அரசியல் விஞ்ஞானத்தின் பாடப்பரப்பு 



















- அரசியல் ஒரு சமூகவிஞ்ஞான பாடமாக இருப்பதனால் அதன் பாடப்பரப்பு தொடர்பாக ஒரு திட்டவட்டமான வரையறையை கூறமுடியாது.
- இருப்பினும் “அரசை மையமாகக் கொண்டு அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களை கற்பதே அரசியல் பாடப்பரப்பு” எனலாம்.
- ஆரம்பகாலத்தில் அரசறிவியலானது வரலாற்று கல்வியுடன் இணைந்ததாகவே போதிக்கப்பட்டு வந்தது. ஒரு தனிப்பாடமாக ஆய்வு செய்யப்படவில்லை. 1903ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் விஞ்ஞான சங்கம் அமைக்கப்பட்டவுடன் இந்நிலையானது மாற்றப்பட்டு அரசியலில் நடைமுறை விடயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கினர்.
- அந்தவகையில் அரசறிவியலானது இயங்கு தன்மை கொண்ட பாடமாகையால் அதன் பாடப்பரப்பானது வளர்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. எனவே அரசறிவியலின் பாடப்பரப்பை இரண்டு கட்டங்களாக பாகுபடுத்திப் பார்ப்பது தெளிவானதாக அமையும்.
- முதலாவது கிரேக்க காலம் முதல் இரண்டாம் உலக மகாயுத்த காலப்பகுதி வரை அரசியலில் பின்வரும் விடயங்கள் பாடப்பரப்புக்களாக கற்பிக்கப்பட்டு வந்தன.
- அரசியல் விஞ்ஞானத்தினுடைய பாடப்பரப்பிலே முதன்மை பெறுகின்ற விடயமாக அமைந்தது. அரசு மற்றும் சமூக சிந்தனைகள் ஆகும். அரசு பற்றி சமூக சிந்தனையாளர்கள் முன்வைத்த கருத்துகளை நுணுக்கமாக பரிசீலனை செய்து அது பற்றிய விளக்கங்களினை முன்வைக்கின்ற பாடமாக அரசியல் அமைந்தது.
- அரசியல் அரசுகளின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பற்றியும் அரசாங்கத்தின் அமைப்பு பற்றிய கோட்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்து விபரிக்கின்ற பாடமாக விளங்கியமையால் அரசியற் கோட்பாடுகள் மற்றும் சமூக சிந்தனைகள் அரசியலின் பாடப்பரப்பிலே முக்கியம் பெறுவனவாக அமைகின்றன.
- அரசாங்க நிறுவனங்களுடைய கட்டமைப்புக்கள் அவற்றின் பணிகள் அவற்றுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றைப் பற்றி ஆராய்ந்து விபரிக்கும் பாடமாக அரசியல் விளங்குகின்றது. அதன் பாடப்பரப்பிலே அரசாங்க நிறுவனங்களான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய நிறுவனங்களைப் பற்றிய ஆய்வு முதன்மை பெறுகின்றது.
- அடுத்து முதன்மை பெறும் விடயமாக அமைவது சட்டமாகும். அதாவது அரசு, அரசாங்கம் போன்ற அமைப்புக்கள் சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாகும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளும் சட்டத்தின் அடிப்படையிலேயே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் சட்டம் பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- அரசியல் பாடநெறி உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள், மக்களுக்கும் அந்த நிறுவனங்களுக்குமிடையிலான தொடர்பினை நுணுக்கமாக பரிசீலனை செய்து விபரிக்கின்ற பாடமாக விளங்குகின்றது. இந்த அடிப்படையிலே அதன் பாடப்பரப்பினுள் உள்ளூராட்சி அரசாங்கம் பற்றிய ஆய்வு முக்கியம் பெறுகிறது.
- அரசியல் ஆய்விலே உலகம் முழுவதிலும் பின்பற்றப்படுகின்ற வேறுபட்ட அரசாங்க முறைமைகள் ஆய்வு செய்யப்படுகிறது. அந்த அரசாங்க முறைமைகளின் பலம், பலவீனம் பற்றியும் அரசியல் கல்வி கவனத்தில் கொள்கிறது. இதனால் வேறுபட்ட அரசாங்க முறைமைகள் பற்றிய ஆய்வு அரசியல் பாடப்பரப்பிலே முதன்மையான விடயங்களாக அமைகின்றது.
- அரசியல் பாடநெறி உலக நாடுகள் பலவற்றிலும் பரந்து காணப்படுகின்ற வேறுபட்ட அரசாங்க மாதிரிகளை ஒன்றோடொன்று ஒப்பீடு செய்து விளக்குகின்றது. இதனடிப்படையில் ஒப்பீட்டு அரசியல் என்ற விடயம் முதன்மை பெறுகின்றது.
- அரசியல் ஆய்விலே முதன்மை பெறுகின்ற மற்றொரு விடயம் பொதுநிர்வாகம் என்பதாகும். அதாவது பொதுநிர்வாக கோட்பாடு, ஒழுங்குமுறைகள், பொது நிர்வாகத்திற்கான ஆளுமைகள் போன்ற விடயங்களை அரசியல் ஆய்வு செய்கிறது. எனவே பொதுநிர்வாகம் என்ற விடயம் அரசியல் பாடப்பரப்பிலே முதன்மை பெறுகிறது.
- அதுமட்டுமல்லாமல் உலக அரசாங்கங்களின் கீழ் செயற்படுகின்ற பொது நிர்வாகம் பற்றிய விடயங்களை ஒப்பீடு செய்து ஆய்வு செய்தலாகும். இதனால் அரசியலின் பாடப்பரப்பிலே ஒப்பீட்டு பொது நிர்வாகம் என்பது முக்கியம் பெறும் விடயமாக அமைந்துள்ளது.
- அரசியல் கற்கை நெறியானது 19ம் 20ம் நூற்றாண்டுகளிலே அரசுகள் நலன்புரி அரசாக எழுச்சி பெற்றபோது அந்த அரசுகளுடைய பொதுக்கொள்கைகளை வகுத்தல், அவற்றை நடைமுறைப்படுத்தல் விடயத்தில் கவனம் செலுத்தி அவை தொடர்பான ஆய்வை முன்னெடுக்கத் தொடங்கின.
- 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலே ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து பல அரசுகள் சுதந்திரம் பெற்று தனிஅரசாக மாறின. இவ்வரசுகள் நவீனஅரசுகள் எனப்பட்டன. சமூகப் பல்வகைமை, குறைவிருத்திப் பொருளாதாரம், அரசியல் அபிவிருத்தியின்மை போன்ற காரணங்களினால் இவ்வரசுகள் சமூகப்பொருளாதார முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்ற சூழ்நிலை காணப்பட்டது. இதனால் அரசியலின் பாடப்பரப்பிலே மோதல் முகாமைத்துவம், மோதல் தீர்த்தல் என்பது முக்கிய பகுதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- 2ஆம் உலக மகாயுத்தத்தின் பின்னர்அரசியலின் பாடப்பரப்பிலே மேலும் புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டன. அவையாவன
- அரசாங்க முறைமைகளிலே காணப்படுகின்ற நிறுவன கட்டமைப்புக்களையும் அந்தக் கட்டமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் பணியையும் ஆய்வு செய்வதற்காக முறைமைப்பகுப்பாய்வு எனும் நவீன விஞ்ஞான ஆய்வு நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதனால் முறைமைப்பகுப்பாய்வு எனும் அம்சம் அரசியல் பாடப்பரப்போடு சேர்க்கப்பட்டது.
- 20ஆம், 21ஆம் நூற்றாண்டிலே உலகளாவிய ரீதியில் அரசியல், பொருளாதார ரீதியில் மிகப்பலமான நிலையில் இருக்கின்ற நாடுகள் தமது அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை ஏனைய அரசுகளின் மீது படியச் செய்கின்ற தேசிய அதிகாரம் எனும் விடயம் காணப்பட்ட போது அரசியல் கல்வியின் பாடப்பரப்பிலே தேசிய அதிகாரம் எனும் விடயம் முக்கியம் பெற்றது.
- அரசியல் சமுதாயங்களிலே மக்களுக்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவத்தை வழங்குகின்ற மக்களின் குழுவே அரசியல் உயர்குழாம் எனப்படும். இவ்வரசியல் உயர்குழாம் எவ்வாறு தோற்றம் பெற்றது? அவற்றின் செயற்பாடுகள் எவை? என்பன பற்றி அரசியல் கல்வி ஆய்வினை மேற்கொண்டமையால் அரசியல் உயர்குழாம் எனும் விடயம் பாடப்பரப்பில் சேர்க்கப்பட்டன.
- ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் சமுதாயத்திலே இடம்பெறுகின்ற அரசியல் அபிவிருத்தியின் போக்கினைப் பற்றி அரசியல்கல்வி ஆராயத் தொடங்கியது. இதனால் 21ஆம் நூற்றாண்டிலே அரசியல் அபிவிருத்தி என்ற விடயம் அரசியல் பாடப்பரப்பின் முதன்மையான விடயமாக சேர்க்கப்பட்டது.
- 20ஆம் நூற்றாண்டின் பின் மக்கள் தம்முடைய அரசியல் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக வன்முறை சார் வழிமுறையை தெரிவு செய்தனர். பரந்தளவிலே இவ்வன்முறைச் செயற்பாடு அரசியல் சமுதாயத்திலே இடம்பெறுவதால் அரசியல் அவற்றைப் பற்றியும் ஆராயத் தொடங்கியது. இதனால் பாடப்பரப்பிலே அரசியல் வன்முறை என்ற அம்சம் சேர்க்கப்பட்டது.
- மேற்குறித்த அடிப்படையிலே அரசியலுடைய பாடப்பரப்பில் புதிய விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற போக்கு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் மேலும் பல புதிய விடயங்கள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
- ஏனெனில் எதிர்காலத்தில் சமுதாயத்தில் எழுச்சி பெறுகின்ற அரசியல் பற்றிய புதிய சிந்தனை நடைமுறை வடிவத்திலே பெற்றுக் கொள்ளும் போது அரசியல் அதனை ஆய்வு செய்து பாடப்பரப்பாக இணைத்துக் கொள்ளும்.
மனித சுவாசத் தொகுதியின் மொத்தக் கட்டமைப்பு 





![respiratory-system]()
- மூக்குக் குழி வெளிமூக்குத் துவாரங்களால் வெளித்திறக் கும் தொண்டையுள் உட்திறக்கும்.
- தொண்டையை அடுத்து குரல்வளை உள்ளது. கசியிழையத்தால் ஆனது.
குரல்வளையைத் தொடர்ந்து குழாய் போன்ற அமைப்பாக வாதனாளி உள்ளது.
- வாதனாளியில் ஊசி வடிவ பளிங்குருக் கசியிழைய வளையங்கள் காணப்படும்.
- வாதனாளி 5வது நெஞ்சறை முள்ளந்தண்டென்பு மட்டத் தில் இரு கிளைகளாகி சுவாசப்பைக் குழாய்களாகின்றது. இதில் கசியிழைய வளையங்கள் உண்டு.
- வலது சுவாசப்பைக் குழாய் அகன்றது, குறுகியது, நிலைக்குத்தானது. நுரையீரலினுள் இரண்டு கிளைகளாகப் பிரிகின்றது.
- இடது சுவாசப்பைக் குழாய் ஒடுங்கியது. வலது சுவாசப்பைக் குழாயை விட நீண்டது. நுரையீரலினுள் இரண்டு கிளைகளாகப் பிரிகின்றது.
- நுரையிரல்களினுள் சுவாசப்பைக் குழாய்கள் மேலும் கிளைத்து சுவாசப்பை சிறுகுழாய்களாகின்றன. இவற்றின் சுவரில் மழமழப்பான தசைகள் உள்ளன.
- சுவாசப்பை சிறுகுழாய்கள் மேலும் கிளைத்து சிற்றறைக் கான்களைத் தரும்.
- சிற்றறைக் கான்கள் குமிழிகள் போன்ற சிற்றறைகளின் தொகுதிகளில் முடிவடையும்.
- நுரையீரல்கள் சோடியானவை. வலது,இடது பக்கங்களில் பக்கத்திற்கு ஒவ்வொன்றாகக் காணப்படுகின்றன.
- நுரையீரல்கள் கூம்பு வடிவமானவை.
- வலது நுரையீரல் மேற்சோணை, நடுச்சோணை, கீழ்ச் சோணை என 3 சோணைகளையுடையது.
- இடது நுரையீரல் மேற்சோணை, கீழ்ச்சோணை என இருசோணைகளையுடையது.
- நுரையீரல்கள் உடலகப்புடைச்சவ்வு, சுவர்புடைச்சவ்வு என இரு புடைச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது.
- இப்புடைச்சவ்வுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி புடைக் குழி எனப்படும். இது பாய்பொருளால் நிரப்பப் பட்டுள்ளது.
மனித சுவாசத் தொகுதியின் கட்டமைப்புகளும், தொழில்களும் 
- மூக்குக்குழி
மூக்குக் குழியின் மேற்பரப்பு மடிப்புகளைக் கொண்டி ருப்பதால் அதிக மேற்பரப்பு கிடைக்கிறது.
தொழில்கள் :
(1) உள்ளெடுக்கப்படும் வளியை வெப்பமாக்கல்
(2) வளியை ஈரலிப்பு ஆக்குதல்.
(3)வளியிலுள்ள தூசிகள், நுண்ணங்கிகளை வடித்து அகற்றல்.
(4) மணநுகர்வில் ஈடுபடுதல்.
- குரல்வளை
இதில் குரல் நாண்கள் இருப்பதால் ஒலியைப் பிறப்பி2த்தலில் ஈடுபடுகிறது.
- வாதனாளி
இது போலியான படைகொண்ட பிசிர் கம்ப மேலணியால் படலிடப்பட்டது.
தொழில்கள் :
(1) வளியை சுவாசப்பைக் குழாய்களினுள் கொண்டுசெல்லல்.
(2) வளியை வடிகட்டல், ஈரலிப்பாக்கல், வெப்பமாக்குதல்.
(3) இருமல், தெறிவினை செயற்பாட்டில் ஈடுபடல்.
- சிற்றறைகள்
இவையே நுரையீரல்களின் தொழிற்பாட்டு அலகு.
இவை எளிய செதில் மேலணியாலான ஒரு கலத் தடிப்புடையவை.
இவற்றின் வெளிப்புற மேற்பரப்பில் குருதி மயிர்க் குழாய்கள் செழிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
சிற்றறை மேலணிக் கலங்களுடன் இடையிடையே காணப்படும் சுவர்க்கலங்களால் Surfactant எனும் திரவம் சுரக்கப்படுகிறது. இத்திரவம் சுவரின் மேற்பரப்பை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன் வெளிச்சுவாசத்தின் போது சிற்றறைச் சுவர்கள் சுருக்கமடைவதைத் தடுக்கின்றது.
சுவாச வட்டம் 
உட்சுவாசம், வெளிச் சுவாசம், இடைநிலை ஓய்வு ஆகிய மூன்று தொடர் அவத்தைகளையுடைய மூச்சுவிடும் செயற்பாடு சுவாச வட்டம் எனப்படும்.
மனிதனில் சாதாரணமாக நிமிடத்திற்கு 15 தடவைகள் சுவாச வட்டம் நிகழ்கிறது.
| உட் சுவாசம் |
வெளிச் சுவாசம் |
| இது உயிர்ப்பான செய்முறை |
இது உயிர்ப்பற்ற செய்முறை |
| வெளிப்பழுவிடைத் தசைகள், பிரிமென்றட்டுத் தசை சுருக்கமடையும் |
வெளிப்பழுவிடைத் தசைகள், பிரிமென்றட்டுத்தசை தளரும் |
| விலா என்புகளும், மார்புப்பட்டையும் முறையே வெளிநோக்கியும், மேலாகவும் தள்ளப்படும் |
விலா என்புகளும், மார்புப்பட்டையும் முறையே உள்நோக்கியும், கீழ் நோக்கியும் அசையும் |
| நெஞ்சறைக் குழியின் கனவளவு அதிகரிக்கும் |
நெஞ்சறைக் குழியின் கனவளவு குறையும் |
| புடைப்புக் குழியில் அமுக்கம் குறைவடையும் |
புடைப்புக் குழியில் அமுக்கம் அதிகரிக்கும் |
| நுரையீரல்களின் கனவளவு அதிகரிக்கும் |
நுரையீரல்களின் கனவளவு குறையும் |
| சிற்றறைகளிலும், நுரையீரல்களிலும் வளியமுக்கம் குறைவதால் வெளி அமுக்கத்திற்கு சமனாகும் வரை வளி நுரையீரல்களினுள் சென்று சிற்றறைகளை நிரப்பும் |
நுரையீரல்களின் உள் வளியமுக்கம் வெளி அமுக்கத்தை விட அதி கரிப்பதால் சிற்றறைகளில் இருந்து வளி வெளியேறு கின்றது |
மனிதனில் வளியூட்டல் செய்முறையின் கட்டுப்பாடு 




- மூளையின் நீள்வளைய மையவிழையத்தில் சுவாசமையம் எனும் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது.
- இது உட்சுவாச மையம், வெளிச்சுவாச மையம் எனும் இரு பகுதிகளை உடையது.
- இதன் மூலம் மூச்சு விடும் வீதம், ஆழம் என்பன கட்டுப் படுத்தப்படுகின்றன.
சுவாச மையத்தின் தொழிற்பாட்டினைக் கட்டுப்படுத்தும்.
- சுவாசக்கட்டுப்பாட்டு நிலையங்கள் இரண்டு வரோலியின் பாலத்தில் உள்ளன.
அவையாவன,
- எறியூஸ்டிக் பிரதேசம் (Apneustic area) – உட்சுவாச நடவடிக்கைகளைத் தூண்டுகிறது.
- நியூயோர்க்சிக் பிரதேசம் (Pneumotaxic area)) – உட்சுவாச நடவடிக்கைகளை நிரோதிக்கின்றது.
- மூச்சுவிடும் செயற்பாட்டின் சீர்ப்படுத்தலிற்கான வாங்கி கள் இருவகைப்படும்.
- இரசாயன வாங்கிகள் – நீள்வளையமையவிழைய மேற்பரப்பு, பெருநாடியின் சுவர், சிரசுநாடி உடல் களில் காணப்படுகின்றன.
- ஈர்க்கச் செய்யும் வாங்கிகள் – சுவாச சிறுகுழாய் களிலும், சிற்றறைகளின் சுவரிலும் உள்ளன.
மனிதனின் நுரையீரலின் கனவளவுகள்
மனித நுரையீரல்களின் சராசரிக் கனவளவு 6l ஆகும்.
வற்றுப் பெருக்க கனவளவு
சாதாரண மூச்சுவிடுதலின் போது ஒரு தடவையில் நுரையீரல்களினுள்ளே வந்து வெளியேறுகின்ற வளியின் கனவளவு.
இதன் பெறுமானம் 500 ml
உட்சுவாச ஒதுக்கக் கனவளவு
ஆழமான மூச்சு உள்ளெடுத்தலின் போது வற்றுப் பெருக்கக் கனவளவை விட மேலதிகமாக உள்ளெடுக்கப்படக் கூடிய வளியின் கனவளவு
இதன் பெறுமானம் 1 500 ml
உட்சுவாசக் கொள்ளளவு
ஆழமான மூச்சு உள்ளெடுத்தலின் போது ஒரு தடவையில் உள்ளெடுக்கக் கூடிய வளியின் அதிகூடிய கனவளவு
இதன் பெறுமானம் 2 000 ml
வெளிச்சுவாச ஒதுக்கக் கனவளவு
சாதாரண வெளிச் சுவாசத்தின் போது வெளியேற்றக் கூடிய வளியின் கனவளவை விட வலிந்த வெளிச் சுவாசம் ஒன்றில் மேலதிகமாக வெளியேற்றக் கூடிய வளியின் கனவளவு
இதன் பெறுமானம் 1 500 ml
உயிர்க் கொள்ளளவு
ஒரு தடவை நிகழும் மூச்சுவிடும் செயற்பாட்டின் போது நுரையீரல்களின் உள்ளே வந்து வெளியேறக் கூடிய வளியின் அதியுயர் கனவளவு
மீதிக் கனவளவு
வலிந்த வெளி மூச்சின் போதும் வெளியேற்றப்படாது நுரையீரல்களில் தேங்கியிருக்கும் வளியின் கனவளவு
தொழிற்படு மீதிக் கனவளவு
சாதாரண ஒரு வெளி மூச்சின் பின்னர் சுவாசப்பாதை வழியிலும், சிற்றறைகளிலும் தேங்கியிருக்கின்ற வளியின் கனவளவு
- நுரையீரல்களின் காற்றூட்டல் வீதம்
மூச்சுவிடுதல் காரணமாக நிமிடம் ஒன்றில் நுரையீரல் களின் உள்ளே வந்து வெளியே செல்லும் வளியின் கனவளவு காற்றூட்டல் வீதம் எனப்படும்.
காற்றூட்டல் வீதம் = 150 × 15 mlmin-1
- சிற்றறைக் காற்றூட்டல் வீதம்
நிமிடம் ஒன்றில் சிற்றறைகளின் உள்ளேயும் சிற்றறைகளில் இருந்து வெளியேயும் அசையும் வளியின் கனவளவு சிற்றறைக் காற்றூட்டல் வீதம் எனப்படும்.
சிற்றறைக் காற்றூட்டல் வீதம்= (500 – 150) × 15= 5.24 l min-1
சிற்றறை வாயுப் பரிமாற்றம்
- இவ் வாயுப்பரிமாற்றம் சிற்றறை சுவரிற்கும் குருதி மயிர்க் குழாயின் சுவரிற்கும் ஊடாக செறிவுப் படித்திறனின் வழியே பரவல் மூலம் நிகழ்கின்றது.
- சிற்றறை மேற்பரப்பிலுள்ள குருதி மயிர்க்குழாய்களில் சுவாசப்பை நாடி வழியாகக் கொண்டுவரப்பட்ட குருதி காணப்படும்.
- இதில் CO2 செறிவு உயர்வாகவும், O2 இன் செறிவு குறைவாகவும் காணப்படும்.
- குருதியில் இருந்து செறிவுப் படித்திறனின் வழியே பரவல் மூலம் CO2 சமனிலையடையும் வரை சிற்றறை வளிக்குச் செல்கின்றது.
- சிற்றறை வளியில் இருந்து O2 பரவல் மூலம் செறிவுப் படித்திறனின் வழியே சமநிலையடையும் வரை குருதியை வந்தடைகின்றது.
- ஒட்சிசனின் பெரும்பகுதி ஈமோகுளோபினுடன் பிணைப்படைந்து ஒட்சி ஈமோகுளோபினாவும், சிறிதளவு குருதி முதலுருவில் கரைந்த நிலையில் கொண்டு செல்லப் படுகின்றது.
- Corbonic anhydrase நொதியத்தினால் H2CO3 பிரி வடைவதாலும், குருதி முதலுருவில் உள்ள காபனிக்கமிலம் பிரிவடைவதாலும், காபமைல் ஈமோகுளோபின் பிரிவடைவதாலும் CO2 வெளிவிடப்படுகிறது.
இழையங்களில் நிகழும் வாயுப் பரிமாற்றம்
- இழையங்களில் குருதியை விட O2 இன் செறிவு குறைவாகவும், CO2 இன் செறிவு கூடுதலாகவும் காணப்படும்.
- செறிவுப் படித்திறனின் வழியே குருதிக்கும் இழையக் கலங்களிற்கும் இடையில் இழையப் பாய்பொருள் ஊடாக பரவல் மூலம் சுவாச வாயுக்களின் பரிமாற்றம் இடம்பெறுகின்றது.
- ஒட்சி ஈமோகுளோபின் பிரிவடைந்து O2 இனை வெளிவிடுகின்றது.
- குருதியை அடைந்த CO2 இன் பெரும்பகுதி செங்குழியங்களினுள் பரவுகின்றது. சிறிதளவு குருதி முதலுருவில் கரைகின்றது.
மனிதனின் சுவாசத் தொகுதியின் ஒழுங்கீனங்கள்
புகைத்தல் காரணமாக நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்புகள்
- சிகரெட் புகையின் தூண்டலால் சுவாச வழிப்பாதையின் மேலணியில் உள்ள கெண்டிக்கலங்களால் சீதம் சுரப்பது தூண்டப்படும். பிசிர் அடிப்பு நீரோதிக்கப்படும்.
- இதனால் சுவாசப் பாதையில் சீதம் தேங்கி சுவாசப்பை சிறுகுழாய்களை அடைபடச் செய்வதால் மூச்சு விடுதல் கடினமாகும்.
- சுவாசப்பை குழாய் அழற்சி ஏற்படும்.
- புகையில் உள்ள CO ஈமோகுளோபினுடன் மீள முடியாதவாறு இணைப்படைவதால், ஒட்சி ஈமோகுளோபின் உருவாவது குறைவடைகிறது. இதனால் குருதியினால் ஒட்சிசனைக் காவிச் செல்லும் அளவு குறைகின்றது.
- சிகரெட் புகையின் நீண்ட காலப் பாதிப்பினால் சுவாசப்பை சிறுகுழாய் மேலணிக் கலங்களின் பெருக்கம் தூண்டப்படுவதால், அசாதாரண கலத்திணிவுகள் உருவாகின்ற இக்கலங்களில் சில புற்றுநோய்க் கலங்களாகவும் இருக்கலாம்.
சிலிக்கோசிஸ் (Silicosis)
- சிலிக்கா துணிக்கைகள் உள்ளடக்கிய தூசிகளை நீண்ட காலம் உள்ளெடுப்பதால் இப்பாதிப்பு ஏற்படுகின்றது.
- மணல் அகழ்வு, கற்கள் உடைத்தல், மட்பாண்ட கண்ணாடித் தொழில், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோருக்கு இவ் ஒழுங்கீனம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் :
(1) சுவாசப்பை சிறுகுழாய், குருதிக் கலன் என்பவற்றில் தடைகள் ஏற்படும்.
(2) சுவாசப்பை இழையங்களை அழிவடையச் செய்கின்றது.
(3) சுவாசப்பை உயரழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
(4) இதய பாதிப்பை ஏற்படுத்தும்
அஸ்பெஸ்ரோசிஸ் (Asbestosis)
- Asbsestosis எனப்படும் கன்னார்ப் பதார்த்தங்களின் உற்பத்தியிலும், பயன்படுத்தலிலும் ஈடுபடுபவர்களைப் பாதிக்கின்றது.
- Asbestosis இழைகள் தூசிகள் வழியாக உள்மூச்சுடன் நுரையிரல்களினுள் எடுக்கப்படுகின்றன.
- இவை நாரிழைய விருத்தியை தூண்டி, சுவாசப்பை இழையங்களை தொடர்ச்சியான சிதைவிற்கு உள்ளாக்குகின்றன.
- சுவாச அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
- வலது பக்க இதய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
- நுரையீரல்களை சூழவுள்ள மென்சவ்வுகளில் கழலைகள் விருத்தியடைவது தூண்டப்படுகின்றது. இது mesothelioma எனும் பாதிப்பு ஆகும்.
நுண்ணங்கிகள் 






சாதாரண கண்களால் நேரடியாகக் காண முடியாதவையும், பருமனில் மிகச் சிறியவையுமான அங்கிகள் நுண்ணங்கிகள் எனப்படும்.
![micro-pic]()
உதாரணம்
- Bacteria
- Cyano bacteria
- Virus
- Fungus
- தனிக்கல அல்காக்கள் /இழையுருவான அல்காக்கள்
- Viroids
- Prions
நுண்ணங்கிகளின் வாழிடங்கள் 

- மண், வளி, நீர் போன்ற பரந்த சூழல்
- தாவரங்கள், விலங்குகள், மனிதன் உட்பட அவற்றின் உடல் மேற்பரப்பில்
- வெந்நீர் ஊற்று, அமிலத் தன்மை, உவர்தன்மை மிக்க வாழிடங்கள்
நுண்ணங்கிகளின் வாழிடப் பல்வகைமைக்கான காரணங்கள்
- பருமனில் மிகச் சிறியவையாக இருத்தல்
- போசணைப் பல்லினத்துவம் இருத்தல்
- பல்வேறு சூழல் நிலைமைகளை சகித்து வாழும் தன்மை இருத்தல்
- ஒட்சிசன் கிடைக்கும் சூழலிலும், ஒட்சிசன் இல்லாத சூழலிலும் வாழக் கூடிய உடற்றொழிலியல் பல்வகைமை இருத்தல்.
- உயர் இனப்பெருக்க வீதம் இருத்தல்
நுண்ணங்கிகளின் போசணைப் பல்வகைமை 

| போசணை வகை |
சக்தியின் தோற்றுவாய் |
காபன் தோற்றுவாய் |
உதாரணம் |
| இரசாயன தற்போசணை |
அசேதன இரசாயனப் பதார்த்தங்கள் |
CO2 |
- Nitrobacter
- Nitrosomonas
- Thiobacillus
|
| இரசாயன பிறபோசணை |
சேதனச் சேர்வைகள் |
சேதனக் காபன் |
- பெரும்பாலான Bacteriaகள்
- பங்கசு
- அநேக
- புரோட்டோ சோவாக்கள்
- Escherichia coli
|
| ஒளிக்குரிய தற்போசணை |
சூரிய ஒளி |
CO2 |
- Anabaena
- Nostoc
- Chromatium
- Chlorobium
|
| ஒளிக்குரிய பிறபோசணை |
ஒளி
|
சேதனக் காபன் |
|
ஒட்சிசன் தொடர்பாக நுண்ணங்கிகளில் காணப்படுகின்ற பல்வகைமை 

காற்று வாழ் நுண்ணங்கிகள்
- இவை O2 கிடைக்கும் சூழலில் மட்டும் வாழக் கூடியவை.
உ – ம் : Acetobacter
அமையத்திற்கு ஏற்ற காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்
- இயல்பாக O2 உள்ள போதும், இல்லாத போதும் வாழக்கூடியவை
உ – ம் : Escherichia coli
Saccharomyces
கட்டுப்பட்ட காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்
இவை O2 இல்லாத சூழலில் மட்டும் வாழக் கூடியவை
உ – ம் : Clostridium
நுண் காற்று நாட்டமுள்ள நுண்ணங்கிகள்
இவை வளிமண்டலத்திலும் பார்க்க O2 செறிவு குறைந்த சூழலில் வாழுபவை.
உ – ம் : Lactobacillus
Bacteria 



Bacteriaகள் மூன்று அடிப்படைக் கல வடிவங்களைக் கொண்டவை
- கோலுரு (Bacillus வகை)
- கோளவுரு (Coccus வகை)
- சுருளியுரு
![800px-bacterial_morphology_diagram-svg]()
Virus 








- இவை அனைத்தும் கலமற்றவை
- பருமனில் மிகவும் சிறியவை
- அனைத்தும் கட்டுப்பட்ட கலத்தகு ஒட்டுண்ணிகள்
- சுய அனுசேபமற்றவை
- DNA அல்லது RNA ஆல் ஆன நியுக்ளிக் அமில உள்ளீடு இணையும்
- விகாரத்திற்கு உட்படக் கூடியவை
- RNA இனை நியுக்ளிக் அமில உள்ளீடாகக் கொண்டுள்ள virusகள் Retro virusகள் எனப்படும். இவற்றில் Riverse Transcriptase எனும் நொதியமுண்டு
- Virus களை உயிர்க் கலங்களினுள் மட்டுமே வளர்ப்பு செய்யலாம்.
- விலங்கு Virusகளை பொதுவாக வளர்ப்பதற்கு கோழி முட்டையின் முளைய மென்சவ்வு பயன்படுத்தப்படுகிறது.
Viroids
- தொற்றும் தன்மையுள்ள சிறிய RNA மூலக் கூறுகள்
Prions
- தொற்றும் தன்மையுள்ள புரத மூலக்கூறுகள் ஆகும்.
- இவை Virus களிலும் சிறியவை
- நியுக்ளிக் அமில உள்ளீடு அற்ற தம்மை பெருக்கம் செய்து கொள்ளக்கூடிய நோயாக்கிகளாக உள்ளன.
- Prions தொகுப்பதற்கான பரம்பரை அலகு Mammalia களில் காணப்படுகின்றது.
- இந்தப் பரம்பரை அலகின் உதவியுடன் Prion இன் தூண்டலால் இவை தம்மைப் பெருக்கம் செய்து கொள்கின்றன.
- இதன் விளைவாக Mammalia களில் மூளையை சேதப்படுத்துகின்ற நோய்களை இவை ஏற்படுத்துகின்றன.
உ – ம் : Transmissible Spongiform Encephalopathies (TSE), Creutafeldt Jakov Disease (CJD)
- இந்நோய்கள் பசுக்களிலிருந்து மனிதனுக்குத் தொற்றக் கூடியது.
- மனிதனில் இருந்து மனிதனுக்கு குருதி மாற்றீடு மூலம், இழைய மாற்றீடு மூலம் தொற்றக் கூடியது.
Cyano Bacteria 




- நன்னீர், உவர்நீர், மண் ஆகிய வாழிடங்களில் காணப் படுகின்றன.
- இவை தனிக்கலம், பல்கலம், சமுதாயங்கள் ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றன.
- இவற்றில் சவுக்குமுளைகள் இல்லை.
- இவை இலிங்கமில் முறையினால் மட்டும் இனப்பெருக்கம் அடைகின்றன.
- சில வகைகளில் நைதரசன் பதித்தலில் ஈடுபடும் பல்லினச் சிறைப்பை உண்டு.
- சிலவற்றில் தகாத காலங்களைக் கழிப்பதில் உதவும் அசைவிலிகள் உண்டு.
உ – ம் : Microcystis, Anabaena
பங்கஸ்
- இவை பிறபோசணைக்கு உரியன.
- சில தனிக்கலங்களாக உள்ளன. பெரும்பாலானவை தெளிவற்ற பல்கலத்தன்மை உடையன.
- கைற்றினால் ஆன கலச்சுவர் காணப்படும்.
- கிளைக்கோசன் உணவு சேமிப்பாகக் காணப்படும்.
- வித்திகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.
வளர்ப்பு ஊடகம் 

- ஆய்வு கூடங்களில் நுண்ணங்கிகளை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற போசணைப் பதார்த்தங்களைக் கொண்ட ஊடகங்கள் வளர்ப்பு ஊடகம் ஆகும்.
- இரு வகையான வளர்ப்பு ஊடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
1. போசணை ஏகார் ஊடகம் – Bacteriaகளை வளர்ப்புச் செய்யப் பயன்படும்.
2. உருளைக் கிழங்கு டெக்ரோஸ் ஏகார் ஊடகம் – பங்கசுகளை வளர்ப்புச் செய்யப் பயன்படும்.
ஆய்வு கூடத்தில் போசணை ஏகார் ஊடகம் தயாரிப்பதில் பிரதான படிநிலைகள்
1000 ml போசணை ஏகார் ஊடகம் தயாரிக்க
- 10g பெத்தோன், இறைச்சி 10g, 0.5g NaCl, 15g ஏகார் என்பவற்றை எடுத்து 500ml காய்ச்சி வடித்த நீரில் சேர்த்து முற்றாக கரையும் வரை வெப்பமாக்கல்.
- எஞ்சிய (500ml) காய்ச்சி வடித்த நீரை சேர்த்தல்.
- ஈரவெப்ப முறையைப் பயன்படுத்தி அமுக்கவடுகலனில், 121°C இல், 15 இறாத்தல் / சதுர அங்குல நீராவி அமுக்கத்தின் கீழ் 15 – 20 நிமிடங்களுக்கு வெப்பமாக்கி கிருமி நீக்கம் செய்தல்.
உருளைக் கிழங்கு டெக்ரோஸ் ஏகார் ஊடகம் தயாரிப்பதில் பிரதான படிநிலைகள்
1000 ml PDA தயாரிக்க
- 200g உருளைக் கிழங்கு துண்டுகளை காய்ச்சி வடித்த நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்ட பின்னர் வடி ஒன்றினூடாக வடித்து எடுப்பதன் மூலம் உருளைக் கிழங்கு சாறின் பிரித்தெடுப்பு பெற்றுக் கொள்ளப்படும்.
- இப்பிரித்தெடுப்புடன் 20g Glucose, 15g ஏகார் ஆகியவற்றை சேர்த்து, 1000ml காய்ச்சி வடித்த நீரில் கரையும் வரை வெப்பமாக்கல்.
- ஈரவெப்ப முறையைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்தல்.
கிருமி அழித்தல் முறைகள் 




நுண்ணங்கிகளின் பதியக் கலங்கள், வித்திகள் உட்பட அனைத்து நுண்ணங்கிகளையும் அழிவடையச் செய்தல் கிருமி அழித்தல் எனப்படும்.
ஈரவெப்ப முறை
- அமுக்கவடுகலனில் 121°C வெபப்பநிலையில் / 15 இறாத்தல் சதுர அங்குல நீராவி அமுக்கத்தின் கீழ் 15-20 நிமிடங்களுக்கு வெப்பமாக்கல்
உலர் வெப்பமுறை
- இதில் கனல் அடுப்பில் 160°C வெப்பநிலையில் 1-2 மணித்தியாலங்களுக்கு வெப்பமாக்குதல்
சுவாலையில் பிடித்தல்
- இதில் 70% Alcoholல் அமிழ்த்தி எடுத்த பின்னர் செஞ்சூடாக வரும் வரை சுவாலையில் பிடித்து வெப்பமாக்கல்
வடிகட்டல் முறை
- இதில் 0.45 விட்டமுடைய மென்சவ்வு வடிகள் பயன்படுத்தப்படுகிறது.
யோகட் மாதிரியிலுள்ள Bacteriaகளை வளர்ப்பு செய்தல்
- கிருமி நீக்கம் செய்யப்பட்ட போசணை ஏகார் உடைய பெக்ரிக் கிண்ணத்தின் அடிப்பக்கத்தை அடையாளமிடல்
- கிருமி புகுத்தும் தடம் எடுக்கப்பட்டு 70% Alcoholஇல் அமிழ்த்தி செஞ்சூடாக வரும் வரை வெப்பமாக்கல்
- கிருமி நீக்கம் செய்யப்பட்ட கிருமி புகுத்தும் தடத்தினால் யோகட் மாதிரியின் சிறிதளவை எடுத்தல்.
- கிருமியற்ற சூழலில் வைத்து வளர்ப்பு ஊடகத்தின் மேற் பரப்பில் Zig-Zag முறையில் யோகட்டைப் பரவுதல்.
- மூடிய நிலையில், பெக்ரிக் கிண்ணம் மேல் கீழாகத் திருப்பப்பட்டு 48 மணித்தியாலங்கள் அடைகாத்தல்.
மனிதனில் காணப்படும் நுண்ணங்கிக் கூட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- கருப்பையில் விருத்தியடையும் ஆரோக்கியமான முதிர் மூலவுரு நுண்ணங்கிகள் அற்றது. பிறப்பின் போது, பிறப்புக்கான யோனிமடல் வழியாக சில நுண்ணங்கிகளின் தொற்று குழந்தைக்குக் கிடைக்கிறது.
- பிறப்பின் பின் சில மணித்தியாலங்களுள் குழந்தையில் பல சாதாரண நுண்ணங்கிகள் விருத்தியடைய ஆரம்பிக்கின்றன. இவற்றினால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை.
- இவ்வாறு வாழ்ந்து வரும் நுண்ணங்கிகள் பல ஓரட்டிலுண்ணிகளாக இருக்கின்றன.
- சில நுண்ணங்களிகள் மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனை விருத்தி செய்வதிலும் ஈடுபடுகின்றன.
- Vitamin K, Folic acid போன்ற விற்றமின்களை சுரந்து வாழ்கின்றன.
- ஆரோக்கியமான மனிதனில் இதயம், ஈரல், மூளை, நுரையீரல்கள், குருதி, தசைகள் போன்ற பகுதிகளில் நுண்ணங்கிகள் காணப்படுவதில்லை.
- இயல்பாகவே, மனித உடலில் நுண்ணங்கிக் கூட்டங்கள் பல தோல், மூக்குக்குழி, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீர்சனனிக்கான்களில், சீதமென்சவ்வுப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன.
- இவ்வாறு வாழ்ந்து வரும் நுண்ணங்கிகளில் சில சந்தர்ப்ப வசத்தால் நோயாக்கிகளாகலாம்.
இயூக்கரியோற்றா தாவர கலங்களில் முதலுரு மென்சவ்விற்கு வெளிப்புறமாகக் காணப்படும் கட்டமைப்பு கலச்சுவர் எனப்படும்.
- இது உயிருள்ள கலங்களினால் சுரக்கப்படும் சுரப்புப் பதார்த்தம் ஆகும்.
- முதலுரு மென்சவ்விலும் தடித்தது.
- இக்கலச்சுவர் இரு வகைப்படும்.
- முதற்சுவர்
- துணைச்சுவர்
- முதற்சுவர் கலப்பிரிவின் போது சுரக்கப்படுகின்றது. சகல தாவரக் கலங்களிலும் காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில் மெல்லியது. நெகிழும் தன்மை கொண்டது. இது பிரதானம் செலிலோசாலானது மேலும் அரைச்செலிலோசு, பெக்ரின் ஆகியவற்றையும் கொண்டது.
- துணைச்சுவர் சில கலங்களில் விருத்தியின் போது சுரக்கப்படுகின்றது. முதலுரு மென்சவ்விற்கும் முதற்சுவருக்கும் இடையில் காணப்படுகின்றது. பிரதான இரசாயனப் பதார்த்தமாக இலிக்னினைக் கொண்டது. சில சுபரினைக் கொண்டது.
- முதற்சுவரை மட்டும் கொண்ட கலங்களாவன
- புடைக்கல் விழையம்
- ஒட்டுக்கலவிழையம்
- முதற்சுவருடன் துணைச் சுவரையும் கொண்ட கலங்களாவன
- வல்லுருக்கலவிழையம்
- காழ்கலன்கள்
- குழற்போலி
- துணைச்சுவரைக் கொண்ட கலங்கள் இறந்த கலங்களாக மாற்றப்படும்
- அடுத்துள்ள இரு தாவரக் கலங்களின் முதற்சுவருக்கிடையில் நடுமென்தட்டு காணப்படும். இது கல்சியம் பெக்ரேற்று, மக்னீசியம் பெக்ரேற்றைக் கொண்டது. இது அடுத்துள்ள இரு கலங்களை இணைத்து வைத்துள்ளது.
- கலச்சுவர் நீரேற்றப்பட்டது. 60 – 70% நீர் காணலாம். கலச்சுவரின். நீர் சுயாதீனமாக அசையக்கூடியது.
- தக்கைக் கலத்தின் கலச்சுவர் சுபரினால் ஆனது.
- அடுத்துள்ள இரு தாவரக் கலங்களின் கலச்சுவருக்கூடாகக் காணப்படும் முதலுருத் தொடர்பு முதலுரு இணைப்பு எனப்படும்.
- முதலுரு இணைப்பு கலமென்சவ்வினால் படலிடப்பட்டது.
- முதலுரு இணைப்பு தாவரக் கலத்தில் காணப்படும் கலச்சந்தி வகையாகும்.
- கலச்சுவரின் தொழில்கள்
- கலத்திற்குப் பாதுகாப்பு வழங்கல்.
- கலத்தின் வடிவத்தைப் பேணுதல்.
- Apoplast பாதை வழங்கல்.
- தாவரக் கலத்தினுள் மேலதிகமாக நீர் உள்ளெடுக்கப்படுவதைத் தடுத்தல்.
- பதார்த்தங்கள் பரிமாற்றம் முதலுரு இணைப்பு
கலப்புறத் தாயம்
- இது கிளைக்கோ புரதத்தினால் ஆக்கப்பட்டது.
- இதில் காணப்படும் பிரதான புரத நார்கள் Collagen ஆகும்.
- இக் Collagen நார்கள் காபோவைதரேற்றில் அமிழ்ந்து காணப்படும்.
- தொழில்
- கலத்திற்கு விறைப்பு தன்மை வழங்கி கலத்தின் வடிவத்தைப் பேணுதல்
- கலத்திற்குப் பாதுகாப்பு வழங்குதல்
இரும்பு பிரித்தெடுப்பு – ஊதுளை முறை
மூலப் பொருட்கள்:–
(1) இருப்புத்தாது உ+ம் : ஏமறைற்று (Fe2O3), மக்னறைற்று (Fe3O4)
(2) கற்கரி
(3) சுண்ணாம்புக்கல்
செய்முறை :-
- முதலில் இருப்புத்தாதை ஊதுளையில் வறுத்தல் வேண்டும். இதன்போது இரும்புத்தாதின் ஈரப்பதன் அற்றுப்போவதுடன் Sulphur மாசு SO2 ஆக வெளியேறும்.
வளியில் வறுக்கப்பட்ட இரும்புத்தாதுடன் கற்கரி,சுண்ணாம்புக்கல் என்பவற்றை தேவையான அளவுகளில் கலந்து ஊதுளையின் மேற்புறத்தில் இருந்து கொட்டப்படும். ஊதுளையின் அடியினூடாக சூடானவளி 800ºC மேல் நோக்கி செலுத்தப்படும்.
- மேற்படி செயற்பாட்டின் போது ஊதுளையில் பல்வேறுபட்ட தாக்கம் நிகழும். இத்தாக்கங்களில் பெரும்பாலானவை புறவெப்பத்தாக்கம். இதனால் ஊதுளையில் அடியில் 2000 K உம் மேற்பகுதியில் 700K உம் ஆகக் காணப்படும்.
தாழ்த்தும் கருவி – C,CO
- தாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் புறவெப்பத் தாக்கமொன்றில் வெளிவிடப்படும் வெப்பம்,அத்தொகுதியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வுயர் வெப்பநிலையில் SO3 ஆக மாற்றப்படும் வீதம் வீழ்ச்சியடைகின்றது.
- எனவே அடுத்தடுத்த ஊக்கி படுக்கைகளுக்கிடையில் வாயுக்களை குளிரடையச் செய்தல் அவசியமானதாகும். இது குளிர்நீர் குழாய்களினால் செய்யப்படுகின்றது. குளிர்நீர் குழாய்களிலுள்ள நீர் ஆவியாகின்றது. இது மின் உற்பத்திக்கும் பயன்படும்.
- கந்தகமூவொட்சைட்டு நீரில் கரைக்கப்படாது செறிந்த அமிலத்தில் கரைக்கப்படுகின்றது. நீரில் கரைக்கப்பட்டால் அடர்வு கூடிய அமில மூடுபனி உருவாகும். இது ஆபத்தான சூழல் மாசாக்கத்தை ஏற்படுத்தும்.
1000ºC இல் உயர்ந்த வெப்பநிலை:-
CO2 + C → CO
FeO + C → Fe + CO
CaO + SiO2 → CaSiO3
CaO + Al2O3 → Ca(AlO2)2
- Carbon கற்கரி எரியும்போது பெருமளவு வெப்பம் வெளிவிடப்படுவதுடன் CO2 உருவாகும். இவ்வாறு உருவாகும் CO2 உயர்வெப்பநிலைகளில் Carbon கற்கரியுடன் தாக்கம் புரிந்து CO(g) ஐக் கொடுக்கும். உயர்வெப்பநிலைகளில் CO2 இலும் பார்க்க CO இன் உறுதி அதிகமாகும். CO / CO2 விகிதம் உயர்வாக உள்ளபோது தாழ்த்தல் செயற்பாடு விரைவாக நடைபெறும்.
கற்கரியின் பயன்பாடு:-
(1) ஊதுளையின் வெப்பத்தை உயர்த்தல்.
(2) CO உருவாக்கம்.
(3) தாழ்த்து கருவி.
மேலும் இங்கு பெறப்படும் இரும்பு Carbon 3 – 4% காணப்படும். இது பன்றி இரும்பு / வார்ப்பிரும்பு எனப்படும்.
![fe]()
1000ºC இல் குறைந்த வெப்பநிலையில்
3Fe2O3 + CO → 3Fe3O4 + CO2
Fe3O4 + CO → 3FeO + CO2
FeO + CO → Fe + CO2
CaCO3 → CaO + CO2
- இரும்பின் உருகுநிலை 1535ºC ஆகும். ஆனால் இங்கு மாசுக்கள் காணப்படுவதனால். இதன் உருகுநிலை 1015ºC இற்கு குறைவடையும். இதனால் பெறப்படும் இரும்பு உருகி திரவநிலையில் ஊதுளையில் அடியில் திரவநிலையில் காணப்படும். இதன்மேல் உருகிய கழிவுப்படல் (CaSiO3 / Ca(AlO2)2) காணப்படும். இவ்வாறு உருவாகும் கழிவுப்படலத்தால் கழிவு வேறாக அகற்றப்படக் கூடியதாக இருப்பதுடன் , சூடான வளியுடன் உருவாகும் இரும்பானது தாக்கம் புரியாது தடுக்கப்படும்.
- வார் இரும்பில் மாசாக Carbon உடன் மிகச் சிறிதளவு Mn,Si,S,P என்பன காணப்படும். இதன் காரணமாக இது பயன்படுத்தப்படும்போது உடையக்கூடியதாக இருக்கும். ஆகவே பன்றி இரும்பை பயன்படுத்தக்கூடிய உருக்கிரும்பாக மாற்றுதல் வேண்டும்.
உருக்கிரும்பு
திரவநிலையில் காணப்படும் பன்றி இரும்பின் மீது அமுக்கப்பட்ட நிலையில் O2 செலுத்தப்படும். இதன்போது Carbon, CO2 ஆக வெளியேறுவதால் அதன் சதவீதம் 1% ஆக குறைக்கப்படும்.
அத்துடன் ஏனைய மாசுக்கள் ஒட்சைட்டுக்களாக,
- Mn – MnO2
- Si – SiO2
- S – SO2
- P – P2O5
ஒட்சியேற்றப்படுவதுடன் கழிவுப்படலமாக அகற்றப்படும்.
கறையில் உருக்கு
செய்முறை
- பன்றி இரும்பு கொண்டிருக்கும் Carbon இன் அளவைக் குறைத்தல்.
- Mn,Si,S,P என்பவற்றை கழிவுப்படலமாக அகற்றல்.
- கலப்பு உலோக மூலகங்கள் Cr ,Ni என்பவற்றை சேர்த்தல்.
- O2 உடன் வெப்பப்படுத்தல்.
- உருகிய கலவையை குளிரவிடல்.
கறையில் உருக்கின் அமைப்பு
- Fe – 73%
- Cr – 18%
- Ni – 8%
- C – 1%
ஊதுளையால் சூழலுக்கு CO,CO2 வெப்பம் வெளிவிடப்படும்.
- விலங்குகளில் அசைவு 3 மட்டங்களில் நடைபெறுகின்றது.
- கலமட்டம்
- அங்கமட்டம்
- அங்கிமட்டம்
இடப்பெயர்ச்சி
- அங்கியொன்று முழுவதுமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தை நோக்கி அசைதல் இடப்பெயர்ச்சி எனலாம்.
- அங்கிகளில் நடைபெறும் இடப்பெயர்ச்சி பின்வரும் நோக்கங்களுக்காக இடம்பெறும்.
- இரை தேடுதல்.
- இரைகௌவிகளிடமிருந்து தப்பிச் செல்லல்.
- பரவுதல்.
- புதிய,பொருத்தமான வாழிடங்களை தேடுதல்.
- தனியன்கள் இனப்பெருக்கத்தின் பொருட்டு சேர்ந்து கொள்வதற்காக.
இடப்பெயர்ச்சி அசைவு வகைகள்
- போலிப்பாத அசைவு
- சவுக்குமுளை மூலமான அசைவு
- பிசிர்கள் மூலமான அசைவு
- தசைகள் மூலமான அசைவு
நுண்ணங்கிகளைக் கைத்தொழிலில் பயன்படுத்துவதன் அனுகூலங்கள் 

- உயர் வளர்ச்சி வீதத்தைக் கொண்டிருத்தல்.
- அனுசேப பல்வகைமை காணப்படல்.
- சாதாரண வெப்ப அமுக்க நிலைமைகளில் தாக்கங்களை நிகழ்த்த முடிதல்.
- வளர்ப்பது இலகுவானது.
- சில கைத்தொழில்களில் நுண்ணங்கிக் கலங்கள் உற்பத்திப் பொருட்களாக அமைகின்றன.
உ – ம் : குறைநிரப்பி உணவுகள், தடைப்பால் உற்பத்தி
- சில கைத்தொழில்களில் நுண்ணங்கிகளின் அனுசேப ஈற்றுக்கள் பயன் உடையவையாக அமைகின்றன.
உ – ம் வினாகிரி தயாரிப்பு, இலக்றிக் அமில தயாரிப்பு
- சில கைத்தொழில்களில் நுண்ணங்கிகளின் அனுசேப செயற்பாடுகள் பயனுடையதாக அமைகின்றன.
உ – ம் : உயிர்ப் பரிகாரம், ஊறவைத்தல், உயிர்வாயு உற்பத்தி
- சிலவற்றில் பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட நுண்ணங்கிகள் பயன்படுகின்றன.
உ – ம் : மனித இன்சுலின் தயாரிப்பு, தடைப்பால் தயாரிப்பு
கைத்தொழில் சார்ந்த துறைகளும், பயன்படும் நுண்ணங்கிகளும்
உணவும், Alcohol சார்ந்த குடிபானத் தயாரிப்பும் 





தனிக்கலப் புரதங்களின் உற்பத்தி
உ – ம் : Spirulina
Chlorella
உணவுக் குறை நிரப்பிகளின் உற்பத்தி
உ – ம் : மதுவம்
நொதிக்கப்பட்ட பால் உணவுகளின் உற்பத்தி
உ – ம் : Lactobacillus bulgaricus
Streptococcus lactis
சில அமினோ அமிலங்களின் உற்பத்தி
உ – ம் : Corynebacterium
காளான் தயாரிப்பு
உ – ம் : Plurotus
Agaricus
Lentinus
Alcohol நொதித்தல் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பு
C6H12O6 → 2 C2H5OH + 2 CO2
மதுவம் இதற்குப் பயன்படும்.
வினாகிரி தயாரிப்பு
இதில் எதனோல் அசற்றிக் அமிலமாக நுண்ணங்கிகளினால் ஒட்சியேற்றப்படுகிறது.
உ – ம் : Acetobacter
Gluconobacter
விவசாயத் துறை 
உயிர்ப் பூச்சிநாசிகளின் தயாரிப்பு
உயிரியல் கழிவுகளைக் கூட்டெருவாக மாற்றுதல்
- பல வகையான அழுகல் வளரிகளுக்கு உரிய நுண்ணங்கிகள் பயன்படுத்தப்படுகிறது.
உயிரியல் வளமாக்கிகளின் உற்பத்தி
வேர்பூஞ்சணக் கூட்டங்களை விருத்தி செய்தல்
- இதில் பலவகையான பங்கசுகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
மருத்துவத் துறை 

நுண்ணுயிர் கொல்லிகளின் உற்பத்தி
- Polymyxin – Bacillus polymyxa
- Penicillin – Penicillium notatum
நோய்த் தடைப்பால் உற்பத்தி
Toxin எதிரிகளின் தயாரிப்பு
பிறப்புரிமைக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட Bacteriaகளைப் பயன்படுத்தி சிகிச்சைகளில் பயன்படுகின்ற ஓமோன்கள் தயாரிக்கப்படுகிறது.
பரம்பரையலகு சிகிச்சை முறை
கைத்தொழில் சார்ந்த வேறு சில துறைகள் 

ஊறவைத்தல்
- இதில் காற்று வாழ் Bacteriaகளும், காற்றின்றி வாழ் Bacteriaகளும் பயன்படுகிறது.
தரங்குறைந்த தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்.
- Thiobacillus ferroxidans
- Thiobacillus thioxidans
உயிர்வாயு உற்பத்தி
- இதில் கட்டுப்பட்ட காற்றின்றி வாழ் Bacteriaகள் பயன்படுகிறது.
சுற்றாடல் முகாமைத்துவத்தில் நுண்ணங்கிகளின் பயன்பாடு
- உயிர்ப்பரிகாரம்
- கழிவு நீர் பரிகரிப்பு
- குப்பைகளைப் பரிகரிப்பு
உயிர்ப்பரிகாரம்
- உயிர்ப்பரிகாரம் என்பது, அழுகல் வளரிக்குரிய நுண்ணங்கிகளின் பிரிகையாக்கத் தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றாடலில் உள்ள மாசுக்களை அகற்றுகின்ற இயற்கையான அல்லது முகாமைத்துவம் செய்யப்படுகின்ற செயற்பாடு.
- இதில் நீர்நிலைகளும், தரையிலும் விடப்பட்ட சேதன மாசுக்கள், எண்ணெய்க் கழிவுகள், உலோக ஆலைக் கழிவுகள் என்பன நுண்ணங்கிகளின் பிரிகையாக்கல் தொழிற்பாடுகளைப் பயன்படுத்தி உடைத்து நச்சுத் தன்மை இல்லாத விளைவுகளாக அவற்றை மாற்றுவதன் மூலம் மாசுக்களை அகற்றும் ஒரு செயற்பாடு.
- இதில் இயற்கையாகக் காணப்படும் நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டை அல்லது பிறப்புரிமைக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டைப் பயன்படுத்தலாம்.
- உயிர்ப் பரிகாரம் மேற்கொள்ளப்படும் சில சந்தர்ப்பங்கள்
- கழிவுநீர் பரிகரிப்பு
- இரசாயனப் பொறியங்களில் கழிவுநீரைப் பரிகரிப்பு செய்தல்
- உலோக ஆலைகள் வழியாக விடப்படும் கழிவுநீரில் உள்ள Hg, Cr, Pb போன்ற பார உலோக அயன்களை அகற்றல்.
- சிறுதாரை வடிமுறை
Phylum Echinodermata (முட்தோலி) 






- கடல் வாழ்வுக்குரியது.
- நிறைவுடலி ஐயாரைச் சமச்சீருடையது. குடம்பி இருபக்கச் சமச்சீருடையது.
- முப்படைக் கொண்டது.
- பெரிய உடற்குழி ஒரு பகுதி குழாய்ப்பாதத்துடன் தொடர்புற்ற நீர்க் கலன்றொகுதியாக விருத்தியுற்றிருக்கும்.
- உருளை வடிவ அல்லது நட்சத்திரவடிவ அல்லது பூப்போன்ற வடிவம். துண்டுபடல் இல்லை.
- தலையாகுச்செயல் இல்லை, வாய்ப்புற வாய்க்கெதிர்ப்புற அச்சில் ஒழுங்கமைக்கப்பட்ட உடல்.
- உடல் மெல்லிய மேற்றோலால் மூடப்பட்டது. அநேகமானவற்றில் முட்கள் உண்டு. அகவன்கூடு கொண்டவை.
- சிலவற்றில் பூரண உணவுக் கால்வாய். சிலவற்றில் குதமில்லை.
- ஒடுக்கப்பட்ட சுற்றோட்டத் தொகுதி.
- சுவாச அங்கம் – பூக்கள் அல்லது சிம்பிகள், குழாய்பாதம், கழியறைக்குரிய சுவாச மரங்கள்.
- கழித்தல் தொகுதி இல்லை.
- நரம்பு தொகுதி – ஆரைக்குரிய நரம்புகளையும் நரம்பு வளையத்தையும் கொண்ட நரம்புத்தொகுதி
- புலன் கட்டமைப்புக்கள் – சிலவற்றில் தொட்டுணர் குழாய்ப்பாதங்கள், கட்புள்ளி, புலனுணர் பரிசகொம்புகள்
- சிலவற்றில் புத்துயிர்ப்புமுறை
- ஓரிலிங்க விலங்குகள்
- புறக்கருக்கட்டல் காணப்படும்.
- பெரிய சனனிகள் எளிய கான்களுடன் காணப்படும்.
- துவிப்புளுருளா குடம்பி நிலை காணப்படும்.
மனித நரம்பு தொகுதியின் கூறுகள் 




![N1]()
தன்னாட்சி நரம்பு தொகுதியின் ஒழுங்கமைப்பும் தொழில்களும்
தன்னாட்சி நரம்பு எனப்படுவது (சுற்றயல் நரம்புத் தொகுதியின் ஒரு பகுதியும்) (இச்சையின்றிய செயற்பாட்டுக்கு பொறுப்பானதாகும்)
தன்னாட்சி நரம்புகள் உடலகத் தெறிவினையுடன் தொடர்பானது
இவற்றின் விளைவு காட்டிகளாக மழமழப்பான தசை இதயத் தசை சுரப்பிகள் காணலாம்.
தன்னாட்சி நரம்பு இரு கூறுகளை கொண்டது.
1. பரிவு
2. பரபரிவு
பரிவு நரம்புகள் அவசர நிலைமைகளில் உடலை தயார் செய்ய தொழிற்படும். அதாவது
பயம் கவலை மன உளைச்சல் போன்ற situation இல் தொழிற்படும்.
பராபரிவு நரம்புகள் சாதாரண ஓய்வு நிலைமைகளில் தொழிற்படும். அதாவது இழிவு அணுசேபம் பேணலில் தொடர்புபட்டவை.
(பொதுவாக பரிவு நரம்பு பராபரிவு நரம்புகள் என்றுக்கொன்று எதிரான தொழிற்பாடு)
தன்னாட்சி நரம்பு தொகுதியின் ஒழுங்கமைப்பு
![fbfgbhgh]()
தன்னாட்சி நரம்பு தொகுதியில் அதாவது பரிவு பராபரிவில் உலக தொழிற்பாட்டை காட்டும் தெறி வினையுடன் இரு இயக்க நரம்பு கலம் தொடர்புடையது. அதாவது தன்னாட்சி நரம்புகலங்களின் விளைவு காட்டலுடன் இரு இயக்க நரம்பு கலம் தொடர்புபட்டது. அவை
1. திரட்டுக்கு முன்னான நரம்பு கலம்
2. திரட்டுக்கு பின்னான நரம்பு கலம்
பரிவு நரம்பு தொகுதியில் திரட்டுகள் முண்ணானுக்கு சமாந்தரமாக சங்கிலி போன்ற அமைப்பில் காணலாம். பராபரிவில் அவ்வாறில்லை.
தொழிற்பாடு
| பகுதி |
பரிவு |
பரபரிவு |
| தலை |
கண்மணியை விரிவடைய செய்யும் இதன் மூலம் கண்ணினுள் செல்லும் ஒளியின் அளவு சீராக்கப்படும்
பிசிருடல் தொழிற்பட்டு கண் வில்லையை தூரப் பார்வைக்கு ஏற்றதாக மாறும். பிசிருடல் தலையை சுருங்கச் செய்து கண்வில்லையின் அண்மை பார்வைக்கேற்ற சீர்படும்.
உமிழ் நீர் சுரத்தலை நீரோதிக்கும் |
கண்மணியை சுருங்க செய்யும் .கண்ணீர் சுரப்பை தூண்டும் |
| இதயம் |
இதய அடிப்பு வீதம் வலிமை அதிகரிக்கச் செய்யும், முடியுரு நாடிகளின் விரிவை தூண்டும், வன்கூட்டு தசைகளுக்கான நாடிகளின் விரிவை தூண்டும் |
குறைக்கும்
சுருக்கம் தூண்டும் |
| சுவாசப்பை |
சுவாசப்பை சிறு குழாய்களை விரிவடைய செய்து) காற்றூட்டல் வீதத்தை கூட்டும்
இதன் மூலம் காற்றூட்டல் சீராக்கப்படும் |
குறைக்கும் சுருக்கமடையச் செய்யும் |
| உணவுக் கால்வாய் |
சுற்றுச் சுருக்கை நிரோதிக்கும் |
தூண்டும் |
| குருதி |
உணவு கால்வாய் மழமழப்பான தசைக்குரிய புன்னாடிகளை சுருங்கச் செய்யும் .
Blood pressure கூடும் |
சாதாரண நிலையில் பேணும், குறைக்கும் |
மனித முண்ணானின் அமைப்பும் தொழிலும்
![fgcvb]()
அமைவிடம்
நீள்வளையமையவிழையத்தின் தொடர்ச்சியாக ஆரம்பித்து நீட்சி அடைந்து 1வது நாரி முள்ளெந்தண்டென்பு வரை முள்ளந்தண்டு என்பு கம்பத்தினுள் நரம்புக் கால்வாயினுள் அமைந்து காணலாம். கட்டமைப்பு
எனவே முண்ணான் என்பது மூளையிலிருந்து நீட்டப்பட்டு முள்ளந்தண்டினூடாக செல்லும் நரம்புக் கலங்களின் வடமாகும்.
முண்ணானானது பின்வரும் கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படும்.
1. முள்ளந்தண்டு கம்பம் { என்புகள்
2. 3 மென்சவ்வுகளாலான போர்வை { சருமம்
3. மூளைய முண்ணான் பாய்பொருள்
அமைப்பு
மைய நரம்புத் தொகுதியில் நீண்ட உருளையான அமைப்பாகும். அண்ணளவாக 45 cm நீளமும் சின்னிவிரல் தடிப்பையும் கொண்டது.
கு. வெ. மு. தோற்றத்தில் முதுகுப்புறää வயிற்றுப்புற பிளவினால் முற்றற்ற முறையில் பிரிக்கப்பட்ட இரு சம பாதிகளை கொண்டது. மத்தியில் பிசிர் மேலண் இனால் படலிடப்பட்ட மூளைய முண்ணான் பாய்பொருளால் நீரப்பப்பட்ட மையக்கால்வாயை கொண்டது.
மையக்கால்வாயை சூழ H வடிவமான நரை சடப்பொருள் காணலாம். இதில் முதுகுப்புறமான இரு கொம்புகளும் வயிற்றுப்புறமான இரு கொம்புகளும் முனைப்பாக காணலாம்.
நரைசபப்பொருளை சூழ வெண் சடப்பொருள் காணலாம்.
எனவே முண்ணானின் கற்றயல் பகுதி வெண் சடப்பொருளாலும் மையப்பகுதி நரை சடப்பொருளாலும் ஆக்கப்பட்டது.
முதுகுப்புற பிளவு ஆழமானது. ஒடுங்கியது. வயிற்றுப்புறää பிளவு ஆழம் குறைந்தது. அகன்றது.
முண்ணானின் முதுகுப்புற திரட்டில் புலன் நரம்புகளின் கலவுடல் காணலாம். புலன் நரம்பு முதுகுப்புற வேரூடாக உட்செல்லும்.
இயக்க நரம்பு வயிற்றுப்புற வேரூடாக வெளியேறும் பின்பு இரண்டும் இணைந்து கலப்பு நரம்பு ஆக்கப்படும்.
தொழில்
1. உடலுக்கும் மூளைக்குமிடையில் மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாகவும் செய்திகளை அனுப்பும் – உடலின் தகவல்நெடுஞ்சாலை.
2. தெறிவினை மூலம் வன்கூட்டுத் தசைகளின் இயக்கத்தின் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்தும்.
3. தெறிவினை மூலம் இச்சையின்றி இயங்கும் தசைகளை இயக்கி ஓர் சீர்திடன்லை பேணலில் பங்கு வகிக்கும்.
![]()
அமைவிடம்
சகல கலங்களிலும் முதலுருவை எல்லைப்படுத்தி / சூழக் காணப்படும் கட்டமைப்பு ஆகும்.



அமைப்பு :
- பொஸ்போ இலிப்பிட்டு இருபடை
- பொஸ்போ இலிப்பிட்டின் தலைப்பகுதி
- பொஸ்போ இலிப்பிட்டின் வால் பகுதி
- ஊடுருவிய கோளப்புரதம்
- புரத நுண்கால்வாய்
- மேற்பரப்பு / சுற்றயலுருக்குரிய புரதம்
- கொலஸ்திரோல்
- கிளைக்கோ இலிப்பிட்டு (காபோவைதரேற்றுடன் இலிப்பிட்டு இணைந்துள்ளது)
- கிளைக்கோ புரதம்
- கல மென்சவ்வு இலிப்பிட்டு, புரதம், காபோவைதரேற்று ஆகிய உயிரியல் மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டது.
- இவற்றுள் இலிப்பிட்டு, புரதம் அதிகளவிலும், காபோவைதரேற்று மிகக் குறைந்தளவிலும் காணப்படும்
- சராசரி தடிப்பு 7 – 8nm
- இங்கு அதிகளவில் காணப்படும் இலிப்பிட்டு வகை பொஸ்போ இலிப்பிட்டு ஆகும்.
- ஒவ்வொரு பொஸ்போ இலிப்பிட்டும் முனைவாக்கமுடைய / நீர் விருப்புடைய தலைப்பகுதியையும் முனைவாக்கமற்ற / நீர் வெறுப்புடைய வால் பகுதியையும் அல்லது 2 ஐதரோகாபன் சங்கிலியையும் கொண்டு காணப்படும்.
- பொஸ்போ இலிப்பிட்டு இரு படைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வால்பகுதிகள் உள்நோக்கியும் தலைப்பகுதி வெளிநோக்கியும் காணப்படும்.
- கலமென்சவ்வின் அடிப்படைக் கட்டமைப்பாக பொஸ்போ இலிப்பிட்டு காணப்படும். இது தொடர்ச்சியாக காணப்படும்.
- இம் மூலக்கூறுகள் பக்கவாட்டில் விரைவாக அசையக் கூடியன.
- பொஸ்போ இலிப்பிட்டின் பக்கவாட்டான அசைவு கல மென்சவ்விற்கு பாயி அமைப்பை வழங்குகின்றது.
- விலங்குக் கலமென்சவ்வில் பொஸ்போ இலிப்பிட்டிற்கு மேலதிகமாக கொலஸ்திரோல் காணப்படுகின்றது. இது பொஸ்போ இலிப்பிட்டுகளுக்கிடையில் காணப்பட்டு அதன் அசைவை குறைக்கின்றன. எனவே, குறைந்த பாயித் தன்மையைக் கொண்டது.
- மென்சவ்வில் காணப்படும் புரத வகை கோளப்புரதங்கள் ஆகும். தொடர்ச்சியற்று பொஸ்போ இலிப்பிட்டிற்குள் அமிழ்ந்து காணலாம்.
- புரதங்கள் இரு வகை
- ஊடுருவிய புரதங்கள்
- சுற்றயலுக்குரிய புரதங்கள்
- சுற்றயலுக்குரிய புரதங்கள் அமிழ்ந்து காணப்படாமல் கலமென்சவ்வின் உட்புறம், வெளிப்புறம் காணப்படுகின்றது.
- ஊடுருவிய புரதங்கள் பகுதியாக ஊடுருவி / முழுமையாக ஊடுருவி காணப்படும்.
- உட்புறமான புரதம் குழியவன்கூட்டுடன் இணைந்து காணப்படும்.
- கலமென்சவ்வில் புரதம் தொடர்ச்சியற்று சிதறி காணப்படும் அமைப்பு சித்திர வடிவை வழங்குகின்றது.
- எனவே கலமென்சவ்வின் அமைப்பு பாயி சித்திர மாதிரி எனப்படும்
- இம்மாதிரியை முன்வைத்த விஞ்ஞானிகள் Singer & Nicholsenகாபோவைதரேற்றுகள் வெளிப்புற மேற்பரப்பில் மட்டும் காணப்படும்.
- சிறிய கிளைத்த சங்கிலியாக காணப்படுகின்றது.
- புரதத்துடன் இணைந்து காணப்படின் கிளைக்கோபுரதம் எனவும் இலிப்பிட்டுடன் இணைந்து காணப்படின் கிளைக்கோ இலிப்பிட்டு எனவும் அழைக்கப்படும்.
- கிளைக்கோ புரதமே அதிகளவில் காணப்படுகின்றது.
- இது ஒரு தேர்ந்து புகவிடும் மென்சவ்வு / ஒருபங்குபுகவிடும் மென்சவ்வு எனலாம்.
| முதலுருமென்சவ்வு |
கூறு |
| பொஸ்போ இலிப்பிட்டு |
- கலமென்சவ்விற்கு அடிப்படை அமைப்பு வழங்கல்
- பதார்த்த பரிமாற்றம்
- திரவ அமைப்பு வழங்கல்
|
| புரதம் |
- பதார்த்த பரிமாற்றம்
- நொதியமாகத் தொழிற்படல்
- வாங்கியாகத் தொழிற்படல்
- கலம் அடையாளம் காணல் (கிளைக்கோபுரதம்)
- குழியவன்கூட்டுடன் இணைந்து உறுதி வழங்கல்
|
கலமென்சவ்வின் தொழில்கள் 
![n-6]()




- கலத்தின் இயக்கத்திற்குரிய எல்லையாகத் தொழிற்படல்
- நீர், அயன்கள், சேதன மூலக்கூறுகளை ஊடுசெல்ல அனுமதித்தல்
- கழிவுப் பதார்த்தங்கள் வெளியேற்றப்படலை சீராக்கல்
- கலத்தின் பிரசாரண சமநிலையைப் பேணுதல்
- வாங்கியின் ஊடாகத் தகவல்களைப் பெற்று கலங்களுக்கிடையேயான செயற்பாடுகளை இயைபாக்க சமிஞ்ஞைகளைக் கடத்துதல்
பரவல்
- செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு செறிவுப் படித்திறனுக்கு ஏற்ப கலமென்சவ்வின் ஊடான பதார்த்த பரிமாற்றம் பரவல் எனப்படும்.
- இது கல மென்சவ்வின் பொஸ்போ இலிப்பிட்டு படையினூடாக நடைபெறும்.
- நேரடியான பதாரத்த பரிமாற்றம்
- விரைவாக நிகழ்கின்றது
(உ – ம்) சுவாச வாயுக்களான O2, CO2 பரிமாற்றம்
பிரசாரணம்
- நீர் செறிவு கூடிய இடத்திலிருந்து / நீர் அழுத்தம் கூடிய இடத்திலிருந்து நீர் செறிவு குறைந்த இடத்திற்கு நீர் மூலக்கூறுகள் ஒருபங்குபுகவிடும் மென்சவ்வின் ஊடாக கொண்டு செல்லப்படுதல் பிரசாரணம் எனப்படும். (உ-ம்) : நீர்
தூண்டப்பட்ட பரவல்
- செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு மூலக்கூறுகள் கலமென்சவ்வில் உள்ள புரதங்களின் உதவியுடன் பரிமாற்றப்படுதல் ஆகும்.
- இது கால்வாய்ப் புரதங்களின் ஊடாகவும், காவிப் புரதங்களின் ஊடாகவும் நிகழ்கின்றது.
- கால்வாய்ப் புரதத்தில் புரதம் நிலையான வடிவத்தைக் கொண்டிருக்கும் காவிப்புரத்தின் ஊடான பரிமாற்றத்தில் புரதத்தின் வடிவம் மாற்றத்திற்கு உள்ளாகும்.
- (உ-ம்) – காவிபுரதம் → குளுக்கோஸ், அமினோவமிலம்
கால்வாய்ப் புரதம் → அயன்கள்
உயிர்ப்பான கொண்டுசெல்லல்
- குறைந்த செறிவு உள்ள இடத்திலிருந்து கூடிய செறிவுள்ள இடத்திற்கு செறிவுப் படித்திறனுக்கு எதிராக சக்தி பயன்படுத்தி கலமென்சவ்வில் உள்ள காவிப் புரதத்தின் ஊடாக பதார்த்தம் பரிமாற்றப்படுதல் உயிர்ப்பான கொண்டுசெல்லல் எனலாம்.
- இங்கு காவிப் புரதம் பம்பி எனலாம்.
- (உ – ம்) : சிறுகுடல் கலங்களில் → குளுக்கோசு, அமினோ அமிலம்
நரம்பு கலம் → Na+, K+
தலைகலம் → Ca2+
சிறுநீரகத்தி கலம் → தாவரங்களில் வேர்மயிர் ஊடான கனியுப்பு அகத்துறிஞ்சல்
குழியமாதல்
- கலமென்சவ்வு புடகமாகி சக்தி செலவீட்டுடன் தொகையாகப் பதார்த்தங்கள் பரிமாற்றப்படுதல் குழியமாதல் எணலாம்.
- இக் குழியமாதல் இரு வகைப்படும்.
- புறக்குழியமாதல்
- அகக்குழியமாதல்
- புறக்குழியமாதலின் போது கலமென்சவ்வு புடகமாகி கழிவுப் பதார்த்தங்களில் சுரப்பு பதார்த்தங்கள் கலத்திலிருந்து வெளிநோக்கி வெளியேற்றப்படும்.
- அக குழியமாதல் எனப்படுவது கலமென்சவ்வு புடகமாகி பதார்த்தங்கள் உள்ளே எடுக்கப்படுதல் ஆகும்.
- இது இரு நிலைகளில் உள்ளெடுக்கப்படுகின்றது.
- தின்குழியமாதல் → திண்ம நிலையில் உள்ளெடுக்கப்படுதல்.
(உ – ம்) : WBC கலங்களால் பற்றீரியாக்கள் உள்ளெடுக்கப்படுதல்.
- குடிக்குழியமாதல் → திரவத் துளிகளாக உள்ளெடுக்கப்படும்
(உ – ம்) : புரதங்கள்
கலப்புறக்கூறு / கலக்கவசம்
- கலமென்சவ்விற்கு வெளிப்புறமாக காணப்படும் கட்டமைப்புகள் கலப் புறக்கூறுகள் / கலக்கவசம் எனப்படும்.
- இது உயிருள்ள கலத்தினால் முதலுரு மென்சவ்விற்கு வெளிப்புறமாக சுரக்கப்படுகின்றது.
- இயூக்கரியோற்றாத் தாவரக்கலங்களில் இது கலச்சுவராகக் காணப்படுகிறது. விலங்குக் கலங்களில் இது கலப்புறத் தாயம் என அழைக்கப்படும்.