வாயுக்களின் மூலக்கூற்று இயக்கவியல் கொள்கையின் எடுகோள்கள்
- வாயுக்கள் உயர்ந்த வெவ்வேறு கதிகளில் எழுந்தமானமாக நேர்கோட்டில் அசையும். மிகவும் சிறிய துணிக்கைகளளைக் கொண்டுள்ளது.
- எழுமாறாக இயங்கும் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதும். அத்துடன் பாத்திரத்தின் சுவருடனும் மோதும். எல்லா மோதல்களும் பூரண மீள்தகு தன்மையுடையவை.நிறை மீளியல்பு மோதுகையின் போது ஒரு மூலக்கூறின் இயக்கப்பண்பு சக்தி குறித்த அளவினால் குறையும் ஆயின் மற்றைய மூலக்கூறின் இயக்கச் சக்தி அதற்கு சமனான அளவினால் கூடும். அல்லது மோதலில் ஈடுபடும் மூலக்கூறுகளின் மொத்த இயக்கச் சக்தி மோதுகை காரணமாக மாற்றமடைவதில்லை.
- மூலக்கூறுகள் இடையே கவர்ச்சி விசை, தள்ளுகை விசை இல்லை. இதனால் ஒரு மூலக்கூறின் இயக்கமானது மற்றைய மூலக்கூறின் இயக்கம், நிலை என்பவற்றில் முற்றாக தங்கியிருப்பதில்லை.
- மோதுகையின் போது எடுக்கும் நேரமானது (மோதிக்கொண்டிருக்கும் நேரம்) மோதுகைகளுக்கிடையே செலவிடும் நேரத்துடன் புறக்கணிக்கத்தக்கது. ஏனெனில், மூலக்கூற்றிடை தூரமானது மூலக்கூறுகளின் விட்டத்தை விட கூடியது.
- வாயு மூலக்கூறுகள் அடங்கும் பாத்திரத்தின் சுவரின் மீது மோதுவதால் வாயு அமுக்கம் உண்டாகிறது.
- மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதி மீளப் பாயும்போது தொகுதியின் மொத்த இயக்கப்பாட்டுச் சக்தி மாறிலியாகும்.
- கலங்கள், கல ஒழுங்கமைப்பு ஆகியன பற்றிய அறிவின் விருத்தியில் நுணுக்குக்காட்டியின் பங்களிப்பு
- வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத, தெளிவாக புலப்படாத பொருட்களை உருப்பெருத்துக் காட்டும் உபகரணம் நுணுக்குக்காட்டி எனப்படும்.
- இவ் நுணுக்குக் காட்டி பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
![n-5]()
கூட்டு நுணுக்குக்காட்டி 



- கூட்டு நுணுக்குக்காட்டியின் பகுதிகளும் அவற்றின் தொழில்களும்
| பகுதி |
தொழில் |
| பார்வைத்துண்டு (கண் வில்லை) |
உருப்பெருக்கம் |
| பொருளி / பொருள் வில்லை |
உருப்பெருக்கம் |
| உடற் குழாய் |
பார்வைத்துண்டு, மூக்குத்துண்டைத் தாங்கல் |
| மூக்குத்துண்டு |
பொருள் வில்லைகளைத் தாங்குதல் |
| பரும்படிச் செப்பமாக்கி |
உடற்குழாயை அசைப்பதன் மூலம் விம்பத்தைப் பெறல் |
| நுண் செப்பமாக்கி |
|
| புயம், பாதம் |
நுணுக்குக் காட்டியை கொண்டு செல்லலில் பங்குகொள்ளும் பகுதி
மேடை வழுக்கியைத் தாங்குதல் |
| மேடையிலுள்ள துவாரம் |
ஒளிவரும் பாதை |
| கவ்வி |
வழுக்கியை அசையாது கவ்வுதல் |
| ஒடுக்கிவில்லை |
ஒளிக்கதிர்களைப் பொருள் நோக்கி குவித்தல் |
| பிரிமென்தகடு |
பொருள் நோக்கி வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தல் |
| ஆடி (தளவாடி ஒருபுறமும், மறுபுறம் குழிவாடி கொண்டது)
ஒளிச் செறிவு அதிகமாக உள்ளபோது தளவாடி குறைவாக உள்ளபோது குழிவாடியும் பயன்படுத்தப்படும் |
ஒளிக்கதிர்களைச் சேகரித்துப் பொருள் நோக்கி செலுத்துதல் |
கூட்டு நுணுக்குக்காட்டி செப்பம் செய்தல்

- நுணுக்குக் காட்டியை ஒளி உள்ள இடத்தில் ஒப்பமான தளத்தில் உடற்குழாய் முன்நோக்கி இருக்கத்தக்கவாறு வைத்தல்.
- தாழ்வலுப் பொருள்வில்லையை பார்வைத்துண்டுக்கு நேராகக் கொண்டு வருதல்.
- பரும்படிச் செப்பமாக்கியைப் பயன்படுத்தி உடற்குழாயை மேல் நோக்கி அசைத்தல்.
- ஆடியையும், பிரிமென்தகட்டையும் பயன்படுத்தி பார்வைப் புலத்தை ஒளியூட்டல்.
- வழுக்கியை மேடையின் மீது வைத்து பரும்படிச் செப்பமாக்கியை பயன்படுத்தி தாழ்வலு பொருளியை மெதுவாக கீழ்நோக்கி அசைத்து விம்பத்தைப் பெறுதல்.
- நுண் செப்பமாக்கியைப் பயன்படுத்தி தெளிவான விம்பத்தைப் பெறல்.
- பின்பு நடுவலு, உயர்வலுக்களைப் பார்வைத் துண்டுக்கு நேராகக் கொண்டுவந்து அவ்வலுக்களின் கீழ் விம்பத்தை அவதானித்தல்
ஒளி நுணுக்குக்காட்டியின் பயன்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்
- பயன்படுத்தப்படாத போது பெட்டியினுள் வைக்க வேண்டும்.
- உடற்குழாய் எப்பொழுதும் பொருளை அவதானிக்கும் போது கீழ் நோக்கி அசைக்கப்பட வேண்டும்.
- வழுக்கியின் ஒரங்களில் பிடித்தல் வேண்டும்.
- நுணுக்குக்காட்டியைக் கொண்டு செல்லும்போது, புயம், பாதம் பயன்படுத்தப்பட வேண்டும்.
- பாவித்து முடித்த பின் வில்லைகள் அதற்குரிய துணியினால் துடைக்கப்பட்டு பெட்டியினுள் வைக்க வேண்டும்.
- நுணுக்கு காட்டியுடன் தொடர்புடைய இரு எண்ணக்கருக்கள்
அவ் எண்ணக்கருக்களாவன
- உருப்பெருக்கம்
- பிரிவலு
உருப்பெருக்கம்




![]()
எனவே உருப்பெருக்கம் எனப்படுவது விம்பத்தின் பருமனுக்கும் பொருளின் பருமனுக்கும் இடையிலான விகிதம் ஆகும்.
- உ – ம் ஒரு பொருளின் பருமன் 0.1mm ஆகவும் அதன் விம்பத்தின் பருமன் 0.9mm ஆகவும் காணப்படின் உருப்பெருக்கம்
![microscope-eq-1]()
- ஆய்வுகூடத்தில் பயன்படுத்தப்படும் கூட்டுநுணுக்குக்காட்டியின்
உருப்பெருக்கம் = பொருள் வில்லையின் உருப்பெருக்கம் × பார்வைத்துண்டின் உருப்பெருக்கம்
| வலு வகை |
பொருள்வில்லையின் உருப்பெருக்கம் |
பார்வைத்துண்டின் உருப்பெருக்கம் |
மொத்த உருப்பெருக்கம் |
| தாழ்வலு |
× 4 |
× 10 |
× 40 |
| நடுவலு |
× 10 |
× 10 |
× 100 |
| உயர்வலு |
× 40 |
× 10 |
× 400 |
- உருப்பெருக்கம் அதிகரிக்கும் போது அவதானிக்கப்படும் கலங்களின் எண்ணிக்கை குறையும். ஆனால், கலத்தின் பருமன் அதிகரிக்கும்.
- கூட்டு நுணுக்குக்காட்டியின் உயர் உருபெருக்கம் × 1500 / × 2000
- இலத்திரன் நுணுக்குக் காட்டியின் உயர் உருபெருக்கம் × 500 000
- உருப்பெருக்கத்தைப் பாதிக்கும் பிரதான காரணி
- பயன்படுத்தும் கதிரின் அலைநீளம்
- பயன்படுத்தும் வில்லைகளின் தன்மை
பிரிவலு
- இரு புள்ளிகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தி அறியக் கூடியதாய் இருக்கும் ஆகக் குறைந்த தூரம் பிரிவலு எனப்படும்.
- மனித வெற்றுக்கண்ணின் பிரிவலு 0.1mm
- கூட்டு நுணுக்குக்காட்டியின் பிரிவலு 200mm
- இலத்திரன் நுணுக்குக்காட்டியின் பிரிவலு 0.2mm
- இலத்திரன் நுணுக்குக்காட்டி மிகவும் உயர்ந்த பிரிவலுவை கொண்டது.
- பிரிவலுவை தீர்மானிக்கும் முக்கிய காரணி பயன்படுத்தும் கதிரின் அலைநீளம் ஆகும். அலைநீளம் குறையும் போது பிரிவலு அதிகரிக்கும்.
இலத்திரன் நுணுக்குக்காட்டி
- இலத்திரன் நுணுக்குகாட்டியின் சிறப்பியல்புகள்
- en கற்றைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- வில்லைகள் மின்காந்த வில்லைகள் ஆகும்.
- இரண்டு சோடி மின்காந்த வில்லைகள் உருப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
- ஒரு சோடி மின்காந்த வில்லைகள் ஒடுக்கி வில்லையாக பயன்படுத்தப்படும்.
- மாதிரிப் பொருள் செப்புத் தகட்டின் மீது வெற்றிடத்தில் வைக்கப்படும்.
- உயிரற்ற பொருட்களை மட்டும் அவதானிக்கலாம்.
- விம்பம் புளோரசன் திரையில் பெறப்படும். வெள்ளை, கறுப்பு நிறத்தில் பெறப்படும்.
கூட்டு நுணுக்குக்காட்டிக்கும் இலத்திரன் நுணுக்குக்காட்டிக்கும் இடையிலான வேறுபாடுகள்
| இயல்பு |
நுணுக்குக்காட்டி |
இலத்திரன் நுணுக்குக்காட்டி |
| பயன்படுத்தும் கதிர் வகை |
ஒளிக்கற்றைகள் |
இலத்திரன் கற்றை |
| உயர்ந்த உருபெருக்கம் |
× 1500 – × 2000 |
× 500 000 |
| உயர் பிரிவலு |
200nm |
0.2nm |
| பயன்படுத்தும் கதிரின் அலை நீளம் |
400 – 700nm |
0.005nm |
| பயன்படுத்தப்படும் வில்லை |
கண்ணாடி வில்லை |
மின்காந்த வில்லை |
| மாதிரிப்பொருள் |
உயிருள்ளது, உயிரற்றது அவதானிக்கலாம்
மேடையில் வழுக்கியில் வைத்து வளித் தொடர்புடன் அவதானிக்கலாம் |
உயிரற்றது மாத்திரம் அவதானிக்கப்படும்
மெல்லிய செப்பு தகட்டில் வெற்றிடத்தில் வைத்து அவதானித்தல் |
| விம்பம் |
நேரடியாக அவதானிக்கப்படும்
பொதுவாக நிறமுள்ளது அவதானிக்கப்படும் |
திரையில் அவதானிக்கப்படும்
கறுப்பு வெள்ளை நிற விம்பம் அவதானிக்கப்படும் |
- கூட்டு நுணுக்குக்காட்டியின் அனுகூலங்கள்
- இதற்கான மாதிரிப்பொருளைத் தயாரித்தல் விரைவானதும் சுலபமானதுமான முறையாகும்.
- கருவியைக் கையாளுதல் சுலபம்.
- உயிருள்ளவற்றை அவதானிக்கலாம்.
- மலிவானது.
- காந்தப்புலத்தினால் பாதிக்கப்படாது.
- குறைந்த உருப்பெருக்கம்
- குறைந்த பிரிவலு
- இலத்திரன் நுணுக்குக்காட்டியின் அனுகூலங்கள்
- மிக உயர்ந்த உருப்பெருக்கம்
- உயர்ந்த பிரிவலு
- கையாளுதல் கடினம்
- விலை அதிகமானது
- இறந்த பொருட்களை மாத்திரம் பார்க்கலாம்.
- விம்பம் கறுப்பு வெள்ளையில் பெறப்படல்.
- காந்தப்புலத்தால் பாதிப்படைதல்.
- இதற்குரிய மாதிரிப்பொருளைத் தயாரிக்க அதிக நேரம் செலவிடப்படும்.
- இலத்திரன்நுணுக்குக்காட்டி வகை
- Transmission EM

![]()
- Scanning EM

![]()
- TEM இல் en கற்றைகள் மாதிரிப் பொருளின் ஊடாக ஊடுருவி அதன் அகக் கட்டமைப்புகளைத் தெளிவாக புலப்படுத்தும். இதுவே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட en நுணுக்குகாட்டி வகை.
- SEM இல் en கற்றைகள் மாதிரிப் பொருளின் மேற்பரப்பில் பட்டுத் தெறிப்படைந்து அதன் மேற்பரப்புத் தோற்றத்தை அதாவது முப்பரிமான தோற்றத்தைப் புலப்படுத்தும்.
போட்லாந்து சீமெந்து
- சீமெந்து ஓர் ஒட்டுப்பொருள். இது துண்டு துணுக்குகளை இணைத்து ஒரு திண்ம திணிவாக்கும் இயல்புடையது. கட்டடத் தொழிலில் பயன்படுத்தப்படும் சீமெந்து பொதுவாக போட்லாந்து சீமெந்தாகும்.
- மூன்று வகையான மூலப்பொருட்கள் போட்லாந்து சீமெந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும்.
- சுண்ணாம்புக்கல்-CaCO3(சுண்ணாம்புள்ள கூறு)
- களி – Al2O3.2SiO2.2H2O (களிமண்ணுள்ள கூறு)
- ஜிப்சம் – CaSO4.2H2O (சீமெந்து இறுகுவதை கட்டுப்படுத்தும் பதார்த்தம்)
- சீமெந்தின் அமைப்பிற்கான சுண்ணாம்புள்ள கூறு CaO , CaCO3 ஐ கொண்ட சுண்ணாம்புக் கல் வடிவில் சேர்க்கப்படுகிறது. சுண்ணாம்புக்கல்லிற்கு பதிலாக மாபில் , முருகைக்கல் அல்லது வெண்கட்டி (chalk) சேர்க்கப்படலாம். களிமண்கூறு SiO2 , Al2O3 , Fe2O3ஆகியவற்றை சீமெந்தின் அமைப்பிற்கு வழங்குகின்றது.
வேறு உதாரணங்கள் : மாக்கல் , சிலேட்டுக்கல் (Slate).
- முறைகள் – ஈரமுறை , உலர்முறை ஆகிய இருமுறைகள் போட்லாந்து சீமெந்து தயாரிப்புக்கு பயன்படும்.
- உலர்ந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உலர் முறை மூலம் இலங்கையில் சீமெந்து தயாரிக்கப்படும். உலர்த்தப்பட்ட முறையில் சுண்ணாம்புக் கல்லும் , களி மண்ணும் அரைக்கப்பட்டு 1:5 வீதத்தில் கலக்கப்பட்டு சுழலும் சூளையில் இடப்படும்.10 பாகை சாய்வில் சுழலும் சூளை சுழலும். வெப்பநிலை 600 – 1500 ºC வரை மாறுபடும். இவ்வெப்பநிலையில் உள்ளபோது இரண்டு மூலப்பொருட்களும் இரசாயன ரீதியில் சேர்ந்து உருகாமல் இணையும். இச்செயன்முறையானது தணரல் / திண்மநிலைத் தாக்கம் (Sintering) எனப்படும். இச்செயன்முறை சிறிய கிளிங்கரை உருவாக்கும்.எரிப்பதற்கு உலை எண்ணெய் , இயற்கைவாயு அல்லது நிலக்கரி பயன்படுத்தப்படும்.
- சுழலும் , சூளை நான்கு பகுதிகளையுடையது.
- முன்சூடாக்கும் பகுதி (Preheating zone)
- நீற்றுதல் நடைபெறும் பகுதி (Calcining zone)
- கிளிங்கர் உருவாகும் பகுதி / தொனிக்கல் உருவாகும் பகுதி (Clinkering zone)
- குளிரூட்டும் பகுதி (Cooling zone)
- முன் சூடாக்கும் பகுதியில் நீர் இழக்கப்படும். நீற்றுதல் பகுதியில் கல்சியம் காபனேற்றும் களிமண்ணும் பிரிகையுறுதலும் , சேதனப் பதார்த்தங்களின் ஒட்சியேற்றமும் 1000 ºC வெப்பநிலை அடையும் வரை நடைபெறும். சுயாதீன ஒட்சைட்டுக்கள் தாக்கத்திற்குட்பட்டு கல்சியம் சிலிக்கேற்றும் கல்சியம் அலுமினேற்றும் தொனிக்கல் உருவாகும் பகுதியில் 1300 – 1500 ºC இல் உருவாகும்.
![screenshot-16]()
- கிளிங்கர் (தொனிக்கல்) உடனடியாக குளிரூட்டப்பட்டு , பின்னர் 4% – 5% ஜீப்சத்துடன் கலந்து (ball mill) அரைக்கப்பட்டு சீமெந்து பெறப்படும்.
- சீமெந்து நீருடன் கலக்கப்படும் போது உருவாகும் நீரேற்றப்பட்ட விளைவுகள் சீமெந்திற்கு இறுகும் மற்றும் கட்டுகின்ற இயல்பை வழங்குகின்றது.
உதாரணம் :2Ca3SiO5 + 6H2O → Ca3Si2O7.3H2O + 3Ca(OH)2
(Ca3SiO5 = 3CaO.SiO2)
- ஜிப்சம் (CaSO4.2H2O) சீமெந்து இறுகும் நேரத்தை கட்டுப்படுத்துவதற்கு சேர்க்கப்படுகின்றது. ஜிப்சம் சேர்க்கப்படாவிடின் சீமெந்து உடனடியாக இறுகிவிடும்.
மசகு எண்ணெயும் பெற்றோலிய உடைப்பும்
- எண்ணெய் கிணறுகளில் பிரித்தெடுக்கப்படும் கனிய எண்ணெய்கள் வேறுபட்ட ஐதரோகாபன்கள் N , P , S ஐக் கொண்ட சக்கர சேதனச் சேர்வைகள் ஆகியவற்றைக் கொண்ட சிக்கல் கலவையாகும். இது மசகு எண்ணெய் என அழைக்கப்படும். இதிலுள்ள ஐதரோ காபன்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்.
- திறந்த சங்கிலி அற்கேன்கள்.
- சக்கரமற்ற ஐதரோகாபன்கள்.
- அரோமற்றிக் ஐதரோகாபன்கள்.
- பண்படுத்தாத / மசகு எண்ணெயை பகுதிபட வடித்தல் மூலம் பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதிகளும் குறித்த வெப்பநிலை எல்லைகளுக்குள் கொதிக்கும் ஐதரோகாபன் கலவையை கொண்டிருக்கும். ஒவ்வொரு பகுதியும் மீளவும் வடிக்கப்பட்டு அவற்றில் உள்ள (பதார்த்தங்களை) கூறுகள் பிரிக்கப்படும்.
- பெரிய ஐதரோகாபன் மூலக்கூறுகளை நேரடியாக மோட்டார் வாகனங்களில் பாவிக்க முடியாது. களிம்பகற்றுசாலையொன்றில் (Refinery) நடைபெறும் முக்கிய செயன்முறை பெற்றோலிய உடைப்பு ஆகும். அதாவது பெரிய மூலக்கூறுகளை சிறிய மூலக்கூறுகளாக உடைத்தல். ஆரம்ப மூலக்கூறு அற்கேனாக இருக்கும் பொழுது விளைவு மூலக்கூறுகள் காபன் எண்ணிக்கை குறைந்த அற்கேனும் அற்கீனும் ஆகும்.
உதாரணம் :-
C5H18(l)→ C6H14(l) + C2H4(g)
அல்லது
C5H18(l)→ C5H12(g) + C3H6(g)
- மூன்று பிரதான உடைப்பு முறைகள் உண்டு
- வெப்ப உடைத்தல் – அற்கேன் அதன் கொதிநிலையிலும் உயர்ந்த வெப்பநிலையில் (சில வேளைகளில் மேல் வெப்பநிலைக்கு வெப்பமேற்றப்பட்ட நீராவியின் முன்னிலையில்) ஏறத்தாழ அரை செக்கன்களுக்கு வெப்பமேற்றப்படும்.
- ஊக்கல் உடைத்தல் – சிலிக்கா அல்லது அலுமினா போன்ற ஊக்கிகளின் முன்னிலையில் ஒப்பீட்டளவில் தாழ்வெப்பநிலைக்கு ஐதரோகாபன் வெப்பமேற்றப்படும்.
- ஐதரோ உடைத்தல் – உயர் அமுக்கத்திலுள்ள ஐதரசனில் ஐதரோ காபன்
வெப்பமேற்றப்படும்.
ருத்தைல் / இல்மனைற்றிலிருந்து Ti , TiO2 வை பிரித்தெடுத்தல்
- தைத்தேனியமானது ருத்தைலாகவும் (TiO2) இல்மனைற்றாகவும் (FeO.TiO2) இலங்கையின் தென்கரைப் பகுதியிலும் புல்மோட்டையிலும் அதிக அளவில் காணப்படுகின்றது.
- TiO2 இன் உருகுநிலையாலும் உயர் உறுதித்தன்மை காரணமாகவும் தைத்தேனியம் உலோகமானது இலகுவில் பிரித்தெடுக்கப்பட முடியாதது ஆகும்.
Ti இன் பிரித்தெடுப்பு
(1) கனியமானது காபன் அல்லது குளோரீனுடன் சேர்க்கப்பட்டு 900 ºC இல்வெப்பப்படுத்தப்படும்.
ருத்தைலுடன் தாக்கம்
TiO2(s) + 2C(s) + 2Cl2(g) → TiCl4(l) + 2CO(g)
இல்மனைற்றுடன் தாக்கம்
2(FeO.TiO2)(s) + 6C(s) + 7Cl2(g) → 2TiCl4 (l) + 2FeCl3(s) + 6CO(g)
(2) பகுதிபடக் காய்ச்சி வடித்தலைப் பயன்படுத்தி FeCl3 உம் ஏனைய கழிவுப் பொருட்களும் அகற்றப்பட்டு தூய திரவ TiCl4 ஆனது வேறாக்கப்படும்.
(3) சோடியம் அல்லது மக்னீசியம் போன்ற வன் தாழ்த்து கருவிகளைப் பயன்படுத்தி ஆகன் வாயு முன்னிலையில் திரவ TiCl4 வைத் தாழ்த்தி உலோக தைத்தேனியம் பிரித்தெடுக்கப்படும்.
(4) மிகை மக்னீசிய உலோகமானது ஐதான HCl அமிலத்துடன் தாக்கமுறும்.எல்லா MgCl2 உம் அகற்றப்பட்ட பின் உலோகத் தைத்தேனியமானது கட்டிகளாகப் பிரித்தெடுக்கப்படும்.
TiCl4 + 2Mg → Ti + 2MgCl2
தைத்தேனியத்தின் பயன்கள்
- காரமற்ற தன்மை , உயர் உறுதி , உயர் உருகுநிலை , துருப்பிடிக்காமை போன்ற பண்புகளால் இது ஆகாய விமான உதிரிப்பாகங்கள் , விண்வெளிக்கலங்களின் உரிதிப்பாகங்கள் , கரு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் ஆகாய விமானங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும்.
TiO2வை பிரித்தெடுப்பு
- வெண்ணிறமுடையது எனினும் அதிலுள்ள மாசாக்கிகள் காரணமாக அது நிறமுடையதாகக் காணப்படும்.
- TiO2 வைப் பெற பின்வரும் முறை பயன்படுத்தப்படும்.
- ருத்தைலானது கற்கரி , குளோரீனுடன் 900 ºC க்கு வெப்பப்படுத்தப்படும்.
TiO2(s) + 2C(s) + 2Cl2(g) → TiCl4(l) + 2CO(g)
- மாசுக்களை அகற்றிய பின் பெறப்பட்ட திரவ TiCl4 ஆனது வளியுடன் சேர்த்து 1200 ºC க்கு வெப்பப்படுத்தப்படும்.
TiCl4(l) + O2(g)→ TiO2(s) + 2Cl2(g)
TiO2 வின் பயன்கள் :- TiO2 வின் உறுதித்தன்மை காரணமாக இது மருந்துக் குளிசைகளின் உறையிடலுக்குப் பயன்படும். பூச்சுக் கைத்தொழிலில் வெள்ளை நிறப்பொருளாகவும் ஒளிஊக்கியாகவும் பயன்படும்.
- மூலகத்தின் வலுவளவு ஓட்டின் இலத்திரன்கள் பிணைப்புக்களை உருவாக்குவதில் பங்குபற்றும்.
- பல் அணுத்தொகுதியின் சக்தியை இழிவளவாக்க அணுக்களிடையே நிலவும் கவர்ச்சி இரசாயனப் பிணைப்பு எனப்படும்.
அயன் பிணைப்பு
- அதிக மின்னெதிர் வித்தியாசம் உள்ள அணுச் சோடியொன்றில் பிணைப்பொன்றை உருவாக்கும் போது ஒரு அணுவின் வலுவளவு இலத்திரன் மற்றைய அணுவொன்றுக்கு வழங்கப்படுவதால் உருவாகும் நேர் , மறை அயன்களுக்கிடையே ஏற்படும் நிலை மின் கவர்ச்சி அயன் பிணைப்பென அழைக்கப்படும்.
- திண்ம நிலையிலுள்ள அயன்கள் நிலைமின் விசைகளினால் கவரப்பட்டு திட்டவட்டமான கோலமொன்றில் அடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அயன் சேர்வையொன்று திண்ம நிலையிலுள்ள போது அயன்களுக்கு அசையுமாற்றல் இல்லை. ஆயினும் துணிக்கைகள் அமைந்துள்ள நிலையிலிருந்தவாறே அதிர்வுறக் கூடியன. இதன்படி அயன் பளிங்கொன்று மின்னை ஊடுகடத்தமாட்டாது.
- திரவ நிலையிலுள்ள அயன்கள் வேறாகிக் காணப்படுகின்றன. உருகிய நிலையில் அயன் சேர்வை
யொன்றுள்ள போது அயன்களுக்கு அசைவு இயக்கம் இருப்பதனால் அங்கு மின்கடத்தப்படும்.
முனைவாக்கம் – கற்றயனின் முனைவாக்கும் வலு , அன்னயனின் முனைவாகுதன்மை
- அயன் சேர்வையில் அடங்கும் அன்னயனினதும் கற்றயனினதும் தன்மைக்கேற்ப கற்றயன் அன்னயனினது இலத்திரன் முகிலை கவரும் (கற்றயனின் முனைவாக்கும் வலு).
- அதே நேரம் கருவைத் தள்ளும். இதனால் அன்னயனை முனைவாக்கும் அல்லது விகாரமடையச் செய்யும். இதனால் அன்னயனின் இலத்திரன் முகிலின் வடிவம் மாற்றமடையும் (அன்னயனின் முனைவாகுதன்மை அல்லது முனைவாக்கம் அடையும் ஆற்றல்).
- முனைவாக்கம் அடையும் அளவு சிறிது எனின் பிணைப்பு அயன் பிணைப்பாகக் காணப்படும். முனைவாக்கம் அடையும் அளவு பெரிது எனின் அன்னயனின் இலத்திரன் முகில் கற்றயனை நோக்கிக் கவரப்பட்டு கணிக்கத்தக்க அளவு பங்கீட்டு வலு இயல்பு காணப்படும்.
கற்றயன்:முனைவாக்கும் வலு உயர்வு :-சிறிய பருமன் , உயர்ந்த ஏற்றம் முனைவாக்கும் வலு உயர்வு அல்லது இரண்டும்
அன்னயன்: விகாரமடைதல் அல்லது முனைவாக்கத்திற்கு உட்படும் வலு உயர்வு பெரிய பருமன் உயர்ந்த ஏற்றம் அல்லது இரண்டும்
பங்கீட்டுவலு பிணைப்புகள்
- பிணைப்பு இலத்திரன் சோடிகளை இரண்டு அணுக்களினாலும் பொதுவாகப் பேணுவதன் மூலம் பங்கீட்டுவலுப் பிணைப்பு உருவாகும். அணு ஒபிற்றல்கள் மேற்பொருந்துவதனால் பங்கீட்டுவலுப் பிணைப்புகள் உருவாகும்.
- பங்கீட்டுவலுப் பிணைப்பினால் இணைக்கப்பட்ட இரு அணுக்களின் மின்னெதிர்த்தன்மை வித்தியாசம் பூச்சியம் எனின் அப்பிணைப்பு முனைவாக்கம் அற்ற பங்கீட்டுவலுப் பிணைப்பு எனப்படும். ஏனைய பங்கீட்டுவலுப் பிணைப்புகள் முனைவாக்கமுடைய பங்கீட்டுவலுப் பிணைப்புகள் எனப்படும்.
- தனித்த இலத்திரன் சோடிகள் உள்ள அணுவொன்றின் ஓபிற்றல் வேறு அணுவின் வலுவளவு ஒட்டின் வெற்று ஓபிற்றலுடன் ஒன்றன் மீதொன்று பொருந்தி பிணைப்பை உருவாக்க முடியும். இது ஈதற் பிணைப்பு எனப்படும். இங்கு சுயாதீன இலத்திரன் சோடியை வழங்கும் பேதத்தை வழங்கும் கூட்டமாகவும் (லூயிஸ் மூலம்) பிணைப்பை உருவாக்க இலத்திரன் பெறும் பேதத்தை வாங்கி கூட்டம் (லூயிஸ் அமிலம்) எனவும் அழைப்பர்.
![2]()
உலோகப் பிணைப்புகள்
- உலோக அணுக்களின் வலுவளவு ஓட்டின் இலத்திரன்கள் அணுவுடன் தளர்வாக பிணைந்துள்ளன. ஆகவே உலோக அணு வலுவளவு ஓட்டின் இலத்திரன்களை வெளியேற்றி நேர் அயனாக நிலவ முனையும். இவ்வாறு உலோக அணுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இலத்திரன் கடலில் அமிழ்ந்துள்ள நேர் அயன்களைக் கொண்ட தொகுதியொன்று உருவாகும்.
- நேர் அயன்களுக்கும் இலத்திரன் கடலுக்குமிடையே மின் நிலையியல் கவர்ச்சி உருவாகி உலோக பிணைப்பு உருவாகும்.
![3]()
- உலோகத்தில் சுயாதீன இலத்திரன்கள் உள்ளபடியால் உலோகம் மின்னை கடத்தும்.
- உலோக அயனின் பருமன் சிறிதான போதும் கூடிய ஏற்றம் உள்ள போதும் உலோக பிணைப்பை உருவாக்குவதில் பங்குபற்றும் இலத்திரன்களின் எண்ணிக்கை அதிகமாகும் போதும் வலிமையான உலோக பிணைப்பு உருவாகும்.
- உலோக பிணைப்பின் வலிமை அதிகரிக்கும் போது உலோகத்தின் உருகுநிலை அதிகமாகவிருக்கும்.
- பங்கீட்டுவலுப் பிணைப்பினால் பிணைக்கப்பட்ட மூலக்கூறுகளுக்குள்ளும் அல்லது அயன் தொகுதிகளுக்கும் அல்லது உலோகச் சாலகத்தினுள் நிலவும் கவர்ச்சியை ஆரம்ப இடைத்தாக்கம் என அழைக்கலாம்.