























சனத்தொகை வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்
- சனத்தொகையின் இயற்கை வளர்ச்சி வீதம்
- தேறிய குடிபெயர்ப்பு வீதம்
சிசு மரண வீதம்
ஒரு நாட்டில் ஒரு வருடத்தில் நிகழ்ந்த ஒரு வயதுக்குட்பட்ட சிசு மரண எண்ணிக்கையை மொத்த உயிருள்ள பிறப்பில் 1000 இல் கூறுவது.
ஆயுள் எதிர்பார்க்கை
நாடொன்றினது இறப்பு முறைகளில் மாற்றமற்ற நிலையில் உயிருடன் பிறக்கும் ஒரு குழந்தை எத்தனை வருடங்கள் உயிர் வாழும் என்னும் எதிர்பார்ப்பு.
பொருளாதார ரீதியில் செயற்றிறனற்றோர்
15 வயதும் 15 வயதுக்கு மேற்பட்டதுமான ஊழிய வயதுப் பிரிவினரில் தொழிலில் ஈடுபடாத / ஈடுபட விரும்பாத சனத்தொகையினர்.
- முழு நேர மாணவர்கள்
- அங்கவீனர்கள், நோயாளிகள்
- ஓய்வு பெற்றோர்
பொருளாதார ரீதியில் செயற்றிறனுடையோர்
ஒரு நாட்டின் ஊழிய வயதுப் பிரிவில் அடங்கும் வேலை செய்வோர், வேலை தேடுவோர் ஆகும்.
- தொழிலாளர்
- தொழில் தருணர்
- விடுமுறையில் இருப்போர்
- சம்பளம் பெறாத குடும்ப உழைப்பாளர்
தங்கியுள்ளோர் வீதம்
தங்கியுள்ளோர் வீதம்=![untitled-4]()
இலங்கையில் சனத்தொகை அடர்த்தி
- கூடிய மாவட்டம் – கொழும்பு
- குறைந்த மாவட்டம் – முல்லைத் தீவு
அரசாங்கத்தின் பணிகள்
- அரசின் நடைமுறைக் கரமாகத் தொழிற்பட்டு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரசாங்கம் எந்தவொரு நாட்டிற்கும் அவசியமானதாகும்.
- அந்தவகையில் அரசாங்கத்தின் பணிகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
- வெளிவாரியான பணிகள்
- உள்வாரியான பணிகள்
வெளிவாரியான பணிகள்
- தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல். இது மூன்று பணிகளைக் கொண்டது.
- ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல்
- அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்
- அரசின் பௌதீக இருப்பைப் பாதுகாத்தல்.
- தேசிய பொருளாதாரத்தை விருத்தி செய்தல்.
- தேசிய பொதுநலனை மேம்படுத்தல்.
- தேசிய கௌரவத்தைப் பாதுகாத்தல்.
- தேசிய அரசியல் கருத்தியலைப் பாதுகாத்தல்.
உள்வாரியான பணிகள்
1. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல்.
2. பொருளாதார முகாமைத்துவம்
- பொருளாதாரத்தின் விருத்தி நிலைகளில் கவனம் செலுத்துதல்.
- பொருளாதார விருத்தியை மேம்படுத்தல்.
- பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டுப்படுத்தல்
- அரச தொழில்களைத் தாபித்தலும் கொண்டு நடாத்துலும்
3. சமூகப் பொதுநலன்
- முதியோர், அங்கவீனர்கள், தொழிலற்றவர்கள் மற்றும் நாதியற்றவர்களுக்கு உதவிபுரிதல்.
- சுகாதார மற்றும் சுகநலச் சேவைகளை நடாத்துதல்.
- வீடமைப்பு வீடு நிர்மாணிப்பதற்கு உதவி புரிதல்.
- கீழ்க்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்.
- தொழில் வாய்ப்புக்களைக் கூட்டுதலும், தொழிற் பயிற்சிகளை நடாத்துதலும்
- இராணுவத்திலிருந்து இளைப்பாறிய மற்றும் அநாதை போன்ற விசேட பகுதியினருக்கு உதவுதல்.
4. சமூக முகாமைத்துவம்
- மோதல் முகாமைத்துவமும் மோதல் தீர்வும்
- தொழிலாளர் பிணக்குகளைத் தீர்த்தல்.
- அனர்த்த மற்றும் நிவாரணச் சேவைகளை மேற்கொள்ளல்.
5. சூழல் முகாமைத்துவம்
- இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.
- பொதுப் பூங்காக்களையும் நீரையும் வழங்குதல்.
- சுத்தமான காற்றையும் நீரையும் வழங்குதல்.
- பாதகமானதும் கதிர் இயக்கம் உடையதுமான பொருள்களைக் கட்டுப்படுத்தலும் அழித்தலும்
6. கல்வி மற்றும் அடையாளப் பணிகள்
- கல்வியை வழங்குதல்.
- கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்தலும் விருத்தி செய்தலும்.
- தேசிய சின்னங்களை பேணுதலும் அவற்றின் கௌரவத்தைப் பாதுகாத்தலும்.







- குறித்தவொரு உற்பத்திச் செயற்பாட்டிற்காக இழக்கப்படுகின்ற எல்லா பொருளாதார வளங்களின் அமையச்செலவும் உற்பத்திச் செலவு ஆகும்.
- பொருளியலில் உற்பத்தி செலவு என்றடிப்படையில் அமையச் செலவு கருதப்படுவதுடன் அதனுள் நேர்செலவும், நேரில் செலவும் உள்ளடக்கப்படும்.
- கணக்கியலில் நேர்செலவு மட்டும் கவனத்திற் கொள்ளப்படும்.
- நேரில் செலவு என்பது உற்பத்தி நிறுவனம்/ உற்பத்தியாளருக்குச் சொந்தமான உற்பத்தி வளங்களை தனது உற்பத்தி செயற்பாட்டிற்குப் பயன்படுத்துவதால் இழக்கப்படுகின்ற உத்தம காரணி வருமானமாகும்.
சாதாரண இலாபம்
- முயற்சியாளர் ஒருவர் உற்பத்திச் செயற்பாட்டில் நிலைத்திருப்பதற்காக அவர் எதிர்பார்க்கும் குறைந்தளவு இலாபம் சாதாரண இலாபம்.
- அவ்வாறே முயற்சியாளரின் உற்பத்தி காரணியின் அமையச்செலவு எனும் வகையில் சாதாரண இலாபம் கருதப்படும்.
தனியார் செலவு-வெளிவாரிச் செலவு
- தனியார் செலவிற்கும் வெளிவாரி செலவிற்குமிடையே வேறுபாடு காணப்படும்.
- உற்பத்தி செயல்முறைக்குப் பயன்படுத்தும் உள்ளீடுகளுக்காக உற்பத்தியாளர் தானே சுயமாக மேற்கொள்ளும் செலவு தனியார் செலவு.
- உற்பத்தி செயற்பாட்டின் காரணமாக வெளிப் பிரிவினர் ஏற்க வேண்டிய செலவு வெளிவாரிச் செலவு.












வறுமை
மனிதன் உயிர் வாழ தேவையான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகளை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஆகும்.
இது 2 வகை :
- முழு வறுமை
- சார்பு வறுமை
வறுமையின் பிரதான தோற்றப்பாடு
- வருமான வறுமை
- நுகர்வு வறுமை
வறுமையை அளவிடப் பயன்படும் குறிகாட்டிகள்
- வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம்
- வாழ்க்கைத் தரம்
- பாடசாலை கல்வி பெற்ற வருடங்கள்
- வறுமை கோட்டின் கீழ் உள்ளோர் வீதம்
- ஆயுள் எதிர்பார்க்கை, சிசு மரண வீதம்
- பௌதீக வாழ்க்கைப் பண்புச் சுட்டி
- மனித வள அபிவிருத்திச் சுட்டி
- மனித வறுமைச் சுட்டி
- பல்பரிமாண வறுமைச் சுட்டி
மானிட வறுமை
சுதந்திரம், தன்மானம், மற்றவர்களின் கவனிப்பு, தேக ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரத்தையும் மானிட அபிவிருத்தி வாய்ப்பு, தெளிவினையும் இழந்த நிலைமை ஆகும்.
வறுமையை மேலும் இரண்டு வகைப்படுத்தலாம்.
- கிராமத்து வறுமை
- நகரத்து வறுமை
சர்வதேச வறுமைக் கோடு
- இரு வகையில் அளவிடப்படும்.
- இது உலக வங்கியால் உருவாக்கப்பட்டது.
- வளர்முக நாடுகளுக்கு
( 1.25 அமெரிக்க டொலர் நாளாந்த வருமானம்)
- வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு
( 2 அமெரிக்க டொலர் நாளாந்த வருமானம்)
இலங்கையின் தேசிய வறுமைக் கோடு
போசனையான உணவை நுகரும் மாதாந்த செலவும் உணவல்லா அத்தியாசிய நுகர்வு பொருட்களை பெற ஏற்படும் மாதாந்த செலவும் கருத்தில் கொள்ளப்படும்.
வறுமைக்கு சார்பான பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கையில் மேற்கொள்ளும் செயற்றிட்டம்
- 50% சமுர்த்தி கொடுப்பனவு
- சிறு முயற்சியாளர் அபிவிருத்தித் திட்டம்
- கிராமிய கீழ் கட்டுமானம்
- பிரதேச அபிவிருத்தித் திட்டம்
- விவசாய அபிவிருத்தித் திட்டம்
- சிறிய நடுத்தர முயற்சி திட்டம்
- கிராமங்களில் தொழினுட்ப வள நிலையம், பல்கலைக்கழக உருவாக்கம்
தேசியக் கணக்குத் தரவுகளைத் தயாரிக்கும்போது காணப்படும் வரையறைகள்
- சந்தைப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்கள்.
- சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள்.
- முறைசாரா பொருளாதார நடவடிக்கைகள்.
- உற்பத்தியின் தர விருத்தி
- சூழலுக்கான தாக்கம் கவனத்தில் எடுக்கப்படாமை.
- அரச கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி பூரணமாகத் தவிர்க்கப்படல்.
சந்தைப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்கள்
- வீட்டுத்துறையில் இல்லத்தரசிகளால் செய்யப்படும் சேவைகள்
- நுகர்வுப் பொருளாதார நடவடிக்கை
தேசியக் கணக்குகள் குறைத்துக் கணிப்பீடு செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்கள்
- சந்தைப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களின் போது
- சட்ட விரோத நடவடிக்கைகளின் போது
- முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளின் போது
முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளின் பண்புகள்
- முறையாக ஆவணப்படுத்தப்படாமை.
- குடும்ப உழைப்பில் தங்கியிருத்தல்.
- வரி செலுத்தல், சமூக பாதுகாப்பு முறைகளுக்கான பங்களிப்புக்களில் இருந்து விடுபட்டு இருத்தல்.
- அரசின் பல்வேறு சட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்குவதற்கு விருப்பமின்மை.
தேசியக் கணக்குகளை அளவிடும்போது பண ரீதியாக மட்டும் கருத்திற்கொள்ளும் அதேவேளை தரரீதியாகக் கவனஞ் செலுத்தப்படாத நிலைமையுள்ளது.
உற்பத்திச் செயற்பாட்டில் பொருட்கள் சேவைகளின் உற்பத்திக்குச் சமாந்தரமாக சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் சூழல் மாசடைதலாகும்.
இதனால் சமூகநலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் தேசியக் கணக்குகளால் வெளிப்படுத்தப்படாமை காரணமாக தேசியக் கணக்குகள் மிகையாக கணிப்பீடு செய்யப்படுகின்றன.
உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கவனத்திற் கொண்டு தேசியக் கணக்குகளைத் தயாரிப்பது சூழல் தேசியக் கணக்கீடு.
தெய்வீக உரிமைக்கோட்பாடு: 



- “அரசு என்ற தாபனம் கடவுளால் உருவாக்கப்பட்டது” என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டே இக்கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
- சமூகத்தில் மதம் முக்கியம் பெற்றிருந்த காலத்தில் மதத்துடன் அரசியலை இணைத்து அரசின் தோற்றம், அதன்இயல்பு என்பன குறித்து விளக்கம் அளித்த கோட்பாடாக தெய்வீக வழியுரிமை கோட்பாடு விளங்குகின்றது.
- கி.பி 5ம் நூற்றாண்டு முதல் கி.பி 15ம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் செல்வாக்குச் செலுத்திய ஒரு கோட்பாடாகும்.
- அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் இறைவனின் பிரதிநிதிகளென்றும் இறைவனிடமிருந்து அதிகாரங்களைப் பெற்றே ஆட்சியாளர்கள் சட்டங்களை உருவாக்குகின்றார்கள் என்றும் கூறுகின்றது.
- விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அவருக்கு கீழ்படிய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.
- இக்கோட்பாட்டை வலியுறுத்தியோர் :
- ஸ்வருட் மன்னன்
- 14ம் லூயி
- 1ம் ஜேம்ஸ் மன்னன்
- சேர் றொபேட் பில்மர்
- றிச்சர்ட் மொண்டேகு
- ஜோ கொவேல்
- றொகர் மன்வறிங்
வீழ்ச்சி
- மதத்தின் தலையீட்டினை அரசியலில் கண்டிக்கும் மாக்கியவல்லியின் சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கியதை தொடர்ந்து தனது செல்வாக்கினை இழக்கலாயிற்று.
- சமுதாய ஒப்பந்தத்தின் கோட்பாடு, மக்களாட்சியை வலியுறுத்தும் பிரான்ஸியப் புரட்சி என்பன இக்கோட்பாட்டை வலுவிழக்கச் செய்தன.
நன்மைகள்
- ஆட்சியினை ஒழுங்காக நடாத்துவதற்கு மக்களின் கீழ்ப்படிவு அவசியமானதொன்றாகும். இக்கோட்பாடு நம்பிக்கையின் அடிப்படையிலான மக்களின் கீழ்ப்படிவினை பெறுவதற்கு உதவியது.
- சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு உதவியது.
- கோட்பாடு தொடங்கிய காலகட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியது.
- சமுதாயத்தில் ஐக்கியத்தை வலியுறுத்த உதவியிருந்தது.
குறைபாடுகள்
- மக்களின் சம்மதத்தின் அடிப்படையிலேயே அரசு தோற்றம் பெற்றது என்ற மக்களாட்சி கோட்பாட்டிற்கு இக்கோட்பாடு தடையாக உள்ளது.
- இக்கோட்பாடு மக்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுவதாக அமைகின்றது.
- இக்கோட்பாட்டிற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.
தாய்வழிக்கோட்பாடு
- ஆதிகால சமுதாய அமைப்பில் பெண்கள் பெற்றிருந்த மேலாண்மையும் அதிகாரத்தினாலேயேயும் அரசு என்ற அமைப்பு தோற்றம் பெற்றது.
- அக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்:
- மக்லெக் (பூர்வீக சமுதாயம் என்ற நூல் மூலம்)
- மேர்கன் (புராதன வரலாற்று கல்வி என்ற நூல்மூலம் )
- ஜெங்ஸ் ( அரசியல் வரலாறு என்ற நூல் மூலம்)
- இக்கோட்பாடானது அவுஸ்திரேலியாவில் மட்டுமின்றி வடஅமெரிக்கா, சுமாத்ரா போன்ற நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.
- இக்கோட்பாட்டிற்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் இல்லை.
தந்தைவழிக் கோட்பாடு
- இக்கோட்பாட்டு ஆரம்பகால சமுதாய அமைப்பில் ஆண்கள் பெற்றிருந்த மேலாண்மையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற அமைப்பு அரசு என்பதை வலியுறுத்துகின்றது.
- இக்கோட்பாடு தொடர்பாக சேர் ஹென்றி மெயின் தான் எழுதிய புராதன சட்டம், ஆரம்பகால வரலாற்று நிறுவனங்கள் போன்ற நூல்களில் கருத்துக்களை முன்வைக்கிறார்.
- புராதன ஜேர்மனி, இந்துகலாசார சட்டங்கள், வாழ்க்கைமுறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது கோட்பாட்டை முன்வைத்தார்.
- இதனடிப்படையில் ஆரம்பகால சமுதாய அமைப்பில் தலைமைத்துவம், அதிகாரம் என்பன ஆண்களிடமே இருந்ததாகக் கூறப்படுகிறது.
- இக்கோட்பாட்டிற்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் இல்லை.
சமூக ஒப்பந்தக் கோட்பாடு 




- மக்கள் சம்மதத்தின் அடிப்படையில் அரசு தோற்றுவிக்கப்பட்டது என்பதை விளக்க முற்படும் கோட்பாடே சமூக ஒப்பந்தக் கோட்பாடாகும்.
- மன்னனுக்காகவே மக்கள் என்ற தெய்வீக உரிமை கோட்பாட்டின் குறைபாடுகள் காரணமாகவே இக்கோட்பாடு தோற்றம் பெற்றது.
- அரசு அற்றிருந்த ஓர் காலத்தில் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது என இக்கோட்பாடு வலியுறுத்துகின்றது.
- பிளேட்டோ தான் எழுதிய ‘கிரிட்டோ’ ‘குடியரசு’ ஆகிய நூல்களில் இவ்வொப்பந்தம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
- கௌடில்யர் அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
- இக்கோட்பாட்டை அபிவிருத்தி செய்தவர்கள்:
- அல்தூசியஸ்
- குறோசியஸ்
- சாமுவல் புவண்டோவ்
- முழுமையான பரிணாமத்தை கொடுத்தவர்கள்
- ஜோன்லொக்
- தோமஸ் ஹொப்ஸ்
- ஜீன் ஜக்கியூஸ் ரூஸோ
- தோமஸ் ஹொப்ஸ்
- இவர் இங்கிலாந்தில் உள்நாட்டு போர் ஏற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். போரினால் ஏற்பட்ட குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைப்பதற்கு ஒரு அதிகாரம் வாய்ந்த மன்னன் இருத்தல் வேண்டும் என்ற வகையில் தன்னுடைய கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தார்.
- 1651 ல் தான் எழுதிய லெவியதான் என்ற நூலினூடாக தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.
ஹொப்ஸின் இயற்கை நிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?
- இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் வெறும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவர்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- இக்காலத்தில் மனிதர் காட்டுமிரண்டிகளாகவும், தன்னலவாதிகளாகவும், நல்லது கெட்டது என்பதை ஆராய தகைமை அற்றவர்களாகவும் வாழ்ந்தனர்.
- இதனால் அவனது வாழ்க்கை குறுகியதாகவும் மரணபயம் நிறைந்ததாகவும் தனிமையானதாகவும் மொத்தத்தில் அபாயகரமானதாகவும் காணப்பட்டது.
ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?
- ஒப்பந்தம் மக்களுக்கிடையே தான் நடைபெறுகிறது மக்கள் தங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்து தங்கள் உரிமைகள் அனைத்தினையும் தனி மனிதனிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த தனிமனிதனே அரசனாவான்.
ஒப்பந்த உள்ளடக்கம் கட்டுப்பாடு
- ஒப்பந்த கட்டுப்பாடுகள் எதுவும் தனிமனிதனுக்கு கிடையாது. இந்த தனிமனிதனே இறைமையாளன் ஆவான். அவனுடைய ஆணைகளே சட்டங்களாகும். மக்கள் மன்னனுக்கெதிராக கிளர்ச்சி செய்யவும் கூடாது. அவ்வாறு கிளர்ச்சி செய்தால் ஒப்பந்தம் முறிந்துவிடும். ஒப்பந்தம் முறிந்தால் மக்கள் மீண்டும் கொடூரமான இயற்கை நிலைக்கு செல்ல வேண்டி ஏற்படும்.
- இது வரம்பற்ற முடியாட்சியை சிபாரிசு செய்கிறது.
ஜோன்லொக்
- மன்னனிடம் உள்ள அதிகாரங்களை கட்டுப்படுத்தப்பட்டு அதன் ஒரு பகுதி பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை எழுச்சியடைந்த காலத்தில் வாழ்ந்தவராவார்.
- 1960ல் தான் எழுதிய “சிவில் அரசாங்கத்தினுடைய இரண்டு உடன்படிக்கைகள்” என்ற நூலினூடாகத் தனது கருத்தினை முன்வைத்தார்.
- மன்னன் மக்களுக்குத்தான் எனவே மக்களுக்குரிய விருப்பத்துக்கு எதிராக அவனது அதிகாரம் இருக்கக்கூடாது என்பதே இவரது கருத்தாகும்.
ஜோன்லொக்கின் இயற்கை நிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?
- மனிதன் அமைதியும் நல்லொழுக்கமும் உடையவனாகவும் பொதுநலனை நோக்கமாகக் கொண்டவனாகவும் வாழ்ந்தான்.
ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?
- லொக்கின் கருத்துப்படி இரு ஒப்பந்தங்கள் நடைபெற்றது.
- சமூக ஒப்பந்தம் – மக்களுக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தம்
- அரசாங்க ஒப்பந்தம் – அரசனுடன் மக்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் மக்கள் தங்களது உயிர், உடைமை, உரிமைகளைப் பாதுகாக்க ஓர் தலைவனைத் தெரிந்தெடுத்து அவனுடன் மேற்கொண்ட ஒப்பந்தமே அரசாங்க ஒப்பந்தம்.
ஒப்பந்த உள்ளடக்கமும் கட்டுபாடும்?
- மக்கள் தங்களது எல்லா உரிமைகளையும் இழக்கவில்லை. அரசன் தவறான ஆட்சி செய்வானாயின் அவனை நீக்கி இன்னோர் அரசினைத் தெரிவு செய்கின்ற உரிமை மக்களுண்டு.
- இறைமையின் ஒரு பகுதி மக்களிடமும் இன்னோர் பகுதி அரசனிடமும் வழங்கப்பட்டிருந்தது.
- இது வரம்புடைய முடியாட்சியை சிபாரிசு செய்கிறது.
ரூஸோ
- 1762ல் தான் எழுதிய ‘சமூக ஒப்பந்தம்’ என்ற நூலினூடாக தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.
- ஐரோப்பாவில் எழுச்சியடைந்த முற்போக்கு சிந்தனைகளை உள்வாங்கி சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்ற மக்களாட்சி பண்புகளின் அடிப்படையில் தனது கருத்துக்களை ரூஸோ முன்வைக்கிறார்.
ரூஸோவின் இயற்கைநிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?
- இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் முழுத்தனி உரிமையில் வாழ்ந்தார்கள் என்றும் எல்லா உரிமைகளையும் அனுபவித்தார்கள். இதனால் அங்கு சமத்துவம் அதன் வழி சமாதானமும் நிலவியது.
- பிற்பட்ட காலத்தில் சமுதாயத்தின் வளர்ச்சியினால் பொருளியல் ரீதியாக பொருட்கள், சேவைகள் என்பவற்றின் சேமிப்பு தோன்றிய போது அமைதிக்குப் பாதிப்பான நிலை தோற்றம் பெற்றது.
- இவ்வமைதியின்மை பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்து கொள்ள மக்கள் தமக்கிடையே ஒப்பந்தம் செய்து அரசைத் தோற்றுவித்தனர்.
ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?
- ஒப்பந்தம் மக்களுக்கிடையிலேயே நடைபெற்றுள்ளது. இவ்வொப்பந்தத்தின் மூலம் மக்கள் தமது உரிமைகள், உடைமைகள், சுதந்திரம் அனைத்தினையும் பொது விருப்பு என்கின்ற அரசியற் சமூகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒப்பந்த உள்ளடக்கமும் கட்டுப்பாடும்
- தமது சொந்த விருப்பு வெறுப்பு எதுவாக இருப்பினும் அனைவரும் பொது விருப்புக்கு கட்டுப்பட வேண்டும்.
- மக்கள் எல்லோரும் அதிகாரத்தில் பங்குபற்றி தங்களுக்கான தீர்மானங்களைத் தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். தீர்மானங்களை எடுக்கும் போது பெரும்பாண்மை முடிவுக்கு கட்டுப்படுவது அவர்களது கடமையாகும்.
- இதன்மூலம் மக்காளாட்சி நிலைநிறுத்தப்படுகிறது.
சமூக ஒப்பந்தக் கொள்கையின் நன்மைகள்
- மக்களின் சம்மதத்தின் பேரில் அரசு உருவாக்கப்பட்டது என்ற சிந்தனையை முதன்முதலாக முன்வைத்த கோட்பாடாக இது விளங்கியது.
- மூவரும் முன்வைத்த வெவ்வேறு கருத்துக்களினால் அவர்கள் சந்தித்த வெவ்வேறு காலச் சூழ்நிலையை அறியக் கூடியதாக உள்ளது.
- வரம்பற்றமுடியாட்சி, வரம்புடைய முடியாட்சி, மக்களாட்சி என்பவற்றின் வேறுபாடுகளை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
- அரசுக்கு கீழ்படிதல் என்ற உணர்வையும் இக்கொள்கை வளர்க்கின்றது.
- மக்களின் சம்மதத்தின் அடிப்படையில் அரசு உருவாக்கப்பட்டது என்பதை மூவரும் ஏற்றுக் கொண்டமை கோட்பாட்டின் மையக்கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது.
சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் குறைபாடுகள்
- மூவரும் காலச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே தமது கருத்துக்களை கூறியிருந்தனர். இதனால் அவர்கள் கூறிய காலத்துக்கு இது பொருந்துமே தவிர எக்காலத்துக்கும் பொருந்தும் எனக் கூறமுடியாது.
- இவர்கள் கூறிய இயற்கை நிலைச் சமுதாயம் பற்றிய கருத்துக்களுக்கு சான்றாதாரங்கள் போதியளவு முன்வைக்கப்படவில்லை.
- மூவரும் முதன்மைப்படுத்திய விடயங்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணம் ஹொப்ஸ் அரசை முதன்மைப்படுத்தினார், லொக் அரசின் அதிகாரங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என முதன்மைப்படுத்தினார், ரூஸோ மக்களின் பொதுவிருப்பை முதன்மைப்படுத்தினார்.
- பொதுவிருப்பம் என்பது எப்போதும் நியாயமானதாக இருக்கும் என கூறமுடியாது. பெரும்பான்மையோரின் விருப்பம் சிறுபான்மை குழுக்களை பாதிப்பதாகவும் அமையலாம்.
பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு 



- அரசு என்பது பரிணாம வளர்ச்சியின் மூலம் வரலாற்றினூடாகத் தோற்றம் பெற்ற ஒன்று எனக் கூறுகின்ற கோட்பாடே பரிணாம வளர்ச்சிக் கோட்பாடாகும்.
- இக்கோட்பாடானது படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு
மலர்ச்சிக்கோட்பாடு
வளர்ச்சிக் கோட்பாடு
கூர்ப்புக் கோட்பாடு
எழுச்சிக் கோட்பாடு என பலவாறு அழைக்கப்படுகின்றது.
இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்
- பேராசிரியர் கார்ணர்
- ஜோன் மொலிக்
- மனித சமூகம் ஒருவகை அரைகுறையான ஆரம்பகால அமைப்பாகத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து முழுமையான நிறுவனமாக மாறும் போது அரசு தோற்றம் என இக்கோட்பாடு கூறுகின்றது
மனிதன் → குடும்பம் → குலஅரசு → குலமரபு → கிராமிய அரசு → பிராந்திய அரசு → தேசிய அரசு
- அரசின் தோற்றத்தில் இரத்த உறவு, சமயம், மொழி, சாதி, போர், பொருளாதாரம், இடப்பெயர்ச்சி, அரசியல் உணர்வு என்பன பங்குகொள்ளும் காரணிகளாகும்.
படிமுறை வளர்ச்சிக் கோட்பாடானது அரசு பற்றிய பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகின்றது
• அரசு சர்வவல்லமை பொருந்திய இயல்புடையது.
• அரசு ஒரு பொதுநல ஸ்தாபனம்.
• அரசு தனது ஆள்புலத்தில் வாழுகின்ற அனைத்து மக்களின் நலனுக்காக செயற்படும் ஸ்தாபனம்.
• அரசின் பணிகள் சமூக தேவைக்கேற்ப மாற்றமுற்று செல்லும் இயல்பினை கொண்டிருக்கும்.
• அரசு நிரந்தமானது.
• சமூகம் நிலைத்திருக்கும் வரை அதற்கு சேவை செய்ய அரசும் நிலைத்திருக்கும்.
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் நன்மைகள்
- பகுத்தறிவு பூர்வமான கோட்பாடாகும்.
- யதார்த்தத்தோடு இயைபுபடுகின்ற கோட்பாடாக இது உள்ளது.
- நவீன சமூக சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடாக இது அமைந்திருக்கின்றமை.
- கற்பனைகளுக்கு இடமளிப்பதில்லை
- அரசின் வளர்ச்சியை அறிவதற்கு உதவுகின்றது.
- வரலாற்று சான்றுகள், தொல்பொருட் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படக்கூடிய கோட்பாடாக இது உள்ளது.
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் குறைபாடுகள்
- இக்கோட்பாடு தனது முடிவுகளுக்கு வரலாற்றுச் சான்றுகளில் மட்டும் தங்கியிருக்கின்றது. ஒரு ஆய்வு முடிவிற்கு வரலாற்றுச் சான்றுகள் மட்டும் போதுமெனக் கூறமுடியாது.
- வரலாற்று தகவல்களைத் தொகுக்கும் போது வரலாற்று அணுகுமுறையில் ஏற்படும் குறைபாடுகள் இங்கு தோற்றம் பெறலாம்.
- மக்களின் சம்மதத்தின் அடிப்படையில் அரசு தோற்றுவிக்கப்பட்டது என்ற முக்கியமான கருத்தினை இக்கோட்பாடு நிராகரிக்கின்றது.
தாராண்மைக் கோட்பாடு 







- அரசு என்பது மக்களினுடைய நலன்களை பேணுவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதே அரசு பற்றிய தாராண்மைக் கோட்பாடு எனப்படும்.
- இக்கொள்கையில் மக்களின் நலன்களைப் பேணுதல், மக்களினால் உருவாக்கப்படுதல், எனும் இரண்டு விடயங்கள் உள்ளன.
- இக்கொள்கையினை முன்வைத்தவர்கள்
- ஜொன்லொக்
- அடம் சிமித்
- டேவிட் ரிக்காடோ
- ஜே. எஸ் மில்
- ஜோன் மார்சல்
- சமுதாயத்தின் தேவை கருதி சமுதாயத்தவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பே அரசு என்று இக்கோட்பாடு கூறுகிறது.
- தாராண்மைவாதக் கோட்பாடு சமுதாயத்தின் தேவைக்காகவும் சமுதாயத்தின் தேவைக்காகவும், சமுதாயத்தின் நன்மைக்காகவும் அரசு பணியாற்றுவதால் அதன் பணியானது காலத்திற்கு காலம் மாறுபட்டு செல்லும் போக்கினை கொண்டதாக காணப்படுகின்றது.
- தலையிடா அரசு : அரசு பொருளாதார நடவடிக்கையிலிருந்து முற்றிலும் விலகியிருத்தல்.
- நலன்புரி அரசு : பொருளாதார விருத்தியிலும் பொருளாதார விருத்தியின் பயன்களை சமூகத்தில் மீளப்பகிர்ந்தளிப்பதலும் அரசு நேரடியாக தலையிடுதல்.
- குறைந்தபட்ச அரசு : சமூக விவகாரங்களில் குறைந்த முகாமைப்படுத்தலை அரசும், பொருளாதார விடயங்களை முகாமைப்படுத்தலை தனியார் துறையும் மேற்கொள்ள வேண்டும்.
தாரண்மைவாத ஜனநாயக அரசின் பிரதான இயல்புகள்
- சமூக ஸ்தாபனங்களில் உயர்ஸ்தாபனமாக இருத்தல்.
- சகலருக்கும் சமத்துவத்துடன் செயற்பட்டு மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.
- சமூகத்தின் பொது நலனை பூர்த்தி செய்தல்.
- சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல்.
- பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் மேற்கொள்ளுதல்.
- தாராண்மை ஜனநாயக அரசுகள் சிறப்பாக செயற்பட அவசியமான நிபந்தனைகள்:
- அரச நிறுவனங்களில் அமைப்பு, அதிகாரம், செயற்பாடு, என்பவை உள்ளடக்கப்பட்ட ஓர் அரசியல் யாப்பு நடைமுறையிலிருத்தல்.
- கட்சிமுறையின் ஊடாக செயற்படும் போட்டித்தன்மை வாய்ந்த அரசியல் நடைமுறையிலிருத்தல்.
- காலத்துக்கு காலம் தேர்தல்கள் நடைபெறுதல்.
- சர்வஜனவாக்குரிமை நடைமுறையிலிருத்தல்.
- சட்டவாட்சி நடைமுறையிலிருத்தல்.
- சுதந்திரமான நீதித்துறையை நடைமுறைப்படுத்தல்.
- சுதந்திரமான தொடர்பாடல் சாதனங்கள் நடைமுறையிலிருத்தல்.
இக்கோட்பாட்டின் நன்மைகள்:
- தாராண்மை ஜனநாயக அரசுகள் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளாக உள்ளன.
- மக்களினது உரிமைகள், சுதந்திரங்கள் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றன.
- சர்வஜன வாக்குரிமை அமுலில் இருப்பதனால் சாதாரண மக்கள் அரசியல் அறிவினைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
- ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிகள் உருவாகுவதோடு அதன் செயற்பாடுகளும் தரம் வாய்ந்தவையாக விளங்க வாய்ப்பு ஏற்படுகின்றன.
- விழிப்புணர்வு மிக்க ஊடகத்துறையை உருவாக்கமுடியும்.
- தனிநபர்கள் சுதந்திரமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடமுடிகிறது.
இக்கோட்பாட்டின் குறைபாடுகள்.
- பல இனங்கள் வாழுகின்ற நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரானதாக காணப்படுகின்றது.
- பலகட்சி அமுலில் உள்ள நாடுகளுக்கு பொருத்தமற்ற கோட்பாடு
- அரசியல் அதிகாரம் தொடர்ந்து பொருளாதார ரீதியாக பலம் பெற்றவர்களின் கைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புள்ளது.
மாக்ஸிஸக் கோட்பாடு









- ஜேர்மனியைச் சேர்ந்த கார்ள்மாக்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கோட்பாடே அரசு பற்றிய மாக்ஸிஸக் கோட்பாடு எனப்படும்.
- கார்ள்மாக்ஸ் அரசு என்பது மக்களிடையே ஒரு பகுதியாக இருக்கும் ஒரு வர்க்கத்தின் நலன்பேணும் அமைப்பு என்கிறார்.
- வர்க்கங்கள் இருந்த காலமெல்லாம் அரசு இருந்தது. வர்க்கங்கள் இல்லாத காலங்களில் அரசு இருக்கவில்லை என்பதை வலியுறுத்தி அரசு என்பது வர்க்கநலன் பேணும் அமைப்பு என்ற தம் கருத்தினை நிலைத்திறுத்த முனைந்தார்.
- கார்ள் மாக்ஸ் தான் எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”, “மூலதனம்” எனும் நூல்களினூடாக தனது கருத்தை முன்வைத்தார்.
- இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்:
- கார்ள்மாக்ஸ்
- ஏங்கல்ஸ்
- மா – ஓ சேதுங்
- லெனின்
- மாக்ஸிஸ கோட்பாடானது ‘இயற்கை பொருள்முதல் வாதம்’ , ‘வரலாற்று பொருள்முதல் வாதம்’ எனும் இரு வாதங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டது.
மாக்ஸிஸக் கோட்பாடு வலியுறுத்தும் விடயங்கள்:
- அரசு என்பது வர்க்கக் கருவி
- அரசு ஒரு அடக்குமுறை கருவி
- அரசு சமூகம், பொருளாதார அடிப்படையில் வர்க்கமாக பிளவுபட்ட போது தோற்றம் பெற்றது.
- அரசு நிரந்தரமான அமைப்பு அல்ல
- அரசு எல்லோருடைய நலன்களுக்காகவும் சேவையாற்றும் அமைப்பு அல்ல.
- அரசு பொருளாதார பலம் பொருந்திய வர்க்கத்தின் நலன்களுக்காக வக்காளத்து வாங்கும் கருவி
கார்ள்மாக்ஸ் சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சியினைப் பின்வரும் ஆறு காலகட்டங்களாக பிரித்துள்ளார்.
- புராதன கம்யூனிஸ சமுதாயம்
- அடிமைமுறை சமுதாயம்
- நிலப்பிரபுத்துவ சமுதாயம்
- முதலாளித்துவ சமுதாயம்
- சோசலிஸ சமுதாயம்
- நவீன கம்யூனிஸ சமுதாயம்
மாக்ஸிஸ கோட்பாட்டின் நன்மைகள்
- அரசு என்பது ஒரு வர்க்கத்தை பேணும் அமைப்பு எனக் கூறுவதன் மூலம் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்து புதிய சிந்தனைகளுக்கு வழிகோலியுள்ளது
- முதன்முதலாக சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொள்கையாக திகழ்கின்றது.
உதாரணம் சீனா,சோவியத் யூனியன்
- சமூகக் குடியாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.
மாக்ஸிஸ கோட்பாட்டின் குறைபாடுகள்
- காலச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கார்ள்மாக்ஸ் இக்கொள்கையினை முன்வைத்தார்.
- இக்கொள்கை பொருளாதாரக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள், சமூகம், மதம், புவியியல் போன்ற காரணிகளை கவனத்தில் எடுக்கவில்லை.
- இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றம் அடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமாகும்.
- மக்கள் இருக்கின்ற வரை மக்களுக்காக பொதுத்தேவைகளுமிருக்கும். இப்பொதுத் தேவைகளை நிறைவேற்ற அரசு என்ற நிறுவனமும் எப்போதும் அவசியமாக இருக்கும். இந்நிலையில் அரசற்ற கம்யூனிஸ சமூகம் உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- சோசலிஸ அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிகின்ற நிலைமை ஏற்படுகின்றது.
- அரசின் பணிகள் அதிகரிப்பதால் ஊழல் போன்ற தீமைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
பாஸிஸக் கோட்பாடு : 







- பாஸிஸ் என்ற இலத்தீன் சொல்லானது உறுதியான குழு அல்லது கூட்டம் அல்லது கட்டு எனப் பொருள்படும்.
- பாஸிஸம் என்பது உறுதியான கூட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் ஒரு ஆட்சி முறைமையாகும்.
- அரசானது சமுதாயத்தில் காணப்படும் எல்லாஅமைப்புக்களிலும் பார்க்க உயர்ந்த அமைப்பெனக் கூறுவதே அரசு பற்றிய பாஸிஸக் கோட்பாடாகும்.
- 20ம் நூற்றாண்டில் 1ம் உலகயுத்தத்திற்கு 2ம் உலகயுத்தத்திற்கு இடையில் ஆட்சிசெய்த இத்தாலிய சர்வதிகாரி முசோலினியினாலும் ஜேர்மனிய சர்வதிகாரி ஹிட்லரினாலும் அறிமுகப்படுத்தப்பட்ட கோட்பாடாகும்.
- முதலாம் உலக யுத்தத்தில் வெற்றிபெற்ற நேசநாடுகளுக்கும் தோல்வியுற்ற இத்தாலி, ஜேர்மனி என்பவற்றுக்கும் இடையே கைச்சாத்திட்ட “வேர்சேல்ஸ் உடன்படிக்கை” பாரிஸ் சமாதான உடன்படிக்கை என்பவையே பாஸிஸக் கோட்பாட்டின் தோற்றத்திற்கு காரணமாக உள்ளது.
- இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்
- றொக்கோ (பாசிஸ அரசியல் கோட்பாடுகள் எனும் நூல் மூலம்)
- ஜென்ரில் (பாசிஸத்தின் தத்துவ அடிப்படைகள் எனும் நூல் மூலம்)
- முசோலினி (என்சைக்கிளோபீடியா எனும் நூல் மூலம்)
- கோரிங்
- ரோசன் பேர்க்
- ஹிட்லர் (எனது போராட்டம் எனும் நூல் மூலம்)
பாஸிஸத்தின் பண்புகள்
- அரசை மேம்படுத்தல்
- ஜனநாயத்தை எதிர்த்தல்
- கடுமையான நாட்டுணர்ச்சி
- நாட்டின் இனவாதத்தினை பின்பற்றுதல்
- யுத்தத்தில் நாட்டங் கொள்ளல்
- நாடுகளை ஆக்கிரமிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்
- சந்தர்ப்பவாதம்
பாஸிஸத்தின் நன்மைகள்
- நாட்டில் பலமான ஆட்சியினை உருவாக்குவதற்கு பாஸிஸம் வழிகோலியது.
- ஒரு கட்டுக்கோப்பான அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதற்கு பாஸிஸ ஆட்சி வழிகோலியது.
- இத்தாலியும் ஜேர்மனியும் மீண்டும் பொருளாதார வளமிக்க தேசமாக மாறுவதற்கு பாஸிஸ ஆட்சி வழிகோலியது.
- மக்கள் அனைவரையும் நாட்டுப் பற்றாளர்களாக்க முடிந்தது.
- இவ்விரு நாடுகளும் இராவணுவ ரீதியிலே பலமிக்க தேசமாக எழுச்சி பெறுவதற்கு இம்முறை வழிகோலியது.
பாஸிஸத்தின் குறைபாடுகள்
- பாஸிஸம் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட எச்செயலையும் தனது நலனுக்காக மேற்கொள்வதற்கு தூண்டுகின்ற கொள்கையாக விளங்குகிறது.
- இக்கொள்கை தேசிய வாதத்தினை நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நிலையை தோற்றுவிக்கிறது.
- பாஸிஸம் யுத்தத்தை முழுமையாக ஆதரித்து நிற்பதனால் அமைதி, சமாதானம் என்ற மனித வாழ்வின் மேன்மையான அம்சங்களை புறக்கணிக்கின்றன.
- மக்கள் மாற்று அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படட்டிருக்கவில்லை.
- அரசிற்காக மக்கள் தியாகிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
- போட்டி அரசியல் கட்சி செயற்பாடுகளுக்கு வாய்ப்பளிப்பதில்லை









அரசாங்க செலவினம்
அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் செய்யும் செலவுகள் அரச செலவுகளாகும்.
பிரதான இரண்டு முறைகளுக்கேற்ப அரச செலவினை வகைப்படுத்தலாம்.
![screenshot-6]()
நடைமுறைச்செலவுகள் நுகர்வுச் செலவு மற்றும் மீண்டெழும் செலவு எனவும் மூலதன செலவுகள் முதலீட்டுச் செலவுகள் எனவும் அழைக்கப்படலாம்.
நடைமுறைச்செலவு
அரச சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்வதற்காக செய்யப்படும்
செலவுகள் நடைமுறைச்செலவுகளாகும்.
- ஊழியர் சம்பளம்
- அலுவலகக் காகிதாதி
- கட்டிடங்களுக்கான வாடகை
- போக்குவரத்துச் செலவு
- மின்சாரக் கட்டணம்
- தொலைத் தொடர்பு சேவைகள்
மூலதனச் செலவு
மூலதனப் பொருட்களை உருவாக்குதவற்காக அரசாங்கம்
செய்கின்ற செலவுகள் மூலதனச் செலவுகளாகும்.
- அலுவலகத் தளபாடங்கள்
- கட்டிடங்கள்
- வாகனங்கள்
- பெருந்தெருக்களை நிர்மாணித்தல்
![screenshot-7]()
- எதிர்கால நலன்கள் பலவற்றை உருவாக்குவதற்கு காரணமாக அமைகின்ற அரச மூலதன செலவு, தேறிய கடன் வழங்கல் என்பனவும் அரச முதலீடுகளாகும்.
அரச முதலீட்டில் அரசு தலையிடுவதற்கான காரணங்கள்:
- தனியார் துறை உற்பத்தி செய்ய முன்வராத மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்வது அவசியமாக இருப்பதும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உந்துதல் ஏற்படுவதும்.
- தனியார் துறையின் முதலீடுகளை அதிகரிப்பதற்குப் பொருத்தமான சூழலொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்காகவும்.
அண்மைக்காலத்தில் அரசின் மூலதன செலவு மற்றும் தேறிய கடன் வழங்கல் வரையறைக்குட்பட்டமைக்கான காரணங்கள்:
- உயர்ந்து சென்ற பாதுகாப்புச் செலவு
- உயர்ந்து சென்ற கடன் சேவைக் கொடுப்பனவுகள்
- நடைமுறை மாற்றங்கள் அதிகரித்தமை
அண்மையாண்டுகளில் அரசின் மூலதன செலவுகளின் தொகை ரீதியான பெறுமதி அதிகரிப்பதற்கு காரணங்கள்:
- பேரளவுக் கீழ்க்கட்டுமான வசதி அபிவிருத்தித் திட்டங்கள்
- தென் மாகாண கிராமிய அபிவிருத்தித் திட்டம்
- சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள்
- மறுசீரமைப்பு மற்றும் உள்ளூராட்சித் திட்டங்கள்
அரசியலமைப்பு மாதிரிகள்
மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பு வகைப்பாடுகளுக்கு அப்பால் அரசியலமைப்புகள் பின்வரும் தளங்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.
அரசியல் கொள்கைகளின்படி
- தாராண்மை ஜனநாயக யாப்பு மாதிரி
- சமதர்ம யாப்பு மாதிரி
- பாசிச வாத யாப்பு மாதிரி
- சமூக ஜனநாயக யாப்பு மாதிரி
அதிகார பகிர்வு ரீதியாக
- ஒற்றையாட்சி
- சமஷ்டியாட்சி
- கூட்டுசமஷ்டி
நிறைவேற்று அதிகாரத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப
- கபினட் யாப்பு முறை
- ஜனாதிபதி யாப்பு முறை
- கலப்பு நிறைவேற்று அதிகாரம்
- தனிநபர் ஆட்சி
1. தாராண்மை ஜனநாயக அரசியல் அமைப்பு 

- தாராள ஜனநாயக கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் முறையை முகாமைப்படுத்தி தனியார் சொத்துரிமை, சுயாதீனமான முயற்சி, திறந்த சந்தை போன்ற முதலாளித்துவ கொள்கையின்படி பொருளாதார முறைமையை முகாமைப்படுத்தி ஒழுங்கமைக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு மாதிரியே தாராண்மை ஜனநாயக அரசியலமைப்பு ஆகும்.
- இந்த அரசியல் பொருளாதார மூலக் கொள்கையின் நோக்கம் மனிதனின் தனிப்பட்ட திறன்களை விருத்தி செய்து கொள்வதற்குரிய வாய்ப்பினை உருவாக்கி அவனது முன்னேற்றத்திற்கு வழியமைப்பதாகும்.
- தாராண்மை ஜனநாயக யாப்பு பின்வரும் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன.
1. மக்கள் இறைமை
2. சுதந்திரமும் சமத்துவமும்
3. உரிமைகள்
4. பிரதிநிதித்துவ ஜனநாயகம்
5. காலத்திற்கு காலம் நடத்தப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்
6. யாப்பு ரீதியான அரசாங்கம்
7. பொறுப்புடைய அரசாங்கம்
8. சட்டத்தின் ஆட்சி
9. நீதித்துறை சுதந்திரம்
10. போட்டித்தன்மை வாய்ந்த அரசியல் கட்சி முறை
11. சுதந்திரமான அமுக்க குழுக்களின் செயற்பாடு
12. சுதந்திரமான மக்கள் கருத்தின் செயற்பாடு
13. நல்லாட்சி
14. ஆட்சியாளரதும் ஆளப்படுவோரதும் ஜனநாயக நடத்தை
15. பொருளாதார சுதந்திரம்
- தாராண்மை ஜனநாயக யாப்பு முறையின் நிறைகள்
1. தாராண்மை ஜனநாயக யாப்பில் மக்களின் தெரிவுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதால் மக்கள் நலன் பேணப்படும்.
2. மக்களின் உரிமைகளும் சுதந்திரங்களும் சட்ட ரீதியாக பாதுகாக்கப்படுகின்றன.
3. சாதாரண மக்களும் இணைந்து ஆட்சியாளர்களை தெரிவு செய்வதனால் சாதாரண மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
4. தொடர்பு சாதனங்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுவதன் மூலம் விழிப்புணர்வு மிகக் ஊடகத்துறையை உருவாக்கலாம்.
5. அரசியல் அறிவினையும் பயிற்சியினையும் பெற்ற தலைவர்களை உருவாக்க முடியும்.
6. சுதந்திரமான முயற்சிகள் மூலம் தனிநபர்கள் சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது.
7. அரசியல் பங்கேற்பு அதிகரிப்பதோடு பொதுசன அபிப்பிராயம் வளர்க்கப்படுகின்றது.
- தாராண்மை ஜனநாயக யாப்பு முறையின் குறைகள்
- தாராண்மை ஜனநாயகத்தில் பெரும்பான்மை முடிவுகளே தீர்மானமாக வருவதனால் பல இனங்கள் வாழ்கின்ற நாட்டில் இவ் யாப்பு முறை சிறுபான்மையினருக்கு எதிரானதாக அமைகின்றது.
- கட்சி முறையில் உள்ள குறைபாடுகள் தாராண்மை ஜனநாயகத்தை பாதிக்கின்றன.
- இந்த யாப்பின் பொருளாதாரக் கோட்பாடு தனியார் துறை பொருளாதாரத்தை ஆதரிப்பதாக இருப்பதனால் சாதாரண மக்களின் நலன்கள் குறைந்த அளவிலேயே கவனத்தில் எடுக்கப்படுகின்றன.
- அரசியல் அதிகாரம் தொடர்ந்து பொருளாதார ரீதியாக பலம் பெற்றவர்களின் கைகளுக்கே செல்லக்கூடியதாக உள்ளது.
- ஜனநாயக முறைப்படி தீர்மானங்களை எடுக்கும் பொது அங்கு பலரின் கருத்துக்களுக்கும் இடமளிப்பதால் காலதாமதம் ஏற்படுகின்றது.
- பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் உண்மையான ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.
2. சமதர்ம அரிசியல் யாப்பு மாதிரி

- சமதர்ம அரசியல் யாப்பு முறையானது மாக்கிச மற்றும் லெனினிச அரசியல் பொருளாதார கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட யாப்பு முறையாகும்.
உதாரணமாக முன்னாள் சோவியத் ரஷ்யாவை குறிப்பிடலாம்.
- சமவுடமை அல்லது சோசலிசம் என்பது நிலத்தையும் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறைகளில் தனியார் உரிமைக்கு பதிலாக அவற்றின் மீது சமூக உரிமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தும் ஓர் அரசியல் கருத்தாகும்.
- எதிர்கால கம்யூனிச சமூகத்தை அமைப்பதற்கு தேவையான அரசியல், பொருளாதார மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதாகும்.
- கம்யூனிசம் என்பது தாராண்மை ஜனநாயகத்தை விட முழுமையாக வேறுபட்ட ஒன்றாக இருப்பதனால் தாராண்மை ஜனநாயக யாப்பில் காணப்படும் பல அடிப்படை பண்புகளை சமதர்ம யாப்பில் காணமுடியாது.
- இவ்வரசியல் யாப்பின் பண்புகள்:
1. ஒரு கட்சி ஆட்சி முறையும் கட்சியின் ஏகாதிபத்தியமும்.
2. கம்யூனிச கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைந்த அரசியல் நிறுவன முறை.
3. கம்யூனிச கட்சியின் விதப்புரையின்படியே அரசியல் நிறுவனங்கள் செயற்படும்.
4. தனிப்பட்ட முறையிலன்றி கூட்டுறவு முறையின் அடிப்படையில் சமூக முறை ஒழுங்கமைதல்.
5. தனியார் சொத்துடமைக்கு பதிலாக பொது சொத்துடமை நிலவுதல்.
6. சுதந்திரமான போட்டி சந்தைக்கு பதிலாக அரசு பொருளாதாரத்தை நிர்வகித்தல் (திறந்த சந்தையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி மற்றும் பங்கீட்டு முறைக்கு பதிலாக மத்தியமயப்படுத்தப்பட்ட திட்டமிடல் முறையின் அடிப்படையிலான உற்பத்தியும் பங்கீடும் செயற்படுத்தல்).
7. அரசியல் உரிமைகளுக்கின்றி பொருளாதார உரிமைகளுக்கு முதலிடம் அளித்தல். தனியார் சொத்துடைமையன்றி பொருளாதார சமத்துவத்தையே சமதர்ம யாப்பு வலியுறுத்துகின்றது.
- சமதர்ம யாப்பின் நிறைகள்
- சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஒரு யாப்பு மாதிரியாக இருக்கின்றது.
- சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்குவதே இவ்யாப்பு முறையின் அடிப்படை கடமையாகக் கருதப்படுகின்றது. இதன்படி பொருளாதார ஏற்றத்தாழ்வு, வளங்களின் பயனற்ற உபயோகம் மற்றும் முறையற்ற திட்டமிடல் போன்றவற்றை நீக்குகின்றது.
- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்க தனியார் உடைமையினை அடியோடு ஒழிக்க முற்படுவதால் சொத்தற்றோர் சொத்துடையவர்களால் சுரண்டப்படும் நிலை தவிர்க்கப்பட்டு மேம்பட்ட சமுதாயம் உருவாக வழிவகுக்கப்படுகின்றது.
- மக்களின் பொதுத் தேவைகளை அரசு நிறைவேற்றி கொடுக்கின்றது.
- இவ்யாப்பு முறையின் கீழ் உற்பத்தியின் நோக்கம் தனிமனித இலாபம் அன்றி சமூகப் பயன்பாடாகவே இருக்கின்றது.
- சமூகக் குடியாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.
- பொருளாதாரமானது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் துரித அபிவிருத்தியும் எட்டப்படுகின்றது.
- சமதர்ம யாப்பில் அதிகாரம் முழுவதும் கம்யூனிச கட்சியிடம் குவிவதால் சர்வாதிகார போக்கிற்கு இடமளிக்கின்றது.
- தனிமனிதனுக்கு மேலான அமைப்பாக அரசு செயற்படுவதனால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது.
- இவ் யாப்பின் கீழ் அரசு எஜமானாகவும் குடிமக்கள் அதன் சேவகர்களாகவும் ஆகிவிட கூடும் என்பதால் இந்நிலை ஏற்புடையதன்று.
- தனியார் சொத்துடைமை மற்றும் தனிநபர் முயற்சிகள் புறந்தள்ளப்படுவதால் மனிதர்கள் அதிகபட்ச உழைப்பினை காட்ட முற்படமாட்டார்கள்.
- சமதர்ம யாப்பில் கோட்பாட்டு ரீதியாக பல நன்மைகள் இருப்பதாக தோன்றினாலும் நடைமுறைக்கு ஒவ்வாத அமைப்பாகவே இது கருதப்படுகின்றது.
- இவ்யாப்பின் கீழ் அரசே அனைத்து அலுவல்களையும் கவனிப்பதால் இது காலப்போக்கில் கால தாமதத்தையும் ஊழலையும் ஏதேச்சையதிகாரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது.
- இவ்யாப்பின் கீழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. (உதாரணம் – கட்சி அமைத்தல், சொத்து சேர்த்தல்)
- இவ்யாப்பின்படி செயற்படும் அரசுகளை விட சுதந்திர வர்த்தக முயற்சிகள் உடைய நாடுகள் பல வகையில முன்னேறி உள்ளன.
3. பாசிசவாத அரசியலமைப்பு மாதிரி
பாசிசவாத அரசியலமைப்பானது ஒரு தனிமனிதனின் சர்வாதிகாரத்தின் அடிப்படையில் செயற்படும் சர்வாதிகாரஅரசிற்கான செயற்பாட்டுத் தளத்தை வழங்கும் ஓர் அரசியலமைப்பாகும்.
இவ் யாப்பு முறையில் நிச்சயமாக இனங்காணக்கூடிய ஒரு கோட்பாட்டின் அல்லது கொள்கை தொகுதியின் அடிப்படையில் அரசியல், பொருளாதார முறைகள் தனியொருவரால் பிரயோகிக்கப்படும் சர்வாதிகார ஆட்சி.
இவ்யாப்பின் பண்புகள்
1. அரசாங்கத்தின் பணிகள், கட்டமைப்புகள் ஒரு படிமுறையின் கீழ் தெளிவாக முறையாக வேறாக்கப்படாமை.
2. ஒரு கட்சி முறை (மக்களுக்கு கட்சியை உருவாக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கும்)
3. தீவிர இனவாதம்.
4. அரசின் தன்னிகரற்ற தன்மை.
5. போர் விருப்பம் உள்ளதாக இருத்தல்.
6. அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டிருத்தல்.
7. ஒரு நிச்சயமான பொருளாதார தத்துவம் காணப்படாமை (நடைமுறையில் இருக்கின்ற பொருளாதார முறைமை அரசினால் கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும்).
8. கொள்கை எதிர்ப்பு
9. தனிமனிதனையும் சமூகத்தையும் அரச அதிகாரத்திற்கு கீழ்படியச் செய்ய ஆட்சி நடத்துதல்.
10. அரசியல் செயலொழுங்கின் அனைத்து அம்சங்களும் முறிவடைதல்.
பாசிசவாத அரசியலமைப்பின் நிறைகள்
1. தீர்மான எடுப்பு செயற்பாட்டில் காலதாமதம் தவிர்க்கப்படுவதுடன் நிர்வாக செலவும் குறைவாகக் காணப்படுகின்றமை.
2. இவ் யாப்பு மாதிரி தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையுடன் நாட்டுப்பற்றும் ஏற்படுகின்றது.
3. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவகையிலான பொருளாதாரக் கொள்கை காணப்படுவதோடு அரசே பொருளாதாரத்தை நிருவகிப்பதால் நாட்டின் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும்.
பாசிசவாத அரசியலமைப்பின் குறைகள்
1. இவ் யாப்பு முறை ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட எச்செயலையும் செய்வதற்கு இடமளிக்கின்றது.
2. மக்களின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் மறுக்கப்படுதல்.
3. போர் விருப்பம் உள்ள யாப்பு முறையாக இருப்பதால் மனித வாழ்வின் மேன்மையான அம்சங்களான அமைதி, சமாதானம் என்பன கேள்விக்குறியாகின்றமை.
4. ஜனநாயக கோட்பாடுகள் பரந்தளவில் பின்பற்றப்படுகின்ற தற்காலச் சூழலுக்கு ஏற்ற அரசியல் யாப்பு முறையாக இல்லாதிருத்தல்.
4. சமூக ஜனநாயக யாப்பு 

- தாராண்மைவாத ஜனநாயக கோட்பாடுகளுக்கு சமதர்ம பொருளாதாரக் கோட்பாடுகளும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கலப்பு முறை யாப்பே சமூக ஜனநாயக யாப்பாகும்.
சமூக ஜனநாயக யாப்பின் பண்புகள்
1. பொருளாதாரத்தை முகாமைப்படுத்துவதில் அரசும் தனியார் துறையும் பங்குபற்றல்.
2. எனினும் அரசு பொருளாதார விடயங்களில் கூடிய பொறுப்பினை வகித்தல்.
3. தனியார்துறை குறைந்த கவனம் செலுத்தும் அல்லது முழுமையாக கவனம் செலுத்தாத துறைகளின் வளர்ச்சியில் அரசு நேரடியாக தலையிடுதல்.
4. வரையறுக்கப்பட்ட பொருளாதாரச் சுதந்திரம்.
5. அரசு பல்வேறு நலன்புரி மற்றும் காப்புறுதி பணிகளை நடைமுறைப்படுத்தல்.
6. பொருளாதார ரீதியான மக்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டிருத்தல்.
7. சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி என்பன கிடைக்கச் செய்தல்.
8. ஐக்கியம், ஒற்றுமை பேணப்படுவதை வலியுறுத்தல்
9. சமமான பிரஜைகள் – சமமான வாய்ப்புக்கள் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு அரசியல், பொருளாதார, சமூக பணிகளை முகாமைப்படுத்தல்.
சமூக ஜனநாயக யாப்பின் நிறைகள்
1. நாட்டின் சமுதாய நலன் பாதுகாக்கப்படல்.
2. பொருளாதார நடவடிக்கைளில் அரசும் தனியார் துறையும் பங்குபற்ற கூடியதாக இருத்தல்.
3. கடின உழைப்பிற்கு உயர்ந்த மதிப்பு வழங்கப்படல்.
4. இவ் யாப்பு மாதிரியில் அரசியல் ரீதியாக ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படுவதினால் மக்களின் தெரிவுக்கு இடமிருத்தல், அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் மதிப்பளிக்கப்படுதல் போன்ற சாதகமான அம்சங்களும் காணப்படுகின்றன.
சமூக ஜனநாயக யாப்பின் குறைகள்
1. பொருளாதாரத்தில் அரசின் கூடிய தலையீடு காணப்படுவதால் சுதந்திர முயற்சிகள் மட்டுப்படுத்தப்படுவதாக அமைதல்.
2. ஊழல், மோசடிகளுக்கான சூழ்நிலை உருவாகுதல்.
3. கலப்பு பொருளாதார அம்சங்கள் (அரசு மற்றும் தனியார்) ஒரே ஸ்திரத்தன்மையுடன் இல்லாதிருத்தல்.
அரசியல் யாப்பு மாதிரி – நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கேற்ப
- காலத்தில் நிறைவேற்று அதிகாரம் ஒப்படைக்கப்படும் தாபனம், அத்தாபனத்தின் நேர்மை, அரச தலைமைத்துவத்தின் தன்மை, நிறைவேற்றுத்துறையின் பொறுப்பு கூறும் தன்மை, சட்டத்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமிடையிலான தொடர்பு என்பனவற்றின் அடிப்படையில் அரசியல் யாப்புக்கள் பின்வருமாறு முகப்படுத்தப்படுகின்றன.
1. கபினட் யாப்பு முறை
2. ஜனாதிபதித்துவ யாப்பு முறை
3. கலப்பு நிறைவேற்று யாப்பு முறை
4. தனிநபராட்சி
1. கபினட் யாப்பு முறை 









- நாட்டின் நிறைவேற்று அதிகாரம் சட்டத்துறையிலிருந்து தெரிவு செய்யப்படும் பிரதமர் தலைமையிலான கபினட்டினால் மேற்கொள்ளப்படுமாயின் அது கபினட் யாப்பு முறையாகும்.
- இங்கு சட்டத்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமிடையே நெருங்கிய தொடர்பு காணப்படுவதோடு, நிறைவேற்றுத்துறை உண்மை நிர்வாகம், நாம நிர்வாகம் என இரு பகுதிகளை கொண்டிருக்கும்.
- கபினட் யாப்பு முறை பற்றி பேராசிரியர் காணர் குறிப்பிடும் போது “உண்மை நிர்வாகம் தனது அரசியல் கொள்கைகள், செயற்பாடுகள் சம்பந்தமாக உடனடியாகவும் சட்டரீதியாகவும் நடத்துறைக்கும் இறுதியாக வாக்காளருக்கும் பொறுப்புக்கூற கடமைப்பட்டதும், நாம வாகம் பொறுப்புக்கு கூற கடமைப்படாததுமான ஒரு நிலையை வகிக்கும் அரசியல் யாப்பாகும்” என்று இவ்யாப்பினை அடையாளப்படுத்துகின்றார்.
- இவ் யாப்பு முறைக்கு சிறந்த உதாரணம் பிரித்தானியாவாகும். பிரித்தானியாவில் தோற்றம் பெற்ற இம்முறையானது அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
கபினட் யாப்பு முறையின் பண்புகள்
1. இரட்டை நிறைவேற்று தாபனம்
2. பிரதமரின் தலைமைத்துவம்
3. அரசியல் ஒருமைத்தன்மை
4. கூட்டுப் பொறுப்பு
5. எதிர்க்கட்சியின் முக்கியத்துவம்
6. சட்டத்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையிலான நெருங்கியத் தொடர்பு
கபினட் யாப்பு முறையின் நிறைகள்
1. சட்டத்துறைக்கும் நிருவாகத்துறைக்கும் இடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் நிலவுகின்றது. இதனை வோல்டர் பெகோட் “கபினட் யாப்பு முறையில் கபினட் சட்டத்துறையையும் நிருவாகத்துறையையும் இணைத்து வைக்கும் இணைகரமாகும்” என்கின்றார்.
2. ஜனநாயகத் தன்மை மிக்க யாப்பு முறை
• நிருவாகத்துறையான அமைச்சரவை சட்ட சபையிலிருந்து தெரிவு செய்யப்படல்,
• சட்டத்துறைக்கு பொறுப்பு கூற கடமைப்படல்,
• பொறுப்பினை மீறி செயற்படும் போது நிருவாகத்துறையை சட்டத்துறையினால் பதவி நீக்க முடிதல்,
• கட்சி அரசாங்கம் நடைமுறையிலிருத்தல்,
• பொதுசன அபிப்பிராயத்திற்கு அதிகம் செவிமடுத்தல்,
3. நிருவாகத்துறையான அமைச்சரவை சட்டத்துறைக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டிருப்பதோடு அதன் கட்டுபாட்டுக்கும் உட்படுவதால் கபினட் யாப்பு முறையில் நிறைவேற்றுத் துறையின் எதேச்சதிகாரம் குறைவாக காணப்படுகின்றது.
4. நெகிழ்ச்சியான யாப்பு முறையாக இருத்தல்
• மாற்றமுறும் நிலைகளுக்கு இசைவான முறையில் முன்னெடுக்க முடிதல்
• நெருக்கடி நிலைகளில் அரசாங்கக் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய வாய்ப்பு
5. அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதையும் அது தொடர்பான பொறுப்பினையும் நிச்சயமாக அறிந்து கொள்ள முடிதல்.
6. பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் வழமையாக சிரேஷ்ட அரசியல் வாதிகளாக இருப்பதனால் ஆட்சியதிகாரத்தினை பாண்டித்தியம் பெற்றவர்களின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.
7. மாற்று அரசாங்கத்திற்கான வாய்ப்பு
• கபினட் முறையில் பதவியிலிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்தால் எதிர்க்கட்சி மாற்று அரசாங்கத்தை தாபிப்பதற்கு ஆயத்தமானதாக இருக்கும்.
8. கபினட் யாப்பு முறையில் பொதுசன அபிப்பிராயத்திற்கு செவிமடுக்கும் தன்மை காணப்படுகின்றது.
9. எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான செயற்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டிருத்தல்
• இவ்யாப்பு முறையில் ஒரு பலமான எதிர்க்கட்சி அமைந்து ஆளுங்கட்சியின் செயற்பாடுகளை கண்காணிப்பதோடு அதன் தன்னிச்சையான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துகின்றது.
10. மக்கள் இறைமை மேம்படுத்தப்படல்
11. சட்டத்துறையும் நிருவாகத்துறையும் ஒரே ஒரு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதால் செலவு குறைந்த முறையாக காணப்படுகின்றது.
கபினட் யாப்பு முறையின் குறைப்பாடுகள்
1. கபினட்டின் சர்வாதிகாரம் ஏற்படுதல்
2. அரசாங்கம் உறுதியற்றதாக மாறுதல்
3. செயற்திறன் குன்றிய தன்மை
4. தேசிய நலன்கள் கீழ்ப்பட்டு கட்சியின் குறுகிய நலன்கள் மேலெழுதல்
5. அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் மேலெழுதல்
2. ஜனாதிபதித்துவ யாப்பு முறை 





- நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு யாப்பு ரீதியாக தனியொரு நபரான ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பின் அது ஜனாதிபதித்துவ யாப்பு முறை எனப்படும்.
- பேராசிரியர் காணரின் வார்தைகளில் கூறின் “கபினட் முறையிலிருந்து முழுமையாக வேறுபடுகின்ற நிருவாகத்துறையானது தனது பதவிகாலத்தில் சட்டத்துறையிலிருந்து யாப்பு ரீதியாக சுதந்திரம் உடையதும் நிருவாகத்துறைக்கு பொறுப்பு கூற கடமைப்படாததுமான யாப்பு முறையே ஜனாதிபதித்துவ யாப்பு முறையாகும்.”
ஜனாதிபதித்துவ யாப்பு முறையின் பண்புகள்
1. தனி நிருவாகத் துறை அல்லது அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி
2. நிறைவேற்றுத்துறை சட்டத்துறையிலிருந்து பிரிந்திருத்தல்
3. உறுதியான அரசாங்க முறை
4. செயற்திறன் மிக்க தன்மை
5. அரசாங்கம் கூட்டு குழுவாக இல்லாதிருத்தல்
6. தடைகள் சமன்பாடுகள் முறை நடைமுறையிலிருத்தல்
7. குற்றவிசாரணை (பழிமாட்டறைதல்) முறை
8. நிர்வாகத்துறை சட்டத்துறைக்கு பொறுப்பு கூற கடமைப்படாமை
9. கட்சி அரசாங்கம் இல்லாமை
ஜனாதிபதி யாப்பு முறையின் நிறைகள்
1. அரசாங்கத்தின் உறுதிப்பாடு – ஜனாதிபதி ஒரு நிலையான பதவிக் காலத்திற்கு தெரிவு செய்யப்படுவதோடு, யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகாலத்திற்கு முன்னர் அவரை குற்ற விசாரணை மூலம் மட்டுமே பதவி நீக்க முடிகின்றது. ஆனால், அம்முறையும் அவ்வளவு எளிதானதன்று என்பதனால் ஜனாதிபதியின் தலைவிதி அடிக்கடி மாறக்கூடிய நிலை சட்டத்துறையின் வாக்குகளில் தங்கியிராமை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டினை ஏற்படுத்துகின்றது.
2. நிறைவேற்றுத்துறையின் செயல் திறன் – நிறைவேற்று அதிகாரம் ஒரு தனி நபரிடம் காணப்படுதல், அவ்வதிகாரத்தை சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருத்தல் ஆகிய இரு காரணிகளும் இச்செயற்திறன் கூடிக் காணப்படுவதற்கு ஊன்றுகோலாக அமைகின்றது.
3. பலகட்சி முறை நிலவும் நாடுகளுக்கு அதிகம் பொருந்துகிறது. ஏனெனில் பல கட்சி முறையினால் உருவாகும் அரசாங்கத்தின் உறுதியற்ற நிலையினை ஜனாதிபதி முறையினால் தவிர்த்துக்கொள்ள முடிகின்றது.
4. அவசர கால நிலைகளையும், அரசியல் நெருக்கடிகளையும் சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடிகின்றது. ஏனெனில் நிர்வாக அதிகாரங்கள் ஒரு தனி நபரிடம் காணப்படுவதால் அவசரமாக தீர்மானங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த முடிகின்றது.
5. அதிகாரத் துஷ்பிரயோகமின்மை – ஜனாதிபதி யாப்பு முறையில் வலுவேறாக்கம் மற்றும் தடைகள் சமன்பாடுகள் பின்பற்றப்படுவதால் ஒரு துறை மற்றைய துறைகளின் அதிகாரங்களை பிரயோகிக்க முடியாது என்பதுடன், அரசாங்க துறைகள் ஒவ்வொன்றும் மற்றைய துறைகளை கட்டுப்படுத்தி செயற்படுவதால் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை.
6. அமைச்சர்கள் சட்டத்துறை விடயங்களில் பங்குபற்ற வேண்டிய அவசியமின்மையால் தமது முழு கவனத்தினையும் இலாகா நிறுவனங்களுக்கு செலுத்துகின்றன. இதனால் பொதுத்துறை நிர்வாக நோக்கிலும் ஜனாதிபதி முறை சிறப்பாக கொள்ளப்படுகின்றது.
7. ஜனாதிபதி யாப்பு முறையில் சட்டத்துறை நிர்வாகத்துறையினால் கட்டுப்படுத்தும் நிலை காணப்படாமையால் சட்டத்துறை சுதந்திரமாகச் செயற்பட முடிகின்றது.
8. அரசியல் கட்சிமுறையின் செயற்பாடும் பாதிப்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுதல். ஏனெனில் அரசியல் கட்சிகள் இன்றியும் ஜனாதிபதி முறையை நடைமுறைப்படுத்த முடியும்.
9. பன்முக சமூக முறைக்கு அதிகம் பொருத்தமான முறையாக இருத்தல்.
ஜனாதிபதி யாப்பு முறையின் குறைகள்
1. ஜனநாயகத்தன்மை குறைவானதாகக் காணப்படுதல் – கபினட் யாப்பு முறையோடு ஒப்பிடும் போது ஜனாதிபதி யாப்பு முறை ஜனநாயகத்தன்மை குறைந்ததாகும். ஒரு தனி மனிதனின் கையில் நிறைவேற்று அதிகாரங்கள் ஒன்றுகுவிதல், நிர்வாகத்துறை சட்டத்துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உட்படாமை, பொறுப்பிலிருந்து விடுபட முடிதல், பதவிக்கால பாதுகாப்பு, அரசியல் கட்சி முறையின் செல்வாக்கு குறைந்த மட்டத்தில் காணப்படுதல் போன்ற காரணிகள் இவ்வாய்ப்பு முறையின் ஜனநாயகத் தன்மையை பாதிக்கின்றது.
2. சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்குமிடையில் மோதல் ஏற்படுதல் – ஜனாதிபதி முறையில் சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையில் மோதல் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகளவு காணப்படுகின்றது. இது தொடர்பாக ஒரு புறம் சட்டத்துறையையும் நிறைவேற்றுத் துறையையும் தொடர்புபடுத்தும் நேரடி இணைப்பாளர் காணப்படாமையும் மறுபுறம் கட்சி அடிப்படையில் நிறைவேற்றுத் துறை ஒரு கட்சியை சேர்ந்ததாகவும், சட்டத்துறை பிறிதொரு கட்சியை சார்ந்ததாகவும் இருக்கும் போது ஏற்படும் பொருந்தாத நிலை பாதிப்புச் செலுத்தும். அச்சந்தர்ப்பத்தில் முழு அரசாங்க முறையினது செயற்பாடும் குன்றும்.
3. ஜனாதிபதி யாப்பு முறையில் நிறைவேற்றுத் துறை சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதால் சட்டத்துறையின் நிலை பலவீனமடைவதுடன் பொறுப்பற்ற நிலையில் செயற்படவும் முற்படலாம்.
4. நெகிழ்ச்சியற்ற யாப்பு முறை – ஜனாதிபதி முறை நெகிழ்ச்சியற்ற யாப்பு முறையாகும். நெருக்கடி நிலைகளை எதிர்க்கொள்வதற்கு சட்டங்களை அவசரமாக ஆக்கும் படி சட்டத்துறையில் ஜனாதிபதி செல்வாக்கு செலுத்த முடியாது. சட்டத்துறை குறிப்பிட்ட அளவிற்கே நிர்வாகத்துறைக்கு ஆதரவு அளிக்கும். ஆதரவு அளிக்காமலும் இருக்க முடியும்.
5. அரசியல் கட்சிகளின் செயற்பாடு பலவீனமடைதல் – ஒரு புறம் இது சாதகமான நிலையாயினும் மறுபுறம் இது பாதகமான நிலையாகவும் காணப்படும் அரசியல் கட்சிகளின் செயற்பாடு
6. ஜனாதிபதி முறை அதிக பணச்செலவை ஏற்படுத்துகின்றது.
7. எதிர்க்கட்சியின் நிலை பலவீனமடைதல்.
அரசியலமைப்பு மாதிரிகள் அதிகாரப் பகிர்வு ரீதியாக
ஒற்றையாட்சி





- ஒரு அரசின் இறைமை அதிகாரத்தினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒரு தனி மத்திய அரசிடம் மாத்திரம் ஒப்படைக்கப்பட்டிருக்குமாயின் அது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு எனப்படும்.
- நாடு முழுவதிலும் ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நீதி என்பவற்றை பிரகடனம் செய்யும் அரசியல் யாப்பு ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகும்.
- உதாரணம் : இந்தியா
இலங்கை
பிரித்தானியா
இத்தாலி
டென்மார்க்
பின்லாந்து
பெல்ஜியம்
ஒற்றையாட்சியின் பண்புகள் :
- அதிகாரத்தினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒரு தனியொரு மத்தியஅரசிடம் மாத்திரம் ஒப்படைக்கப்பட்டிருத்தல்.
- ஒரே சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பன காணப்படும்.
- இறைமை பிரிக்கப்படாதிருக்கும்.
- மத்திய அரசு ஒரு தலைபட்சமாக அரசியல் யாப்பினை மாற்றமுடியும்.
- உள்ளூராட்சி அமைப்புக்கள் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களை மாத்திரம் பெற்றிருக்கும்.
ஒற்றையாட்சியின் நன்மை:
- தனியாக மத்திய அரசாங்கம் மாத்திரம் நாடு முழுவதையும் நிர்வகிப்பதால் ஒரே நாடு ஒரே நிர்வாகம் காணப்படும்.
- ஒரே அரசாங்கம் இருப்பதனால் அரசியல் யாப்பை திருத்துவதும் மாற்றுவதும் இலகுவானது.
- தனியினங்களைக் கொண்ட நாடுகளுக்குப் பொருத்தமான ஆட்சி முறையாக இருத்தல்.
- சட்ட, நிர்வாக, நீதித்துறைகள் நாடு முழுவதிற்கும் ஒரே மாதிரியானதாக இருக்கும்.
- தேசிய உணர்வும், ஒருமைப்பாடும், மேலோங்கி இருத்தல்.
- ஒரே அரசாங்கம் காணப்படுவதால் அரசாங்கத்திற்கான செலவீனமும் குறைவாக இருத்தல்.
ஒற்றையாட்சியின் குறைபாடுகள்:
- தனியொரு அரசாங்கத்திடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தன்னிச்சையாக செயற்பட வாய்ப்புண்டு.
- நாட்டின் நிலப்பரப்பு பெரியதாக இருந்தால் ஒரே ஒரு அரசாங்கத்தினால் நிர்வகிப்பது கடினம்.
- பிரதேசங்களின் தேவைக்கும் நாட்டின் தேவைக்கும் இடையே முரண்பாடு நிலவும்.
சமஷ்டியாட்சி முறைகள் 








- ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் மத்திய அரசு மட்டுமன்றி பிரதேச அரசுகளும் பங்குகொள்ளும் வகையில்அதிகாரம் யாப்பின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்குமாயின் அவ்யாப்பு சமஷ்டி அரசியல் யாப்பு எனப்படும்.
- உதாரணம் : அமெரிக்கா
கனடா
சுவிஸ்
ஜேர்மனி
சமஷ்டி அரசியல் யாப்பின் பண்புகள் :
- தெளிவான அதிகாரப் பங்கீடு
- எழுதப்பட்ட நெகிழா அரசியல் யாப்பு
- பக்கம் சாராத வலுவான அதிகாரம் கொண்ட நீதித்துறை
- இரண்டாவது சபையில் பிரதேசங்களுக்கு சம பிரதிநிதித்துவம்
- இரட்டைக் குடியுரிமை
- சகல பிரஜைகளுக்கும் இரு அரசாங்கங்கங்களுக்கும் கீழ்ப்படிவர்.
- இரு மட்டங்களினாலான அரசாங்கம் நிலவும்.
- பன்மைச் சமூகங்களுக்கு அதிகம் பொருந்தும்
- அடிப்படை உரிமைகளுக்கு உயர் பாதுகாப்பு
சமஷ்டியாட்சியின் நன்மைகள்:
- வேற்றுமைகள் நிலவும் சமூகத்தில் ஒருமைப்பாட்டினை உருவாக்கக்கூடியதாக இருக்கும்
- மத்திய அரசாங்கமானது மனம் போன போக்கில் செயற்படுவதைத் தடுக்கக்கூடியதாக இருக்கும்.
- சிறுபான்மை இனங்கள் தங்களினுடைய பிரதேசங்களில் அதிகாரங்களைப் பெற்று வாழக்கூடிய நிலை ஏற்படும்.
- பிரதேசங்களில் துரித அபிவிருத்தியினை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
- நிலப்பரப்பு பெரிதாக உள்ள நாடுகளுக்கு சமஷ்டி ஆட்சிமுறை நிர்வாகத்தை இலகுவாக நடாத்துவதற்கு உதவியாக இருத்தல்.
- மனித உரிமைகளை உயர்ந்த பட்சமாக பாதுகாக்க உதவுகின்றது.
- பொருளாதார வளங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த உதவுகின்றது.
சமஷ்டி முறையின் குறைபாடுகள் :
- மக்கள் மத்திய மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
- சட்டவாக்க செயற்பாடுகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் என்பன இரு தடவைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
- நிர்வாக ரீதியான செலவீனம் இரட்டிப்பாக இடம்பெறும்.
- சிறிய நாடுகளுக்கு பொருத்தமற்ற ஒருமுறையாகும்.
- அதிகாரங்கள், சுதந்திரங்கள் இருப்பதால் சமஷ்டியில் இணைந்து கொண்ட அரசுகள் பிரிவினை கோரும் நிலை உருவாகும்.
கூட்டு சமஷ்டியாட்சி 

- பல சுதந்திர அரசுகள் ஒன்றிணைந்து சில பொதுவான மட்டுப்படுத்தப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக ஒரு பொதுவான அரசு ஒன்றை உருவாக்குவதே கூட்டு சமஷ்டியாகும்.
- இது பாதுகாப்பு, பொருளாதார நலன் போன்றவற்றின் நிமித்தம் ஏற்படலாம்.
கூட்டு சமஷ்டியின் பண்புகள்:
- பிராந்திய அரசாங்கம் தம் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டே சில விடயங்களில் ஏனைய பிராந்திய அரசாங்கங்களுடன் ஐக்கியமாகச் செயற்பட முடிதல்.
- இறைமை பிரிக்கப்படாதிருத்தல். ஒவ்வொரு அரசும் இறைமை கொண்டனவாகவும் சமமானதாகவும் இருத்தல்.
- பலம் வாய்ந்த ஒரு பிராந்திய அரசாங்க முறையும் பலவீனமான ஒரு மத்திய அரசாங்கமும் செயற்படல்.
- அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை.
- பிராந்திய அரசாங்கங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டிருத்தல்.
- பொது அரசு, சுதந்திர அரசுகளின் மீது நேரடி கட்டுப்பாட்டினை கொண்டிராதிருத்தல்.
- அந்தந்த நாடுகளின் குடியுரிமையே காணப்படல்.
கூட்டு சமஷ்டியின் நிறைகள்
- பிராந்திய அரசாங்கத்தின் தனித்துவம் இழக்கப்படாமை.
- அங்கத்துவ நாடுகள் பொருளாதார, அரசியல் ரீதியில் பலம் பொருந்தியதாக மாறுதல்.
- அங்கத்துவ நாடுகளுக்கிடையில் சமநிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த கூடியதாக இருத்தல்.
கூட்டு சமஷ்டியின் குறைகள்
- பிராந்திய அரசாங்கங்கள் தாம் விரும்பிய போது பிரிந்து செல்லும் உரிமை இருப்பதனால் பொது அரசாங்கத்தின் ஸ்திரமின்மை நிலவுதல்.
- சுதந்திர அரசுகள் மீது கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதனாலும் அவை இறையாண்மையில் சமமானவையாக இருப்பதனாலும் தாம் விரும்பியபடி செயற்படக் கூடியதாக இருத்தல்.















வருமானப் பரம்பல்
ஒரு நாட்டின் மொத்த வருமானம் உண்மையில் வீட்டுத் துறையினரிடையே எவ்வாறு பகிரப்பட்டுள்ளது என அளவிட்டு கூறுதல் ஆகும்.
இது 2 வகை :
- முழு வருமான பரம்பல்
- சார்பு வருமானப் பரம்பல்
சார்பு வருமான பரம்பலை அறிய இவை பயன்படும்.
- லோறன்ஸ் வளையி
- கினி குணகம்
லோறன்ஸ் வளையி ஆனது சம வருமான கோட்டை நோக்கி நகர்ந்தால் வருமான பங்கீட்டில் நியாயத்துவம் காணப்படும்.
இதன்போது கினி குணகம் 0 இற்கு அண்மிக்கும்.
லோறன்ஸ் வளையி சம வருமான கோட்டை விலகி நகர்தல் வருமான பங்கீட்டில் சமமின்மையைக் காட்டும்.
இதன் போது கினி குணகம் 1 ஐ அண்மிக்கும்.
நுகர்வோர் வழங்குனர் மீதான வரித்தாக்கம்

















| PEd வகை |
PEd = 0 |
PEd < 1 |
PEd = 1 |
PEd > 1 |
PEd = α |
| PES வகை |
PES = α |
PES > 1 |
PES = 1 |
PES < 1 |
|
| நுகர்வோர் வரிப்பளு |
முழுவதும் |
பெரிது
|
சமன் |
சிறிது |
இல்லை |
| வழங்குனர் வரிப்பளு |
இல்லை |
சிறிது |
சமன் |
|
முழுவதும் |
| விலை மாற்றம் |
வரிக்கு சமனாக விலை கூடும் |
வரியை விட பெரிய பகுதி விலை கூடும் |
வரியின் 1/2 பங்கு
விலை கூடும் |
வரியை விட சிறிய பகுதி விலை கூடும் |
விலை மாறாது |