மனிதனில் மென்டலிய பாரம்பரிய இயல்புகள்
| ஆட்சியான எதிருருக்கள் | பின்னடைவான எதிருருக்கள் |
|---|---|
| நாவுருட்டும் இயல்பு | நாவுருட்டும் இயல்பு இல்லாதிருத்தல் |
| பல் விரல்கள் இருத்தல் | பின்நோக்கி வளையும் பெருவிரல் |
| ஒட்டாத செவிச்சோனை | ஒட்டிய செவிச்சோனை |
| சுருளான தலைமயிர் | நேரிய தலைமயிர் |
| நடு நெற்றிப் பகுதியில் ‘V’ வடிவில் மயிர்கள் இருத்தல் | வெளிறி |
| கருமை நிற மயிர் | நீல நிற கதிராளி |
| கன்னத்தில் குழி விழும் தன்மை |
கருக்கட்டல்
பெண் இனப்பெருக்க சுவட்டில் சுரக்கப்படும் சுரப்புக்களால்ää அங்கு விடப்படும் விந்துக்களின் முதலுருமென்சவ்வில் சில மூலக் கூற்றுக்குரிய மாற்றங்கள் ஏற்படும். இதனால் விந்துக்களின் இயங்கும் ஆற்றல் கூடும். (அதி உயிர்ப்பு Hyper activation). இச்செயன்முறை capacitation எனப்படும்.
அதி உயிர்ப்புக்குள்ளான விந்து ஆரைமுடியினூடாக ஊடுருவிச் சென்று தெளிவுவலயத்தை அடைந்து அங்குள்ள விந்துவாங்கி தானங்களுடன் இணைந்து கொள்ளும். இந்நிலையில் விந்தின் உச்ச மூர்த்தத்திலிருந்து hyaluronidase,protease நொதியங்கள் விடுவிக்கப்படும். இச்செயல் உச்சிமூர்த்த தாக்கம் எனப்படும்.
சூல்கலத்தின் கருவூண்மென்சவ்விலிருந்து ஊற்றப்படும். நொதியங்களும் கருவூண்மென்சவ்வுடன் விந்தின் தலை இணை வதும் வேறு விந்துக்கள் உட்புகுவதை தடைசெய்யும். இது பல்விந்து கருக்கட்டல் தடை எனப்படும்.
சூலின் குழியவுருவினுள் விந்தினது தலை உட்புகும் இதன் போது விந்தின் ஒரு புன்மையத்தியும் உட்செல்லும். சூலின் வெளிப்புறமாக காணலாம். இலைசோசோம் (மேற்பட்டைக்குரிய சிறுமணிகள்) கருவூண் மென்சவ்வின் வெளிப்புறமாக தமது நொதியங்களை வெளிவிடும். இதனால் தெளிவுவலயம் தடிப்புற்று கடினமானதாக மாறி பல்விந்துக் கருக்கட்டலை தடுக்கும். இது மெற்பட்டைக்குரிய தாக்கம் எனப்படும்.
விந்தின் உட்செல்லுகைää துணை முட்டைக்குழியத்தின் ஒடுக்கற்பிரிவு – 2 பூரணப்படுத்தி துணையான முனைவுடல் கருவூண் சுற்றுவெளிக்கு வெளியேற்றலையும் சூல் தோன்றலையும் தூண்டும். துணையான முனைவுடல் உடனடியாக சிதைவடைந்து விடும்.
விந்தினது குரோமற்றின் சுருள்களின் நெருக்கம் குறைவானதனால் விந்தின் கரு பருமனில் அதிகரிக்கும். இந்நிலையிலுள்ள துணைமுட்டைக்குழியத்தினதும் விந்தினதும் கருக்கள் முதிர்வு வழிக்கருக்கள் எனலாம்.
ஒரு மடிய ஆண் முதிர்வு வழிக்கரு ஒரு மடிய பெண் முதிர்வு வழிக்கருவுடன் இணைவதன் மூலம் இரு மடிய கரு கொண்ட நுகம் தோற்றுவிக்கப்படும். இதுவே உண்மையான கருக்கட்டல் ஆகும்.
தோன்றிய புதிய கரு விந்திலிருந்தும் சூலிலிருந்தும் பெற்ற நிறமூர்த்தங்களால் இரண்டு தொகுதி நிறமூர்த்தங்களை கொண்டிருக்கும். இப்புதிய கரு { நுகக்கரு இழையுருப்பிரிவின் மூலம் உடனடியாக பிரிவடையும்.
கருவுற்றிருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள்
கர்ப்பமுறுதலுடன் தொடர்பான சில ஓமோன் மாற்றங்களினால் பின்வரும் அறிகுறிகள் ஏற்படும்.
1. மாதவிடாய் நிறுத்தப்படல்
2. Morning sickness- வாந்தி
தலைச்சுற்று
அருவெறுப்பு
3. சில உணவுப் பொருட்களுக்கு அவா கொள்ளுதல் சில உணவுப் பொருள்களை வெறுத்தல்
4. முலைகள் மிருதுவாதல்.
5. கருதியில் 10 நாட்களின் பின்னரும் சிறுநீரில் 14 நாட்களில் பின்னரும் hcG காணப்படுதல்.
6. அடிக்கடி சிறுநீர்கழித்தல்
7. முலையின் சிற்றிடப் பிரதேசத்தில் நிறமாற்றம் ஏற்றப்படும் (சிலரில்)
8. மலச்சிக்கல் ஏற்படும் (சிலரில்)
கருவுற்று இருப்பதை இனங்காணும் சோதனைகள்
பிரதானமாக சிறுநீரிலும் குருதியிலும் hcG உள்ளதை இனங்காணும் சோதனையை அடிப்படையாகக் கொண்டது.
hcG இன் செறிவு கருவுற்ற பெண்ணின் குருதியில் கூடும். இது 10 நாட்களின் பின் குருதியில் காணப்படும். 14 நாட்களின் பின் சிறுநீரில் வெளியேற்றப்படும்.
முதல் 3 மாதங்களில் hcG கூடுதலாக இருந்து பின்னர் குறைவடையும்.
குடும்பத் திட்டமிடல்
இயற்கை வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும் காணப்படும். வளங்களின் நீடித்து நிலைபெறும் பயன்பாட்டுக்காக வும் மனித குடும்பத்தின் பருமன் எல்லைப்படுத்தப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
மேலும் பெற்றோரின் பொருளாதார நிலை குறித்து குடும்ப பருமன் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளத ழுசு பிள்ளைப் பேற்றை தாமதப்படுத்தல் வேண்டும்.
இதற்காக பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள்
தேவையற்ற கருத்தரிப்புக்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளால் தவிர்க்கப்படுகின்றன.
1. வாய்க்குரிய கருத்தடை மாத்திரைகள் – பெண்களுக்குரியது.
பிரதானமாக Oestragen,Progestron ஆகிய ஓமோன்களை உயர் செறிவில் கொண்டிருக்கும். இதனால் புடைப்பு முதிர்ச்சியடைதல் உட்பதித்தல் என்பன தடுக்கப்படும் எதிர்ப்பின்னூட்டலால்FSH,LH ஓமோன்கள் சுரத்தல் நிரோதிக்கப்படும். கழுத்து சீதமுளி தடிப்படையும்.
(உ – ம்)Oralpill,MiniIpil (Progestron ஐ மட்டும் கொண்டது)
2. condom- ஆண்களுக்குரியது
இது ஆண்களில் பயன்படுத்தப்படும். இது விந்து உட்செல்வதை தடுக்கும்.
3. IUD(தடம்/ loop)
IUD- intra uterine Device
பெண்களில் பயன்படும். இது உட்பதித்தலை தடுக்கும். அழற்சி தாக்கத்தை இது ஏற்படுத்தும்.
4.Depo provera
இது பெண்களில் பயன்படுத்தப்படும். கருப்பைக் கழுத்து சீதமுளிப்படை தடிப்படைவதால் விந்து உட்செல்லல் தடுக்கப்படும். கருப்பை அகத்தோலை மெல்லியாக்குவதன் மூலம் முளையம் உட்பதிக்கப்படுவது தடுக்கப்படும்.
மேற்படி முறைகள் யாவும் ஓர் தற்காலிகமான செயன்முறைகள் ஆகும்.
5. Vasectomy
இது ஆண்களில் பயன்படுத்தப்படும். அப்பாற்செலுத்திகள் இரண்டும் வெட்டப்பட்டு அதன் இரு முளைகளும் இழையினால் கட்டப்படும். இதன் மூலம் விந்து வெளியாதல் தடுக்கப்படும். இது ஆண்களுக்குரிய நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு முறையாகும்.
6. சிறுகுழாய் இழையிடல் (tubal ligation )
இது பெண்களில் பயன்படுத்தப்படும். பலோப்பியன் குழாய்கள் இரண்டும் வெட்டப்பட்டு அவற்றின் முனைகள் இழை யினால் கட்டப்படும். இதனால் சூல் கருப்பையை அடைவது தடுக்கப்படும். இது பெண்களுக்குரிய நிரந்தர கட்டுப் பாட்டு முறையாகும்.
மண்ணில் நுண்ணங்கிகள் காணப்படுவதற்கான காரணங்கள் 
மண் நுண்ணங்கிகளின் பரவுகை தங்கியிருக்கும் காரணிகள்
தாவர வளர்ச்சியில் மண் நுண்ணங்கிகளின் பணிகள்
பிரிகையாளர்களாகத் தொழிற்படல்
நைதரசன் பதித்தலில் ஈடுபடல்
மண் திரள்களை அமைத்தல்
வேர்வலைய Bacteriaகளின் தொழிற்பாடு
மண்ணில் உள்ள நைதரசன் சேர்வைகள் நுண்ணங்கிகளால் அடையும் மாற்றங்கள் 

