மனித மூளையானது பின்வரும் கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படும். 

1. மண்டையோடு
2. சருமம்
3. மூளைய முண்ணான் பாய்பொருள்
இருசொற் பெயரீடு 
Carolus Linnaeus (1753 A.D) இரு சொற் பெயரீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருசொற்பெயரீடு என்பது…

ஒவ்வொரு இனமும் அதற்குரிய தனி உயிரிகளும் முதலில் சாதிப்பெயரையும் அதனுடன் தொடர்ந்து வருகின்ற இனத்துக்குரிய வேறுபடுத்தியையும் கொண்ட இலத்தினுக்குரிய இரு சொற்களைக் கொண்ட சர்வதேச முறை பெயரீட்டு முறையாகும்.
இருசொற் பெயரீட்டின் அவசியம் 
- பொது பெயர்கள் நாட்டிற்கு நாடு வேறுபடும்.
- ஒரு இனம் பல்வேறு பெயர்களாலும் பல இனம் ஒரு பெயராலும் அடையாளங் காணப்படல்
- அங்கிகளை இனங்காண்பதில் உள்ள சிக்கலை தவிர்ப்பதற்குள்ள தேவை
- புதிதாக இனங்காணப்படும் அங்கிகளை ஏனையோர் எளிதாக அடையாளப்படுத்த உதவும்.
இருசொற் பெயரீட்டு விதிகள்

- விஞ்ஞான பெயர்கள் கட்டாயமாக ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுதல்/ அச்சிடப்படுதல் வேண்டும்.
- சாதிப்பெயரின் முதலெழுத்து CAPITAL ஆகவும் ஏனைய யாவும் (இனத்துக்குரிய வேறுபடுத்தி பெயரின் முதலெழுத்து உட்பட) simple ஆகவும் அமைந்திருத்தல் வேண்டும்.
- பெயர்கள் எழுதப்படின் அடிக்கோடிடல் வேண்டும்.
- பெயர்கள் அச்சிடப்படின் Italics இல் அச்சிடப்பட வேண்டும்.
- இரு வேறு இன அங்கிகளுக்கு ஒரே பெயர் அமையலாகாது
- இவை கட்டாயமாக எழுத்து பிழையின்றி எழுதப்பட வேண்டும் அத்துடன் சரியாக உச்சரிக்கப்படல் வேண்டும்.
- விஞ்ஞானக் கருமங்களில் குறிப்பிட்ட பெயரை இட்ட விஞ்ஞானியின் பெயரின் முதல் எழுத்தோ, சுருக்கமோ, முழுச்சொல்லோ பெயரின் கடைசியில் முதல் எழுத்து பெரிய எழுத்தால் குறிக்கப்படும். இது இலத்தின் மொழியாக்கம், சாய்வாக எழுதப்படுவதும் இல்லை.
- Cocos nucifera.L. (L-Linnaeus)
முச்சொற் பெயரீடு 
ஒவ்வொரு உப இனமும் அதற்குரிய உயிரிகளும் முதலில் சாதிப்பெயரையும் அதனைத் தொடரும் இனத்துக்குரிய வேறுபடுத்தி பெயரையும் அதனை தொடரும் உப இனத்துக்குரிய வேறுபடுத்தியையும் கொண்ட மூன்று சொற்களினால் பெயரிடப்படும் சர்வதேச பெயரீட்டு முறை முச்சொற் பெயரீடு எனப்படும்.
- நவீன மனிதன் Homo sapiens sapiens
- நியண்டதால் மனிதன Homo sapiens neanderthalensis
பாகுபாட்டிற்குரிய ஆட்சிநிரை மட்டங்கள்

முதன்முதலாக Carolus Linnaeus இனால் உருவாக்கப்பட்டதாகும். இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பாகுபாட்டு மட்டங்கள் TAXON என அழைக்கப்படும்.
|
|
| பேரிராச்சியம் |
Domain |
| இராச்சியம் |
Kingdom |
| கணம் |
Phylum |
| வகுப்பு |
Class |
| வருணம் |
Order |
| குடும்பம் |
Family |
| சாதி |
Genus |
| இனம் |
Species |
இவை மேலும் உப (SUB) உயர் (SUPER) என பிரிக்கப்பட முடியும்.
உயிரினவியல் பாகுபாட்டிற்குரிய மிகச்சிறிய அலகாகவும் அடிப்படை அலகாகவும் இயற்கைக்குரிய அலகாகவும் அமையும் பாகுபாட்டு மட்டம் இனம் ஆகும்.
இனம் தவிர்ந்த ஏனைய பாகுபாட்டு மட்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையாகும். எனவே இவை அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வடையலாம்.
உயிரினப் பாகுபாட்டிற்குரிய மட்டங்களில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லுகையில் உயிரின வகைகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இத்துடன் தற்சிறப்பு குறைவடைகின்றது.
உயிரினப் பாகுபாட்டிற்குரிய மட்டங்களில் மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லுகையில் உயிரின வகைகளின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. இத்துடன் தற்சிறப்பம்சங்கள் அதிகரிக்கின்றன.
தலையோடு (Skull) 

தலையோடு அச்சுவன்கூட்டின் ஒருபகுதி.
- தலையோட்டில் இரு பிரதான பகுதிகளுண்டு.
- மண்டையோடு (Cronium)
- முகம் (Face)
- தலையோட்டில் மொத்தமாக 22 என்புகள் உண்டு.
- முள்ளந்தண்டு கம்பத்தின் உச்சியில் தலையோடு சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.
Phylum Platyhelminthes (தட்டைப் புழு)
- சுயாதீன வாழிகள் நீர் அல்லது ஈரலிப்பான மண், ஒட்டுண்ணிகள் விருந்து வழங்கியில் வாழும்.
- இருபக்கச் சமச்சீருடையது.
- முப்படைக் கொண்டது.
- உடற்குழி காணப்படுவதில்லை.
- முதுகு வயிற்றுப்புற தட்டையாக்கப்பட்ட உடல். துண்டுபடல் இல்லை.
- தலையாகுச்செயல் ஓரளவு காணப்படும்.
- பிசிர் கொண்ட மென்மையான மேற்றோல் அல்லது புறதத்தோலால் சூழப்பட்டது. மூடுபடையில் உறிஞ்சிகள், கொழுக்கிகள் காணப்படலாம்.
- வன்கூடு காணப்படாது.
- உணவு கால்வாய் பூரணமற்றது. வாயுண்டு குதமில்லை.
- குருதிச் சுற்றோட்டத் தொகுதி இல்லை.
- சுவாச அங்கம் இல்லை.
- சுவாலைக் கலங்கள், எளியக்கான்கள் கொண்ட கழித்தல் தொகுதி
- நீள்பக்க நரம்பு நாண்களுடன் இணைக்கப்படும் சோடி முற்பக்கத் திரட்டு அல்லது நரம்பு வளையம்
- புலன் கட்டமைப்புக்கள் – சுயாதீன வாழிகளில் இரசாயன வாங்கிகள், கட்புள்ளி
- இலிங்கமில் இனப்பெருக்கம் – சிலவற்றில் துண்டுபடல்
- பொதுவாக ஈரிலிங்க விலங்குகள்
- அகக்கருக்கட்டல் நடைபெறும்.
- சனனிகள், சனனி கான்கள், துணையங்கங்கள் காணப்படும்.
- ஒட்டுண்ணிகளில் பல குடம்பி பருவங்கள் காணப்படும்.
விலங்கு இராச்சியத்தின் சுவாசக் கட்டமைப்புகளின் பல்வகைமை 




புறச் சூழலுடன் சுவாச வாயுக்களான O2, CO2 என்பவற்றை பரிமாற்றம் அடையச் செய்யும் உடற்பரப்பு சுவாச மேற்பரப்பு எனப்படும்.சுவாச மேற்பரப்பினூடாக வாயுக்கள் பரவல் முறையில் பரிமாற்றம் அடைகின்றன.
வாயுப் பரிமாற்றம் வினைத்திறனாக நடைபெறுவதற்காக சுவாச மேற்பரப்பு கொண்டிருக்கும் சிறப்பியல்புகள்.
- சுவாச வாயுக்களை ஊடுபுக விடக்கூடியதாகவும், ஈர லிப்பானதாகவும் இருத்தல்.
- மெல்லிய மேற்பரப்பைக் கொண்டிருத்தல்.
- அதிகளவு மேற்பரப்பைக் கொண்டிருத்தல்.
- போதியளவு குருதி விநியோகத்தைப் பெற்றிருத்தல்.
சிறிய விலங்குகளில் உடற்பருமன் சிறிதாகவும் அவற்றின் சக்தித் தேவை குறைவாகவும் இருப்பதால் உடல் மேற்பரப்பினூடாக நிகழும் வாயுப் பரிமாற்றம் போதுமானது.
பெரிய விலங்குகளில் உடற்சிக்கல் தன்மை அதிகரிக் கின்றது. சக்தித் தேவை அதிகரிக்கின்றது. இதனால் உடல் மேற்பரப்பு / கனவளவு விகிதம் குறைகின்றது. எனவே போதியளவு வாயுப்பரிமாற்ற மேற்பரப்புடைய விசேட சுவாசக் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.
விலங்குகளில் காணப்படும் வெவ்வேறு வகையான சுவாசக் கட்டமைப்புக்கள்
| விலங்குக் கூட்டம் |
சுவாசக் கட்டமைப்பு |
| புரோட்டோசோவன்கள் |
உடல் மேற்பரப்பு |
| Cnidaria |
உடல் மேற்பரப்பு |
| Platyhelminthes |
உடல் மேற்பரப்பு |
| Nematoda |
உடல் மேற்பரப்பு |
| Annelida |
உடல் மேற்பரப்பு, வெளிப்பூக்கள் |
| Mollusca |
வெளிப்பூக்கள், உட்பூக்கள், மென்மூடி, மென்மூடிக் குழியிலுள்ள சீப்புரு |
| Arthropoda |
உட்பூக்கள், ஏட்டு நுரையீரல், வாதனாளித் தொகுதி, உடல் மேற்பரப்பு |
| Echinodermata |
குழாய்ப்பாதம், பூக்கள், சிம்பி,கழியறைக்குரிய சுவாச மரங்கள் |
| chordata |
வெளிப்பூக்கள் – Amphibia களின் வாற்பேய்
உட்பூக்கள் – Amphibia களின் வாற்பேய், மீன்கள்
வாய்க்குழி சீதமென்சவ்வு – Amphibia
தோல் – Amphibia
நுரையீரல் – Amphibia,Reptilia, Aves, Mammalia |
விசேட சுவாச மேற்பரப்புகள்
வெளிப்பூக்கள்
உடல் மேற்பரப்பின் வெளி வளர்ச்சியாக வெளிப்பூக்கள் உருவாக்கப்படுகிறது.
இவற்றுக்கு உடலில் இருந்து குருதி வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது.
உதாரணம் : Arenicola போன்ற Annelida களில் Crustacea களில்
உட்பூக்கள்
உடலின் வெளி வளர்ச்சியாக குருதி வழங்கலுடன் உருவாக்கப்பட்டு பின்பு உடல் மேற்றோலினால் மூடப்படும் கட்டமைப்பு உட்பூ எனப்படும்.
உதாரணம் : என்பு மீன், சிங்க இறால்
வாதனாளித் தொகுதி
குருதி தரவற்ற வாதனாளி, புன்வாதனாளியைக் கொண்ட கட்டமைப்பு வாதனாளித் தொகுதி எனப்படும்.
வாதனாளிகள் சுவாசத் துவாரங்கள் வழியாகத் திறக்கின்றன.
வாதனாளிகள் கிளைத்த குழாயுருவான அமைப்புகள், வளைய வடிவமான கைற்றின் படிவுகளால் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.
வாதனாளிகள் கிளைத்து புன்வாதனாளியாகி இழையங்களை ஊடுருவிக் காணப்படுகின்றன. இதனூடாக வளி நேரடியாக உடற்கலங்களிற்கு வழங்கப்படுகிறது.
உதாரணம் : Insecta, Chilopoda களான மட்டத்தேள், Diplopoda களான அட்டைகள், சில Arachinida களில்
ஏட்டு நுரையீரல்
குருதிக் கலன்களுடன் 15 – 20 வரையான மெல்லிய தட் டுக்கள் போன்ற கட்டமைப்பு ஏட்டு நுரையீரல் எனப்படும்.
உதாரணம் : சிலந்திகள், தேள்கள் போன்ற Arachinida களில்
![respi-ani2]()
அரசாங்கம், அதன் செயற்பாடுகள், அரசியல் முக்கியத்துவம் உடைய பிரமுகர்கள், நிகழ்வுகள் என்பன தொடர்பாக மக்கள் கொண்டுள்ள கருத்து மக்கள் அபிப்பிராயமாகும். (பொதுசன அபிப்பிராயம்)
மக்கள் அபிப்பிராயங்களை உருவாக்குவதில் அரசியல் கட்சிகள், வெகுசன ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள், பொருளாதார காரணிகள் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன.
அரசாங்கத்தின் செயல் அடைவை அளவிடுவதற்காகப் பயன்படுத்தக்கூடிய சிறந்த சுட்டியாகப் பொதுசன அபிப்பிராயத்தில் உண்மையும் பொய்மையும் அடங்கியிருக்கும். அதனால் பொதுசன அபிப்பிராயமானது அரசாங்கத்தினால் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டதன் பின்பே கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
- விலங்குகளின் நடத்தையில் செயற்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் அக, புற சூழல்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் ” தூண்டல் ” எனப்படும். (தகவல் : விலங்கின் அக, புற சூழலினால் ஏற்படுத்தப்படும் மாற்றம்)
- விலங்கின் அக, புற சூழலிருந்து தூண்டலை வாங்குவதற்கு / உணர்வதற்கு சிறந்தலடைந்த விலங்குகளிலுள்ள கட்டமைப்பு ” வாங்கிகள் ” எனப்படும்.
- கூர்ப்புப் போக்கில் விலங்குகளில் வாங்கிகள் 3 மட்டங்களில் விருத்தியடைகின்றன.
1. கல மட்டம் – கல வாங்கிகள்
2. இழைய மட்டம் – இழைய வாங்கிகள்
3. அங்க மட்டம் – அங்க வாங்கிகள்
- கல மட்டத்தில் எளிய கலம் / கலங்கள் நரம்பு முடிவிடங்கள் வாங்கியாக தொழிற்படும்.
(உ+ம்): தோலிலுள்ள வாங்கிகள்
- இழைய மட்டத்தில் திரிபடைந்த மேலணிக் கலக்கூட்டம் வாங்கியாக தொழிற்படுகிறது.
(உ+ம்): மனிதனிலுள்ள சுவை, மண வாங்கி.
- அங்க மட்டத்தில் அனேக புலன் கலங்களும் அதனுடன் சேர்ந்து துணை கட்டமைப்பும் விருத்தி அடைந்து காணப்படும்.
(உ+ம்): கண், காது
- இம்மட்ட ஒழுங்கமைப்பே ” புலன் அங்கங்கள் ” எனப்படும்.
புலன் வாங்கிகளின் வகைகள்
- புலன் வாங்கிகள் அவை உணரும் / வாங்கும் தூண்டலின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும்.
- இவை அடிப்படையில் நான்கு வகைப்படுத்தப்படுகின்றன.
1. ஒளி வாங்கி – ஒளி – மின் காந்த சக்தியை உணரும்.
2. இரசாயன வாங்கி – இரசாயன சக்தியை உணரும்.
3. வெப்ப வாங்கி – வெப்ப சக்தியை (வெப்பநிலை மாற்றத்தை) உணரும்.
4. பொறிமுறை வாங்கி – பொறிமுறை சக்தியை (தொடுகை, அமுக்கம், ஒலி அதிர்வு, இழுவை) உணரும்.
வாங்கிகள் கொண்டுள்ள இயல்புகள்
- சிறப்பானதொரு தூண்டலை பெற்றுக்கொள்ளும் விதத்தில் கட்டமைப்புக் கொண்டது.
- ஏதாவதொரு சக்தி வடிவத்தை நரம்புக் கணத்தாக்கமாக மாற்றக் கூடியது.
- மாறுகடத்தியாக (Transducers) தொழிற்படக்கூடியது.
- விஷேட வகை கலங்களை உடையது.
- எப்போதும் நரம்புத் தொகுதியுடன் இணைக்கப்ப ட்டது.
- உணர்வுள்ள வாங்கிக் கலங்களைக் கொண்டது (அருட்டப்படக் கூடியது /உறுத்துணர்ச்சியுடையது)
- இசைவாக்கம் உடையது. (நேரத்துடன் வாங்கி ஒன்றின் துலங்களின் தன்மை குறைந்து செல்லல் இசைவாக்கம் எனலாம்)
முள்ளந்தண்டு அற்ற விலங்குகளிலுள்ள ஒளி வாங்கிகள்
- Coelenterata – கட்புள்ளி
- Plathyhelminthes – கட்புள்ளி
- Nematoda – காணப்படாது
- Annelida – எளிய கண்
- Arthropoda – தனிக் கண், கூட்டுக் கண்
- Mollusca – எளிய கண், கட்புள்ளி
- Echinodermeta – கட்புள்ளி
மனிதனிலுள்ள புலன் வாங்கிகள்
மனிதனில் பின்வரும் கட்டமைப்புகளில் புலன் வாங்கிகள் காணப்படுகின்றன.
- நாக்கு
- நாசிக்குழி மேலணி (மண வாங்கி)
- கண்
- காது
- தோல்
பிரதான இயல்புகள் 












- இயுக்கரியோற்றா கலவகையுடையது.
- தனிக்கலம், உண்மையான பல்கலமற்ற பூஞ்சணவிழை.
- கருமென்சவ்வு உண்டு
- கலச்சுவர்கள் உண்டு. பிரதானம் – கைற்றின்
- யாவும் பிறபோசணைக்குரியவை. அழுகல்வளரி, ஒட்டுண்ணி.
- உணவு ஒதுக்கு – கிளைக்கோஜன்.
- இடப்பெயர்ச்சி – சிலவற்றில் சவுக்குமுளை
Phylum Chytridiomycota
- நீர் வாழ்வுக்குரிய சவுக்குமுளை கொண்ட பங்கசு
- இணைக்கவர் கிளைக் கொள்ளலைக் காட்டும் பூஞ்சனவிழை
- இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – சவுக்குமுளைக் கொண்ட இயங்குவித்திகள் மூலம்
- இலிங்கமுறை இனப்பெருக்கம் – இயங்கக்கூடிய ஆண், பெண் புனரிகளால் நடைபெறும்.
- Allomyces இல் சந்ததிப்பரிவிருத்தியுண்டு.
- இதில் ஒரு மடியமான புனரியும் இருமடியமான வித்தி சந்ததியும் மாறி மாறி தோன்றும்.
- Chyrids ஆனது பங்கசுகளின் முன்னோடிகளாகும்.
- நெருக்கமான உறவுள்ளவை.
- Allomyces, Chyrids
Phylum Zygomycota 
- கிளைக் கொண்ட பூஞ்சனவிழை
- குறுக்கு பிரிசுவரற்றது.
- பல்கரு கொண்டது.
- இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – வித்திகலனுள் உருவாக்கப்படும் வித்திகள் மூலம்
- இலிங்கமுறை இனப்பெருக்கம் – அரிதானவை. நுகவித்திகள் மூலம் நடைபெறும்.
- mucor பாண் பூஞ்சனம். வித்திகள் கறுப்பு நிறமானவை.
Phylum Ascomycota 

- பல்கருக் கொண்ட, கிளைக் கொண்ட, பிரிசுவருள்ள பூஞ்கண இழை
- இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – தூளிய வித்திகள் மூலம் நடைபெறும்.
- தூளியந்தாங்கி தோன்றி அதில் புறத்தில் பிறந்ததாக தூளியவித்தி தோன்றும்.
- ஆசிரியங்களுடன் இணைக்கப்பட்டது.
- இலிங்கமுறை இனப்பெருக்கம் – கோணிவித்திகள் தோற்றுவிக்கப்படும். கோணிகளுள் காணப்படும். அகத்தில் பிறந்தது. கோணி கனியுடலத்தில் காணப்படும். உ-ம் காளான்
- Aspergillus, Penicillium, Saccharomyces
Phylum Basidiomycota 
- ஒருகருக் கூட்டிற்குரிய அல்லது இருகரு கூட்டிற்குரிய, கிளைக் கொண்ட, பிரிசுவருள்ள பூஞ்கண இழை
- இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – வெவ்வேறு வித்திகள் மூலம் நடைபெறும்.
- இலிங்கமுறை இனப்பெருக்கம் – சிற்றடிவித்திகள் தோற்றுவிக்கப்படும்.
- Agaricus
வெப்பக் கடத்தல்
உறுதி நிலையில், ![]()
dQ/dt – வெப்பப் பாய்ச்சல் வீதம்
A- சூழலுக்கு வெளிக்காட்டப்படும் பரப்பு
K – பதார்த்தத்தின் தன்மையில் தங்கியுள்ள மாறிலி
(வெப்பக் கடத்தாறு)
(θ1 – θ2 /x) – வெப்பநிலைப் படித்திறன்.
![]()
வெப்பக் கடத்தாறு (K)
- உறுதி நிலையில் ஒரு கோலின் ஓரலகுப் பரப்பிற்கு குறுக்கே ஒரு செக்கனில் அக்கோலில் ஓரலகு வெப்பப் படித்திறன் நிலவும் போது செல்லும் வெப்பம் வெப்பக் கடத்தாறு எனப்படும்.
- அலகு : Wm¯¹K¯¹
பரிசோதனை : எளிய வெப்பக் கடத்தியொன்றின் வெப்ப கடத்துதிறனை துணியும் பரிசோதனை (சேளின் முறை)
வெப்ப இயக்கவியல்
அகச் சக்தி
- பதார்த்தமொன்றின் அகச்சக்தி என்பது, அதன் மூலக்கூறுகளின் இயக்க சக்தியினதும், அழுத்த சக்தியினதும் கூட்டுத்தொகை ஆகும்.
- இலட்சிய வாயு ஒன்றைக் கருதினால், அழுத்த சக்தி பூச்சியமாகும். ஆகவே, அகச் சக்தி என்பது தனியே இயக்க சக்தி ஆகும்.
வாயுவொன்று விரியும் போது செய்யப்படும் வேலை
dW = P ×ΔV
ΔV – கனவளவு அதிகரிப்பு
P – வாயுவின் அமுக்கம்
வெப்ப இயக்கவியலின் முதலாம் விதி
- தொகுதி ஒன்றுக்கு வெப்பசக்தியை வழங்கும் போது, அவ் வெப்ப சக்தியானது அதன், அகச் சக்தியை அதிகரிப்பதற்கும் விரியும் போது வெளி விசைகளுக்கு எதிராக வேலை செய்வதற்கும் பயன்படும்.
ΔQ = ΔU + ΔW
ΔQ – வாயுத் தொகுதிக்கு வழங்கப்பட்ட வெப்பசக்தி
ΔU – அகச்சக்தி அதிகரிப்பு
ΔW – வாயு விரியும் போது வெளி விசைகளுக்கு எதிராக வாயுவால் செய்யப்பட்ட வேலை.
சமவெப்ப மாற்றம்
- வாயுத் தொகுதியொன்று செயன்முறை ஒன்றுக்கு உட்படும் போது, மாறா வெப்பநிலையில் அம்மாற்றம் நடைபெறுமாயின், அது சமவெப்பமாற்றம் ஆகும்.
- வெப்பநிலை மாறிலி ஆகையால், ΔU = 0
ஃ ΔQ = ΔW
சமவெப்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கு,
- கொள்கலனின் சுவர் சிறந்த வெப்பக் கடத்தியினால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.
- சுவர் மெல்லியதாக இருக்க வேண்டும்.
- மாற்றம் மெதுவாக நிகழ்த்தப்பட வேண்டும்.
சேறலிலா மாற்றம்
- இவ்வகை மாற்றத்தின் போது, வெப்ப சக்தி உள்ளெடுக்கப்படவோ, வெளிவிடப்படவோ மாட்டாது.
ΔQ =0
ஃ ΔU = ΔW
சேறலிலா மாற்றத்தை நிகழ்த்தவதற்கு,
- கொள்கலன் வெப்பக் காவலிப் பதார்த்தத்தால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கொள்கலனின் சுவர் தடித்ததாக இருக்க வேண்டும்.
- மாற்றம் விரைவாக நிகழ்த்தப்பட வேண்டும்.
















- மோதல், சமூகத்தின் சகல படித்தரங்களிலும் காணப்படும் ஒரு சமூகத் தோற்றப்பாடாகும்.
- ஆட்களின் ஆசைகள், தேவைகள், குறிக்கோள்கள், பெறுமானங்கள், அங்கீகாரங்கள் என்பவற்றில் காணப்படும் பல்வகைமையே மோதல்களால் காட்டப்படுகின்றது.
- மோதல் எனும் எண்ணக்கரு சமூக நடத்தையின்போது ஆக்கபூர்வமானதாகவோ அழிவுப்பூர்வமானதாகவோ இருக்க இடமுண்டு. மேலும் மோதலானது சமூக இயக்கத்தன்மையின் ஒரு சக்தியுமாகும்.
- பொதுப் பிரயோகத்தில் மோதல் (Conflict) எனும் பதம் மட்டுமன்றி பிணக்கு (Dispute), நெருக்கடி (Crisis), சண்டை (Fight), வன்முறை (Violence) போன்ற பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மோதல் பற்றியஅறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:
- போட்டா போட்டியான அபிலாஷைகள், பல்வேறுபட்ட தனித்துவங்கள் மற்றும் மனப்பாங்கு மாற்றங்கள் காரணமாக, ஆட்களுக்கு அல்லது குழுக்களுக்கு இடையே உருவாகும் எதிர்ப்பை மோதல் எனலாம்.
– James A. Schellenberg
- ஒன்றுக்கொன்று எதிரான குறிக்கோள்கள் – இலக்குகளை அடையும் முயற்சியின்போது சுயாதீனமான தனியாட்களுக்கு இடையில் நிகழும் இடைத்தொழிற்பாட்டை மோதல் எனக் குறிப்பிடலாம்.
– J.L. Hocker and W.W. Wilmot
- ஒன்றுடனொன்று பொருந்தாத குறிக்கோள்களைக் கொண்ட ஆட்கள் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் அது தொடர்பாக கருத்து வெளியிடும்போது சமூக மோதல்கள் தோன்றும்.
– Louis Kriesourz
- வன்முறையான எதிர்ப்படுதல், போராட்டம் அல்லது உளரீதியில் நிகழும் போராட்டமே மோதல் ஆகும்.
– The Webster English Dictionary
- ஆட்குழுக்கள் அல்லது அரசுகள் பாரதூரமான இணக்கப்பாடின்மைகள் அல்லது விவாதத்துக்குள்ளாகியுள்ள நிலைமைகளின் மோதல்கள் உருவாகும்.
– The Oxford Dictionary
பேராசிரியர் ஜொஹான் கல்டுங் (Johan Galtung) என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள மோதல் பாகுபாட்டுக்கான மாதிரி முக்கியமானது. அது மோதல் முக்கோணி எனப்படும்.
![]()