பாரம்பரிய பதார்த்தமாகத் தொழிற்பட DNA இல் உள்ள சிறப்பியல்புகள்

  • DNA ஏகவினக் கட்டமைப்பு உடையது.
  •  ஒப்பீட்டளவில் உறுதியான கட்டமைப்பு உடையது.
  • பாரம்பரிய தகவல்களை தனித்துவமான மூலத்தொடரொழுங்காக சேமிக்கும் தன்மை உடையது.
  • DNA தற்பகர்ப்படைந்து சர்வசமனான பிரதிகளை உருவாக்கக் கூடியது.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

DNA இன் தற்பகர்ப்பு    Image Tipdna-rna-structure

  • DNAஇன் தற்பகர்ப்பு இடைவத்தையில் S அவத்தையில் இடம்பெறும்.
  • இது DNA Helicase இனால் ஆரம்பிக்கப்படுகிறது.
  • DNA இரு குறைநிரப்பும் பட்டிகைகளுக்கிடையிலான ஐதரசன் பிணைப்பு DNA helicase இனால் உடைக்கப்படுகிறது.
  • DNA இன் விரிபரப்பு சுருள் குலைவடையும்.
  • சுருள் குலைவடைந்த ஒவ்வொரு பட்டிகைகளும் ஒரு படித்தகடாகத் தொழிற்படுகிறது.
  • ஒவ்வொரு பட்டிகைகளுக்கும் குறை நிரப்புகின்ற முறையில் சுயாதீன டீ ஒக்சி றைபோ நியுக்கிளியோதைட்டுகள் ஒழுங்குபடுதல் அடைகின்றன.
  • சுயாதீன நியுக்கிளியோதைட்டுகளுக்கும், DNA இன் பட்டிகைகளுக்கும் இடையில் ஐதரசன் பிணைப்பு ஏற்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும்.
  • சுயாதீன நியுக்கிளியோதைட்டின் பொஸ்பேற்றுக் கூட்டத்திற்கும், அடுத்த சுயாதீன நியுக்கிளியோதைட்டின் டீ ஒக்சி றைபோஸ் வெல்லத்தின் 3ம் காபனிற்கும் இடையில் ஒடுக்கல் தாக்கம் நிகழ்ந்து இரு எசுத்தர் பிணைப்பு ஏற்படுத்தப்படும்.
  • DNA துண்டுகள் DNA Ligase இனால் இணைக்கப்படும்.
  • உருவாகிய இரு DNA மூலக்கூறுகளும் சுருளடைந்து இரட்டை விரிபரப்பு சுருளாகும்.
  • உருவாகிய மூலக்கூறுகளில் ஒன்று தொகுக்கப்பட்ட புதிய பட்டிகையாகவும், மற்றையது பழைய பட்டிகையாகவும் காணப்படும்.
  • இது குறை மாறாப் பகர்ப்பு முறை எனப்படும்.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பாரம்பரிய கோடோன்  Image Tip319e71fef87236a01bb797379e3e15745790ff19

  • DNA மூலக்கூறில் பரம்பரை அலகு ஒன்றில் அடுத்து வரும் நியுக்கிளியோதைட்டுகளின் மூலங்களின் முக்கூட்டில் புரதமொன்றின் பல்பெப்தைட்டின் அமினோ அமிலத்தின் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் செய்தி வகை குறிக்கப்பட்டிருக்கும். இது பாரம்பரிய கோடோன் எனப் படும்.

பாரம்பரிய பரிபாடை

  • DNA மூலக்கூறில் பரம்பரை அலகுகளைக் கொண்ட பகுதிகளின் அடுத்துவரும் நியுக்கிளியோதைட்டுகளின் முக்கூட்டுக்களால் 64 வகையான கோடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் வகை குறிக்கப்பட்டிருக்கும் செய்தி பாரம்பரிய பரிபாடை எனப்படும்.

புரதத் தொகுப்பில் RNA இன் பங்குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • mRNA – DNA இல் காணப்படும் பரிபாடைச் செய்தியை பிரதியெடுத்து குழியவுருவில் காணப்படுகின்ற Ribosome களுக்குக் கொண்டுவருதல்.
  • tRNA – tRNA தனித்துவமான முறையில் அமினோ அமிலங்களை Ribosome களுக்குக் காவிச் செல்கிறது.
  • rRNA – mRNA இல் உள்ள பாரம்பரிய பரிபாடை செய்தியை tRNA உடன் சேர்ந்து பல்பெப்தைட்டாக / புரதமாக மாற்றுவதில் ஈடுபடுகின்றது.

புரதத் தொகுப்பு

  • புரதத் தொகுப்பின் போது, DNAஇன் பரம்பரை அலகு ஒன்றின் பாரம்பரிய பரிபாடை செய்தியானது, பல்பெப்தைட்டு மூலக்கூறாக மாற்றப்படுகிறது.
  • இது பிரதியெடுத்தல், மொழி பெயர்த்தல் எனும் இரு படிகளினூடாக நிகழ்கிறது.

பிரதியெடுத்தல்

  • கருவினுள் இடம்பெறுகின்றதும், DNA இன் பாரம்பரிய பரிபாடைச் செய்தியை mRNA இன் மூலத் தொடரிக்கு மாற்றீடு செய்கின்றதுமான செய்முறை பிரதியெடுத்தல் எனப்படும்.

மொழிபெயர்த்தல்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • குழியவுருவில் இடம்பெறுகின்றதும், mRNA இன் தனித்துவமான மூலத்தொடரொழுங்கில் காணப்படுகின்ற பரிபாடை செய்தியினை tRNA  மற்றும் Ribosome என்பவற்றால் அமினோ அமிலங்களின் தனித்துவமான தொடர் ஒழுங்கைக் கொண்ட பல்பெப்தைட்டாக மாற்றுகின்ற செய்முறை மொழிபெயர்த்தல் எனப்படும்.
  • இது புரதத் தொகுப்பின் தொடக்கம், பல்பெப்தைட் பட்டிகையின் நீட்சி, தொகுப்பின் முடிவு ஆகிய மூன்று படிநிலைகளுக்கூடாக நிகழ்கிறது.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

 

சடப்பொருளின் பிரதான மூன்று நிலைகளான திண்மம், திரவம், வாயு என்பனவாகும். இம்மூன்று நிலைகளிலும் துணிக்கைகளின் ஒழுங்கமைப்பு, இயக்கம் என்பன வேறுபட்டு காணப்படும்.

பௌதீக  இயல்புகளுக்கிடையிலான  வேறுபாடுகள்

 இயல்பு திண்மம் திரவம் வாயு
  வடிவம் திட்டவட்டமானது அடங்கும் கொள்கலத்தின் வடிவத்தை கொண்டது. எனினும் கொள்கலத்தின் மொத்த  கனவளவிலும் பரந்திருக்காது. அடங்கு கொள்கலத்தின் மொத்த வடிவத்தை எடுக்கும்
கனவளவு திட்டவட்டமானது திட்டவட்டமானது அடங்கும் கொள்கலத்தின் முழு கனவளவையும் அடக்கும்
அடர்த்தி உயர்வு உயர்வு (திண்மத்துடன் ஒப்பிடுகையில் குறைவு) தாழ்வு
அமுக்கப்படும் தகவு அமுக்க முடியாது அமுக்க முடியாது பெருமளவில் அமுக்க முடியும்
  • வாயுக்களின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்ற காரணிகள் :
    • அமுக்கம் (P)
    • வெப்பநிலை (T)
    • கனவளவு (V)
    • பதார்த்தத்தின் அளவு (M)
    • திணிவு (m)
    • பதார்த்தத்தின் அளவு (n)
 

Domain Eukarya இயல்புகள்

  • இயுக்கரியோற்றா கலவகையுடையது.
  • கலச்சுவர்கூறாக பெப்ரிடோகிளைக்கன் இல்லை.
  • கலச்சுவரில் பல்சக்கரைட் உண்டு.
  • கலமென்சவ்வுலுள்ள இலிப்பிட்டு கிளையற்றது.
  • நுண்ணுயிர் கொல்லிகளுக்கு உணர்வற்றது.
  • பலவகைக்குரிய RNA Polymerase நொதியம் உண்டு.
  • புரதத்தொகுப்பு மெதியோனைனுடன் ஆரம்பிப்பது.
  • பல்வேறுபட்ட சூழல் நிபந்தனைகளில் வாழும்.

 

Domain Eukarya

  • Kingdom Protista
  • Sub Kingdom Protozoa
    • Phylum Rhizopoda    Amoeba, Entamoeba
    • Phylum Ciliophora    Paramecium
  • Sub Kingdom Algae
    • Phylum Chrysophyta    Diatoms
    • Phylum Phaeophyta     Sargassum
    • Phylum Rhodophyta    Gelidium
    • Phylum Chlorophyta    Chlamydomonas
  • Kingdom Fungi
    • Phylum Chytridiomycota  Allomyces
    • Phylum Zygomycota          mucor
    • Phylum Ascomycota          Aspergillus
    • Phylum Basidiomycota     Agaricus
  • Kingdom Plantae
    • Phylum Bryophyta         Poganatum, Marchantia
    • Phylum Pterophyta        Nephrolepis
    • Phylum Lycophyta         Selaginella, Lycopodium
    • Phylum Cycadophyta    Cycas
    • Phylum Coniferophyta Pinus
    • Phylum Anthophyta     பூக்கும் தாவரங்கள்
  • Kingdom Animalia
    • Phylum Coelenterata          Hydra, Jellyfish, Coral
    • Phylum Platyhelminthes   Planaria, Taenia solium
    • Phylum Nematoda             Necator, Wuchchereria, Ascaris
    • Phylum Annelida               Nereis, Earth worm, leech
    • Phylum Mollusca              நத்தை, சிப்பி, மட்டி, கணவாய்
    • Phylum Arthropoda         எறும்பு, சிலந்தி, கரப்பான், இறால்
    • Phylum Echinodermata  நட்சத்திர மீன், கடலட்டை, கடல் முள்ளி
    • Phylum Chordata            மீன், தவளை, முதலை, பாம்பு, கழுகு, மனிதன்

 

 

வெப்பச் சமனிலை

  • சூடான உடலொன்றும், குளிரான உடலொன்றும் வெப்பத் தொடுகையில் இருக்கும் போது, சூடான உடலில் இருந்து குளிரான உடலை நோக்கி வெப்பப் பாய்ச்சல் நிகழும் ஒரு நிலையில் தேறிய வெப்பப் பாய்ச்சல் பூச்சியம் இது வெப்பச் சமனிலை எனப்படும்.

வெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி

  • உடல் A ஆனது, உடல் B உடனும், உடல் C உடனும் தனித்தனியே வெப்பச் சமநிலையில் இருந்தால் B, C தமக்கிடையே வெப்பச் சமனிலையில் இருக்கும்.

வெப்பமான இயல்பு

  • வெப்பநிலையுடன் மாறும் பௌதிக இயல்பு வெப்பமான இயல்பு எனப்படும்.
  • உதாரணம் : திரவங்களின் கனவளவு, வாயுவொன்றின் கனவளவு

வெப்பநிலை

  • இது உடலொன்றின் சூட்டின் அளவைத் தரும்.
  • வெப்பநிலை என்பது, இரு பொருட்கள் வெப்பத் தொடுகையில் இருக்கும் போது, வெப்பம் எத் திசையில் பாயும் என்பதைத் தீர்மானிப்பதாகும்.

நிலைத்த புள்ளிகள்

(1) கீழ் நிலைத்த புள்ளி (0°C)

  • தூய பனிக்கட்டி நியம அமுக்கத்தில் உருகும் வெப்ப நிலை கீழ் நிலைத்த புள்ளி

(2) மேல் நிலைத்த புள்ளி (100°C)

  • நியம அமுக்கத்தில் கொதி நீராவியின் வெப்பநிலை மேல்நிலைத்த புள்ளி

(3) மும்மைப் புள்ளி

  • தூய பனிக்கட்டி, நீர், நீராவி ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்கும் வெப்பநிலை மும்மைப்புள்ளி

வெப்பநிலை அளவுத் திட்டங்கள்

(1) செல்சியஸ் அளவுத் திட்டம் (°C)

  • கீழ் நிலைத்த புள்ளி (0°C), மேல்நிலைத்த புள்ளி (100°C) ஆகியன இவ்வளவுத் திட்டத்தின் இரு நிலைத்த புள்ளிகளாகும்.
  • வெப்பநிலையை செல்சியசில் அளப்பதற்கு,
    முதலில் உருகும் பனிக்கட்டியினுள் வெப்பமானியை வைத்து வெப்பமான இயல்பை அளக்க வேண்டும் (X0)
  • அதன் பின், கொதி நீராவியில் வைத்து வெப்பமான இயல்பு அளவிடப்படும் (X100)
  • இறுதியாக அளக்க வேண்டிய வெப்பநிலையில் வைத்து வெப்பமான இயல்பை அளக்க வேண்டும். (Xθ)
    இரண்டு நிலைத்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட வெப்பநிலைக்குரிய சமன்பாடு.

  • இச்சமன்பாட்டில் பிரதியிட்டு பெறப்படும் வெப்பநிலை செல்சியசில் இருக்கும்.

(2) கெல்வின் அளவுத் திட்டம்

  • அறிமுறையில் வாயுவொன்றின் கனவளவு பூச்சியமாகும் வெப்பநிலை – 273.15°C ஆகும்.
  • இவ் வெப்பநிலையினை பூச்சியமாகக் கொண்ட வெப்பநிலை அளவுத்திட்டம் கெல்வின் அளவுத் திட்டம் ஆகும்.
  • கெல்வின் வரைவிலக்கணம் : நீரின் மும்மைப் புள்ளியின் வெப்ப இயக்கவியல் வெப்பநிலையின் heat-2 பங்கு.
  • தூய நீரின் மும்மைப் புள்ளியை அடிப்படையாகக் கொண்ட தனி வெப்பநிலை ஆன சமன்பாடு.


X- அளக்க வேண்டிய வெப்பநிலையில் வெப்பமான இயல்பு
Xtr – நீரின் மும்மைப் புள்ளி வெப்பநிலையில் வெப்ப மான இயல்பு

இச்சமன்பாட்டில் பிரதியீட்டு பெறப்படும் வெப்பநிலை கெல்வினில் இருக்கும்.

தனிவெப்ப நிலைக்கும், செல்சியஸ் அளவுத் திட்டத்திற்கும் இடையிலான தொடர்பு
T = θ +273.15

வெப்பமானிகள்

வெப்பமானி வெப்பமான இயல்பு அனுகூலம் பிரதிகூலம்
கண்ணாடி இரச வெப்பமானி இரசத்தின் கனவளவு விரிவு
  • வெப்பநிலையுடன் சீரான விரிவைக் காட்டும்
  • ஒப்பீட்டளவில் திருத்தமானவை
  • ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைவு
 மாறா கனவளவு வெப்பமானி வாயுவின் அமுக்கம்
  • உணர்திறன் மிக்கவை
  • இவை பருமனில் பெரியவை யாகவும், பாரமானவையாகவும் இருக்கின்றமை
மாறா அமுக்க வெப்பமானி வாயுவின் கனவளவு
  • பரந்த வெப்பநிலை வீச்சுக்கு வாயுக்கள் ஒழுங்காகவும் சீராகவும் விரிகின்றது
  • இவை பருமனில் பெரியவை யாகவும், பாரமானவையாகவும் இருக்கின்றமை
வெப்ப இணை வெப்பமானி வெப்ப மின்னியக்க விசை
  • பெரிய வீச்சமுடையது
  • பரப்பு, புள்ளி போன்றவற்றின் வெப்பநிலைகளை அளவிட சிறந்தது
  • ஒருமுனையை தொடர்ந்து 0°C இல் பேணுவது கடினம்
Pt தடை வெப்பமானி Pt தடையின் விரிவு
  • பரந்த வீச்சமுடையது
  • ஒப்பீட்டளவில் திருத்தம் கூடியது
  • உய்த்தன்பால ஒழுங்கை சமனிலைப்படுத்த வெகுநேரம் எடுக்கும்
  • Pt கம்பி மிகக் குறைந்த நேரத்தில் ஒரு தொட்டியின் வெப்பநிலையை எடுத்துக் கொள்ளமாட்டாது.
வெப்பத் தடையி மின்தடை
  • ஒப்பீட்டளவில் உணர்திறன் கூடியது
  •  திருத்தம் குறைந்தது
 

நியூக்கிளிக்கமிலம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உயிரியல் மாமூலக்கூறு ஆகும்.
  • இதன் ஒரு பாத்து நியூக்கிளியோடைட்டு
  • C,H,O,P மூலகங்களால் ஆனது.
  • தகவல் மூலக்கூறு என அழைக்கப்படும். காரணம் பிறப்புரிமைப் பதார்த்தத்தை ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்கிறது
  • இவை அமிலத் தன்மையானதுடன் அதிகளவு கருவில் காணப்படுவதால் நியூக்கிளிக்கமிலம் எனப்படும்.

நியூக்கிளியோடைட்டுPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நியூக்கிளிக்கமிலத்தின் ஒரு பாத்து ஆகும். இது சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது.
  • 3 ஆக்கக் கூறுகளை கொண்டது.
  1.  5C பெந்தோசு வெல்லம்
  2. நைதரசன் மூலம்
  3. பொஸ்போரிக்கமிலம் / பொஸ்பேற்று கூட்டம்
  • 5C பெந்தோசு வெல்லமாக இரு வகை காணப்படுகின்றது.
  1. Ribose வெல்லம் C5H10O5
  2. Deoxyribose வெல்லம்C5H10O4
  • நைதரசன் மூலகங்கள் இரு வகைப்படும்.
  • நியூக்கிளியோடைட்டில் Deoxyribose வெல்லம் காணப்படின் Deoxyribonucleotide என அழைக்கப்படும்.
  • நியூக்கிளியோடைட்டில் Ribose வெல்லம் காணப்படின்.Ribonucleotide என அழைக்கப்படும்.
  • நியூக்கிளியோடைட்டின் வகை இவ்வெல்லவகையின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது.
  • பிரிமிடின்
  • பியூரின்
  • பியூரின்கள் தமது கட்டமைப்பில் இரு வளையங்களைக் கொண்டு உள்ளன. எனவே, பருமனில் பெரியவை. மூலக்கூற்று நிறை உயர்ந்தவை.
    (உ-ம்)   அடினின்/ A (C, H, N)

குவானின் / G (C, H, N, O)

  • தனது கட்டமைப்பில் தனி வளையம் / ஒற்றை வளையம் கொண்டவை பிரிமிடின்கள் எனப்படும். ஒப்பீட்டளவில் பருமனில் சிறியவை. மூலக்கூற்று நிறை குறைந்தவை.
    (உ-ம்) சைற்றோசின் / C (C, H, N, O)
    தைமின் / T (C, H, N, O)
    யுராசில் / U (C, H, N, O)

நியுக்கிளியோடைட்டில் Deoxyribose காணப்படின் அதனுடன் A, T, C, G இணைந்து காணப்படலாம். யுராசில் காணப்படமாட்டாது. நியூக்கிளியோடைட்டில் Ribose வெல்லம் காணப்படின் அதனுடன் A, C, U இணைந்து காணப்படும். தைமின் இணைந்து காணப்படமாட்டாது. பொஸ்போரிக்கமிலம் H3PO4 மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் nucleotide-formationகொண்ட கட்டமைப்புச் சூத்திரம்.

நியூக்கிளியோடைட்டின் உருவாக்கம்

 

நியூக்கிளியோடைட்டின் வகைகள்

  • நியூக்கிளியோடைட்டுகள் அவற்றில் உள்ள Pentose வெல்லத்தின் அடிப்படையில் இரு வகைப்படும்.
  1. Deoxyribonucleotide
  2. Ribonucleotide
  • Deoxyribonucleotide இல் வெல்லமாக Deoxyribose காணப்படும். அதேவேளை Ribonucleotide இல் Ribose வெல்லம் காணப்படும்.
  • Deoxyribonucleotide அதில் காணப்படும் நைதரசன் மூலத்தின் அடிப்படையில் மேலும் நான்கு வகைப்படும். அதேபோல் Ribonucleotide 2ஆம் 4 வகைப்படும்.
  • Deoxyribonucleotide வகைகளின் கோட்டுப்படம்.

இரு நியூக்கிளியோடைட்டின் உருவாக்கம்

  • இரு நியூக்கிளியோடைட்டுகள் ஒடுங்கற் தாக்கத்திற்கு உட்பட்டு ஒரு மூலக்கூறு நீர் இழக்கப்பட்டு உருவாகும் சேர்வை இரு நியூக்கிளியோடைட்டு எனப்படும்.
  • இவ்விரு நியூக்கிளியோடைட்டுகளுக்கிடையிலான பிணைப்பு பொஸ்போ இரு எசுத்தர் பிணைப்பு எனப்படும்.
  • இவ் ஒடுங்கற் தாக்கத்தின் போது ஒரு நியூக்கிளியோடைட்டின் வெல்ல மூலக்கூறின் 3வது காபனில் உள்ள OH உம் அடுத்த நியூக்கிளியோடைட்டின் பொஸ்பேற்று கூட்டமும் பங்கு கொள்ளும்.
  • இரு நியூக்கிளியோடைட்டு தொடர்ந்து நியூக்கிளியோடைட்டுகளுடன் ஒடுங்கற் தாக்கத்திற்கு உட்பட்டு மூநீயூக்கிளியோடைட்டு, இறுதியில் பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலி உருவாக்கப்படும்.
  • நியூக்கிளியோடைட்டுகள் ஒடுங்கற் தாக்கத்திற்கு உட்படும் போது Ribonuldeotide, ribonucleotide  உடனும் Deoxyribonucleotide Deoxyribonucleotide உடனும் ஈடுபடும்.
  • Ribonucleotide களால் உருவாக்கப்படும் பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலி றைபோநியூக்கிளிக்கமிலம் (RNA) எனப்படும்.
  • Deoxyribonucleotde களால் உருவாக்கப்படும் பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலிகள் இரண்டு சேர்ந்து டீஒட்சிறைபோ நியூக்கிளிக்கமிலத்தை (DNA) உருவாக்கும்.
  • பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலிகள் எப்போதும் 5′ – 3′ திசையில் வளர்ச்சியடையும்.

நியூக்கிளிக்கமிலம்Please Login to view the Question

  • இவை இரு வகைப்படும்
  1.  டீஒட்சிறைபோ நியூக்கிளிக்கமிலம் / DNA
  2. றைபோ நியூக்கிளிக்கமிலம் / RNA
 

உணவில் காணப்படும் நுண்ணங்கிகளால் எழக்கூடிய பிரச்சினைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நுண்ணங்கிகளால் உணவு நஞ்சாக்கம் அடைதல்.

  • உணவில் காணப்படும் சில நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டினால் பழுதடைந்த உணவுகளில் அங்கு வளரும் சில நுண்ணங்கிகளால் சுரக்கப்பட்ட Toxinகள் காணப்படுகின்றன. உணவு வழியாக இவ் Toxinகள் உள்ளெடுக்கப்படும் போது, அவை நஞ்சாதலுக்கான நோய்க் குறிகளை ஏற்படுத்துகின்றன.
    உ – ம் : Clostridium botulinum, Staphylococcus aureus

உணவுத் தொற்றுகை ஏற்படல்

  • நோயாக்கிகளான சில நுண்ணங்கிகள் உணவு வழியாக மனித உடலினுள் சென்று மனித உடலில் பெருக்கமடைந்து, அவற்றினால் உருவாக்கப்படும் Toxin களால் நோய்கள் ஏற்படல் உணவுத்தொற்றுகை எனப்படும்.

நுண்ணங்கிகளினால் உணவு பழுதடைதல்

  • உணவில் இயற்கையாகவே காணப்படுகின்ற நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டினால் உணவின் இரசாயனக் கூற்றமைப்புகளும், பௌதிகத் தன்மைகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு மனித நுகர்விற்கு தகுதியற்றதாக மாற்றப்படுதல்.

உணவு பழுதடைதலின் போது, ஏற்படக் கூடிய இரசாயன மாற்றங்கள் Please Login to view the Question

  • உணவிலுள்ள புரதக்கூறுகள் புரதப்பகுப்பிற்கு உள்ளாகி அமினோ அமிலங்களாகவும், அமீன்களாகவும்,NH3, H2S ஆகவும் மாற்றப்படுகின்றன. இது அழுகுதல் எனப்படும்.
  • உணவிலுள்ள காபோவைதரேற்றுகள் சக்கரைட் பகுப்பிற்கு உள்ளாகி அமிலங்களாகவும், Alcoholகளாகவும் மாற்றப்படுகின்றன.
    இது நொதித்தல் எனப்படும்.
  • உணவிலுள்ள கொழுப்புகள் இலிப்போ பகுப்பிற்கு உள்ளாகி கொழுப்பமிலங்களாகவும், கிளிசரோல் ஆகவும் மாற்றப்படுகின்றன.
    இது பாண்டலேற்றப்படுதல் எனப்படும்.

உணவு பழுதடைதலின் போது, ஏற்படும் பௌதிக மாற்றங்கள்

  1. உணவு மென்மையாதல்
  2. உணவில் நிறம் ஏற்படல்
  3. பாகு அல்லது பிசின் போன்ற தோற்றம் ஏற்படல்
  4. உணவில் விரும்பத்தகாத மணங்கள் தோன்றுதல்
  5. Ropiness  ஏற்படல்
  6. உணவில் நச்சுக்கள் தேக்கமடைதல்

உணவு பழுதடைதலைப் பாதிக்கும் அகக் காரணிகள்

  1. உணவின் ஈர உள்ளடக்கம்
  2. உணவின் pH
  3. உணவிலுள்ள போசணைப் பொருட்களின் உள்ளடக்கம்
  4. உணவின் உயிரியல் கட்டமைப்பு

உணவு பழுதடைதலைப் பாதிக்கும் புறக் காரணிகள்

  1. உணவு வைத்திருக்கப்படும் சூழல் வெப்பநிலை
  2. சூழலின் சாரீரப்பதன்
  3. சூழலிலுள்ள வளியில் காணப்படும் O2, CO2 என்பவற்றின் அளவுகள்

உணவு பழுதடையாது பாதுகாப்பதில் உள்ள தத்துவங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நுண்ணங்கிகள் உணவை வந்தடைதலைத் தடுத்தல்.
  • உணவிலுள்ள நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டைத் தடுத்தல்.
  • உணவில் காணப்படும் நுண்ணங்கிகளை அழிவடையச் செய்தல்.

உணவு பாதுகாப்பு முறைகளும், உதாரணங்களும்  Please Login to view the QuestionPlease Login to view the Question

  1. உலர்த்துதல் – மீன், இறைச்சி, தானியங்கள், பால்மா
  2. உப்பிடுதல் – மீன், இறைச்சி
  3. உப்பிட்டு உலர்த்துதல் – மீன், இறைச்சி
  4. வெல்லம் சேர்த்தல் – கட்டிப்பால், பழப்பாகு
  5. தகரத்தில் அடைத்தல் – மீன், இறைச்சி, பழங்கள்
  6. பாச்சராக்கம் செய்தல் – பால்
  7. புகையூட்டல் முறை – மீன், இறைச்சி
  8. அழுகலற்ற பொதியாக்கம் செய்தல் – உலர் உணவுவகைகள், குளிர்பானங்கள்.
  9. இரசாயனப் பதார்த்தங்கள் சேர்த்தல் – பாற்கட்டி, ஊறுகாய் வகைகளில் Sorbic acid களை சேர்த்தல், தானிய உணவுகளில் சோடியம் புறோப்பியோனேற் சேர்த்தல்.
  10. தாழ் வெப்பநிலை நற்காப்பு செய்தல் – மீன், இறைச்சி, பழங்கள், பால்
  11. கதிர் வீச்சு முறை – பழங்கள், தானியங்கள்.
 
  • பாத்திரமொன்றினுள்  தூயதிரவம் காணப்படும்போது திரவ அவத்தையில் அசைந்து திரியும் மூலக்கூறுகள்  திரவமேற்பரப்புக்கு வரும்போது  இயக்கச் சக்தியானது நிலைச்சக்தியான மூலக்கூற்றிடை கவர்ச்சி விசையை  விஞ்சக்கூடியதாக  இருப்பின்  திரவ மேற்பரப்பை விட்டு வெளியேறும்.  இது ‘ ஆவியாதல்’ எனப்படும்.
  • ஆரம்பத்தில் ஆவியாதல் வீதம் உயர்வாகக் இருக்கும். நேரத்துடன் அது குறைந்து செல்லும்.
  • ஆவிமூலக்கூறுகள்  பாத்திரத்தின் சுவருடனும் தமக்குள்ளும் மோதுவதால் சக்தியை இழக்கும். எனவே அவை மீண்டும் திரவ நிலைக்கு மீளும். இது ‘ ஒடுங்கல் ‘ எனப்படும்.
  • ஆரம்பத்தில் ஒழுங்கல் வீதம் தாழ்வாகக் இருக்கும். நேரத்துடன் இது அதிகரித்துச் செல்லும்
  • ஒரு நிலையில் ஆவியாதல் வீதமும் ஒடுங்கல் வீதமும் சமனாகக் காணப்படும். இதுவோர் இயக்கச் சமநிலையாகும். இச்சமநிலை குறித்தவொரு பதார்த்தத்தின் வெவ்வேறு பௌதீக அவத்தையில் இடம்பெறுவதால் அவத்தைச் சமநிலை எனப்படும்.
  • அவத்தைச் சமநிலையில் ஆவிமூலக்கூறுகளால் திரவமேற்பரப்பில் உஞற்றப்படும் அமுக்கம் அவ்வெப்பநிலையில் அத்திரவத்தின் ‘ நிரம்பலாவி அமுக்கம் ‘ எனப்படும்.
    நிரம்பலாவி அமுக்கம் வெளி அமுக்கத்திற்குச் சமனாகும் போது திரவம் கொதிக்கும்.
    வெளி அமுக்கத்தை அதிகரிக்கும்போது திரவத்தின் கொதிநிலை அதிகரிக்கும். வெளி அமுக்கத்தை குழைக்கும்போது திரவகொதிநிலை குறையும்.
 

நியம தோன்றல் வெப்ப உள்ளுறை (ΔHθf)

நியம நிலையின் கீழ் சேர்வையின் ஒரு மூல் நியம நிலையிலுள்ள அதன் ஆக்கக்கூற்று மூலகங்களிலிருந்து உருவாகும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றம்.
H2 (g) + ½O2 (g) → H2O (l)  

நியம தகன வெப்ப உள்ளுறை (ΔHθc)

நியம நிலையின் கீழ் மூலகமொன்றின் அல்லது சேர்வையொன்றின் ஒரு மூல் மிகை ஒட்சிசனில் பூரணமாக தகனமடையும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றம்.
CH4 (g) + 2O2(g) → CO2(g) + 2H2O (l)

நியம பிணைப்புப் பிரிகை வெப்ப உள்ளுறை (ΔHθD)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள பேதமொன்றின் ஒரு மூல் பிணைப்பை உடைத்து வாயு நிலையிலுள்ள கூறுகளாக மாற்றும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றம். (குறித்த ஒரு சேர்வையின் அல்லது மூலகத்தின் குறிப்பிட்ட ஒரு பிணைப்பு தொடர்பாக கூறப்படும்)
H2 (g) → 2H (g)

நியம நடுநிலையாக்க வெப்ப உள்ளுறை (ΔHθneut)

நியம நிலையின் கீழ் நீர் கரைசலிலுள்ள அயன் மூல் ஒன்று நீர்க் கரைசலிலுள்ள அயன் மூல் ஒன்றுடன் தாக்கமடைந்து மூல் ஒன்றை உருவாக்கும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
H+(aq) + OH(aq) → H2O(l)

நியம நீரேற்ற வெப்பவுள்ளுறை (ΔHθhyd)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள ஒரு மூல் அயன் ஒன்று மிகையான நீருடன் தாக்கி கரைசல் நிலைக்கு மாறும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Na+(g) + aq → Na+ (aq)

நியம கரைசலாக்க வெப்ப உள்ளுறை (ΔHθdissolution)

நியம நிலையின் கீழ் யாதாயினும் ஒரு மூல் பதார்த்தத்தை மிகை கரைப்பானில் கரைத்து கரைசலாக மாற்றும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
NaCl(s) + aq → NaCl(aq)

நியம பதங்கமாதல் வெப்ப உள்ளுறை

நியம நிலையின் கீழ் திண்ம மூலகமொன்றின் ஒரு மூல் அல்லது திண்ம சேர்வையொன்றின் ஒரு மூல் பூரண வாயு நிலைக்கு மாறும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Ca (s) →  Ca (g)

நியம ஆவியாதலின் வெப்ப உள்ளுறை (ΔHθverp)

நியம நிலையின் கீழ் நிலவும் திரவ நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வையொன்று, வாயு நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வையாக மாறும்போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
Br2 (l) → Br2 (g)

நியம உருகலின் வெப்ப உள்ளுறை

நியம நிலையின் கீழ் நிலவும் திண்ம நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வை திரவ நிலையிலுள்ள ஒரு மூல் மூலகம் அல்லது சேர்வையாக மாறும்போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
Al (s) → Al(l)

நியம அணுவாதல் வெப்ப உள்ளுறை

நியம நிலையின் கீழ் ஒரு மூல் மூலகம் வாயு நிலையிலுள்ள ஒரு மூல் அணுவாக மாறும்போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றம்.
½Cl2 (g) → Cl (g)

நியம முதலாம் அயனாக்க வெப்ப உள்ளுறை (ΔHθE1)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள மூலகமொன்றின் ஒரு அணு மூல் ஒன்றின் கருவுடன் தளர்வாக பிணைந்துள்ள ஒவ்வொரு இலத்திரன் வீதம் அகற்றி வாயு நிலையிலுள்ள ஒரு மூல் நேர் ஏற்ற அயன் ஒன்றைப் பெறும் போது நடைபெறும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Na (g) → Na+ (g) + e

நியம இலத்திரன் நாட்ட வெப்ப உள்ளுறை (ΔHθEA)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள ஒரு மூல் அணுவிற்கு இலத்திரன்களை வழங்கி வாயு நிலையிலுள்ள ஒரு மூல் எதிர் அயன் ஒன்றை உருவாக்கும் போது நடைபெறும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Cl (g) + e → Cl (g)

அயன் சேர்வையொன்றின் நியம சாலக வெப்ப உள்ளுறை (ΔHθL)

நியம நிலையின் கீழ் வாயு நிலையிலுள்ள நேர் அயனும் எதிர் அயனும் திண்ம நிலையிலுள்ள அயன் சேர்வையொன்றின் மூல் ஒன்றை உருவாக்கும் போது ஏற்படும் வெப்ப உள்ளுறை மாற்றமாகும்.
Na+ (g) + Cl (g) → NaCl (s)

எசுவின் விதி

இரசாயன தாக்கமொன்றின் போது நடைபெறும் சக்தி மாற்றம் அல்லது வெப்பவுள்ளுறை மாற்றம் தாக்கம் எவ்வழியினூடாக நடைபெற்ற போதிலும் மாறாப் பெறுமானத்தைக் கொண்டிருக்கும்.

screenshot-27

வெப்ப இரசாயன வட்டம்screenshot-29

வெப்பவுள்ளுறை வரைபடம்enthalphy

 

சுவாசத்தில் சக்தி மாற்றுவினைத்திறன் / சக்தி மாற்று வீதம் கணித்தல்

காற்றிற் சுவாசத்திற்கு

  • C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + 38/36 ATP     ΔH = -2880kJmol-1
    ADP + P2 + 30.6kJmol-1 → ATP
    38 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி = 38 × 30.6 kJmol-1
    = 1162 kJmol-1
    சக்தி மாற்றுவினைத்திறன்  = 1160/2880 × 100 = 40.2 %

 

இலக்டேற்று நொதித்தல் காற்றின்றிய சுவாசம்

  • C6H12O6 → 2 இலக்கேற்று + 36 ATP      ΔG = -150 kJmol-1
    2 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி    = 2 × 30.6 kJmol-1
    38 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி = 38 × 30.6 kJmol-1
    = 61.2 kJmol-1
    ஃ சக்திமாற்று வினைத்திறன்  = 61.2 / 150 × 100
    = 40.8 %

அற்ககோல் நொதித்தல் காற்றின்றிய சுவாசம்

  • C6H12O6 → 2 எதனோல் +  2CO2 +  2 ATP     ΔG = – 210 kJmol-1
    2 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி = 2 × 30.6 kJmol-1
    = 61.2 kJmol-1
    சக்தி மாற்று வீதம்  = 61.2 / 210 × 100
    = 29.1 %
  • ATP உற்பத்தியைப் பெருத்தளவில் காற்றிற் சுவாசம் வினைத்திறனானது. ஆனால் சக்தி மாற்றுவீத வினைத்திறனில் இலற்றிக்கமில காற்றின்றிய சுவாசமே வினைத்திறனானது.

சுவாச வீதம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சுவாச வீதம் இருமுறைகளில் அளவிடப்படுகின்றது.
    1. உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவு
    2. வெளிவிடப்படும் CO2 இன் கனவளவு
  • சுவாச வீதத்திற்கான சமன்பாடுsuvasaveetam
  • ஓரலகு நேரத்தில் ஓரலகுத் திணிவு இழையத்தினால் உள்ளெடுக்கப்பட்ட O2 இன் கனவளவு / வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவு
  • அலகு → cm3g-1h-1

ஆய்வு கூடத்தில் சுவாசமானியைப் பயன்படுத்தி சுவாச வீதம் துணிதல்

உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவு அடிப்படையில்

  • முளைக்கும் பயறு வித்துக்கள் எடுக்கப்பட்டு Xg சுவாசமானியினுள் இடப்பட்டது. (சாதாரண பயறு வித்துகள் 2/3 hours நீரினுள் ஊறவிட்டு பின்பு ஈரப்பஞ்சின் மேல் 24 hours வைக்பப்பட்டு பெறப்படும் வித்து முளைக்கும் வித்து ஆகும். இவற்றில் சுவாச வீதம் உயர்வாகக் காணப்படும்.
  • இதனுள் KOH கரைசல் கொண்ட குழாய் இதனுள் வைக்கப்படும்.
  • U குழாயினுள் நிறமூட்டப்பட்ட நீர் / இரசம் எடுக்கப்படும்.
  • கூம்புக் குடுவை தக்கையினால் வளி இறுக்கமாக மூடப்பட்டு திருகியின் மூலம் திரவ மட்டம் சமனாக்கப்படும்.
  • திரவ மட்டத்தின் ஆரம்ப நிலை குறிக்கப்படும்.
  • சுவாசம் நிகழ்வதற்கு 24 hours விடப்படும்.
  • கூம்புக் குடுவையுடன் தொடர்புபட்ட திரவமட்ட உயர்வு அளவிடப்படும் (h1 cm)
    சுவாசத்திற்குப் பயன்படுத்திய இழையத்தின் திணிவு Xg
    சுவாசத்திற்கு விடப்பட்ட நேரம் 24 hours
    சுவாசத்தின் போது உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசன் கனவளவு (h1 × A)cm3
  • சுவாச வீதம்   =  உள்ளெடுக்கப்பட்ட O2 இன் கனவளவு / திணிவு × பயன்படுத்திய நேரம்
    =  h1 × A cm3 / Xg × 24 h

உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவு அடிப்படையில்

  • சுவாசத்திற்குப் பயன்படுத்திய இழையத்தின் திணிவு Xg
    சுவாசத்தின் போது வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவு (h1 – (h2) × A)cm3
  • சுவாச வீதம் = வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவு / பயன்படுத்திய இழையத்தின் திணிவு                                                                                                                                   × சுவாசத்திற்கு எடுத்த நேரம்

= (h1 – (h2) × A)cm3 / Xg × 24 h

சுவாச ஈய்வு

  • suvasa-eeyvu
    குறித்த திணிவுடைய இழையம் குறித்த நேரத்தில் சுவாசத்தில் வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவிற்கும், உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவிற்கும் இடையிலான விகிதம்
  • சுவாசக் கீழ்ப்படையின் சேதனச் சேர்வை வகையைப் பொறுத்து சுவாச ஈய்வுப் பெறுமானம் வேறுபடும்.
    1. சுவாசக் கீழ்ப்படை காபோவைதரேற்று ஆயின் சுவாச ஈய்வு = 1
    எனவே வெளிவிடப்படும் CO2 இன் கனவளவு உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவிற்கு சமனாகும்.
    2. சுவாசக் கீழ்ப்படை புரதமாயின் சுவாச ஈய்வு = 0.9
    அதாவது ஒன்றிலும் குறைவு. எனவே வெளிவிடப்படும் CO2 இன் கனவளவிலும் பார்க்க உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவிற்கு அதிகமாகும்.
    3. சுவாசக் கீழ்ப்படை இலிப்பிட்டு ஆயின் சுவாச ஈய்வு = 0.7
    எனவே ஒன்றிலும் குறைவு.

 

last-equation-suvasam

 

தாவரங்களின் இலிங்கமுறை இனப்பெருக்கம் பல தரைவாய் தாவரங்கள் இலிங்க முறையாலும் இலிங்கமில் முறையாலும் இனப்பெருகுகின்றன. இலிங்கமில் முறையிலும் பார்க்க இலிங்க முறை இனப்பெருக்கத்தில் பாரம்பரிய மாறல்கள் ஏற்படுகின்றன. இதனால் மாறும் சூழலுக்கேற்ற புதிய இசைவாக்கம் கொண்ட மகட் சந்ததிகள் தோற்றுவிக்கப்படும்.

  • இது கூர்ப்புக்கு வழிவகுக்கின்றது. தாவரத்தின் வாழ்க்கை வட்டத்தில் கருக்கட்டலின் பின்னர் ஒடுக்கற்பிரிவு நடைபெறுவதில் ஏற்படும் தாமதம் இருமடிய சந்ததியொன்று ஏற்படுவதற்கு ஏதுவாக அமைகின்றது.
  • ஒருமடிய புணரித் தாவர சந்ததியொன்று தோற்றுவிக்கப்படுவதற்காக இருமடிய சந்ததி ஒடுக்கற்பிரிவின் மூலம் வித்திகளைத் தோற்றுவிக்கின்றது. Kingdom plantae ஐச் சேர்ந்த தாவரங்கள் யாவும் வாழ்க்கை வட்டத்தில் சந்ததி பரிவிருத்தியை காட்டுகின்றன. அங்கி { தாவரத்தில் வாழ்க்கை வட்டத்தில் புணரிகளை தோற்றுவிக்கின்ற ஒரு மடியமான புணரித்தாவர சந்ததியும் வித்திகளை தோற்றுவிக்கின்ற வித்தித் தாவர சந்ததியும் மாறி மாறித் தோன்றுதல் ‘சந்ததி பரிவிருத்தி” எனப்படும்.
  • சில அங்கிகளின் வாழ்க்கை வட்டத்தில் சம / ஓரின வடிவ சந்ததி பரிவிருத்தி காணலாம். இங்கு புணரித்தாவரமும் வித்தித் தாவரமும் உருவவியலில் ஒத்துக் காணலாம்.
  • (உ – ம்) சில வகை அல்காக்கள். Kingdom plantae  ஐச் சேர்ந்த தாவரங்கள் யாவும் இதர or பல்லின வடிவ சந்ததி பரிவிருத்தியை காட்டும். இங்கு புணரித் தாவரமும் வித்தித் தாவரமும் உருவவியலில் வேறுபட்டுக் காணலாம். தரைவாழ் தாவரங்களின் கூர்ப்பில் புணரித்தாவர சந்ததி வாழ்க்கை வட்டத்தில் ஒடுக்கப்பட்டு வித்துத் தாவரங்களின் வித்துதித்தாவரத்தில் அவை தங்கிவாழும் நிலை ஏற்படுகின்றன.
  • தரைத் தாவரங்களின் கூர்ப்பினால் இரு மடிய சந்ததியான வித்தித் தாவரம் தரையில் வெற்றிகரமாக வாழ்வதற்கான இசைவாக்கங்களை பெற்றுக் கொள்கின்றன.
  • அனைத்து தரைவாழ் தாவரங்களும் மலட்டுக் கலப்படைகளால் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்க அங்கங்களை கொண் டது. கருக்கட்டலின் பின்னர் தோன்றும் நுகமானது புணரித்தாவரத்தினுள் வைக்கப்பட்டு முளையமாக விருத்தியடையும்.
  • இம் முறையம் புணரித் தாவரத்திலிருந்து போசணையைப் பெறும். முளையம் தொடர்ந்து விருத்தியடைவதன் மூலம் வித்தித் தாவரம் தோன்றும். Kingdom plantae அங்கத்தவர்களின் பொதுமான வாழ்க்கை வட்டம்