திண்மங்களின் விரிவு
- கோல் அல்லது கம்பி வடிவிலான திண்மங்களை வெப்பமேற்றுகையில் எல்லா திசைகளிலும் விரிவு ஏற்பட்டாலும் கருதத்தக்க அளவுக்குள்ள விரிவு நீள விரிவாகும். ஆகவே, நீள விரிவே கருதப்படும்.
- l0 நீளமான கோல் Δθ வெப்பநிலை அதிகரிப்புக்கு உட்படுகையில் அதன் புதிய நீளம் – ட,அதன் நீட்சி – e என்க.
ஏகபரிமாண விரிகைத் திறன் (α)
- திண்மத்தின் வெப்பநிலையை ஓரலகால் உயர்த்தும்போது, அத்திண்மத்தின் நீளத்திலேற்பட்ட பின்ன அதிகரிப்பு ஏகபரிமாண விரிகைத் திறன் ஆகும்.
![]()
α அலகு : °C-1 or K-1
l= l0 + (1+αΔθ)
பரப்பு விரிவுக் குணகம் (β)
- A0 பரப்புள்ள திண்மமொன்று Δ θ வெப்பநிலை அதிகரிப்புக்குட்படுகையில் அதன் புதிய பரப்பு – ΔA, பரப்பில் ஏற்பட்ட அதிகரிப்பு – A என்க.
![]()
A= A0+ (1+βΔ θ)
β= 2α
கன விரிகைத் திறன்
- V0 கனவளவுள்ள திண்மமொன்று Δθ வெப்பநிலை அதிகரிப்புக்குட்படுகையில் அதன் புதிய கனவளவு – V, கனவளவில் ஏற்பட்ட அதிகரிப்பு – ΔV என்க.
![]()
திரவங்களின் விரிவு
- திரவத்துக்கென்றோர் திட்டவட்ட வடிவமில்லை. அது பாத்திர வடிவையே எடுக்கும்.
- திரவத்திற்கு கன விரிவையே கருத வேண்டும்.
- திரவமானது ஒரு பாத்திரத்தில் வைத்தே வெப்பமேற்றப்பட வேண்டும். ஆகவே, பாத்திர விரிவையும் கருத வேண்டும்.
- திரவத்தின் மெய்விரிவு – தோற்ற விரிவு + பாத்திரத்தின் கன விரிவு
- திரவமொன்றின் மெய் விரிகைத் திறன் (γ)
![]()
V – புதிய கனவளவு
V0 – ஆரம்ப கனவளவு
Δθ – வெப்பநிலை அதிகரிப்பு
γ – திரவ மெய் விரிகைத் திறன்
- திரவத்தின் தோற்ற விரிகைத் திறன் (γa)
பாத்திரத்தின் ஏகபரிமாண விரிகைத் திறன் α எனின்
γ = γα + 3 α
திரவ அடர்த்திக்கும், வெப்பநிலைக்குமிடையிலான தொடர்பு
![]()
P – புதிய கனவளவு
P0 – ஆரம்ப கனவளவு
γ – திரவ மெய் விரிகைத் திறன்
Δθ – வெப்பநிலை அதிகரிப்பு
- திரவமொன்றின் வெப்பநிலை அதிகரிக்கையில், அதன் அடர்த்தி குறையும். ஆனால், நீர் மட்டும் இதற்கு விதி விலக்கு
- நீரானது 0ºC இலிருந்து வெப்பமேற்றப்பட 4ºC வரை அதன் கனவளவு குறையும். அதாவது, அடர்த்தி விதிவிலக்கு
- அதன் பின் 4ºC ற்கு மேல் வெப்பநிலை அதிகரிக்க அதன் கனவளவு கூடும். அதாவது, அடர்த்தி குறையும்
![]()
உயிர்ப்பல்வகைமை 

அங்கிகளை தமது பகுதிகளாக உள்ளடக்கிய நீர், தரை, கடல் சார்ந்த சூழற்தொகுதிகளிலும் அவற்றிற்கிடையிலான சூழற்தொகுதிகளிலும் சூழற்தொகுதி சிக்கல்களிலும் உயிர் வாழும் அங்கிகளுக்கிடையிலான வேறுபாடுகளின் ஒட்டு மொத்தம் ” உயிர்ப் பல்வகைமை ” எனப்படும்.
உயிர்ப் பல்வகைமையில் 3 பிரிவுகளுண்டு.
- பிறப்புரிமை பல்வகைமை
- இனப் பல்வகைமை
- சூழற்தொகுதி பல்வகைமை
- பிறப்புரிமையியற் பல்வகைமை
- அங்கிகளின் ஒரு தனி இனத்துக்குள்ளான பாரம்பரிய வேறுபாடு, பிறப்புரிமையியற் பல்வகைமை எனப்படும்.
- இப்பல்வகைமை சூழலில் ஏற்படும் மாற்றங்ளுக்கேற்ற இசைவாக்கங்களை அங்கிகள் பெற்றுக் கொள்ள உதவும்.
- இனப்பல்வகைமை
- ஒரு சூழலியற் சாகியத்தினுள் காணப்படுகின்ற இனங்களின் எண்ணிக்கையையும் அவ்வினங்களின் ஒப்பீட்டு ரீதியிலான நிலவுகையையும் உள்ளடக்கும் பல்வகைமையின் அளவீடு, இனப்பல்வகைமை எனப்படும்.
- பிறப்புரிமையிய் பல்வகைமைக்கு மூலாதாரமாக இனப்பல்வகைமை அமையும்.
♦ இனம் : ஒரு இனத்தைச் சார்ந்த அங்கிகள் பல பொது இயல்புகளை கொண்டிருக்கும். ஒன்று / ஒன்றிற்கு மேற்பட்ட இயல்புகளில் மற்றைய அங்கியிலிருந்து வேறுபடும். தம்முள் இயற்கையாக இனங்கலப்பதன் மூலம் வளமான எச்சங்களை தோற்றவிக்கும்.
தற்போது அனைத்து பிரதான பாகுபாட்டு பிரிவுகளையும் சார்ந்த உயிர் வாழுகின்ற தாவர, விலங்கு இனங்களின் எண்ணிக்கை 30 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
- சூழற்தொகுதி பல்வகைமை
- உயிர் உலகு, வேறுபட்ட வாழிடங்கள், உயிர் வாழும் சாகியங்கள், சுற்றாடல் செயன்முறைகள் என்பவற்றை உள்ளடக்கியது சூழற்தொகுதி பல்வகைமை எனப்படும்.
- பிறப்புரிமைப் பல்வகைமை ஏனைய பல்வகைமைகளிலும் பார்க்க கூடிய எண்ணிக்கையில் காணப்படும்.
காப்பிற்கான அவசியம் 








- இயன்றவரை இனங்களினது நீண்டகால நிலவுகையை உறுதிப்படுத்துவது காப்பு நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். அழிவடைவதற்கான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இனங்களுக்குத் தொடர்ச்சியான நிலைபெறுகையையும் இனப்பெருக்கத்தையும் உறுதிப்படுத்தத்தக்கவகையில் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல்வேண்டும்.
- காப்பு இரு அடிப்படைமுறைகளில் மேற்கொள்ளப்படலாம்.
உள்நிலைக்காப்பு -In-Situ Conservation
- இனம் அதனுடைய இயற்கையான வாழிடத்திலேயே காக்கப்படுவதுடன் அதன் இனப்பெருக்கத்திற்கான வசதிகளுமளிக்கப்படும். அடிப்படையில் போதிய குடித்தொகையும் அவற்றிற்குரிய போதுமான பொருத்தமான வாழிடப்பரப்பளவும் உறுதிப்படுத்தப்படும்
- உதாரணம் : பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள், சரணாலயங்கள், பாரம்பரிய வீட்டுத்தோட்டங்கள், தேசியப் பூங்காக்கள்
இயற்கையான வாழிடங்களில் இனங்களை மீளப்புகுத்தல்
வெளிநிலைக்காப்பு – Ex-Situ Conservation
- காப்புச் செய்ய வேண்டிய அங்கிகளின் நிலைபெறுகையையும், இனப்பெருக்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அவற்றினுடைய இயற்கையான வாழிடங்களுக்கு வெளியே சமமான நிலைமைகளை சிறப்பாக உருவாக்கிய நிலையில் காப்புச் செய்தல்.
- உதாரணம் : தாவரவியற் பூங்கா, விலங்கியற் பூங்கா, பரம்பரை அலகு களவங்கிகள், பற்றப்பட்ட நிலையில் விருத்தி செய்தல்
(Captive breeding, பிறப்புரிமை மூலவள நிலையங்கள்)
உயிர்ப்பல்வகைமைக்காப்பின் பொருட்டான சமவாயங்கள், சட்டங்கள் என்பவற்றின் பிரதான பண்புகள் 



CITES ( Convention on International Trade in Endangered species of wild fauna and flora)
- 1975முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சமவாயத்தின் நோக்கம் இயற்கையான தாவரங்கள் விலங்குகளினது சர்வதேச வர்த்தகம், அவற்றின் நிலவுகைக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். இதன்படி சில இனங்களினது ஏற்றுமதி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டதாகவும், ஏற்றுமதி அனுமதிச்சான்றிதழைச் சமர்ப்பிப்பதாகவும் இருத்தல் வேண்டும். இச்சான்றிதழ் பெறப்படல் அவ்வினத்தின் நிலைபெறுகையின்பால் அதன் ஏற்றுமதித் தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில் மட்டுமே சாத்தியமானதாகும்.
- இலங்கையிலிருந்தான சில உதாரணங்கள்.
Loris tardigradis (Slender Loris) – தேவாங்கு
Otter – நீர் நாய்
Leopard – சிறுத்தைப் புலி
உயிர்ப்பல்வகைமை சமவாயம். (1992)
- இதன் குறிக்கோள்களாவன :
-உயிர்ப் பல்வகைமையை காப்புச் செய்தல்.
– அதன் கூறுகளின் நீடித்து நிலைபெறும் பயன்பாடு.
– பாரம்பரியவளங்களிலிருந்து கிடைக்கும் பயன்களை நியாயமான சமமான முறையில் பகிர்ந்து கொள்ளல்.
RAMSAR சமவாயம் (1971)
- சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களைக் காப்புச் செய்வதுடன் தொடர்பான இச்சமவாயம் குறிப்பாக, ஈரமான வாழிடங்களைக் காப்பதுடன் சம்பந்தப்பட்டது. இலங்கையில் ஐந்து RAMSAR இடங்கள் காணப்படுகின்றன. புந்தல தேசிய பூங்கா, மாதுகங்கை சரணாலயம், ஆனைவிழுந்தான் குளச்சரணாலயம், வங்காலை சரணாலயம், குமண ஈரநிலம்.
விலங்குகள் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம்
- இச்சட்டவாக்கம் இலங்கையில் விலங்குகள், தாவரங்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக 1937இல் உருவாக்கப்பட்டது. 1993இல் தாவர விலங்கு பாதுகாப்புச் சட்டமாகத் திருத்தப்பட்டது, சரணாலயங்களையும், தேசிய ஒதுக்குகளையும் அவை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கு இடமளிப்பதையும் கொண்ட சட்டமாகும்.
பேசல் சமவாயம் (Basel Convention)
- இச்சமவாயம் நாடுகளின் எல்லைகளுக்கு குறுக்கான ஆபத்தான கழிவுகளினது கட்டுப்படுத்தலுடன் தொடர்பானது.
- இதன் நோக்கம் மனித சுகாதாரத்தையும் சூழலையும் ஆபத்தான கழிவின் உருவாக்கத்தில் இருந்து பாதுகாப்பதும், நச்சுத் தன்மை மிக்க வெடிக்கும் இயல்புடைய அரிப்பை ஏற்படுத்தக் கூடிய தொற்றுதல் அடையக் கூடிய ஆபத்தான கழிவுகளின் உற்பத்தியை முகாமை செய்தல்.
மாபோல் சமவாயம் (Marpol Convention)
- கப்பல்களினால் ஏற்படும் மாசாக்கலைத் தடுப்பதற்கான சமவாயம்.
மொன்றியல் வரைவேடு (Montreal Protocol) (1987)
- ஓசோன் படையைத் வறிதாக்கம் செய்யும் பதார்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சமவாயம்.
கெயோட்டோ வரைவேடு (Kyoto Protocol)
- காலநிலை மாறுபாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சட்டக வரைபுடன் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தம்.
- 37 கைத்தொழில்மயமாகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பச்சைவீட்டு வாயுக்களினது (GHS) விடுவிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்வதுடன் தொடர்பானது. இந்த அளவு 1990களில் வெளிவிடப்பட்ட அளவின் 5% மாகக் குறைவடையச் செய்வதுடன் தொடர்பானது. இது 2008 முதல் 2012 இற்கு இடைப்பட்ட 5 வருடகாலப் பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை.
தேசிய சுற்றாடல் சட்ட வரைபு
- இந்த சட்ட வரைபு ஏற்பாடுகளின் கீழ், 1980இல் மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) ஸ்தாபிக்கப்பட்டது.
- இது சுற்றாடல் அனுமதிகளை வழங்குவதன் மூலமும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் சுற்றாடல் பாதிப்பு தொடர்பான கணிப்பீட்டுத்திட்டங்களை மதிப்பீடுசெய்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலமும் மாசடைதலைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்டது.
இயற்கை வளங்கள் 




- சுற்றாடல் வளங்களினது நீடித்து நிலைபெறும் பயன்பாட்டின் தேவை அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுவதும் பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்வதுமான இயற்கையாகக் காணப்படும் பதார்த்தங்களும் சக்தியும் இயற்கை வளங்களாகும்.
- உயிருள்ளவை அல்லது உயிரற்றவை
- மீளப் புதுப்பிக்கக் கூடியவை அல்லது மீளப்புதுப்பிக்க முடியாதவை.
- மீள் சுழற்சி செய்யக் கூடியவை அல்லது மீள்சுழற்சி செய்ய முடியாதவை
- நிரந்த வளங்கள் அல்லது தீர்ந்துபோகக் கூடிய வளங்கள்
பாரம்பரியம்
- அங்கிகள் தமது இயல்புகளை எச்சங்களுக்கு வழங்கும் திறன் பாரம்பரியம் எனப்படும்.
- பாரம்பரியம் காரணமாகவே தோன்றல்கள் தமது பெற்றோரை பெருமளவில் ஒத்திருக்கின்றன.
மாறல்கள்

- பெற்றோரும் அவற்றின் தோன்றல்களும் பல பண்புகளில் ஒற்றுமை உடையவராக இருப்பினும், அவை ஒரு போதும் பெற்றோரை முழுமையாக ஒத்திருப்பதில்லை. பெற்றோர்களிடமிருந்து பல இயல்புகளில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. இது மாறல்கள் எனப்படும்.
கிரகர் மெண்டலின் பாரம்பரியம்


- கிரகர் மெண்டல் தனது பரிசோதனைக்குரிய மாதிரியாக Pisum Sativum எனும் பட்டாணித் தாவரத்தை தெரிவு செய்தார்.
இத் தாவரம் பரிசோதனைக்கு ஏற்ற வகையில் கொண்டிருந்த சிறப்பியல்புகள் :


- இது ஒரு சிறிய தாவரம்

- இத் தாவரத்தில் இலகுவாக அவதானிக்கக் கூடிய இயல்புகள் உடைய பல பேதங்கள் கிடைத்தமை.
- இத் தாவரம் இயற்கையாக தன்மகரந்தசேர்க்கையை மட்டும் காட்டுவதால் தூய வழியான தாவரங்களைப் பெறலாம்.
- இதில் அயன் மகரந்த சேர்க்கையை நிகழ்த்தி வளமான தாவரங்களைப் பெற முடிந்தமை.
- இதன் வாழ்வுக் காலம் சிறியது. எனவே, குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையான சந்ததிகளை உருவாக்க முடிந்தமை.
- அதிக எண்ணிக்கையில் வித்துக்களை உருவாக்கக் கூடியது.

மென்டலின் பரிசோதனையில் காணப்படும் விஞ்ஞான முறைகள் :
- அவரால் தொடர்ச்சியான பல அவதானிப்புகள் செய்யப்பட்டன.

- தனது அவதானிப்புகளை புள்ளி விபரமாக சேகரித்தமை.
- அவதானிப்புகளில் இருந்து கருதுகோள்களை அமைத்தமை.
- கருதுகோள்களை உறுதிப்படுத்த பரிசோதனைகளை மேற்கொண்டமை.
- பரிசோதனைகளிலிருந்து கிடைத்த அவதானங்களில் இருந்து கருதுகோள்களை உறுதிசெய்தமை.
ஒற்றைக் கலப்புப் பிறப்பு

யாதேனும் ஒருபாரம்பரிய இயல்பின் இரண்டு வேறுபட்ட வகைகளுக்கு உரிய ஓரின நுகத்தினரிடையே செய்யப்படும் கலப்பு ஒற்றைக் கலப்புப் பிறப்பு எனப்படும்.
ஒற்றைக் கலப்பு சோதனை இனங்கலப்பு



கருதப்படும் யாதாயினுமொரு பாரம்பரிய இயல்பு தொடர்பாக அவ் அங்கி கருதப்படும் இயல்பின் ஓரின நுக பின்னிடைவான அங்கியுடன் செய்யப்படும் கலப்பு ஒற்றைக்கலப்பு சோதனை இனங்கலப்பு எனப்படும்.
ஒற்றைக் கலப்புப் பிறப்பாக்கலில் f2 சந்ததியில் தோற்ற அமைப்புக்கள் எப்பொழுதும் 3 : 1 என்ற விகிதத்தில் பெறப்பட்டன. இது ஒற்றைக் கலப்பு பிறப்பாக்கலின் மென்டலியனின் விகிதம் எனப்படும்.


மென்டலின் முதலாம் விதி (தனிப்படுத்துகை விதி) 
பாரம்பரிய இயல்புகளைத் தீர்மானிக்கும் காரணிகள் சோடியாக உள்ளன. இவை புணரிகளை உருவாக்கும் போது தனிப்படுத்துகைக்கு உள்ளாகின்றன. இதனால், ஒவ்வொரு புணரியும் சோடிக் காரணிகளில் ஒன்றினை மட்டும் காவுகின்றது.
இரட்டைக் கலப்புப் பிறப்பு
இரண்டு வேறுபட்ட பாரம்பரிய இயல்புகள் தொடர்பான வகைகளைக் கருதி செய்யப்படுகின்றன கலப்புகள் துவி கலப்பு பிறப்பு எனப்படும்.
இரட்டைக் கலப்புப் பிறப்பாக்கலில் f2 சந்ததியில் தோற்ற அமைப்புக்கள் எப்பொழுதும் 9 : 3 : 3 : 1 என்ற விகிதத்தில் பெறப்பட்டன.
மெண்டலின் இரண்டாம் விதி (தன்வயத்த தொகுப்பு விதி)

இனப்பெருக்கத்தின் போது, வேறுபட்ட பாரம்பரிய இயல்புகளைத் தீர்மானிக்கும் எதிருருக்களின் சோடிகள் சுயாதீனமாகத் தனிப்படுத்தப்பட்டு சோடியின் எதிருரு வில் ஒன்று மற்றைய சோடியின் யாதேனும் ஓர் எதிருருவுடன் சேர்ந்து செல்லும்.
பல்காரணிக் கலப்புப் பிறப்பு


கலப்புப் பிறப்பு ஒன்றில் இரண்டிற்கு மேற்பட்ட பல பரம்பரை அலகுகளின் வேறுபட்ட பண்புகள் கருதப்படுமாயின், அது பல்காரணிக் கலப்புப் பிறப்பு எனப்படும்.
பாரம்பரியம் தொடர்பான சில வரைவிலக்கணங்கள்
பரம்பரை அலகு : தற்சிறப்பான முறையில் ஒரு தனிப் பல்பெப்தைட்டின் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்ற DNA இன் பகுதி பரம்பரை அலகு எனப்படும். இதுவே, பாரம்பரியத்தின் அடிப்படையான கட்டமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அலகு ஆகும்.
எதிருரு : பரம்பரை அலகு ஒன்றின் நேர்மாறான இயல்புகளைத் தீர்மானிக்கும் மாற்று வடிவங்களில் ஒன்று.
ஓரினநுகம் : இருமடிய நிலையில் அங்கியொன்றின் அமைப்பொத்த நிறமூர்த்தங்களின் ஒத்த தானங்களில் ஒரே தன்மையான எதிருருக்கள் காணப்படின், ஓரின நுகம் எனப்படும்.
பல்லினநுகம் : இருமடிய நிலையில் அங்கியொன்றில் அமைப்பொத்த நிறமூர்த்த சோடிகளில் ஒத்த தானங்களில் ஒவ்வாத எதிருருக்கள் காணப்படின், அது பல்லின நுகம் எனப்படும்.
ஆட்சியான எதிருரு : பல்லின நுக நிலையில் தனது மாற்று எதிருரு இருக்கும் போது, தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும் எதிருரு ஆட்சியான எதிருரு எனப்படும்.
பின்னடைவான எதிருரு : ஓரினநுக நிலையில் தன்னை ஒத்த எதிருரு ஒன்று காணப்படும் போது மட்டும் தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும் எதிருரு பின்னடைவான எதிருரு எனப்படும்.


பிறப்புரிமை அமைப்பு : கருதப்படும் பாரம்பரிய இயல்பு தொடர்பான எதிருருக்களின் மொத்த தொகுதியின் தன்மை பிறப்புரிமை அமைப்பு எனப்படும்.
தோற்ற அமைப்பு : அங்கியின் பிறப்புரிமை அமைப்பினதும், சூழற்காரணிகளின் இடைத் தாக்கங்களாலும் அவ் அங்கியின் விருத்தியின் பொழுது வெளிக்காட்டப்படுகின்ற அமைப்பு தோற்ற அமைப்பு எனப்படும்.



காகித உற்பத்தி
- காகித உற்பத்தியில் கடுமையான தாவரப் பதார்த்தங்கள் (Woody Materials) மூலப்பொருட்களாக பயன்படுத்தலாம்.
- தாவரக் கலச்சுவரின் பிரதான கூறான செலுலோசிலிருந்து கடதாசி தயாரிக்கப்படும்.
- செலுலோசானது குளுக்கோசின் நேர்கோட்டுப் பல்பகுதியமாகும். செலுலோசு மூலக்கூறுகளின் மூலக்கூற்றுத்திணிவானது 250 000 – 1 000 000 எனும் வீச்சினுள் காணப்படும்.
- ஒவ்வொரு செலுலோசு மூலக்கூறும் நூற்றுக்கணக்கான OH கூட்டங்களைக் கொண்டிருக்கும்.
- OH கூட்டங்களுக்கிடையில் ஐதரசன் பிணைப்பு உருவாகச் சந்தர்ப்பம் உள்ளமையின் காரணமாக செலுலோசு மூலக்கூறுகள் ஒன்றுடனொன்று பக்கமாக , நெருக்கமாக இணைந்து செலுலோசு நார்களை உருவாக்கும்.
- கடதாசியானது இந்த செலுலோசு நார்களை கூட்டமாகக் கொண்ட ஒரு மெல்லிய படையாகும்.
- தாவரக் கலச்சுவர் சிக்கலான பீனோலிக் பதார்த்தத்தினாலான லிக்னீனையும்உடையது. இது 1 000 – 10 000 மூலக்கூற்றுத்திணிவு வீச்சினை உடையது.லிக்னீனானது கலச்சுவருக்கு உறுதியை வழங்குவதில் முக்கிய பங்களிக்கும்.
- தாவரப் பதார்த்தங்களிலிருந்து செலுலோசை உருவாக்கும்போது லிக்னீனானது NaOH உடன் வெப்பப்படுத்துவதன் மூலம் அகற்றப்படும்.
- இதன்போது பெறப்படும் கடுமையான நிறத்தையுடைய திரவமானது கறுப்பு மதுசாரம் “black liquor” என அழைக்கப்படும். காகிதத் தொழிற்சாலைகளில் உருவாகும் பிரதான கழிவு இதுவேயாகும்.
- லிக்னின் அகற்றலின் போது உருவாகும் காகித கூழ் வெளிற்றும் கருவியொன்றினால் வெளிற்றப்படும்.
- நிரப்பியாக CaO அல்லது சீனக்களி காகித கூழிற்கு சேர்க்கப்படும். இந்நிலையில் காகிதத்தின் உறுதித் தன்மையை அதிகரிக்க நிறப்பொருட்கள் , வேறு இரசாயனப்பதார்த்தங்கள் சேர்க்கப்படும்.
- காகிதக் கூழ் உருளைகளினால் அழுத்தப்பட்டு நீர் அகற்றப்படும். இந்நிலையில் தேவைகளுக்கு ஏற்ற தடிப்பில் காகிதங்கள் மெலிதாக்கப்படும்.
- நீர் அகற்றலை தொடர்ந்து காகிதங்கள் உலர்த்தப்படும்.
சாற்றுத்தைல கைத்தொழில்
- சாற்றுத்தைலங்களானது குறித்த சில தாவரங்களின் ஆவிப்பறப்புள்ள கூறுகளாகும்.இவை தாம் காணப்படும் தாவரங்களுக்கு சிறப்பான மணத்தைக் கொடுக்கும்.
- சாற்றுத்தைலங்களானவை சிக்கலான கலவைகளாகும். அத்துடன் அவை ஐதரோகாபன்கள் , அற்ககோல்கள் , கீற்றோன்கள் , அல்டிகைட்டுக்கள் , ஈதர்கள் , எசுத்தர்கள் என்பவற்றையும் கொண்டிருக்கலாம். சாற்றுத்தைலங்களின் பெரும்பாலான கூறுகள் நீரில் கரையும்தகவு குறைந்தவை.
- சில சாற்றுத்தைலங்கள் ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருட்களாகப் பயன்படுத்தப்படும். உதாரணம்: கறுவா (cinnamon zeylanicum இன் பட்டை) , மஞ்சள்(curcuma longa இன் குமிழம்) , மிளகு (piper nigrum இன் பழம்)
- தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாற்றுத்தைலங்களானது பிரதானமாக உணவுக் கைத்தொழிலிலும் மருந்து தயாரிப்பதிலும் வாசனைத்திரவிய தயாரிப்பிலும் பயன்படும். உதாரணம்: உணவு – சாதிக்காய் எண்ணெய் ( myristica fragrans இன் வித்திலிருந்து) , வாசனைத்திரவியம் – வெட்டிவேர் எண்ணெய்(vetiveria zizanioides இன் வேரிலிருந்து) , மருத்துவம் – புதினா (mint) எண்ணெய்(Mentha இன் இலையிலிருந்து)
- பெரும்பாலான சாற்றுத்தைல எண்ணெய்களானது தாவரப்பகுதிகளிலிருந்து கொதிநீராவி காய்ச்சி வடித்தல் மூலமே பிரித்தெடுக்கப்படுகின்றது. ஏனெனில் இது 100ºC இற்கு கீழ் காய்ச்சி வடிக்கக் கூடியதாக இருக்கும்.
மருத்துவ சேர்வைகளின் தயாரிப்பு
- தொகுக்கப்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முன்னர் பல நூற்றாண்டு காலமாகத் தாவரங்களே மருத்துவச் சேர்வைகளின் பிரதான மூலங்களாக இருந்தன.
- பாரம்பரிய வைத்தியமான ஆயுர்வேதத்தில் தாவரங்களின் சாறுகளானது மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
- நவீன மருத்துவத் தயாரிப்பில் தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் உயிர்ப்பான சேர்வைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருத்துவப் பொருட்களை இரசாயனமருந்தாக விற்பனை செய்கின்றார்கள். சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
| சேர்வை |
தாவரமூலம் |
பயன்பாடு |
| Vincristine |
Catharanthus roseus |
புற்றுநோய் எதிரி |
| Morphine |
Papaver somniferum |
போதை மருந்து,நோவை உணராத தன்மை |
| Digitoxin |
Digitalis lanata |
இருதய செயற்பாடு இழக்கப்படும்போது பயன்படுத்தப்படும் பாணி |
| Artemisinin |
Artemisia annua |
மலேரியா எதிரி |
- இவ்வுயிர்ப்பான சேர்வைகளானது பொதுவாகத் திண்மங்களாகும். இவை தாவரங்களிலிருந்து கரைப்பான் பிரித்தெடுப்பின் மூலம் பிரித்தெடுக்கப்படும்.
- வேறுபட்ட சேர்வைகள் , வேறுபட்ட கரைப்பான்களில் வேறுபட்ட அளவுகளில் கரையும்.
- பிரித்தெடுக்கப்பட வேண்டிய சேர்வைகள் உறுதியானவையாயின் பிரித்தெடுப்புச் செயன்முறையானது வெப்பப்படுத்தல் மூலம் ஆர்முடுக்கப்படும்.
- கரைப்பான் பிரித்தெடுப்பானது சேர்வைகளின் கலவையாகக் காணப்படும்.இதிலிருந்து தேவைப்படும் உயிர்ப்பான சேர்வையானது வேறுபட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி வேறாக்கப்படும். இதில் ஒன்று நிறம்பகுமியல் ஆகும்.
நிறம்பகுமியல்
- வெவ்வேறு வகையான நிறம்பகுமியல் முறைகள் இருப்பதுடன் , அவற்றில் இரு அவத்தைகளாக அசையக் கூடிய இயங்கும் அவத்தையும் அசையாத நிலையான அவத்தையும் காணப்படும்.
- இயங்கும் அவத்தையில் கரையும் வெவ்வேறு சேர்வைகள் வேறுபட்ட கதியில் நிலையான அவத்தையில் பயணிக்கும் / அசையும். எனவே இவை ஒன்றிலிருந்து ஒன்று வேறாக்கப்படும்.
- நிலையான அவத்தையானது சிலிக்கா போன்ற திண்மமாகவும் இயங்கும் அவத்தை சேதனக் கரைப்பான்களான கெக்சேன் , எதனோல் போன்ற திரவமாகவும் உள்ளபோது , கரைந்துள்ள சேர்வைகளுக்கும் கரைப்பான் மூலக்கூறுகளுக்கும் இடையிலுள்ள இடைத்தாக்க விசைகளும் , இவற்றிற்கும் சிலிக்கா துணிக்கைகளின் மேற்பரப்பிற்கும் இடையிலுள்ள இடைத்தாக்க விசைகளும்கரைந்துள்ள சேர்வையின் இயக்கக்கதியைக் கட்டுப்படுத்துகின்றன. சிலிக்கா துணிக்கைகளின் மேற்பரப்பு இங்கு ஈடுபடுவதனால் இது புறத்துறிஞ்சல் நிறம்பகுமியல் (adsorption chromatography) என அழைக்கப்படும்.
- நிலையான அவத்தை ஒரு கடதாசித்தாளினுள் சிக்குண்ட அல்லது அகப்பட்ட நீர் மூலக்கூறுகள் போன்ற திரவமாகவும் இயங்கும் அவத்தை நீருடன் கலக்காத சேதனக் கரைப்பானாகவும் (n-butanol) உள்ளபோது , கரைந்துள்ள சேர்வையின் சேதனக் கரைப்பானிற்கும் (இயங்கும் அவத்தை) நீருக்கும் (நிலையான அவத்தை) இடையில் உள்ள பங்கீடானது , அக் கரைந்துள்ள பதார்த்தத்தின் இயங்கும் கதியைக் கட்டுப்படுத்தும். இவ்வகையான நிறம்பகுமியல் பங்கீட்டு நிறம்பகுமியல் (partition chromatography) என அழைக்கப்படும்.
- நிறம்பகுமியலானது சிறிய அளவுத் திட்டத்தில் கலவைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் , பெரிய அளவுத் திட்டத்தில் சேர்வைகளை வேறுபடுத்த /தூய்மையாக்கவும் பயன்படுத்தப்படும்.
- சாற்றுத்தைலங்கள் போன்ற ஆவிப்பறப்புள்ள சேர்வைகளின் கலவைகளானது வாயுநிறம்பகுமியலினால் பகுப்பாய்வு செய்யப்படும். இங்கு இயங்கு அவத்தையானது ஒரு வாயுவாகவும் (நைதரசன்) நிலையான அவத்தையானது ஒரு ஒடுங்கிய குழாயில் காணப்படும் திண்மம் அல்லது திரவமாகவும் இருக்கும்.வாயு நிறம்பகுமியலில் குழாயின் வழியே சேர்வைகளின் இயக்கத்தின் கதியானது அவற்றின் கொதிநிலையிலும் அவை நிலையான அவத்தையுடன் கொண்டிருக்கும் இடைத்தாக்கங்களிலும் தங்கியிருக்கும்.
எதனோல் உற்பத்தி
- எதனோலானது வாசனைத் திரவியங்களினதும் சுவையூட்டிகளினதும் கரைப்பானாக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இது இரசாயனத் தாக்கங்களின் ஊடகமாகவும் பயன்படுகின்றது. அத்துடன் இது மிகவும் அதிகளவில் சூழல் நேயமான , மீளப் புதுப்பிக்கக்கூடிய எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
- எதனோலானது கைத்தொழில் ரீதியாக எதீனின் நீரேற்றத்தின் மூலம் / சீனி / மாப்பொருளின் மதுவம் மூலமான நொதித்தலினாலோ தயாரிக்கப்படுகின்றது.
- அற்ககோல் குடிபானங்களில் உள்ள எதனோலானது வேறுபட்ட தாவர மூலங்களின் நொதித்தலினால் பெறப்படுகின்றது.
உ+ம்: திராட்சை (வைன்) , பார்லி (பியர்)
கைத்தொழில் ரீதியான அற்ககோலானது தானியங்கள் அல்லது முளைகளின் (மொலாசஸ்) நொதித்தலினால் பெறப்படுகின்றது.
- நொதித்தலினால் பெறப்பட்ட திரவக் கரைசலை காய்ச்சி வடிப்பதனால் உயர்மட்டமான எதனோலைக் கொண்ட உற்பத்திகளைப் பெறலாம்.
உ+ம்: பிரான்தி (அண்ணளவாக 40%) – வைனின் காய்ச்சி வடிப்பின் மூலம் பெறப்படும்.
சாராயம் (அண்ணளவாக 40%) – தென்னங்கள்ளின் காய்ச்சி வடிப்பின் மூலம் பெறப்படும்.
- எதனோல் கரைசலின் பகுதிபடக் காய்ச்சி வடித்தல் மூலம் பெறப்படக்கூடிய அதிகூடிய செறிவுள்ள எதனோலானது 95.6% ஆகும்.(Rectified spirit)
- மனிதனின் உணவுக்கால்வாயினுள் உள்ளெடுக்கப்படும் உணவு உணவுக் கால்வாயின் வெவ்வேறு பகுதிகளில் பௌதீக, இரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது.



- வாய்க்குழியினுள் பற்களின் மூலம் உணவு பௌதிக மாற்றத்திற்கு உட்படுகிறது. வெட்டும் பல், வேட்டைப் பல், கடவாய்ப்பல் மூலம் முறையே உணவு வெட்டப்பட்டு, கிழிக்கப்பட்டு, அரைக்கப்பட்டு சிறு துகள்களாக மாறுகிறது.
- உணவு உமிழ் நீருடன் கலக்கப்படுகிறது. இதன் மூலம் உணவின் pH நிலை 5.8 – 7.4 (6.8) இற்கு கொண்டுவரப்படுகிறது.
- சீதத்தின் மூலம் உணவு வழுவழுப்பாக்கப்படுகிறது.
- இலைசோசோமினால் உணவு தூய்மையாக்கப்படுகிறது.
- உமிழ் நீருக்குரிய அமைலேசின் மூலம் சமைத்த உணவிலுள்ள மாப்பொருள் மோல்ற்றோசாக மாற்றப்படும். அதாவது இரசாயன மாற்றத்திற்குள்ளாகும்.
- உணவு தொண்டையினுள் செலுத்தப்பட்டு விழுங்கல் செயற்பாட்டுக்கு உட்படுகிறது. உணவு திரளையாக இச்சையின்றிய செயற்பாட்டின் மூலம் விழுங்கப்படுகிறது.
- களத்தில் உணவு சுற்றச்சுருக்கு அசைவு மூலம் இரைப்பை நோக்கி கடத்தப்படும். இங்கு உணவு பௌதிக மாற்றத்திற்கு மட்டும் உட்படும். சீதம் மூலம் உணவு மேலும் வழுவழுப்பாக்கப்படும்.
- இரைப்பையில் கடைதல் அசைவின் மூலம் பௌதீக சமிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
- உணவுடன் உதரச்சாறு / இரைப்பைச்சாறு கலக்கப்பட்டு உணவு அமிலத் தன்மையாக மாற்றப்படும். வழுவழுப்பு தன்மை அதிகரிக்கப்படும்.
- பெப்சினோஜன், முதல் ரெனின் என்பன HCl இனால் உயிர்ப்பு நிலையான பெப்சின், ரெனின் ஆக மாற்றப்படும்.
- உணவின் திரளை அமைப்பு நீக்கப்பட்டு உணவு இரைப்பைபாகு நிலைக்கு மாற்றப்படும்.
- உணவு சிறுகுடலிற்கு கடத்தப்படும் சிறுகுடலில் பித்தச்சாறு, சதையச்சாறு, குடற்சாறு, புரூணரின் சுரப்பு என்பவற்றுடன் கலக்கப்படும்.
- பித்தத்திலுள்ள பித்த உப்புக்களின் மூலம் இலிப்பிட்டு சிறு சிறு கோளங்களாக்கப்படும். அதாவது இலிப்பிட்டின் குழம்பாக்கல் நடைபெறும்.
- இச்சாறுகளிலுள்ள HCO3– இன் மூலம் உணவின் pH = 8 க்கு கொண்டுவரப்படும். (கார ஊடகம்)
- நொதியங்களின் மூலம் இரசாயன சமிபாடு மேற்கொள்ளப்படும்.
சூழலமைப்பு
வளிமண்டலத்தின் அமைப்பு
| கூறு |
கனவளவு |
| N2 |
78.08% |
| O2 |
20.99% |
| Ar |
0.94% |
| CO2 |
0.03% |
- சிறிய அளவுகளில் Ne, He, CH4, Kr, H2 ஆகியனவும் மாறுபடும் சிறிய அளவுகளில் மாசாக்கிகள் NH3, SO2, CO, NO2, O3 , H2S போன்றவையும் காணப்படும். வளிமண்டலத்தில் 4% வரையில் காணப்படும் நீராவி எங்கும் சீராக வியாபித்திருப்பதில்லை (நேரத்துக்கு நேரம் மாறுபடலாம்). ஆனால் சமுத்திரங்களுக்கு அண்மையிலும் , நீர்நிலைகளுக்கு அண்மையிலும் செறிவுற்றிருக்கும்.
- வளிமண்டலத்தில் N2 இன் அளவு உயர்வானது. ஏனெனில் அதில் காணப்படும் வன்மையான N≡N பிணைப்பினால் அவை சடத்துவத் தன்மை உடையதாக உள்ளது.O2 இன் தாக்குதிறன் N2 வை விட உயர்வு.
- O2 உள்ளதால் வளிமண்டலம் உயிர்ப்பானதாகக் காணப்படுவதோடு உயிரினங்கள் நிலைத்திருக்கவும் உதவும்.
- H2O ,CO2 என்பன ஒளித்தொகுப்பின் பிரதான மூலப்பொருள்களாகும்.
நீர் கோளத்தின் அமைப்பு
• புவியின் 70% மேற்பரப்பு நீரினால் மூடப்பட்டுள்ளது.
![screenshot-17]()
மூலகங்களின் அமைப்பு
| மூலகம் |
புவி ஓட்டின் % அமைப்பு |
முழு பூமியின் % அமைப்பு |
| ஒட்சிசன் (O) |
46.71 % |
29.3 % |
| சிலிக்கன் (Si) |
27.60 % |
14.9 % |
| அலுமினியம் (Al) |
8.07 % |
2.4% |
| இரும்பு (Fe) |
5.05 % |
36.9 % |
| கல்சியம் (Ca) |
3.65 % |
3.0% |
| சோடியம் (Na) |
2.75 % |
0.6 % |
| பொற்றாசியம் (K) |
2.58 % |
– |
| மக்னீசியம் (Mg) |
2.08 % |
7.4 % |
| ஏனையவை |
1.14 % |
1.0 % |
உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கு இட்டுச் சென்ற பிரதான மனித நடவடிக்கைகள் 


















வாழிடங்கள் இழக்கப்பட்டமையும் துண்டாடப்பட்டமையும்
- வர்த்தகம், விவசாயம், கைத்தொழில், மனிதக்குடியிருப்பு போன்ற மனிதத் தேவைகளுக்காகக் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டமையால் உயிர்ப்புவியிரசாயன வட்டங்கள் பாதிக்கப்பட்டு அதனால் இனங்கள் பாதிக்கப்பட்டன. இது உயிர்ப்பல்வகைமை இழப்புக்கு வழிவகுத்தது.
ஆக்கிரமிப்பு இனங்கள்.
- அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து மேலும் பரவிச் சென்று புதிய இடங்களில் ஸ்தாபிதம் அடைந்து, அவ்விடங்களில் உள்நாட்டுக்குரிய உயிர்ப்பல்வகைமையில் பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய இனங்கள் அல்லாத இனங்கள் ஆக்கிரமிப்பு இனங்கள் எனப்படும்.
- தேசிய இனங்கள் அல்லாத ஆக்கிரமிப்பு இனங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சூழற்றொகுதிகளில் ஏற்படுத்தி, சூழல் சமநிலைகளில் பாதிப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்த வல்லவையாகும். ஆக்கிரமிப்பு இனங்களின் அறிமுகமானது தற்செயலானதாகவோ, தேவை கருதியோ ஏற்பட்டதாக இருக்கலாம்.
- இலங்கையின் ஆக்கிரமிப்பு இனங்களிற்கான உதாரணங்கள்.
Lantana camara (நாயுண்ணி )
Mimosa pigra (இராட்சத தொட்டாற்சுருங்கி)
Eichornia crassipes (குளவாழை)
Chitala chitala (clown knife fish )
Parthenium hysterophorus ( காங்கிரஸ் களை)
தாவர விலங்கினங்களினது மிகை நுகர்வு
- பிரதானமாக மனித உணவின் பொருட்டு பல தாவர விலங்கினங்கள் மிகையாக பயன்படுத்தப்படுகின்றன. முதலைகளும், மலைப்பாம்புகளும் அவற்றின் தோலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. யானைகள் தந்தத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மூலிகைகள் மருத்துவப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
மாசடைதல்
- நீர், மண், வளி மாசடைதல் காரணமாக, சூழற்றொகுதிகளினது தொழிற்பாடுகள் பாதிக்கப்பட்டு உணர்திறன் மிக்க இனங்கள் அகற்றப்படுகின்றன/ குறைக்கப்படுகின்றன.
உலகளாவிய காலநிலை மாற்றம்
- மனித நடவடிக்கைகள் காரணமாக,வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்துள்ளமையினால், உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதனால் சூழற்றொகுதியில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சூழற்றொகுதிகளில் காலநிலை மாற்றங்களுக்கு விரைவாக இசைவாக்கமடைய முடியாத இனங்கள் அழிவடைய நேரிடும்.
விவசாயத்தினால் ஏற்படும் பாரம்பரிய இழப்புக்கள்
- நவீன விவசாயத்தில் தாவரங்களினதும், விலங்குகளினதும் உயர் விளைச்சலைத் தரக்கூடிய ஒரு சில வர்க்கங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இது பாரம்பரியப் பல்வகைமை இழப்பிற்கு இட்டுச் செல்லும். வாழிடங்களை இழத்தல், பாரம்பரிய வர்க்கங்கள் செய்கையில் விலக்கப்பட்டமை என்பன பாரம்பரியவளங்களின் இழப்பிற்கு அல்லது பாரம்பரியப்பல்வகைமை இழப்பிற்கு வழிவகுத்தன.
விலங்குகளில் காணப்படும் சுற்றோட்டத் தொகுதி வகைகள்
விலங்குகளில் இருவகையான சுற்றோட்டத் தொகுதிகள் காணப்படுகின்றன.
1. நிணநீர் சுற்றோட்டத் தொகுதி
2. குருதி சுற்றோட்டத் தொகுதி
சுற்றோட்டத் தொகுதி எனப்படுவது குழாய்கள் போன்ற கலங்களினூடாக பாயி { திரவம் கடத்தப்படுதல் ஆகும்.
நிணநீர் சுற்றோட்டத்தில் நிணநீர் எனும் பாய்மம் நிணநீர் கலங்களினூடாக கடத்தப்படும். குருதிச் சுற்றோட்டத் தொகுதியில் குருதி எனும் பாயம் குருதி கலங்களுக்கூடாக கடத்தப்படும்.
நிணநீர் சுற்றோட்டம் ஒரு பூரண சுற்றோட்டமாக காணப்படுவதில்லை. அதாவது இழையங்களிலிருந்து நிணநீர் கலங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பின்பு குருதியில் சேர்க்கப்படும். ஆனால் குருதிச் சுற்றோட்டம் ஒரு பூரண சுற்றோட்டம் ஆகும். ஆரம்பிக்கும் இடத்தில் மீண்டும் முடிவடையும்.
குருதிச் சுற்றோட்டத் தொகுதி விருத்தியடைய வேண்டியதன் அவசியம்
எளிய விலங்குகளில் அதாவது COelentereta, Platyhelmenthes,Nematoda வில் குருதிச் சுற்றோட்டத் தொகுதி விருத்தி யடைவதில்லை. இவற்றில் மேற்பரப்பு கனவளவு விதிதம் 1 இலும் அதிகம். எனவே உடல் மேற்பரப்பினூடான பரவல் முறையிலான பதார்த்தக் கொண்டு செல்லல் போதுமானது ஆகும்.
விலங்குகள் பருமனிலும் சிக்கல். தன்மையிலும் அதிகரிக்கும் போது இவற்றில் பதார்த்த கொண்டு செல்லல் அளவு அதிகரிக்கிறது. அத்துடன் கொண்டு செல்லப்படும். தூரமும் அதிகரிக்கிறது. எனவே பரவல் முறையிலான பதார்த்த கொண்டு செல்லல் போதுமானதன்று. எனவே வினைத்திறனாக உடல் முழுக்க பதார்த்த கொண்டு செல்லலுக்காக குருதி சுற்றோட்டத் தொகுதி விருத்தியடைந்துள்ளது
.
1. முதலில் குருதிச் சுற்றோட்டத் தொகுதி விருத்தியடைந்த கணம்Annelida
2. குருதி சுற்றோட்டத் தொகுதியின் மொத்த தொழில் : பதார்த்த கொண்டு செல்லல்.
சகல Arthropoda களிலும் cephalopodaதவிர்ந்த ஏனைய Mollusca களிலும் திற சுற்றோ கணப்படுகின்றது.
Cephalopoda களில் மூடி. சுற்.
திறந்த சுற்றோட்டம் எனப்படுவது இதயத்திலிருந்து குருதி பம்பப்பட்டு குருதிக்கலன் { நாடியினுள் செலுத்தப்பட்டு அது புன்னாடிகளாக பிரிந்து குருதிக் குழியினுள் குருதியை விடுவித்து மீண்டும் இதயத்திலுள்ள வாயுருக்களினூடாக இதயத்தை அடைதலாகும்.
குருதி குறைந்த அமுக்கத்துடன் மந்தமாக அசையும்.
குருதிக் குழியுடன் இழையங்கள் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் பதார்த்த பரிமாற்றம் கட்டுப்பாடும் இன்றியது நேரடியாக நிகழும்.
மூடிய குருதிச் சுற்றோட்டம்
![]()
மூடிய சுற்றோட்டத்தொகுதி எனப்படுவது இதயத்திலிருந்து குருதி நாடிகளுள் பம்பப்பட்டு குருதிமயிர்கலன்களினூடாக பின்பு நாளங்களினூடு மீண்டும் குரதி இதயத்தை அடையும் சுற்றோட்டமாகும்.
பின்வரும் கணங்களில் இவ்வகையான சுற்றோட்டம் காணப்படுகிறது.
1. கணம்Mollusca (Cephalopoda)
2. கணம்Annelida
3. கணம் Echinodermata
4. கணம் Chordata
குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் அடிப்படையான இயல்புகள்
ஒரு குருதிச் சுற்றோட்டத் தொகுதி அடிப்படையாக 3 இயல்புகளை கொண்டிருத்தல் வேண்டும்.
1. சுற்றி ஓடும் திரவமான குருதி இழையம்
2. சுருங்கத்தக்க சுருங்கித் தரைக் கூடிய இதயம் பம்பியாக தொழிற்படும் இதயம் திரவடைந்த குருதிக் கலன்
3. திரவம் சுற்றி ஓடுவதற்கான குருதிக் கலன்கள் குழாய்கள்
குருதிச் சுற்றோட்ட வகைகள்
![]()
திறந்த குருதிச் சுற்றோட்டம்
![]()
பின்வரும் கணங்களில் இவ்வகையான சுற்றோட்டம் காணப்படுகிறது.
1.கணம்Mollusca (Cephalopoda)
2. .கணம் Arthropoda
இச் சுற்றோட்டத்தில் குருதி குருதிக்கலன்களுக்குள் காணப்படும் உயர் அமுக்கத்துடன் விரைவாக பாயும். பதார்த்தப் பரிமாற்றம் மயிர்கலங்களினூடாக பரவல் முறையினால் நிகழும். எனவே பதார்த்தப்பரிமாற்றம் கட்டுப்பாட்டுக்குரியது.
மூடிய குருதிச் சுற்றோட்டம் இடையிலான பிரதான வேறுபாடு 2 தருக.
| திறந்த குருதிச் சுற்றோட்டம் |
மூடிய குருதிச் சுற்றோட்டம் |
| குருதி குருதிக்குழியில் தங்கி நிற்கும் |
குருதிக் கலன்களில் தங்கி நிற்கும் |
| பதார்த்த பரிமாற்றம் நேரடியாக நிகழும் |
குருதி மயிர்க்கல சுவரினூடாக நிகழும் |
ஒற்றை சுற்றோட்டம்
ஒற்றை குருதிச் சுற்றோட்டம் எனப்படுவது ஒரு பூரண சுற்றோட்டத்திற்கு போது இதயத்திற்கூடாக குருதி ஒரு தடவை பாயும் சுற்றோட்டம் ஆகும்.
இச் சுற்றோட்டத்தின் போது இதயத்திலிருந்து குருதி (நாடி) கலன்களினூடாக சுவாச கட்டமைப்பை அடைந்து பின் அங்கிருந்து குருதிக் கலனினூடாக உடற்பகுதியை அடைந்து மீண்டும் குருதிக் கலனினூடாக இதயத்தை அடைதல் ஆகும்.
இச் சுற்றோட்டத்தில் குருதி மிக குருதியமுக்கத்துடன் உடற் பகுதிக்கு செல்லும்
Eg : கணம் A
. கணம் Chordata
கணம்Annelida
![]()
இரட்டை சுற்றோட்டம்
இரட்டை சுற்றோட்டம் எனப்படுவது ஒரு பூரண சுற்றோட்டத்தின் போது இதயத்திற்கூடாக குருதி இரு தடவை பாயும் சுற்றோட்டம் ஆகும். இதில் 2 வகை உண்டு.
பூரணமற்ற இரட்டை குருதிச் சுற்றோட்டம்
![]()
பூரணமற்ற இரட்டை குருதிச் சுற்றோட்டம் எனப்படுவது பூரண சுற்றோட்டத்தின் போது இதயத்திற்கு குருதியின் ஒரு பகுதி 2 தடவை இதயத்தினூடு பாய்தல்.
இச் சுற்றோட்டம்
1. வகுப்பு Amphibia
2. வகுப்பு Reptelia
Reptelia வில் முதலை விதிவிலக்கானது. இதில் இதயம் 4 அறைகளை கொண்டது. எனவே பூரணமான இரட்டை சுற்றோட்டம்.
இச் சுற்றோட்டத்தின் பிரதிகூலம் ஒட்சியேற்றப்பட்ட குருதியும் ஒட்சியிறக்கப்பட்ட குருதியும் கலக்கின்றன. எனவே உடல் பகுதிக்கு 100% ஒட்சியேற்றப்பட்ட குருதி வழங்கப்பட முடியாது.
பூரணமான இரட்டை குருதிச் சுற்றோட்டம்
![]()
பூரணமான இரட்டை குருதிச் சுற்றோட்டம் எனப்படுவது ஒரு பூரண குருதி சுற்றோட்டத்தின் போது இதயத்திற்கூடாக முழுக் குருதியும் இரண்டு தடவை பாயும் சுற்றோட்டம் ஆகும்.
இச்சுற்றோட்டம் கணம் Chordata வில் வகுப்பு Aves , mammelia விலும் Reptelia வில் முதலையில் மட்டும் காணப்படும்.
இச் சுற்றோட்டத்தில் ஒட்சியேற்றப்பட்ட ஒட்சியிறக்கப்பட்ட குருதி முற்றாக வேறாக்கப்படுகின்றன. அத்துடன் உட லுக்கு குருதி மிக விரைவாக வழங்கப்படுகின்றது.
பறவைகள் பாலூட்டிகளில் பூரணமான இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் விருத்தியடைந்ததன் நோக்கம் இவை உயர் அனுசேபத்தை கொண்டவை. அத்துடன் இளம் சூட்டு மாறா வெப்பநிலை உடையவை. எனவே பூரணமான இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் காணப்படும்.

![cell_cycle_]()
- ஒரு கலப்பிரிவின் ஆரம்பத்திற்கும் அடுத்த கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும் இடையில் கலத்தில் இடம்பெறும் சகல தொடரான நிகழ்வுகள்.
- இக் கலவட்டத்தில் இரு பிரதான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

1. கலவளர்ச்சி
2. கலப்பிரிவு
- இவ்விரு பிரதான நிகழ்வுகளையும் உள்ளடக்கி கலவட்டம் 5 அவத்தைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1. G1 அவத்தை (Primary Growth Phase)
2. S – தொகுப்பு அவத்தை
3. G2 அவத்தை – இரண்டாவது வளர்ச்சி அவத்தை
4. M – இழையுருப் பிரிவு
5. C – குழியவுரு பிரிவு
- இழையுரு பிரிவு மேலும் 04 உபஅவத்தைகளைக் கொண்டது.
1. முன்னவத்தை
2. அனு அவத்தை
3. மேன்முக அவத்தை
4. ஈற்றவத்தை
G1 அவத்தை
- கலப்புன்னங்கங்கள் தொகுக்கப்படும்.
- கலத்தில் புரதம் தொகுக்கப்படும்.
- கல வளர்ச்சி நிகழும்
- கலம் உயர் அனுசேபம் கொண்டதாக அமையும்
S அவத்தை 


- Histone புரதங்கள் தொகுக்கப்படும்.
- DNA இரட்டிப்படையும்.
- Histone புரதங்கள் DNA யில் படலிடப்பட்டு / போர்வையிடப்பட்டு நிறமூர்த்தம் இரட்டிப்படையும் ஆனால் இரட்டிப்படைந்த நிறமூர்த்தங்கள் மையப்பாத்தில் இணைந்து காணப்படும்.
- இரட்டிப்பு அடைந்த நிலைமையை இவ் அவத்தையில் நுணுக்குக்காட்டியின் ஊடாக அவதானிக்கமுடியாது. இவ் அவத்தையில் நிறமூர்த்தங்கள் யாவும் சேர்ந்த வலையமைப்பு குரோமற்றின் வலையமைப்பாகக் காணப்படும்.
G2 அவத்தை
- G1 ஐ போன்றது
- கலப்புன்னங்கங்கள் தொகுக்கப்படும்.
- கல வளர்ச்சி நிகழும்
- பச்சையவுருமணி, இழைமணி, புன்மையத்தி இரட்டிப்படையும்
- புரதத் தொகுப்பு நிகழும்
- கலத்தில் சக்திச் சேமிப்பு அதிகரிக்கும்.
G1, S, G2 இடையவத்தை எனப்படும்.