Phylum Mammalia  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உடல் தலை, கழுத்து, முண்டம், வால் எனப் பிரிக்கப்படும். பல்வேறு வடிவங்கள்.
  • உரோமமுள்ள சுரப்பிகள் கொண்ட தோல்
  • சோடி ஐவிரல் அவயவங்கள்.
  • பல்வடிவம் கொண்ட வால் எப்பருவத்திலாவது காணப்படும்
  • வயிற்றுப்புற வாய். குழிகளிலமைந்த பற்கள் காணப்படும்.
  • செவிச்சோணை, உட்காது நடுக்காது புறக்காது உண்டு.
  • அசையக்கூடிய இமையைக் கொண்ட கண்கள். சிலவற்றில் சிமிட்டு மென்சவ்வு உண்டு. மனிதனில் பதாங்கமடைந்திருக்கும்.
  • மூட்டுமேற்பரப்புக்களில் கசியிழையம் கொண்ட என்பினாலான வன்கூடு காணப்படும்.
  • நான்கு அறைகளிலுள்ள இதயம்.
  • சுவாசப்பையினால் சுவாசம்
  • கழித்தலங்கம் – சிறுநீரகம்
  • பிரதான நைதரசன் கழிவு – யூரியா
  • மாறா உடல் வெப்பநிலையுடைய அங்கிகள்.
  • 12 சோடி மண்டையோட்டு நரம்புகள்
  • குடம்பி நிலை இல்லை.
  • முளையம் தாயினுள் விருத்தியடையும் சூழ் கொண்ட குட்டியீனுபவை அல்லது முட்டையிடுபவை. இளம் நிலைகள் தாயின் முலைச் சுரப்பிகளில் உற்பத்தியாகும் பாலினைக் குடிப்பவை
  • அகக்கருக்கட்டல் காணப்படும்.
  • மனிதன், எலி
 
 

Phylum Aves  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அருவிக்கோட்டு வடிவ உடல் தலை, கழுத்து, முண்டம், வால் எனப் பிரிக்கப்படும்.
  • இறகுகளால் மூடப்பட்ட தோல்
  • சோடி ஐவிரல் அவயவங்கள், முற்புற சோடி சிறகாக திரிபடைந்திருக்கும்.
  • இறகுகள் கொண்ட நீண்ட வால் காணப்படும்
  • பற்களற்ற வாய் அலகாக நீட்டப்பட்டிருக்கும்.
  • உட்காது நடுக்காது புறக்காது உண்டு.
  • இமையைக் கொண்ட பெரிய பக்கத்திற்குரிய கண் சிமிட்டு மென்சவ்வு உண்டு.
  • வளிக்குழிக் கொண்ட பாரம் குறைந்த என்பினாலான வன்கூடு காணப்படும்.
  • நான்கு அறைகளிலுள்ள இதயம்.
  • சுவாசப்பையினால் சுவாசம்
  • கழித்தலங்கம் – சிறுநீரகம்
  • பிரதான நைதரசன் கழிவு – யூரிக்கமிலம்
  • மாறா உடல் வெப்பநிலையுடைய அங்கிகள்.
  • 12 சோடி மண்டையோட்டு நரம்புகள்
  • குடம்பி நிலை இல்லை.
  • முட்டையிடுபவை (ஓட்டினால் சூழப்பட்ட கருவூணுள்ள முட்டை).
  • அகக்கருக்கட்டல் காணப்படும்.
  • கிளி, கழுகு, கோழி, தீக்கோழி
 

ஒளித்தாக்கம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

light-reaction

  • ஒளித்தொகுதி I, ஒளித்தொகுதி II என்பவற்றிலுள்ள உணர்கொம்புச்சிக்கல் ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களால் சூரிய ஒளிச்சக்தி Photon / ஒளிச்சொட்டுகளாக அகத்துறிஞ்சப்படுகின்றன.
  • சிவப்பு, நீலக் கதிர்கள் அதிகளவில் அகத்துறிஞ்சப்படுகின்றன.
  • இரு ஒளித்தொகுதிகளும் ஒரே நேரத்தில் ஒளிச்சக்தியை அகத்துறிஞ்சி தாக்கமையத்திற்குக் கடத்தி குளோரபில் a மூலக்கூறுகள் ஒட்சியேற்றப்படுகின்றது.
  • ஒளித்தொகுதி II தாக்கமைய குளோரபில் a ஒட்சியேற்றப்படுவதால் உயர்சக்தி கொண்ட en கள் வெளியேற்றப்படுகின்றன.
  • இவ் en முதலான en வாங்கியால் (PEA) வாங்கப்பட்டு பின் பல துணையான en  வாங்கிகளுக்கூடாகக் கடத்தப்படும். (துணையான en வாங்கியாக Cytochrome பங்குகொள்கின்றது)
  • இவ்வாறு கடத்தப்படும் போது en சக்திப்படிஇறக்கம் செய்யப்படுகின்றது. இதன் போது காலலாக்கப்படும் சக்தி தையிலகொயிட் மென்சவ்வில் உள்ள ATP Synthase ஊக்குவிப்பால் ATP தொகுப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
  • சூரிய ஒளிச்சக்தி மூலம் அருட்டப்பட்ட en இலிருந்து காலலாப்படும் சக்தியைப் பயன்படுத்தி ATP Synthase ஊக்குவிப்பால் புரோத்திரன் பம்பி மூலம் ATP தொகுக்கப்படும் செயன்முறை ஒளிப்பொஸ்பரலேற்றம் எனப்படும்.
  • இவ்முறையிலான ATP தொகுப்பு ஒளிப்பொஸ்பரலேற்றம் எனப்படும்.
  • இறுதியாக இவ் en ஒளித்தொகுதி I இனால் வாங்கப்படும்.
  • ஒளித்தொகுதி II இன் தாக்கமைய குளோரபில் a இன் en பற்றாக்குறையை / வெற்றிடத்தை நீர் பிரிகையடைந்து வெளியேற்றப்படும் eபிரதியீடு செய்யும்.
  • இதன் போது உருவாகும் O2 பக்கவிளைபொருளாக வெளியேற்றப்படும்.
  • புரோத்திரன் / H+ NADP தாழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும்.
  • ஒளி முன்னிலையில் நீரின் இப்பிரிகை நீரில் ஒளிப்பகுப்பு எனப்படும்.
  • ஒளித்தொகுதி I அருட்டப்படும் உயர் சக்தி en முதலான en வாங்கியினால் வாங்கப்பட்டு பின்பு துணையான en வாங்கிகளினூடாகக் கடத்தப்பட்டு இறுதியில் துணை நொதியம், Nucleotide ஆன NADP யினால் வாங்கப்படும்.
  • இவ் en இடம்மாற்றும் சங்கிலியில் ATP உருவாக்கப்படுவதில்லை.
  • NADP ஒளித்தொகுதி I en களையும் நீரின் ஒளிப்பகுப்பு புரோத்திரன்களையும் கொண்டு NADPH ஆகத் தாழ்த்தப்படும்.
  • இவ்வாறு en ஒளித்தொகுதி II இலிருந்து வெளியேற்றப்பட்டு ஒளித்தொகுதி I ஐ அடைந்து மீண்டும் அருட்டப்பட்டு NADP யினால் வாங்கப்படுதல் வட்டஅடுக்கற்ற ஒளிப்பொஸ்பரலேற்றம் எனப்படும்.
  • இதன் போது ATP உற்பத்தி செய்யப்படும் முறை வட்ட அடுக்கற்ற ஒளிப்பொஸ்பரலேற்றம் ஆகும்.
  • இதன் போது en ‘Z’ வடிவில் / Zig Zag வடிவில் அசைகின்றது.
  • இதற்கு மேலதிகமாக சில தாவரங்கள் வட்ட அடுக்கான ஒளிப்பொஸ்பரலேற்றத்தை மேற்கொள்கின்றன. இதன்போது ஒளித்தொகுதி I இல் உள்ள en அருட்டப்பட்டு மீண்டும் ஒளித்தொகுதி I ஐ அடைகின்றது. en வட்டப்பாதையில் அசைகின்றது. ATP மட்டும் விளைவாக்கப்படுகின்றது. Please Login to view the Question

இருள்நிலைத் தாக்கம்

calvin

  • இருள்நிலைத் தாக்கம் / ஒளியில் தங்கியிராத தாக்கம் பச்சையவுருமணியின் பஞ்சணையில் நிகழும்.
  • இது ஒரு வட்டப்பாதையில் நிகழ்கின்றது. அப்பாதை Melvin Calvin எனும் விஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • எனவே இவ்வட்டம் Calvin வட்டம் எனப்படும்.
  • இக் Calvin வட்டம் 03 நிலைகளைக் கொண்டது.
    1. காபொக்சிலேற்றம் / CO2 பதித்தல்
    2. PGA,PGAL ஆக தாழ்த்தப்படுதல் / PGA,PGAL ஆன மாற்றம்
    3. RUBP புத்துயிர்ப்பு
  • இதற்கு மேலதிகமாக காபோவைதரேற்றும் ஏனைய சேதனச் சேர்வைகளின் தொகுப்பும் நிகழ்கின்றது.

காபொக்சிலேற்றம்

the-calvin-cycle

  • பஞ்சணையில் உள்ள CO2 வாங்கியான 5C சேர்வையான RUBP வளிமண்டல CO2 ஐ வாங்கி ஒரு உறுதியற்ற 6C சேர்வையை உருவாக்கும்.
  • இது உடனடியாக உடைந்து உறுதியான 3C சேர்வையான PGA இன் இரு மூலக்கூறுகளைத் தரும். இத் தாக்கமானது RUBP Carboxylase நொதியத்தினால் / Rubico நொதியத்தினால் ஊக்குவிக்கப்படுகின்றது. இந்நொதியம் பஞ்சணையில் காணப்படுகின்றது.
  • எனவே இவ் CO2 பதித்தலில் முதல் உறுதியான விளைபொருள் 3C சேர்வை PGA ஆகும்.
  • (வளிமண்டல CO2 இலைவாயினூடாக உட்சென்று இலையின் காற்றிடைவெளிகளை அடைந்து இலைநடுவிழையக் கலத்தின் கலச்சுவர், முதலுரு மென்சவ்விற் கூடாக பரவலடைந்து குழியவுருவில் கரைந்து பச்சையவுருமணியின் மென்சவ்வுகளுக்கூடாகப் பரவலடைந்து பஞ்சணையை அடையும்)

PGA இன் தாழ்த்தல் Please Login to view the Question

  • ஒவ்வொரு PGA மூலக்கூறும் 3C PGAL ஆகத் தாழ்த்தப்படும்.
  • இத்தாழ்த்தலுக்கு ஒளித்தாக்கத்தில் விளைவாக்கப்பட்ட முழு NADPH உம் பயன்படுத்தப்படும். அல்லது H வழங்கியாகத் தொழிற்படும்.
  • ஒளித்தாக்கத்தில் விளைவாக்கப்பட்டATP யின் ஒரு பகுதி இத்தாழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும்.

RUBP யின் புத்துயிர்ப்பு

  • PGAL யின் பெரும்பகுதி (5/6) RUBP புத்துயிர்ப்புக்கு உள்ளாகும்.
  • இது பல தொடரான தாக்கங்களின் ஊடாக நிகழும்.
  • இடைநிலையாக RUBP பெறப்படும்.
  • RUBP ஒளித்தாக்கத்தின் மிகுதி ATP ஐப் பயன்படுத்தி RUBP யாக மாற்றப்படும்.
  • ஒரு சிறு பகுதி (1/6) தொடரான தாக்கங்களினூடாக Glucose ஆக மாற்றப்படுகின்றது. பின்பு இவ்வெல்லம் இருசக்கரைட்டு, பல்சக்கரைட்டு, மாப்பொருள், வேறு சேதனச் சேர்வைகளாக மாற்றப்படுகின்றது.
 
 
 
 

ஆவியுயிர்ப்பு
 தாவரங்களின் அங்குரப் பகுதிகளான இலைவாய் பட்டைவாய் புறத்தோலினூடாக நீரானது நீராவியாக இழக்கப் படும் செயன்முறை ஆவியுயிர்ப்பு எனப்படும்.
 எனவே ஆவியுயிர்ப்பு 3 பாதையினூடாக நிகழ்கின்றது.
01. இலைவாய் 02. புறத்தோல்03. பட்டைவாய்
 இலைவாய் ஆவியுயிர்ப்பு இலை மற்றும் பச்சை தண்டுகளிலுள்ள இலைவாயினூடாக நிகழ்கின்றது. 90% நீர் இம்முறை யால் இழக்கப்படுகிறது.
 புறத்தோல் ஆவியுயிர்ப்பு தண்டு இலையின் மேற்றோலுக்கு வெளிப்புறமாக காணப்படும். புறத்தோலினூடாக நிகழ் கின்றது. 10%நீர் இம்முறையால் இழக்கப்படும்.
 பட்டைவாய் ஆவியுயிர்ப்பு துணை வளர்ச்சி அடைந்த தண்டின் தக்கையில் காணப்படும் பட்டை வாயினூடாக நிகழும் மிகவும் குறைந்தளவு நீர் வெளியேறும்.

ஆவியுயிர்ப்பால் தாவரம் அடையும் நன்மை
01. ஆவியுயிர்ப்பினால் தாவரத்திற்கு குளிர்ச்சி ஏற்படுகிறது. தாவர உடலிலிருந்து நீர் (ஆவியாக) நீராவியாக மாறுவதற் கான வெப்பம் எடுக்கப்படுவதால் தாவரத்திற்கு குளிர்ச்சி ஏற்படுகிறது.
02. ஆவியுயிர்ப்பினால் ஆவியுயிர்ப்பு இழுவை பிரயோகிக்கப்பட்டு தாவரத்தினூடான நீரின் அசைவு ஏற்படுத்தப்படுகிறது. மண்ணீர் கரைசலிலிருந்து நீரின் அகத்துறிஞ்சல் பக்க கடத்தல் மேல்நோக்கிய கடத்தல் நிகழ்கிறது. சாற்றேற்றம்
03. வேரினால் நீர் அகத்துறிஞ்சப்படல்
04. அகத்துறிஞ்சப்பட்ட நீர் கனியுப்பை பரவலடைய செய்தல்.

.

ஆவியுயிர்ப்பை பாதிக்கும் காரணிகள் Please Login to view the Question
ஆவியுயிர்ப்பை பாதிக்கும் காரணிகள் பிரதானமாக 2 வகைப்படும்.
01. புறக்காரணிகள் 02. அகக் காரணிகள்

.

புறக்காரணிகள் சூழலுடன் தொடர்புபட்டவை. அவையாவன
01. சூழல் வெப்பநிலை
02. வளியின் ஈரப்பதன்
03. காற்று { காற்றின் வேகம்
04. ஒளிச்செறிவு
05. மண்ணிலிலுள்ள நீரின் அளவு
06.CO2 செறிவு

 

அகக் காரணிகள் தாவரத்துடன் தொடர்புபட்டவை. அவையாவன
01. இலைவாய்களின் எண்ணிக்கை பரம்பல்
02. இலையின் அகக்கட்டமைப்பு
03. தாவரத்திலுள்ள நீரினளவு
மிகையாக நீர் வெளியேற்றப்பட்டால் அதாவது வெப்பம் உயர்வாக உள்ள போது தாவரத்தில் வாடல் or இறப்பு ஏற்பட சந்தர்ப்பம் உண்டு.

புறக்காரணிகள்
01. சூழல் வெப்பநிலை
சூழல் வெப்பநிலை அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். சூழல் வெப்பநிலை குறைவடையும் போது ஆவியுயிப்பு வீதம் குறைவடையும்.
சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போது
i. இலையை அண்டிய பகுதிகளில் ஈரப்பதன் குறைகிறது. இதனால் நீரழுத்தம் இலையை விட குறைவடைவதால் நீர் அழுத்ததப்படித்திறனுக்கும் ஏற்ப நீர் வளிமண்டலத்தை அடையும்.
வெப்பநிலை அதிகம் எனின்
ii. நீர் நீராவியாகும் வீதம் அதிகரிக்கும் – ஃ ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கப்படும்.

.
02. வளிமண்டல ஈரப்பதன் வளிமண்டல ஈரப்பதன் ஆவியுயிர்ப்பு வளிமண்டல ஈரப்பதன் அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும். வளிமண்டல ஈரப்பதன் குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
ஈரப்பதன் அதிகரிக்கும் போது
இலைக்கும் இலையை அண்டிய வளிமண்டலத்துக்கும் இடையில் நீழுத்த படித்திறன் பேணப்படமாட்டாது. காரணம் அவ்வளியில் நீராவியினவாவு அதிகமாக காணப்படும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் குறைவாக காணப்படும்.
ஈரப்பதன் குறைவடையும் போது இலையை அண்டிய பகுதிகளில் நீராவியின் அளவு குறைவடையும். நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப இலையிலிருந்து வளிமண்டலத்துக்கு நீர் ஆவியாக அசையும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் அதிகமாக காணப்படும்.

.
03. காற்று காற்றின் வேகம் ஆவியுயிர்ப்பு
காற்றின் வேகம் அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கப்படும். காற்றின் வேகம் குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
காற்றின் வேகம் அதிகரிக்கப்படும் போது இலையை அண்டிய பகுதிகளிலுள்ள நீராவி அதிகமாக அகற்றப்படுவதால் நீரினழுத்தம் குறைவடைந்து நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப நீர் இலையிலிருந்து ஆவியாகும் வீதம் அதிகரிக்கும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
காற்றின் வேகம் குறைவடையும் போது இலையை அண்டிய பகுதிகளிலுள்ள நீராவிகளை அகற்றும் வீதம் குறைவாக காணப்படுவதால் நீரழுத்தப் படித்திறன் பேணப்பட்டு ஆவியாகும் அளவு குறையும். ஃ ஆவியுயிர்ப்பு வீதம் குறை வடையும்.

.
04. ஒளிச் செறிவு
ஒளிச்செறிவு அதிகரிக்கும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். ஒளிச்செறிவு குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு குறைவடையும்

 

.ஒளிச்செறிவு அதிகரிக்கப்படும் பொது இலைவாய்கள் திறக்கும் வீதம் அதிகரிப்பதால் ஆவியுயிர்ப்பு வீதம் அதி கரிக்கும்.
ஒளிச்செறிவு குறைவடையும் போது இலைவாய்கள் திறக்கும் வீதம் குறைவடைவதால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.

.
05. மண்ணீரினளவு

.
மண்ணீரினளவு அதிகரிக்கப்படும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
மண்ணீரினளவு குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
மண்ணீரினளவு அதிகரிக்கப்படும் போது தாவரம் அகத்துறிஞ்சல் நீரினளவு அதிகரிப்பதால் ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
மண்ணீரினளவு குறைவடையும் போது தாவரம் உள்ளெடுக்கும்.
நீரினளவு குறைவடைவதால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.

.
06. CO2 செறிவு

.
CO2  செறிவு அதிகரித்தால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
CO2 செறிவு குறைவடைந்தால் ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
CO2  செறிவு அதிகரிக்கப்படும். போது இலைவாயினூடு உள்ளெடுக்கப்படும் CO2  இiளைவு. அதிகரிப்பதால் இலை யில் காபோனிக் அமிலத்திளைவு அதிகரிப்பதால் pர் குறையும். குறைந்த pH வெல்லக் கரைசலை மாப்பொருளாக மாற்றும். ஆகவே காவற்கலத்தின் கரையழுத்தம் குறைவடைவதால் நீரழுத்தம் அதிகரிக்கும். நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப காவற் கலத்திலிருந்து நீர் மேற்றோல் கலத்தை நோக்கி அசைவதால் காவற்கலத்தின் வீக்க அமுக்கம் குறை வடைந்து இலைவாய் மூடப்படும். இதனால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.

.
CO2  செறிவு குறைவடையும் போது இலைவாயினூடு உள்ளெடுக்கப்படும்.
CO2  இனளவு குறைவடையும். அமிலத்தன்மை குறைவடையும். இதனால் அதிகரிக்கும்.

.அதிகரித்த pH மாப் பொருளை வெல்லக் கரைசலாக மாற்றும். ஃ அங்கு கரையழுத்தம் அதிகரித்த நீரழுத்தம் குறைவடைவதால் நீறழுத்த படித்திறனுக்கு ஏற்ப மேற்றோலிலிருந்து காவற்கலத்தை நோக்கி நீர் அசைய வீக்க அழுக்கம் அதிகரித்து இலைவாய் திறக்கும். இதனால் ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும்.
அகக் காரணிகள் Please Login to view the Question

.
01. இலைவாய்களின் எண்ணிக்கை பரவல்
இலைகளில் இலைவாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். எண்ணிக்கை குறைவடையும் போது ஆவியுயிர்ப்பு வீதம் குறையும்.
இலைவாய்கள் வளியுடன் நேரடித் தொடர்புடன் பரம்பியிருக்கும் போது ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கும். வளியுடன் நேரடித் தொடர்பின்றி குழிகளில் இலைவாய்கள் அமைந்து நீராவி. தேக்கமடைவதால் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடையும்.
eg : அலரி – (குழிகளிலமைந்த இலைவாய்)
இருவித்திலை இலைகளில் மேற்புறத்தை விட கீழ்ப்புறமாக மேற்பரப்பில் இலைவாய்கள் அதிகம் காணப்படும். ஒருவித்திலை இலைகளில் இருபுறங்களிலும் சமமாக காணப்படும். ஆனால் விதிவிலக்காக மேற்புறத்தில் அதிகமான எண்ணிக்கையான இலைவாய்கள் காணப்படுகின்றன.

.
02. இலையின் அகக்கட்டமைப்பு
சில இலைகளில் காணப்படும் விசேட கட்டமைப்புகள் ஆவியுயிர்ப்பு வீதத்தை குறைக்கின்றன.
நுப: இலையில் மேற்றோலில் மயிர்கள் முட்கள் காணப்படல்.
ஊசி போன்ற இலைகள்
தடித்த புறத்தோல்

.
03. தாவரத்திலுள்ள நீரினளவு Please Login to view the Question
தாவரத்திலுள்ள நீரினளவு அதிகரிக்க ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கலாம்.

தாவரங்களில் ஆவியுயிர்ப்பை குறைப்பதற்காக காண்பிக்கும் கட்டமைப்பு சிறப்பம்சங்கள்….
01. குழிவுகளிலமைந்த இலைவாய்
02. தடித்த புறத்தோல்
03. பலபடையிலமைந்த மேற்றோல்
04. மேற்றோல் மயிர்கள் முட்கள் காணப்படும்
05. இலைப்பரப்பு குறைக்கப்பட்டு ஊசி போன்ற இலைகள் சிறிய இலைகள் காணப்படல்
06. இலைகள் உதிர்தல்
07. இலைகள் சுருளுதல்
08. இலைகள் சளியம் பால் கொண்டிருத்தல்

 

 

Phylum Reptilia  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உடல் தலை, கழுத்து, முண்டம், வால் எனப்பிரிக்கப்படும்.
  • சுரப்பிகளற்ற கொம்புரு தட்டுக்கள், கொம்புரு செதில்கள் கொண்ட தோல்
  • சோடிக்குரிய ஐவிரல் அவயவங்கள்
  • செதிலால் மூடப்பட்ட குதப்பின் வால் காணப்படும்
  • அகன்ற வாயின் ஓரங்களில் பற்கள் காணப்படும். சிலவற்றில் குழிகளிலமைந்த பற்கள் காணப்படும்
  • உட்காது நடுக்காது புறக்காது உண்டு.
  • இமையைக் கொண்ட பெரிய பக்கத்திற்குரிய கண் சிமிட்டு மென்சவ்வு உண்டு.
  • முழுமையாக என்பினாலான வன்கூடு காணப்படும்.
  • மூன்று அறைகளிலுள்ள இதயம்.
  • சுவாசப்பையினால் சுவாசம்
  • கழித்தலங்கம் – சிறுநீரகம்
  • பிரதான நைதரசன் கழிவு – யூரிக்கமிலம்
  • மாறும் வெப்பநிலையுடைய அங்கிகள்.
  • 12 சோடி மண்டையோட்டு நரம்புகள்
  • குடம்பி நிலை இல்லை.
  • முட்டையிடுபவை (ஓட்டினால் சூழப்பட்ட கருவூணுள்ள முட்டை), சூற்பிள்ளையீனுபவை.
  • அகக்கருக்கட்டல் காணப்படும்.
  • பல்லி, பாம்பு, ஆமை