



எல்லையற்ற விருப்பங்களுடன் ஒப்பிடும்போது அவற்றை பூர்த்தி செய்வதற்கு தேவையான, சமூகத்திடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களின் கிடைப்பனவு போதியதாக இல்லாது இருத்தல் அருமை எனப்படும்.
உலகிலுள்ள எல்லாச் சமூகங்களாலும் (எல்லா நாடுகளாலும்) எதிர்கொள்ளப்படும் பொதுவான பிரச்சனையாக அருமை காணப்படுகின்றது.
அருமை எனும் பிரச்சனை தோற்றம் பெறக் காரணங்கள்
முழு அருமை – சார்பு அருமை
முழு அருமை
மனிதனது தேவைகள் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான சமூகத்திடம் உள்ள வளங்களின் கிடைப்பனவு முற்றிலும் போதாதிருப்பின் அதனை முழு அருமை என்பர்.
உ – ம் : பெற்றோலிய வளம் போன்ற மீள் உருவாக்க முடியாத இயற்கை வளங்கள்.
சார்பு அருமை
மனிதனது தேவைகள், விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான சமூகத்திடம் உள்ள வளங்களின் கிடைப்பனவு ஒப்பீட்டில் போதாதிருப்பின் அதுச் சார்பு அருமை எனப்படும்.
உ – ம் : மனிதனால் உருவாக்கப்படும் மூலதன வளம்.
மாற்றுபயோகம்
வரையறுத்துத் தரப்பட்டுள்ள வளங்கள் வேறுபட்டதான தேவைகள் விருப்பங்களை நிறைவு செய்யப்பயன்படக் கூடியதாயுள்ள சிறப்பியல்பு மாற்றுபயோகம் எனப்படும்.
உ – ம் :
கிராமத்திலுள்ள ஒரு ஏக்கர் காணியில் விவசாயம் செய்யலாம் அல்லது விலங்கு வளர்ப்பு பண்ணை ஒன்றை உருவாக்கலாம்.
தெரிவு
வரையறுத்துத் தரப்பட்ட வளங்கள் அருமையுடன் மாற்றுப் பயன்பாட்டையும் கொண்டுள்ளதால் அவற்றைப் பல்வேறுபட்ட நோக்கங்களுக்கிடையே பகிர்வு செய்ய முற்படும் போது தோன்றுவதே தெரிவுப் பிரச்சனையாகும்.
தெரிவின் போதே அமயச் செலவு எனும் எண்ணக்கரு முக்கியம் பெறுகின்றது.
தெரிவுப் பிரச்சனை தோன்றக் காரணம்
அருமை – தெரிவு தொடர்பு
விருப்பங்கள் போல வளங்களும் எல்லை அற்றதாக இருப்பின் தெரிவு தோன்றி இருக்காது. ஆனால் மாற்றுப் பயனுடைய வளம் அருமையாக அமைவதால் அதனை வேறுபட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்த முற்படும் போது எதனை, எந்தளவில், எவ்வாறு, யாருக்காக உற்பத்தி செய்தல் எனும் தெரிவுப் பிரச்சனைகள் தோன்றம் பெறுகின்றன.
அதனாலேயே அருமை தெரிவை உருவாக்குகின்றது என்பர்.
வளங்கள் வரையறையற்றதாகவோ அல்லது ஒரு பயன்பாட்டை மட்டும் கொண்டதாகவோ இருப்பின் தெரிவு எனும் பிரச்சினை தோற்றம் பெறாது.
அமயச் செலவு / சந்தர்ப்பச் செலவு
அருமையான வளங்கள் மாற்றுப் பயன்பாட்டைக் கொண்டிருப்பதால் தெரிவினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாற்றுப் பயன்பாட்டின் போது, அதிசிறந்த ஒரு தெரிவின் பொருட்டு இழக்கப்படும் அடுத்த சிறந்த மாற்றுப்பயன்பாட்டுத் தெரிவின் மெய்ரீதியான அளவு அல்லது பெறுமதியே சந்தர்ப்பச் செலவு ஆகும்.
உ – ம் :
உயர்தரத்தில் அதிசிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் பல்கலைக்கழக தெரிவை மேற்கொள்வதால் இழக்கப்படும் வேலைவாய்ப்பும் வருமான மட்ட அளவும்.
ஒரு பண்ட உற்பத்தியை அதிகரிக்க முற்படும் போது அதிகரிக்கப்பட்ட உற்பத்தி அலகுகளும் இழக்கப்பட்ட உற்பத்தி அலகுகளும் நேர்க்கணிய அலகுகள் என்பதால் அமையச் செலவு நேர்க்கணியமானது என்பர்.
அமயச் செலவு தோன்றக் காரணிகள்
தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள்
தாவரத்தின் ஒரு பகுதியில் உற்பத்தியாக்கப்பட்டு இன்னொரு பகுதிக்கு கடத்தப்பட்டு மிகவும் குறைந்த செறிவில் தொழிற்பட்டு தாவரத்தின் உடல் கட்டமைப்பு உடற் தொழிற்பாட்டு ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சேதன இரசாயனப் பதார்த்தம் தாவர வளர்ச்சி பதார்த்தம் எனப்படும்.
இப்பதார்த்தம் தூண்டியாக / நிரோதியாக தொழிற்படுகின்றது.
தாவர வளர்ச்சி பதார்த்தங்களின் வகைகள்
1. இயற்கையான ஒட்சிசன் (Auxin) – CHON
2. இயற்கையான சைற்றோகைனின் (cytokinin) – CHON
3. ஜிபரலின் { ஜிபரலிக்கமிலம் (GA) (Giberelin) – CHO
4. அப்சிசிக்கமிலம் (Abscisic acid) – CHO
5. எதிலீன் (Ethelene) – CH
இயற்கையான ஒட்சின்
இதுவே முதன்முதலில் அறியப்பட்ட தாவரவளர்ச்சி பதார்த்தமாகும்.
இதன் இரசாயனப் பெயர் Indole-3-Acetic acid
உற்பத்தி : 1. தண்டுநுனி
2. இளம் இலை
கடத்தல் : புடைக்கலவிழையக் கலங்களினூடாக கடத்தப்படும். (ஒருதிசை வழியே)
தொழில் : 1. கலங்களின் நீட்சி
2. உச்சி ஆட்சியை பேணல்
3. திருப்ப அசைவுகளை சீராக்கல்
4. இலைகளில் வெட்டுபடை தோன்றலை நிரோதிக்கும்
5. மாறிழைய தொழிற்பாட்டை தூண்டல்
6. வேரின் வளர்ச்சியை தூண்டல்
7. பழங்களின் வளர்ச்சியை தூண்டல்
இயற்கையான சைற்றோகைனின்
இது Adininநெ ஐ சார்ந்த சேர்வைகள்
உற்பத்தி : வேருச்சி பல இழையங்களின் பிரிவடையும் கலங்கள்
கடத்தல் : காழினூடாக கடத்தப்படும்
இயற்கையான தொழில்கள் :
1. அங்குர வளர்ச்சியை அதிகரித்தல்
2. உச்சி ஆட்சியை நிரோதித்தல்
3. இலைகள் மூப்படைதலை தாமதித்தல்
4. ஒட்சினுடன் இடைவினை ஆற்றி (தாக்கமடைந்து) கலப்பிரிவை தூண்டல்
ஜிப்ரலின் /ஜிபரலிக்கசிட்
இவ்வளர்ச்சிப் பதார்த்தம் ஒரு வகை முதன்முதலில் பங்கசிலிருந்து பிரித்தெருக்கப்பட்டது. (Giberella)
உற்பத்தி : இளம் இலைகள் வேர்கள் முளைக்கும் வித்துக்கள்
கடத்தல் : புடைக்கலவிழையக் கலங்களுக்கூடாக கடத்தப்படும்
தொழில்கள் : 1. தண்டுகள் நீட்சியடைதல்
2. வித்துமுளைத்தலின் போது நொதியங்களை உயிர்ப்பூட்டல் (வித்துமுளைத்தலை தூண்டல்)
அப்சீசிக்கமிலம் (Abscicacids)
உற்பத்தி : வேர்மூடி முதிர்ச்சியடையாத வித்து
கடத்தல் : வாழினூடாக கொண்டு செல்லப்படும்
தொழில்கள் :
1. வித்து முளைத்தலை நிரோதித்தல்
2. நீரினளவு குறைவான நிலையில் இலைவாய்கள் மூடுதல்
3. வெப்பவலய நாடுகளில் வளரும் தாவரங்களில் குளிர்காலங்களில் அரும்பு வளர்ச்சியை நிரோதித் தல். அதே தாவரங்களில் குளிர் காலங்களில் மாறிழைய தொழிற்பாட்டை நிரோதித்தல்.
எதிலீன் (Ethelene)
உற்பத்தி : பழங்கள் பல்வேறு இழையங்களின் புடைக்கலவிழையக்கலங்கள்.
கடத்தல் : புடைக்கலவிழையக்கலங்கள் உரியம் என்பவற்றுக்கூடாக கடத்தப்படும்.
தொழில்கள் :
1. தண்டுகள் நீட்சியுறலில் உதவுதல்
2. பழங்கள் பழுப்பதை தூண்டல்.
3. சில தாவரங்களில் பூத்தலை தூண்டல்.
4. இலைகளிலும் பழங்களிலும் வெட்டுபடை தோன்றலை தூண்டும்.
விவசாயத்தில் இயற்கையான செயற்கையான (தொகுப்பட்ட) தாவர வளர்ச்சில் பதார்த்தங்களின் முக்கியத்துவங்கள்
1. தண்டின் வெட்டுத் துண்டங்களில் வேர் உருவாக்கத்தை தூண்டல் -IBA -Indol Butanic Acid
2. பழங்களின் விருத்தியை தூண்டல் – ஒட்சின்
3. கன்னிக் கனியமாதலை தூண்டல் – ஒட்சின்
4. களை கொல்லியாக பயன்படும் – 2, 4 – -D, MCPA
5. வெட்டப்பட்ட இலைகளினதும் பூக்களினதும் செழுமை தோற்றத்தை நீடித்தல் – சைற்றோகைனின்
6. வித்து முளைத்தலை தூண்டல் – Gibberellin
7. பழங்கள் பழுத்தலை தூண்டல் – Ethelene
8. தண்டுகள் நீட்சியடைதலை தூண்டல் – Gibberellin
தாவர வளர்ச்சியும் விருத்தியும்
அங்கியொன்றில் விருத்தி நடைபெறும்போது உலர்திணிவு { கனவளவு { உயரத்தில் ஏற்படும் மீளமுடியாத அதிகரிப்பு ‘வளர்ச்சி” எனப்படும். வளர்ச்சியின் போது கலமட்டத்தில் பல்வேறு செயன்முறைகள் நடைபெறும். இச்செயன்முறைகள் 3 அவத்தைகளை கொண்டது.
1. கலப்பிரிவு : இழையுருப்பிரிவின் மூலம் கலங்கள் பிரிந்து எண்ணிக்கையில் அதிகரித்தல்.
2. கலவிரிவு : கலங்கள் போசணையை பெற்று பருமனில் அதிகரித்தல். (அதிபர் போசணை)
3. கலவியத்தம் : கலங்கள் குறித்த கட்டமைப்பு/ தொழில்களை புரிவதற்காக சிறத்தலடைதல் ஆகும்.
| தாவர வளர்ச்சி | விலங்கு வளர்ச்சி |
| உயரத்தில் தொடர்ந்து வளரும் (வரையறுக்கப்படாத வளர்ச்சி) | 1. உயரத்தில் குறித்த காலம் மட்டும் வளரும் (வரையறுக்கப்பட்ட வளர்ச்சி) |
| பிரியிழையப் பகுதியில் மட்டும் வளர்ச்சி நடைபெறும் | 2. பெரும்பாலும் விலங்கு உடல் முழுவதிலும் வளர்ச்சி நடைபெறும் |
| ஒராண்டு தாவர வளர்ச்சி வரையறுக்கப்பட்ட வளர்ச்சி | பல்லாண்டு தாவர வளர்ச்சி1. வரையறுக்கப்படாத வளர்ச்சி |
| ஒரு வருடத்துக்குள் வளர்ச்சி முற்றுப்பெறும் | 2. பல வருடங்களாக தொடர்ந்து வளரும் |
| துணைவளர்ச்சி இல்லை | 3. துணைவளர்ச்சி உண்டு |
வளர்ச்சி வரைபுகள்
வரைபு – 01.
வித்து முளைத்தலிலிருந்து தாவரம் மூப்படைதல் வரையான ஓராண்டு தாவரத்தின் வளர்ச்சி வரைபு
வரைபு – 02.
வித்திலிருந்து ஆரம்பித்து ஓராண்டு தாவரம் முளைத்து வளர்ந்து மூப்படைந்து இறக்கும் வரையான வளர்ச்சி வரைபு
வித்து முளைத்து நாற்றாகுடம் வரையிலான வளர்ச்சி வரைபு.
ab- காலத்துடன் உலர்நிறை சீராக குறைந்து செல்லம் காரணம் | வித்து முளைத்தலின் ஆரம்பத்தில் சுவாசம் மட்டும் நடைபெறும். இதன்போது co2 ஆக cஇழக்கப்படும். ஒளித்தொகுப்பு கனியுப்பு அகத்துறிஞ்சல் இல்லை.bc- உலர் நிலை காலத்துடன் சீரற்றதாக குறைந்து செல்லும் காரணம் | இதன்போது ஒளித்தொகுப்பு கனியுப்பு அகத் துறிஞ்சல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயன்முறைகளால் உலர்நிறை அதிகரிப்பதிலும் பார்க்க கலச்சுவாசத்தால் உலர்நிறை குறைதல் அதிகமாக காணலாம்.
cd- காலத்துடன் உலர்நிறை சீரற்றதாக அதிகரிக்கின்றது. காரணம் | ஒளித்தொகுப்பு கனியுப்பு அகத்துறிஞ்சலால் உலச் சிறை அதிகரித்தல். சுவாசத்தின் போது உலர்நிறை குறைவதிலும் பார்க்க அதிகமாகும்.
வரைபு – 04.
தாவரத்தின் ஓர் அங்கத்திற்கான வளர்ச்சி வரைபு.
பிரியிழையம்
வியத்தமடையாத கலங்கள் தொடர்ச்சியாக இழையுருப்பிரிவின் மூலம் பிரிந்து பெருக்கக் கூடியவை. கலத்திடைவெளிகள் அற்றவை. முனைப்பான கருவையும் செறிந்த குழியவுருவையும் கொண்டது. பெரிய புன்வெற்றிடம் இல்லை. சிலவற்றில் சிறிய புன்வெற்றிடங்கள் காணப்படலாம். உருமணிகள் இல்லை உருவணிப்போலிகள் காணப்படலாம். சேமிப்புகள் கழிவுகளிலில்லை. உயர் அனுசேபத் தொழிற்பாடுடையவை. முதலான துணையான உற்பத்தி { வளர்ச்சியின் போது தோற்றுவிக்கப்படும். கலச்சுவர் மெல்லியது. முதற்சுவர் படிவை மட்டும் கொண்டுள்ளன. இதில் பிரதானம் செலுலோசுää அரைச்செலுலோசு பெக்ரின் ஐ கொண்டுள்ளன.
பிரியிழையம்
. 1. உச்சிப் பிரியிழையம்
2. பக்கப் பிரியிழையம்
3. இடைப்புகுந்த பிரியிழையம் என பிரியிழையமானது அமைவிடத்தின் அடிப்பiடையில் 3 வகைப்படும்.
டி. உற்பத்தியின் அடிப்படையில் பிரதானமாக 2 வகைப்படும்.
1. முதலான பிரியிழையம்
2. துணையான பிரியிழையம்
உச்சிப் பிரியிழையம்
அமைவிடம் : தண்டுச்சி வேருச்சி
தொழில் : தண்டு வேரை நீளத்தில் அதிகரிக்கச் செய்தல்
உ – ம் : தண்டுச்சிப்பிரியிழையம் வேருச்சி பிரியிழையம்
பக்கப் பிரியிழையம்
இதில் பல வகைகள் உண்டு.
சிறுதட்டு மாறிழையம்
அமைவிடம் : கலன்கட்டில் முதற்காழுக்கும் முதல் உரியத்திற்கும் இடையில்
தொழில் : உள்நோக்கியும் வெளிநோக்கியும் புதிய கலங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் துணை வளர்ச்சியில் பங்கெடுத்தல்.
கலன்கட்டுக்களுக்கு இடையிலான மாறிழையம்
அமைவிடம் : கலன்கட்டுகளுக்கிடையில்
தொழில் : உள்நோக்கி துணைக்காழையும் வெளிநோக்கி துணை உரியத்தையும் தோற்றுவிப்பதன் மூலம் தண்டின் விட்டத்தை அதிகரித்தல்
கலன்மாறிழையம்
அமைவிடம் : துணைக்காழ்ää துணை உரியத்திற்கு இடையில்
தொழில் : உள்நோக்கி துணைக்காழையம் வெளிநோக்கி துணை உரியத்தையும் தோற்றுவிப்பதன் மூலம் தண்டின் விட்டம் சுற்றளவில் அதிகரிப்பை ஏற்படல்.
தக்கை மாறிழையம்
அமைவிடம் : துணைமேற்பட்டை தக்கை ஆகியவற்றுக்கு இடையில்
தொழில் : உள்நோக்கி துணை மேற்பட்டையையும் வெளிநோக்கி தக்கையையும் தோற்றுவிப்பதன் மூலம் தண்டு வேரின் விட்டம் சுற்றளவில் அதிகரிப்பை ஏற்படுத்தல்
இடைப்புகுந்த பிரியிழையம்
அமைவிடம் : இலை அடி கணுவிடை அடி.
தொழில் : இலை கணுவிடைகளின் நீளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தல்
முதலான பிரியிழையம்
முதலான உற்பத்தியில் தோற்றுவிக்கப்படுகின்றது. முதலான இழையங்களைத் தோற்றுவிக்கும் தாவரத்தில் துணைவளர்ச் சியை ஏற்படுத்தும்
உ – ம் : கலன்கட்டிடை மாறிழையம் கலன் மாறிழையம் தக்கைமாறிழையம்.
துளையான பிரியிழையம்
துணையான உற்பத்திக்குரியது. துணையான இழையங்களைத் தோற்றுவிக்கும். தாவரத்தில் துணைவளர்ச்சியை ஏற்படுத்தும்.
உ – ம் : கலன்கட்டிடை மாறிழையம் கலன் மாறிழையம் தக்கை மாறிழையம்
| தண்டுச்சி | வேருச்சி |
| இலைமுதல் உண்டு | 1. இலைமுதல் இல்லை |
| வேர்மூடியில்லை | 2. வேர்மூடியுண்டு |
| இலைமுதலால் உச்சிப் பிரியிழையம் மூடி பாதுகாக்கப்படும் | 3. வேர்மூடியால் உச்சிப்பிரியிழையம் மூடி பாதுகாக்கப்படும் |
| கக்கவரும்பு உண்டு | 4. கக்கவரும்பு இல்லை |
| முதல் மாறிழையம் பட்டிகையாக பல காணலாம் | 5. முதல் மாறிழையம் கம்பமாக தனித்து காணலாம் |
| சிறுகட்டுமாறிழையம் உண்டு | 6. சிறுகண்டு மாறிழையமில்லை |
| கிடை அகன்றது | 7. கிடை ஒடுங்கியது |
| உச்சிப் பிரியிழையத்திலிருந்து புதிய கலங்கள் உள்நோக்கி தோற்றுவிக்கப்படும் | |
| 8. உச்சிப் பிரியிழையத்திலிருந்து புதிய கலங்கள் உள்நோக்கி யும் வெளிநோக்கியும் தோற்றுவிக்கப்படும் | |
| இலை உண்டு | 9. இலை இல்லை |
| கணு உண் டு | 10. கணு இல்லை |
a. வெளிமேற்பட்டை
இது ஒட்டுக்கலவிழையத்தாலானது. பல கலப்படையில் கலங்களை கொண்டுள்ளது. உயிருள்ள கலம். பொறிமுறை தாங்கலை மேற்கொள்ளும்.
b. உள்மேற்பட்டை
புடைக்கலவிழையத் தாலானது. பல கலப்படையில் கலங்கள் காணலாம். உயிருள்ள கலங்கள். குளோரோபில் காணப் படலாம். குளோரோபில் காணப்படின் உள்மேற்பட்டை பச்சைய இழையம் எனலாம். இது சேமிப்பு, ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும்.
மேற்பட்டையின் தொழில்கள் :
1. சேமிப்பு
2. ஒளித்தொகுப்பு
3. பொறிமுறை தாங்கல்
காழின் தொழில்கள்
தொழில்கள் :
தொழில்கள் :
இளம் ஒருவித்திலை தாவரத் தண்டின் குறுக்குவெட்டு முகத் தோற்றம்
மேற்றோலின் தொழில்கள் :
1. வாயு பரிமாற்றம்
2. உள் இழையங்களை பாதுகாத்தல்
3. உலர்தலை குறைத்தல் / தடுத்தல்
மேற்றொலையடுத்த உள்ளே கீழ்தோல் காணப்படும். வல்லுருக்கலவிழையத் தாலானது. இறந்த கலங்கள்ää பல கலப் படைகளில் கலங்களைக் கொண்டது.
தொழில் :
1. பொறிமுறை தாங்கும் வலு வழங்கல்
தொழில்கள் :
| இளம் இருவித்திலை தாவரத்தண்டின் கு. வெ. முகம் இளம் ஒருவித்திலை தாவரத்தண்டின் கு.வெ. முகம். | இளம் ஒருவித்திலை தாவரத்தண்டின் கு.வெ. முகம். |
| 1. மேற்பட்டை உண்டு. | 1. மேற்பட்டை இல்லை |
| 2. ஒட்டுக்கலவிழையம் உண்டு. | 2. ஒட்டுக் கலவிழையம் இல்லை |
| 3. கீழ்தோல் இல்லை | 3. கீழ்தோல் உண்டு |
| 4. அகத்தோல் உண்டு | 4. அகத்தோல் இல்லை |
| 5. பரிவட்டவுறை உண்டு | 5. பரிவட்டவுறை இல்லை |
| 6. இடை உண்டு | 6. கிடை இல்லை |
| 7. அடியிழையம் இல்லை | 7. அடியிழையம் உண்டு |
| 8. மையவிழையக் கதிர்கள் உண்டு | 8. மையவிழையக்கதிர்கள் இல்லை |
| 9. குறைந்த எண்ணிக்கையான கலன்கட்டுக்கள் (6 – 18) | 9. எண்ணற்ற கலன்கட்டுக்கள்/ கூடிய எண்ணிக்கையான கலன்கட்டக்கள் |
| 10. கலன்கட்டுக்கள் வளைய ஒழுங்கில் அமைந்துள்ளன | 10. ஒழுங்கின்றி சிதறி காணலாம் |
| 11. ஏறத்தாழ ஒரே பருமனுள்ள கலன்கட்டுக்கள் | 11. மத்தியில் பெரிய கலன்கட்டுக்களும் சுற்றயலில் சிறிய கலன்கட்டுக்களும் காணலாம் |
| 12. சிறுகட்டுமாறிழையம் உண்டு. (ஒரு கலப்படையில் கலங்கள்) | 12. சிறுகட்டு மாறிழையம் இல்லை |
| 13. மூலக்காழ்கலன்ää அனுக்காழ்கலன் நேரியவரிசையில் காணலாம் | 13. மூலக்காழ்கலன், அனுக்காழ்கலன் ‘v’ வடிவில் காணலாம். |
| 14. கலனழிவுக்குழி இல்லை | 14. கலனழிவுக்குழி உண்டு. |
| 15. கலன்கட்டைச் சூழ வல்லுருக் கலவிழையத்தாலான கட்டுமடல் இல்லை. | 15. கலன்கட்டைச் சூழ வல்லுருக் கலவிழையத்தாலான கட்டுமடல் உண்டு. |
ஒற்றுமைகள்
1. ஒருங்கமைந்த கலன்கட்டுக்கள் காணப்படும்.
2. உள்நாதிக் காழ் காணப்படல்
இளம் இருவித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டு முகத் தோற்றம்
தொழில்
தொழில் :
1. சேமிப்பு
2. பதார்த்தங்களை சேர்ந்துபுகவிடல். இதன் மூலம் தாவரத்திற்கு ஒரு பாதுகாப்பு இழையமான தொழிற்படல்
அகத்தோலை அடுத்து உள்ளே கம்பம்/ கலனிழையம் உண்டு. கலனிழைத்திற்கும் அகத்தோலுக்கும் இடையே பரிவட்டவுறை உண்டு. பரிவட்டவுறை திரிபடைந்த புடைக்கலவிழையத்தால் ஆனது. உயிருள்ள கலங்கள் ஒன்று /பல படைகளில் நெருக்கமாக கலங்களை கொண்டது தொடர்ச்சியானது.
தொழில்
: 1. துணை வளர்ச்சியின் போது பிழையிழையமான தொழிற்படல்
2. பக்க வேரை தோற்றுவித்தல்
பரிவட்டவுறையை அடுத்து உள்ளே காழ், உரியம் என்பன மாறி மாறி வௌ;வேறு கட்டுக்களில் உள்ளன. இந்நிலை ஆரைக்குரிய கலன்கட்டு எனப்படும். காழில் மூலக்காழ் வெளிநோக்கி காணப்படுகின்றது. இவ்வியல்பு வெளியாதிக்காழ் எனலாம். அனுக்காழ் உள்நோக்கி மையம் நோக்கி காணலாம். காழில் காழ்நார்ää காழ்புடைக்கலவிழையம் குழற் போலிää காழ்கலன் என்பன காணப்படுகின்றன. காழ் நட்சத்திர வடிவில் ஒழுங்கமைந்திருக்கும். வழமையாக நாலாதி காழாக காணலாம். காழில் 2 – 6 கட்டுக்கள் காணப்படலாம்.
தொழில் :
1. சாற்றேற்றம் /நீர்கனியுப்புக்களை கடத்தல்.
2. பொறிமுறை தாங்கும் வலுவை வழங்கல்.
உரியத்தில் நெய்யரிக்குழாய், தோழமைக்கலம், உரியநார், உரியபுடைக்கலவிழையம் என்பன காணப்படும்.
தொழில் :
1. சேதன உணவு கடத்தல் /sucrose கடத்தல்.
காழுக்கும் உரியத்திற்குமிடையில் இணை புடைக்கலவிழையம் காணப்படும். துணைவளர்ச்சியின் போது இணைப் புடைக்கலவிழையத்தின் சில கலங்கள் பிரியும் ஆற்றல் பெற்று பிரியிழையமாக தொழிற்படக்கூடியது.
வேரின் மத்தியில் ஒழுங்கிய கிடை காணலாம். சிலவற்றில் கிடை இல்லை.
இளம் ஒரு வித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டு முகத் தோற்றம்

இளம் ஒருவித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தில் 3 பிரதான பகுதிகளுண்டு.
1. மேற்றோல்/ மயிர்தாங்குபடை
2. மேற்பட்டை
3. கலனிழையம்
தொழில் :
தொழில் :
1. சேமிப்பு
2. பதார்த்தங்களை தேர்ந்துபுகவிடல். இதன் மூலம் தாவரத்திற்கு ஒரு பாதுகாப்பு இழையமாக தொழிற்படல்.
அகத்தோலை அடுத்து உள்ளே கம்பம் /கலனிழையம் காணலாம். கலனிழையத்திற்கும் அகத்தோலக்கும் இடையெ பரிவட்டவுறை உண்டு. பரிவட்டவுறை திரிபடைந்த புடைக்கலவிழையத்தாலானது. உயிருள்ள கலங்கள். ஒன்று/ பல படைகளில் நெருக்கமான கலங்களை கொண்டது. தொடர்ச்சியானது.
தொழில் :
பரிவட்டவுறையை அடுத்து உள்ளே காழ், உரியம் என்பன மாறி மாறி வௌ;வேறு கட்டுக்களில் காணப்படும். இந்நிலை ஆரைக்குரிய கலன்கட்டு எனப்படும்.
காழில் மூலக்காழ் வெளிநோக்கி காணப்படும். இவ்வியல்பு வெளியாதிக்காழ் எனலாம். அனுக்காழ் உள்நோக்கி /மையம் நோக்கி காணப்படும். காழில் | காழ்ப்புடைக் கலவிழையம், காழ்கலன்மூலகம், குழற்போலி ,காழ்நார் என்பன உண்டு. காழ் வளைய வடிவில் ஒழுங்கமைந்திருக்கும். வழமையாக பல்லாதிக்காழாக காணலாம். காழில் 2 – 6 காட்டுக்கள் காணப் படலாம்.
தொழில் :
1. சாற்றேற்றம் / நீர் கனியுப்புக்களை கடத்தல்.
2. பொறிமுறை தாங்கும் வலுவை வழங்கல்.
உரியத்தில் நெய்யரிக்குழாய், தோழமைக்கலம், உரியபுடைக்கலவிழையம் உரியநார் என்பன காணலாம்.
தொழில் :
1. சேதன உணவு கடத்தல்/sucrose கடத்தல்.
காழுக்கும் உரியத்திற்கும் இடையே இணை புடைக்கலவிழையம் காணப்படும். துணைவளர்ச்சியின் போது இணைப் புடைக்கலவிழையத்தின் சில கலங்கள் பிரியும் ஆற்றல் பெற்று பிரியிழையமாக தொழிற்படும்.
வேரின் மத்தியில் அகன்ற கிடை காணப்படும்.
வேற்றுமைகள் :
| இளம் இருவித்திலைத் தாவர வேரின் கு. வெ. மு. தோற்றம் | இளம் ஒருவித்திலைத் தாவர வேரின் கு. வெ. மு. தோற்றம் |
| 1. நாலாதிக் காழ் | 1. பல்லாதிக்காழ் |
| 2. நட்சத்திர வடிவான காழ். | 2. வளைய வடிவான காழ் |
| 3. இடை ஒருங்கியது/ குடை இல்லை | 3. கிடை அகன்றது |
ஒற்றுமைகள் :
1. வெளியாதிக்காழ்
2. ஆரைக்குரிய கலன்கட்டுக்கள்
துணை வளர்ச்சி/ 2ஆம் புடைப்பு
கலன்மாறிழையம், தக்கை மாறிழையம் போன்ற பக்கப் பிரியிழையங்களின் தொழிற்பாட்டால் தண்டு { வேரின் விட்டம். சுற்றளவில் ஏற்படும் மீள முடியாத அதிகரிப்பு ‘துணைவளர்ச்சி” எனப்படும்.
இருவித்திலை தாவரத் தண்டின் துணை வளர்ச்சி
கலச்சுவரில் சுபரின் படிவு இல்லை
இருவித்திலை தாவர வேரின் துணைவளர்ச்சி
தக்கைமாறிழையத் தொழிற்பாட்டால் வேரின் விட்டம், சுற்றளவு அதிகரிக்கும். தக்கை இறந்த கலங்களை கொண்டிருப்பதால் வாயுப்பரிமாற்றத்திற்காக தக்கை இடையிடையே பிளவடைந்து பட்டைவாய் தோன்றும்.
| உள்வைரம் | வெளிவைரம் |
| 1. துணைக்காழின் உட்பகுதி | 1. துணைக்காழின் வெளிப்பகுதி |
| 2. ஈரலிப்பற்றது | 2. ஈரலிப்பானது |
| 3. முற்றாக இறந்த கலங்கள். உயிருள்ள கலங்களில்லை. | 3. பெரும்பாலும் இறந்த கலங்கள். சில உயிருள்ள கலங்கள் |
| 4. உணவு சேமிப்பில்லை | 4. உணவு சேமிப்புண்டு |
| 5. தலையீட்டு குமிழ்கள் உண்டு | 5. தலையீட்டுக்குமிழ்கள் இல்லை |
| 6. தனின் (Tannin) படிவுகள் உண்டு | 6. Tannin படிவு இல்லை |
| 7. சாற்றேற்றம் நிகழ்த்தாது | 7. சாற்றேற்றம் நிகழ்த்தும் |
| 8. பூச்சிகள் நுண்ணங்கிகளால் இலகுவில் தாக்கப்படாது | . 8. புச்சி நுண்ணங்கிகளால் தாக்கப்படக்கூடியது |
| 9. வெளிவைரத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் | 9. கலன்மாறிழையத்திலிருந்து தோற்றுவிக்கப்படும். |
| 10. தளபாடம் செய்ய சிறந்தது | 10. தளபாடம் செய்ய பொருத்தமற்றது |
மரவுரி
கலன்மாறிழையத்திற்கு வெளியேயுள்ள தாவர இழையப்பாகங்கள் யாவும் மரவுரி எனப்படும். இதில் பின்வரும் இழையங்கள் காணப்படும்.
1. துணை உரியம்
2. முதல் உரியம்
3. துணை மேற்பட்டை
4. தக்கை மாறிழையம்
5. தக்கை
6. நிரப்பிழையம்
மரவுரியின் தொழில்கள் :
1. உணவு கடத்தல்
2. சேமிப்பு
3. பாதுகாப்பு – தக்கை
4. வாயுப்பரிமாற்றம்
சுற்றுப்பட்டை
தக்கை மாறிழையமும் அதன் தொழிற்பாட்டால் தோன்றும் இழையங்களும் ஒன்றாக சுற்றுப்பட்டை எனலாம். இது பின்வரும் இழையங்களை கொண்டுள்ளது.
1. துணை மேற்பட்டை
2. தக்கை மாறிழையம்
3. தக்கை
4. நிரப்பிழையம்
சுற்றுப்பட்டையின் தொழில்கள் :
1. சேமிப்பு
2. வாயுப்பரிமாற்றம்
3. பாதுகாப்பு
மனித இனப்பெருக்கம்
மனித ஈரில்லத் தன்மையுடையவன். எனவேää மனிதனில் ஆண்ää பெண் என்று வேறுபாடு உண்டு.
ஆணின் ஆண்புணரிகளான விந்தை தோற்றுவிக்கும் விதைகள் காணலாம். பெண்ணில் முட்டைக்கலத்தை (n) தோற்று விக்கும் சூலகங்கள் காணப்படும்.
விதை, சூலகம் என்பன முதலான சனனி அங்கங்களாகும். மனிதனில் அகக்கருக்கட்டல் நடைபெற் அகவிருத்தி நடைபெறும்.
ஆண் இனப்பெருக்கத் தொகுதி
ஆண் இனப்பெருக்கத்தொகுதியில் பின்வரும் அங்கங்கள் காணப்படுகின்றன.
1. விதையும் விதைப்பையும்
2. விதைமேற்திணிவு
3. அப்பாற் செலுத்தி
4. வீசற்கான்
5. ஆண்குறி
6. துணையான சுரப்பிகள் (சுக்கிலப்புடகம் முன்னிற்கும் சுரப்பி கூப்பரின் சுரப்பி)
விதையும் விதைப்பையும்
விதை விதைப்பை தவிர்ந்த ஏனைய கட்டமைப்புக்கள் வயிற்றறைக் குழியினுள் அமைந்துள்ளன.
விதைப்பையானது தோலினாலானது. இது வயிற்றுக்குழிக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள பை.
இது விதையை உள்ளடக்கி வைத்திருக்கும்.
விதையும் விதைப்பையும்
1. விந்துக்களின் சிறப்பு உற்பத்திக்கு உதவுதல்.
2. விந்துக்களின் உயிர் வாழ்தலுக்கும் அவற்றின் பாதுகாப்பிற்கும் உதவுதல்.
விதைப்பை உடல் வெப்பநிலையை விட 1°c குறைவாக இருப்பதால் விந்து உற்பத்திக்கு சிறப்பாக அமைகின்றது.
விதையானது சோடியாக காணப்படுகின்றது. நீள்கோள வடிவானது.
ஏராளமான சுக்கிலச்சிறுகுழாய்களை கொண்டுள்ளது.
ஒவ்வொரு விதையிலும் ஏரத்தாள 1000 சுக்கிலச்சிறுகுழாய்கள் உண்டு.
சுக்கிலச்சிறுகுழாய் மெல்லியது. மிகவும் சுருண்டது.
சுக்கிலச் சிறுகுழாய்கள் பல தடங்களை தோற்றுவிக்கின்றது.
விதையின் தொழில்கள்
1. ஆண்புணரியான விந்துக்களின் (n) உற்பத்தி.
2.Testesterone hormone இன் உற்பத்தி
சுக்கிலச்சிறுகுழாய்கள்
சுக்கிலச் சிறுகுழாய்களின் சுவர் விந்துக்களை உற்பத்தியாக்கக் கூடிய மூலவுயிர் மேலணிக் கலங்களாலான படையொன்றை கொண்டிருக்கும். இதில் கலங்கள் அவற்றின் விருத்தி நிலைக்ற்ப ஒரு கிரமப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. விந்துப்பிறப் பாக்க பல்வேறுபட்ட விருத்தி நிலைகள் பின்வரும் ஒழுங்கில் காணலாம்.
1. மூலவுயிர் மேலணி (2n)+ சேற்றோலிக்கலங்கள் (2n) – வெளிப்புறப்படை
2. விந்து பிறப்பாக்கும் கலம் (2n)
3. முதல் விந்துக் குழியங்கள் (2n)
4. துணை விந்துக் குழியங்கள் (n)
5. விந்தாகு கலம் (n)
6. விந்து (n)
சேற்றோலிக்கலம்
இவை சுக்கிலச் சிறுகுழாயிகளின் சுவரில் காணப்படுவதுடன் வெளிப்புறமாக உள்ள படையிலிருந்து உள்நோக்கி நீட்டப்பட்டள்ளது.
தொழில்கள் :
1. Inhibin சுரத்தல்
2. போசணை வழங்கல் (விந்துப்பிறப்பின் வெவ்வேறு நிலையிலுள்ள கலங்கள்)
3. இணைத்தல்
லேடிக்கின் கலங்கள் / சிற்றிடை வெளிக்கலங்கள்
சுக்கிலச் சிறுகுழாய்களின் இடையேயுள்ள சிற்றிடை வெளிகளில் இக்கலங்கள் காணப்படுகின்றன.
தொழில்கள் :
1. ஆண் இலிங்க ஓமோனான வுநளவயளவநசழn ஐச் சுரத்தல்.
விதைமேற்திணிவு
இது விதையில் ஆரம்பித்து அப்பாற் செலுத்தியில் முடிவடையும். இது விதையுடன் தொடுகையிலுள்ள சுருண்ட குழாயாகும்.
தொழில்கள் :
1. விந்துக்களின் சேமிப்பு
2. விந்துக்களின் உடற்றொழிலியல் ரீதியான முதிர்வு.
a.விந்துக்கள் இயங்கும் ஆற்றல் பெறல்.
b.விந்துக்கள் கருக்கட்டும் தகைமையை பெறல்.
3. சுக்கிலப்பாயத்தின் ஒரு பகுதியை சுரத்தல்.
அப்பாற்செலுத்தி
இரண்டு கான்களாக காணலாம்.
ஒவ்வொரு விதைமேற்திணிவிலிருந்தும் ஒவ்வொரு கான் வெளியேறும்.
சுக்கிலப்புடகத்திலிருந்து வரும் கான் அப்பாற் செலுத்தியுடன் இணைந்து குறுகிய வீசற்கான் தோற்றுவிக்கப்படும்.
சுக்கிலப்புடக்கக்கான் வீசற்கானில் திறக்கின்றது.
தொழில்கள் :
1. விந்துக்களை விதைமேற்திணிவிலிருந்து சிறுநீர்வழியினுள் கொண்டு செல்லல்.
2. விந்துக்களின் சேமிப்பு (குறைந்தளவு)
வீசற்கான்
ஒவ்வொரு சுக்கிலப்புடகமும் அவற்றின் உள்ளடக்கங்களை வீசற்கானினுள் வெளிவிடும். சிறுநீர்ப் பையிலிருந்து வெளிப் படும் கானுடன் இணைந்து சிறுநீர் வழியை தோற்றுவிக்கும்.
தொழில்கள் :
1. சுக்கிலப்புடக சுரப்புக்களை கொண்டுசெல்லல்.
சிறுநீர்வழி
இது சிறுநீர்ப்பையிலிருந்து ஆரம்பித்து முன்னிற்கும் சுரப்பிலினூடாக ஆண்குறியை அடையும்.
தொழில்கள் :
1. சிறுநீர் சுக்கிலம் என்பவற்றை கொண்டுசெல்லல்.
ஆண்குறி
உருளை வடிவானது
சிறுநீர்வழியுடன் கடற்பஞ்சாலான நிமிர்வுக்குரிய இழையங்களை கொண்ட தசையாலான கட்டமைப்பாகும்.
ஆண்குறியின் தொழில்கள்
1. யோனிமடலினுள் சுக்கிலத்தை வீசல்
2. சிறுநீரை கொண்டு செல்லல்.
ஆண் இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்பான துணையான சுரப்பிகள்
சுக்கிலப்புடகங்கள்
சோடியானவை. அப்பாற்செலுத்தியுடன் இணைந்து காணப்படும். சுக்கிலத்தின் பெரும்பாகம். இதனால் உற்பத்தியாக்கப் படுகின்றது. இதன் சுரப்பு காரணத்தன்மையானது. பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது.
1. சீதம்
2. பிரக்றோசு
3. Prostoglandin
4.. Vitamin c (ascorbic acid)
தொழில்கள் :
1. இது யோனிமடலின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கும்
2. விந்துக்களுக்கான சத்தியமூலம் (குசரஉவழளந)
3. விந்துக்கள் நீந்துவதற்கான ஊடகத்தை வழங்கும்
4. மசகிடல்
முன்னிற்கும் சுரப்பி
தனித்தது. சிறுநீர்ப்பையின் கீழ் சிறுநீர்வழியின் ஆரம்பப்பகுதியில் அதனைச் சூழ்நது காணலாம். இச்சுரப்பி சீதம் கொண்ட சிறிதளவு காரத்தன்மையான பாயியைச் சுரக்கும்.
தொழில்கள் :
1. யோனிமடலின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கும்.
2. சிறுநீர்வழியிலுள்ள மீதமாகவுள்ள சிறுநீரின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கல்
3. மசகிடல்
கூப்பரின் சுரப்பி
சோடியானது. முன்னிற்கும் சுரப்பிக்கு நேர்கீழாக சிறுநீர் வழிக்கு பக்கத்துக்கு ஒன்றாக அமைந்துள்ளது. கானின் மூலம் சிறுநீர்வழியினுள் திறக்கும். காரணத் தன்மையான பதார்த்தத்தைச் சுரக்கும்.
தொழில்கள் :
1. சிறுநீர்வழியில் மீதமாயுள்ள சிறுநீரின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கல்
2. மசகிடல்
சுக்கிலம் (semen)
விந்துக்களையும் துணையான சுரப்பிகளின் சுரப்புக்களையும் விதைமேற்திணிவின் சுரப்பையும் கொண்ட கலவை சுக்கிலமாகும். வழமையாக 2 – 5 அட சுக்கிலம் வெளியேற்றப்படும்.
1 அட சுக்கிலத்தில் ஏறத்தாழ 20 அடைடழைn விந்துக்கள் காணலாம்.
தொழில்கள் :
1. விந்துக்களுக்கான திரவ ஊடகத்தை வழங்கல்
2. யொனிமடலின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கல்.
சுக்கிலத்தின் கூறுகள் :
1. சீதம்
2. Fructose
3. Prostogladin
4. Vitamin – C / Ascobic acid
5. Hyaluronidase
6. Phospolipid
7. Cholestrol
8. Citric acid
விந்துப் பிறப்பாக்கம்
விந்துப்பிறப்பாக்கத்திற்கு எடுக்கும் காலம் ஏறத்தாழ 72 நாட்கள். சுக்கிலச் சிறுகுழாயினுள் விந்துப் பிறப்புக் கலங்களி லிருந்து முதிர்ச்சியடைந்த விந்துப் பிறப்புக் கலங்கள் உற்பத்தியாக்கப்படல் விந்துப் பிறப்புச் செயன்முறை எனப்படும்.
விந்துப் பிறப்பாக்கச் செயன்முறை பின்வரும் படிகளைக் கொண்டது.
1. முளையத்திற்குரிய விதைகளின் முதர் மூலவுயிர்க் கலங்கள் விந்துப் பிறப்புக்கலங்களாக (2n) விருத்தியடையும்.
2. பூப்பெய்தலின் ஆரம்பத்தில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இழையுருப் பிரிவால் முதல் விந்துக் குழியம் (2n) உருவாகும்.
3. முதலான ஒருக்கற்பிரிவால் ஒரு மடியமான துணையான விந்துக் குழியம் (n) உருவாகும்.
4. ஒவ்வொரு துணை விந்துக்குழியங்களும் ஒடுக்கற்பிரிவின் 2ஆவது நிலையை பூர்த்தி செய்து விந்தாகு கலங்களை (n) உருவாக்கும்.
5. விந்தாகு கலங்கள் முதிர்ச்சியடைந்த விந்துக்கலங்களாக (n) வியத்தமடையும்.
விந்துப் பிறப்புச் செயன்முறை பூப்படைதலுடன் ஆரம்பிக்கும். இச்செயல் வயோதிப காலம் வரை நீடிக்கும்.
FSH விந்து உற்பத்தியை ஆரம்பிக்கின்றது. LH,FSH,Testesterone என்பன விந்துப் பிறப்பாக்கத்தை பேணுவதில் பங் கெடுக்கின்றது.
வீசலின் பின்னர் விந்துக்களின் வாழ்க்கையின் உத்தேச அளவு 42 – 72 மணித்தியாலங்கள்.
ஆண் இனப் பெருக்கத்தொகுதியின் ஓமோன் சீராக்கம்
இது பரிவகக் கீழினாலும் முற்பக்க கபச்சுரப்பினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
பரிவகக் கீழினால் புnசுர் விடுவிக்கப்படும்.
GnRH முற்பக்க கபச்சுரப்பியை கிண்டி FSH,LH ஓமோன் சுரக்கத் தூண்டும்.
FSHஆனது சேற்றோலியின் கலங்களை தூண்டுவதன் மூலம் விந்தாகு கலங்களை விந்துக்கலங்களாக விருத்தியடைய பூரணப்படுத்தும். இதன் மூலம் விந்து பிறப்பாக்கம் தூண்டப்படும் / ஆரம்பித்து வைக்கப்படும்.
LH ஆனது லேடிக்கின் கலங்களை (சிற்றிடை வெளிக்கலங்களை) தூண்டி Testesterone ஓமோன் தொகுப்படுவதை தூண் டும் LH லேடிக் கலங்களை தூண்டுவதால் இதனை ICSH எனும் பெயரால் குறிப்பர்.
ICSH-intestitial cells stimulating hormone
Testesterone ஓமோன் விந்துப் பிறப்புக் கலங்கள் விந்துக்கலங்களாகும் போது நடைபெறும் வளர்ச்சியையும் விருத்தியையும் தூண்டும்.
testesterone மட்டம் அதிகரிக்கும் போது பரிவகக் கீழினால் புnசுர் சுரத்தல் குறைக்கப்படும்.
GnRH சுரப்பு குறையுமெனில் LH,FSH மட்டமும் குறையும்.
testesterone ஆனது முற்றபக்க கபச்சுரப்பியின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி LH சுரப்பை குறைக்கும்.
விந்துப் பிறப்பாக்கம் மிக விரைவாக நடைபெறுமெனில் சேற்றோலிக் கலங்களிலிருந்து Inhibin வெளிவிடப்படும்.
Inhibin,FSH சுரப்பை குறைக்கும்.
விந்துப் பிறப்பாக்க வீதம் குறைவாக இருக்குமெனில் Inhibin சுரக்கப்பட மாட்டாது. இதனால் FSH விந்துப் பிறப் பாக்கத்தை தூண்டும்.
Testesterone ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் அனைத்து பகுதிகளையும் ஆணுக்குரிய துணைப் பாலியல்புகளையும் விருத்தியடையச் செய்தலையும் பேணுதலையும் மேற்கொள்ளும்.
விந்துக் கலமொன்றின் அடிப்படை கட்டமைப்பும் அதன் தொழில்களும்
விந்துக்கலம் நுணுக்குக் காட்டிக்குரியது. ஏறத்தாழ 50μm நீளமுடையது. வந்துக்கலம் நீண்டது. இது தலை கழுத்து நடுத்துண்டு வால் எனும் 4 பகுதிகளைக் கொண்டுள்ளது.
தலை
தலை தட்டையானது வட்டமானது. ஒரு மடியமான பெரிய கருவைக் கொண்டுள்ளது. தலையின் பெரும் பகுதியில் கரு அமைந்துள்ளது. இக்கரு நுகத்திற்கு தந்தை வழி இயல்புகளை காவக்கூடிய தந்தை வழி பிறப்புரிமையியலுக்குரிய பதார்த்தங்களை கொண்டுள்ளது. கரு கலத்தொழிற்பாடுகளை சீராக்குகின்றது.
கருவில் 23 நிறமூர்த்தங்கள் உண்டு தலையின் முன்முனையில் உச்சி மூர்த்தம் காணப்படுகின்றது. உச்சிமூர்த்தம் ஒரு திரிபடைந்த இலைசோசோம் ஆகும். இவ் உச்சிமூர்த்தம் பல நீர்பகுப்பு நொதியங்களைக் கொண்டுள்ளது.
1. திரிச்சின் (Trypsin)
2. பெப்சின் (Pepsin))
3. கையலுரோனிடேஸ் (Hyaluronidase)
இந்நீர்பகுப்பு நொதியங்கள் முட்டை மென்சவ்வை சமிபாடடையச் செய்கின்றது / முட்டை மென்சவ்வை ஊடுருவ உதவுகின்றன.
நடுத்துண்டு
இது ஏராளமான இழைமணிகளைக் கொண்டுள்ளது. துலை நோக்கி விந்துக்கள் நீந்துவதற்கான சக்தியை வழங்குகின்றது.
கழுத்து
இது தலைக்கும் நடுத்துண்டிற்குமிடையே காணலாம். ஒடுங்கிய பிரதேசமாகும். கழுத்தில் 1 சோடி புன்மையத்திகளுண்டு. இப்புன்மையத்திகள் ஒன்றுக்கொன்று செய்குத்தாக அமைந்துள்ளன. அச்சிழை ஒரு புன்மையத்திலிருந்தே ஆரம்பிக் கின்றது. இவ் அச்சிழை வாலின் அந்தம் வரை செல்லுகின்றது. இது சவுக்குமுளையை ஆக்குகின்றது.
வால்
வால் ஒரு நீண்ட சவுக்குமுளையாகும். விந்து சூலை நோக்கி நீந்துவதற்கு உதவுகின்றது. மேலும் விந்து சூலினுள் புகுவதற்கும் உதவுகின்றது. வாலில் ‘9+2’ ஒழுங்கில் நுண்புன்குழாய்கள் காணலாம்.
வாலின் 3/4 பகுதி கலமென்சவ்வால் போர்க்கப்பட்டுள்ளது. கலமென்சவ்வால் சூழப்படாத பகுதி ஈற்றுத் துண்டமாகும். ஈற்றுத் துண்டம் முட்டைக் கலத்தை நோக்கி விந்து நீந்துவதற்கான உந்துகை பொறிமுறையை வழங்கும்.






பண்ட வர்த்தக மாற்று விகிதம்
ஓரலகு பண்ட ஏற்றுமதியினது இறக்குமதியினது கொள்வனவு சக்தியை காட்டுவது.
பண்ட வர்த்தக மாற்று விகிதம் =( ஏற்றுமதி விலைச்சுட்டி/ இறக்குமதி விலைச்சுட்டி) X 100
பண்ட வர்த்தக மாற்று விகிதம் சாதகம் –
(100<X ) / ( 1.0 <X ) – இதன்போது முன்னைய ஓரலகு பண்ட ஏற்றுமதியின் மூலம் முன்னரை விட கூடியளவு பண்ட இறக்குமதியைப்பெறலாம். Or ஓரலகு பண்ட இறக்குமதிக்கு முன்னரை விட குறைந்தளவு பண்ட ஏற்றுமதி போதுமானது.
பிரதான காரணங்கள் –
• இறக்குமதி விலைச்சுட்டி அதிகரிப்பதை விட ஏற்றுமதி விலைச்சுட்டி அதிகரிப்பு உயர்வாக அமைதல்.
• ஏற்றுமதி விலைச்சுட்டி குறைவதை விட இறக்குமதி விலைச்சுட்டி குறைவது உயர்வாக அமைதல்.
• ஏற்றுமதி விலைச்சுட்டி அதிகரிக்க இறக்குமதி விலைச்சுட்டி குறைதல்.
விளைவுகள் –
• வர்த்தக நிலுவை சீரடையும். சென்மதி நிலுவை பிரச்சினை குறையும்.
• வெளிநாட்டு சொத்துமட்டம் உயரும்.
• நாணயமாற்று பெறுமதி உயரும்.
• பொருளாதார உறுதி பேணப்படும்
பண்ட வர்த்தக மாற்று விகிதம் பாதகம் – (100>X ) / ( 1.0> X )
வருமான வர்த்தக மாற்று விகிதம்
நாடொன்றினது இறக்குமதியின் கொள்வனவு சக்தியை முழுமையாக காட்டுவது ஆகும்.
வருமான வர்த்தக மாற்று விகிதம் =( ஏற்றுமதி வருமானச்சுட்டி / இறக்குமதி விலைச்சுட்டி) X 100
நாடொன்றினது மூலதனப்பண்டங்களின் இறக்குமதி கொள்வனவு சக்தி வருமான வர்த்தக மாற்று விகிதத்தில் தங்கியுள்ளது. வருமான வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்றமடைந்தால் இறக்குமதி கொள்வனவு சக்தி உயரும். இதனாலேயே இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் வருமான வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்றமடைய வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
: தாவரங்களில் மட்டும் காணப்படுகின்றது. பொதுவாக இலிப்பிட்டை சேமிப்பாக கொண்டுள்ள வித்துகளில் காணப்படுகின்றது.
: தாவர, விலங்குக் கலங்களில் காணப்படும். இதனுள் Catalase எனும் ஒட்சியேற்றும் நொதியம் உண்டு. இவ்நொதியம் அனுசேபத்தில் உருவாகும் H2O2 ஐ H2O,O2 வாக உடைத்து நஞ்சு நீக்குகின்றது.இது அதிகளவில் ஈரல் கலம், சிறுநீரகக் கலங்களில் காணப்படுகின்றது. அத்துடன் அற்ககோல் மருந்துகளையும் நஞ்சு நீக்குகின்றது.
தொழில் : H2O2 இன் நச்சு நீக்கல்
தாவரக் கலங்களில் ஒளிச்சுவாசம்
வளி மாசடைதலுடன் தொடர்புடைய பிரச்சினைகள்
ஓரினமான அணுக்களையுடைய வைரம் காரியம் என்பவற்றின் சாலகங்கள் ஓரின அணுச் சாலகங்களுக்கு உதாரணங்களாகும்.


முனைவாக்கமற்ற மூலக்கூறுகள் ஒன்றுடனொன்று தூண்டிய இருமுனைவுகளுக்கிடையிலான கவர்ச்சி விசைகளினால் இணைவதினால் முனைவில் மூலக்கூற்று சாலகங்கள் உருவாகின்றன.



இங்கு எமது பாட உள்ளடக்கத்தில் Phylum Porifera உள்ளடக்கப்படவில்லை