











அரச வரவு செலவுத்திட்டம்
- அடுத்து வரும் ஆண்டினுள் அரசின் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் செலவுகளையும் அச்செலவுகளை ஈடுசெய்வதற்காக பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வழிகளையும்
சட்டவாக்கத்துறைக்கு முன்வைத்து அனுமதித்துக்கொள்ளும் அறிக்கையே அரச வரவு செலவுத்திட்டமாகும்.
- மொத்த வரவு செலவுத்திட்ட மீதிக்கமைய பின்வருமாறு வகைப்படுத்த முடியும்:
- பற்றாக்குறை வரவு செலவுத்திட்டம்
- மிகைநிலை வரவு செலவுத்திட்டம்
- சமநிலை வரவு செலவுத்திட்டம்
- தனியார் வரவு செலவுத் திட்டம் மற்றும் அரச வரவு செலவுத்
திட்டத்துக்கு இடையில் வேறுபாடு காணப்படுகின்றது.
- பற்றாக்குறையொன்று காணப்படும்போது அதனை நிதியீட்டம் செய்ய வேண்டும்.
- நிதியீட்டத்துக்காக விரிவாக்க மற்றும் சுருக்க வரவு செலவுத்
திட்டக் கொள்கைகள் பயன்படுத்தப்படும்.
கடந்த பல வருடங்களாக இலங்கையின் அரச வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை காணப்படுகின்றது.
அண்மையாண்டுகளில் இலங்கையின் வரவு செலவுத்திட்டக் குறைநிலைக்குக் காரணங்கள்:
- பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியமை காரணமாக வரி
வருமானங்கள் குறைவடைதல்.
- மேலதிக வருமானங்களை ஈட்டித்தரக்கூடிய அரசின் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவது தாமதிக்கின்றமை காரணமாக அரச வருமானத்தில் வளர்ச்சியொன்று இன்மை.
- அரச முயற்சிகளின் செயற்றிறனின்மை காரணமாக இலாபம் உழைப்பதற்கு முடியாதிருத்தல்.
- பாதுகாப்புச் செலவு அதிகரித்தல்
- கடனை மீளச் செலுத்தும் செலவுகள் அதிகரித்தல்.
- வட்டிக் கொடுப்பனவுகள் அதிகரித்தல்
- அரச மாற்றல் செலவு அதிகரித்தல்.
- அரச சேவைச் செலவுகள் அதிகரித்தல்.
- தேர்தல் செலவுகள் அதிகரித்தல்.
இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிதிப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள்:
- வெளிநாட்டு நிதிப்படுத்தல்
- வெளிநாட்டுக் கடன்கள்
- வெளிநாட்டுக் கொடைகள்
- உள்நாட்டு நிதிப்படுத்தல்
- சந்தைக்கடன் பெறல்
- வங்கியில்லாத
- வங்கி (வணிக வங்கி)
- சந்தை சாரா கடன் பெறல்
தொடர்ச்சியாக வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையொன்று காணப்படுவதனால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள்:
- அரச கடன்கள் அதிகரித்தல்.
- பணவீக்கம் ஏற்படக்கூடிய நிலை
- சென்மதி நிலுவைப் பிரச்சினை ஏற்படல்
- தனியார் துறையின் முதலீடு குறைவடைதல்
- வட்டி விகித அதிகரிப்பு
- அரசாங்கத் திட்டங்கள் செயற்படாத நிலை
- சர்வதேச விசுவாசம் குறைவடைதல்.
- வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் வீழ்ச்சியடைதல்
- உள்நாட்டுச் சேமிப்புக் குறைவடைதல்.
வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையைக் குறைத்துக் கொள்வதனால் பொருளாதாரத்துக்குக் கிட்டும் நன்மைகள்:
- அரச கடன் சுமையினைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக
இருத்தல்.
- பண வீக்கத்தின் பாதிப்புக்கள் குறைவடைதல்.
- அரச முதலீடுகளை அதிகரிக்கக் கூடியதாக இருத்தல்.
- வட்டி வீதத்தைத் தாழ்ந்த மட்டத்தில் பேணக்கூடியதாக
இருத்தல்.
- தனியார் முதலீடுகளை அதிகரிக்கக் கூடியதாக இருத்தல்.
- பொது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச் சுமையைக்
குறைக்கக் கூடியதாக இருத்தல்.
- பேரினப் பொருளாதார உறுதிப்பாட்டுக்கு வழியேற்படல்.
- கலச்சுவாசம் எனப்படுவது கலங்களில் சுவாசக் கீழ்ப்படை / சேதன மூலக்கூறு நொதியக் கட்டுப்பாட்டுக்குரிய பல தொடரான தாக்கப்படிகளுக்கூடாக ஒட்சியேற்றப்பட்டு / உடைக்கப்பட்டு வெளியேற்றப்படும் சக்தியின் ஒரு பகுதி ATP யாக மாற்றப்படும் அவசேபச் செயன்முறையாகும்.




- கலச்சுவாசம் இரு வகைப்படும்
1. காற்றின்றிய சுவாசம் → O2 பங்குகொள்ளுவதில்லை.
2. காற்றிற் சுவாசம் → O2 பயன்படுத்தப்படும்
காற்றிற் சுவாசம் 





- கலங்களில் கீழ்ப்படை / சேதன மூலக்கூறு நொதியக் கட்டுப்பாட்டுக்குரிய பல தொடரான தாக்கப்படிகள் ஊடாக ஒட்சிசனின் பங்கு கொள்ளளோடு ஒட்சியேற்றப்பட்டு / உடைக்கப்பட்டு வெளிவிடப்படும் சக்தியின் ஒரு பகுதி ATP ஆக மாற்றப்படும் அவசேபச் செயன்முறை காற்றிற் சுவாசம் எனப்படும்.
- காற்றிற் சுவாசம் 4 படிகள் / அவத்தைகள் ஊடாக நிகழும்
1. கிளைக்கோ பகுப்பு ⇒ Cytosole இல் நிகழும்
2. Pyruvate ஆனது Acetyl co A ஆக மாறுதல் ⇒ இழைமணித் தாயத்தில் நிகழும்.
3. கிரெப்ஸின் வட்டம் (Krebs வட்டம்) ⇒ இழைமணித் தாயத்தில் நிகழும்
4. en இடம் மாற்றும் சங்கிலி ⇒ இழைமணியின் உள்மென்சவ்வான உச்சி / முகடு
கிளைக்கோபகுப்பு 




![glycolisis]()
- கிளைக்கோ பகுப்பு குழியவுரு / குழியவுருத் தாயத்தில் நிகழும்.
- இது நொதிய ஊக்குவிப்புக்குரிய பல தொடரான தாக்கப்படிகளுக்கூடாக நடைபெறுகின்றது.
- இத்தொடரான தாக்கத்தில் ஒட்சிசன் பங்கு கொள்வதில்லை.
- இது 03 பிரதான செயற்பாடுகளினூடாக நடைபெறுகின்றது.
1. பெஸ்பரலேற்றம்
2. பகுப்பு / உடைப்பு
3. ஐதரசன் அகற்றல் / ஒட்சியேற்றம்
- பொஸ்பரலேற்றத்தின் போது 2 ATP பயன்படுத்தப்பட்டு குளுக்கோசு உயிர்ப்பாக்கப்பட்டு பொஸ்பரலேற்றம் செய்யப்படுவதன் மூலம் 6C வெல்ல / Glucose இருபொஸ்பேற்றாக மாற்றப்படுகின்றது.
- பகுப்பின் போது இம்மூலக்கூறு உடைக்கப்பட்டு 3C வெல்ல பொஸ்பேற்று 2 மூலக்கூறுகள் பெறப்படுகின்றன.
- ஒட்சியேற்றத்தின் போது இவ் ஒவ்வொரு மூலக்கூறும் Pyruvate ஆக ஒட்சியேற்றப்படுகின்றது. இதன்போது இம்மூலக்கூறிலிருந்து ஐதரசனும் பொஸ்பேற்றும் அகற்றப்படுகின்றன.
- NAD+ ஐதரசன் வாங்கியாக தொழிற்பட்டுNADH + H+ ஆக மாறுகின்றது.
- அகற்றப்படும் பொஸ்பேற்று ADP க்கு இடம்மாற்றப்பட்டு ATP தொகுக்கப்படுகின்றது.
| மொத்த உள்ளீடு |
மொத்த வெளியீடு |
| 1 மூலக்கூறு குளுக்கோசு |
2 மூலக்கூறு Pyruvate |
| 2 ATP |
2 ATP |
| 2 NAD+ |
2 (NADH + H+) |
- எனவே கிளைக்கோ பகுப்பின் தேறிய விளைவானது 2 Pyruvate, 2 ATP, 2(NADH + H+)
- இவற்றுள் சக்தி தொடர்பான விளைப்பொருட்கள் ATP, NADH + H+
- கிளைக்கோபகுப்பில் ATP கீழ்ப்படை பொஸ்பரலேற்றத்தால் உருவாக்கப்படுகின்றது.
- கீழ்ப்படை பொஸ்பரலேற்றம் எனப்படுவது ஒரு கீழ்ப்படையிலிருந்து அசேதன பொஸ்பேற்று ADP இற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு ATP உருவாக்கப்படுதல் ஆகும்.
- எனவே குளுக்கோசு 2 Pyruvate ஆக ஒட்சியேற்றப்படுவது கிளைக்கோ பகுப்பு எனப்படும்.
- கிளைக்கோ பகுப்பில் பின்வரும் இடைநிலைச் சேர்வைகள்
1. PGA ⇒ பொஸ்போ கிளிசரிக்கமிலம்
2. PGAL ⇒ பொஸ்போ கிளிசரல்டிகைட்
3. PEP ⇒ பொஸ்போ ஈனோல் Pyruvate
Pyruvate ஆனது Acetyl Co A ஆக மாற்றமடைதல்
![acetyl-co-a]()
- இத்தாக்கம் இழைமணி தாயத்தில் நிகழ்கின்றது.
- குழியவுருத் தாயத்தில் விளைவாக்கப்பட்ட Pyruvate இழைமணியினுள் ஒட்சிசன் காணப்படுமிடத்து குழியவுருவிலிருந்து இழைமணித் தாயத்தினுள் செல்லும்.
- இழைமணித் தாயத்தில் CO2 அகற்றலுக்கும் ஐதரசன் அகற்றலுக்கும் உட்பட்டு 2 C சேர்வையான Acetyl ஆக மாற்றப்படும்.
- இதன் போது ஐதரசன் வாங்கியாக NAD+ பங்குகொள்ளும்.
- பின்பு 2 C Acetyl ஒவ்வொன்றும் துணைநொதியம் A (Co – A) உடன் இணைந்து Acetyl துணைநொதியம் A ஆக மாற்றப்படும்.
- இதன் விளைவாக 2 CO2 + 2(NADH + H+) + 2 Acetyl Co A உருவாக்கப்படும்.
கிரெப்சின் வட்டம் 

![citric_acid_cycle_with_aconitate_2-svg]()
- கிரெப்சின் வட்டம் இழைமணித் தாயத்தில் நிகழும்
- விஞ்ஞானி கென்ஸ்கிரெப்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் இது சிற்றிக் வட்டம் / TCA வட்டம் (மூன்று காபொட்சிக் அமிலம்) எனவும் அழைக்கப்படும்.
- இதன் ஆரம்பப் பொருள் Acetyl Co A ஆகும்.
- Acetyl Co A இல் உள்ள 2C சேர்வையான Acetyl இழைமணித் தாயத்திலுள்ள 4C சேர்வையான Oxaloacetate உடன் இணைந்து 6C சேர்வையான Citrate ஐ உருவாக்கும்.
இதன் போது Acetyl Co A இலிருந்து விலகிச் செல்லும்.
- Citrate பல தொடரான CO2 அகற்றல், ஒட்சியேற்ற தாக்கங்களினூடாக மீண்டும் Oxaloacetate ஐ உருவாக்கும்.
- விளைவாக 6(NADH + H+), 2FADH2, 2ATP, 4CO2 விளைவாக பெறப்படும். ATP கீழ்ப்படை பொஸ்பரலேற்ற முறையினால் உருவாக்கப்படும்.
இலத்திரன் இடம்மாற்றும் சங்கிலி 
![electron-tranport]()
- en இடம்மாற்றும் செயற்பாடு இழைமணியின் உள்மென்சவ்வு / உச்சி முகட்டுப் பகுதியில் நிகழும்.
- இதன்போது காற்றிற் சுவாசத்தின் ஏனைய நிலைகளில் பெறப்பட்ட தாழ்த்தப்பட்ட துணைக்காரணிகள் / துணை நொதியங்கள் (NADH + H+, FADH2) ஒட்சியேற்றப்பட்டு அகற்றப்படும்
- சக்தி கொண்ட en இனால் தாயத்திலுள்ள H+ புரதக் கால்வாயினூடாகப் பம்பப்பட்டு அதிலுள்ள சக்தி ADP இற்கு இடம்மாற்றப்பட்டு ATP தொகுக்கப்படுகின்றது.
- NADH + H+ லிருந்து வெளியேறும் en காவிகளினூடாக பயணம் செய்து மூன்று நிலைகளில் அதன் சக்தியின் ஒரு பகுதி வழங்கப்பட்டு ATP தொகுக்கப்படுகின்றது.
- அதே போல் ஒரு FADH2 இலிருந்து வெளியேறும் en, en வாங்கிகளுக்கூடாகச் சென்று இரு நிலைகளில் ATP உருவாக்கப்படுகின்றது.
- இதன்போது ATP தொகுப்பிற்கு ATP சிந்தேசு (ATPase) நொதியம் அவசியமானது. அத்துடன் ATP உருவாக்கப்படும் முறை ஒட்சியேற்ற பொஸ்பரலேற்றம் எனப்படும்.
- இங்கு en காவிகளாக Ubiquinone,Cytochrome தொழிற்படுகின்றது.
- Cytochrome இல் A,C,Cytochrome Oxydase எனும் வகைகள் காணப்படுகின்றது.
- இறுதி en வாங்கியாக வளிமண்டல O2 தொழிற்பட்டு நீர் உருவாக்கப்படுகின்றது.
- ஒட்சியேற்ற பொஸ்பரலேற்றம் எனப்படுவது இழைமணியின் உள்மென்சவ்வில் தாழ்த்தப்பட்ட துணைக்காரணிகள் ஒட்சியேற்றப்பட்டு Proton Pump மூலம் சக்தி ADP க்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு ATP Synthase ஊக்குவிப்பதால் ATP உற்பத்தி செய்வதாகும்.
- en இடம்மாற்றும் சங்கிலியில் ஒரு NADH + H+ உள் நுழைந்தால் 3 ATP உற்பத்தி செய்யப்படுவதுடன் 1 மூலக்கூறு நீர் விளைவாக்கப்பட்டு 1/2 O2பயன்படுத்தப்படும். எனவே, 10 (NADH + H+) இற்கு 30 ATP + 10 H2O + 5 O2 பயன்படுத்தப்படும்.
- ஒரு FADH2 உட்சென்றால் 2ATP உற்பத்தி செய்யப்படுவதுடன் ஒரு நீர் விளைவாக்கப்பட்டு 1/2 O2 பயன்படுத்தப்படும். எனவே, 2FADH2 → 4ATP தொகுக்கப்பட்டு 2H2O விளைவாக்கப்பட்டு ஒரு O2 பயன்படுத்தப்படும்.
- காற்றிற் சுவாசத்தில் ஒவ்வொரு CO2 அகற்றலுக்கும் ஒரு நீர் பயன்படுத்தப்படும்.
எனவே en கடத்தல் சங்கிலியில் 34 ATP விளைவாக்கப்படும். 6O2 பயன்படுத்தப்படும். 6 நீர் தேறிய விளைவாகப் பெறப்படும். (12H2O – 6H2O)
- எனவே காற்றிற் சுவாச சமன்பாடு
C6H12O6 + 6O2 → 6CO2+ 6 H2O + 38/ 36 ATP
- ஈரல் கலங்களிலும் இதயத் தசைகளிலும் 38 ATP விளைவாக்கப்படும். ஏனைய கலங்களில் 36 ATP யே விளைவாக்கப்படும். காரணம் இவற்றில் கிளைக்கோ பகுப்பின் 2 NADH, 2 ATP பயன்படுத்தப்பட்டு இழைமணித் தாயத்தினுள் கொண்டு செல்லப்படுகின்றது.குப்பு
காபோவைதரேற்று தவிர்ந்த ஏனைய சுவாசக் கீழ்ப்படைகள் 

- காபோவைதரேற்று அல்லது புரதம் சுவாசக் கீழ்ப்படையாகத் தொழிற்படின் முதலில் அது நீர்ப்பகுப்பு அடைந்து எளிய நிலையான அமினோ அமிலமாக மாற்றப்படுகின்றது. பின் இது அமைனகற்றலுக்கு உட்பட்டு அமோனியா ஆகவும் காபொட்சிலிக்கமிலமாகவும் மாற்றப்படுகின்றது.
- காபொட்சிலிக்கமிலம் கிரெப்சின் வட்டத்தினூடாக சுவாசச் செயன்முறையில் ஈடுபடுகின்றது.
- சேமிப்பு இலிப்பு சுவாசக் கீழ்ப்படையாகத் தொழிற்படின் முதலில் அது நீர்ப்பகுப்பு அடைந்து எளிய கூறுகளான கிளிசரோல், கொழுப்பமிலமாக மாற்றப்படும்.
- கிளிசரோல் PGAL ஆக மாற்றப்பட்டு கிளைக்கோ பகுப்பினூடாக சுவாசச் செயன்முறையில் ஈடுபடும். கொழுப்பமிலம் Acetyl Co A ஆக மாற்றப்பட்டு கிரெப்சின் வட்டத்தினூடாக சுவாசச் செயன்முறையில் ஈடுபடும்.
காற்றின்றிய சுவாசம் 

- காற்றின்றிய சுவாசத்திலும் முதலாவது படி கிளைக்கோ பகுப்பு ஆகும்.
- இதன் விளைவாக 2 ATP, 2(NADH + H+), 2 Pyruvate பெறப்படும்.
- Pyruvate ஒட்சிசன் இன்றிய நிலைமையில் குழியவுருத் திரவத்திலேயே இரு வெவ்வேறான பாதைகளில் உட்செல்லலாம்.
1. இலக்டேற்று நொதித்தல்
2. அற்ககோல் நொதித்தல்
- இலக்றேற்று நொதித்தல் விலங்குக் கலங்களிலும் சில பக்றீரியாக் கலங்களிலும் நிகழ்கின்றது. இதன்போது Pyruvate NADH + H+ ஐதரசன் வழங்கியாகத் தொழிற்பட தாழ்த்தப்பட்டு இலக்றேற்றாக மாற்றப்படும். எனவே, இலக்டேற்று நொதித்தல் காற்றின்றிய சுவாசத்திற்குரிய மொத்த சமன்பாடு.
![lactate]()
- அற்ககோல் நொதித்தல் தாவரக் கலங்களிலும் பங்கசுக் கலங்களிலும் சில பற்றீரியாக் கலங்களிலும் நிகழ்கின்றது. இதன்போது Pyruvate CO2 அகற்றலுக்கு உட்பட்டு எதனல் / அசற்றல்டிகைட் ஆக மாற்றப்படும். பின் இவ் எதனல் NADH + H+ ஐதரசன் வழங்கியாகத் தொழிற்பட தாழ்த்தப்பட்டு எதனோல் ஆக மாற்றப்படும். எனவே, அற்ககோல் நொதித்தல் காற்றின்றிய சுவாசத்துக்குரிய மொத்த சமன்பாடு.
![ethanol]()
- காற்றின்றிய சுவாசம் கலத்தின் குழியவுருத் திரவத்தில் நிகழ்கின்றது
உள்ளுராட்சி 









• இலங்கையில் நடைமுறையிலுள்ள உள்ளுராட்சி அமைப்பு முறையின் அடிப்படைப் பண்புகள் :
• மாநகர சபை நகரசபை மற்றும் பிரதேச சபைகளை உள்ளடக்கியிருத்தல்.
• விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் இதன் உறுப்பினர்களை தெரிவு செய்தல்.
• உள்ளுராட்சி அமைப்பின் மேற்பார்வைக்கு கீழ்ப்பட்டிருத்தல்.
• தமது அதிகாரப் பிரதேசத்திற்குப் பொருந்தும் வகையில் கொள்கைகளை ஆக்கிக் கொள்ளல்.
• மாகாணத்தின் உள்ளுராட்சி அமைச்சினால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
• இதன் பதவிக்காலம் 4 வருடங்களாகும்.
• உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்:
• வரிகள் இறைகள் மற்றுமு; பல்வேறு வகையான அறவீடுகளை விதித்தல்.
• பொது வீதிகள் தெருக்கள் வாய்க்கால்கள் பாலங்கள் பொதுச்சந்தை சிலைகள் சிற்பங்கள் நூல் நிலையங்கள் பூங்காக்கள் கட்டிடங்கள் போன்றவற்றில் உள்ள அதிகாரங்கள்
• வீதி வரைபடங்கள் மற்றும் நிர்மான வரைபடங்கள் சான்றுபடுத்தி விநியோகித்தல்.
• சுற்றாடலைப் பேணிப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
• அனுமதியற்ற நிரிமாணங்களை அகற்றுதல்.
• சட்டவிரோத நிலையங்களை நடத்துதல் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்கு தொடுத்தல்.
• சேரிகளையும் குடிசைகளையும் அகற்றுதல்.
• சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் இடங்களை அழித்தல்.
• இயற்கை நீர் ஊற்றுகள் நீர் தேக்கங்கள் போன்றவற்றின் உரிமைகள்
• உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள்:
• குப்பை கூழங்களை அகற்றுதல்
• சுகாதார மற்றும் சுத்திகரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
• பொதுவீதிகள் வாய்க்கால்கள் பாலங்கள் பூங்காக்கள் விளையாட்டுத்திட்டங்கள் நூலகங்கள் மருந்தகங்கள் போன்றவற்றைக் கொண்டு நடத்துதலும் பராமரித்தலும்
• நிலையான கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் நிர்மாணங்கள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்
• பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தலும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தலும்.
• பொதுத் தரிப்பிடம் பொது மலசலகூடம் போன்றவற்றை ஏற்படுத்தலும் கொண்டு நடத்தலும்
• நீர்விநியோகம் கழிவுநீர் வெளியேற்றம் நீர்வடிகான்கள் வாய்க்கால்கள் மயானம் தகனக்கிரியைகள் போன்றவற்றைக் கொண்டு நடத்துதல்.
• சுகாதாரத்திற்குப் பங்கம் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுத்தல்.
• முன்பள்ளிகள் மகப்பேற்று நிலையங்கள் பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றை நடத்துதல்.
• தீயணைப்புச் செயற்பாடுகளைக் கொண்டு நடாத்துதல்.
• உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி கிடைக்கும் மூலங்கள்:
• அரசாங்கத்திலிருந்து பெறப்படும் நிதி
• மாகாண சபைகளிடமிருந்து பெறப்படும் நிதி
• வரி அபராத முத்திரைக் கட்டணங்கள்
• விற்றலும் குத்தகைக்கு விடுதலும் வாடகைக்கு விடுதலும்
• பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் நிதி ஒதுக்கீடு
• இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் பிரச்சனைகள் :
• நிதி தொடர்பான பிரச்சனைகள்
• அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள்
• வளங்கள் தொடர்பான பிரச்சனைகள்
• வருமானம்தொடர்பான பிரச்சனைகள்
• பிரதிநிதிகள்தொடர்பான பிரச்சனைகள்
• நிர்வாகம்தொடர்பான பிரச்சனைகள்
• உள்ளுராட்சி மன்றங்களின் அவசியம்
• மத்திய அரசின் நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவதற்கு
• மத்திய அரசின் பொதுமக்கள் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதற்கு
• பொதுமக்கள் சேவைகள் மக்களுக்கு இலகுவாக கிடைப்பதற்கு
• ஆட்சியலகுக்குள் வாழும் மக்களின் தேவைக்கேற்ப ஆட்சி செய்யக்கூடியதாயிருப்பதற்கு
• எதிர்கால அரசியல் தலைவர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாதல்.
• இளைஞர்களுக்கு நாட்டின் ஆட்சியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிட்டுதல்.
• நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்களின் பங்கேற்பினை அதிகரிப்பதற்கு
• தேசிய கொள்கையைத் திட்டமிடுவதற்கு இலகுவாக்கல்
• தேசிய கொள்கையைத் திட்டமிடும் போது மக்களின் பங்கேற்பை பெற்றுக் கொள்ளுதல்
• திடீர் தேவைகளின் போது பிராந்திய மட்டத்தில் உடனடியாகச் செயற்படுவது இலகுவாதல்
















சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களையும் மக்கள் தீர்ப்புக்களையும் நடாத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும்.
• தேர்தல் ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்.
• உயர் அல்லது நிர்வாக கல்வித் துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களிலிருந்து ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் இவர்களை நியமிப்பார்.
• பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
• பதவி நீக்கவேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
• தேர்தல் ஆணைக்குழுவின் கூட்ட நடப்பெண் 3 ஆகும்.
• ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு பொறுப்புடையதாகும்.இதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.
• தேர்தல் ஆணைக்குழுவிற்கு தலைவராக தேர்தல் ஆணையாளர் விளங்குவார்.
• இவர் அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் படி ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்.
• அதிகாரங்கள்:
• அரச அல்லது பகிரங்க கூட்டுதாபனத்திற்கு சொந்தமான அசைவுள்ள அசைவற்ற ஆதனங்கள் தேர்தல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை தடைசெய்தல்
• தேர்தலை நடாத்த தேவையான பொலிஸாரைப் பெற்று சேவையில் ஈடுபடுத்தல்.
• அத்தகைய பொலிஸாரை தேர்தல் முடியும் வரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்.
• ஆயுதப்படைகளின் உதவி தேவைப்படின் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்து பெற்றுக்கொள்ளுதல்
மாகாணசபைகள் 























• இலங்கையின் மாகாண சபை முறைமையத் தாபிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளாவன:
• வடக்கின் பிரிவினை வாத யுத்தத்திற்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கைச்சாத்திட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்பது தொடர்பான நிபந்தனைகள்
• ஆட்சிக் கருமங்களில் பிரதேச மக்களை பங்கேற்கச் செய்தல்.
• பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தும் செயற்றிட்டங்களைக் கூட்டுவது
• இலங்கையின் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதன் நோக்கங்கள்:
• அதிகாரப் பகிர்வுக்கு இடமளித்தல்.
• இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைதல்.
• நிர்வாக நடவடிக்கைகள் மக்களின் பங்களிப்பினை பெறல்.
• பிரதேச மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மத்தியரசின் கொள்கைகளை திட்மிட்டு நடைமுறைப்படுத்தல்.
• மாகாண சபைகள் மூலம் கலாச்சாரத்தை விருத்தி செய்தல்.
• மாகாண சபை ஆட்சி மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் ஜனநாயபக பண்புகள் வளர்ச்சியடைய உதவும்.
• மாகாண மக்களின் பிரச்சனைகளுக்கு இலகுவாக தீர்வு காணப்படுதல்இ
• 1978ம் ஆண்டு யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது.
• மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாகும்.
• மாகாண சபை உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் பட்டியல் முறையின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுவர்.
• மாகாண சபையின் ஆளுநர் ஜனாதிபதியினால் 5 வருடத்திற்கு ஒரு முறை நியமிக்கப்படுவார்.
• மாகாண முதலமைச்சர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்.
• மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால் முதலமைச்சரின் சிபாரிசு பெறப்பட வேண்டும்.
• இலங்கையின் மாகாண ஆளுநரின் அதிகாரங்கள்:
• முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் மாகாண சபையை கூட்டல் கலைத்தல் ஒத்திவைத்தல் இடைநிறுத்தல்
• மத்திய அரசு மாகாண சபைகளுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தல்.
• மாகாண சபையின் பெயரளவு நிர்வாகியாகச் செயற்படல்.
• முதலமைச்சரையும் அவரின் சிபாரிசின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமித்தல்.
• மாகாண சபையால் இயற்றப்பட்ட கட்டளைகளுக்கு அங்கீகாரம் வழங்கல்.
• இலங்கையின் மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் உள்ள தொடர்புகளை ஏற்படுத்தும் மாகாண சபை சட்ட ஏற்பாடுகள் :
• கொள்கை உருவாக்கம்
• மாகாண சபைகளின் நியதி சட்டங்களை திருத்தலும் மாற்றலும்
• மாகாண சபைகள் நிரலில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றம் சட்டவாக்கம் செய்தல்.
• ஒருங்கியை நிரலில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக சட்டவாக்கம் செய்தல்.
• மாகாண சபைகள் நியதிச் சட்டங்களை உருவாக்குதல்.
• பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கட்டளைகளை பிறப்பிப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள்
• நிதித்தொடர்புகள்
• மாகாண சபை பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்றும் அதிகாரங்கள்:
• மத்திய அரசினால் குறிப்பிட்ட பிரதேசங்களின் மக்கள் சமாதானத்தை நிலைநாட்டல்.
• பொருளாதார திட்டங்களை உருவாக்கலும் செயற்படுத்தலும் உள்ளுராட்சி செயற்பாடுகள்
• மாகாணங்களின் வீடமைப்பு செயற்றிட்டங்களும் கட்டிட நிர்மாணமும் மேற்கொள்ளல்
• தேசிய பெருந்தெருக்களின் பாலங்கள் தவிர்ந்த மாகாணத்திற்குட்பட்ட பாதைகள் பாலங்கள் மற்றும் ஆறறுத் துறைகள்
• சமூக சேவைகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் விவசாயத்துறை
• கமத்தொழில் சார்ந்த சேவைகள்
• கிராமிய அபிவிருத்தி
• சிறுநீர்ப்பாசனம்
• சுகாதார சுதேசிய வைத்திய நடவடிக்கைகள்
• மாகாண சபைகளினால் செயற்படுத்தப்படும் உல்லாச பிரயாணத்துறை கட்டிடங்கள்
• இலங்கையில் மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையே அதிகாரங்கள் மத்திய அரசின் பட்டியல் மாகாண சபையின் பட்டியல் ஒத்தியங்கும் பட்டியல் என 3 வகைப்படும்.
• இலங்கையின் மாகாண சபை முறைமை செயற்படுத்தப்படும் போது தோன்றியுள்ள பிரச்சனைகள்
• மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே பிரிந்து வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்
• நிதிசார் பிரச்சனைகள்
• மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பான பிரச்சனைகள்




















சோல்பரி அரசியல் திட்டம் அந்நியரால் உருவாக்கப்பட்டமை, சோல்பரி அரசியற் திட்டத்தின் படி பிரித்தானிய அரசாங்கம் இலங்கை தொடர்பாக பல உரிமைகளை கொண்டிருந்தமை, பாராளுமன்றம் சட்ட ஆக்கம் தொடர்பாக போதிய இறைமையைக் கொண்டிராமை, நியமன உறுப்பினர் பதவிகள் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு தடையாக இருந்தமை, நீதிப் புனராய்வு பெற்ற நீதித்துறை பாராளுமன்றத்தின் சுதந்திரத்திற்கு தடையாக இருந்தமை. அடிப்படை உரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் காணப்படாமை முன் வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுகளாகும்.
அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்
1. மக்கள் இறைமை
2. அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்
3. அரச கொள்கையின் தத்துவங்கள்
4. அரசியலமைப்பு நீதிமன்றம்
5. தேசிய அரசுப் பேரவை
6. குடியரசு ஜனாதிபதி
7. அமைச்சரவை
8. மொழியும் மதமும்
9. பொதுச் சேவை
10. நீதிச்சேவை
மனிங்டிவன்ஷயர் சீர்திருத்ததின் முக்கியமான சிபாரிசுகள்:















- சட்டவாக்ககழகம் 49 உறுப்பினரை கொண்டதாக பிரகடனம் செய்யப்பட்டது.
- பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விஸ்தரிக்கப்பட்டமை.
- உத்தியோக பற்றுடையோர் தொகை குறைக்கப்பட்டமை.
- இனவாரி பிரதிநிதித்துவம் தொடர்ந்து பேணப்பட்டமை.
- நிதிக்குழு தொடர்ந்து பேணப்பட்டமை.
- மேல்மாகாண தமிழருக்கு விசேட பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
- சட்டநிர்வாக சபை தொடர்ந்து பேணப்பட்டமை.
சட்டவாக்க கழகம்
உத்தியோக சார்பற்றோர் உத்தியோக சார்புடையோர்
1. தேர்தல் மூலம் 29
தேர்தல் மூலம் பிரதேச ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
சிங்களவர் 16
தமிழர் 07
தேர்தல் மூலம் இனரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
ஐரோப்பியர் 03
பறங்கியர் 02
மேல்மகாண தமிழர் 01
2. நியமனம் மூலம் 08
நியமன உறுப்பினர்கள்
முஸ்லீம் 3
இந்தியர் 2
விசேடம் 3
உத்தியோக சார்புடைய உறுப்பினர்கள்
குடியேற்ற நாட்டு காரியதரிசி
சட்டமா அதிபர்
வருமான அதிகாரி
திறைசேரி நாயகம்
கல்வி அதிகாரி
மத்திய மகாண அரசாங்க அதிபர்
பகிரங்க வேலை இயக்குனர்
சுங்க அதிகாரி
இந்திய தொழிலாளர் கட்டுபாடு அதிகாரி
சட்டதுறை அறிஞர் நாயகம்
அரசாங்க வைத்திய அதிபர்
மாட்சிமை பொருந்திய சேர் வில்லியம் மனிங்
சட்டநிர்வாக சபை
- மனிங் டிவன்ஷயர் சீர்திருத்தத்தில் சட்ட நிர்வாக சபையானது
உத்தியோக சார்புடையோர் 03
உத்தியோக சார்பற்றோர் 04
ஏனைய உறுப்பினர் 02 ஆகிய உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
- தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதே இச்சபையின் பிரதான நோக்கமாகும்.
சட்டவாக்க கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவோர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்
- 25 வயதை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
- ஆங்கில மொழியில் எழுத வாசிக்க பேச தெரிந்திருத்தல் வேண்டும்.
- வருட வருமானம் 1500க்கு குறையாத அல்லது 5000 க்கு குறையாத நிலையான வருமானம் கொண்டிருக்க வேண்டும்.
பிரதேசவாரி பிரதிநிதித்துவம்
- பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விரிவாக்கம் செய்யப்பட்டமை சட்டவாக்க ஜனநாயக தன்னமை மிக்க அமைப்பாக வலுப்படுத்தியது.
- அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சட்டவாக்க கழகத்திலே அதிகளவு இடம்பெற வழிகோலியது.
- இதனால் சட்டவாக்க கழகமானது ஜனநாயக தன்மை மிக்க அமைப்பாக எழுச்சி பெற்றது.
பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விஸ்தரிக்கப்பட்டமையால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள்
- இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் சுருங்கி விடுவதற்கு வழிகோலியது.
- சிறுபான்மை சமூகத்தவரது நலன்கள் அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு உள்ளாகும் ஆபத்தினை ஏற்படுத்தியமை.
உத்தியோக பற்றுடையோரின் தொகை அதிகரிக்கப்பட்டடைமயால் ஏற்பட்ட விளைவுகள்
- சட்டவாக்க கழகத்திலே சுதேசிகளின் நிலை பலம் பெற வழிகோலியது.
- தேசாதிபதி சுதேசிய உறுப்பினர்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய நிலையினை தோற்றுவித்தது.
- சுதேசியர் தாம் கொண்டு வரும் பிரேரணையை சட்டவாக்க கழகத்தில் தடையின்றி நிறைவேற்ற வாய்ப்பேற்பட்டது.
நிதிக்குழுவின் பணிகள்
- அரசாங்க வருமான மூலங்களை கண்டறிதல்.
- பொருட்கள், சேவைகள் மீதான வரிவிதிப்பு பற்றி தீர்மானித்தல்.
- அரச திணைக்களம் அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை செய்தல்.
- அரசாங்க வரவு செலவு திட்டத்தை முன்வைத்தல்.
- நிதிசார் விடயம் தொடர்பாக சட்ட நிரூபண சபைக்கு அறிக்கை அறிக்கை சமர்பித்தல்.
- சட்ட நிரூபண சபையோடு நிதிவிடயம் தொடர்பாக கலந்துடையாடல்.
- தேர்தல் தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை செய்தல்.
- கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- கணக்காய்வு விசாரணைகளை மெற்கொள்ளல.
மனிங் டிவன்ஷயர் சீர்திருதத்தின் தேசாதிபதியின் நிலை
- இச்சீர்திருத்தம் தேசாதிபதிக்கு ரத்ததிகாரத்தை வழங்கியது. அதாவது சட்டவாக்க கழக தீர்மானத்தை தனது விருப்புவெறுப்பிற்கேற்ப தடுத்து நிறுத்தும் அதிகாரமாகும்.
- நல்லாட்சியை நிலைநிறுத்தும் பொருட்டு அதிகாரங்களை பிரயோகிக்கும் அதிகாரம்
- வகுப்புவாரி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்.
- சட்டவாக்க கழகத்திற்கு ஆலோசணை வழங்கும் அதிகாரம்
மனிங் டிவன்ஷயர் சீர்திருத்தத்தின் நன்மைகள்:
- சட்டவாக்க கழகத்திலே சுதேசிகளின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது.
- தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வடைந்தது.
- சட்டநிர்வாக சபையிலே 4 சுதேசியர் பங்குபற்ற வாய்ப்பேற்பட்டது.
- நிதிக்குழு அமைத்து நிதிசார் விவகாரங்களை கையாளும் பொறுப்பு அதனிடம் ஒப்படைப்பட்டது.
- தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான மேல்மகாணத்திற்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
குறைபாடுகள்:
- சட்டவாக்க கழகத்திலே சுதேசியர் கணிசமான எண்ணிக்கைளில் அங்கம் வகித்த பொதம் அவர்களுக்கு பொறுப்புடன் கூடிய அதிகாரத்தை வழங்கவில்லை.
- சிறுபான்மையினரின் இனவாரி கோரிக்கையை நிராகரித்தது.
- தேசாதிபதிக்கு வீற்றோ அதிகாரம் கொடுக்கப்பட்டமை.
- பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் நிராகரித்தமை.
மனிங் சீர்திருத்தத்தின் சிபாரிகள்:
- சட்டசபை உறுப்பினரின் எண்ணிக்கை 37 ஆதிகரிக்கப்பட்டமை.
- சட்டநிர்வாக சபையிலே சுதேசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை.
- பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விரிவாக்கம் செய்யப்பட்டமை.
- நிதிக்குழு ஒன்று சிபாரிசு செய்யப்பட்டமை.
- சங்கங்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
- மகாணசபை அடிப்படையிலான தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டமை.
- சட்டசபை
சட்ட சபை
உத்தியோக பற்றுள்ளோர் 14 உத்தியோக பற்றற்றோர் 23
தேர்தல் மூலம் 16 நியமனம் மூலம் 07
தொகுதி ரீதியாக 11 கண்டியர் 02
சங்கம் மூலம் 02 இந்திய தமிழர் 01
இன ரீதியாக 03 முஸ்லீம் 01
விசேடம் 03
தொகுதி ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
- மேல்மகாணம் 03
- ஏனைய ஒவ்வொரு மாகாணத்திலும் தலா ஒருவர் வீதம் 08
சங்கம் ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
- கரைநாட்டு உற்பத்தியாளர் சங்கம் 01
- இலங்கை வர்த்தக சங்கம் 01
இனரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
- ஐரோப்பியர் 02
- பறங்கியர் 01
சட்டநிர்வாக சபை
- மனிங் சீர்திருத்தம் 1921 ஆம் ஆண்டு இலங்கைக்கு சிபாரிசு செய்த சட்டநிர்வாக சபையில் சுதேசிகள் சால்பாக 3 அங்கத்தவர் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட்டது.
- தமிழர் 01 , சிங்களவர் 01, ஐரோப்பியர் 01 பிரதிநிதித்துவம் பெற வாய்ப்பளிக்கப்பட்டது.
- இவ்வாய்ப்பு உத்தியோக பற்றற்றோர் அரசாங்க நிர்வாகம் தொடர்பாக அனுபவமும் பயிற்சியும் பெற வாய்ப்பளித்தது.
பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விரிவாக்கம் செய்யப்பட்டமை
- மனிங் அரசியல் சீர்திருத்தம் பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை 11 ஆக உயர்த்தியது.
- இதனால் இலங்கையின் பல்வேறு பிரதேசத்தையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதி சட்டவாக்க கழகத்திற்கு தெரிவுசெய்யப்படவும் பல்வேறு பிரதேசவரின் அரசியல் அபிலாசை அரசியல் அரங்கிற்கு கொண்டு வாய்ப்பேற்பட்டது.
நிதிக்குழு சிபாரிசு செய்யப்பட்டமை
- மனிங் சீர்திருத்தம் அரசாங்க நிதிவிடயங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கும் நிதிசார் விடயங்களை கண்காணித்து கட்டுப்படுத்தவும் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவும் கணக்காய்வு நடவடிக்கையை மேற்கொள்ளவும் வரவு செலவு திட்ட விவகாரங்களை கையாளவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே நிதிக்குழுவாகும்.
- குடியேற்ற நாட்டு காரியதரிசி தலைமையில் இக்குழு உருவாக்கப்படும்.
- இக்குழுவின் பணிகள்:
• அரசாங்க வருமானத்தை திரட்டி கொள்ளும் வழிமுறை பற்றி தீர்மானித்தல்.
• வரிவிதிப்பு கொள்கையை தீர்மானித்தல்.
• வரவு செலவு திட்டத்தினை தயாரித்தல்.
• திணைக்களம், அரச அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி தீர்மானித்தல்.
• தேர்தல் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்.
• அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவு பற்றி தீர்மானித்தல்.
சங்கங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை:
- மனிங் சீர்திருத்தம் உத்தியோக பற்றற்ற உறுப்பினர்களில் 2 உறுப்பினர்களை சங்கங்களுக்கான பிரதிநிதித்துவமாக வழங்கியது.
- இது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதித்துவமாக அமைந்தமை மற்றொரு சிறப்பம்சமாகும்.
மகாண அடிப்படையிலான தேர்தல் தொகுதி
- இலங்கை ஒன்பது மகாண தேர்தல் தொகுதியாக பிரிக்கப்பட்டு அத்தொகுதியிலிருந்து வரையறுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
மனிங் சீர்திருத்தத்தின் நன்மைகள்:
- உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கையை உத்தியோக சார்புள்ளோரின் எண்ணிக்கையிலும் பார்க்க உயர்த்தியது.
- தேசாதிபதி வசமிருந்த நிதி அதிகாரம் நிதிக்குழு உருவாக்கப்பட்டு கையளிக்கப்பட்டமை.
- பிரதேச ரீதியான தேர்தல் தொகுதியை அறிமுகப்படுத்தியமை.
- முதன்முதலாக சட்டநிர்வாக சபையிலே சுதேசிகள் அங்கம் பெற்றமை.
- சட்டவாக்க தீர்மானங்களுக்கு சுதேசியரில் தங்கியிருக்கும் நிலை உருவாகியது.
- சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியமை.
மனிங் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்:
- இலங்கையின் சிறுபான்மையினரின் கோரிக்கையான மீண்டும் இனவாரி பிரதிநிதித்துவத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- தேசாதிபதி உத்தியோக பற்றுடைய உறுப்பினர், பற்றற்ற நியமன உறுப்பினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டவாக்க கழகத்தில் செல்வாக்கு செலுத்த வாய்ப்பேற்பட்டது.
- இலங்கை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவ ரீதியாக பின்தள்ளப்பட்ட நிலை உருவாகியது.
- எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை.
- வாக்குரிமை அடிப்படையில் சமூக ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்தது.
- இலங்கை தேசிய காங்கிரஸை பிளவுபடுத்துவதில் பங்காற்றியது.
- தேசாதிபதியிடம் ரத்து அதிகாரம் வழங்கியிருந்தது.
மக்கலம் சீர்திருத்தத்தின் கோரிக்கைகள்:
- சட்ட நிரூபண சபை 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டது.
- சட்ட நிர்வாக சபை தொடர்ந்தும் பேணப்பட்டது.
- வரையறுக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்பட்டது.
- படித்த இலங்கையருக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
- தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டன.
- சட்ட நிரூபண சபை
சட்டநிரூபண சபை
உத்தியோக சார்புள்ளோர் (11) உத்தியோக சார்பற்றோர் (10)
தேர்தல் மூலம் (04) நியமனம் மூலம் (06)
ஐரோப்பியர் 02 கண்டிச் சிங்களவர் 01
பறங்கியர் 01 கரையோரச் சிங்களவர் 02
படித்த இலங்கையர் 01 முஸ்லீம் 01
இலங்கைத் தமிழர் 02
உத்தியோக பற்றுள்ளோராக பின்வருவோர் இடம்பெற்றனர்:
- இலங்கையின் இராணுவதளபதி
- குடியேற்ற நாட்டு காரியதரிசி
- சட்டமா அதிபர்
- வருமானவரி அதிகாரி
- குடியேற்ற நாட்டு தனாதிகாரி
- மேல்மாகாண அரசாங்க அதிபர்
- மத்தய மாகாண அரசாங்க அதிபர்
- தென்மாகாண அரசாங்க அதிபர்
- பிரதம சிவில் வைத்திய அதிகாரி
- தேசாதிபதியால் நியமிக்கப்படும் இரு அரசாங்க உத்தியோகத்தர்கள்
மக்கலம் சீர்திருத்த சட்டநிர்வாக சபையானது தேசாதிபதிக்கு நிர்வாக விடயம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது.
வரையறுக்கப்பட்ட வாக்குரிமை
- மக்கல சீர்திருத்தம் முதன்முதலாக வாக்குரிமை என்ற சிபாரிசை முன்மொழிந்தது. சொத்து மற்றும் கல்வி தகுதி உடையவருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
- கல்வி தகைமையானது ஆங்கில மொழியிலே எழுத வாசிக்க தெரிந்திருத்தலாகும்.
- சொத்து தகைமை என்பது 600 ரூபாய்க்கு குறையாத வருடவருமானத்தை பெறுபவர்கள் அல்லது 1500 ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்கள்.
- பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.
- மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 4 வீதம் மட்டுமே வாக்களிக்கும் உரிமையினை பெற்றிருந்தனர்.
- வாக்குரிமை என்ற சிபாரிசு எதிர்காலத்தில் அனைவருக்குமான வாக்குரிமையாக மாற வழிகோலியது.
படித்த இலங்கையருக்கு ஒரு சிறப்பு பிரதிநிதித்துவம்
மக்கலம் சீர்திருத்தம் படித்த இலங்கையருக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கியது. இதன் பிரதிநிதியாக சேர்.பொன். இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
தேர்தல் முறைமை
- இலங்கை முழுவதையும் ஒரு தேர்தல் தொகுதியாக கொண்டு உறுப்பினரை தெரிந்தெடுக்கும் நடைமுறை இவ்வரசியல் திட்டத்தின் கீழ் உருவாகியது.
- 4 உறுப்பினர் இதன் மூலம் தெரியப்பட்டு சட்டமன்றத்தில் அங்கத்துவம் பெற்றனர்.
குறுமக்கலம் சீர்திருத்தத்தின் நன்மைகள்:
- வாக்குரிமை என்ற அரசியல் உரிமையை இலங்கையர் பெற வழிவகுத்தது.
- சட்டமன்றத்தை ஜனநாயக தன்மை வாய்ந்த அமைப்பாக மாற்ற வழிகோலியது.
- இலங்கையிலே தேர்தல் முறைமையை அறிமுகம் செய்தது.
- படித்த இலங்கையருக்கு அரசியலில் முக்கியத்துவம் வழங்கியது.
குறுமக்கலம் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்:
- அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை.
- வாக்குரிமை பெற்றவர் உயர்சாதி வகுப்பினராகவும் வாக்குரிமை பெறாதவர் தாழ்சாதி வகுப்பினராகவும் கருதப்படும் நிலை உருவாகியது.
- தேசாதிபதியின் ஆதிக்கம் சட்டவாக்க கழகத்திலே மேலோங்கி இருந்தது.
- சோதிபதிக்கு ரத்து அதிகாரம் வழங்கப்பட்டது.
























இலங்கையில் அரசியல் திட்ட வரலாற்றில் முதலாவது சீர்திருத்தம் அமைந்தது கோல்புறூக் கமரன் சீர்திருத்தமாகும்.
இலங்கையர் அரசியல் திட்ட கோரிக்கையை முன்வைக்க நிலையிலே காலனித்துவ ஆட்சியாளர் முன்வைத்த சீர்திருத்தமாக இது கருதப்படுகின்றது.
கோல்புறூக் கமரன் சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டமைக்கான காரணங்கள்:
- இலங்கையிலிருந்து கிடைக்கும் வருமானம் இலங்கையை நிர்வகிப்பதற்கு போதுமானதாக இல்லாதிருந்தமையால்
- காலனித்துவ ஆட்சியாளர் பின்பற்றிய இராஜகாரிய முறை வர்த்தக ஏகபோக உரிமை என்பவை சுதேசியரிடையே ஆட்சியாளர் தொடர்பான எதிர் புணர்வினை தோற்றுவித்தது.
- காலனித்துவ ஆட்சியாளர் ஒழுங்கமைத்த நீதி, நிர்வாக முறைமைகள் சுதேசிய மக்களை திருப்திப்படுத்துவதாக அமையாமை.
மேற்கூறப்பட்ட காரணங்களிற்காக பொது நிர்வாக துறைசார் நிபுணரான கோல்புறூக் என்பவரும் நீதி நிர்வாக நிபுணரான கமரன் என்பவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோல்புறூக்கினால் முன்மொழியப்பட்ட சிபாரிசுகள்:
- இலங்கையில் சட்ட நிரூபணசபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
- சட்ட நிர்வாக சபையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
- கட்டாய இராஜகாரிய முறைமை நீக்கப்பட வேண்டும்.
- வர்த்தக ஏகபோக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டு கட்டற்ற வர்த்தகம் அறிமுகம் மறுசீரமைக்க வேண்டும்.
- கரையோரம் மற்றும் மலைநாட்டு பிரதேசம் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
- 16 மகாண நிர்வாகங்கள் 5 மகாண நிர்வாகமாக மறுசீரமைக்க வேண்டும்.
- அரச உத்தியோகத்தர் வருமானம் பெறத்தக்க பிறதொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
கமரூனால் முன்மொழியப்பட்ட சிபாரிசுகள்:
- தேசாதிபதி பெற்றிருந்த அனைத்து தலையீட்டு அம்சமும் இல்லாதொழித்தல்.
- ஐரோப்பியருக்கு என மட்டுப்படுத்தப்பட்ட உச்ச மன்ற சேவை இலங்கையில் வாழும் அனைவருக்கும் பிரகடனப்படுத்த வேண்டும்.
- ஒரு பிரதம நீதியரசர் ஏனைய இரு நீதியரசர்கள் என்போரை உள்ளடக்கியதாக உச்ச நீதிமன்றம் ஒழுங்கமைக்கப்படுவதுடன் நீதித்துறையை நிர்வகிக்கும் அதிகாரம் தெனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- மாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதிச்சேவை விரிவாக்கப்பட வேண்டும்.
- நீதிபதிகளது விசாரணைக்கு புறம்பாக யூரிமார் விசாரணை முறைமை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
கோல்புறூக் சீர்திருத்தத்தின் சட்ட நிரூபண சபை அல்லது சட்டவாக்க சபை
உத்தியோக சார்புடையோர் (09) உத்தியோகபற்றற்றோர் (06)
அரசாங்க காரியதரிசி ஐரோப்பியர் 03
சட்டமா அதிபர் பறங்கியர் 01
தனாதிகாரி தமிழர் 01
நிலஅளவையாளர் சிங்களவர் 01
கணக்காளர் நாயகம்
வருமானவரி உத்தியோகத்தர்
கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர்
அரசாங்க வைத்திய அதிகாரி
தேசாதிபதியினால் தெரியப்படும் அரச உத்தியோகத்தர்
தேசாதிபதிக்கு நிர்வாக விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்கென சட்டநிர்வாக சபை உருவாக்கப்பட்டது.
சட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள்:
- அரசாங்க காரியதரிசி
- தனாதிகாரி
- கணக்காளர் நாயகம்
- நிலஅளவை நாயகம்
- வருமானவரி நாயகம்
- கொழும்பு அரசாங்க அதிபர்
கோல்புறூக் சீர்திருத்தத்தின் நன்மைகள்:
- இலங்கையிலே ஜனநாயக ஆட்சி முறைமை எழுச்சி பெற வழிகோலியது.
- இலங்கையர்கள் சமூக பொருளாதார நிலையில் குறிப்பிட்டளவு முன்னேற்றம் இடம்பெற வழிகோலியது.
- பிரதிநிதித்துவ கலாசாரத்தை தொடங்கியது.
- இலங்கை வர்த்தக செயற்பாட்டை விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்பேற்பட்டது.
- கட்டாய இராஜகாரிய முறைமை இல்லாதொழிக்கப்பட்டது.
- பணப்பொருளாதாரத்தை விரிவுபடுத்தியது.
- சேமிப்பு கலாசாரத்தை ஊக்குவித்தது.
- திறமையானவர்கள் பல்வேறு வருமானம் தரும் தொழில் முயற்சியில் ஈடுபட சட்ட அந்தஸ்து வழங்கியது.
- சுதேசிகளை மையமாகக் கொண்டு சிவில் சேவை வகுப்பு எழுச்சிபெற வழிகோலியது.
கோல்புறூக் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்:
- சட்டவாக்க கழகத்திலே உத்தியோக சார்புள்ளோரின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டமை.
- தேசாதிபதி தொடர்ந்தும் தனியதிகாரம் மிக்கவராக செயற்பட்டமை.
- சுதேசியருக்கு சட்டவாக்க கழகத்திலே குறைந்த பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
- சட்டநிர்வாக சபை உருவாக்கப்பட்ட போதிலும் அது தேசாதிபதியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டமை.
- சட்ட நிர்வாக சபையில் சுதேசியர் அங்கத்துவம் இடம்பெறவில்லை.
- இச்சீர்திருத்தம் அறிமுகம் செய்த இனவாரி பிரதிநிதித்துவம் இனரீதியான சிந்தனைகளைத் தூண்டியது.
- சுதேசிய கல்வி முறைமை நலிவுற்று போக வழிகோலியது.
- காலனித்துவ ஆட்சியாளரின் நலனை மட்டும் கவனத்தில் கொண்ட ஓர் சீர்திருத்தமாக காணப்பட்டது.