01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42
43
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51Please Login to view the Question
52Please Login to view the Question
53Please Login to view the Question
54Please Login to view the Question
55Please Login to view the Question
56Please Login to view the Question
57Please Login to view the Question
58
59
60

 

இயற்கை உள்ளீடுகளும் மண்வளமும்

  • புவியானது இயற்கை முதலீட்டின் வளமாகும். இது அத்தியாவசிய உலோகங்கள், எரிபொருள் , தாவர போசணை போன்றவற்றின் முதலீடாக விளங்குகின்றது.
  • இந்த புவி முதல்களானது பல்வேறு இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளின் போது பயன்படுத்தப்படுகின்றது.
  • அத்துடன் புவியானது மண் வளத்தை அதிகரிக்கச் செய்யும் கழிவுகளை வளங்கும் ஒன்றாகவும் திகழ்கின்றது.
  • துரதிஷ்டவசமாக உலகமெங்கிலும் மீள்சுழற்சி செயன்முறை சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  • சில இடங்களில் கழிவுகள் அதிகமாகச் சேகரிக்கப்பட்டு தீங்கான சூழலை உருவாக்குகிறது.
  • கழிவுகள் அதிகமாகச் சேகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறும் தீங்கான பொருட்களினால் மண் வளம் குறைக்கப்படுவதுடன் வெவ்வேறு உயிரினங்களின் நிலவுகைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

நிலம் மாசாக்கலின் முதல்கள்

  • வீட்டுக்கழிவு
    • உணவுக்கழிவுகள் , மனிதக் கழிவுகள் , கழிவுநீர் , தோட்டக்கழிவுகள் , பிளாத்திக்கு என்பவற்றை உள்ளடக்கும்.
  • விவசாய இரசாயனப்பொருட்கள்
    •  பீடைகொல்லிகள்
      • பீடைகளை அழிப்பதற்கும் , கட்டுப்படுத்துவதற்கும் , தடைசெய்வதற்கும், எதிர்ப்பதற்கும் துன்பத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் பதார்த்தம் பீடைகொல்லி எனப்படும்.
      • பிரதானமாக இரண்டு வகுப்பு பீடைகொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றது.
        அவையாவன

        • இயற்கை பீடை கொல்லிகள்.
        • தொகுப்பு பீடை கொல்லிகள்.
      • இயற்கை பீடை கொல்லிக்கு Kohamba – Neem சக்திமிக்க சாரம் ஒரு உதாரணமாகும்.
      • உபயோகிக்கப்படும் முக்கிய பீடைகொல்லிகள் இரண்டு வகைப்படும்.
        •  களை கொல்லிகள் (களைகளைக் கொல்லுபவை.)
          பயிர்களுடன் போசணைக்கும் , சூரிய சக்திக்கும் போட்டி போடும் தாவரங்களை கொல்லுபவை.
        • பூச்சி கொல்லிகள்
          பயிர்களைப் பழுதடையச் செய்யும் பூச்சிகளைக் கொல்லுபவை.
      • பூச்சிபீடைகள் விளைச்சலை இரண்டு வழிகளில் பாதிக்கின்றன.அறுவடை செய்யப்படும் தாவரத்தின் பகுதிகளை உண்பவை அல்லது இலைகளை பழுதடையச் செய்வதனால் ஒளித்தொகுப்பு வீதத்தைக் குறைப்பதன் மூலம் உணவு உற்பத்தியைக் குறைப்பவை.
      • பூச்சிகொல்லிகள் அவை தொழிற்படும் முறையின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
      • செயற்கை பூச்சி கொல்லிகளின் முக்கிய மூன்று பிரிவுகள்
        • குளோரின் ஏற்றப்பட்ட ஐதரோகாபன் – chlorinated hydrocarbons (DDT இருகுளோரோ இருபீனைல் முக்குளோரோ எதேன்).
        • சேதன பொசுபேற்றுக்கள் – organo phosphorus (உதாரணம் : மெலத்தியன்- melathion)
        • பார உலோக உப்புகள் (உதாரணம் : செம்பு இரு தயோ காபமேற்று -Copper
          dithiocarbomates )

சீரிய பீடை கொல்லிகள் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்

  1. குறிப்பாக குறித்த பீடையை மாத்திரம் கொல்லும் பீடைகொல்லியாக இருத்தல் வேண்டும்.
  2. சூழலில் அல்லது மண் நீர்த்தொகுதியில் இலகுவாக உயிர்படியிறக்கத்திற்கு உட்பட வேண்டும்.
  3. பீடைகொல்லிக்கு எதிராக பீடைகள் எதிர்ப்புச் சக்தியை விருத்தி செய்யக் கூடாது.
  4. மலிவானதாகவும் மனிதனுக்கு நச்சுத்தன்மை அற்றதாகவும் இருத்தல் வேண்டும்.

பீடை கொல்லிப் பாவனையால் ஏற்படும் பாதகமான விளைவுகள்

  1. பீடைநாசினிகள் எமது உணவுகளில் படிந்து தீங்கை ஏற்படுத்தலாம். இதன் அளவு அதிகமாக இருக்கும் போது அது நஞ்சூட்டிவிடும்.
  2. பிரிகைடையாது உயிரியல் திரட்சியடையும் பீடைகொல்லிகள் , உணவு சங்கிலியினூடாக செறிடைவதால் இதன் மட்டம் ஒரு பில்லியனின் ஆயிரம் பகுதிகளாக அல்லது மில்லியனின் பகுதிகளாக காணப்படும். உதாரணம்: DDT
  3. இது சூழலைப் பாதிக்கின்றது. பூச்சிகளை மாத்திரம் கொல்லாது , மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காததும் , மனிதனுக்கு உதவும் , நன்மை தரும் உயிரினங்களையும் அழிக்கும்.
  4. ஒரே வகையான பீடை கொல்லிகளை தொடர்ந்து பாவிப்பதால் , எதிர்ப்புத் தன்மையுள்ள பீடைகள் தோன்றும். இயற்கை தேர்வின் மூலம் எதிர்ப்புத் தன்மை கொண்ட பீடைகள் அதிரிகரிக்கப்படும். இதனால் பீடை கொல்லிகள் வினைத்திறனற்றதாகின்றன. அத்துடன் இயற்கை இரைகௌவிகள் பீடை கொல்லிகளினால் அழிக்கப்படுகின்றன. இது பீடைகளை ஆரம்பத்தில் இருந்ததிலும் பார்க்க விரைவாகப் பெருகச் செய்கின்றது.
  • வளமாக்கிகள்
    •  தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான கனியுப்புக்களையும் , போசணைப் பதார்த்தங்களையும் வழங்கி அவற்றை விரைவாக வளர்ச்சியடையச் செய்பவை வளமாக்கிகள் எனப்படும். உதாரணம் : NPK
    • மிகவும் முக்கியமான கனியுப்பு அயன்களாகிய நைத்திரேற்று , பொசுப்பேற்று, பொற்றாசியம் பெருமளவிலும் சில சுவட்டு முலகங்கள் சிறிதளவிலும் தாவர வளர்ச்சிக்கு அவசியமாகும்.N%, P2O5% , K2O% என NPK தெரிவிக்கப்படும்.
    • வளமாக்கிகள் இரு முக்கிய வகைகளாக பிரிக்கப்படும். ஒவ்வொன்றும் தன்னகத்தே நன்மைகளை கொண்டுள்ளன.
      • இயற்கை வளமாக்கிகள் சேதனப் பதார்த்தங்களாகும். இது சாக்கடை கழிவுகள், சேறுகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
      • செயற்கை வளமாக்கிகள் அசேதனப் பதார்த்தங்களாகும். அவை தூய இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணம் : NH4NO3 தூள்களாகவோ சிறு உருண்டைகளாகவோ காணப்படும்.
      • இயற்கை வளமாக்கிகள் பரந்தளவிலான போசணைப் பதார்த்தங்களை கொண்டுள்ளன.மெதுவாகவே போசணைக்கூறுகளை வெளியிடுவதனால் நீண்டகால விளைவை ஏற்படுத்தும். இவை சூழலுக்கு குறைந்தளவு தீங்கை ஏற்படுத்தும். பயிர்ச்செய்கைக்கு உகந்தது. மலிவானவை.
      • மண்ணின் இழைய அமைப்பை விருத்தி செய்யும்.
      • இடத்திற்கு இடம் கொண்டுசெல்லும் செலவீனமும் அதனைப் பிரயோகிப்பதற்கான செலவீனமும் அதிகமானது. அத்துடன் சீரிய போசாக்குச் சமநிலை ஏற்படாமல் போகலாம்.
      • செயற்கை வளமாக்கிகளை இடத்துக்கிடம் கொண்டு செல்லலும் விநியோகமும் இலகுவானது. அத்துடன் தேவைப்படும் கனியுப்பு அயன்களை சேர்த்து இலகுவில் எமது இலக்கை அடைய முடியும்.அத்துடன் சேர்க்கப்படும் கனியங்களின் அளவை செம்மையாக கட்டுப்படுத்த முடியும்.
      • இவற்றின் தொடர்ச்சியான பாவனை காரணமாக மண்ணின் இயற்கை தன்மை அல்லது கட்டமைப்பு பாதிக்கப்படுவதால் மண்ணின் வளம் குன்றும். இலகுவாக கழுவிச் செல்லக் கூடியவை. இதனால் மேற்பரப்பு நீர் நிலைகள் காலப்போக்கில் நற்போசணையாதலுக்கு உட்படும்.
      • இரசாயன வளமாக்கிகளால் நிலக்கீழ் நீரின் தரமும் பாதிப்படையும்.
        உதாரணம் : NO3¯

பார உலோகங்கள்

  • பார உலோகங்கள் குடிநீரில் பரவி நிலத்தை மாசடையச் செய்யும்.
  • பார உலோகங்களை உணவுடன் அல்லது நீருடன் உள்ளெடுப்பதால் பல்வேறு உடற்தீங்குகள் ஏற்படும்.
  • ஈயம் உடலில் கூடுதலான அளவில் சேர்வதால் புத்திக்கூர்மையின் அளவு குறைவடையும்.

e – கழிவு

  • e – கழிவு எனும் பதமானது எல்லா இலத்திரனியல் மின்னியல் கருவிகள் என்பவற்றில் இருந்து உருவாகும் கழிவுகளை இனங்காணப் பயன்படுத்தப்படும். அவற்றில் பின்வருவன உள்ளடக்கப்படும். பாவித்த கணனிகள் , இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பேசிகள் தொலைக்காட்சிப் பெட்டிகள் , ஒலித்தொகுதிகள் , CFL மின்குமிழ்கள் , மின் / இலத்திரனியல் துணைப்பாகங்கள்.
  • துரித தொழில்நுட்ப மாற்றம் , குறைந்த ஆரம்ப செலவு , கூடிய பாவனைக்காலம் போன்றன e-கழிவுகளால் தோன்றும் பிரச்சினைகளின் அளவை அதிகரித்து நேற்றைய இலத்திரனியல் கனவை இன்றைய சூழல் தாக்கமாக மாற்றமடையச் செய்துள்ளன.
  • e – கழிவுகளிலிருந்து வெளியேறும் தீங்கான இரசாயனப் பொருட்களாவன உலோக ஈயம் , இரசம் , கட்மியம் ,பெரிலியம் , ஆசனிக்கு , பொலிவைனைல் குளோரைட்டுக்கள் , பொலி குளோரீனேற்றம் செய்யப்பட்ட இரு பீனைல்கள்  போன்றனவாகும்.
  • PVC ஐக் கொண்ட e – கழிவுகளை எரிப்பதனால் தீங்கான வாயு விளைவுகள் உருவாகும்.

கழிவு முகாமைத்துவம் (3R முறைமை)

   பாவனையைக் குறைத்தல் , மீளப் பாவித்தல் (Reduce, Reuse)

  • கழிவுகளைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள முறை அவற்றை உருவாக்காமல் விடுதலாகும். புதிய ஒரு விளைபொருளை உருவாக்குவதற்கு கூடுதலான மூலப்பொருட்களும் சக்தியும் தேவைப்படுகின்றது. மூலப்பொருட்கள் புவியிலிருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும். அத்துடன் உருவாக்கும் விளைபொருளானது அது விற்பனை செய்யப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவே இயற்கை மூலப்பொருளைப் பாதுகாக்கவும் , சூழலைப் பாதுகாக்கவும் , பணத்தை மீதப்படுத்தவும் சிறந்த முறைகளாவன பாவனையைக் குறைத்தலும் மீளப்பாவித்தலுமாகும்.
  • வேறு பதார்த்தங்களின் உற்பத்தியில் மூலப்பொருளாக பயன்ப்படுத்துதல்
    • திண்மக் கழிவுகளை வேறு பொருட்கள் தயாரித்தலில் பயன்படுத்தல்.
    • பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவங்களில் உள்ள குரோமியம் Cr(OH)3 ஆக MgO ஐ உபயோகித்து வீழ்படிவாக்கி  மீளவும் பதனிடும் செயன்முறையில் பயன்படுத்தலாம்.
  • சக்தியை பெறுவதற்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தல்
    • உலர்ந்த கழிவுப் பொருட்களை (குப்பை) எரிபொருட்களாக பயன்படுத்தலாம்.இலங்கையில் கழிவுப் பொருட்களின் 80% சேதனப் பதார்த்தங்களாகும். அவற்றை சக்தி முதல்களாக மாற்றலாம்.      
    • (CHO)n + O2 (g) CO2 (g) + H2O(g) +வெப்பம்
      • தொழிற்சாலைகளில் இவ் வெப்பத்தை பயன்படுத்தலாம்.

மீள் சுழற்சி – Recycling

  • வீசி எறியப்படும் பொருட்களை சேகரித்து புதிய விளைபொருள்களாக மாற்றும் செயன்முறை மீள்சுழற்சி எனப்படும்.
  • இலங்கையின் குப்பை கூளங்களில் 80% இற்கு மேலானது சேதனப் பதார்த்தங்கள் என்பதால் திண்மக் கழிவுகளை மின்னை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளாக  பயன்படுத்தலாம்.
  • உலோகங்கள் பெறுமதிமிக்க வளங்களாகும். உலோகக் கழிவுகளை வெட்டிப் புதைக்காது அவற்றை சேகரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல் மிகவும் நன்று. இது பூமியின் இரும்பு இருக்கைகளை மீதப்படுத்துவதுடன் சக்தி செலவீனத்தையும் மீதப்படுத்தும்.

மீள்சுழற்சி முறையினால் ஏற்படும் நன்மைகள்

  • சக்தி சேமிப்பு.
  • இயற்கை வளங்களின் சேமிப்பு.
  • பாரதீனம் செய்யும் செலவீனத்தை குறைக்கின்றது.
  • உள்நாட்டு அதிகார சபைக்கு ஓர் வருமானமாக அமைகின்றது.

உரமாக்கல் – Composting

  • புதிய தாவரங்களின் உயிர்த்திணிவில் C:N விகிதம் 100:1 ஆகும். திண்ம சேதனப்பதார்த்தங்கள் நுண்அங்கிகளினால் (பக்ரீறியா , பங்கசு) பிரிகைக்கு உட்படும்போது C:N விகிதம் 10:1 ஐ உடைய உக்கல் உண்டாகின்றது.
  • மண்ணில் காணப்படும் சேதனப் பதார்த்தங்களில் C:N விகிதம் மிகவும் உயர்வாக காணப்படுகின்றது. எனவே சேதனப் பதார்த்தங்களை பிரிகையடைச் செய்யும் போசணைப் பதார்த்தங்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு நைதரசன் எல்லைப்படுத்தும் காரணியாக அமையும். C:N விகிதத்தை குறைப்பதற்கு உரமாக்கல் பயன்படுத்தப்படலாம்.
  • வைக்கல் மண்ணுக்கு சேர்க்கப்படும் பொழுது C:N = 80:1 விகிதத்தை குறைப்பதற்காக பொதுவாக நைதரசன் வளமாக்கிகள் சேர்க்கப்படுகின்றது.
  • சேதனப்பதார்த்தங்கள் ஈரலிப்பான நிலையில் வளியில் சேகரித்து வைக்கப்படும் பொழுது நைதரசன் நுண்அங்கிகளில் அமினோஅமிலங்களாகவும் புரதங்களாகவும் சேமிக்கப்படும் வேளையில் காபனீரொட்சைட்டும் , நீரும் வெளியேறுகின்றது.
  • உரத்திற்கு வளமாக்கிகள் சேர்க்கப்படுவதால் நுண்ணங்கிகளின் தொகை அதிகரிக்கப்பட்டு உரமாக்கல் வேகம் அதிகரிக்கின்றது.

உயிர்வாயு உற்பத்தி-Biogas production

  • ஒட்சிசன் அற்ற நிலையில் சேதனப் பதார்த்தங்களை உடைத்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வாயுவே உயிர்வாயு ஆகும்.
  • இறந்த தாவரங்கள் , விலங்குகள் , விலங்குக்கழிவுகள் , சமையல் அறைக் கழிவுப் பொருட்கள் போன்ற சேதனக் கழிவுகள் என்பன உயிர்வாயு எனப்படும் வாயு எரிபொருளை உருவாக்க பயன்படுத்தப்படும்.
  • உயிர்வாயு உயிர்த் தோற்றுவாயுடைய பொருட்களில் இருந்து உருவாக்கப்படுவதுடன் ஒரு வகையான உயிரியல் எரிபொருள் ஆகும்.
  • காற்றின்றிய சமிபாடு அல்லது நொதித்தலின் மூலம் உயிர்வாயு உற்பத்தி
    செய்யப்படுகின்றது.
  • உயிர்வாயுவில் பிரதானமாக மீதேன் , காபனீரொட்சைட்டு காணப்படுவதுடன் சிறிய அளவில் ஐதரசன் சல்பைட்டு , நீர் போன்றனவும் காணப்படும்.

சாம்பராக்கல்- Incineration

  • ஒட்சியேற்றப்படக் கூடிய பதார்த்தங்கள் பூரண தகனமாவதற்குரிய வெப்பநிலையை சாம்பராக்குவதற்கு உபயோகிக்க வேண்டும்.
  • அப்பொழுது சாம்பல் , கண்ணாடி , உலோகம் மற்றும் பதார்த்தங்கள் எஞ்சியிருக்கும். 770-970ºC வெப்பநிலை இதற்கு உபயோகிக்கப்படும்.
 
  • இரு  தனிமின்வாய்கள்  இணைக்கப்பட்ட  அமைப்பு  ஓர்  எளிய  மின்கலம்  ஆகும்.
  • ஓர்  எளிய  மின்கலம்  தொழிற்படும்  தொகுதி  சமநிலை  தொகுதியன்று.

  • நியம மின்வாய் அழுத்தப் பெறுமானம் / தாழ்த்தல் அழுத்தப் பெறுமானம் கூடியது  கதோட்டு ஆகும். நியம மின்வாய் அழுத்தப் பெறுமானம் / தாழ்த்தல் அழுத்தப் பெறுமானம் கூடியது அனோட்டு ஆகும்.
  • எளிய  மின்கலத்தின்  வரிப்படம்  IUPAC  முறையில் வரையப்படுமாயின்  வலது பக்கத்தில் தாழ்த்தல் அழுத்தம்  கூடிய  மின்வாயும்  (கதோட்டு),  இடது  பக்கத்தில்  தாழ்த்தல்   அழுத்தம்  குறைந்த  மின்வாயும் (அனோட்டு)   வரையப்படல்  வேண்டும்.
  • கரைசலின்  ஏற்றச்சமநிலையை  பேணும்  பொருட்டு  உப்புப்பாலம்  பயன்படுத்தப்படும்.
  • உப்புப்பாலத்தை   தாயாரிப்பதற்கு  செறிந்த  KNO3, செறிந்த NaNO3,  செறிந்த NH4NO3,  செறிந்த NaCl  களில் தோய்த்த வடிதாள்கள்   பயன்படுத்தப்படும்.
  • மின்கலம்  தொழிற்படும்  போது   தாழ்த்தல் அழுத்தம்  கூடிய  மின்வாயில் தாழ்த்தல் தாக்கமும்  தாழ்த்தல்   அழுத்தம்  குறைந்த  மின்வாயில்   ஒட்சியேற்றல்  தாக்கமும்  நிகழும்.
    • H2(g) மின்வாய் தாக்கம் :   2H+(aq)  +  2e  →  H2(g)
    • Zn(s)  மின்வாய் தாக்கம் :  Zn(s)  →  Zn2+(aq) + 2e
    • மின்கலத்தாக்கம் :  2H+(aq)  +  Zn(s)  →  H2(g)  +  Zn2+(g)
  • இம்மின்கலம்  தொழிற்படும்  போது  வெளிச்சுற்றில் Zn  மின்வாயிலிருந்து  ஐதரசன் மின்வாயை  நோக்கி  en கள் பாயும்.  எனவே  நியம  ஐதரசன்  மின்வாயுடன்  ஒப்பிடும்  போது   நியம  Zn  மின்வாயில்  en செறிவு  அதிகம்.

உப்புப்பாலத்தின் பிரயோகங்கள் :

  • மின்கலத்தின் மின் நடுநிலையை பேணுதல்.
  • அனோட்டு கதோட்டை இணைப்பதன் மூலம் மின்சுற்றை பூர்த்தி செய்தல்.

கலத்தின் மின்னியக்க  விசை

  • மின்னோட்டம் கலத்தின் ஊடாகப் பாயாத போது இரண்டு மின்வாய்களுக்கிடையிலான அழுத்த வித்தியாசமானது மின்னியக்க விசை என வரையறுக்கப்படும்.
  • மின்னியக்க விசையைப் பாதிக்கும் காரணிகளாவன; வெப்பநிலை, மின்பகுபொருளின் செறிவு, மின்வாயின் தன்மை, மின்பகுபொருளின் தன்மை என்பனவாகும்.
  • இது மின்வாய்களுக்கிடையிலான தூரம், மின்வாய்களின் மேற்பரப்பு என்பவற்றில் தங்கியிருப்பதில்லை.
  • கலத்தின் மின்னியக்கவிசை  எப்போதும்  நேர் பெறுமானமாக  அமைய வேண்டும்.

கிப்ஸின் சுயாதீன சக்திமாற்றம்

 

அதிகளவில் காணப்படும் தாவரவர்க்கம், பிரதேசத்துக்குரிய சிறப்பியல்பான காலநிலை, குறித்த சூழலுக்கான அங்கிகளின் இசைவாக்கம் என்பவற்றை கருத்திற்கொண்டு பாகுபடுத்தப்படுவதும் உலகில் பெரும் பரப்புக்களில் வியாபித்துள்ளதுமான  பிரதான  சூழற்றொகுதிகள்  உயிரினக்கூட்டங்கள்  எனப்படும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உலகில் எட்டு பிரதான தரைக்குரிய உயிரினக்கூட்டங்களும் பல சிறிய உயிரினக்கூட்டங்களும் காணப்படுகின்றன.
உலகின் தரைக்குரிய எட்டு பிரதான உயிரினக் கூட்டங்களாவன;

  • அயனமண்டலக் காடுகள்
  • சவன்னா
  • பாலைவனம்
  • பரட்டைக்காடு
  • இடைவெப்பவலயப் புல்வெளிகள்
  • இடைவெப்பவலய அகன்றஇலைக்காடுகள்
  • தைகா (கூம்புக்காடுகள்)
  • துந்திரா (Tundra)

அயனமண்டலக் காடுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பரம்பல் : அயனமண்டல வலயத்தில் 30°  வட அகலாங்குக்கும் 30°  தென் அகலாங்குக்கும் இடையில் அமைந்துள்ளது.
  • அயனமண்டலக் காட்டி ல் இரு பிரதான வகைகள் உண்டு.
  1. அயனமண்டல மழைக்காடு (Tropical rain forest)
  2. அயனமண்டல உலர்காடு (Tropical dry forest)

(1)  அயனமண்டல மழைக்காடு (Tropical rain forest)

  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை 25°C  தொடக்கம் 27°C  சீரானது.
    • உயர் மழைவீழ்ச்சி – 2500 mm – 4000 mm (வருடாந்த மழைவீழ்ச்சி).
    • உலர் காலநிலை இல்லை.
    • வளியின் சாரீரப்பதன் உயர்வு
  • தாவர இயல்புகள்  :
    • உயிர்ப்பல்வகைமை மிக அதிகம்.
    • படையாதல் சிறப்பாக காணப்படும்.
    • விதானப்படை மூடியது.
    • அகன்ற இலை கொண்ட என்றும் பசுமையான மரங்கள் ஆட்சியாக காணப்படும்.
    • மேலொட்டிகள், மரமயவேறிகள் அதிகம் காணப்படும்.
  • விலங்குகள் :
    • அதிகளவில் விலங்குப் பல்வகைமை காணப்படும்.
    • முலையூட்டிகள், பறவைகள், நகருயிர்கள், ஈரூடகவாழிகள், பூச்சிகள் அதிகளவில் காணப்படும். இதில் பெரிய முலையூட்டிகள் குறைவு.
  • மனித தலையீடு :
    • அபிவிருத்தி, விவசாயம் போன்ற தேவைகளுக்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
  • (உ – ம்) : அமேசன்  (Ameson), மடகஸ்காரின் கொங்கோ காடுகள், சிங்கராஜவனம், Queen island – Austrailia.

(2)  அயனமண்டல உலர்காடு (Tropical dry forest)

  • காலநிலை இயல்புகள் :
    • மழைவீழ்ச்சி குறைவு.
    • வருட மழைவீழ்ச்சி 1500 mm – 2000 mm.
    • வெப்பநிலை 30 – 35°C.
    • நீண்ட உலர் காலம் காணப்படும்.
    • வளியின் சாரீரப்பதன் குறைவு.
  • தாவர இயல்புகள்  :
    • தெளிவான படையாதல் இல்லை / குறைவு.
    • விதானப்படை தொடர்ச்சியற்றது. வெளிப்பாட்டுப் படையில்லை.
    • ஓரளவு உயரமான மரங்கள்.
    • நன்கு கிளைத்த தண்டு. தண்டின் மேற்பரப்பு / சுற்றுப்பட்டை அழுத்தமற்றது.
    • இலைகள் சிறியவை. தடித்தவை.
    • என்றும் பச்சையான மரங்களும் இலையுதிர் மரங்களும் உண்டு.
    • அயன மண்டல மழைக்காட்டுடன் ஒப்பிடுகையில் உயிர்ப்பல்வகைமை / இனப் பல்வகைமை குறைவு.
    • உள்நாட்டுக்குரிய இனங்கள் குறைவு.
    • மழைக்காலத்தில் தரைக்குரிய படை நன்கு வளர்ந்து காணப்படும்.
  • விலங்குகள் :
    • பெரிய முலையூட்டிகள் அதிகம்.
    • பறவைகள், பூச்சிகள் காணப்படும்.
  • மனித  தலையீடு :
    • அபிவிருத்தி, விவசாயம் போன்ற தேவைகளுக்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

சவன்னா  Please Login to view the Question

  • பரம்பல் :அயன மண்டலத்தில் 30°  வட அகலாங்குக்கும் 30°  தென் அகலாக்கும் இடையில் காணப்படும்.
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை 24 – 29°C.
    • மழைவீழ்ச்சி குறைவு. வருடாந்த மழைவீழ்ச்சி 300mm – 500 mm.
    • நீண்ட உலர் காலம் காணப்படும்.
  • தாவர இயல்புகள்  :
    • உயர்ந்து வளரும் புற்களால் தரை மூடப்பட்டுள்ளது.
    • இடையிடையே அதிக உயரமில்லாத மரங்கள் காணப்படும். தீக்கெதிர்ப்புள்ள சுற்றுப்பட்டையை இம்மரங்கள் கொண்டுள்ளன.
    • மேய்ச்சலுக்கு சகிப்புத் தன்மையுள்ள பூண்டுகள் உண்டு.
  • விலங்குகள் :
    • பெரிய தாவர உண்ணி விலங்குகளின் கூட்டம் அதிகம் காணப்படும்.
    • இவ்விலங்குகளை இரையாக்கும் இரைகௌவிகளும் காணப்படும்.
  • மனிதத் தலையீடு :
    • ஆரம்பகால மனிதன் சவன்னாவில் வாழ்ந்துள்ளான். இதனால் தொடர்ச்சியாக மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரிய முலையூட்டிகள் மிகையாக வேட்டையாடப்படுவதால் அழிக்கப்பட்டுள்ளன.
  • (உ – ம்) : ஆபிரிக்கா, பிரேசில், அவுஸ்திரேலிய காடுகள்.

பாலைவனம்

  • பரம்பல் : அயன மண்டலத்தில் 30°  வட அகலாங்குக்கும்,  30° தென்  அகலாங்குக்கும் இடையில் காணப்படும்.
  • காலநிலை இயல்புகள் :
    • – 30° – + 50°C  வெப்பநிலை.
    • மழைவீழ்ச்சி மிக குறைவு. வருடாந்த மழைவீழ்ச்சி  300 mm ஆகும்.
    • நீண்ட உலர் காலம் காணப்படும்.
  • தாவர இயல்புகள் :
    • வறள் நிலத்தாவர இசைவாக்கங்களை பெரும்பாலும் கொண்டுள்ளன. தடித்த புறத்தோல். இலைகள் முட்களாக திரிபடைந்திருத்தல். குழிகளில் அமைந்த இலைவாய்கள். இலையின் பரப்பு குறைக்கப்பட்டிருத்தல். நீர் சேமிப்பு இழையங்கள். பெரும்பாலும் C4  ஒளித்தொகுப்புடையவை. (நீரிழப்பு குறைவு) ஆழமான வேர்த்தொகுதியை கொண்டவை.
    • முட்கள் பெருமளவில் உள்ளதால் தாவர உண்ணிகளிலிருந்து தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
  • விலங்குகள் :
    • பெருமளவில் இராக்காலத்துக்குரியவை.
    • சில விலங்குகள் ஒருபோதும் நீர் எடுக்காதவை. இவை தாம் உணவாக்கும் வித்துக்களை அனுசேபத்தாக்கத்திற்குள்ளாக்கி அதிலிருந்து நீரை பெறும்.
  • மனித தலையீடு :
    • நகராக்கல், நீர்ப்பாசனம் செய்யப்படும் விவசாயம் போன்றவற்றுக்காக பாலைவனங்கள் அழிக்கப்படுகின்றன.
  • (உ – ம்) : சகாரா பாலைவனம் – Africa,  அரிசோனா பாலைவனம் – America,  சில இடை வெப்பவலய பாலைவனங்கள் – கோபி பாலைவனம்

பரட்டைக் காடு

  • பரம்பல் : இடை வெப்பவலயம். (Austrailia, Newzeland, Keliphornea, South Africa காடுகள்)
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பருவகாலத்திற்கேற்ப வேறுபடும். (-30°C – 30°C )
    • மழைவீழ்ச்சி பருவத்திற்குரியது. வருடாந்த மழைவீழ்ச்சி 300 – 500mm.
  • தாவர இயல்புகள் :
    • இனப் பல்வகைமை அதிகம்.
    • சிறிய மரம், புல்பூண்டு, செடிகள் காணப்படும்.
    • தீ, உலர்தலுக்கு இசைவாக்கமுடையவை. சில வித்துக்கள் தீ ஏற்பட்ட பின்பே முளைக்கக் கூடியவை.
  • விலங்குகள் :
    • சிறிய Mammalians,  Amphibians, Reptiles, Aves.
  • மனித தலையீடு :
    • நகராக்கல், நீர்ப்பாசனம் செய்யப்படும் விவசாயம் போன்றவற்றுக்காக பாலைவனங்கள் அழிக்கப்படுகின்றன.

இடை வெப்பவலய, அகன்ற இலைக்காடு

  • பரம்பல் : இடை வெப்பவலயம். (Canada, USA, Urop, Austrailia, Newzeland காடுகள்)
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பருவகாலத்திற்கேற்ப வேறுபடும். (-30°C – 30°C )
    • மழைவீழ்ச்சி பருவத்திற்குரியது. வருடாந்த மழைவீழ்ச்சி 300 – 500mm.
  • தாவர இயல்புகள் :
    • விதானப்படை மூடியது. (அயனமண்டல மழைக் காட்டின் மூடலிலும் குறைவு)
    • மேலொட்டிகள், ஏறிகள் குறைவு.
    • குளிர் காலங்களில் மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன.
    • ஆட்சியான மரங்கள் அதிகம் உயரமற்றவை. (30m)
  • விலங்குகள் :
    • குடிபெயரும் பறவைகள் அதிகம் உண்டு.
    • சிறிய Mammalians, Reptiles, Insects உண்டு.
  • மனித தலையீடு :
    • விவசாயம், வெட்டு மரங்களுக்காக பெருமளவு  காடுகள் அழிக்கப்படுகின்றன.

இடை வெப்பவலய  புல்வெளி

  • பரம்பல் :  இடை வெப்ப வலயம். ( Veld – South Africa, Pampus – Argentina, Downs – Austrailia )
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பெருமளவில் மாறுபடும். (-30°C – 30°C)
    • வருடாந்த மழைவீழ்ச்சி  300 – 1000 mm.
  • தாவர இயல்புகள் :
    • புற்கள், பூண்டுகளால் தரை மூடப்பட்டுள்ளது.
    • தீ, வறட்சிக்கு இசைவாக்கமுடையவை.
    • பருவத்திற்குரிய வறட்சி. இடையிடையே காட்டுத்தீ, பெரிய முலையூட்டிகளின் மேய்ச்சல் போன்ற காரணங்களால் மரம், செடிகள் விருத்தியடைதல் தவிர்க்கப்படும்.
  • விலங்குகள் :
    • மேய்ச்சலுக்குரிய பெரிய முலையூட்டிகள் அதிகம் காணப்படும்.
  • மனித தலையீடு :
    • விவசாயத்திற்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன. இது விவசாயத்திற்கு வளமான நிலமாக அமைகின்றது. இங்கு ஆழமாக மண் உண்டு. அதிகளவில் போசணைப் பொருட்களுமுண்டு.

தைகா / கூம்புக்காடு Please Login to view the Question

♦  உலகில் மிகப்பெரிய உயிரினக் கூட்டம் இதுவாகும்.

  • பரம்பல் : வட இடை வெப்பவலயத்தின் வடக்குப் பகுதி. ( Norve, Suedan காடுகள் )
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பருவ காலத்திற்கேற்ப பெருமளவில் வேறுபடும். ( -70°C – 30°C )
    • வருடாந்த மழைவீழ்ச்சி  300 – 700mm.
    • குளிர் காலங்களில் கடுமையாக பனிக்கட்டிகள் வீழ்ச்சியடையும். நீண்ட குளிர்காலம் காணப்படும்.
    • வெப்பமான காலம் சில மாதங்களுக்கு காணப்படும்.
  • தாவர இயல்புகள் :
    • கூம்புவடிவாக வளரும் மரங்கள்.
    • ஓரளவு உயரமான மரங்கள்.
    • இலைகள் ஊசிவடிவானவை.
    • மரங்கள் கூம்புவடிவாக இருப்பதால் பனிக்கட்டிகள் மரக்கிளைகளில் தேங்காமல் வடிந்தோடக் கூடியதாக
    • இருத்தல். இதனால் கிளைகள் முறிவது தடுக்கப்படும்.
    • வித்து மூடியிலிகள் (Gymnosperm) பெரும்பாலும் காணப்படும்.
      (உ – ம்) : பைனஸ் (Pinus tree)
  • விலங்குகள் :
    • குடிபெயரும் பறவைகள், முலையூட்டிகள் என்பன அதிகமாக காணப்படும். (மரங்களில் பறவை கூடுகள் அதிகம் காணப்படும்)

துந்திரா

  • பரம்பல் : வட குளிர் வலயம்
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை  -70°C – 10° C.
    • குறுகிய வெப்பமான காலம்.
    • மழைவீழ்ச்சி மிக குறைவு. வருடாந்த மழைவீழ்ச்சி  300 mm.
    • பலமான காற்று வீசும்.
  • தாவர இயல்புகள் :
    • ஒராண்டுக்குரிய தாவரம், முட்புதர், பூண்டுகள், செடிகள் உண்டு.
    • பல்லாண்டுக்குரிய தாவரங்களில்லை.( நீண்டகால கடும் குளிர், பலமான காற்று போன்ற காரணங்களினால்)
  • விலங்குகள் :
    • துருவ கரடி, ஓநாய், மான் போன்ற விலங்குகள் காணப்படும்.
 
  • விலங்குமுறை போசணையை மேற்கொள்ளும் அங்கிகளில் அதாவது விலங்குகளில் உணவுக் கால்வாய் விருத்தியடைந்து காணப்படும்.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • உணவுக் கால்வாய் என்பது உணவு உள்ளெடுக்கப்பட்டு கடத்தப்பட்டு சமிபாடு, அகத்துறிஞ்சல் நிகழ்கின்ற குழாய் கட்டமைப்பு ஆகும்.
  • இவ்வுணவுக் கால்வாய் இருவகைப்படும்.
  • பூரணமற்ற உணவுக் கால்வாய்
    பூரணமற்ற உணவுக் கால்வாய் ஒரு துவாரத்தை மட்டும் கொண்டிருக்கும். அத்துவாரம் வாயாகவும் குதமாகவும் தொழிற்படும். அதாவது உணவு உள்ளெடுக்கப்பட்டு மீதி உணவு மலம் அதனூடாகவே வெளியேறும்.
    (உ+ம்): Phylum – Platyhelmenthes, Phylum – Echinodermata இல் வகுப்பு Ophiuroideo
  • பூரணமான உணவுக் கால்வாய்
    பூரணமான உணவுக் கால்வாய் வாய், குதம் எனும் இரு துவாரங்களை கொண்டிருக்கும். அதில் ஒன்று வாயாகவும் மற்றையது குதமாகவும் தொழிற்படும்.
    (உ+ம்): அனேக கணங்கள் ( Nemotoda – Chordata )

Pic - 1

 
 

அயன் சமனிலை
நீரின் அயனாக்கமும் நீரின் அயன் பெருக்கமும்
நீர் எவ்வளவுதான் தூயதாக இருப்பினும் மிக சிறிதளவு அயனாகக் கூடியது. இதன்போது H+ ஆகவும்,OH ஆகவும் பிரிகையடையும்.
H2O (l) ⇔ H3O+ (aq) + OH (aq)

H2O (l) ⇔ H+ (aq) + OH (aq)
அது ஓர் அமில – மூல சமனிலையாகும். சமனிலை விதியை பிரயோகிக்க,
Untitled-1
திரவம் மிகையளவில் காணப்படுவதோடு தூயநிலையில் சமனிலையில் காணப்படுவதால் செறிவு மாறிலியாகும்.
 H2O (l)] = மாறிலி
KC X [H2O (l)] = [H3O+(aq)] [OH(aq)]
Kw= [H3O+(aq)][OH-(aq)]
H3O+(aq) = [OH-(aq)] = 1 × 10-7 mol dm-3

25°c யில் =1.0 × 10-14 mol2 dm-3 முறு வெப்பநிலையில் மட்டும் தங்கியிருக்கும்.
நீரின் அயனாக்கல் தாக்கம் ஓர் அகவெப்பத்தாக்கமாகும்.
H2O(l) – [H+(aq)] [OH-(aq)]

வெப்பநிலையை அதிகரிக்கும் போது இலட்சட்லேயரின் தத்துவப்படி வெப்பநிலையைக் குறைக்கும் முகமாக அகவெப்பத்திசையான வலப்புறம் சமனிலை நகரும்.
இதனால் Kw ப் பெறுமானம் அதிகரிக்கும். 80°c யில் – 1.0 × 10-12 mol2dm-3

 

PH பெறுமானம்
கரைசல்களில் காணப்படும்H3O செறிவு சிலவேளைகளில் குறைவானதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ர்3ழு10 ஆனது 10-5 இலிருந்து 10 moldm-3 வீச்சில் காணப்படும்.
நீர்க்கரைசல் ஒன்றில் காணப்படும் H+ அயன்செறிவின் தலைகீழ் பெறுமானத்தின் பத்தின் அடியாகக் கொண்ட மடங்கை பெறுமானம் pH எனப்படும்.

 

Untitled-1

கோவையின் மறை (-) அடையாளம் காரணமாக ஐதரசன் அயன் செறிவு அதிகரிக்கும் போது pH குறைவடையும்.
pH அளவுத் திட்டத்தில் ஒரு அலகின் வித்தியாசம் ஐதரசன் அயன் செறிவின் 10 மடங்கு வேறுபாட்டுக்கு ஒத்தது.
கரைசல் ஒன்றில் காணப்படும் OH- அயன் செயறிளவு pH இல் பின்வருமாறு குறிப்பிடலாம்.

POH = log 10[OH-(aq)]
மென்னமிலம் ஒன்றின் கூட்டற்பிரிகை மாறிலி (Ka)

HA(aq) +H2O(l) ⇔[H3O+(aq)]+ A-(aq)

 

 

மென்னமிலத்தின் ஐதாக்கலுடன் கூட்டற்பிரிவின் அளவும் அதிகரிக்கும்.
மென்னமிலம் ஒன்றின் முய அதிகரிக்கும்போது அதன் அமிலவலிமையும் உயர்வாக இருக்கும்.

மென்னமிலம் ஒன்றின் கூட்டற்பிரிகை மாறிலி (Ka)

 

Untitled-2

Ka= அமில கூட்டற்பிரிகை மாறிலி

33

மென்னமிலத்தின் ஐதாக்கலுடன் கூட்டற்பிரிவின் அளவும் அதிகரிக்கும்.
மென்னமிலம் ஒன்றின் முய அதிகரிக்கும்போது அதன் அமிலவலிமையும் உயர்வாக இருக்கும்.

 

மென்மூலத்தின்  கூட்டற்பிரிகை மாறிலி(Kb)

Untitled-4

 

 

Kb =மென்மூலத்தின்  கூட்டற்பிரிகை மாறிலி

மென் மூலகங்களின் pKb பெறுமானம் அதிகரிக்கும் போது அவற்றின் மூல் வலிமை குறையும்.

PKa = -log10 Ka
PKb = -log10 kb

மென்னமிலத்தின் Ka இற்கும் Kb இற்கும் இடையிலான தொடர்பு

1

2

 

120

150

 

160

 

170

180

காட்டிகள் தொடர்பான கொள்கை
எந்த அமில – மூலக் காட்டியும் மென்னமிலம் அல்லது மென்மூலம் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட PH பெறுமானத்திற்குக் கீழே ஒரு நிறத்தையும் ஒரு குறிப்பிட்ட PH பெறுமானத்திற்கு மேலே வேறொரு நிறத்தையும் காண்பிக்கும்.
அமில – மூல காட்டியை மென்னமிலமாக கருதலாம். இது HIn இனால் குறிப்பிடப்படும்.

 

190

HIn உம் In- உம் இரண்டு வேறான நிறங்களைக் கொண்டவை.
அமிலமொன்றை சேர்க்கும் போது சமனிலையானது இடது புறத்தை சாருவதால் HIn இன் நிறம் தெரியும். colour1 தெரியும்

மூலமொன்றை சேரக்கும்போது H3O+ நீக்கப்பட்டு சமனிலை வலதுபுறமாக நகரும். In- இன் நிறம் முதன்மை பெறும். எனவே colour2 தெரியும்.

 

தாழ் PHஇல் நிறம் I தோன்றுவது தாழ் நிறம் என்றும், உயர் PH இல் நிறம் 2 தோன்றுவது உயர்நிறம் என்றும் கூறப்படும்.

காட்டியொன்றின் PH வீச்சு PKIn + 1 இற்கும் PKIn – 1 இற்கும் இடையே அமையும் போது அண்ணளவாக இரண்டு PH அலகுகளுக்கு இடையில் நிறமாற்றம் ஏற்படும்.

200

 

22

காட்டி   PH வீச்சு தாழ் PH எல்லைக்கு கீழ் உள்ள நிறம் உயர் PH எல்லைக்கு மேலுள்ள நிறம் PH
1. Methyl orange   2.9 – 4.6 சிவப்பு மஞ்சள்   3.7
  2. Methyl red 4.2 – 6.3 சிவப்பு மஞ்சள்   5.0
 3.Bromothymol blue  6.0 – 7.6 மஞ்சள் நீலம்   7.1
  4.phenolphthalein   8.3 – 10.0 நிறமற்றது சிவப்பு   9.6

 

முடிவுப்பள்ளி
அமில – மூல நியமிப்பு ஒன்றின்போது காட்டி நிறமாற்றத்தைக் காட்டும் புள்ளி முடிவுப் புள்ளி எனப்படும்

.
சமவலுப் புள்ளி
அமில – மூல நியமிப்பில் நடுநிலையாக்கும் முற்றுப்பெறும் புள்ளி சமவலுப்புள்ள எனப்படும்.
அமில – மூல நியமிப்பு
011mol dm-3 NAOH கரைசலின் 25.00cm-3 இற்கும் 0.1 moldm-3 HCl கரைசலை துளித்துளியாக இட்டு PH இற்கும் சேர்க்கப்பட்ட அமிலத்தின் கனவளவுக்கும் வரைபு வரையப்படும்.

23

வன்மூல வன்அமில நியமிப்பில் முடிவுப்புள்ளிக்கு அண்மையில் திடீர் மாற்றத்தைக் காட்டக்கூடிய PH வீச்சினுள் காணப்படக் கூடிய வீச்சைக் கொண்ட காட்டிகள் எல்லாவற்றையும் நியமிப்புக்கு பயன்படும்.
பினோப்தலீன் methyl orange பாசிச்சாயம் பயன்படுத்தலாம். ஆனால் முடிவுப்புள்ளியில் கரைசலின் PH உம் காட்டி யின் PKIn உம் ஒத்ததான காட்டி மிகச்சிறந்தது. பாசிச்சாயம் மிகப்பொருத்தமானது.

 

 
 

உருகலின் தன்மறைவெப்பம் (Lf)

  • ஓரலகு திணிவுடைய திண்மமொன்றை அதன் உருகுநிலையில் வைத்து திரவமாக மாற்றுவதற்கு தேவையான வெப்பசக்தி
  • அலகு : Jkg¯¹
    Δθ = mLf

ஆவியாதலின் தன்மறைவெப்பம் (Lv)

  • ஓரலகு திணிவுடைய திரவத்தை அதன் கொதிநிலையில் வைத்து, ஆவியாக மாற்றுவதற்கு தேவையான வெப்பசக்தி
  • அலகு : Jkg¯¹

Δθ = mLv

Δθ – வழங்கப்பட்ட வெப்ப சக்தி
m – திணிவு

  • பரிசோதனை : பனிக்கட்டியின் உருகலின் தன்மறை வெப்பத்தைத் துணிதல் (கலவை முறை)
  • பரிசோதனை : நீரின் ஆவியாதலின் தன்மறை வெப்பத்தைத் துணிதல் (கலவை முறை)

ஆவிகள்

நிரம்பாத ஆவி

  • நிரம்பாத ஆவிகள் வாயு விதிக்குக் கட்டுப்படும்.
  • நிரம்பாத ஆவியின் அமுக்கம் அதன் கனவளவு, வெப்பநிலை என்பவற்றில் தங்கியிருக்கும்.

நிரம்பலாவி

  • தன் திரவத்துடன் தொடுகையிலுள்ள ஆவி நிரம்பலாவி எனப்படும்.
  • நிரம்பிய ஆவிகள் வாயு விதிக்குக் கட்டுப்படுவதில்லை.
  • நிரம்பிய ஆவியின் அமுக்கம் வெப்பநிலையில் மட்டுமே தங்கியுள்ளது.
  • நிரம்பிய ஆவியின் அமுக்கம் வளிமண்டல அமுக்கத்திற்கு சமனாக உள்ளபோது திரவம் கொதிக்கும்.

heat-14

பரிசோதனை : அறைவெப்பநிலையில் நிரம்பலாவி அமுக்கம் தெரிந்தால் வேறொரு வெப்பநிலையில் நிரம்பலாவி அமுக்கம் துணிதல்.

ஆவியாதல் கொதித்தல்
திரவ மேற்பரப்பில் நடைபெறும் மேற்பரப்பு நிகழ்ச்சி திரவம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி
எல்லா வெப்பநிலைகளிலும் நிகழும் வரையறுத்த ஒரு வெப்ப நிலையிலேயே நிகழும்
கட்புலனாகாத நிகழ்ச்சி கட்புலனாகும் நிகழ்ச்சி
மேற்பரப்பின் பருமனில் தங்கியுள்ளது

மேற்பரப்பின் பருமனில் தங்கியில்லை

தனி ஈரப்பதன்(AH)

  • ஓரலகு வளியிலுள்ள நீராவியின் திணிவு தனி ஈரப்பதன் எனப்படும்
  • SI அலகு : kgm¯³

சார் ஈரப்பதன் (RH)

  • வளியிலுள்ள நீராவியின் திணிவிற்கும் அதே கனவளவு வளியை அதே வெப்பநிலையில் நிரப்புவதற்கு தேவையான நீராவியின் திணிவிற்கும் இடையிலான விகிதத்தின் நூற்று வீதம்.

RH= m/ms × 100%

RH= P /Ps× 100%

P – θ °C இல் நிரம்பா ஆவி அமுக்கம்.
Ps – θ °C இல் நிரம்பலாவி அமுக்கம்.

பனிபடுநிலை

  • வளி மண்டலத்திலுள்ள வளியில் உள்ள நீராவியானது அவ்வளியை முற்றாக நிரம்பும் போதுள்ள வெப்பநிலையில் பனிபடுநிலை எனப்படும்.

பரிசோதனை : பனிபடுநிலையைத் துணியும் பரிசோதனை

பரிசோதனை : பனிபடுநிலையைத் துணிவதன் மூலம் அறை வெப்பநிலையில் சாரீரப்பதனைத் துணிதல்.