- தாவரங்கள் இடம்பெயராதவை.
- இவற்றின் அனேகமான துலங்கல்கள் வளர்ச்சி அசைவாக காணலாம்.
- இவ்வசைவுகள் மெதுவானவை.
- புறத்தூண்டலுக்கு தாவரங்களில் நடைபெறும் அசைவுகள் பிரதானமாக 3 வகைப்படும்.
- திருப்ப அசைவு
- முன்னிலை அசைவு
- இரசணை அசைவு
மென்டலியன் சார்பற்ற பாரம்பரிய இயல்புகள்
- பாரம்பரியமடையும் சில இயல்புகள் பொதுவான மென்டேலியன் விகிதங்களான 3 : 1 மற்றும் 9 : 3 : 3 : 1 ஆகிய விகிதங்களில் இருந்து விலகல் அடைகின்றன.
- இவ்வாறான இயல்புகள் மென்டலின் விதிகளுக்கு அமையாது காணப்படுகின்றன.
- இவை மென்டலியன் சார்பற்ற பாரம்பரியம் எனப்படும்.
நிறைவில் ஆட்சி 

- பரம்பரை அலகுகளில் ஆட்சியான எதிருருக்களின் ஆட்சி நிறைவற்றதாக காணப்படுகின்ற தன்மை
- இவற்றின் ஓரின நுகங்கள் இயல்புகளில் வேறுபட்டிருக்கும்.
- பல்லின நுகத்தின் தோற்ற அமைப்பு அவற்றின் ஓரின நுகங்களின் தோற்ற அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இடைநிலைக்குரிய தோற்றமைப்பைக் கொண்டிருக்கும்.
- இவ்வாறான இயல்புகளின் கலப்பில் f2 சந்ததியில் தோற்ற அமைப்பு விகிதம் 1 : 2 : 1 என இருக்கும்.
உதாரணம் : Mirabilis பூவின் நிறம்
இணையாட்சி
- பரம்பரை அலகு ஒன்றின் இரண்டு எதிருருக்களும் சம ஆட்சியானவையாக இருக்கும் தன்மை.
- இதனால் பல்லின நுக நிலையில் இரு எதிருருக்களினாலும் தீர்மானிக்கப்படுகின்ற இயல்புகள் ஒன்றாக சேர்ந்து தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும்.
- இவ்வாறான இயல்புகளின் கலப்பில் f2 சந்ததியில் தோற்ற அமைப்பு விகிதம் 1 : 2 : 1 எனக் காணப்படும்.
உதாரணம் : மனிதக் குருதிக் கூட்டத்தின் M, N எதிருருக்கள்
பல் எதிருருத் தன்மை
- பரம்பரை அலகு ஒன்றிற்கு இரண்டிற்கு மேற்பட்ட எதிருருக்கள் காணப்படுகின்ற நிலை பல்எதிருருத் தன்மை எனப்படும்.
- இங்கு எதிருருக்கள் ஆட்சி உடையனவாக அல்லது இணையாட்சி உடையனவாக இருக்கலாம்.
உதாரணம் : மனிதக் குருதி வகையை தீர்மானிக்கும் பரம்பரை அலகிற்கு IA , IB ,i என 3 எதிருருக்கள் உள்ளன.
- இவற்றுள் i ஏனைய எதிருருக்களுக்கு பின்னடை வானது.
- IA,IB எதிருருக்கள் ஒன்றுக்கொன்று இணையாட்சி உடையன.
பல் பரம்பரை அலகு பாரம்பரியம்
- பாரம்பரிய இயல்பொன்று பல பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படும் தன்மை.
- இப்பரம்பரை அலகுகள் ஒவ்வொன்றும் சுயாதீனமாக தனிப்படுத்துகை அடையக் கூடியன.
- எல்லா எதிருருக்களும் ஆட்சியானவை.
- தோற்ற அமைப்புகள் பரம்பரை அலகுகளின் எதிருருக்களின் கூட்டற் தகவினால் வெளிக்காட்டப்படும்.
- இங்கு உருவாக்கப்படும் இயல்புகள் அளவறி முறையிலானவை.
- குடித் தொகையில் இத்தகைய பாரம்பரிய இயல்புகளின் மீடிறன் பரவல் செவ்வெண் பரவல் வளையியாகக் காணப்படும்.
உதாரணம் : மனிதனின் உயரம், மனிதனின் தோலின் நிறம், மனிதனின் நுண்ணறிவு
பரம்பரை அலகுகளின் இடைத் தாக்கங்கள்
மேலாட்சி
- மேலாட்சி என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படுகின்ற பாரம்பரிய இயல்புகளில் காணப்படுகின்றன.
- இங்கு ஒரு பரம்பரை அலகினால் தோற்ற அமைப்பு வெளிப்படுத்தப்படுகின்ற தன்மையை வேறொரு பரம்பரை அலகுகளின் எதிருருக்கள் தடுக்கின்றன.
பின்னடைவான மேலாட்சி
- இங்கு பரம்பரை அலகு ஒன்றின் பின்னடைவு எதிருருக்களினால் அவற்றின் ஓரின நுக நிலையில் பிறிதொரு பரம்பரை அலகுகளின் எதிருருக்கள் தோற்றமைப்பை வெளிப்படுத்துவது தடுக்கப்படுகிறது.
உதாரணம் : சுண்டெலியின் உரோமத்தின் நிறம்
ஆட்சியான மேலாட்சி



- பரம்பரை அலகு ஒன்றின் ஆட்சியான எதிருரு பிறிதொரு பரம்பரை அலகின் எதிருருக்களின் விளைவை மறைப்பது ஆட்சியான மேலாட்சி எனப்படும்.
உதாரணம் : கோழிகளில் இறகின் நிறம்
நிரப்புகின்ற பரம்பரை அலகுகளின் இடைத்தாக்கம்
- தோற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க இரண்டு பரம்பரை அலகுகளின் ஆட்சியான எதிருருக்கள் தேவைப்படும் தன்மை.
உதாரணம் : Lathyrus தாவரத்தின் பூவின் நிறம்.
பரம்பரை அலகு இணைப்பு
- ஒரே நிறமூர்த்தத்தில் காணப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரம்பரை அலகுகள் ஒன்றாக புணரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு தலைமுறை உரிமை செய்யப்படுதல் பரம்பரை அலகு இணைப்பு எனப்படும்.
- குறுக்குப் பரிமாற்றம் நிகழ்ந்து மீளச்சேர்தல்களைத் தோற்றுவிக்கக் கூடிய இணைப்பு முற்றற்ற இணைப்பு எனப்படும்.
- குறுக்குப் பரிமாற்றம் நிகழ்ந்து மீளச் சேர்தல்களைத் தோற்றுவிக்க முடியாத இணைப்பு முற்றான இணைப்பு எனப்படும்.
- குறுக்குப் பரிமாற்ற வீதம் = ½ கோப்பு வீதம்
இலிங்க இணைப்பு
- மனிதனில் X நிறமூர்த்தத்தில் இலிங்கமல்லாத இயல்புகளுக்கான பல பரம்பரை அலகுகள் உள்ளன. இப் பரம்பரை அலகுகள் X நிறமூர்த்தத்தினால் காவிச் செல்லப்படல் இலிங்க இணைப்பு எனப்படும்.
உதாரணம் : மனிதனில் நிறக்குருட்டுத் தன்மை.
மனிதனில் குருநியுறையா நோய்
இலிங்க நிர்ணயம்

- மனிதனில் 1 சோடி நிறமூர்த்தம் இலிங்க நிறமூர்த்தம் ஆகும்.
- X நிறமூர்த்தம் பருமனில் பெரியது. Y நிறமூர்த்தம் பருமனில் சிறியது.
- X நிறமூர்த்தம் இலிங்கமல்லாத பல பரம்பரையலகுகளைக் கொண்டது.
- Y நிறமூர்த்தமே இலிங்கத் தீர்மானத்திற்குரிய பரம்பரை அலகைக் கொண்டது.
- எனவே, XY சாதாரண ஆண்
- Y இல்லாத நிலையில் பெண் இலிங்க நிர்ணயம் ஏற்படும்.
- எனவே, XX சாதாரண பெண்
- புணரியாக்கத்தின் போது, இவ் நிறமூர்த்தங்கள் வேறுபடுத்தப்படும்.
- முட்டைக் கலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு X நிறமூர்த்தத்தைக் கொண்டிருக்கும்.
- விந்துகளில் X நிறமூர்த்தத்தைக் கொண்ட விந்துகளும், Y நிறமூர்த்தத்தைக் கொண்ட விந்துகளும் காணப்படும்.
- கருக்கட்டலின் போது, இப் புணரிகள் வழியாகக் கொண்டுவரப்பட்ட இலிங்க நிறமூர்த்தங்கள் ஒன்று சேர்க்கப்படும்.
- இதனாலேயே குடித்தொகையில் ஆண், பெண் விகிதம் சமனானதாக உள்ளது.
- கதிர் வடிவ உடல், தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்படும்.
- சீப்புருச் செதில்க் கொண்ட தோல்
- சோடிக்குரிய மார்பு, இடுப்பு சேட்டைகள்
- இதரவால் காணப்படும்
- வயிற்றுப்புற வாய் மிளிரியால் மூடப்பட்ட பல்
- உட்காது உண்டு. புறக்காது, நடுக்காது இல்லை.
- இமைகள் அற்ற நன்கு விருத்தியடைந்த கண்கள். பக்கக்கோட்டு புலனங்கம் உண்டு.
- கசியிழைய வன்கூடு காணப்படும்.
- இரண்டு அறைகளிலுள்ள இதயம்.
- பூக்களினால் சுவாசம்.
- பூமூடியற்ற பல பூப்பிளவுகள் காணப்படும்.
- கழித்தலங்கம் – சிறுநீரகம்
- பிரதான நைதரசன் கழிவு – யூரியா
- மாறும் வெப்பநிலையுடைய அங்கிகள்.
- 10 சோடி மண்டையோட்டு நரம்புகள்
- குடம்பி நிலை இல்லை.
- முட்டையிடுகின்ற அல்லது சூற்பிள்ளையீனுந்தன்மை.
- அகக்கருக்கட்டல் காணப்படும்.
- சுறா, திருக்கை
ஓர் கைத்தொழில் சாலையை ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படைகள்:-
1. மூலதனம்.
2. மூலப்பொருட்கள்.
3.தொழில்நுட்பம்.
4. சக்தி, மின்சாரம், எரிபொருள்.
5. தொழிலாளர்கள்.
6. போக்குவரத்து வசதிகள்.
7. சந்தை வசதி.
8. கேள்வி.
9. கழிவு முகாமைத்துவம்.
கைத்தொழில் மூலப்பொருட்கள் பயன்படுத்தக்கூடிய இயங்கை முதல்களின் இயல்புகள்:-
1. நீண்டகாலத்திற்கு பயன்படுத்தக் கூடியதாக பெரியளவில் இருக்கையாக இருத்தல் வேண்டும்.
2. இலகுவாக கிடைக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
3. தூய்மை சதவீதம் உயர்வாக இருத்தல் வேண்டும்.
S தொகுப்பு மூலகங்களினதும், சேர்வைகளினதும் இருக்கைகள்
பாறை உப்பு – NaCl
கடல் நீர் -NaCl, MgCl2, CaCl2, CaSO4, MgSO4
சிலிவெடி உப்பு -NaNO3
சில்வைன் – KCl
வெண்காரம் – Na2B4O7·10H2O
மக்னசைற்று – MgCO3
டொலமைற்று – CaCO3, MgCO3
சுண்ணாம்புக்கல்- CaCO3
சலவைக்கல் – CaCO3
வெண்கட்டி- CaCO3
முள்ளந்தண்டுக் கம்பம் 

![Verti]()
- முள்ளந்தண்டுக் கம்பம் 33 தொடராக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள என்புகளால் ஆக்கப்பட்டது.
- இது வன்மையான நெகிழ்தகவுடைய தண்டு.
- இது உடலுக்கும் தலைக்கும் ஆதாரத்தை வழங்குகிறது.
- முள்ளந்தண்டு கம்பத்தில் 24 தனியான ஒழுங்கற்ற அசையக்கூடிய என்புகளுண்டு.
- இவற்றுடன் சேர்ந்து 5 என்புகள் இணைந்து திருஎன்பு 4 என்புகள் இணைந்து குயிலலகும் (வால்) காணப்படும்.
- முள்ளந்தண்டுக் கம்பத்தில் 4 தெளிவான பிரதேசங்கள் உண்டு
- கழுத்துக்குரியவை 07
- நெஞ்சறைக்குரியவை 12
- நாரிக்குரியவை 05
- திரு என்புக்குரியவை (05)
- குயிலலகு (04)
- மொத்தம் 33
இது 2 வகைப்படும்.
- தனி மின்வாய் அழுத்தம்
- நியம மின்வாய் அழுத்தம்
தனி மின்வாய் அழுத்தம்
- நீருள்ள முகவையொன்றினுள் Mg போன்ற தாக்குதிறன் கூடிய உலோகமொன்றை அமிழ்த்தும் போது உலோகமானது en களை இழந்து உலோக அயன்களாக கரைசலினுள் செல்லும். இதன் போது en கள் உலோக மேற்பரப்பில் விடுவிக்கப்படும்.
- மிகவும் குறுகிய நேரத்தில் உலோக மேற்பரப்பிலுள்ள en கள் கரைசலிலுள்ள நேர் அயன் படையினால் சூழப்பட்டு காணப்படும். இப்படை மின் இரட்டை அடுக்கு எனப்படும்.
- உலோக மேற்பரப்பிலிருந்து அயன்கள் உருவாகும் வீதமும் மீண்டும் உலோகத்துடன் இணையும் வீதமும் சமமாக காணப்படும் போது இயக்கச் சமநிலையொன்று உருவாகும். இந்நிலையில் உலோகத்தின் மேல் மாறா எதிரேற்றமும் உலோகத்தை சூழவுள்ள கரைசலில் மாறா எண்ணிக்கையில் உலோக அயன்களும் காணப்படும்.
இந்நிலையில் உலோகத்திற்கும் மின்பகுபொருள் கரைசலிற்கும் இடையில் ஓர் அழுத்த வேறுபாடு தோன்றும். இவ் அழுத்தவேறுபாடு “தனிமின்வாய் அழுத்தம்” எனப்படும்.
![]()
- செப்பு போன்ற தாக்குதிறன் குறைந்த உலோகங்கள் விரைவாக அயன்களை உருவாக்கமாட்டாது. இதனால் Cu கோலில் குறைந்தளவு en களும் கரைசலில் குறைந்தளவு Cu2+ அயன்களும் காணப்படும். இதன் காரணமாக அழுத்தவேறுபாடு குறைவாக காணப்படும்.
- Cu இன் சமநிலையை விட கூடியளவு இடப்புறம் நோக்கி காணப்படும். இதனால் அழுத்த வேறுபாட்டின் பருமன் Mg இற்கு கூடவாகும்.
மின்வாய் அழுத்தத்தைப் பாதிக்கும் காரணிகள்
- வெப்பநிலை
- மின்பகுபொருளின் செறிவு
- அமுக்கம் (வாயுவெனின்)
- மின்வாயின் தன்மை
நியம மின்வாய் அழுத்தம்
- மின்வாய் அழுத்தம், நியம மின்வாய் அழுத்தம் இரண்டும் செறிவியல்பாகும். ஏனெனில் இவை மின்வாயாக பயன்படுத்தப்படும் உலோகத்தின் அளவில், வாயு மின்வாயாக பயன்படுத்தப்படும் வாயுக்களின் கனவளவில், கரைசலின் கனவளவில் தங்கியிருக்க மாட்டாது.
- மின்பாயமொன்றின் மின்வாய் அழுத்தத்தை நேரடியாக அளக்க முடியாது. சில மின்வாய்களுக்கு சார்பாகவே மின்வாய் அழுத்தங்கள் அளவிடப்படுகின்றன. சார்பு மின்வாயாக நியம ஐதரசன் மின்வாய் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.
- நியம நிபந்தைனையின் கீழ் நியம ஐதரசன் மின்வாய் சார்பாக அளவிடப்படும் மின்வாய் அழுத்தங்கள் நியம மின்வாய் அழுத்தம் எனப்படும்.
Zn(s) / Zn2+(aq) இன் மின்வாயின் நியம மின்வாய் அழுத்தத்தை துணிதல்
♦ இங்கு நியம ஐதரசன் மின்வாயின் மின்வாய் அழுத்தம் பூச்சியம் எனக் கொள்ளப்படும்.
![]()
![]()
செறிவு, அமுக்க மாற்றத்தால் மின்வாய் அழுத்தங்களில் ஏற்படும் மாற்றங்கள்
- Cu2+(aq) + 2e → Cu(s)
Cu2+ இன் செறிவு கூடும் போது சமநிலை முன்னோக்கி நகர்வதனால் நேர் மின்வாய் அழுத்தம் கூடும். Cu2+ இன் செறிவு குறையும் போது சமநிலை பின்னோக்கி நகர்வதனால் en கள் விடுவிக்கப்படும். எனவே, நேர்மின்வாய் அழுத்தம் குறையும்.
- Zu2+(aq) + 2e → Zu(s)
Zu2+ இன் செறிவு குறையும் போது சமநிலை பின்னோக்கி நகரும். en கள் விடுவிக்கப்படும். எனவே, மறை மின்வாய் அழுத்தம் கூடும். Zu2+ இன் செறிவு கூடும் போது சமநிலை முன்னோக்கி நகர்வதனால் en களின் அளவு குறையும். எனவே, மறை மின்வாய் அழுத்தம் குறையும்.
- Cl2(g) + 2e → 2Cl–(aq)
Cl2(g) அமுக்கத்தை கூட்டும் போது சமநிலை முன்னோக்கி நகரும். இதனால் மின்வாய் அழுத்தம் மேலும் நேராகும்.
- 2H+(aq) + 2e → H2(g)
H+ இன் செறிவை கூட்டும் போது மின்வாய் அழுத்தம் நேர்பெறுமானமாகும். H+ இன் செறிவை குறைக்கும் போது மின்வாய் அழுத்தம் மறை பெறுமானத்தை பெறும். H2 வாயுவின் அமுக்கத்தை கூட்ட மின்வாய் அழுத்தம் மறை பெறுமானம் பெறும்.
குடிநீர் பரிகரிப்பு 

பிரதான படிநிலைகள்
படியச் செய்தல்
- நீரில் காணப்படும் மிதக்கும் பொருட்கள் அகற்றப்படுகின்றன.
வடித்தல்
- இதன்போது, நீரில் இருந்து 99% Bacteria களும் அகற்றப்படும்
தொற்று நீக்கல் செய்தல்
- நுண்ணங்கிகள் அழிக்கப்படுகின்றன.
- இதற்காக நீர் O3 ஏற்றப்படுகிறது அல்லது குளோரினேற்றம் செய்யப்படுகிறது.
கழிவுநீர் பரிகரிப்பு
கழிவுநீர்
வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு பரிகரிப்புகள் ஏதும் இன்றி வெளியேற்றப்படுகின்ற நீர் கழிவுநீர் எனப்படும்.
கழிவுநீரை இயற்கை நீர்நிலைகளுக்கு விடுவதால் எழும் பிரச்சினைகள்
- நீரில் சேதனப் பதார்த்தங்களின் அளவு அதிகரிக்கும். இதனால் நீரில் உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை அதிகரிக்கும்.
- காற்றின்றிய பிரிகையாக்கம் அதிகரிப்பதால் H23 போன்ற வாயுக்கள் தோன்றி வெறுப்பான மணம் தோன்றும்.
- நீர் வழியாக நோயாக்கிகளின் பரவல் அதிகரிக்கும்.
- காற்றுவாழ் அங்கிகள் இறக்கும்.
கழிவு நீர் பரிகரிப்பின் படிநிலைகள் 


முதலான பரிகரிப்பு
- மிதக்கும் பெரிய பொருட்கள், மண், எண்ணெய்கள், கொழுப்புகள் என்பன கழிவுநீரிலிருந்து வடித்து அகற்றப்படும்.
- நீரில் காணப்பட்ட திண்ம துணிக்கைகள் தாங்கியின் அடித்தளத்தில் படிவடையும்.
- இங்கு எவ்வித நுண்ணங்கிச் செயற்பாடுகளும் பயன்படுத்தப்படுவதில்லை.
துணையான பரிகரிப்பு
- துணையான பரிகரிப்பில் பிரிகையாக்கிகளாகத் தொழிற்படக் கூடிய காற்றுவாழ் Bacteria களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.
- இதனால் கழிவு நீர் நன்கு காற்றூட்டப்படுகிறது.
- இங்கு நுண்ணங்கிகளின் ஒட்சியேற்றம் துரிதமாக நிகழ்த்தப்படுகிறது.
- இது சிறுதாரை வடிமுறையாகவோ, ஏவப்பட்ட சேற்று முறையாகவோ அமையலாம்.
- நுண்ணங்கிகளின் ஒட்சியேற்றத்தினால் கழிவு நீரிலுள்ள சேதனச் சேர்வைகளின் 75 – 95% அகற்றப்பட்டு விடும்.
துணையான பரிகரிப்பிற்கு பின்னர் நீர் தொற்று நீக்கம் செய்யப்பட்டு இயற்கை நீர் நிலைகளுக்கு விடப்படுகின்றது.
குடிநீரின் தரத்தைத் தீர்மானித்தல்
- குடிநீரின் தரத்தைத் தீர்மானிப்பதற்கு Coliform Bacteria களுக்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- நீர் மாதிரியில் Coliform Bacteriaகள் இருப்பின் அந்த நீர், மனித மலத்தினால் மாசாக்கப்பட்டிருக்கிறது.
- மல மாசாக்கம் அடைந்த நீர் வழியாக Typoid, வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரவலைடையும்.
![water-treatment-cycle]()
Coliform Bacteria களின் சிறப்பியல்புகள்
- காற்று வாழிகளாகவும், அமையத்திற்கு ஏற்ற காற்றின்றி வாழிகளாகவும் உள்ளது.
- கோலுருவானவை
- அகவித்திகளை உருவாக்காதவை
- Lactose கரைசலை நொதிப்படையச் செய்து 48 மணித்தியாலங்களில் வாயு விளைவுகளை தோற்று விக்கக்கூடியன.
திண்மக் கழிவுகளை சூழலுக்கு விடுவதால் எழும் பிரச் சினைகள்
- நுளம்புகளினதும், பூச்சிகளினதும் பெருக்கத்திற்கான நிலையிடங்களாக அமைதல்
- காற்றின்றிய பிரிகையாக்கம் காரணமாக வெறுப்பான மணம் உண்டாதல்.
- இதனால் தோன்றும் மீதேன் வாயு சூழலுக்குத் தீங்கானதாக அமைதல்.
- நிலக்கீழ் நீர் மாசடைதல்.
திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் முறைகள்
- கழிவுகளை வேறுபிரித்து மீள் சுழற்சி செய்தல்.
- சேதனக் கழிவுப் பதார்த்தங்களைப் பிரிகையாக்கம் செய்து உயர்வாயு உற்பத்தி,கூட்டெரு உற்பத்தியில் பயன்படுத்தல்
- ஆரோக்கியமான காணி நிரவுகை செய்தல்.
ஆரோக்கியமான காணி நிரவுகை
- திண்மக் கழிவுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறை
- இதற்கென பக்க விலக்கடைந்த / உப பக்க விலக்கடைந்த நிலங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.
- இவ்வாறான நிலங்களில் தரைக்கீழான நீர்மட்டம் உயர்வாக இருக்கக்கூடாது.
- திண்மக் கழிவுகள் தெரிவு செய்யப்பட்ட நிலப்பரப்பில் பரப்பப்பட்டு, அழுத்தப்பட்டு கனவளவு குறைக்கப்பட்டு படைகளாக்கப்படுகின்றது.
- இப்படையின் மேல் மணல் பரவப்படும்.
- இவ்வாறு மீண்டும் பல தடவைகள் இந்த நிலத்தில் திண்மக் கழிவுகளை இடமுடியும்.
- இங்கு திண்மக் கழிவுகள் உயிரியலுக்குரியதும், இரசாயன முறைக்குரியதுமான செய்முறைகளால் பிரிகையாக்கம் அடைந்து திண்ம,திரவ,வாயு விளைவுகளைத் தூற்றுவிக்கும்.
- இது செலவு குறைவான முறையாகும்.
- நகர்ப்புற திண்மக் கழிவுகளின் பரிகரிப்பில் இது பயன்படுகிறது.
உயிரின் தோற்றம் தொடர்பான கொள்கைகள். 


சிறப்புப் படைப்புக் கொள்கை
- சகல உயிரினங்களும் இன்றுள்ளவாறே சர்வ வல்லமையுள்ள கடவுளினால் படைக்கப்பட்டன. பல்வேறு சமயங்களினாலும் பிரதானமாக கிறிஸ்தவ சமயத்தினால் இக்கொள்கை பரப்பப்படலாயிற்று.
தன்னிச்சைப் பிறப்பாக்கக் கொள்கை
- உயிர் எந்தச் சந்தர்ப்பத்திலும் உயிரற்ற சடப்பொருளிலிருந்து தானாகவே தோன்றுகின்றது. அழுக்குகளில் இருந்து புழுக்கள், பூச்சிகள், எலிகள் பொருத்தமான நிபந்தனைகளின் கீழ் உருவாவதாக இக்கொள்கை குறிப்பிடுகின்றது.
அண்ட வெளிப்பிறப்புக் கொள்கை
- அண்டவெளிக்கு அப்பாலான பகுதியிலிருந்து பூமிக்கு உயிர் வந்தது. இன்றுகூட சில விஞ்ஞானிகள் உயிரிகள் எமது ஞாயிற்றுத்தொகுதிக்கு அப்பாற்பட்ட ஏனைய கோள்களில் சாதாரணமாகக் காணப்படுவதாகவும் பூமியை நோக்கி வந்த எரிகற்கள் அல்லது வேற்றுக்கிரக விண்வெளி ஊர்திகள் ஊடாகப் பூமியை வந்தடைந்ததாக நம்புகின்றனர்.
உயிரிரசாயனக் கூர்ப்புக் கொள்கை 


- ஆதியான வளிமண்டலத்தில் காணப்பட்ட அசேதன வாயுக்கள் மின்னிறக்கத் தாக்கங்களாலும் சூரியக் கதிர்வீச்சாலும் தாக்கமடைந்து சேதன மூலக்கூறுகளைத் தோற்றுவித்தன. இப்பதார்த்தங்கள் சமுத்திர நீரில் கரைந்து முதல் உயிரியை உருவாக்கியது.
- அலெக்சாண்டர் ஒப்பாரினும் (1923) J.B.S கல்டேனும் இக்கொள்கையை முதலில் உருவாக்கினர். 1953இல் ஸ்ரான்லி மில்லர் ஆதி உலகின் நிபந்தனைகளைக் குடுவைகளுள் உருவாக்கிப் பரிசோதனைச் சான்றுகளைப் பெற்றார்.
- சிறிய சேதன மூலக்கூறுகளில் இருந்து ஐதரோக் காபன்கள், அமினோவமிலம் போன்ற சேதனச் சேர்வைகள் சமுத்திரங்களில் உருவாகியிருக்கும். பெருமளவு சூரியக்கதிர்வீச்சு, மின்னல்களின் போது ஏற்பட்ட வலுவானமின்புயல், உக்கிரமான எரிமலை வெடிப்புக்கள், கதிரியக்கத்தேய்வினால் ஏற்பட்ட வெப்பம் என்பன இத்தாக்கங்களுக்கு வேண்டிய சக்தியை வழங்கியிருக்கும்.
- ஆதியான சமுத்திரம் இத்தகைய சேதனப் பதார்த்தங்களை அதிகளவில் கொண்ட
ஆதிக்கூழாக இருந்திருக்கும். சேதனக் கூழானது அமினோஅமிலங்கள், நைதரசன்
மூலங்கள், எளியவெல்லம், நியுக்கிளியோரைட்டுக்கள் போன்றவற்றைக் கொண்டிருந்திருக்கும்.
- இந்த மூலக்கூறுகள் ஒன்றுதிரண்டு இலிப்பிட்டுப்படை ஒன்றினால் சூழப்படலாயின. இந்தச் சிக்கலான சேர்வைகள் ஆதியான கலத்தை உருவாக்கலாயின. இக்கலம் உயிர்க்கலங்களில் காணப்படும் வளர்ச்சி, தற்பகர்ப்பு போன்ற இயல்புகளையும் பிரதிபலிக்கலாயின. முதலில் உருவாகிய உயிரிகள் பிறபோசணைக்குரிய காற்றின்றி வாழ் புரோகரியோட்டா என நம்பப்படுகின்றது.
- இது 3.5 பில்லியன்வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது.
உயிர்ப்பல்வகைமைக் கூர்ப்பு 









- வசதிக்காக புவிச்சரிதவியல் காலங்கள் நான்கு யுகங்களாகவும், 11 காலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. யுகங்கள் நான்கும்
Archaeozoic
Palaeozoic
Mesozoic
Cenozoic எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
- Archeozoic யுகத்தில் Precambrian காலப்பகுதியில் காணப்பட்ட அங்கி வகைகள் பற்றீரியாக்களும் புரோடிஸ்டாக்களும் மட்டுமேயாகும்.
- 2.7 தொடக்கம் 0.7 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் ஒளித்தொகுப்புச் செய்யும் அங்கிகள் தோன்றி பல்வகைமை அடைந்தன. ஆரம்பகால ஒளித்தொகுப்பு அங்கிகள் ஒட்சிசனைத் தோற்றுவிப்பதற்கான பாதையைக் கொண்டிருக்கவில்லை. வளிமண்டலத்தில் ஒட்சிசன் அளவு அதிகரித்துச் சென்று அது அயனாக்கமடைந்து ஓசோன் படை தோன்றியது.
- 1- 1.5 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் முதன் முதலில் இயூக்கரியோட்டாக்கள் தோன்றின. அதாவது 2 பில்லியன் வருட காலப்பகுதியிலும் உயிர் தோன்றியதில் இருந்து பூமியில் புரோகரியோட்டாக்கள் மட்டுமே காணப்பட்டு வந்துள்ளன.
- புரோடிஸ்டாக்கள் பல்வகைமை அடைந்து சகல பிரதான முள்ளந்தண்டற்ற கணங்களின் தோற்றமும் 0.7 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நடைபெற்றன.
- பற்றீரியாக்களில் இருந்து தனிக்கல இயூக்கரியோட்டாக்கள் கூர்ப்படைந்தன. ஆதியான
பல்கலத்தாலான விலங்குகள் கடலில் தோன்றின. உ-ம்: முருகைக்கல், கடல்அனிமனிகள்
போன்ற நைடேரியன்கள், சில அனெலிட்டுக்கள், ஆதியான ஆத்திரப்பொட்டுக்கள்.
- 700 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்து இன்று வரை சமுத்திரங்களில் அங்கிப் பல்வகைமை தொடர்கிறது.
- முள்ளந்தண்டுளிகளின் தோற்றமும், மொலஸ்காக்கள், ரைலபையிட்டுக்கள், கிறஸ்ரேசியாக்கள் என்பவற்றின் எண்ணிக்கையின் அதிகரிப்பும், ஏறத்தாழ 500 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது.
- தாவரங்களினுடைய தரையை நோக்கிய குடியேற்றம் 480 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது. இவற்றின் பல்வகைமையாதல் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது.
- விலங்குகளின் தரையை நோக்கிய குடியேறுகை 420 மில்லியன் வருடங்களுக்கு முன் நடைபெற்றது. அன்றிலிருந்து இன்று வரை அவற்றின் பல்வகைமையாதல் தொடர்கின்றது.
- தரையை நோக்கிக் குடிபெயர்ந்த முதல் முள்ளந்தண்டுளிகள் அம்பிபியாக்களாகும்.தரைக்கும், நீருக்குமான குடிபெயரும் தன்மையை தற்பொழுதும் அவை பேணுகின்றன. Latimeria போன்ற சோணைச் செட்டைகளையுடைய மீன்களில் இருந்து அம்பிபியாக்கள் உருவாகின.
- அம்பிபியாக்களில் இருந்து ரெப்ரீலியாக்கள் தோன்றின. இவை தரைவாழ்க்கைக்கு முழுமையாக இசைவாக்கமடைந்த அங்கிகளாகும். இவை இதற்காக விசேடமான கட்டமைப்பு, உடற்றொழிலியல் ரீதியிலான இயல்புகளை விருத்தியாக்கியுள்ளன.
- இதே காலப்பகுதியில் ஆரம்பகால மெய்ப்பாசிகளும், பன்னங்களும் செழிப்படைந்தன.
- பறவைகள், ரெப்ரீலியாக்களில் இருந்து தோன்றின. பறவைகள் தமது பறக்கும் ஆற்றல் காரணமாக பெரும்பாலான இடங்களில் பரவிக் காணப்படுகின்றன.
- பூச்சிகள், காபோனிபெரஸ் காலப்பகுதியில் முதலில் தோன்றி பின்னர் பல்வகைமையில் அதிகரித்துள்ளன. மரப்பன்னங்கள், குண்டாந்தடிப்பாசிகள், ஆரம்ப கால வித்துமூடியிலித் தாவரங்கள் கொண்ட பாரிய மழைக்காடுகள், காபோனிபெரஸ் காலப்பகுதியில் பெருமளவு வியாபித்திருந்தன. இன்று பயன்படுத்தப்படும் நிலக்கரிப்படிவுகள் இக்காலப் பகுதியில் காணப்பட்ட காடுகளில் இருந்து தோன்றியவை.
- 280 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட பேர்மியன் காலப்பகுதியில் கூம்புளிகள் தோன்றின.
- Triassic காலப்பகுதியில் ஊர்வனவற்றினுடைய இசைவு விரிகை காரணமாக டைனசோர்கள்
உருவாகின. மீசொசோயிக் யுகத்தில் தரையில் டைனசோர்கள் ஆட்சியுடையனவாகி Cretaceous காலப் பகுதியில் உச்ச நிலையை எய்தின.
- ஆரம்ப கால முலையூட்டிகளும் கூட Triassic காலப்பகுதியிலேயே உருவாகியவை. ஆயினும் பல மில்லியன் கணக்கான வருடங்களாக அவை சிறிய கூட்டங்களாகவே எஞ்சியிருந்தன.
- Cretaceous காலப்பகுதியில் பூக்கும் தாவரங்கள் ஆட்சியானவையாகியமையும் சூல்வித்தகம் கொண்ட முலையூட்டிகளினதும் நவீன மீனினங்களினதும் தோற்றமும் இடம்பெற்றன.
- பூக்கும் தாரவங்கள் பரவலடைந்து இசைவு விரிகையினால் செழிப்படைந்தன.
- Tertiary காலப்பகுதியில் முலையூட்டிகளின் இசைவுவிரிகையினால் பல இனங்கள்
தோன்றின.
- மனித இனம் அண்மைக் காலத்திற்குரிய இனமாகும். 500 000 வருடங்களுக்கு
முற்பட்ட காலப்பகுதியில் நவீன மனித வர்க்கம் தோன்றியது.
இனங்களின் அழிவு 






- இனங்கள் தாம் அழிந்து கொள்வதன் மூலம் அல்லது தம்மை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் புதிய இனங்களுக்கு வழிவிடவேண்டும்.எனவே இனங்களினுடைய இயற்கை அழிவானது கூர்ப்புச் செய்முறையின் ஒரு படிமுறையாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
- பொதுவாக அழிவு வீதத்திலும் பார்க்க கூர்ப்பு வீதம் உயர்வானதாக இருக்கும். எனவே, நீண்டகால அடிப்படையில் உயிர்ப் பல்வகைமையில் அதிகரிப்பு ஏற்படும்.
- ஒரு இனத்தின் இறுதித் தனியனும் புவியில் இருந்து அகற்றப்படுகின்றமையானது இன அழிவாகும்.
- உயிர்ப்பல்வகைமை வரலாற்றில் இனங்களின் பேரழிவால் ஏற்பட்ட அழிவுகள்
- உயிர்பல்வகைமை வரலாற்றில் பெரும் பேரழிவுகள் பல இடம்பெற்றுள்ளன.
- Trilobite களின் அழிவு-பிந்திய Permian (ஏறத்தாழ 200மில்லியன் வருடங்களுக்கு முன்பு)
- Ammonites களின் அழிவு-பிந்திய Cretaceous (ஏறத்தாள 65மில்லியன் வருடங்களுக்கு முன்பு)
- Dinosaurs களின் அழிவு- பிந்திய Cretaceous (ஏறத்தாள 65மில்லியன் வருடங்களுக்கு முன்பு)
- மனிதக் குடித்தொகை அதிகரிப்பும் நாகரீக வளர்ச்சியும் உயிர்ப்பல்வகைமை அழிவுவீதத்தை பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளன. இன்று மனிதன் புவியில் ஆட்சியுடையவனாக இருக்கின்றான். புவி மேற்பரப்பில் மனிதத் தலையீட்டுக்கு உள்ளாகாத எந்தவொரு சூழற்றொகுதியும் இல்லை.
- அடுத்த 30 வருட காலப்பகுதியுள் தற்போதைய இனங்களுள் 5 தொடக்கம் 10 வீதம் வரையிலானவை அழிவை எதிர்கொள்ளலாம் எனப் பொதுவாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதக் குடித்தொகை அதிகரிப்பும், வளங்களினது பயன்பாட்டின் அதிகரிப்பும் விவசாயம், கைத்தொழில், வனவளப் பாவனை, போக்குவரத்து, நகரமயமாதல் போன்ற மனித நடவடிக்கைகளால் பேணப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் சூழற்றொகுதிகளின் தொழிற்பாடுகளை மாற்றியமைத்ததன விளைவாக பல்வகைமை இழப்பை ஏற்படுத்தின.
தாய்ப்பால் உற்பத்தி சுரத்தல் என்பவற்றில் ஓமோன் கட்டுப்பாடு
சாதாரண பெண்களில் பரிவகக்கீழினால் prolactin நிரோதிக்கும் காரணியால் (PIH/PRIH) முற்பக்க கபச்சுரப்பியிலிருந்து Prolactinசுரக்கப்படுவது நிரோதிக்கப்படும்.
கர்ப்பமுறுதலின் போது progestrone ஓமோன் தூண்டலால் பால்ச்சுரப்பிள் விருத்தியடைந்து முலைகளின் பருமன் கூடும். oestragen ஓமோன் தூண்டலால் கான்களின் விருத்தி தூண்டப்படும்.
முற்பக்க கபச்சுரப்பியால் சு / ம் Prolactin hormone பால் உற்பத்தியை தூண்டும். மனித சூல்வித்தக்கத்திற்குரிய lactogen உம் முலைச்சுரப்பி விருத்தியை தூண்டும்.
கர்ப்பகாலம் முழுவதும் progestrone காணப்படுவதால் அது Prolactin சுரக்கப்படுவதை நிரோதிக்கும். இதனால் பால் சுரக்கப்படுவது நிரோதிக்கப்படும்.
பிரசவத்தின் போது சூல்வித்தகம் இழக்கப்படும். இதனால் குருதியில் Progestrone, oestragen மட்டங்கள் சடுதியாக வீழ்ச்சியடையும். இதனால்prolactin சுரக்கப்படுவது நிரோதிக்கப்பட மாட்டாது. எனவே பரிவகத்கீழால் PRH சுரக் கப்பட்டு முற்பக்க கபச்சுரப்பி தூண்டப்பட்டு பெருமளவு prolactin சுரக்கப்படும். Prolactin முலைச்சுரப்பியின் பால் சுரக்கும் சுரப்பிகளை தூண்டுவதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
முலைக்காம்பு முலைக்காம்பை சூழவுள்ள சிற்றிடம் என்பவற்றில் உள்ள தொட்டுணர் வாங்கிகள் என்பன நரம்புக் கணத்தாக்கத்தை முண்ணானுக்கூடாக கடத்தும். இதனால் பிற்பக்க கபச்சுரப்பியிலிருந்து oxytocin விடுவிக்கப்படும்
இதனால் சிற்றறைகளை சூழவுள்ள மழமழப்பான தசை நார்கள் சுருங்க, பாலானது கான்களுக்கூடாக முலைக்காம்பை சென்றடையும்.
பரிவகக் கீழுக்கான இன்னொரு தெறிவினையான உறிஞ்சும் தூண்டல் prolactinவெளியேறுவதற்கு தூண்டலாக அமையும்.
தாய்ப்பால்
குழந்தையின் சிறப்பான வளர்ச்சிää விருத்திக்காக தாயின் முலைச்சுரப்பிகளால் உற்பத்தியாக்கப்படும். உயர் சிக்கற் தன்மையான தொழிற்பாட்டுக் கரைசல் தாய்ப்பாலாகும்.
1 – 3 நாட்களில் (பிறப்பின் பின்) சுரக்கப்படும் தாய்ப்பால்colostrum/ கடும்புப்பால் எனப்படும். இது மஞ்சள் நிறமான நீர்த்தன்மையான திரவம். இதில் உயர்ந்தளவு புரதமும் தாழ்ந்தளவு கொழுப்பும் காணப்படும். இக்கடும்புப் பால் குழுந்தையின் நிர்பீடனத் தொகுதியின் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.
குழந்தை பிறந்து 3 நாட்களின் பின் சரியான தாய்ப்பால் சுரக்கப்படும். இது மெல்லிய நீலம் கலந்த வெள்ளை நிறமான நீர்த்தன்மையான திரவம்.
நீலம் – புரதம்
வெள்ளை – கொழுப்பு
தாய்ப்பால்குழந்தையின் சிறப்பான வளர்ச்சி விருத்திக்கு தேவையான சகல கூறுகளையும் சரியான விகிதத்தில் கொண் டுள்ளது.
தாய்ப்பால் பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது.
1. நீர் (88%)
2.lactose/carbohydrate
3. Protein,lactalbumin,kesinogen,immunoglobulin,lactoferrin
4. கொழுப்பு
5. விற்றமின்கள் – A,C,D,B12,B6,B1
6. கனியுப்பு அயன்கள் -calcium குறைந்தளவில் ளுழனரைஅ
7. கலங்கள் – WBC
8. சில மருந்துப் பொருட்கள் – ASpirin,ALcohol,Progestrone
குழந்தை தாய்ப்பால் குடிக்க ஆரம்பித்ததிலிருந்து முடிவும் வரை தரமும் அதன் கூறுகளும் மாறுகின்றது.
தாய்ப்பாலின் தொழில்கள்
1. குழந்தையின் சிறப்பான வளர்ச்சி விருத்திக்கு தேவையான எல்லா போசணைக் கூறுகளையும் சரியான விகிதத்தில் வழங்குகின்றது.
(குழந்தை பிறந்ததிலிருந்து 4 – 5 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் குழந்தையின் உணவாக பயன்படும்)
2. தொற்றுக்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கின்றது.
(உ – ம்) குடல் சுவாசத்தொகுதி சிறுநீர்த்தொகுதி காது போன்றவற்றில் ஏற்படக் கூடிய தொற்றுக்கள்.
3. ஒவ்வாமை தாக்கங்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.
4. மூளை விருத்திக்கு அவசியமான பொலி நிரம்பாத கொழுப்பமிலத்தை கொண்டுள்ளது.
5. குழந்தையின் நிர்ப்பீடனத் தொகுதி விருத்தியடையத் தூண்டும்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் அனுகூலம்
குழந்தையின் சிறப்பான வளர்ச்சி விருத்திக்குரிய எல்லா போசகை; கூறுகளையும் சரியான விகிதத்தில் கொண்டுள்ளது.
குழந்தையின் உடற் சூட்டுக்கேற்றதாக இருக்கும்.
கிருமியழிக்கப்பட்டது.
தாய்க்கும் குழந்தைக்குமிடையில் நெருக்கமான ஒரு உறவு ஏற்படுத்தப்படும்.
தொற்றுநோய்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கின்றது. இதற்காக தாய்ப்பாலிலிருந்து பிறபொருளெதிரிகள் கிடை கின்றது.
ஒவ்வாமை தாக்கங்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கின்றது.
குந அகத்துறிஞ்சலுக்கு உதவுகின்றது.
தாய்ப்பால் குடித்த பிள்ளை போத்தல் பால் குடித்த பிள்ளையிலும் நுண்ணறிவு கூடியதாக காணப்படும். உடல் நலமும் கூடியது.
குழந்தையின் உடற்தசைகள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். இது பேச்சில் பங்கெடுக்கின்றது.
தாய்ப்பால் குடித்து வளரும் பிள்ளை சமுதாய நடத்தைகளுக்கு எதிரான செயல்களை காட்டுவது குறைவாக காணலாம்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் அனுகூலம்
வாழ்க்கையின் பின்னாளில் சூலகம் முலைகளில் புற்றுநோய் ஏற்படுதல் அபாயம் குறைக்கப்படும்.
குழந்தை பிறப்பின் போது கருப்பையில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் குணமடைய உதவும். குழந்தை முலைகளை உறிஞ்சுவதால் Oxytocin hormone விடுவிக்கப்பட்டு கருப்பை காயங்கள் குணமாகும்.
தலை உடலின் ஏனைய பகுதிகளுக்கு குறைந்தளவில் விகிதாசாரமற்ற நிலையில் காணலாம்.
குழந்தையின் போசணை
குழந்தைக்கு 6 மாதம் வரையாவது தாய்ப்பால் மட்டும் ஊட்டப்படல் வேண்டும். 6 மாதம் தொடக்கம் 2 வயதாகும் வரை தாய்ப்பால் ஊட்டல் தொடரப்படுவதுடன் மிகை நிரப்பி உணவுகளும் வழங்கப்படல் வேண்டும்.
குழந்தைக்கு 6 மாதம் ஆகும் போது குறைதிண்ம உணவுகள் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். அரிசி உருளைக்கிழங்கு தானியம் மரக்கறி என்பன குறைதிண்ம உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படலாம். பழங்களும் வழங்கப்படல் வேண்டும். மிகை நிர்ப்பி உணவூட்டலை ஆரம்பித்து 2 மாதங்களின் பின்னர் குழந்தைக்கு ஒரு நாளில் 4 தடவையாவது உணவூட்டப் படல் வேண்டும்.
குழந்தைக்கு 8 – 9 மாதமாகும் போது உணவூட்டல் 4 – 6 தடவையாக கூட்டப்பட வேண்டும்.
2 வயதாகும் போது குடும்பத்திலுள்ள ஏனைய அங்கத்தவர் போன்று உணவு உட்கொள்ள பழக்கப்படுத்தல் வேண்டும்.
குழந்தையின் உளவிருத்தி
குழந்தையானது உணவு பாதுகாப்பு சூடு போன்றவற்றுக்காக பெற்றோரில் நீண்டகாலம் தங்கி வாழுகின்றது.
நரம்புத் தொகுதி உட்பட குழந்தையின் உடலிலுள்ள அனேகமான தொகுதிகள் முதிர்ச்சியடையாதிருப்பதுடன் சில மாதங்களில் முக்கிய விருத்திகள் நடைபெறும். விரைவாக உளவிருத்தி ஏற்படும்.
குழந்தை துரிதமாக வளர்ச்சியடைந்து தன்னால் பற்றிப் பிடிக்கக் கூடிய பொருள்களை விரைவில் கையாளக் கூடிய மாறும்.
11 – 14 மாதங்களின் முடிவில் தலை கை என்பவற்றின் கட்டுப்பாட்டை பெற்று அமர்ந்திருக்க கற்றுக்கொள்ளும். பின் குழந்தை தன்னை மேல்நோக்கி உயர்த்தவும் நிற்கவும் உதவியின்றி நடக்கவும் ஆரம்பிக்கும்.
குழந்தையின் குரலாக்கம் 2 மாதங்களில் ஆரம்பித்து முதலாவது வருடத்தில் கதைக்கக் கூடியதாகவும்ää 2 வயது குடிவில் 200 சொற்கள் அடங்கிய சொற் களஞ்சியத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
ஏனைய முலையூட்டிகளுடன் ஒப்பிடுகையில் மனிதனில் உளவிருத்தி நடைபெற நீண்ட காலம் எடுக்கும். இது மூளையின் பெரிதாகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் இருப்பதுடன் தொடர்புடையது.
பெற்றோர் பராமரிப்பு கல்வி பயிற்சி என்பன கூர்ப்புச் செயன்முறையின் போது மனித இனத்தின் வெற்றிக்கான குறிப்பிடத்தக்க காரணிகளாக அமைந்துள்ளது.
பூப்பெய்தலுடன் தொடர்பான பிரதான உடல் மாற்றங்கள்
GnRH இன் பரப்பு அதிகரிப்பதால் FSH,LH மட்டங்கள் கூடும். இதனால் பூப்பெய்தலில் பிரதான உடல் உள மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறான Gonadotropin ள் (FSH,LH) சனனிகளிலிருந்து இலிங்கத்திற்குரிய ஓமோன்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால் இனப்பெருக்கத் தொகுதியின் முதிர்ச்சியும் துணைப்பாலியல்புகளின் விருத்தியும் விரைவாக்கப்படும்.
பெண்களில் …..
12 – 13 வயதுகளில் ஏற்படும் முதலாவது மாதவிடாயை தொடர்ந்து வளர்ச்சி விரைவாக்கப்படும்.
பிரதான உடல் மாற்றங்கள்
1. இனப்பெருக்கத் தொகுதி முதிர்ச்சியடைதல்.
2. மாதவிடாய் சக்கரமும் சூல்கொள்ளலும் ஆரம்பித்தல்.
3. முலைகள் விருத்தியடைந்து பருமனில் அதிகரிக்கும்.
4. பூப்பென்புக்குரிய பகுதி கக்கத்துக்குரிய பகுதிகளில் மயிர்கள் வளர்ச்சியடைய தொடங்கும்.
5. உயரத்தில் வளர்ச்சி வீதம் கூடும். இடுப்பு பகுதி விரியும்.
6. தோலின் கீழான இழையங்களில் கொழுப்பு படிவடையும் வீதம் கூடும்.
7. தலையின் தோலில் மயிர்கள் அதிகரிக்கும்.
ஆண்களில் …..
12 – 13 வயதில் வாழ்தகவு விந்துக்களின் முதல் வீசல் நடைபெறும்.
பிரதான உடல் மாற்றங்கள்
1. என்புகளினதும் தசைகளினதும் வளர்ச்சியும் உயரம் நிறை என்பவற்றில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் ஏற்படும்.
2. குரல்வளை பெரிதாலுடன் குரல்நாண் குரல் என்பன தடிக்கும்.
3. முகம் மார்பு வயிறு கக்கம் பூப்பென்பு ஆகிய பகுதிகளில் மயிர்கள் வளர்ச்சியடையும்.
4. தோள் அகலமாகும்.
5. ஆண்குறி விதைப்பை முன்னிற்கும்சுரப்பி என்பன பருமனில் அதிகரிக்கும்.
6. சுக்கிலச் சிறுகுழாய்கள் முதிர்ச்சியடைந்து விந்துக்கள் உற்பத்தியாகும்.