இலங்கையின் பங்குச் சந்தை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • முதலாந்தரப்பங்குச் சந்தை
  • இரண்டாந்தரப் பங்குச் சந்தை (C.S.E)

வரையறுக்கப்பட்ட கொழும்புப் பரிவத்தனை

  • நோக்கங்கள்
    • பங்குகளின் பரிமாற்றத்திற்கான நிலையை உருவாக்கல்.
    • பிணையங்கள் சந்தையில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தல்.
    • நியாயமான பங்குச் சந்தையை உருவாக்கல்.
    • திறமையான நிதிச் சந்தையை உருவாக்கல்.
  • தொழிற்பாடுகள்
    • பங்கு வழங்கல் ஆலோசனை வழங்கல்.
    • பங்குகளின் விலையினை நிர்ணயித்தல்.
    • மக்களுக்கு பங்குக் கொள்வனவுக்கு வழிகாட்டல்.
    • முதலீட்டு வளர்ச்சிக்கு சாதனமாக நிலையை உருவாக்கல்.

பங்குச் சந்தை முதலீட்டின் நன்மைகள்

  • பங்கிலாபம்
  • மூலதன இலாபம்
  • உபகார வழங்கல்
  • உரிமை வழங்கல்
  • பங்குப் பிளவு

இலங்கை பிணையங்கள் பரிவத்தனை ஆணைச் சபையின் குறிக்கோள்கள்

  • நியாயமான பிணையங்கள் சந்தை உருவாக்கல்.
  • முதலீடுவோரின் நிதி நலனை பாதுகாத்தல்.
  • பிணைங்கள் சந்தையின் உயர்தரத்தை பேணல்.
  • நட்டமடையும் முதலீட்டாளருக்கு ஏற்படும் இழப்புக்கள் ஈடு செய்தல்.

பங்கு விலைச் சுட்டெண்கள்

  • அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI)
  • மொத்த வருவாய்ச் கூட்டி (TRI)
  •  S&P – SL – 20 பங்கு விலைச் சுட்டெண்

பங்குச் சந்தையில் பட்டியலிடும் முறைகள்

  • தொழிற்பாடுகள்
    • அறிமுகப்படுத்தல்
    • விற்பனைக்கான அறிவித்தல்/ கொடை முனைவு
    • பங்களிப்புக்கான அறிவித்தல்
  • தொகுதிக் கடன்கள்
    • அறிமுகப்படுத்தல்
    • பங்களிப்புக்கான அறிவித்தல்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் ஆவணங்கள்

  • சாதாரண பங்குகள்
  • முன்னுரிமைப் பங்குகள்
  • பங்காணைப்பத்திரம்
  • அரச கடன் பிணைப் பத்திரம்
  • கூட்டிணைக்கப்பட்ட தொகுதிக்கடன் பத்திரம்

மத்திய வைப்புத் திட்ட முறை (CDS) தொழிற்பாடுகள்

  • வாடிக்கையாளர் பதிவு, கணக்கு ஆரம்பம்
  • வியாபாரத்தள நடவடிக்கைகள் நிறைவேறும் வரை பங்குகளை பாதுகாத்தல்.
  • பணவைப்புக்களை ஏற்று தீர்வுச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
  • பங்குப் பரிவத்தனை நிலையத்தின் பதிவாளராக செயற்படல்.

பங்குச் சந்தையில் பிரதான பலகையில் பெயர் பதிவதற்கான நிபந்தனைகள் (MAIN BOARD)

  •  500m க்கு குறையாத கூறப்பட்ட மூலதனம்
  • 25% பங்குகள் பொதுமக்களுக்கு வழங்கியிருத்தல்.
  • 1000 க்கு மேற்பட்ட பங்குதாரர்கள்
  • தொடர்ந்து 3 வருடம் பங்குச் சந்தையில் சிறப்பான தொழிற்பாடு

ஊக்குவிப்புப் பலகையில் பெயர் பதிவதற்கான நிபந்தனைகள் (DIRISAVI BOARD)

  • 100mக்கு குறையாத கூறப்பட்ட மூலதனம்
  • 10% பங்குகள் பொதுமக்களுக்கு வழங்கியிருத்தல்.
  • 100க்கு மேற்பட்ட பங்குதாரர்கள்

O.T.C பட்டியல்

  • பங்குச் சந்தையில் விலை கூறப்படாத கம்பனிகள் சாதாரண பங்குகளை பட்டியலிட முடியும்.

மீறுவோர் பட்டியல்

  • பங்குச் சந்தையின் நியதிகளை மீறியுள்ள கம்பனிகளை பட்டியலிடும் தற்காலிக ஏற்பாடாகும்.

வெளிநாட்டவர்கள் சியாரா கணக்கின் ஊடாக கொழும்பு பங்குச் சந்தையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியும்.

இக்கணக்குகளைப் பேணும் வங்கி பொறுப்பக வங்கி.

 

வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சிPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் வருமானம் தவிர்நத ஏனைய காரணிகள் மாறாதிருக்க
நுகர்வோர் வருமான மாற்ற வீதத்திற்கும் குறித்த பொருளின் கேள்வி மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.

1. YED = ΔQd % / ΔY %
2. YED = (ΔQd / ΔY ) X ( Y / Qd )

இது 3 வகைப்படும்
1. நேர்த்தொடர்பு உடையது
இது சாதாரணப்பண்டமாகும்.
இது 2 வகைப்படும்
1. அத்தியாவசியப்பண்டம்
வருமான அதிகரிப்பு வீதத்தை விட கேள்வி அதிகரிப்பு வீதம் குறைவு.
நேர்க்கணியப்பெறுமதியில் 1 ஐ விட குறைவு.
(அரிசி, மா, சீனி )

2. ஆடம்பரப்பண்டம்
வருமான அதிகரிப்பு வீதத்தை விட கேள்வி அதிகரிப்பு வீதம் உயர்வு
நேர்க்கணியப்பெறுமதியில் 1 ஐ விட உயர்வு
(அழகு சாதனப்பொருள் )
2. எதிர்த்தொடர்பு உடையது
இது இழிவுப்பண்டமாகும். ஏதிர்த்தன்மை கூட இழிவுத்தன்மை கூடும்.

3. பூச்சிய தொடர்பு உடையது
நுகர்வோர் வருமானத்தில் மாற்ற வீதம் ஏற்படினும் குறித்த பொருளின் கேள்வியில் மாற்ற வீதம் ஏற்படாது.
Ex – அடிப்படைத் தேவை பூர்த்தியான அத்தியாவசியப்பண்டம்
தீர்மானிக்கும் காரணிகள்
1. நுகர்வோர் வருமானம்
2. பண்டங்களின் தன்மை

பயன்பாடுகள்
• பண்டங்களின் தன்மையை அறிய
• சாதன ஒதுக்கீட்டை திட்டமிட
• வறுமை நிலையினை அறிய
• மக்கள் பிரிவினரிடையே வருமானப் பரம்பலை அளவிட

 

அரசியலில் உள்ள தனிநபர்களிலும் தாபனங்களிலும் அழுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயற்படும் தனிநபர் குழுக்கள், அமைப்புக்கள் போன்றவற்றை அமுக்கக் குழுக்கள் என அழைக்கலாம்.

தற்கால இலங்கையில் தொழிற் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், தொண்டர் இயக்கங்கள் போன்ற பல்வகையான குழுக்கள் அரசியல் செயற்பாடுகளில் அழுத்தங்களை மேற்கொள்ளும் முக்கிய தாபனங்களாகும்.

இவ்வனைத்து அழுக்கக் குழுக்களும் இன்று பல்வேறு அரசியல் கட்சிகளால் வழிநடத்தப்படுவதனைக் காணலாம்.

 

இலங்கையில் அரசியல் கட்சிகளும் கட்சிமுறையும்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • 1935 இல் இலங்கை சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. முதல் இந்நாட்டில் அரசியல் கட்சி முறை ஆரம்பமாகியது.
  •  இதன் பின்னர் முறையே ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் தோன்றின.
  • 1947 இன் சோல்பரி அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களின் பின்னரே முறையான அரசியல் கட்சிமுறை ஆரம்பமாயிற்று.
  • 1954 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தாபிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் அரசியலில் முக்கிய இரண்டு கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரசித்தி பெற்றன.
  • தனி ஒரு கட்சி, பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டதாக இருந்தன.
  • இதனால் முக்கிய இரு கட்சிகள் இணைந்து கூட்டு அரசாங்கங்களை அமைக்கும் போக்கு காணப்பட்டு வந்தது.
  • ஐக்கிய தேசிய கட்சி வலது சாரி அரசியல் கட்சி எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி அரசியல் கட்சிகள் எனவும் கருதப்படுகின்றன.

இலங்கையின் அரசியல் கட்சிகள், பல்வேறு இனங்கள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றியமையால் வகுப்புவாதப் போக்குகள் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் காரணமாக பல் கட்சி முறை தோன்ற வழி ஏற்பட்டது.

சமூகப் பல்லினத் தன்மை சமப்படுத்த முடியாத அளவுக்கு வகுப்புப் போராட்டங்கள் இடம்பெற்றமை, கருத்து மோதல்கள், மாகாண சபைகளின் அறிமுகம் போன்ற காரணிகளும் பல் கட்சிமுறை தோற்றம் பெற்றதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளுள் சிலவாகும்.

பல்கட்சி முறை வளர்ச்சியடைந்ததன் காரணமாக அரசாங்கம் ஒன்றைத் தாபித்தல், பதவி இழக்கச் செய்தல் என்பவற்றைச் செய்யும் கருவியாக சிறிய கட்சிகள் வலுப்பெற்றுள்ளன.

பல்கட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கங்கள், கூட்டு எதிர்க்காட்சிகள் தோன்றியமையால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டு அரசாங்கங்கள் அமைவதன் காரணமாக நிலையான, நீண்டகால அரசியல், பொருளாதாரத் தத்துவங்களின் அடிப்படையில் இயங்குவதற்கு அரசாங்கங்களால் இயலாமல் போனமை முக்கிய பண்பாக உள்ளன.

 

அரசியலுக்கும் ஏனைய சமூக விஞ்ஞானங்களுக்கும் இடையிலான தொடர்பு Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

1. அரசியலும் வரலாறும்

வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் பதிவுகளாகும். அதாவது ஒரு நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு, எப்படி நடந்தது என்பதை கூறுவது வரலாறு ஆகும்.

அரசியலில் பல பிரச்சினைகள், கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்படும் போது அவை தோன்றிய விதம், வளர்ச்சி ஆகியனவும் கருத்தில் கொள்ளப்படும். மறுபுறமாக வரலாறு கடந்தகால நிகழ்ச்சிகள், இயக்கங்கள், புரட்சிகள் வளர்ந்த முறையை தெரிவிக்கின்றது. இவ்வாறு அரசியலும் வரலாறும் ஒன்றுக்கொன்று பங்களிப்பதுடன் அரசறிவியலின் பரிசோதனைக் கூடமாகவும் நூல்நிலையமாகவும் காணப்படுகின்றது.

கிரேக்கம் பற்றிய வரலாற்று அறிவின்றி பிளேட்டோ, அரிஸ்டோட்டில் ஆகியோரின் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாது.

அது மட்டுமன்றி ஹொப்ஸ், லொக் போன்றோரின் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ள 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற இரத்தம் சிந்தாப் புரட்சி பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசியலும் வரலாறும் ஒன்றுக்கொன்று பங்களிப்பதுடன் ஒன்றையொன்று முழுமைப்படுத்துகின்றன.

ஜோன்சீலி அரசியல் இல்லாத வரலாறு பயனற்றது என்றும் வரலாறு இல்லாத அரசியல் வேரற்றது என்றும் கூறுகிறார்.

லீகொக் வரலாறு இன்றி அரசறிவியல் சாத்தியமற்றது. அரசறிவியல் இன்றி வரலாறு தனது சிறப்பை இழந்து விடுகிறது என்று கூறுகிறார்.

கார்ணர் அரசியலுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான தொடர்பு  பற்றிக் கூறும் போது இரத்தத்திற்கும் தசைக்குமான தொடர்பாகக் கூறியுள்ளார்.

2. அரசியலும் பொருளியலும்

கடந்த காலத்தில் பொருளியல் அரசறிவியலின் ஒரு கிளையாகவே கருதப்பட்டது. தற்போது அரசியலும் பொருளியலும் தனித்தன்மை வாய்ந்த பாடங்களாக இருக்கின்ற போதிலும் இவை இரண்டிற்குமிடையே தொடர்பு காணப்படுகின்றது.

கார்ள்மார்க்ஸ் போன்ற அரசியல் அறிஞர்கள் பொருளாதாரத்தையும் அரசியலையும் இணைந்த வகையிலேயே தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதாவது அரசுகளை தாராண்மைவாத அரசு மற்றும் சோசஸிச அரசு என்று வகைப்படுத்துவது பொருளியல் காரணியின் அடிப்படையிலேயாகும்.

எந்தவொரு அரசுக்கும் பொருளாதார கொள்கை என்பது இன்றியமையாதது. பொதுக் கொள்கைகளை உருவாக்கவும், சர்வதேச உறவுகளை பேணவும் பொருளியல் என்ற அம்சம் மிகவும் அவசியமான ஒன்றாகவுள்ளது.

மறுபுறமாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு அந்நாடுகளை வகைப்படுத்தலாம். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் உச்சநிலை அடைந்திருக்கும் நாடுகள் வடக்கு நாடுகள் அல்லது செல்வந்த நாடுகள் எனவும் ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எனவும் பொருளாதாரத்திலே பின்தங்கிய நிலையிலுள்ள நாடுகள் குறை விருத்தி நாடுகள் எனவும் வரையறுக்கப்படுகின்றன.

3. அரசியலும் புவியியலும்

அரசு என்ற அமைப்பு நிலப்பரப்பு என்ற புவியியல் அம்சம் இல்லாமல் தோன்றவோ தொழிற்படவோ முடியாது. அரசு ஒன்றின் இயல்பு, செயற்றிறன் என்பவற்றை புவியியல் தன்மை தீர்மானிக்கிறது என அரசியல் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

மொண்டஸ்கியு “ஒரு நாட்டின் பௌதீகத் தன்மை அரசாங்கங்களின் வடிவத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது” எனக் கூறிகின்றார். ஐரோப்பிய அரசுகள், மத்திய கிழக்கு அரசுகள், தென்னாசிய அரசுகள் என்ற அரசுகளின் வகைப்படுத்தல் புவியியலை மையமாகக் கொண்டே இடம்பெறுகின்றன.

மிகச்சிறிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் அரசுகள் ஒற்றையாட்சி அரசாங்க முறைமையைத் தெரிவு செய்கின்றன. அதேபோன்று மலைகளால், ஆறுகளால், கடல்களால் துண்டாடப்படும் நிலத்திணிவுகளைக் கொண்டிருக்கும் அரசுகள் சமஷ்டி ஆட்சி முறைமையைத் தெரிவு செய்கின்றன.

அரசியலுக்கும் புவியியலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பிற்பட்ட காலத்தில் “அரசியல் புவியியல்”,“புவிசார் அரசியல்” எனும் உட்பிரிவுகள் தோன்றவும் காரணமாயின.

4.அரசியலும் சட்டவியலும்

சட்டவியலானது சட்டத்தினைப் பற்றியும் சட்டத்துடன் தொடர்புபட்ட எண்ணக்கருக்களைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது.

அரசறிவியலுக்கும் சட்டவியலுக்குமான தொடர்பு மிகவும் இறுக்கமானதாகும். ஏனெனில் அரசியல் பாடப்பரப்பிலே ஒரு அலகாக சட்டம் என்பது அமைகின்றது.

அரசிற்கு மையமாக இருப்பது சட்டங்களாகும். சட்டத்தின் உருவாக்கம் அமுலாக்கம் வரைக்குமான சகல செயற்பாடுகளையும் மேற்கொள்வது அரசின் நடைமுறை கரமான அரசாங்கம் என்ற அமைப்பாகும்.

அரசாங்கத்தின் முத்துறைகளான சட்டத்துறை – சட்டத்தை இயற்றுகின்றது, நிர்வாகத்துறை – அதனை அமுல்படுத்துகின்றது, நீதித்துறை – சட்டம் பின்பற்றப்படுகின்றதா? அல்லது மீறப்படுகின்றதா? என்பதை கவனிக்கிறது.

இதனைத் தவிர சட்டவியல் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகள் அரசியல் ஆய்வுகளுக்கு உதவுகின்றது.

எனினும் சட்டவியல் அரசியலின் ஒரு பகுதியாக அமைவதால் முழுமைக்கும் பகுதிக்குமிடையிலான தொடர்பை அவை பெறுகின்றன.

5.அரசியலும் உளவியலும்

அரசறிவியல் சடப்பொருட்களைப் பற்றி ஆராய்கின்ற ஒன்றல்ல. மாறாக மனிதனின் அரசியல் நடத்தை பற்றி ஆராய்கின்ற ஒன்றாகும். இதனாலேயே அரசறிவியலுக்கும் உளவியலுக்குமிடையில் நெருக்கமான தொடர்பு காணப்படுகிறது.

மனிதன் ஓர் அரசியல் விலங்கு என அரிஸ்டோட்டில் கூறியமையும் இக்காரணத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களுடைய எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்பவே அரசாங்கங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு அரசுகள் மறுக்கின்ற போதே அவை போராட்டங்களாகவும், புரட்சிகளாகவும் வளர்கின்றன.

  • இங்கிலாந்தின் அமைதிப்புரட்சி
  • பிரெஞ்சுப்புரட்சி
  • அமெரிக்க சுதந்திரப்புரட்சி

கட்சிகளின் கொள்கைகளைத் தீர்மானிப்பதிலிருந்து அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிப்பது வரை அரசியலில் உளவியலின் செல்வாக்கு காணப்படுகிறது.

சில வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசாங்க நிர்வாகத்துக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் கூட உளவியல் சோதனைகள் நடாத்தப்படுகின்றன.

நவீன அரசியல் தனிப்பட்ட மனித உளவியலுக்கு மட்டுமல்ல சமூக உளவியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒன்றாக உள்ளது.

 

குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் ஏனைய காரணிகள் மாறாதிருக்க
தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதத்திற்கும் குறித்த பொருளின் கேள்வி மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.

1. PEC = ΔQd % B / ΔP% A
2. PEC = (ΔQd B / ΔP A ) X (P A / Qd B )

இது 3 வகைப்படும்
1. நேர்த்தொடர்பு உடையது
இது பதிலீட்டு பண்ட சோடிகளில் காணப்படும். நேர்த்தன்மை கூட போட்டித்தன்மை கூடும்.

பதிலீட்டு பண்டம் – பண்டம் ஒன்று தரும் பயன்பாட்டை பிறிதொரு பண்டமும் தரல்.
Ex – சீனி சர்க்கரை

• ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு
• ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த்தொடர்புண்டு

2. எதிர்த்தொடர்பு உடையது

இது நிரப்பு பண்ட சோடிகளில் காணப்படும். ஏதிர்த்தன்மை கூட நிரப்புத்தன்மை கூடும்.

நிரப்பு பண்டம் – பண்டம் ஒன்றை நுகரும் போது அதனுடன் இணைந்து பிறிதொரு பண்டமும் நுகரப்படல்.

Ex – கணனி மென்பொருள்

• ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த் தொடர்புண்டு
• ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு

3. பூச்சிய தொடர்பு உடையது
எந்தவொரு தொடர்பும் காணப்படாமை ஆகும். இதன் கேள்விக்கோடு விலையச்சுக்கு சமாந்தரமாக காணப்படும்.
தீர்மானிக்கும் காரணிகள்

1. தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதம்
2. குறித்த பண்ட கேள்வி மாற்ற வீதம்

பயன்பாடுகள்
• பண்டங்களுக்கிடையிலான இணைத்தொடர்பை அறிய
• குறித்த ஒரு செயற்பாட்டின் அளவை திட்டமிட
• பொருளாதார கொள்கைகளை திட்டமிட
• நிறுவன உற்பத்திக்கான போட்டித்தன்மை தனியுரிமைத்தன்மையை அறிந்து விலையை நிர்ணயிக்க

Ex –
1. நிறுவன உற்பத்திக்கான குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி நேர்க்கணிய பெறுமானம் உயர்வாயின் பதிலீடுகள் (போட்டி ) உயர்வு தனியுரிமை குறைவு
விற்பனையை மேம்படுத்த விலையை குறைக்க வேண்டும்.

2. நிறுவன உற்பத்திக்கான குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி நேர்க்கணிய பெறுமானம் குறைவாயின் பதிலீடுகள் (போட்டி ) குறைவு தனியுரிமை உயர்வு விற்பனையை மேம்படுத்த விலையை உயர்த்த வேண்டும்.

 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • 1931ல் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட சீர்திருத்தம் டொனமூர் சீர்திருத்தமாகும்.
  • இலங்கையின் அரசியல் திட்ட வரலாற்றில் பாரிய திருப்பத்தினை ஏற்படுத்திய சீர்திருத்தமாக இது கருதப்படுகின்றது.
  • டொனமூர் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டமைக்கான காரணங்கள்:

◊ இலங்கையரின் தொடர்ச்சியான அரசியல் திட்ட கோரிக்கை
◊ உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றம்.
◊ பிரித்தானியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்.

  • டொனமூர் அரசியல் சீர்திருத்த சிபாரிசுகள்

◊ சர்வசன வாக்குரிமை
◊ இனவாரி பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டமை
◊ அரசாங்க சபை அல்லது அரசுக் கழகம்
◊ நிர்வாகக் குழுமுறைமை
◊ தேசாதிபதி
◊ அமைச்சரவை
◊ பொதுச்சேவை ஆணைக்குழு
◊ மூன்று காரியதரிசிகள்

 

உற்பத்தி வளங்கள் /வளங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உற்பத்திக்கு பயன்படும் உள்ளீடுகள் அனைத்தும் உற்பத்தி வளங்கள் ஆகும்.

பொருளியலில் இவை இரு வகைப்படும்.

  • பொருளாதார வளம்
  •  பொருளாதாரம் அல்லா வளம்

பொருளாதார வளம்

வரையறுக்கப்பட்டதும், அருமைத் தன்மையுடையதுமான வளங்கள், பொருளாதார வளங்கள் ஆகும்.

இவை அருமைத் தன்மையுடைய வளங்களாக இருப்பதனால் இவற்றினை பயன்படுத்தும்போது அமையச் செலவு ஏற்படும்.

(உ – ம்) : நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சி

இதன் பண்புகள்

  •  வரையறுக்கப்பட்ட அருமைத் தன்மையுடையவை.
  •  மாற்றுப்பயன்பாடு உடையவை.
  • அமையச் செலவுடையவை.

பொருளாதாரம் அல்லா வளம்

இயற்கையிடம் இருந்து பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட வளங்கள் ஆகும்.

இவை அருமைத் தன்மை அற்றவையாக இருப்பதனால் அமையச் செலவு இவற்றினை பயன்படுத்தும் போது ஏற்படுவது இல்லை.

(உ – ம்) :  சூரிய ஒளி, காற்று

இதன் பண்புகள்

  •  வரையறையற்றவை அருமைத்தன்மையற்றவை.
  •  மாற்றுப்பயன்பாடு அற்றவை.
  •  அமையச்செலவு அற்றவை.

மீள உருவாக்கக்கூடிய வளம் 

பயன்படுத்தும்போது இழக்கப்படாததும், குறைந்து விடாததும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதுமானதும், இயற்கையினால் வழங்கப்படும் வளங்களும் இவை ஆகும்.

(உ – ம்) : காட்டுவளம், மீன்வளம், சூரிய ஒளி

மீள உருவாக்க முடியாத வளம்

பயன்பாட்டின் போது இழக்கப்படுகின்றதும், குறைவடைகின்றதும், மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாதவாறும், இயற்கையினால் வழங்கப்பட்ட வளங்கள் இவை ஆகும்.

(உ – ம்) : பெற்றோலிய வளம், நிலக்கரி.

பொருளாதார வளங்களும் அவற்றின் பண்புகளும் அவற்றுக்கான உதாரணங்களும்

நிலம் –

  • இயற்கையின் வளம்.
  • அசையும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது.
  • நிரம்பல் நெகிழ்வற்றது.
  • வினைதிறனை உயர்த்தலாம்.
  •  நிலத்துக்கான காரணிக்கொடுப்பனவு (விலை) வாடகையாகும்.
    (உ – ம்) : காற்று, சூரிய ஒளி

உழைப்பு –

  • உயிருள்ள உற்பத்திக் காரணியாகும்.
  • அசையும் தன்மையுடையது.
  • ஓரினத் தன்மையற்றது.
  •  கல்வி, பயிற்சி, அனுபவம் போன்றவற்றில் உழைப்பின் விளைதிறனை உயர்த்தலாம்.
  •  உழைப்பை உடமையாளரிடம் இருந்து பிரிக்க முடியாது.
  • உழைப்புக்கான காரணிக்கொடுப்பனவு சம்பளம் / கூலி ஆகும்.
    (உ – ம்) : ஒரு மணிநேர சட்ட ஆலோசனை, முகாமையாளர் சேவை.

மூலதனம் (முதல்) –

  • மனிதனால் உருவாக்கப்பட்ட வளம்.
  •  விளைதிறன் பெருக்கமுடையது. (உற்பத்தியை பெருக்கவல்லது)
  •  தேய்வடையக்கூடிய சாதனம்.
  •  உற்பத்தியில் மீண்டும் பயன்படுவது.
  •  மூலதனத்துக்கான காரணிக் கொடுப்பனவு வட்டி ஆகும்.
    (உ – ம்) : கட்டிடம், பொறித் தொகுதிகள், உபகரணம்.

மூலதனத்தின் வகைகள்

  •  நிலையான மூலதனம்
  •  சுழலும் மூலதனம்
  •  பொருளாதார பொதுப்பணி மூலதனம்
  •  சமூக பொதுப்பணி மூலதனம்
  •  மனித மூலதனம்
  •  இயற்கை மூலதனம்
  •  சமூக மூலதனம்

நிலையான மூலதனம்

ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட நீண்டகால பயன்பாட்டினை உடையதும், உற்பத்தியில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடியதும் பயன்பாட்டின் போது பெறுமானத்தேய்வு அடையக்கூடியதுமான மூலதனப் பொருட்கள் நிலையான மூலதனம் ஆகும்.

(உ – ம்) : காணிக்கட்டடம், இயந்திரம்

சுழலும் மூலதனம்

ஒரு வருட காலத்திற்கு குறைந்த குறுங்கால பயன்பாடு உடையதும் உற்பத்தியில் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடியதும் பெறுமானத் தேய்வுக்கு உட்படாததுமான மூலதனப் பொருட்களே இவை ஆகும்.

அதாவது உற்பத்தி நிறுவனம் ஒன்றில் காணப்படும் குறுங்காலத்தில் மாற்றமடையும் சொத்துக்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மூலதனம் ஆகும்.

இதுவே தொழிற்படு மூலதனம் என அழைக்கப்படுகிறது.

(உ – ம்) :

  •  மூலப் பொருள் இருப்புக்கள்
  •  அரைகுறை முடிவுப்பொருள் இருப்புக்கள்
  • முடிவுப்பொருள் இருப்புக்கள்

பொருளாதாரப் பொதுப்பணி மூலதனம்

நாடொன்றின் பொருட்கள் சேவைகளில் உற்பத்திக்கு அவசியமான அடிப்படை வசதிகளான பொருளாதார வன்கட்டுமானங்களையும், பொருளாதார மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் பொருளாதார பொதுப்பணி மூலதனம் ஆகும்.

(உ – ம்) :

  1. துறைமுகம், விமானத்தளம் (பொருளாதார வன்கட்டுமானம்)
  2. தொழில்நுட்ப நிறுவனம் (பொருளாதார மென்கட்டுமானம்)

சமூக பொதுப்பணி மூலதனம்

சமூக நலன்களையும், சமூக நீதிகளையும் பேணுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளான சமூக வன்கட்டுமானங்களையும், சமூக மென்கட்டுமானங்களையும் உருவாக்குவதில் ஈடுபடுத்தியுள்ள மூலதனம் ஆகும்.

(உ – ம்) :

  1. பாடசாலை, மருத்துவமனை (சமூக வன்கட்டுமானம்)
  2. காவல் நிலையம், நீதிமன்றம் (சமூக மென்கட்டுமானம்)

இயற்கை மூலதனம்

இயற்கை வளங்களை பொருட்கள், சேவைகளினது உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவாறு மூலதனச் சொத்துக்களாக மாற்றி அமைக்கின்ற போது இயற்கை மூலதனம் எனப்படும்.

(உ – ம்) : வயல் நிலம், தேயிலைத் தோட்டம்.

சமூக மூலதனம்

சமூகத்தின் நன்மை கருதி மக்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுக்கள் / அமைப்புக்கள் இது ஆகும்.

மனித மூலதனம்

நாடொன்றின் தொழிற்படைக்கு கல்வி, பயிற்சி, அனுபவம், சுகாதாரம் வழங்கிவரும் போது அத் தொழிற்படைக்கு ஏற்படுகின்ற சமூக ஆளுமை விருத்தி, தனிப்பட்ட அறிவு, திறன் என்பவையே மனித மூலதனம் ஆகும்.

  •  மனித மூலதனம் தொட்டுணர முடியாது, உளரீதியானது  ஆனால் மூலதனம் நிலையானது, தொட்டுணரக் கூடியது.
  • மனித மூலதனம் உழைப்பு, மூலதனம் என்பவற்றின் பண்புகளை கொண்டிருக்கும்.
  • மனித மூலதனம் விருத்தியடையும், மூலதனம் பெறுமானத்தேய்வடையும்.
  •  மனித மூலதன முதலீடானது தனிப்பட்ட நபரின் திறனுடன் இணைக்கப்பட்டது.

முயற்சி –

தொழிற்பாடுகள்

  • கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளல். (எதனை, எந்தளவில், எவ்வாறு, யாருக்காக உற்பத்தி செய்தல்)
  • உற்பத்தி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்/ செயற்படுத்தல்.
  •  புத்துருவாக்கம் செய்து, இடர்களை தாங்கல்.
  •  இதற்கு வெகுமதியாக இலாபம் வழங்கப்படும்.

பண்புகள்

  •  மனித வளமாக இருத்தல்.
  • தலைமைத்துவம், தன்னம்பிக்கை காணப்படல்.
  •  தூரநோக்கு இருத்தல்.
  •  பயிற்சி வழங்கும் ஆற்றலிருத்தல்.
  • (உ – ம்) : ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
 

01
02
03
04
05
06
07
08
09Please Login to view the Question
10Please Login to view the Question
11Please Login to view the Question
12Please Login to view the Question
13
14Please Login to view the Question
15Please Login to view the Question
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40
41
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45
46
47
48
49
50
51
52Please Login to view the Question
53Please Login to view the Question
54
55Please Login to view the Question
56Please Login to view the Question
57Please Login to view the Question
58Please Login to view the Question
59Please Login to view the Question
60Please Login to view the Question