இலிப்பிட்டுகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இதில் காணப்படும் மூலகங்களாவன C,H,O சில இலிப்பிட்டுகளில் மேலதிகமாக P, N காணப்படும். இலிப்பிட்டுகளில் H : O = 2 : 1 என்ற விகிதத்தில் காணப்படுவது இல்லை.
    காபோவைதரேற்றுடன் ஒப்பிடும்போது இலிப்பிட்டில் H எண்ணிக்கை அதிகமாகவும் O எண்ணிக்கை குறைவாகவும் காணப்படும்.
  • இவை முனைவுத் தன்மை அற்ற மூலக்கூறுகள் ஆதலால் நீரில் கரைவதில்லை. ஆனால், சேதன கரைப்பான்களில் கரைகின்றன. (சேதன கரைப்பான் : ஈதர், பென்சீன், குளோரோபோம்)
  • இலிப்பிட்டுகள் மா மூலக்கூறுகள் அல்ல. அதாவது பல்பகுதிய சேர்வை அல்ல. ஆனால் சில இலிப்பிட்டு மூலக்கூறுகள் பெரியவை.
    அதாவது மூலக்கூற்று நிறை அதிகம் கொண்டவை.
  • இலிப்பிட்டுகள் பல்லினத்துவ கூட்டச் சேர்வைகள் என அழைக்கப்படும். காரணம் கட்டமைப்பிலும் தொழிற்பாட்டிலும் வேறுபட்ட அனேக வகைகளை கொண்டுள்ளன.
  • இலிப்பிட்டின் வகைகளாவன
    1. மூகிளிசரைட்டு (உண்மையான இலிப்பிட்டு)
    2. பொஸ்போ இலிப்பிட்டு
    3. ஸ்ரெரோயீட்டுகள்
    4. ரேபீன் / தேர்பீன்கள்
    5. மெழுகு
    6. கிளைக்கோ இலிப்பிட்டு
    7. இலிப்போ புரதம்

மூகிளிசரைட்டு

  • மூகிளிசரைட் இரு வகைப்படும்
    1. கொழுப்பு – அறைவெப்பநிலையில் திண்மமாக காட்டும்.
    2. எண்ணெய் – அறைவெப்பநிலையில் திரவமாக காட்டும்.
  • மூகிளிசடைட்டின் கட்டமைப்புக் கூறுகளாவன மூன்று மூலக்கூறு கொழுப்பமிலம், ஒரு மூலக்கூறு கிளிசரோல் ஆகும்.

கொழுப்பமிலம்

  • இதன் பொது சூத்திரம் R-COOH
  • இதன் தொழிற்படு கூட்டம் COOH (காபொட்சைட் கூட்டம்)
  • R நீண்ட ஐதரோகாபன் சங்கிலி அதாவது C,H மட்டும் கொண்ட சங்கிலி
  • கொழுப்பமிலத்தில் பொதுவாக C எண்ணிக்கை 16 – 18 கொண்ட ஐதரோகாபன் சங்கிலி காணப்படும். அத்துடன் C அணுக்களுக்கிடையில் ஒற்றை பிணைப்பு / இரட்டை பிணைப்பு காணப்படலாம்.
  • ஐதரோகாபனின் C எண்ணிக்கையை பொருத்தும் C அணுக்களுக்கிடையில் காட்டும் பிணைப்பை பொருத்தும் வெவ்வேறு கொழுப்பமிலங்கள் பெறப்படுகின்றன.
  • C அணுக்களுக்கிடையில் காணப்படும் பிணைப்பு வகையின் அடிப்படையில் கொழுப்பமிலம் 2 வகைப்படும்.
    1. நிரம்பிய கொழுப்பமிலம்
    2. நிரம்பாத கொழுப்பமிலம்
  • நிரம்பிய கொழுப்பமிலம் எனப்படுவது ஐதரோகாபன் சங்கிலியில் காபன் அணுக்களுக்கிடையில் ஒற்றை பிணைப்பை மட்டும் கொண்ட சேர்வையாகும். (அணுக்களுக்கிடையில் இரட்டை பிணைப்போ / மும்மை பிணைப்போ காணப்படாது)
    உ – ம் : Stearic அமிலம்
  • நிரம்பாத கொழுப்பமிலம் எனப்படுவது கொழுப்பமிலத்தின் ஐதரோகாபன் அணுக்களுக்கிடையில் ஒன்று / மேற்பட்ட இரட்டை பிணைப்பை கொண்டவை.
    உ – ம் : Oleic acid
  • கொழுப்பமிலம் தனது கட்டமைப்பில் இரு கூறுகளை கொண்டது.
    1. தலைப்பகுதி :
  • COOH கூட்டத்தை கொண்ட பகுதி
  • இது முனைவாக்கம் கொண்டது.
  • நீர் விருப்புடையது

2. வால் பகுதி:

  • ஐதரோகாபன் சங்கிலியை கொண்டது.
  • முனைவாக்கம் அற்ற பகுதி
  • நீர் வெறுப்பு பகுதி எனப்படும்.

கிளிசரோல்

  • இதன் மூலக்கூற்று சூத்திரம் C3H8O3
  • இதன் கட்டமைப்பு சூத்திரம்  
  • இதன் தொழிற்படு கூட்டம் ஐதரொட்சைட்டு கூட்டம் (OH)
  • இது ஒரு அற்ககோல் வகையாகும்.
  • மூகிளி சரைட்டின் உருவாக்கம்
    tryglycaride
  • ஒரு மூலக்கூறு கிளிசரோலும் 3 மூலக்கூறு கொழுப்பமிலமும் ஒடுங்கற் தாக்கிற்கு உட்பட்டு 3 மூலக்கூறு நீர் அகற்றப்பட்டு உருவாக்கப்படும் சேர்வை மூகிளிசரைட் எனப்படும்.
  • மூகிளிசரைட்டின் இயல்புகள்:-
  1. C,H,O மூலகங்களை கொண்டது.
  2. நீரில் கரையாது (முனைவாக்கம் அற்ற மூலக்கூறு)
  3. சேதன கரைப்பானில் கரையக்கூடியது.
  4. அறைவெப்பநிலையில் திண்மமாகவோ / திரவமாகவோ காணப்படும்.
  5. நிரம்பிய இலிப்பிட்டாகவோ / நிரம்பாத இலிப்பிட்டாகவோ காணப்படும்.
    (கொழுப்பமிலத்தின் அடிப்படையில்)
  6. மூகிளிசரைட்டே அதிகளவு, பொதுவாக காணப்படும் இலிப்பிட்டு வகையாகும். இது உண்மை இலிப்பிட்டு என அழைக்கப்படும்.
  7. நீரை விட அடர்த்தி குறைவானது. எனவே, இவை நீரில் மிதக்கக்கூடியவை.
  • பொதுவாக நிரம்பிய மூகிளிசரைட்டுகள் அறைவெப்பநிலையில் திண்மமாக காணப்படும். அதாவது கொழுப்பாக காணப்படும்.
  • விலங்குகளிலிருந்து பெறப்படும் மூகிளிசரைட் நிரம்பியதாக காணப்படும்.
  • நிரம்பிய மூகிளிசரைட்டே இதயம், குருதிகலன் தொடர்பான படிவுகளை ஏற்படுத்தும்

மூகிளிசரைட்டின் தொழில்கள்:-

1. சக்தி மூலமாக தொழிற்படுகின்றது.

  • காபோவைதரேற்றைவிட மூகிளிசரைட் சக்தி பெறுமானம் கூடியது.
  • 1g காபோவைதரேற்று 4 kgகலோரி / 16 kJ
  • 1g மூகிளிசரைட் 9 kgகலோரி / 37 kJ
  • மூகிளிசரைட்டில் காபோவைதரேற்றிலும் C,H பிணைப்பு அதிகளவு காணப்படுகின்றது.

2. வெப்ப காவிலியாக தொழிற்படுகின்றது. அதாவது விலங்குகளிலிருந்து வெப்ப இழப்பை தடுக்கின்றது. விலங்குகள் மேலதிக கொழுப்பை கொழுப்பிழையத்தில் தோலுக்கு கீழாக, இதயம், சீறுநீரகத்தைச் சூழ சேமிக்கின்றது. இவை அதிர்ச்சி உறிஞ்சிகளாக தொழிற்பட்டு உள் அங்கங்களை பாதுகாக்கின்றது.

3. தாவரங்களில் சேமிப்பு தொழிலை புரிந்து உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
உ – ம் : தேங்காய், ஆமணக்கு வித்து, சூரியகாந்தி வித்து.

4. பாலைவன விலங்குகளில் சேமிப்பில் உள்ள மூகிளிசரைட்டின் ஒட்சியேற்றத்தின் மூலம் பெறப்படும் நீர் கல அனுசேபத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.

பொஸ்போ இலிப்பிட்டு

  • இதன் கட்டமைப்பு கூறுகளாவன
  1. ஒரு மூலக்கூறு கிளிசரோல்
  2. ஒரு மூலக்கூறு பொஸ்போரிக்கமிலம்
  3. இரண்டு மூலக்கூறு கொழுப்பமிலம்
  • பொஸ்போரிக்கமிலத்தின் மூலக்கூற்று சூத்திரம் H3PO4

பொஸ்போ இலிப்பிட்டின் இயல்புகள்

  • மூலகங்கள் C,H,O,P
  • இதன் தலைப்பகுதி நீரில் கரையும், வால்பகுதி நீரில் கரையாது
  • மொத்தத்தில் இது முனைவாக்கமுடைய மூலக்கூறு.

பொஸ்போ இலிப்பிட்டின் முக்கியத்துவங்கள்

  • கல மென்சவ்வின் ஆக்ககூறு (லெசிதீன்)
  • விலங்குகளில் நரம்பு கலத்தின் மயலீன் கவசத்தின் ஆக்ககூறு. இது மின் காவிலியாக தொழிற்பட்டு கணத்தாக்க வேகத்தை அதிகரிக்கின்றது.
  • சிற்றறைகளில் மேற்பரப்பு கழுவி / Surfactant இன் ஆக்ககூறு.

ஏனைய இலிப்பிட்டு வகைகள்

இலிப்பிட்டு வகை இயல்புகளும் தொழில்களும்
Steroid
  • தாவரத்தில் காணப்படுவதில்லை, விலங்குகளில் காணப்படுகின்றது.
  • காணப்படும் மூலகங்கள் C,H,O
  • இதன் கட்டமைப்பில் நான்கு, காபன் வளைய அமைப்புக்கள் காணப்படும்
  • நீரில் கரையாது
  1. இலிங்க ஓமோன்களினதும் அதிரீனல் மேற்பட்டைக்குரிய ஓமோன்களினதும் ஆக்கக்கூறு
  2. விற்றமின் D இன் ஆக்க கூறு
  3. பித்த உப்புகளின் ஆக்ககூறு
  4. விலங்குகளில் காணப்படும் Steroidக்கு கொலஸ்திரோல் ஒரு உதாரணமாகும்
ரேபின்கள்
  • C,H,O மூலகங்களை கொண்டுள்ளது
  • இதன் கட்டமைப்பில் நீண்ட ஐதரோகாபன் சங்கிலியை கொண்டது
  1. ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களின் கட்டமைப்பு கூறு
  2. பார்வை நிறப்பொருட்களின் கட்டமைப்பு கூறு (ரொடொப்சின், அயடொக்சின்)
  3. தாவர வளர்ச்சி பதார்த்தங்களின் ஆக்க கூறு
  4. வாசணை எண்ணெய்களின் ஆக்க கூறு
  5. விற்றமின் A,D,K ஆக்க கூறு
  6. இறப்பரின் ஆக்க கூறு
 மெழுகு
  • இதன் ஆக்க கூறாக கொழுப்பமிலம், கிளிசரோல் அல்லாத அற்ககோல் பங்கு கொள்கின்றன
  • தாவரம், விலங்குகளில் காணப்படும் நீர் ஊடுபுகவிடாத இலிப்பிட்டு ஆகும்
  1. தாவரத்தின் இலை, தண்டின் வெளிப்புறமான புறத்தோலில் உள்ள கியூற்றின் நீர் இழப்பை தடுக்கின்றது
  2. தாவர வேரின் அகத்தோலில் உள்ள சுபரின் Apoplast பாதையை தடுக்கின்றது
  3. விலங்குகளில் காதில் உருவாகும் மெழுகு தூசு துணிக்கைகள் உட்செல்வதை தடுக்கின்றது
  4. பறவைகளின் இறக்கைகளில் காணப்படும் மெழுகு நீர் இழப்பை தடுக்கின்றது
  5. பூச்சிகளின் புறவன்கூட்டில் காணப்படும் மெழுகு நீர் இழப்பை தடுக்கின்றது
  6. தேன்கூடு ஆக்கத்தில்
 கிளைக்கோ இலிப்பிட்டு
  • இலிப்பிட்டு காபோவைதரேற்றுடன் இணைந்து உருவாகின்றது
  1. கலமென்சவ்வில் கட்டமைப்பு கூறு
 இலிப்போ புரதம்
  • இலிப்பிட்டு புரதத்துடன் சேர்ந்து இலிப்போ புரத்தை உருவாகின்றது
  1. கலமென்சவ்வின் கட்டமைப்பு கூறு
  2. குருதியில் உள்ள இலிப்போ புரதம் பதார்த்த கடத்தலில் பங்கு கொள்கின்றது

மூகிளிசரைட்டிற்கான ஆய்வு கூட பரிசோதனை

  1. மூகிளிசரைட்டு (தேங்காய் எண்ணெய்) 2ml பரிசோதனை குழாயினுள் எடுத்தல்.
  2. அதனுள் 2ml நீர் இட்டு நன்கு கலக்கி அடையவிடுதல்.
  3. ஒரு துளி சூடான் 3 சாய கரைசலை இட்டு கலக்கி அடையவிடுதல்.
  4. நீர் படை தெளிவாக கீழாகவும், சிவப்பு நிறத்தில் காணப்படும். எண்ணெய் படை மேலாகவும் காணலாம். சிறிதளவு எண்ணெய் துளியை வழுக்கிக்கு இடமாற்றம் செய்து ஒளிநுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிக்க.
  5. இளம்சிவப்பு / சிவப்பு நிறத்தில் எண்ணெய் சிறு கோள்ங்களை அவதானிக்கலாம்.
 
 
 

புரதங்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • C,H,O,N,S மூலகங்களைக் கொண்ட அமினோ அமிலத்தைக் கட்டமைப்பு அலகாகக் கொண்ட, ஒன்று / ஒன்றுக்கு மேற்பட்ட நேரிய பல்பெப்தைட்டு சங்கிலியைக் கொண்ட உயிரியல் மாமூலக்கூறு

அமினோஅமிலம்

  • அமினோ அமிலத்தின் பொதுச் சூத்திரம்n-1
  • மேல் உள்ளதில் R கூட்டம் வேறுபடுவதால் வெவ்வேறு வகையான அமினோ அமிலம் பெறப்படுகின்றது.
  • ஒரு அமினோ அமில மூலக்கூறில் -COOH  கூட்டம் அமிலத் தன்மையை வழங்கும். H2N காரத் தன்மையை வழங்கும். எனவே, ஈரியல்புத் தன்மையைக் கொண்டது.
  • அமினோஅமில மூலக்கூறு முனைவாக்கப்பட்ட நிலையில் காணலாம்.
    இந்நிலையில் இது Zwitter அயன் எனப்படும்.
  • அமினோ அமிலத்தின் R கூட்டம் CnH2n+1
  • எளிய அமினோஅமிலத்தின் சூத்திரம் n-2
  • ஏறுவரிசையில் அடுத்த அமினோ அமிலம்
  •                             n = 1 CnH2n+1 = CH3     n-3
  • R,CnH2n+1 இனால் பிரதியீடு செய்யப்பட்டு பெறப்படும் அமினோஅமிலங்களில் ஒரு காபொட்சைட் கூட்டமும், ஒரு அமைனோ கூட்டமும் காணப்படுவதால் நடுநிலையாகக் காணலாம்.
  • சில அமினோஅமிலங்களின் R கூட்டத்தில் சிக்கலான அமைப்பை காணலாம். இதில் மேலதிகமாக ஒரு காபொட்சைட் கூட்டமோ / ஒரு அமைனோ கூட்டமோ காணப்படலாம். மேலதிகமாக ஒரு காபொட்சைட் கூட்டம் காணப்படின் அவ்வமினோவமிலம் அமிலத் தன்மையாகக் காணப்படும்.
  • அதேபோல் R கூட்டத்தில் மேலதிகமாக அமைனோகூட்டம் காணப்படின் கார / மூலத் தன்மையைக் காட்டும்.
  • புரதத் தொகுப்பில் 20 அமினோவமிலங்கள் ஈடுபடுகின்றன. இவை 2 கூட்டங்களாகப் பிரிக்கப்படும்.
  1. அத்தியாவசியமான அமினோவமிலங்கள் (10)
  2. அத்தியாவசியமற்ற அமினோவமிலங்கள் (10)
  • விலங்குகளின் ஈரல் கலங்களால் தொகுக்கப்பட முடியாததும் உணவின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய அமினோவமிலங்கள் அத்தியாவசியமான அமினோஅமிலங்கள் எனலாம்.
  •  விலங்குகளின் ஈரல் கலங்களால் தொகுக்கப்படக் கூடிய அமினோவமிலம் அத்தியாவசியற்ற அமினோஅமிலம் எனலாம்.
  • அத்தியாவசியமான அமினோவமிலங்கள் ஆவன,
  1. பீனைல் அலனின் (Phenylalanine)
  2. Valin
  3. Tryptophan
  4. Threonaine
  5. Isoleucine
  6. Methionine
  7. Histidine
  8. Arginine
  9. Lencine
  10. Lysine

பல்பெப்டைட்டு சங்கிலி ஆக்கம்Please Login to view the Question

  • ஒரு அமினோவமிலத்தின் காபொட்சைட் கூட்டத்திலிருந்து OH ம் அடுத்துள்ள அமினோவமிலத்தின் அமைனோ கூட்டத்திலிருந்து H ம் அகற்றப்படுவதன் மூலம் ஒரு மூலக்கூறு நீர் அகற்றப்பட்டு அல்லது ஒடுங்கற் தாக்கதிற்குட்பட்டு இவ்விரு அமினோ அமிலங்களுக்கும் இடையில் பெப்ரைட்டு பிணைப்பு உருவாக்கப்படும்.
  • பெப்ரைட்டு பிணைப்பும் அதன் மூலம் இணைக்கப்பட்ட இரு அமினோவமிலங்களும் ஒருமித்து இரு பெப்ரைட்டு எனலாம்.
  • இரு பெப்ரைட்டின் சுயாதீன முனைவில் காபொட்சைட் கூட்டமும், மறு சுயாதீன முனைவில் அமைனோ கூட்டமும் காணப்படுவதால் இரு திசைகளிலும் மீண்டும் அமினோவமிலங்களுடன் ஒடுங்கற் தாக்கத்திற்கு உட்பட்டு இரு பெப்ரைட்டு வளர்ச்சி அடையும்.
  • இவ்வாறு பல அமினோவமிலங்கள் பெப்ரைட்டு பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டு உருவாகும் சங்கிலி பல்பெப்ரைட்டு எனப்படும்.
    பல்பெப்டைட்டு சங்கிலி / புரத வகையைத் தீர்மானிக்கும் காரணிகள்
  1. அமினோவமிலத்தின் எண்ணிக்கை
  2. அமினோவமில வகை
  3. அமினோவமிலத்தின் ஒழுங்குத் தொடர்
  • ஒரு பல்பெப்டைட்டு சங்கிலியில் / புரதத்தில் / அமினோவமிலங்களுக்கு இடையில் காணப்படும் பிணைப்பு வகைகள்
  1. பெப்ரைட்டு பிணைப்பு
  2. ஐதரசன் பிணைப்பு
  3. அயன் பிணைப்பு
  4. இரு சல்பைட் பிணைப்பு
  5. நீர் வெறுப்பு இடைத்தாக்கம்
  • ஒரு பொலிப்பெப்டைட்டு சங்கிலி மடிப்படையும் போது H+ கொண்ட அமினோவமிலமும், O, N கொண்ட அமினோவமிலமும் அண்மிக்கும் போது அவற்றுக்கிடையில் ஐதரசன் பிணைப்பு உருவாக்கப்படும்.
  • ஏற்படுவதில் H+ கட்டாயம் பங்கு கொள்ளும்
  • ஒரு பொலிப்பெப்டைட்டு சங்கிலி மடிப்படையும் போது நேரேற்ற அயனைக் கொண்ட ஒரு அமினோவமிலமும், (-) ஏற்ற அயனைக் கொண்ட ஒரு அமினோவமிலமும் அண்மிக்கும் போது அவற்றுக்கிடையில் உருவாகும் பிணைப்பு.
  • கந்தகத்தைக் கொண்ட இரு அமினோவமிலங்கள் அண்மிக்கும் போது அவற்றிலிருந்து H அகற்றப்பட்டு (-2H) இரு கந்தகப் பிணைப்பு உருவாக்கப்படும்.
  • பல்பெப்டைட்டு சங்கிலியில் காணலாம். முனைவாக்கமற்ற நீர் வெறுப்பு கூட்டங்கள் நீர் பிரதேசத்தை விட்டு விலகி நீர் வெறுப்பு பிரதேசத்தை நோக்கிக் காணப்படுதல் நீர்வெறுப்பு இடைதாக்கம் எனலாம்.
  • இவ் இடைத்தாக்கத்தின் மூலம் பல்பெப்டைட்டு சங்கிலி ஒரு குறித்த வடிவத்தில் பேணப்படுகின்றது.

புரதமானது 4 நிலைகளில் ஒழுங்கமைப்பு மட்டங்களைக் கொண்டது.

  1. முதலான அமைப்பு
  2. துணையான அமைப்பு
  3. புடையான அமைப்பு
  4. புடைச்சிறைக் கட்டமைப்பு / நாற்புடையான அமைப்பு

முதலான அமைப்பு

  • பல் பெப்டைட்டு சங்கிலியில் / புரதத்தின் தனித்துவமான அமினோவமிலங்களின் நேரிய தொடர் வரிசை ஆகும்.
  • முதலான அமைப்புப் பேணுவதில் பெப்டைட் பிணைப்பு பங்கு கொள்கின்றது.
    Eg : எல்லா புரதங்கள்

துணையான அமைப்பு

  • Polypeptide சங்கிலிகள் சுருளடைந்து சுருளிக் கட்டமைப்பாக மடிப்படைந்து மடிப்படைந்த தகடுகளாக நிலையாகும்.
  • இவ்வமைப்பு H பிணைப்பு மூலம் பிரதானமாகப் பேணப்படுகின்றது.

புடையான அமைப்பு

  • பல்பெப்தைட்டு சங்கிலி வளைவதாலும் மடிவதாலும் தனித்துவமான கோளவடிவம் பெறப்படுதல் ஆகும்.
  • இவ்வடிவம் பேணுவதில் ஐதரசன் பிணைப்பு, இரு கந்தகப்பிணைப்பு, அயன்பிணைப்பு, நீர் வெறுப்பு இடைத்தாக்கம் பங்குகொள்கின்றது.
    உ – ம் : Myoglobin நொதியம்
    லைசோசைம் குளோடியூலின்

புடைச்சிறைக் கட்டமைப்பு

  • இரண்டு / இரண்டிற்கு மேற்பட்ட பல்பெப்டைட்டு சங்கிலிகள் திரளடைவதால் பெறப்படும் சிக்கலான கோளக் கட்டமைப்பு
    உ – ம் : Heamoglobin : 4 பொலிபெப்தைட்டு சங்கிலிகள் திரளவடைவதால் கொலாஜின்

கட்டமைப்பின் அடிப்படையில் புரத வகைகள்

புரத வகை இயல்புகள் தொழில்கள்
நார்ப்புரதம்
  • துணையான அமைப்பில் காணலாம்
  • நீரில் கரையாது
  • நார் வடிவில் காணலாம்
  • பௌதீக ரீதியாக உறுதியானது
  • கட்டமைப்பு தொழில்
  1. கெரற்றின்
  2. Fibroin
  3. மயோசின்
  4. அக்ரின்
  5. கொலாஜின்
கோளப்புரதம்
  • புடையான, புடைச்சிறைக் கட்டமைப்பை காட்டும்
  • நீரில் கரையக் கூடியது
  • கோள அமைப்பில் காணலாம்
  • அனுசேபத் தொழிற்பாடுகளில் ஈடுபடும்
  1. இன்சுலீன்
  2. சுக்ரேஸ்
இடைத்தரப்பட்ட புரதம்
  • நார் வடிவில் காணலாம்
  • நீரில் நன்றாகக் கரையும்
  • குருதி உறைதலில் பங்கு கொள்ளும்
  1. பைரினோஜின் (கரைந்த நிலை)
  2. பைரின் (நார் நிலை)

புரதத்தின் தொழில்கள்

தொழில்கள்  உதாரணம்
கட்டமைப்புக் கூறாகத் தொழிற்படல் கொரற்றின், கொலாஜின்
நொதியமாக தொழிற்படல் 

 

அனுசேப ஊக்கியாக தொழிற்பாடு

(எல்லா நொதியங்களும் புரதம் ஆகும்)

இன்வெட்டேஸ், அமைலேஸ்
கொண்டு செல்லல் தொழிற்பாடு Heamoglobin – ஒட்சிசனை, கொண்டு செல்லல்
சேமிப்பு முட்டை அல்புமின் 

 

Casein (பால்)

சுருங்கல் தொழிற்பாடு அக்ரின், மயோசின் (தசைக்கலம்)
பாதுகாப்பு தொழிற்பாடு Immunoglobin / பிறபொருள் எதிரி
ஓமோனாக தொழிற்படுதல்/ இரசாயன இயைபாக்கம், (ஓமோன்கள் யாவும் புரதம் அல்ல) இன்சுலீன், வளர்ச்சி ஓமோன்
நஞ்சாகத் தொழிற்படுதல் பாம்பின் நஞ்சு, சிலந்தியின் நஞ்சு

புரதத்தின் அமைப்பழிவும், அமைப்பழிவின் விளைவுகளும்

  • புரத மூலக்கூறின் தனித்துவமான முப்பரிமாண வடிவம் இழக்கப்படுதல் அமைப்பழிவு எனப்படும். அமைப்பழிவானது ஐதரசன் பிணைப்புகள், அயன் பிணைப்புக்கள், நீர் வெறுப்பு இடைத் தாக்கங்கள் உடைக்கப்படுவதால் ஏற்படுத்தப்படுகின்றது.
  • பொதுவாக அமைப்பழிவின் போது பெப்டைட்டு பிணைப்பு, இரு கந்தகப்பிணைப்பு உடைக்கப்படுவதில்லை.
  • புரதம் ஒன்றின் தனித்துவமான தொழில் அதன் தனித்துவமான முப்பரிமாண வடிவத்தில் தங்கியுள்ளது. எனவே, அமைப்பழிவு அடைந்த புரதம் தனது தொழிலை இழக்கின்றது.

அமைப்பழிவை ஏற்படுத்தும் காரணிகள்

  1.  உயர் வெப்பம் / கதிர்வீசல் (உ-ம்) : UV கதிர், IR கதிர்
    இரு கந்தகப் பிணைப்பு உயர் வெப்பத்தால் பாதிக்கப்படுவதில்லை.
  2. பார உலோகங்கள் (உ-ம்) : கட்மியம், இரசம், ஆசனிக்
  3. வன்மையான அமிலம், வன்மையான காரம், உயர் உப்புச் செறிவு
  4. சில சேதன கரைப்பான்கள்
  • அமைப்பழிவு இரு முறைகளில் நிகழ்கின்றது.
  1. நிரந்தரமானது
  2. தற்காலிகமானது
  • உடைக்கப்பட்ட பிணைப்புகள் மீண்டும் உருவாகி புரதங்கள் முப்பரிமாண வடிவத்தை மீண்டும் பெற்றுக் கொண்டால் அது தற்காலிக அமைப்பழிவு எனலாம்.
  • ஐதரசன் பிணைப்பு, அயன் பிணைப்பு, நீர் வெறுப்பு இடைத்தாக்கம் உறுதியற்றது. இரு கந்தகப் பிணைப்பு மிகவும் உறுதியானது.

புரதத்திற்கான ஆய்வு கூடப் பரிசோதனைகள்Please Login to view the QuestionPlease Login to view the Question

பையூரற் பரிசோதனை

  • பயன்படுத்தும் இரசாயனப் பதார்த்தங்கள் : NaOH or KOH, CuSO4
  • படிமுறைகள் :
  1. ஒரு பரிசோதனை குழாயினுள் 2ml புரத கரைசல் (முட்டையின் வெள்ளை கரு) எடுக்க
  2. அதனுள் 2ml NaOH / KOH கரைசல் சேர்க்க
  3.  2 துளி CuSO4 சேர்க்க
  4. நன்றாகக் கலக்கி சிறிது நேரம் வெப்பப்படுத்துக
  5. ஊதா நிறம் தோன்றுவது புரதம் இருப்பதை உறுதிப்படுத்தும்
  • இதுவே புரதத்திற்கு சிறந்த பரிசோதனை ஆகும். ஏனெனில், பெப்ரைட்டுப் பிணைப்பிற்கான பரிசோதனை ஆகும். சகல புரதங்களும் இதற்கு விடையளிக்கும்.

மில்லனின் பரிசோதனை

  • பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் : Hg2+ (HgCl2), HNO3
  • படிமுறைகள் :
  1. பரிசோதனைக் குழாயினுள் 2ml புரதக் கரைசல் எடுக்க.
  2. இதனுள் 2ml மில்லனின் சோதனைப் பொருள் சேர்க்க.
  3. வெள்ளை வீழ்படிவு உருவாகும் இதனை வெப்பப்படுத்தும் போது Salmon Pink (இளம் சிவப்பு) தோன்றும்.
  • மில்லனின் சோதனைப் புரதத்திற்கான தனித்துவமான பரிசோதனை அல்ல. பீனோல் கூட்டத்திற்கான பரிசோதனை ஆகும். எனவே, பீனோல் கூட்டத்தைக் கொண்ட புரதங்கள் இதற்கு விடையளிக்கும்.
 

  • முதலுரு மென்சவ்வால் எல்லைபடுத்தப்பட்ட கலத்தின் உள்ளிடம் முதலுரு எனப்படும்.Please Login to view the Question
  • இம்முதலுரு இருபகுதிகளைக் கொண்டது.
  1. கரு
  2. குழியவுரு (Cytoplasm)

குழியவுருPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • குழியவுரு கலப்புன்னங்கங்களைத் தாங்கி நிற்கும் திரவப் பகுதியாகும். எனவே, இது கலப்புன்னங்கம், குழியவுருத்திரவம் (Cytosom) என்பவற்றைக் கொண்டது.
  • குழியவுருத்திரவம் 90% நீரைக் கொண்டது. அத்துடன், அயன்கள், உப்புகள், வெல்லங்கள், அமினோஅமிலங்கள், கொழுப்பமிலம், இலிப்பிட்டுகள், நியூக்கிளியோடைட்டுகள், விற்றமின்கள் சுவாச வாயுக்கள் (CO2, O2), புரதம் என்பவற்றை கொண்டது.
  • குழியவுருத்திரவம் கலத்தின் வெளிப்புறம் / சுற்றயல் பகுதியில் ஜெலி போன்ற அமைப்பில் காணப்படும். கலத்தின் நடுப்பகுதியில் திரவநிலையில் காணப்படும்.
  • குழியவுருவின் தொழில் :
  1. கலப்புன்னங்கங்களைத் தாங்குதல்
  2. அனுசேபம் நிகழும் பிரதான இடம். அத்துடன், அனுசேபத்திற்கான மூலப்பொருட்களை வழங்குதல்.

கருPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • கரு ஆனது புரோகரியோற்றா கலங்களில் காணப்படுவதில்லை. இயூக்கரியோற்றா கலங்களில் காணப்படுகின்றது. ஆனால், சில உயிருள்ள இயூக்கரியோற்றா கலங்கள் தொழிலுக்கான கட்டமைப்பு சிறப்பு அம்சமாக முதிர்ந்த நிலையில் கருவை இழக்கின்றன.
  • (உ-ம்) : மூலையூட்டிகளின் முதிர்ந்த RBC
    முதிர்ந்த நெய்யரி குழாய் மூலகம்
  • முதிர்ந்த விலங்குக்கலங்களில் பொதுவாக கரு மத்தியில் காணலாம். ஆனால்ää தாவரக் கலத்தில் மத்தியில் அமைந்த புன்வெற்றிடம் காரணமாக சுற்றியல் பகுதியில் காணப்படும்.
  • பொதுவாக ஒரு கலம் ஒரு கருவைக் கொண்டது. ஆனால் விதிவிலக்கும் உண்டு.
    (உ-ம்): பரமீசியம் → 2 கரு
    வன்கூட்டு தசைக்கலம் → பல கரு
    பங்கசுக்கலம் → பல கரு
  • இதுவே மிகப்பெரிய கலப்புன்னங்கம் ஆகும்.
  • ஒளிநுணுக்குக்காட்டியின் ஊடாக முதலில் அவதானிக்கப்பட்டது இதுவாகும்.
  • பொதுவாகக் கோளவடிவம்.
  • Robert Brown எனும் விஞ்ஞானியினால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது புன்கரு, குரோமற்றின், கருச்சாறு என்பவற்றைச் சூழ கருவுறையைக் கொண்டது.
  • கருவுறை இரு மென்சவ்வுகளால் ஆக்கப்பட்டது. அவையாவன வெளிமென்சவ்வு, உள்மென்சவ்வு.
  • வெளிமென்சவ்வின் தொடர்ச்சியாக அகக்கலவுருச்சிறுவலை காணப்படும்.
  • கருவறை கருநுண்துளைகளை கொண்டதாகக் காணப்படும். இத்துளைகளின் ஊடாக கருச்சாறுக்கும் குழியவுருவுக்குமிடையில் பதார்த்தப் பரிமாற்றம் நிகழும்.
    உ – ம் : RNA, mRNA, rRNA, Ribosome களின் உபதுணிக்கைகள்
  • நிறமூர்த்தங்கள் யாவும் சேர்ந்து காணப்படும் சிக்கலான வலையமைப்பு Chromatin எனப்படும்.
  • ஒவ்வொரு நிறமூர்த்தமும் ஒரு DNA மூலக்கூறையும், hitone புரதங்களையும் கொண்டது.
  • கலப்பிரிவின் போது நிறமூர்த்தம் இரட்டிப்பு அடைந்து இரு அரை நிறவுருக்கள் உருவாக்கப்படும். இவ்விரு அரை நிறவுருக்களும் மையப்பாத்து எனும் ஸ்தானத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.
  • ஒரு DNA மூலக்கூறில் பல பரம்பரையலகுகள் காணப்படும்.
    ஒவ்வொரு பரம்பரையலகும் ஒரு பொலிபெப்தைட் தொகுப்புக்குப் பொறுப்பானது. அல்லது இயல்புக்குப் பொறுப்பானது.
  • கருவினுள் காணப்படும் அடர்த்தியான கோளக் கட்டமைப்பு புன்கரு எனலாம். இது DNA, RNA, புரதங்களைக் கொண்டது.
  • கலப்பிரிவின் போது புன்கரு, கருவுறை இல்லாமல்போய் / மறைவடைந்து மீண்டும். உருவாக்கப்படுகின்றன.
  • புன்கருவின் தொழில்களாவன
  1. rRNA உற்பத்தி
  2. tRNA உற்பத்தி
  3. Ribosome களின் உப அலகுகளின் உற்பத்தி
  • கருவின் தொழில்கள்
  1. கலத்தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்தல்
  2. கலப்பிரிவில் புதிய கருக்களைத் தோற்றுவிப்பதற்காக DNA யை உற்பத்தி செய்தல்.
  3. புதிய தொகுப்பிற்கு வேண்டிய RNA, Ribosome களைத் தொகுத்தல்.
  4. கலத்தில் பாரம்பரியத் தகவல்களை சேமித்தலும் சந்ததிக்குக் கடத்தலும்.
 

pic 14

  • மனிதனின் காதானது இரு தொழில்களை ஆற்ற சிறத்தலடைந்துள்ளது. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question      
    1. கேட்டல்
    2. சமநிலை
  • மனித காதானது தெளிவாக பிரிக்கக்கூடிய 3 பகுதிகளைக் கொண்டது.
    1. வெளிக்காது
    2. நடுக்காது
    3. உட்காது
  • வெளிக்காது வெளிக்காதுச் சோணை, செவி நடுக்கால்வாயை கொண்டது. வெளிக்காதுச் சோணை தலையில் இரு புறமும் விரிவாக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. மஞ்சள் நார் கசியிழையத்தால் வலுவாக்கப்பட்ட தோலினால் போர்வையிடப்பட்டுள்ளது.
  • செவிநடுக்கால்வாய் வளைந்த ‘s’ உருவான குழாய் கட்டமைப்பு செவிப்பறை மென்சவ்வுடன் தொடர்புபட்டது. துவாரத்திற்கு அண்மையாக அனேக மயிர்களையும் மெழுகுச் சுரப்பியையும் கொண்டது.
  • வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கும் சுவரில் காணப்படும் மென்சவ்வு அமைப்பு செவிப்பறை மென்சவ்வு எனப்படும். நீள்வட்ட வடிவமானது. நார் இழையத்தையும் சீத மென்சவ்வையும் கொண்டது.
  • நடுக்காது ஒழுங்கற்ற வடிவத்தையுடைய வளியால் நிரப்பப்பட்ட குழியாகும்.
    நடுக்காதில் 3 செவிச்சிற்றென்புகள் குறுக்காக அமைந்து காணப்படும். அவையாவன; சம்மட்டியுரு, பட்டையுரு, ஏந்தியுரு
  • சம்மட்டியுரு செவிப்பறை மென்சவ்வுடன் பட்டையுருவுடனும் இணைக்கப்பட்டது.
  • பட்டையுரு சம்மட்டியுருவுடனும் ஏந்தியுருவுடனும் இணைக்கப்பட்டது.
  • ஏந்தியுரு பட்டையுருவுடனும் நீள்வட்டப்பலகணியுடனும் இணைக்கப்பட்டது.
  • இச் சிற்றென்புகள் ஒவ்வொன்றும் மற்றையதுடன் அசையக் கூடிய மூட்டுகளைக் கொண்டது.
  • நடுக்காதுக்குழி தொண்டையுடன் ஊத்தேக்கியாவின் கால்வாயுடன் இணைக்கப்பட்டது.
  • நடுக்காதையும் உட்காதையும் பிரிக்கும் சுவரில் ஜன்னல் போன்று இரு மென்சவ்வு பகுதி காணப்படும்ம்.
    ♦ நீள்வட்டப்பலகணி
    ♦ வட்டப்பலகணி
  • உட்காது ஒரே வடிவத்தையுடைய என்புச் சிக்கல் வழியையும் மென்சவ்வு சிக்கல் வழியையும் உடையது.
  • என்புச் சிக்கல் வழி எனப்படுவது சுற்று நிணநீரை கொண்ட கடை நுதல் என்பில் காணப்படும் மென்சவ்வு சிக்கல் வழியை தாங்குகின்ற குழியாகும். மென்சவ்வு சிக்கல் வழியை விட பருமனில் பெரியது. இதனுள் மென்சவ்வு சிக்கல் வழி வைக்கப்படும். எனவே என்புச் சிக்கல் வழிக்கும் மென்சவ்வு சிக்கல் வழிக்கும் இடையே சுற்று நிணநீர் காணப்படும்.
  • என்புச் சிக்கல் வழி 3 பகுதியை உடையது.
    ♦ அரைவட்டக் கால்வாய்
    ♦ தலைவாயில்
    ♦ என்பு நத்தை சுருள்
  • மென்சவ்வு சிக்கல் வழி மென்சவ்வால் சூழப்பட்ட அகத்தே அகநிணநீரை கொண்ட அமைப்பாகும். இது 4 பகுதிகளை கொண்டது.
    ♦ அரைவட்டக் கால்வாய்
    ♦ தோற்பை
    ♦ சிறுபை
    ♦ மென்சவ்வு நத்தை சுருள்
  • மென்சவ்வு சிக்கல் வழியின் அரைவட்டக் கால்வாய்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக 3 வெவ்வேறு தளங்களில் அமைந்து காணப்படும்.
  • தோற்பை பையுருவான அமைப்பு கீழ்ப்புறமாக சிறுடையுடன் தொடர்பு கொள்ளும். மேற்புறமாக அரைவட்டக் கால்வாய்கள் இதனுள் திறக்கும்.
  • சிறுபை பையுருவான அமைப்பு. மேற்புறம் தோற்பையுடனும் மறுபுறம் மென்சவ்வு நத்தை சுருளுடனும் தொடர்பு கொள்ளும்.
  • தோற்பை, சிறுபை ஒருமித்து தலைவாயில் எனப்படும்.
  • தோற்பை, சிறுபை, அரைவட்டக் கால்வாய் என்பன ஒருமித்து தலைவாயில் உபகரணம் எனப்படும்.
  • சமநிலை வாங்கிகள் தோற்பை, சிறுபையின் மென்சவ்வுகளினது உட்சுவரிலும் அரைவட்டக் கால்வாயின் விரிமுனை பகுதிகளிலும் காணப்படும்.
  • நத்தைச் சுருள் (என்புச் சிக்கல் வழி, மென்சவ்வு சிக்கல் வழி இரண்டும்) சுருண்ட குழாய் கட்டமைப்பு. நடுக்காதுடன் இணைக்கப்பட்டு காணப்படும்.
  • இது நீளப்பாடாக 3 அறைகளை கொண்டது. அவையாவன;
    ♦ தலைவாயில் ஏணிக் கால்வாய்
    ♦ இடையேணிக் கால்வாய்
    ♦ செவிப்பறையேணிக் கால்வாய்
  • தலைவாயில் ஏணிக் கால்வாய் சுற்று நிணநீரையுடையது.  இடையேணிக் கால்வாய்                 அக நிணநீரையுடையது.
  • இடையேணிக் கால்வாய் தலையேணிக் கால்வாயிலிருந்து  இரசுணரின் மென்சவ்வால் பிரிக்கப்பட்டது.
  • இடையேணிக் கால்வாய் செவிப்பறையேணிக் கால்வாயிலிருந்து அடிமென்சவ்வால் பிரிக்கப்பட்டது.
  • அடிமென்சவ்வு புலன் மயிர் கலங்களை தாங்குகிறது.
  • இக் கலங்களிலிருந்து ஆரம்பிக்கும் நரம்புகள் ஒன்றாக இணைந்து கேட்டல் நரம்பை ஆக்குகிறது.
  • புலன் மயிர் கலங்கள் போர்வை மென்சவ்வுடன் தொடுகையில் காணப்படும்.
  • போர்வை மென்சவ்வு, புலன் மயிர் கலம், அடிமென்சவ்வு ஒருமித்து கோட்டியின் அங்கம் எனப்படும்.
பகுதி  தொழில் 
 வெளிக்காதுச் சோணை  ஒலி அலைகளை சேகரித்தலும் செவி நடுக்கால்வாயை நோக்கி அனுப்புதல்
 செவி நடுக்கால்வாய்  செவிப்பறை மென்சவ்வை நோக்கி ஒலி அலைகளை கடத்தல், வளியை வடித்தல்
 செவிப்பறை மென்சவ்வு  அதிர்வுகளை உருவாக்கல்
 செவிச் சிற்றென்புகள்  அதிர்வை நீள்வட்ட பலகணிக்கு கடத்தி பெருப்பித்தல்
  ஊத்தேக்கியாவின் கால்வாய்   நடுக்காதின் அமுக்கத்தை வளிமண்டல அமுக்கத்தில் பேணல்
 நீள்வட்டப் பலகணி  ஏந்தியுருவிலிருந்து அதிர்வை தலைவாயில் ஏணிக்கால்வாயின்  சுற்று நிணநீருக்கு கடத்தல்
 வட்டப்பலகணி  செவிப்பறை ஏணிக்கால்வாயின்  சுற்று நிணநீரிலிருந்து அதிர்வை நடுக்காதுக்குழி / அறைக்கு கடத்தல்
 புலன் மயிர்க்கலம்  தாக்க அழுத்தத்தை உருவாக்கல் / அத்திசை நரம்பு கணத்தாக்கமாக மாற்றும்
 தோற்பை, சிறுபை, அரைவட்டக் கால்வாய்  சமநிலை பேணல்
 இரசுணின் மென்சவ்வு  தலைவாயில் ஏணிக் கால்வாயின் சுற்று நிணநீரிலிருந்து அதிர்வை  இடையேணிக் கால்வாயின் அக நிணநீருக்கு கடத்தல்
 கேட்டல் நரம்பு  கேட்டலுக்குரிய நரம்புக் கணத்தாக்கமாக மாற்றி கேட்டல் பரப்பிற்கு அனுப்புதல்
 

7தாவர இழையங்களினூடாக நீர், கனியுப்பு 3 பாதைகளினூடாக அசைகின்றன.

  • அப்போபிளாஸ்ட் (Apoplast)  பாதை
  • சிம்பிளாஸ்ட் (Symplast) பாதை
  • புன்வெற்றிடப் (Vacuolar) பாதைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question