நிறுவனமொன்றின் இலக்குகளையும் நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கும் போட்டித் தன்மையின் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்குமான வளமொன்றாகத் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
தொடர்பாடல் தொழில்நுட்பப் பரம்பலைப் பொருளாதார, சமூக அபிவிருத்தியின் பல்வேறு யுகங்களுக்கேற்ப குறிப்பிடலாம்.
இடம்பெயர் யுகம்
விவசாய யுகம்
கைத்தொழில் யுகம்
தகவல் யுகம்
தரவு – தகவல் வேறுபாடுகள்
தரவு
தகவல்
தரவு ஒழுங்கமைக்கும் செயற்பாட்டிற்கு உருமாற்றும் ஆரம்ப விடயம்
தரவுகளை ஒழுங்கமைக்கும் செயற்பாட்டில் உருவாகும் விளைவு
தீர்மானம் எடுக்க நேரடியாக பயன்படுத்த முடியாது
நேரடியாகப் பயன்படுத்தலாம்
பெறுமதியற்றது
பெறுமதியுடையவை
மூலப்பொருளொன்றாகும்
முடிவுப் பொருளொன்றாகும்
தரவு ஒழுங்கமைத்தல் செயற்பாடு
தரவு ஒழுங்கமைத்தல் செயற்பாட்டு கருமங்கள்
வகைப்படுத்தல்
தெரிவு செய்தல்
கணித்தல்
பொழிப்பாக்கல்
தரவுகள் தயாரிக்கும் நுட்பங்கள்
கையியக்க முறை
பகுதிக் கையியக்க முறை
இலத்திரனியல் முறை
இலத்திரனியல் தரவு தயாரித்தல்
சிறந்த தகவலின் பண்புகள்
பொருத்தமானது
சரியானது
பூரணமானது
நம்பகமானது
பாதுகாப்பானது
திருத்தமானது
விபரண ரீதியானது
தகவல்களை வகைப்படுத்தல்
மூலத்தின் அடிப்படை
உள்ளக
வெளியக
தன்மையின் அடிப்படை
பண்பு
அளவு
முகாமைத்துவ மட்டத்தின் அடிப்படையில்
உபாய மட்டம்
அறிவு மட்டம்
காலத்தின் அடிப்படை
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்த காலம்
நிகழ்வின் அடிப்படை
நிச்சயமானது
நிகழத்தக்கது
உற்பத்திக் கிரய அடிப்படையில்
நிதி
உற்பத்தி
சந்தைப்படுத்தல்
மனித வளம்
ஊழியப்படை
யாதேனும் வேதனமொன்றை / பொருளாதார ரீதியான நன்மையை எதிர்பார்த்து வேலை செய்வோர், வேலை தேடுவோர் ஆகும்.
தொழிற்படையில் பங்கு கொள்ளல் வீதம்
பெண்களின் பங்குகொள்ளல் குறைவாக இருக்கக் காரணம்
குழந்தை பராமரித்தல், குடும்ப பொறுப்பு
பாதுகாப்பு குறைவு
நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க முடியாமை
போதிய அளவு வேலைவாய்ப்பு இன்மை
ஆண்களுக்கு முன்னுரிமை
வேலையின்மை வகைகள்
வெளிப்படை வேலையின்மை
பருவகால வேலையின்மை
மறைமுக வேலையின்மை
உராய்வு வேலையின்மை
கட்டமைப்பு வேலையின்மை
சுழற்சி வேலையின்மை
வேலையின்மைக்கு காரணம்
திறன் பொருத்தமற்ற தன்மை கருதுகோள்
வரிசை நோக்கி நிற்றல் கருதுகோள்
மந்தமான பொருளாதார வளர்ச்சி கருதுகோள்
ஊழிய சந்தையின் இயக்கமின்மை கருதுகோள்
இலங்கையின் வேலையின்மை போக்கு
2010 – 4.9 %
2011 – 4.2 %
2012 – 4.4 %
2013 – 4.4 %
2014 – 4.3 %
2015 – 4.6 %
இதனை நீக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
உயர்வான பொருளாதார வளர்ச்சி
கீழ்கட்டுமான அபிவிருத்தி
சேவைத்துறை விரிவாக்கம்
தொழில் பயிற்சி வழங்கல்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
சுய வேலை வாய்ப்பு திட்டம்
இராணுவம், அரச துறைக்கு ஆட்சேர்ப்பு
சிறு வணிகம், கைத்தொழிலுக்கு ஊக்கமளித்தல்.
உற்பத்தி அணுகுமுறை எண்ணக்கருக்கள்
குறிப்பிட்ட காலப் பகுதியொன்றினுள் குறிப்பிட்ட அரசியல் எல்லை அல்லது புவியியற் பிரதேசத்தினுள் உருவாக்கப்பட்ட இறுதி உற்பத்திகளின் பெறுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
விவசாயத்துறை, கைத்தொழில்துறை, சேவைத்துறை என்பவற்றில் காட்டப்பட்ட பெறுமதிகளின் மொத்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியினுள் ஒரு நாட்டில் வசிப்போருக்குரிய வளங்களினால் உருவாக்கப்பட்ட மொத்த உற்பத்தியின் பெறுமதி மொத்தத் தேசிய உற்பத்தியாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாட்டுக் காரணி வருமானப் பெறுவனவுகள்-கொடுப்பனவுகளைச் சீராக்குவதன் மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியைக் கணிப்பிடலாம்.
வெளிநாட்டுக் காரணி வருமானம் பெறுவனவு மற்றும் கொடுப்பனவு என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு தேறிய வெளிநாட்டுக் காரணி வருமானம் என அழைக்கப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதனத் தேய்வுகளின் பெறுமதியைக் கழிக்கும் போது தேறிய உள்நாட்டு உற்பத்தியினைப் பெறலாம்.
மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து மூலதனத் தேய்வுகளை கழிக்கும்போது தேறிய தேசிய உற்பத்தியினைப் பெறலாம்.
தேறிய தேசிய உற்பத்தியின் விசேட பண்பு யாதெனில் அதனைக் கணிக்கப் பயன்படும் கூட்டப்பட்ட பெறுமதியில் உள்ளடங்கி இருப்பது காரணிச் சேவைகளுக்காக கொடுப்பனவு செய்யப்பட்ட வருமானங்கள் மட்டுமேயாகும்.
தேறிய தேசிய உற்பத்திக்கு தேறிய நேரில் வரிகளைச் சீராக்கும்போது தேசிய வருமானத்தைப் பெறலாம்.
உற்பத்தியை உருவாக்குவதற்குப் பங்களித்த சகல உற்பத்திக் காரணிகளுக்கும் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் அல்லது உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியின் பெறுமதியைக் கணிப்பது காரணிச் செலவு விலை என அழைக்கப்படும்.
அரச தலையீடு காரணமாக காரணிச் செலவு விலை சந்தைக்கு வரும்போது மாற்றமடையும்.
காரணிச் செலவு விலையின்படி மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தேறிய நேரில் வரிகளைக் கூட்டும்போது சந்தை விலையின்படியான மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெறலாம்.
நடப்புச் சந்தை விலையின்படி கணிக்கப்பட்ட மொத்தத் தேசிய உற்பத்தி நடைமுறை விலை அல்லது நடப்பு விலையின்படியான மொத்தத் தேசிய உற்பத்தி என அழைக்கப்படும்.
நடப்பு விலையின்படி கணிக்கப்பட்ட உற்பத்தியினால் பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சியைப் பற்றிய விளக்கத்தைப் பெறமுடியாது.
மெய்யான உற்பத்தியில் மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு நடைமுறை விலையில் கணிக்கப்பட்ட உற்பத்திப் பெறுமதியில் இருந்து விலைமட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நீக்க வேண்டும்.
நடைமுறை விலையில் கணிக்கப்பட்ட உற்பத்தியின் பெறுமதியை விலைச் சுட்டெண்ணினால் சுருக்கும்போது நிலையான விலைகளின் கீழான உற்பத்திப் பெறுமதியைப் பெறலாம்.
நிலையான விலைகளின் கீழ்க் கணிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு / மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியை நிலையான விலையின் கீழ் மொத்த உள்நாட்டு/ மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியினால் பிரிக்கும்போது மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கியைப் பெறலாம்.
உற்பத்திப் பாய்ச்சலை அடிப்படையாகக் கொண்டு தேசிய உற்பத்தியினைக் கணிப்பிடல் உற்பத்தி அணுகுமுறை என அழைக்கப்படும்.
உற்பத்தி வழியில் தேசியக் கணக்கீட்டினைச் செய்யும் போது பல்கணிப்பீட்டுப் பிரச்சினை ஏற்பட முடியும்.
பல்கணிப்பீட்டுப் பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்வதற்கு இரண்டு முறைகளைப் பின்பற்றலாம்: