாடாகவும் இந்தியா விளங்குகின்றது. 1.2 மில்லியன் குடித்தொகையைக் கொண்ட இன் நாட்டின் இருந்து 1930 களில் பர்மாவும். 1947ம் ஆண்டு பாகிஸ்தானும் பிரிந்து தனிநாடுகளாக மாறின. நீண்ட காலம் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த இந்நாடு 1947ம் ஆண்டு ஓகஸ்ட் 15ம் திகதி சுதந்திரம் அடைந்தது. 1950ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா ஓர் குடியரசாக மாறியது. இன்று வரை இவ்வரசியல் யாப்பே இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
இந்தியா அரசியல் யாப்பின் சிறப்பு இயல்புகள்
◊ எழுதப்பட்ட நெகிழா யாப்பு
அரசியல் நிர்ணய சபையினால் உலகிலே நீண்ட அரசியல் யாப்பாக இது வரையப்பட்டது. 395 உறுப்புரைகளும் 10 பின்னிணைப்புகளும் இதில் உள்ளன.
◊ கூட்டாட்சி அரசியல் அமைப்பு
இந்திய அரசியல் அமைப்பில் முதலாம் சரத்து இந்தியா ஓர் குடியரசு என அறிமுகம் செய்கின்றது. யாப்பின் 07ஆவது அட்டவணை அதிகாரப் பகிர்வனை குறிப்பிடுகின்றது. இதன் படி மத்திய பட்டியல், மாநிலப்பட்டியல், பொதுப்பட்டியல் என்ற அடிப்படையில் அதிகாரம் பங்கிடப்பட்டுள்ளது. மத்தியப்பட்டியலில் 97 விடயங்களும், மாநிலப்பட்டியலில் 66 விடயங்களும், பொதுப்பட்டியலில் 47 விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
◊ பாரளுமன்ற அரசாங்க முறை
பிரித்தானியா அரசியல் அமைப்பு போன்று பிரதமர் தலைமையில் அமச்சரவை நாட்டின் நிர்வாகத்தினை முன் எடுக்கின்றது.
◊ ஈரவைச் சட்டத்துறை
இந்தியாவின் சட்டத்துறையான நாடாளுமன்றம் மக்கள் அவை என்ற முதலாம் மன்றத்தையும், மாநிலங்கள் அவை என்ற இரண்டாம் மன்றத்தையும் கொண்டுள்ளது.
◊ பல கட்சிமுறை
இந்தியாவில் இன, மத, மொழி, சாதி ரீதியான பல தன்மை காணப்படுவதால் பல கட்சி முறைத் தோற்றம் பெற்றுள்ளது.
◊ சுதந்திரமான நீதித்துறை
இந்தியா ஒரு சமஸ்டி ஆட்சி நாடாகப் காணப்படுவதால் மேலான நீதி மன்றமான உச்ச நீதிமன்றம் பக்கம் சாராத நடுநிலைமையுடன் செயற்படுகின்றது. நீதிப்புனராய்வு அதிகாரம் காணப்படுகின்றது.
இந்திய சட்டத்துறை – நாடாளுமன்றம்
இந்தியாவின் சட்டத்துறை நாடாளுமன்றம் என அழைக்கப்படுவதுதோடு அது பின்வரும் இரண்டு சபைகளை கொண்டு இருக்கும்.
1. மக்களவை – லோக்சபா (முதலாம் மன்றம், கீழ்சபை)
2. மாநிலங்களை – இராஜிய சபா (இரண்டாம் மன்றம் மேல் சபை)
இங்கு மக்களவை மக்களை பிரதிநிதிப்படுத்த மாநிலங்களை சமஸ்டி அலகுகளாக மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.