- கலக்கொள்கை Theodor Schwann , Matthias Jakob Schleiden, Virchow ஆகிய மூன்று விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட கொள்கை.




- இதில் 3 பிரதான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- சகல அங்கிகளும் ஒன்று / பல கலங்களால் ஆக்கப்பட்டவை.
- அங்கிகளின் அடிப்படைக் கட்டமைப்பு, அடிப்படை தொழிற்பாட்டு அலகு கலம் ஆகும்.
- சகல கலங்களும் ஏற்கனவே காணப்பட்ட கலங்களிலிருந்து உருவாகின்றன.
- கலக்கொள்கையில் பங்களிப்பு செய்த விஞ்ஞானிகள் பின்வருமாறு :


- Robert Hooke (1663) : திண்மத் தன்மையான தக்கை நீரில் மிதப்பதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மெல்லிய வெட்டு முகங்களை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானித்தார். அதன் போது தேன் கூட்டு அறைகள் போன்று துளைகள் கொண்ட அமைப்பு அவதானிக்கப்பட்டது. துளை ஒவ்வொன்றையும் கலம் எனப் பெயரிட்டார்.
- Anton Van Leeuwan Hooke (1650) : நீர்த் துளியை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானித்து தனிக்கல அங்கிகளான பற்றீரியா, இயூக்கிளினா ஆகியவற்றை முதன் முதலில் பதிவு செய்தார்.
- Schleiden (1831) : இவர் தாவரவியலாளர். தாவர இழையங்களை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானித்து சகல தாவரங்களும் கலங்களால் ஆனவை என முடிவு செய்தார்.
- Schwann (1839) : விலங்கியலாளர். விலங்கு இழையங்களை ஆராய்ந்து அவை கலங்களால் ஆனவை என முடிவு செய்தார்.
- Virchow (1855) : கலப்பிரிவு செய்முறையை ஆராய்ந்து எல்லா கலங்களும் ஏற்கனவே காணப்பட்ட கலங்களிலிருந்து கலப்பிரிவினால் உருவாகின்றது என முடிவு எடுத்தார்.
- மூலக்கூறுகளுக்கிடையிலான இடைத்தாக்கங்கள் அனைத்தும் பொதுவாக வன்தர்வாலிசு இடைத்தாக்கங்கள் என அழைக்கப்படும். இவ்விடைத்தாக்கங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படும்.
- அயன் – இருமுனைவு இடைத்தாக்கங்கள்
- இருமுனைவு – இருமுனைவு இடைத்தாக்கங்களும் ஐதரசன் பிணைப்புக்களும்
- அயன் – தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்
- இருமுனைவு – தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்
- கலைவு இடை ஈர்ப்புகள் (லண்டன் விசைகள்)
அயன்-இருமுனைவு இடைத்தாக்கங்கள்
- கற்றயன் அல்லது அன்னயன் முனைவு மூலக்கூறுகளைக் கவரும்போது இவ்விடைத் தாக்கங்கள் ஏற்படும். அயன்களின் ஏற்றம் , பருமன் , இருமுனைவுகளின் அளவு என்பவற்றில் இவ்விடைத்தாக்கங்களின் வலிமை தங்கியுள்ளது.
![download]()
இரு முனைவு – இருமுனைவு இடைத்தாக்கங்கள்
- இவ்வகையான விசைகள் நிலையான முனைவாக்கமுடைய முனைவு மூலக்கூறுகளுக்கிடையே காணப்படும்.
![download-1]()
ஐதரசன் பிணைப்பு
- ஐதரசன் பிணைப்பு என்பது ஐதரசன் அணு ஒன்று மின்னெதிர்த்தன்மையுடைய மூலகம் ஒன்றுடன் பங்கீட்டுரீதியாகப் பிணைந்துள்ளபோது புளோரீன் , ஒட்சிசன் , நைதரசன் போன்ற ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தனிச்சோடி இலத்திரனைக் கொண்ட வேறு ஒரு மின்னெதிர் மூலகம் உடன் பிணைந்திருக்கும் விசேட வகை நிலைமின்னியல் இடைத்தாக்கமாகும்.
![screenshot-32]()
• கூட்டங்கள் 15 , 16 , 17 என்பவற்றின் ஐதரைட்டுக்களின் கொதிநிலைகள் மாற்றமடையும் முறை ஐதரசன் பிணைப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.
![boiling-point]()
அயன்-தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்
ஏற்றமற்ற முனைவாக்கமற்ற ஒரு மூலக்கூறின் (உதாரணம் விழுமிய வாயுவின் ஒரு அணு) அண்மையில் ஏற்றமுடைய ஒரு துணிக்கையைப் புகுத்தும்போது அது அணு அல்லது மூலக்கூறின் முகிலை திரிபடையச் செய்யும்.
உதாரணம்:- KI நீர்க்கரைசலில் கரைக்கப்பட்ட I2 ஆனது I3– உருவாக்கல்.
இருமுனைவு-தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்
- இவ்வகையான கவர்ச்சி ஏற்றமற்ற முனைவாக்கமற்ற இனத்திற்கும் முனைவாக்கமுடைய இனத்திற்கும் இடையில் காணப்படும்.
உதாரணம்:- O2 ,I2 , Xe போன்ற முனைவாக்கமற்ற இனங்களை நீரில் கரைத்தல்.
கலைவு இடை ஈர்ப்புகள் (லண்டன் விசைகள்)
- முனைவாக்கமற்ற மூலக்கூறுகள் அல்லது அணுக்களுக்கிடையே உள்ள இடைத்தாக்கங்கள் கலைவு இடை ஈர்ப்புகள் எனப்படும்.
- முனைவாக்கமற்ற ஏதாவது ஒரு மூலக்கூறு அதன் கணநிலை இலத்திரன் முகில் உருமாற்றத்தினால் தற்காலிகமாக முனைவாக்கப்படலாம். இவ்வாறான மூலக்கூறின் முனைவாக்கத்தினால் வேறொரு முனைவாக்கமற்ற மூலக்கூறு தற்காலிகமாக முனைவாக்கப்படலாம். இவ்வாறான மூலக்கூறுகளுக்கிடையே உள்ள இடைத் தாக்கங்கள் கலைவு இடை ஈர்ப்புகள் எனப்படும்.
- இவ்வாறான ஈர்ப்பு விசைகள் எவ்வகையான இரு மூலக்கூறுகளுக்கிடையேயும் காணப்படும். எல்லா வகையான வன்தர்வாலிசு விசைகளிலும் பொதுவாக வலிமை குறைந்தது கலைவு இடை ஈர்ப்புகளாகும்.
- எனினும் கலைவு இடை ஈர்ப்பு வலிமை இருமுனைவு-இருமுனைவு இடைத்தாக்கங்களை மீறும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
| சேர்வை |
உருகுநிலை |
துணையிடை ஈர்ப்பு வகை |
| CH3F |
-142 ºC |
இருமுனைவு-இருமுனைவு இடைத்தாக்கங்கள் ,
கலைவு இடை ஈர்ப்புகள் |
| CCl4 |
-23 ºC |
கலைவு இடை ஈர்ப்புகள் |
ஓர் அலகு நேரத்தில் தாக்கிகள் / விளைவுகளின் செறிவில் ஏற்படும் மாற்றம் ‘ தாக்கவீதம் ‘ எனப்படும்.
அலகு – moldm-3s-1
இரசாயன தாக்கமொன்றின் தாக்கவீதத்தை பாதிக்கும் காரணிகள்
- செறிவு
- அமுக்கம்
- ஊக்கி
- ஒளி
- வெப்பநிலை
- திண்மபொருட்களின் மேற்பரப்பு
- செலுத்தப்பட்ட ஏற்றம்
- கலக்குதல், குலுக்குதல்
- கதிர் தொழிற்பாடு
பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட அங்கிகளின் உபயோகங்கள்
விவசாயத்துறை
- பூச்சிப் பீடைகளுக்கான எதிர்ப்புத் திறனை பயிர்களில் விருத்தி செய்தல்.
உதாரணம் : Bacillus thuringiensis Bacteria வில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகைப் பயன்படுத்தி, பருத்தி, சோயா, Canola போன்ற தாவரங்களின் பூச்சிப் பீடைகளுக்கு எதிர்ப்புத் திறனுடைய பேதங்களை உண்டாக்குதல்.
- Agrobacterium என்ற Bacteria வில் இருந்து பெறப்பட்ட gene ஐப் பயன்படுத்தி களைநாசினிகளுக்கு எதிர்ப்புத் திறனுடைய பயிர்களை உண்டாக்கல்.
- Erwina என்ற Bacteria வில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகுகளை நெற்தாவரத்தில் புகுத்தி தங்க அரிசி விருத்தியாக்கப்பட்டது.
மருத்துவத் துறை
- மனித இன்சுலின் தயாரித்தல்
- மனித வளர்ச்சி ஓமோன் தயாரித்தல்
- மனித குருதி உறைதல் காரணிகள் தயாரித்தல்
- Hepatitis B தடைப்பால் உற்பத்தி
- பரம்பரையலகு சிகிச்சைகளில் பாவிக்கப்படுகிறது.
கைத்தொழில் துறை
- இன்வற்டேஸ், கைமோசின், அமிலேஸ், பெக்ரீனேஸ் போன்ற நொதியங்களின் வர்த்தக முறையிலான தயாரிப்பு
- சில உணவுத் தயாரிப்புகளில் பயன்படுகிறது.
உதாரணம் : குளுட்டாமேற் தயாரிப்பு
பாரம்பரிய முறையில் மாற்றப்பட்ட அங்கிகளின் பயன்பாட்டினால் உருவாக்கக் கூடிய பிரச்சினைகள்
- பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட அங்கிகளில் இருந்து பெறப்படும் பதார்த்தங்கள் மனிதனில் மனித ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கக் கூடியவையாக இருக்கின்றன.
- ஒவ்வாமை விளைவுகள் ஏற்படல்
- நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புத் தன்மை மனிதனில் குடலில் வாழுகின்ற Bacteria களுக்கு ஏற்படல்.
- பாரம்பரிய முறையில் மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களில் இருந்து அயன் மகரந்த சேர்க்கை மூலம் ஏனைய தாவரங்களுக்கு இப்பரம்பரை அலகுகள் செல்லும் வாய்ப்பு இருப்பதனால் களைநாசினிகளுக்கு எதிர்ப்புத் திறன் உடைய களைகள் தோன்ற முடிதல்.
- மண் நுண்ணங்கிகள் பாதிப்படையலாம்.
- உயிர்ப்பல்வகைமை பாதிப்படையலாம்.
பரம்பரையலகு முளைவகைப் பெருக்கம்
- வெளியில் இருந்து அந்நிய பரம்பரை அலகு ஒன்றை மாற்றியமைத்தல் முறையினால் பற்றீரியா போன்ற விருந்து வழங்கி கலம் ஒன்றில் புகுத்தி அக்கலத்தை வளர்ப்பு செய்வதன் மூலம் புகுத்தப்பட்ட பரம்பரை அலகைப் பெருக்கம் அடையச் செய்தல் பரம்பரை அலகு முளைவகைப் பெருக்கம் எனப்படும்.
- இதன் உபயோகங்கள் :
- புகுத்தப்பட்ட பரம்பரை அலகின் பல பிரதிகளை பெருக்கம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளுதல்.
- முளைவகைப் பெருக்கம் அடையும் பரம்பரை அலகினால் உருவாக்கப்படும் புரதத்தைப் பிரித்தெடுத்தல்.
உதாரணம் : மனித இன்சுலின் தொகுப்பிற்குரிய பரம்பரை அலகை பிளாஸ்மிட் ஒன்றில் புகுத்தி இதனை Escherichia coli போன்ற ஓர் பற்றீரியாவினுள் புகுத்தி அதனை வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் இன்சுலினைப் பெறுதல்





பிரதான இயல்புகள் 














- இயுக்கரியோற்றா கலவகையுடையது.
- யாவும் பலகலமுடையவை.
- கருமென்சவ்வு உண்டு
- கலச்சுவர்கள் உண்டு. பிரதானம் – செலுலோசு மற்றும் அரை செலுலோசு, பெக்ரின்
- யாவும் ஒளிதற்போசணைக்குரியவை.
- உணவு ஒதுக்கு – மாப்பொருள்.
- இடப்பெயர்ச்சி இல்லை. சில புனரிகளில் பிசிர் அல்லது சவுக்குமுளை காணப்படும்.
Phylum Bryophyta
- ஈரலிப்பான தரை வாழிடத்தில் பொதுவாக காணப்படும்
- கலனிழையம் இல்லை
- புனரித்தாவரம் ஆட்சியானது. ஒளித்தொகுப்புக்குரியது. வித்தி தாவரம் சுயாதீனமானது. புனரி தாவரத்தில் தங்கி வாழும்.
- ஓரினவித்தி
- கருக்கட்டலுக்கு புற நீர் அவசியம்
- வித்துக்களைத் தோற்றுவிக்காது.
- பூக்களை தோற்றுவிக்காது
- Poganatum (பாசிதாவரம்) , Mosses

, Marchantia(ஈரலுருதாவரம்)
Phylum Lycophyta
- ஈரலிப்பான தரை வாழிடத்தில் பொதுவாக காணப்படும்
- கலனிழையம் காணப்படும்.
- வேர் தண்டு இலை எனும் பிரிவைக் காட்டக்கூடியது.
- வித்தித்தாவரம் ஆட்சியானது. புனரி தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
- ஓரினவித்தி அல்லது பல்லினவித்தி தோற்றுவிக்கும்
- கருக்கட்டலுக்கு புற நீர் அவசியம்
- வித்துக்களைத் தோற்றுவிக்காது.
- பூக்களை தோற்றுவிக்காது
- Sellaginella (ஓரினவித்தி), Lycopodium(பல்லினவித்தி)

![lyco]()
Phylum Pterophyta
- தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
- கலனிழையம் உண்டு.
- வித்தித்தாவரம் ஆட்சியானது. புனரித்தாவரம் சுயாதீனமானது. இரண்டும் ஒளித்தொகுப்புக்குரியது
- ஓரினவித்தி
- கருக்கட்டலுக்கு புற நீர் அவசியம்
- வித்துக்களைத் தோற்றுவிக்காது.
- பூக்களை தோற்றுவிக்காது
- Nephrolepis (பன்னம்)

![nepro]()
Phylum Cycadophyta
- தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
- கலனிழையம் உண்டு.
- வித்தித்தாவரம் ஆட்சியானது. இவை ஒளித்தொகுப்புக்குரியது. புனரித்தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
- பல்லினவித்தி
- கருக்கட்டலுக்கு புற நீர் அவசியமில்லை
- வித்துக்களைத் தோற்றுவிக்கும். நிர்வாண வித்துக்கள்.
- கிளைக்கொண்ட மகரந்தக் குழாயைத் தோற்றுவிக்கும். இது போசணையை அகத்துறிஞ்சும்.
- மந்தமான துணைவளர்ச்சி நடைபெறும்.
- ஒரு மடிய வித்தகவிழையம் காணப்படும்
- பூக்களை தோற்றுவிக்காது
- Cycas (மடுப்பனை)

![cycas]()
Phylum Coniferophyta
- தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
- கலனிழையம் உண்டு.
- வித்தித்தாவரம் ஆட்சியானது. இவை ஒளித்தொகுப்புக்குரியது. புனரித்தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
- பல்லினவித்தி
- கருக்கட்டலுக்கு புற நீர் அவசியமில்லை
- வித்துக்களைத் தோற்றுவிக்கும். நிர்வாண வித்துக்கள்.
- கிளையற்ற மகரந்தக் குழாயைத் தோற்றுவிக்கும். இது ஆண் புணரிகளை கடத்த உதவும்.
- ஒரு மடிய வித்தகவிழையம் காணப்படும்
- பூக்களை தோற்றுவிக்காது
- Pinus

![]()
Phylum Anthophyta
- தரைவாழ்வுக்கான இசைவாக்கம் காணப்படும்
- கலனிழையம் உண்டு.
- வித்தித்தாவரம் ஆட்சியானது. இவை ஒளித்தொகுப்புக்குரியது. புனரித்தாவரம் வித்தி தாவரத்தில் தங்கி வாழும்.
- பல்லினவித்தி
- கருக்கட்டலுக்கு புற நீர் அவசியமில்லை
- வித்துக்களைத் தோற்றுவிக்கும். மூடிய வித்துக்கள். பழங்களினுள் வித்து காணப்படும்.
- இலிங்கமுறை இனப்பெருக்க அலகாக பூக்களைத் தோற்றுவிக்கும்.
- கிளையற்ற மகரந்தக் குழாயைத் தோற்றுவிக்கும். இது ஆண் புணரிகளை கடத்த உதவும்.
- சூல் வித்துக்கள் சூல் வித்திலையால் மூடப்பட்டிருக்கும்.
- மும் மடிய வித்தகவிழையம் காணப்படும்
- பூக்களை தோற்றுவிக்காது
- பூக்கும் தாவரங்கள்
| Class Monocotyledoneae |
Class Dicotyledoneae |
| முளையம் ஒரு வித்திலையைக் கொண்டது. |
முளையம் இரு வித்திலையைக் கொண்டது. |
| நார்வேர்த்தொகுதி காணப்படும் |
ஆணிவேர்த்தொகுதி காணப்படும் |
| சமாந்தர இலை நரம்பமைப்புள்ள இலை |
வலையுரு இலை நரம்பமைப்புள்ள இலை |
| முப்பாத்துள்ள பூக்கள் |
நாற்பாத்துள்ள அல்லது ஐம்பாத்துள்ள பூக்கள் |
| பூக்களில் பூவுறை உண்டு. (தெளிவான புல்லிவட்டம், அல்லிவட்டம் இல்லை). |
தெளிவான புல்லிவட்டம், அல்லிவட்டம் உண்டு. |
| தண்டில் கலன்கட்டுக்கள் பரந்திருப்பதுடன் மாறிழையமும் காணப்படுவதில்லை. |
தண்டில் கலன்கட்டுக்கள் வளையமாகக் காணப்படுவதுடன் மாறிழையமும் உண்டு. |
| கலன்கட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும். |
கலன்கட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும். |
| Cocos, புல், நெல், பனை |
Rosa, Neem, Peepal |
![Singapore_coconut]() |
![banyan-2]() |
அசேதன சேர்வை
நீர்


- நீர் H,O மூலகங்கள் காணப்படுகின்றன.
- அவை H : O = 2 : 1 எனும் விகிதத்தில் காணப்படுகின்றது. எனவே, நீரின் மூலக்கூற்று சூத்திரம் H2O அதன் மூலக்கூற்று வடிவம்
![water-2d-flat]()
- இம் மூலக்கூற்று வடிவம் காரணமாக அதாவது ஒட்சிசனின் மின்னொதிரியல்பு காரணமாக நீர் மூலக்கூறில் இரு முனைவுத் தன்மை காணப்படுகின்றது.
![]()
- ஒரு மூலக்கூறின் மூலகங்களுக்கிடையில் / அணுக்களுக்கிடையில் நேர், எதிர் ஏற்றங்கள் காணப்படின் முனைவாக்கத் தன்மை காணப்படும். நீரில் இரு H அணுக்களும் நேர்ஏற்றம் பெறுவதால் இது இரு முனைவாக்கத் தன்மை எனப்படும்.
- நீர் மூலக்கூறின் இரு முனைவாக்கற் தன்மையால் அடுத்துள்ள நீர் மூலக்கூறுக்கிடையில் கவர்ச்சி விசை ஏற்படுத்தப்படும். இக்கவர்ச்சி விசை பிணைவு விசை எனப்படும்.
- இப்பிணைவு விசை காரணமாக அடுத்துள்ள நீர் கூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படுத்தப்படும் பிணைப்பு ஐதரசன் பிணைப்பு எனப்படும்.
நீரின் உயிரியல் முக்கியத்துவங்கள்
- நீரில் காணப்படும் இரசாயன, பௌதீக இயல்பு காரணமாக உயிர் அங்கிகளில் நீர் பல பிரதான தொழில்களை ஆற்றுகின்றது
| நீரின் இயல்பு |
உயிரிகளில் நீரின் பங்களிப்பு |
உதாரணம் |
| முனைவாக்கற் தன்மை |
சிறந்த கரைப்பானாக தொழிற்படுதல் |
- கலத்தின் முதலுருவிலும், கலச்சாறிலும் அனேக பதார்த்தங்கள் கரைந்து காணப்படல்
|
| அறைவெப்பநிலையில் நீர் திரவமாக காணப்படல் |
முதலுருவின் ஊடகம் |
- முதலுருவின் 65 – 90% நீர் காணப்படுகின்றது
|
| இரசாயன இயல்பு (H+,OH-ஆக பிரிகையடையும் தன்மை) அயனாக்கமடையும் தன்மை |
சில உயிர் இரசாயன செயன் முறைகளில் தாக்கியாக தொழிற்படுகின்றது (உயர் அனுசேப தாக்கங்களில் தாக்கியாக தொழிற்படல்) |
![]()
|
| உயர் ஒட்டற்பண்பு, பிணைவு விசை கொண்டிருத்தல் |
கலங்களில் வீக்கத்தை பேணல்
அங்கிகளில் பதார்த்தங்கள் கொண்டுசெல்லலும், தாவரங்களில் அகத்துறிஞ்சலும் கொண்டுசெல்லலும் |
- கலவிரிவு
- பூண்டு தாவரங்களில் ஆதாரம் அளித்தல்
- வீக்க அசைவுகள் (தொட்டாற்சுருங்கி)
- காவற்கலத்தின் அசைவு
- பூக்கள் மலர்தல்
- தாவரங்களில் நீரின் அகத்துறிஞ்சலும் சாற்றேற்றமும்.
- தாவரங்களில் உணவு கொண்டு செல்லல்
- மண் கரைசலிலிருந்து கனியுப்பு அகத்துறிஞ்சப்படல்
- விலங்குகளில் குருதியூடாக பதார்த்தங்கள் கொண்டு செல்லல்
|
| உயர் தன்வெப்ப கொள்ளளவு (ஓர் அலகு திணிவுடைய நீரின் வெப்பநிலையை உயர்த்துவதற்கு அதிகளவு வெப்பம் வழங்கப்பட வேண்டும்) |
ஒரு குறித்தளவு வெப்பம் நீர் சூழலுக்கு வழங்கப்பட்டாலோ / இழக் கப்பட்டாலோ நீரில் வெப்பநிலை மாற்றம் ஏற்படாது |
- சகல விலங்குகளினதும் உடல் வெப்பநிலையை ஒரு சிறிய வெப்பநிலை வீச்சத்தினுள் பேணப்படுகின்றது
|
| உயர் ஆவியாதலின் மறை வெப்பம்
(குறித்தளவு நீர் திரவத்திலிருந்து நீராவியாக மாறுவதற்கு கணிசமான வெப்பம் வழங்கப்பட வேண்டும்) |
உடல் மேற்பரப்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தல் |
- விலங்குகளில் வியர்த்தலின் போதும்
- தாவரங்களில் ஆவியுயிர்ப்பின் போதும் குளிர்ச்சியை ஏற்படுத்தல்.
|
| உயர் மேற்பரப்பு இழுவிசை |
சில நீர்வாழ் பூச்சிகளுக்கு வாழிடம் வழங்கல் |
- நீர்ச்சறுக்கி பூச்சி (நீர்படகோட்டி)
|
| உயர் உருகலின் மறைவெப்பம் |
உறையும் போது அதிகளவு வெப்பம் விரயமாக்கப்படுகின்றது,எனவே, நீர் உறைதல் தடுக்கப்படுகின்றது |
- நீர் சூழலிலும், கலங்களிலும் நீர் உறையாது திரவமாக காணப்படுகின்றது
|
| உறையும்போது ஏற்படும் கனவளவு அதிகரிப்பு |
நீர் நிலைகள் உறையும் போது உருவாகும் பனிக் கட்டிகள் நீர் சூழலின் மேற்புரத்திலும் திரவ நிலையில் காணப்படும் நீர் அடியிலும் காணப்படும் |
- பனிக்காலங்களிலும் நீர்வாழ் அங்கிகள் தப்பி பிழைக்க கூடியதாக காணப்படல்
|
| ஒளி ஊடுபுகவிடும் தன்மை |
நீர் சூழலில் ஒளி செல்ல கூடியதாக இருத்தல் |
- நீர் தாவரங்களும், அல்காக்களும் குறித்த ஆழம் வரை வாழக்கூடியதாக இருத்தல்
|
அங்கிகளில் நீரின் பிரதான தொழில்களாவன :
- முதலுருவின் உள்ளடக்கம்
- கரைப்பான்
- தாக்கி
- விறைப்புத் தன்மை / வீக்கம் வழங்கல்
- உயர் தாவரங்களில் பதியமுறை இனப்பெருக்கமே மிகச் சாதாரணமான இலிங்கமில்முறை இனப்பெருக்கமாகும்.
- தாவரங்களின் பதியப் பகுதிகள் இனம்பெருக்கும் அங்கங்களை உருவாக்கும்.
- வேர்த்தண்டுக் கிழங்கு , தண்டுக்கிழங்கு , குமிழ் , முகிழ் போன்றன நிலக்கீழ்த் தண்டுகள்.தரை மட்டத்தில் கிடையாக வளர்பவை ஓடிகள். குமிழம் காற்றுக்குரிய பகுதிகளில் இருந்து தோற்றுவிக்கப்படும். இடமாறிப் பிறந்த அரும்புகள் தண்டு தவிர்ந்த தாவரத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து தோற்றுவிக்கப்படும்.
- இவற்றுள் சில உணவைச் சேமித்து பல்லாண்டு வாழுகின்ற அங்கமாகக் காணப்பட்டு தகாத காலங்களைக் கழிக்கும்.
வேர்த்தண்டுக் கிழங்கு
- கிடையாக வளரும் நிலக்கீழ்த்தண்டு. பெரும்பாலும் மண் மேற்பரப்பை அண்மித்து இருக்கும். காற்றுக்குரிய அங்குரம் , செதிலிலைகள் , உறங்குநிலையிலுள்ள அரும்புகள் , வேர்கள் என்பவற்றுடன் இடம்மாறிப் பிறந்த வேர்களையும் கொண்டது.
- வேர்த்தண்டுக் கிழங்கிற்கான உதாரணங்கள் :- Musa, Zingiber, Curcuma, Canna
தண்டுக் கிழங்கு
- குறுகிய புடைத்த நிலைக்குத்தாக வளரும் நிலக்கீழ்த் தண்டு உறங்கு நிலையிலுள்ள அரும்புகள் , செதிலிலைகள் , காற்றுக்குரிய அங்குரம் , வேர்கள் ,இடம் மாறிப்பிறந்தவேர்கள் என்பவற்றைக் கொண்டவை.
- தண்டுக் கிழங்குக்கான உதாரணங்கள் :- Colocasia, Alocacia, Gladiolus
குமிழ்
- புடைத்த இலையடிகளால் தோற்றுவிக்கப்பட்ட குமிழ் கொண்ட மிகக் குறுகிய நிலக்கீழ்த் தண்டு.
- குமிழிற்கான உதாரணங்கள்:- Allium , Crinum
ஓடிகள்
- மண் மேற்பரப்பின் மேல் கிடையாக வளரும் பக்கக் கிளைகள் நிமிர்ந்த தண்டின் கக்கவரும்பில் இருந்து தோற்றுவிக்கப்படும். புதிய அங்குரங்கள் இடம் மாறிப்பிறந்த வேர்கள் என்பன கக்கவரும்பில் இருந்து தோன்றும்.
- ஒடிகளிற்கான உதாரணங்கள்:- Centella, Cyperus, Pistia
முகிழ்
- நிலக்கீழான தண்டின் கிளைகள் பருத்து சேமிப்பு அங்கமாகப் பயன்படும்.
- இவை உறங்கு நிலையிலுள்ள கக்கவரும்புகளையும் , செதிலிலைகளையும் கொண்டவை. பல்லாண்டு வாழும் அங்கமாகப் பயன்படும்.
- முகிழிற்கான உதாரணங்கள்:- Solanum
குமிழம்
- காற்றுக்குரிய தண்டுகளின் கக்கவரும்பு , இலைகள் கொண்ட சிறிய அங்குரமாக வளர்ச்சி அடையும். இவை பிரதான தண்டுகளில் இருந்து வேறாக்கப்பட்டு புதிய தாவரத்தை உற்பத்தியாக்கும்.
- குமிழத்திற்கான உதாரணங்கள்:- Ananas, Dioscoria
இடம்மாறிப் பிறந்த அரும்புகள்
- தண்டு தவிர்ந்த தாவரத்தின் ஏனைய பதியப் பாகங்களில் இருந்து அரும்புகள் உருவாதல். இலைகளில் இருந்து புதிய தாவரங்கள் தோன்றுதல்.
- இடம்மாறிப் பிறந்த அரும்புகளிற்கான உதாரணங்கள்:-Bryophyllum, Begonia
தாவரங்களைப் பதியமுறையில் இனப்பெருக்கும் முறைகள்
வெட்டுத் தண்டு
- கக்கவரும்புகள் கொண்ட தண்டுகளின் வெட்டுத் துண்டுகள் செயற்கையாக மண்ணில் நாட்டப்படுதல்.சிலவேளைகளில் ஒட்சின்களும் பயன்படுத்தப்படுகின்றது.
- வெட்டுத் தண்டின் பயன்பாட்டிற்கான உதாரணங்கள்:- Manihot, Ipomoea, Camelia , Rosa
அரும்பொட்டுதல்
- ஒரு தாவரத்தின் கக்கவரும்பை இன்னுமொரு வேருள்ள தாவரத்தின் தண்டிற்கு மாற்றி நடுதல்.
- மாற்றி நடப்படும் அரும்பு – ஒட்டுமுளை
ஒட்டுமுளை ஒட்டுக்கட்டையின் மீது ஒட்டப்படும் ஒட்டுமுளை , ஒட்டுக்கட்டை என்பன வேறுபட்ட பேதங்களை அல்லது நெருக்கமான உறவுள்ள இனங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
- ஒட்டுதல் முறையில் கக்கவரும்பு கொண்ட மரவுரித் துண்டைக் கவனமாக வெட்டியெடுத்தல் கூரிய கத்தியினால் ஒட்டுக்கட்டையின் மரவுரியைத் திறத்தல் , மாறிழையங்கள் தொடர்புறத்தக்கவாறு ஒட்டுமுளையை மாற்றி நடுதல் , ஒட்டுநாடாவினால் சுற்றிக்கட்டி ஒட்டுமுளையானது ஒட்டுக்கட்டையுடன் இணையும் வரை விடுதல் என்பன அடங்கும்.
- அரும்பொட்டுதலின் அனுகூலங்களாவன் தாவரங்களை விரைவாக இனப்பெருக்குதல் , தாய்த் தாவரத்தை ஒத்த இயல்புடைய தாவரங்களைப் பெறுதல் , வேறுபட்ட பேதங்களின் வேர்களையும் அங்குரங்களையும் இணைத்தல் போன்றன.
- அரும்பொட்டலிற்கான உதாரணங்கள் :- Rosa போன்ற அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் Mangifera போன்ற கனி கொடுக்கும் தாவரங்கள்.
தண்டொட்டுதல்
- ஒட்டுமுளையாக அரும்புகளிற்குப் பதிலாக அங்குரங்கள் பயன்படுத்தப்படுவது தவிரப் பல வழிகளில் அரும்பொட்டுதலை ஒத்தது.
தாவர இழைய வளர்ப்பு
- கிருமியழிக்கப்பட்ட , செயற்கையான வளர்ப்பு ஊடகங்களில் உள்ளக நிபந்தனையின் கீழ் தாவர இழையங்களை வளர்த்தல்.
- அநேகமான தாவரக் கலங்கள் totipotent அதாவது தாவரக் கலங்களிற்குப் பொருத்தமான நிபந்தனைகள் வழங்கப்படும் போது அவை பூரணமான தாவரமாக வளரக் கூடிய தகைமை உள்ளவை.
- வளர்ப்பு ஊடகங்களில் தாவர வளர்ச்சிப் பதார்த்தங்களின் பங்கு சைற்றோகைனினும் , ஒட்சின்களும் கலப்பிரிவிலும் , கலங்களினது வியத்தத்திலும் பங்கெடுக்கும். ஒட்சின் வேரினது வளர்ச்சியையும் , சைற்றோகைனின் அங்குர வளர்ச்சியையும் தூண்டும்.
- வளர்ப்பு ஊடகத்தின் கூறுகளாக நீர் , அசேதன போசணைப் பொருட்கள் , ஒரு காபன் மூலம் (சுக்குரோசு பெரும்பாலும் பயன்படுத்தப்படும்) , தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள் , வேறு தேவையான சேதன போசணைப் பதார்த்தங்கள் என்பன உள்ளடக்கப்படும்.
- வளர்ப்பு ஊடகத்தில் ஒட்சின் , சைற்றோகைனின்கள் என்பவற்றின் விகிதங்கள் வளர்ச்சி இயல்புகளைத் தீர்மானிக்கும்.
- முனையரும்பு , கக்கவரும்பு , தண்டு , இலை , கேசரம் , முளையம் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட தாவரப் பாகங்கள் , ஆரம்பத் தாவரப் பகுதிகளாக இழையவளர்ப்பை ஆரம்பித்து வைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
- ஊடகத்தைக் கிருமியழிக்கப்பட்ட நிபந்தனையில் பேணுதலும் தொற்று நீக்கப்பட்ட நிபந்தனையைப் பயன்படுத்தலும் முக்கியமானவை.இழைய வளர்ப்பில் ஆரம்பத் தாவரப் பகுதிகளில் இருந்து தோற்றுவிக்கப்படும் வியத்தமடையாத பிரிகையடையக் கூடிய கலங்களின் திணிவு மூடுபடை (Callus) எனப்படும்.
- வளர்ப்பு ஊடகத்தையும் , நிபந்தனைகளையும் திறமையாகக் கையாளுவதன் மூலம் மூடுபடை மீது வேர்கள் , அங்குரங்கள் என்பவற்றின் உருவாக்கத்தைத் தூண்ட முடியும்.
நுண்பெருக்கத்தின் படிகளும் , செயன்முறைகளும்.
- கூடிய எண்ணிக்கையில் தாவரங்களை உற்பத்தியாக்க நுண்பெருக்கம் (Micro Propogation) இழையவளர்ப்புத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
- பொருத்தமான ஆரம்பத் தாவரப் பகுதிகளைத் தயார்ப்படுத்தல் , ஒரு பொருத்தமான வளர்ப்பு ஊடகத்தைத் தொற்று நீக்கித் தயார்ப்படுத்தல் , வளர்ப்பு ஊடகத்தைத் தொடக்கி வைத்தல் , அங்குரங்களைத் தூண்டல் , அங்குரங்களைப் பெருக்குதல் , வேர்களைத் தூண்டுதல் , சிறு தாவரங்களைக் (Plantlets) காலவிணக்கப்படுத்தல் என்பன உள்ளடக்கப்படும்.
- நுண்பெருக்கத்தின் நன்மைகளாவன சிறிய பிரதேசத்தில் விரைவாக ஓரே பிறப்புரிமையமைப்பு உடைய தாவரங்களை கூடுதலான எண்ணிக்கையில் உற்பத்தி செய்தல் , நோயற்ற தாவரங்களை உற்பத்தியாக்கல் , வாழ்தகவு உள்ள வித்துக்களைத் தோற்றுவிக்க முடியாத தாவரங்களின் இனப்பெருக்கம் என்பவற்றுடன் இந்நுட்பமுறையில் காலநிலை நிபந்தனைகள் பற்றிக் கருத்திலெடுக்கவும் தேவையில்லை.
- நுண்பெருக்கம் தவிர மூலவுயிருருவின் உறைகனிக் காப்பு (Cryopreservation of germ plasm),பாரம்பரிய மாற்றியமைப்பு செய்யப்பட்ட தாவரங்களின் உற்பத்தி , ஒரு மடியத தாவரங்களைப் பெறுதல் போன்ற வேறு நோக்கங்களுக்காகவும் இழைய வளர்ப்பு பயன்படுத்தப்படுகின்றது.