நொதியத்தின் இயல்புகள்








- நொதியங்கள் உயிர் உள்ள கலங்களில் உற்பத்தி செய்யப்படும் கோளப்புரதங்கள் ஆகும். ஆனால் உயிருள்ள, உயிரற்ற ஊடகங்களில் தொழிற்படக் கூடியது.
- இவை உயிர் இரசாயன ஊக்கிகள் எனப்படும் அல்லது உயிர்க் கலங்களில் அனுசேப தாக்கங்களுக்கு ஊக்கியாக தொழிற்படுகின்றன.
- இவை அனுசேபத் தாக்கங்களின் ஏவல் சக்தியைக் குறைத்து தாக்கவேகத்தை விரைவுபடுத்துகின்றது.
- நொதியங்கள் மிகவும் வினைத்திறனானவை அல்லது ஒரு சிறிய அளவு நொதியம் அதிகளவு கீழ்ப்படையை மாற்றத்திற்கு உள்ளாக்கும்.
- இவை புரதம் ஆக இருப்பதால் உயர் வெப்பநிலையில் அமைப்பழிவிற்குட்பட்டு தொழிற்பாடு இழக்கப்படும்.
- இவற்றின் தாக்கம் தனித்துவமானது அல்லது ஒவ்வொரு நொதியமும் தனித்துவமான முப்பரிமாண அமைப்புடைய 3 – 12 அமினோ அமிலங்களைக் கொண்ட உயிர்ப்புமையத்தைக் கொண்டது. இதனுடன் அதற்குரிய தனித்துவமான கீழ்ப்படை இணையும் உயிர்ப்புமையத்தின் வடிவமும் கீழ்ப்படையின் வடிவமும் நிரப்புகின்ற தன்மை கொண்டவை.
- பொதுவாக நொதிய ஊக்குவிப்புத் தாக்கங்கள் மீளும் தன்மை வாய்ந்தவை.
- நொதிய ஊக்குவிப்புத் தாக்கங்கள் நீர்ப்பகுப்புத் தாக்கங்கள் ஆகும் அல்லது நீர் ஊடகத்தில் இவை நிகழ்கின்றன. கீழ்ப்படையுடன் நீர்மூலக்கூறு ஒன்று சேர்க்கப்படுகின்றது.
- நொதியத் தொழிற்பாடு பின்வரும் காரணிகளால் பாதிப்படைகின்றது.
- வெப்பநிலை
- PH
- நொதியச் செறிவு
- கீழ்படைச் செறிவு
- நிரோதிகள்
- துணைக்காரணிகள்
- உயிரியல் அனுசேபத் தாக்கங்களை ஊக்குவிக்கின்ற கோளப்புரதங்கள் நொதியங்கள் எனப்படும்.
தாக்கம் ஒன்றின் ஏவல் சக்தி 
![evatsakthi]()
- ஒரு புறவெப்பத் தாக்கமோ அகவெப்பத் தாக்கமோ நிகழ்வதற்கு சக்தி வழங்கப்பட வேண்டும்.
- ஒரு இரசாயனத் தாக்கத்தை தொடங்குவதற்கு / ஆரம்பிப்பதற்கு தேவையான மேலதிக சக்தி ஏவற்சக்தி எனலாம்.
- தாக்கத்தின் போது நொதியங்கள் இவ் ஏவற்சக்தியைக் குறைந்து தாக்கத்தை விரைவுபடுத்துகின்றன.
- நொதியத் தொழிற்பாட்டுப் பொறிமுறை இரு பொறிமுறைகளால் விளக்கப்படுகின்றது.
1. பூட்டுத் திறப்புப் பொறிமுறை – Fischer (1890)
2. தூண்டப்பட்ட பொருந்தும் கருதுகோள் – Koshland (1959)
பூட்டுத் திறப்புக் கருதுகோள்

![07aa]()
- இப்பொறிமுறையின்படி நொதியத்தின் உயிர்ப்புமையம் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.
- அத்துடன் திருத்தமான முறையில் இணையக்கூடியவாறு அதற்குரிய கீழ்ப்படை வடிவத்தைக் கொண்டிருக்கும்.
- கீழ்ப்படை நொதியத்தின் உயிர்ப்புமையத்திற்கு நிரப்புகின்ற முறையில் வடிவத்தைக் கொண்டிருக்கும்.
- நொதியங்கள் கீழ்ப்படையுடன் ஒப்பிடும்போது பருமனில் பெரியதாகயால் அது பூட்டிற்கு கீழ்ப்படை திறப்பிற்கும் ஒப்பிடப்படும்.
- இத்தாக்கத்தின் போது உயிர்ப்பு மையத்தில் 3 – 12 அமினோ அமிலங்கள் காணலாம். மிகுதி அமினோ அமிலங்கள் நொதியத்தின் கோள அமைப்பைப் பேணுவதில் பங்கு கொள்ளும்.
- மத்தியில் பெரிய புன்வெற்றிடம் கொண்டது. எனவே சுற்றயலுக்குரிய கரு, குழியவுரு காணப்படும்.
- நொதியமும் கீழ்ப்படையும் பொருந்தி முதலில் நொதிய கீழ்ப்படைச் சிக்கலையும் தொடர்ந்து நொதிய விளைவுச் சிக்கல் உருவாக்கப்பட்டு பின்பு விளைவுகள் நொதியத்திலிருந்து வெளியேறும்.
- இந்நொதிய மூலக்கூறு மீண்டும் இன்னொரு கீழ்ப்படையுடன் தாக்கத்தில் ஈடுபடும்.
தூண்டப்பட்ட பொருந்தும் பொறிமுறை
- இது பூட்டுத் திறப்புப் பொறிமுறையின் மாறுபட்ட வடிவமாகும்.
- இப்பொறிமுறையின்படி நொதியமும் அதன் உயிர்ப்புமையமும் மிகவும் நெகிழ்வுத் தன்மையானவை.
- நொதியத்தின் உயிர்ப்புமையத்தின் வடிவத்திற்கு ஓரளவு நிரம்புகின்ற வடிவத்தை அதன் கீழ்ப்படை கொண்டிருக்கும்.
- நொதியத்தின் கீழ்ப்படை உயிர்ப்புத் தானத்தில் அண்ணளவாக பொருந்தி அப்பொருந்துகை தூண்டுதலாக அமைந்து நொதியத்தின் உயிர்ப்புமைய வடிவத்துடன் கீழ்ப்படை சரியாக இறுக்கமாக பொருந்தக் கூடியவாறு மாற்றப்படுகின்றது.
- தொடர்ந்து நொதியக் கீழ்ப்படைச் சிக்கல் உருவாக்கப்படுகின்றது. பின் நொதிய விளைவுச்சிக்கல் உருவாக்கப்படுகின்றது. பின்பு விளைவுகள் உயிர்ப்பு மையத்தை விட்டு வெளியேறுகின்றது.
- விளைவுகள் வெளியேறியதும் உயிர்ப்பு மையத்தின் வடிவம் பழைய நிலையை அடையும்.
- நொதியத் தொழிற்பாட்டைப் பாதிக்கும் காரணிகள்
வெப்பநிலை
5°C இலிருந்து அண்ணளவாக 37ºC வரை வெப்பநிலையை அதிகரிக்கும்போது நொதியத் தாக்கவீதம் ஒவ்வொரு 10ºC இற்கும் 2 மடங்காக அதிகரிக்கும்.
- 37ºC இல் நொதியத் தாக்கவீதம் உயர்வாக இருக்கும். இது சிறப்பு வெப்பநிலை எனப்படும்.
- இதன் பின்பு வெப்பநிலை அதிகரிக்கும் போது நொதியத் தாக்கவீதம் மிகக் குறைவு / நிகழ்வதில்லை.ற்ற
- 5ºC இற்குக் குறைவான வெப்பநிலையில் குறைவாக உள்ளபோது மூலக்கூறுகளின் இயக்க சக்தி மிகக் குறைவாகக் காணப்பட்டு மூலக்கூறுகளின் மோதுகை நிகழாது. எனவே, நொதியம் உயிர்ப்பற்ற / தொழிற்பாடு அற்ற நிலையில் காணப்படும்.
- 37ºC வரை வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூறுகளின் இயக்க சக்தி அதிகரித்து மோதுகை மடங்காக அதிகரிக்கும்.
- 37ºC இன் பின்பு நொதியங்கள் புரதங்கள் ஆகையால் அமைப்பழியத் தொடங்கும். எனவே, தாக்கவீதம் குறைந்து 60ºC யில் முற்றாக நிறுத்தப்படும்.
PH
![ph]()
- நொதியங்கள் பொதுவாக PH 4 – 10 வரை தொழிற்படுகின்றன.
- சிறப்பு PH ஆக 7 காணப்படுகின்றது. காரணம் வன்னமிலம், வன்காரம் நொதியம் புரதம் ஆகையால் அமைப்பழிவை ஏற்படுத்துகின்றது. எனவே, தொழிற்பாடு இழக்கப்படுகின்றது.
- சில விதி விலக்கான நொதியங்களும் காணப்படுகின்றன.
| நொதியம் |
சிறப்பு PH |
| பெப்சின் |
2 |
| சுக்குரோஸ் |
4.5 – 8.5 |
| இலிப்பேஸ் |
9 |
| Catalase |
7.6 |
கீழ்ப்படைச் செறிவு
![keelpadaicherivu]()
- கீழ்ப்படைச் செறிவை அதிகரிக்கும் போது ஒரு குறித்த கீழ்ப்படை செறிவு வரை நொதியத் தாக்கவீதம் அதிகரிக்கும். பின்பு மாறாது இருக்கும். காரணம் கீழ்ப்படைச் செறிவை அதிகரிக்கும் போது அங்குள்ள நொதிய மூலக்கூறுகளின் உயிர்ப்புமையங்கள் நிரம்பலடையும் வரை தாக்கவீதம் அதிகரிக்கும். பின்பு மாறாது இருக்கும்.
நொதியச் செறிவு
- நொதியச் செறிவை அதிகரிக்கும் போது தாக்க வீதம் அதிகரிக்கும். காரணம் கீழ்ப்படைச் செறிவு தாக்கத்தை எல்லைப்படுத்துவதில்லை. நொதியச் செறிவுடன்
ஒப்பிடும்போது கீழ்ப்படைச் செறிவு மிகையாகக் காணப்படும்.
நிரோதிகள்
- இரசாயனப் பதார்த்தம் ஒன்று நொதியத்துடன் இணைந்து அதன் தாக்கவீதத்தை நிரோதிக்குமாயின் (குறைக்குமாயின்) அவ் இரசாயனப் பதார்த்தம் நிரோதிகள் எனப்படும்.
- இவ் நிரோதிகள் இரு முறைகளில் தொழிற்படுகின்றன.
1. போட்டியுள்ள நிரோதித்தல் (போட்டியுள்ள நிரோதி)
2. போட்டியற்ற நிரோதித்தல் (போட்டியற்ற நிரோதி)
போட்டியுள்ள நிரோதித்தல்
- இவ்வகை நிரோதித்தலில் ஈடுபடும் நிரோதி கீழ்ப்படையின் வடிவத்தை ஒத்ததாக இருக்கும். எனவே, நொதியத்தின் உயிர்ப்புமையத்துடன் இணைவதற்கு அதன் கீழ்ப்படையுடன் போட்டியிடும்.
- உயிர்ப்புமையத்துடன் இந் நிரோதி இணைந்து கீழ்ப்படை இணைவதைத் தடைசெய்யும்.
- நிரோதியின் செறிவு அதிகரிக்கும் போது நொதியத்தின் தாக்கவீதம் படிப்படியாகக் குறைக்கப்படும்.
- Eg – சல்பனோமைட் (Sulphanomide)
மலோனேட் (Malonate)
- போட்டியுள்ள நிரோதிகள் யாவும் மீளும் தன்மை வாய்ந்தவை.
போட்டியற்ற நிரோதித்தல்
- இவ்வகை நிரோதித்தலில் ஈடுபடும் நிரோதி கீழ்ப்படையின் அமைப்பை ஒத்து இருப்பதில்லை. எனவே, உயிர்ப்புமையத்துடன் இணைவதற்கு கீழ்ப்படையுடன் போட்டியிடுவதில்லை. ஆனால், உயிர்ப்புமையம் தவிர்ந்த நொதியத்தின் ஏனைய பகுதியுடன் இணைந்து உயிர்ப்புமையத்தின் தனித்துவமான வடிவத்தை மாற்றுகின்றது. எனவே, கீழ்ப்படை உயிர்ப்புமையத்துடன் இணைய முடியாது. நொதியத் தாக்கம் நிறுத்தப்படும்.
- இவ்வகை நிரோதிப்பு இரு வகையில் காணப்படுகின்றது.
1. மீளும் முறை
2. மீளா முறை
- மீளும் முறையில் நிரோதி நொதியத்துடன் தற்காலிகமாக இணைந்து தாக்கத்தை நிறுத்துகின்றது.
சயனைட் – போட்டியற்ற மீளும் நிரோதி
- மீளா முறையில் நிரோதி நொதியத்துடன் தற்காலிகமாக இணைந்து தாக்கத்தை நிறுத்துகின்றது.
பார உலோகங்கள் – Hg2+,Ag+,As+,Cd (போட்டியற்ற மீளா நிரோதி)
- இப்பார உலோகங்கள் நொதியத்தில் – SH கூட்டத்துடன் இணைந்து நிரோதிக்கின்றன.
துணைக் காரணிகள்
- (சில) நொதியங்களின் வினைத்திறனான தொழிற்பாட்டிற்குத் தேவையான புரதம் அல்லாத இரசாயனப் பதார்த்தம் துணைக் காரணி எனப்படும்.
- இத்துணைக் காரணிகள் எளிய அயன்களிலிருந்து சிக்கலான சேதனச் சேர்வை வரை காணப்படுகின்றன.
- இவை உயர் வெப்பநிலைக்கு உறுதியானவை.
- தொழிற்படும் முறையைக் கொண்டு 3 வகைப்படும்.
1. துணை நொதியம்
2. சங்கலிதக் கூட்டம்
3. அசேதன அயன்கள்
துணை நொதியம்
- இது சேதனச் சேர்வையாகும்.
- தாக்கத்தின் போது நொதியத்துடன் தளர்வாக சேர்ந்திருக்கும்.
- இவை en/H வாங்கியாகத் தொழிற்பட்டு நொதியத் தாக்கத்தை வினைத்திறனாக்கும்.
- இவை விற்றமின் D யிலிருந்து வருவிக்கப்படுகின்றது.
- Eg – NAD,NADP துணைநொதியம் A,ATP
- சில நொதியங்களின் தாக்கத்தின் போது தளர்வாக இணைந்து நொதியத் தாக்கத்தை வினைதிறனாக்கும் புரதமல்லாத சேதனச் சேர்வை துணைநொதியமாகும்.
சங்கலித கூட்டம்
- இவை புரதமல்லாத சேதனச் சேர்வைகள்.
- நொதியத்துடன் நிரந்தரமாக நெருக்கமாக இணைந்திருக்கும்.
- en/H வாங்கியாகத் தொழிற்பட்டு நொதியத் தாக்கத்தை வினைத்திறனாக்கும்.
- Eg – FAD,Biotin,Haem
- சில நொதியங்களுடன் நிரந்தரமாக இறுக்கமாக இணைந்து காணப்பட்டு தாக்கத்தை வினைத்திறனாக்கும் புரதமல்லாத சேதனச் சேர்வைகளாகும். இவை சங்கலிதக் கூட்டம் எனப்படும்.
அசேதன அயன்கள்
- இவை எளிய அயன்களாகும். எனவே, அசேதனச் சேர்வைகள்.
- தாக்கத்தின் போது இவை நொதியத்தினது / கீழ்ப்படையினது வடிவத்தை மாற்றி வினைத்திறனாக நொதியக் கீழ்ப்படைச்சிக்கல் உருவாவதற்கு தூண்டி நொதியத் தாக்க வீதத்தை அதிகரிக்கின்றது.
- Eg – Cl– – உமிழ் நீருக்குரிய அமைலேஸ்
Zn2+ – காபொக்சி பெப்திடேஸ்
Ca2+ – துரேம்போகைனேஸ்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
• இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 1996ம் ஆண்டின் 21ம் இலக்கச் சட்ட மூலத்தின் ஊடாக ஆணைக்குழு தாபிக்கப்பட்டது.
• இவ் ஆணைக்குழு 05 உறுப்பினர்களைக் கொண்டது.
• ஆணைக்குழு உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 18ம் திருத்தத்திற்கமைய பாராளுமன்ற பேரவையின் அவதானிப்பின் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.
• இவ்ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்.
• மரபு சார் நீதித்துறை முறையில் இருந்து வேறுபட்ட பிணக்குகளைத் தீர்க்கும் ஒரு நிறுவனம்.
• பணிகள்:
• அடிப்படை உரிமைகள் மீறுதல் மீறப்படுதலுக்கு அண்மியதாக இருக்கும் நிலைமை தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தலும் புலன் விசாரணை செய்தலும் இணக்கப்படுத்தல் ஒற்றுமைப்படுத்தல் மூலம் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்தல்.
• அடிப்படை உரிமைகளை மேம்படுத்தல் விருத்தி செய்தல் பாதுகாத்தல் தொடர்பான சட்ட நிர்வாக ரீதியான கட்டளைகளை அமைப்பதற்கான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குதல்.
• தேசிய சட்டங்கள் நிர்வாகக் கொள்கைகள் சர்வதேச மனித உரிமைதரக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்திற்கு விதந்துரைகளை செய்தல்.
• மனித உரிமைகள் துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் பங்களிப்புச் செய்யும் உடன்பாடுகளின் அவசியம் பற்றி அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்தல்.
• மனித உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் விருத்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளுக்கு இயைபாக ஆய்வுகளை நடத்துதல்.
• இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களாவன
மனித உரிமைகளை மீறல்களைப் புலனாய்வு செய்தல்.
மனித உரிமைகளுக்காக மாகாண மட்டக் குழுக்களை அமைத்தல்.
• இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றி வரும் பங்குகள் :
• அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது மீறப்படுதலுக்குட்படவுள்ளமை பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்தல் இணக்கப்படுத்தல் ஒற்றுமைப்படுத்தல் என்ற வழிமுறைகள் மூலம் தீர்த்து வைத்தல்.
• அடிப்படை உரிமைகள் மேம்படுத்தல் விருத்தி செய்தல் பாதுகாத்தல் தொடர்பான சட்ட மற்றும் நிருவாக ஏற்பாடுகள் என்பவற்றைத் தயாரிப்பதில் அரசாங்கத்திற்கு ஆலோசணை வழங்குதல்.
• தேசிய சட்டங்களையும் நிர்வாக நடவடிக்கைகளையும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கும் ஏற்றுக் கொள்ளுதலுக்கும் அசைவானதாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்துக்குச் சிபாரிசுகளை முன்வைத்தல்.
• மனித உரிமைகள் பரப்பில் இடம்பெறும் ஒப்பந்தங்கள் மற்றும் வேறு சர்வதேச ஆவணங்கள் என்பவற்றில் பங்காற்றுவதன் மற்றும் உடன்படுவதன் அவசியம் பற்றி அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்தல்.
• மனித உரிமைகள் பற்றி அறிவூட்டல் விருத்தி செய்தல் மனித உரிமைக் கல்வியை வழங்கல்
• மனித உரிமைகள் பற்றி பிரதேச மட்டத்தலி; செயற்படுவதற்கென பிரதேச குழுக்களை நியமித்து அவற்றிற்கு அதிகாரங்களை வழங்கி செயற்படுத்தல்.
• உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தும் ஒரு விடயம் சம்பந்தமாக ஈடுபட்டு உயர் நீதிமன்றம் விதிக்கும் நடவடிக்கைகளை எடுத்தல்.
ஒம்பூட்ஸ்மென்
- அரசாங்க அலுவலர்கள் பகிரங்க கூட்டுத்தாபன அலுவலர்கள் உள்ளுர் அதிகார சபை அலுவலர்கள் இவைபோன்ற வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் என்போர் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்கள் என்று கூறுகின்ற முறைப்பாடுகளை சட்டத்திற்கிணங்க பரிசீலனை செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கின்ற அதிகாரியே ஒம்பூட்ஸ்மென்ஆவார்.
- 1944ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாராளுமன்ற சட்டத்தின்படி பொதுமக்கள் முறையீடுகளை நேரடியாக ஒம்பூட்ஸ்மெனுக்கு சமர்ப்பிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
- இவ் ஒம்பூட்ஸ்மென் அரசியல் அமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்.
- இவரது பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
- இடைக்காலத்தில் இவருக்கெதிரான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதி இவரை பதவியிலிருந்து நீக்கலாம்.
- இவரது சம்பளம் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு திரட்டு நிதியின் மீது பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
- ஒம்பூட்ஸ்மென் தனது விசாரணையை பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம் என்போருக்கெதிராக மேற்கொள்ளமுடியாது.
- இவ் ஒம்பூட்ஸ்மெனின் அறிமுகத்தினால் அரச அதிகாரிகள் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற போது பரிகாரம் பெறக்கூடிய நிலை காணப்படுகின்றது.
- அதேவேளை இப்பதவி யாப்பில் காணப்படுகின்ற அடிப்படை உரிமைககை மேலும் வலுப்படுத்துவதாகவுள்ளது.
- எனினும் குற்றவாளிக்கெதிராக ஒம்பூட்ஸ்மென் நேரடியாக நடவடிக்கையெடுக்க முடியாத நிலை பாதுகாப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் ஒம்பூட்ஸ்மென் விசாரணையிலிருந்து விலக்கப்பட்டுள்ளமை போன்றவை குறைபாடாக உள்ளது.
பூகோள மற்றும் பிராந்திய அரசியல்
பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம்

















- ஆரம்பம்:-
- 1985இல் டிசம்பர் 8ம் திகதி வங்களாதேசத்தின் தலைநகரான டக்கா நகரில் ஆரம்பமாகியது.
- இதன் உறுப்பு நாடுகளாக இந்தியா பாக்கிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை, நேபாளம் மாலைதீவுகள், ஆப்கானிஸ்தான் என்பனவாகும்.
- இதன் நோக்கங்களாவன
1. தென்னாசிய மக்களின் பொது நலன்களையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துதல்
2. பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தல் சமூக முன்னேற்றத்தை விருத்தி செய்தல் ,கலாசாரத்தை மேம்படுத்தல், பிராந்திய மக்களின் திறன்களை விருத்திசெய்து அவர்கள் சுய கௌரவப்பாடு வாழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல்
3. தென்னாசிய நாடுகளின் கூட்டு இருப்பைப் பலப்படுத்தல்
4. பரஸ்பர நம்பிக்கை, புரித்துணர்வு என்பவற்றின் மூலம் ஒவ்வொருவரினதும் பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளல்
5. பொருளாதார சமூக கலாசார தொழிநுட்ப விஞ்ஞானத் துறையில் ஒத்துழைப்பையும் ஆதரவு நல்குதலையும் பலப்படுத்தல்
6. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒத்துழைப்பையும் பலப்படுத்தல்
7. நிறுவனத்தின் உறுப்பரசுகளை பாதிக்கும் பொது விடயங்கள் தொடர்பாக சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுவதனைப் பலப்படுத்தல்
8. ஒத்த நோக்கங்களுடைய ஏனைய சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை விருத்தி செய்தல்
• உறுப்பரசுகளின் இறைமை சமத்துவம் ஆள்புல ஒருமைப்பாடு அரசியல் சுதந்திரம் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் பரஸ்பரம் உதவி ஆகிய மூலக் கொள்கையின் அடிப்படையில் யெற்பட வேண்டும்
• நிறுவனத்தின் தீர்மானங்கள் ஏகமனதாக இருக்க வேண்டும் இரு தரப்பு மற்றும் நெருக்கடிகளுக்குரிய விடயங்கள் நிறுவனத்தில் ஆராயப்படக்கூடாது
- சார்க் நிறுவனத்தின் கட்டமைப்பு
• அரசத் தலைவர்கள்
• வெளிநாட்டமைச்சர்களின் கவுன்சில்
• நிலையற்குழு – இவை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுகளின் செயலாளர்களைக் கொண்டமையும்
• தொழிநுட்பக்குழு
• அமைச்சர்களின் விசேட கூட்டங்கள்
- உறுப்பு நாடுகளின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கான நடவடிக்கைகள்
• விவசாய அபிவிருத்தி
• சுகாதார சிறுவர் நலன்
• கல்வி கலாசார விளையாட்டு அபிவிருத்தி
• விஞ்ஞான தொழிநுட்ப துறையை முன்னேற்றல்
• போக்குவரத்துத் துறையை முன்னேற்றல்
• தொழிநுட்ப அறிவைப் பரிமாற்றிக் கொள்ளல்
• தொடர்பாடல் நடவடிக்கைகளை முன்னேற்றல்
• சுற்றாடல் அபிவிருத்தியை துரிதப்படுத்தல்
• போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல்
• கிராம அபிவிருத்தியை துரிதப்படுத்தல்
• உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றல்
• அனர்த்தங்களின் போது ஒத்துழைப்புடன் செயற்படல்
• வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றல்
- பொருளாதார சமூக, கலாசார, வர்த்தக, தொழிநுட்ப, கல்வி, விளையாட்டு, போதைப்பொருள், பயங்கரவாதம் போன்ற துறைகளில் பல செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் அது அடைந்துள்ள முன்னேற்றத்தில் திருப்தியடைய முடியாதுள்ளது.
- பலவீனமடைவதற்கான காரணங்கள்
- உறுப்பு நாடுகளுக்கிடையில் நிலவும் மோதல்கள்
- அனுபவக்குறைவு
- பொருளாதார பலவீனமும்
- நிறுவனக் குறைபாடுகள்
- நாட்டுக்குள்ளே உள்நாட்டுப் பிரச்சனை
- பயங்கரவாதம்
- அரசியல் உறுதியின்மை
- பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசிய சங்கத்தின் நோக்கங்கள்
- தென்னாசிய நாடுகளின் மக்களின் பொது நலன்களையும் வாழ்க்கைத் தரத்தையும் விருத்தி செய்தல்.
- தென்னாசிய பிராத்தியந்தின் பொருளாதார விருத்தியைத் துரிதப்படுத்தல்.
- சமூக முன்னேற்றத்தையும் கலாசாரத்தையும் விருத்தி செய்தல் சகலருக்கும் தமது திறன்களை உச்சமான முறையில் விருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குதல்.
- தென்னாசிய நாடுகளுக்கு மத்தியில் பரஸ்பரம் ஒத்துழைப்பினை விருத்தி செய்து பரஸ்பரம் நம்பிக்கையை உறுதிப்படுத்தல்.
- பொருளாதார, சமூக, கலாசார, விஞ்ஞானத்துறையில் சுறுசுறுப்பு மிக்க ஒத்துழைப்பையும் உதவி ஒத்தாசைச் சேவைகளையும் வருந்தி செய்தல். பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான சர்வதேச சந்திப்புக்களில் உறுப்பரசுகளுக் கிடையில் ஒத்துழைப்பினைப் பலப்படுத்தல்.
- வளர்முக நாடுகளுடனான ஒத்துழைப்பினை பலப்படுத்தல்.
- ஒத்த நோக்கங்களையுடைய சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படல்.
- அபிவிருந்தியடைந்த ஏனைய நாடுகளுடனான ஒத்துழைப்பினை வருத்தி செய்தல்.
- சார்க் அமைப்புக் கட்டமைப்பின் உயர் நிறுவனங்கள்
- அரச தலைவர்கள் மாநாடு
- வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாடு
- பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசிய சங்கத்தின் பண்புகள்
- 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் பங்களாதேஷிலுள்ள டாக்கா நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- எட்டு நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
- அரச தலைவர்களின் மாநாடு வருடத்திற்கு ஒரு முறை கூடுகிறது.
- உறுப்பரசுகளின் இறைமை, சமத்துவம், ஆள்புல, ஒருமைப்பாடு, அரசியல், சுதத்திரம் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை, பரஸ்பர உதவி ஆகிய மூலக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுகிறது.
- சார்க் நாடுகளின் பொருளாதார, சமூக அபிவிருந்திக்கான நடவடிக்கைகள்
- விவசாய அபிவிருந்தி
- சுகாதாரம், குடித்தொகை, சிறுவர்நலன்
- கல்வி கலாசார விளையாட்டு அபிவிருந்தி
- விஞ்ஞான தொழிநுட்ப துறையை விருந்தி செய்தல்
- தொழிநுட்ப அறிவை பகிர்ந்து கொள்ளல்.
- சுற்றாடல் அபிவிருத்தியை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தல்.
- போதைப் பொருள் பிரச்சனைகளை மேம்படுத்தல்.
- கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தல்.
- உல்லாசப் பிராயாண நடவடிக்கைகளை மேம்படுத்தல்.
- அனர்த்த நேரங்களில் ஒத்துழைப்புடன் கருமமாற்றல்.
- வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்தல்
- சார்க் நாடுகள் செய்து கொண்டுள்ள வர்த்தக உடன்படிக்கை
- தெற்காசிய விருப்புரிமை வர்த்தக ஒப்பத்தம்
- தெற்காசிய சதத்திர வர்த்தக ஒப்பத்தம்
- பிராத்தி ஒத்துழைப்புக்கான தென்னாசிய சங்கம் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
- போதைப் பொருள் பாவனைப் பிரச்சனை
- பயங்கரவாதம்
- பொருளாதார பலவீனம்
- வறுமை
- உறுப்பரசுகளுக்கிடையில் நிலவும் மோதல்கள்
- நிறுவனக் குறைபாடுகள்
- சார்க் அமைப்பிற்குட்பட்ட நாடுகளில் பல்கலாசார சமூகத்தை கொண்டிராத நாடுகள்
- ஆப்காணிஸ்தான்
- பூட்டான்
- மாலைதீவு
- சார்க் அமைப்பிற்குட்பட்ட நாடுகளில் பல்கலாசார சமூகத்தை கொண்டிருக்கும் நாடுகள்
- இந்தியா
- இலங்கை
- பங்களாதேஷ்
- பிராந்திய பொதுநலவாயம்












- பொதுநலவாய அமைப்பு
- பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் குடியேற்றக்களாக இருந்து பின்னர் சுதந்திரம் பெற்றஅரசுகள் ஒன்றினைத்து தாபித்த ஒரு பழம் அரசியல் நிறுவனமே பொதுநலவாயமாகும்
- இதன் உறுப்பு நாடுகள் 48 ஆகும் இதன் தலைவர் பிரித்தானிய மகாராணியாவார்
- இது உறுப்பரசுகளின் சுய விருப்பின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும் இதற்கு ஒரு யாப்போ சாசனமோ கிடையாது
- வருடத்துக்கொருமுறை அரசத் தலைவர்களின் மாநாடு நடைபெறுகிறத
- பொதுநலவாயத்தின் நோக்கங்கள்
1. மனித இனத்தின் பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் உதவும் சர்வதேச சமாதானத்தையும் மேம்படுத்துவதற்காக கருமமாற்றல்
2. இன, மத, மொழி நிற பேதமின்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் தனியாள் சுதந்திரம் சம உரிமைகள் என்பவற்றை விருத்தி செய்வதற்காக நடவடிக்கை எடுத்தல்
3. வறுமை கல்லாமை நோய்கள் என்பவற்றை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை மேம்படுத்தலும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்த நடவடிக்கை எடுத்தலும்
4. யுத்தத்திற்குக் காரணமாக அமையும் நிலைமைகளை நீக்குவதற்காக சர்வதேச ஒத்துழைப்புக்களை விருத்தி செய்து அநீதியை ஒழித்து உலக நாடுகளிடையே பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
5. இன பேதத்தையும் குடியேற்றங்களையும் வெறுத்து மனிதனின் கண்ணியத்தையும் சமூக சமத்துவத்தையும் விருத்தி செய்தல்
• வருடத்துக்கொருமுறை அரசத்தலைவர்களின் மாநாடு நடைபெறுகின்றது
• நிறுவனத்தின் நடைமுறை நோக்கங்கள் பின்வரும் ஆவணங்களில் இடம் பெறுகின்றன
1. பொதுநலவாயத்தின் கொள்கைப் பிரகடனம் – 1971
2. லுசாக்கா பிரகடனம் – 1979
3. ஹராரே பிரகடனம் – 1991
4. மில்புரூக் திட்டம் – 1995
5. எடிபன்ரோ பிரகடனம் – 1997
6. பொன்கோட் பிரகடனம் – 1999
7. அரசத் தலைவர்கள் பிரகடனங்கள்
• இதன் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் லண்டனில் அமைத்துள்ளது செயலாளர்நாயகமே அதன் தலைவராவார் அவருக்கு உதவுவதற்கு இரண்டு பிரதிச் செயலாளர்கள் உள்ளனர்
• செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் கீழ் பின்வரும் துறைகள் செயற்படுகின்றன
1. உபாயரீதியான திட்டங்களும் புலனாய்வும்
2. பொதுச் சேவை
3. இணைப்பும் பொது வேலைகளும்
4. பொருளாதார விவகாரங்கள்
5. பொதுத்துறை பரிபாலனமும் நிறுவன அபிவிருத்தியும்
6. சட்டம் மற்றும் அரசியல் யாப்பு விவகாரங்கள்
7. அரசியல் விவகாரங்கள்
8. விஞ்ஞானமும் தொழி நுட்பமும்
9. சமூக அபிவிருத்தி
10. விசேட ஆலோசனைச்சேவை
11. மனித உரிமைகள்
12. செயற்றிட்ட முகாமைத்துவம்
13. இளைஞர் விவகாரம்
• இவற்றை விட பொதுநலவாய மன்றம் கல்வி மன்றம் என்ற இரு நிறுவனங்களும் காணப்படுகின்றன
- பிரித்தானிய பொதுநலவாயத்தின் பண்புகள்
- பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் குடியேற்றங்களாகவிருத்து பின்னர் சுதந்திரம் பெற்ற அரசுகள் ஸ்தாபித்த ஒரு நிறுவனம்.
- பிரித்தானிய மகாராணி இதன் தலைவர் ஆவார்
- உறுப்பரசுகளின் சுயவிருப்பின் பெயரில் உருவாக்கப்பட்டதொரு நிறுவனம்
- வருடத்திற்கு ஒரு முறை அரச தலைவர்களின் மாநாடு நடைபெறும்
- பிரித்தானிய பொதுநலவாயத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள்
- பிரித்தானியா
- கனடா
- அவுஸ்ரேலியா
- நியூநிலாந்து
- இந்தியா
- இலங்கை
- பொதுநலவாய அமைப்பின் நடைமுறை நோக்கங்கள் இடம் பெறும் ஆவணங்கள்
• பொதுநலவாயத்தின் கொள்கைப் பிரகடனம் – 1971
• லுசாக்கா பிரகடனம் – 1979
• ஹராரே பிரகடனம் – 1991
• மில்புரூக் பிரகடனம் – 1995
• nடின்பரே பிரகடனம் – 1997
• பெண்கொட் பிரகடனம்
• அரச தலைவர்களின் பிரகடனம்
- பொதுநலவாயத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள ஆபிரிக்க நாடுகள்
• தென்னாபிரிக்கா
• தன்சானியா
• கானா
ஆசிய அபிவிருந்தி வங்கி
- ஆரம்பம்:
- ஆசிய மற்றும் தூர கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளாகும். அவர்கள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சனைகளாக மூலதன பற்றாக்குறை, தொழிநுட்ப அறிவின்மை ஆகியனவாகும்.
- இப்பிரச்சனைகள் பற்றி 1963 இல் நடத்தப்பட்ட ஆசிய மற்றும் தூர கிழக்கு நாடுகளின் நிதி அமைச்சர்களின் மகாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.
- அதன் பயனாக 1965 டிசம்பர் மாதத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி நிறுவப்பட்டது.
- அதன் சட்டபூர்வ ஆரம்ப திகதியாக 1966 டிசம்பர் 19ஆம் திகதியே கருதப்படுகின்றது.
- நோக்கம்:
• பிராந்தியத்திலுள்ள அபிவிருத்தி குறைந்த நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதிவசதிகளை ஏற்பாடு செய்தல்
• அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களிடையே தொடர்பைப் பேணல்
• தேவையான தொழிநுட்பவசதிகளை வழங்கல்
- அங்கத்துவம்:
- தற்போது 48 நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன.
- அவற்றுள் 32 நாடுகள் ஆசிய பசுபிக் பிராத்திய நாடுகளாகும்.
- 15 நாடுகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளாகும் ஆகவே இதன் அங்கத்துவம் ஆசிய நாடுகளுக்கு வெளியேயும் பரவியுள்ளது.
- இங்கு அதிபதி சபையொன்று பணிப்பாளர் சபையொன்று தலைவர் ஒருவரும் அடங்குவர்
- அங்கத்துவ சபையினால் நியமிக்கப்படுகின்ற பிரதான அதிபதிகளினாலும் மேலதிக அதிபதிகளினாலும் அதிபதிகள் சபை உருவாகியுள்ளது.
- வருடத்திற்கொரு முறை இச்சபை கூடும் கூட்டங்களுக்கு நிதி அமைச்சர்கள் பிரதி நிதி அமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோர் பங்குபற்றுவர் அங்கத்துவ நாடுகளின் பங்களிப்பிற்கேற்ப வாக்குப்பலம் அமையும்
- பணிப்பாளர் சபை 12 அங்கத்தவர்களைக் கொண்டது அதில் 8 பேர் பிராந்தியத்திலிருந்தும் ஏனைய 4 பேரும் வெளி அங்கத்தவர்களாவர் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும் தேவைக்கேற்றவாறு கூட்டங்கள் நடைபெறும்
- தலைவர்கள் அதிபதிகள் சபையினால் நியமிக்கப்படுவர் அதிபதிகள் சபையையோ பணிப்பாளர் சபையோ சேராத ஒருவர் நியமிக்கப்பட்டால் பதவி நிலை அடிப்படையில் குறிந்த இரண்டு நிறுவனங்களினதும் பணிப்பாளர் சபையினதும் அங்கத்தவம் கிடைக்கும்
- பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
- ஆசிய அபிவிருந்தி வங்கியின் நோக்கங்கள்
• பிரபந்தியத்திலுள்ள அபிவிருத்தி குறைந்த நாடுகளின் பொருளாதார அபிவிருந்திக்கான நிதிவசதிகளை ஏற்பாடு செய்தல்
• அங்கத்துவ நாடுகளின் அபிவிருந்தித் திட்டங்களிடையே தொடர்பைப் பேணல்
• தேவையான தொழிர்நுட்ப வசதிகளை வழங்கல்
- ஆசிய அபிவிருந்தி வங்கியில் அங்கத்துவம் பெற்றுள்ள தென்னாசிய நாடுகள்
• இலங்கை
• இந்தியா
• பாக்கிஸ்தான்
• பங்களாதேஷ்
- இலங்கை ஆசிய அபிவிருந்தி வங்கி மூலம் பெற்றுக் கொண்ட உதவிகள் இரண்டினைக் குறிப்பிடுக
• சபுகஸ்கந்த யூரியா உர உற்பத்தித் திட்டம்
• இலங்கையின் மேற்கு கடற்கரை மீன்பிடி தொழில் அபிவிருந்தி
• செனகல, கல்ஒயா சீனி கைத்தொழில் அபிவிருந்தி
• மீன்பிடி துறை அபிவிருந்தி
• சுனாமி அனர்த்தத்திற்கு ஆளாகியோரை மீளக் குடியமர்த்தும் செயற்றிட்டத்திற்கு 157 மில்லியன் டொலரை பெற்றுக் கொடுத்தல்
• வடக்கு கிழக்கு மக்களை மீண்டும் கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருந்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம்
ஐரோப்பிய பொருளாதார சங்கம்
- 1952 இல் நிறுவப்பட்ட ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு ஆணைக்குழு 1957 இல் ஏற்படுத்தப்பட்ட உரோமபுரி ஒப்பந்தம் ஏனைய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து 1957 மார்ச் 22 ஆம் திகதி ஐரோப்பிய பொருளாதார சமூகம் நிறுவப்பட்டது இதனைப் பொதுவாக ஐரோப்பிய பொருளாதார சமூகம் என அழைப்பர்.
- நோக்கம்:
1. அங்கத்துவ நாடுகளிடையே பொதுச்சந்தை ஒன்றை ஏற்படுத்தல்
2. அங்கத்துவ நாடுகளிடையே சமநிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தல்
3. ஒப்பந்தத்தின் பிரகாரம் 10 ஆண்டுகளில் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதிக்கான தீர்வையை நீங்குதல்
4. வர்த்தக நடவடிக்கைகளின் போது அங்கத்துவ நாடுகள் ஒரே பொருளாதார வலயமாகச் செயற்படல்
5. அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களின் போது அங்கத்துவ நாடுகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளும் தீர்வை முறையும் செயற்படல்
6. அங்கத்துவ நாடுகளின் சென்மதி மீதிகளை செலுத்த உதவுதல்
7. அங்கத்துவ நாடுகளுக்கிடையில் சமநிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தல்
- அங்கத்துவம்:
- பெல்ஜியம்
- பிரான்ஸ்
- இத்தாலி
- லக்ஸம்பர்க்
- நெதர்லாத்து
- மேற்கு ஜேர்மனி ஆகிய 6 நாடுகளும் ஆரம்ப அங்கத்துவ நாடுகளாகும்
- கட்டமைப்பு பொறிமுறை:
• இதன் தலைமையகம் பிரான்சிலுள்ளது
• நான்கு பிரதான சபைகள் இவற்றை நிர்வகிக்கின்றன இதன் பிரதான நிர்வாக நிறுவனம் ஆணைக் குழுவாகும்
- அமைச்சர்களின் ஆணைக்குழு
• கொள்கைகளைத் தீர்மானித்து இந்நிறுவனமாகும் அவ்வாறே சர்வதேச விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரமும் இதற்குண்டு
• ஐரோப்பிய பாராளுமன்றம் – அங்கத்துவ நாடுகளுக்கு 198 ஆசனங்கள் உண்டு பொருளாதார சட்டங்களை உருவாக்குவது இதுவாகும்
• சட்டம் தொடர்பான அதிகார சபை சுதந்திரமான நீதிபதிகளினால் ஆனது இந்நிறுவனத்தின் மூலம் அரச மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான நெருக்கடிகள் தீர்க்கப்படுகின்றன
- இலங்கையின் அனுபவம்
- குடியேற்ற நாடாகவிருந்த காலத்திலிருத்தே இலங்கை பெரும்பாலும் பிரித்தானியாவுடனேயே பொருளாதார ரீதியில் தொடர்புகளைப் பேணி வந்தது.
- பிரித்தானியா ஐரோப்பிய பொருளாதார சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடனும் பொருளாதார தொடர்புகளை விருத்தி செய்ய நேரிட்டது அவ்வாறான தொடர்புகள் சில பின்வருமாறு
- பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு மேலதிகமாக தைக்கப்பட்ட ஆடைகள் போன்ற புதிய பொருட்கள் ஐரோப்பிய நாடுகளினால் விலை கொடுத்து வாங்குதல் இலங்கையின் பொருளாதார திட்டங்களுக்கு உதவி வழக்குதல்
உதாரணம்:
• மகாவழிப் பிரதேசத்தின் நீர்வழி மற்றும் குடியிருப்பு வேலைகளுக்கு உதவி செய்தல்
• 1975 இல் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமொன்றின் படி இலங்கையில் ஏற்றுமதிகளுக்கு நிவாரணங்கள் வழங்குதல்
(ஆண்டுதோறும் இது புதுப்பிக்கப்படுகின்றது)
• டென்மார்க்கிலும் மேற்கு ஜேர்மனியிலும் இலங்கையின் வர்த்தக மையங்கள் இரண்டை நிறுவுதல்
- ஐரோப்பிய பொருளாதார சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள ஆரம்ப நாடுகள்
• பெல்ஜியம்
• பிரான்ஸ்
• லக்ஸம்பார்க்
• நெதர்லாந்து
• இத்தாலி
• மேற்கு ஜேர்மனி
- ஐரோப்பிய பொருளாதார சங்கத்தில் பிரதான துணை நிறுவனங்கள் இரண்டினைக் குறிப்பிடுக
• ஆணைக்குழு
• அமைச்சர்களின் கழகம்
• ஐரோப்பிய பாராளுமன்றம்
• நீதிமன்றம்
- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்






- அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நோக்கங்கள்
• எந்தவொரு இடத்திலும் மனித சமூகத்துக்கு நேருகின்ற துன்பகரமான நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு முயற்சி செய்தல்
• மனித சமூகத்தின் கௌரவத்தை பேணும் வகையில் காணப்படல்
• யாவரினதும் நம்பிக்கையையும் பெறக்கூடியவாறு வாத விவாதங்களைத் தவிர்த்து பக்கச்சார்பற்ற முறையில் நடந்து கொள்ளல்
• இலாப நோக்கற்ற முறையில் தொண்டர் அடிப்படையில் நிவாரணம் வழங்கல்
• ஒரு நாட்டில் ஒரு நெஞ்சிலுவைச் சங்க கிளையொன்றை மாத்திரம் நிறுவுதல்
• செஞ்சிலுவைச் சங்கமானது நாட்டின் எல்லாப் பிரஜைகளுக்கும் திறந்த ஒன்றாகும் நாட்டு எல்லையினுள் மனித இனத்தின் நன்மை கருதி செயற்படும்
• இன, மத, வகுப்பு பேதமின்றி நபர்களின் தேவைகளை நிறைவேற்றுதல்
• அவ்வவ் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் கொள்கைகளுக்கும் அமைவாகச் செயற்படல்
- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பண்புகள்
- 1864ம் ஆண்டில் ஏற்படுத்திக் கொண்ட ஜெனீவா உடன்படிக்கையின் பிரகாரம் நிறுவப்பட்டது
- இத்தாலிய நாட்டாரான ஹென்றி டுடான்ட் என்பவர் நிர்மானித்தார்
- எந்தவொரு நாட்டிற்கும் செஞ்சிலுவைச் சங்கமொன்றை நிறுவலாம்
- நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் அங்கத்துவம் பெறமுடியும்
- 146 நாடுகளில் சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன
- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதான நிறுவனங்கள்;
• சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனம்
• சர்வதேச செஞ்சிலுவைக் குழு
• தேசிய செஞ்சிலுவை சமூகம்
- இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சேவைகள்
• முதலுதவிக்பயிற்சிகளும் சேவைகளும்
• ஆரம்ப சுகாதாரத்தைப் பேணல்
• வீட்டுத்தாதிச் சேவை
• பிணியாளர் போக்குவரத்துச் சேவை
• இரத்த தானம் செய்பவர்களைச் சேர்த்துக் கொள்ளல்
• விபத்துக்குள்ளானவர்களை தேடிப்பார்த்து தகவல் வழங்கல்
• இளைஞர் சேவை செயற்பாடுகள்
• போஷாக்கு தேவைகள்
• மக்கள் அபிவிருந்தி வேலைத்திட்டங்கள்
சர்வதேச மன்னிப்புச் சபை

- ஆரம்பம்:
- 1961 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பீட்டர் பென்சன், எரிக் பேகர் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 1963இல் செப்டெம்பர் 30 ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச் சபை நிறுவப்பட்டது
- நோக்கம்:
- மனித உரிமைகள் மீறப்பட்ட ஒருவருக்கு நியாயத்தைப் பெற்றக்கொடுத்தல்
- மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரல்
- அதற்காக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தல்
- நேரடியாக மறுபரிசீலனைக்கு மனுச்செய்தல்
- அதுதொடர்பாக தேடிப்பார்த்தல் ஆகியன இதன் ஆரம்ப நோக்கங்களாகும்
- இன்று அகதிகள் துயருக்கு ஆளானோர் பின்தங்கிய குலத்தவர் கோத்திரத்தினர் சமயத்தவர் இனங்கள் தொடர்பாகவும்
- பெண்களின் உரிமைக்காகவும் போராடி வருகின்றது
- இதன்படி சர்வதேச மன்னிப்புச் சபை பின்வரும் துறைகளில் செயற்படுகின்றது
1. பெண்கள் உரிமைகள்
2. சிறுவர் உரிமைகள்
3. இம்சித்தலை முடிவுக்குக் கொண்டுவரல்
4. மரண தண்டனையை இல்லாதொழித்தல்
5. அகதிகளின் உரிமைகள்
6. சிறைக்கைதிகளின் உரிமை
7. மனிதனின் கௌரவத்தைப் பேணல் ஆகியனவாகும்
- அங்கத்துவம்:
- விரும்பிய ஒருவர் இதில் அங்கத்துவம் பெறலாம்
- இதன்படி தொண்டர் அடிப்படையில் செயற்படும் பெரும் எண்ணிக்கையான அங்கத்தவர்களையும் இச்சபை உள்ளடக்கும்
- இன்று இச்சபையுடன் இணைத்துள்ள அங்கத்தவர்களினதும் ஆதரவாளர்களினதும் எண்ணிக்கை 2.2 மில்லியனையும் தாண்டியுள்ளது
- கட்டமைப்பு:
• அந்தந்த நாட்டின் அங்கத்தவர்கள் நிறுவும் அலகுகள் அடிமட்ட நிறுவனங்களாகும் சிறிய எண்ணிக்கையான அங்கத்தவர்கள் கொண்ட நாடுகளின் அத்தகைய அமைப்புக்கள் கட்டமைப்புக்கள் எனப்படும்
• இவ்வாறான அலகுகள் கட்டமைப்புக்கள் இல்லாத நாடுகளின் மக்களும் சர்வதேச மன்னிப்புச்சபையில் சர்வதேச அங்கத்துவம் பெறமுடியும்
• அடிப்படை செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் இந்த நிறுவனங்களின் பணியாகும்
• மேற்படி சர்வதேச கவுன்சிலினுள் எல்லா அங்கத்தவர்களுக்கும் சர்வதேச தொகுதிகளுக்கும் அலகுகள் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கின்ற போதிலும் வாக்குரிமை அலகுகளுக்கும் கட்டமைப்புக்களுக்கும் மாத்திரமே உரிமையாகும்
• சர்வதேச கவன்சில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும்
• மேற்படி சர்வதேச கவுன்சிலினால் நியமிக்கப்படுகின்ற 8 அங்கத்தவர்களையும் ஒரு பொருளாளரையும் கொண்ட சர்வதேச செயற்குழு சர்வதேச மன்னிப்புச்சபையின் மிக உயர்ந்தமட்ட நிறுவனமாகும்
• சர்வதேச மன்னிப்புச் சபையின் நாளாந்தம் பணிகளைநிறைவேற்றும் பொறுப்பைகன் கொண்டுள்ள சர்வதேச கவுன்நில் சர்வதேச குழுவும் வழிநடத்தும் சர்வதேச செயலகமும் செயலாளரும் உள்ளனர்
• 2005 ஆம் ஆண்டளவில் 52 அலகுகளும் 23 கட்டமைப்புக்களையும் கொண்டதாக இது அமைத்திருத்தது
- இலங்கையில் சர்வதேச மன்னிப்பச் சபையின் அனுபவம்
- தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பின்பற்றும் பிரதான உயரிய மார்க்கமாக அமைவது உரிமைகள் மீறப்படல் தொடர்பாக மக்கள் கருத்தை உருவாக்குவதாகும்
- இதற்காக செய்தியாளர் மகாநாடுகள் நடத்தும் அவர்களது பிரதான உயரிய வழியாகும்
- 2005ஆம்ஆண்டில் இலங்கை தொடர்பாக 52 அத்தகைய செய்தியாளர் மநாடுகளை நடத்தியது
- சர்வதேச மன்னிப்புச் சபையின் செயற்பட்டுவரும் துறைகள்
• பெண்கள் உரிமைகள்
• சிறுவர் உரிமைகள்
• இம்சித்தலை முடிவுக்கு கொண்டு வரல்
• மரணதண்டனையை இல்லாதொழித்தல்
• அகதிகள் உரிமைகள்
• சிறைக்கைதிகளின் உரிமை
• மனிதனின் கௌரவத்தைப் பேணல்
மனித உரிமைகளை விசாரனை செய்யும் அமைப்பு
- ஆரம்பம்:
- 1975 இல் ஹெல்சிங்கியின் ஒப்பந்தத்திற்கேற்ப ஹெல்சின்கி விசாரனை அமைப்பின் ஆரம்பத்துடன் 1978 இல் இது ஆரம்பமாகியது
- 1981இல் அமெரிக்கவிசாரனை சபையும், 1985 இல் ஆசிய விசாரனை சபையும் 1988 இல் ஆபிரிக்கவிசாரனை சபையும் 1989இல் மத்திய கிழக்கு விசாரனை சபையும் ஆரம்பிக்கப்பட்டன
- 1988இல் இவை யாவும் ஒன்றினைத்த மனித உரிமைகள் விசாரனை சபை உருவாகியது
- கொள்கைகள்:
- உலக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படல்
- பக்கச் சார்பான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க போர்க்களங்ககளில் நடைபெறும்
- மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளிலிருந்து மக்களைப் பாதுகாத்தல் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்னால் கொண்டுவரல்
- மனித உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய ஊழலில் ஈடுபடுபவர்களை , குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்னால் நிறுத்துதல்
- உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான சட்டத்திற்குமதிப்பளிக்க வலியுறுத்தல்
- செயற்பாடுகள்:
• 1975 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பரந்த வேலைத்திட்மொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது
- 1977 இல் அவர்கள் நடத்திய நிலக்கண்ணிவெடிகளை தடைசெய்வதற்கான சர்வதேச போராட்டங்களாகவும் ஆர்ப்பாட்டங்களாகவும் நோபல் சமாதானப் பரிசு கிடைத்தது
- இலங்கையில் வடக்கு கிழக்கில் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான மேற்படி அமைப்பின் தலையீடு தொடர்பாக அவ்வமைப்பின் செயற்பாடுகள் பற்றி கற்பிக்க முடியும்
- நோக்கம்:
- மனித உரிமைகள் மீறப்பட்ட ஒருவருக்கு நியாயத்தைப் பெற்றக்கொடுத்தல்
- மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரல்
- அதற்காக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தல்
- நேரடியாக மறுபரிசீலனைக்கு மனுச்செய்தல்
- அதுதொடர்பாக தேடிப்பார்த்தல் ஆகியன இதன் ஆரம்ப நோக்கங்களாகும்
- இன்று அகதிகள் துயருக்கு ஆளானோர் பின்தங்கிய குலத்தவர் கோத்திரத்தினர் சமயத்தவர் இனங்கள் தொடர்பாகவும் பெண்களின் உரிமைக்காகவும் போராடி வருகின்றது இதன்படி சர்வதேச மன்னிப்புச் சபை பின்வரும் துறைகளில் செயற்படுகின்றது
8. பெண்கள் உரிமைகள்
9. சிறுவர் உரிமைகள்
10. இம்சித்தலை முடிவுக்குக் கொண்டுவரல்
11. மரண தண்டனையை இல்லாதொழித்தல்
12. அகதிகளின் உரிமைகள்
13. சிறைக்கைதிகளின் உரிமை
14. மனிதனின் கௌரவத்தைப் பேணல் ஆகியனவாகும்
சர்வதேச நாணய நிதியம் (IMF)
• பிரிட்டன்வுட்ஸ் மகாநாட்டுத் தீர்மானத்தின் படி 1944 ல் தாபிக்கப்பட்டது.
• நேசாக்கங்கள்
1. சர்வதேச மட்டத்தில் நிதி ஒத்துழைப்பை விருத்தி செய்தல்.
2. செலவாணி வீதத்தை நிலையாக வைத்திருத்தல்ää செலவாணி பரிமாற்றத்தை முறையாகக் கொண்டு நடாத்துதல் என்பவற்றை விரத்தி செய்தல்.
3. பன்மைக் கொடுப்பனவு ஊடகங்களைக் கொண்டு நடாத்துவதை விருத்தி செய்தலும் வெளிநாட்டுச் செலவானி கட்டுப்டபாடுகளை ஒழிப்பதற்குச் செயற்படுதலும்
4. உறுப்பு நாடுகளின் சென்மதி நிலுவைக் குறைபாடுகளைப் போக்டகுவதறங்குத் தற்காலிக முறையில் நிதி உதவி வழங்குதல்.
• சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உறுப்பரசுகளின் பங்களிப்பு கோட்டாவிலிருந்து திரட்டப்படுகிறது. இவ்வரசுகளின் சார்பு ரீதியான பொருயாதபரப் பலத்தின் அடிப்படையில் அந்தக் கோட்பாடு நிர்ணயிக்கப்படும்
• விஆச் எடுப்பரிமை முறையின் கீழ் சர்வதேச ஒதுக்கைத் தாபித்து அவற்றை உறுப்பரசுகளுக்ப் பெற்றுக் கொடுக்கும் அதிகாரம் அந்நிதியத்திற்கு உண்டு.
• நிதியத்தின் தற்போதைய சொத்தின் அளவுடி சுமார் 300 பில்லியன் டொலர்களாகும்.
• நிதியத்திலிருந்து சலுகைகளைப் பெறும் அரசுகள் நிதியம் விதிக்கும் கொள்கைப் பொருந்தப்பாட்டுக்குக் கட்டுப்பட்டனவாகும்
- ஒவ்வொரு அரசும் தனது உறுப்புக் கோட்டவுக்கு ஏற்பவே சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
- குறை வருமானத்தைப் பெறும் நாடுகள் விசேட சலுகைத்திட்டத்தின் கீழ் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்கின்றன.
- இந்நிதியம் ஆளுநர் சபையாலேயே நிருவகிக்கப்படுகிறது அது உறுப்பராசுகளையே கொண்டுள்ளது. வருடத்துக்க ஒரு முறை கூடும்.
- நிதியத்தின் அன்றாடக் கஐருமங்களை 24 பேரடங்கிய ஒரு நிறைவேற்றுக் குழுவாலேயே கொண்டு நடாத்தப்படுகிறது. நிறைவேற்றுப் பணிப்பாளர் அதன் தலைவராவர்.
காப்புறுதி (INSURANCE)










‘’மனித ஆயுளிற்கும் சொத்துக்களிற்கும் நிச்சயமான or தற்செயலான சம்பவங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு ஆயுள் or சொத்துடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்’’
அபாயங்கள் or இடர்கள்
காப்புறுதி செய்யப்படுகின்ற ஆயுள் or சொத்துக்களின் மீது இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு காரணியும் அபாயம் ஆகும்.
காப்புறுதி செய்ய முடியாத அபாயங்கள்









• இயற்கைத் தன்மை காரணங்களால் தோன்றும் வணிக இடர்கள்.
• தனிநபர் இயலுமைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இடர்கள்.
• பிழையான முகாமைத் தீர்மானங்களால் ஏற்படும் வணிக இடர்கள்.
காப்புறுதி செய்ய முடிந்த அபாயங்கள்
1. ஆயுள் அபாயம்
1. தீ அபாயம் – தீ அபாயக் காப்புறுதி
2. கடல் அபாயம் – கடல் அபாயக் காப்புறுதி
3. விபத்து அபாயம் – விபத்து அபாயக் காப்புறுதி
காப்புறுதி செய்ய முடிந்த அபாயமொன்றின் சிறப்பு பண்புகள்
• எதிர்வு கூறக்கூடியதாக இருத்தல்.
• நட்டம் or பணரீதியான இழப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருத்தல்.
• இழப்பினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருத்தல்.
• வேறு அபாயங்களுடன் தொடர்பற்ற வகையில் காணப்படல்.
காப்புறுதி ஒப்பந்தத்துடன் தொடர்புறும் கட்சியினர்.
1. காப்புறுதி செய்வோன்-ஆயுள், சொத்துடைமையாளன்
2. காப்புறுதி அளிப்போன்- காப்புறுதி நிறுவனம்
3. 3ம் கட்சி – பொது மக்கள், பொதுச்சொத்துக்கள்
காப்புறுதியின் சட்டத்தேவைப்பாடுகள்
• சட்ட ரீதியான தொடர்பொன்றை உருவாக்கிக்கொள்ளும் எண்ணம்
• முன்மொழிவுகள் or பிரேரித்தல்
• ஏற்புடைமை
• சட்ட ரீதியான தன்மை
• ஒவ்வொரு பிரிவினர்களுக்கிடையில் சட்ட ரீதியான உடன்பாட்டை உருவாக்கிக்கொள்ளும் இயலுமை
காப்புறுதித் தத்துவங்கள்
1. காப்புறுத்தும் உரிமை– ஒரு உடமை இருப்பதனால் நன்மை பயன் இலாபம் அனுபவிக்கக்கூடிய நிலையில் இருந்து இவ்வுடைமை சேதமடைந்தால் நன்மை பெற முடியாத நிலையில் உள்ளவர் அவ்வுடைமையை காப்புறுதி செய்யலாம்.
ஆயுளை காப்புறுதி செய்ய உரிமை உடையவர்கள்
- கணவனின் ஆயுளை மனைவியும் , மனைவியின் ஆயுளை கணவனும் காப்புறுதி செய்தல்.
- பெற்றோர் – பிள்ளை
- கடன்பட்டவரின் ஆயுளை கடன் கொடுத்தவர் காப்புறுதி செய்தல்.
- ஒருவர் தனது சொந்த ஆயுளை காப்புறுதி செய்தல்.
- சொத்தினை காப்புறுதி செய்ய உரிமை உடையவர்கள்.
- சொத்தில் சட்டரீதியாக உரிமையைக் கொண்டவர்கள்.
- சொத்துக்களை குத்தகைக்கு எடுத்தவர் (வாடகைக்கு எடுத்தவரால் இயலாது)
- காரணி முகவர் முதல்வருடைய பொருட்களை காப்புறுதி செய்தல்.
ஆயுள் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – ஒப்பந்தம் செய்யும் போதும். கடல் அபாயக் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – இழப்பு ஏற்படும் போதும். தீ விபத்து அபாயக் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – இழப்பு ஏற்படும் போதும். ஒப்பந்தம் செய்யும் போதும் காணப்பட வேண்டும்.
2. அதியுயர் நம்பிக்கை – காப்புறுதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் போது காப்புறுதியாளன் காப்புறுத்துவோருக்கு உண்மையான தகவல்களை வழங்க வேண்டும். காப்புறுத்துவோரும் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
மீறப்படும் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள்
- ஒப்பந்தத்தை இரத்து செய்தல்.
- கோரிக்கை விடும் போது மறுத்தல்.
- இழப்பீட்டை கொடுக்க மறுத்தல்.
- பணத்தை மீளப்பெற சட்ட நடவடிக்கை எடுத்தல்.
3. இழப்பீட்டுத் தத்துவம்– காப்புறுதி செய்யப்பட்ட குறித்த சொத்துக்கு நட்டம் ஏற்படும் போது அதனை பழைய நிலைக்கு கொண்டு வர போதிய காப்புறுதி ஒப்பந்தத்தின் பெறுமானத்திற்கு சார்பாக விகிதாசாரத்துக்கு அமைய இழப்பீடு வழங்குதல் ஆகும்.
இதன் துணைத்தத்துவங்களாக
1. பங்களிப்புத் தத்துவம் – சொத்தொன்று பல காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சொத்துக்கு இழப்பு ஏற்பட்டால் காப்புறுதி நிறுவனங்களின் பெறுமான விகிதாசாரத்துக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும்.
2. பதிலாள் வைப்புத் தத்துவம்- காப்புறுத்துவோர் காப்புறுதியாளருக்கு ஏற்பட்ட இழப்பை வழங்கிய பின்னர் அவ்விழப்புச் சார்பாக ஏதேனும் வசூலிப்பு, நயங்கள் இருந்தால் அதனை காப்புறுத்துவோர் பெறலாம்.
3. அண்மைக்காரணத் தத்துவம் – உடமை எந்த ஆபத்துக்கு எதிராக காப்புறுத்தப்பட்டதோ அக்காரணங்களால் ஏற்படுகின்ற இழப்புக்களுக்கு மட்டுமே காப்புறுதி நிறுவனத்தினால் இழப்பீடு வழங்கப்படும்.
இரட்டை காப்புறுதி – ஒரு சொத்து or ஆயுள் இரு காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி செய்யப்படுவது ஆகும்.
மறு காப்புறுதி – காப்புறுதி நிறுவனம் ஒன்று தான் காப்புறுதி செய்த காப்புறுதியினை மீண்டும் பிறிதொரு காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்தல் ஆகும்.
மிகை காப்புறுதி – ஒரு சொத்தின் உண்மைப் பெறுமதியை விட கூடுதலான பெறுமதிக்கு காப்புறுதி செய்தல் ஆகும்.
குறை காப்புறுதி– ஒரு சொத்தின் உண்மைப் பெறுமதியை விட குறைவான பெறுமதிக்கு காப்புறுதி செய்தல் ஆகும்.
சராசரிச்சரத்து = (காப்புறுதி ஒப்பந்தப் பெறுமதி / சொத்தின் உண்மைப்பெறுமதி) x இழப்பு
| ஆயுள் காப்புறுதி |
அபாயக்காப்புறுதி |
| மனிதஆயுளிற்கு நிச்சயமாக ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு ஆயுள் உடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்.
வகைகள்-
1. முழு ஆயுள் காப்புறுதி
2. கூட்டு ஆயுள் காப்புறுதி
3. காலம் குறித்த ஆயுள் காப்புறுதி ஆயுள் காப்புறுதி கட்டணத்தை தீர்மானிக்கும் காரணிகள்
1. ஆபத்தின்தன்மை
2. வயது
3. ஒப்பந்தக்காலம்
4. ஒப்பந்தத்தொகை
ஆயுள் காப்புறுதி கட்டணத்தை செலுத்த முடியாதவர் எடுக்கக்கூடிய மாற்று வழிகள்
1.ஓப்படைப்புப்பெறுமானம்- காப்புறுதி செய்தவர் இது வரையில் செலுத்தியுள்ள தவணைக்கட்டணத்தில் ஓர் குறிப்பிட்ட வீதத்தினை கழிவாக கொடுத்து மீதியை பெறும் நடவடிக்கை. இதன் போது ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும்.
2.இறுத்தப்பூட்கையாக மாற்றல்- இது வரை செலுத்தப்பட்ட தொகையை காப்புறுதி தொகையாக மாற்றியமைத்து முன்னைய ஒப்பந்த முடிவு காலத்தில் அத்தொகையை மீளப்பெறக்கூடியவாறு ஒப்பந்தத்தின் ஆரம்பப்பெறுமதியை மாற்றியமைத்தல் ஆகும்.
கருணைக்கொடுப்பனவு – ஒரு ஆயுள் காப்புறுதியாளனுக்கு சட்டப்படி நட்டஈடு வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் அக் காப்புறுதியாளனின் தங்கிவாழ்வோரின் வறுமை பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்தத்தொகையினை விட குறைவான தொகையை தங்கிவாழ்வோருக்கு வழங்கல் ஆகும்.
கடன்பெறுமானம்– ஆயுள் காப்புறுதியாளர் குறித்த ஆண்டுகள் வரையும் காப்புறுதி கட்டணத்ததை செலுத்திய பின்னர் அக்காப்புறுதி பத்திரத்தை பிணையாக வைத்து வங்கியில் காப்புறுதி ஸ்தாபனங்களில் கடனாக பெற அனுமதிக்கப்பட்ட தொகை ஆகும்.
இதன் பண்புகள்
• இழப்பீட்டுத்தத்துவம் பொருந்தாது
• பங்குலாபம வழங்கப்படும்.
• நீண்டகால தன்மை
• கருணைக்கொடுப்பனவு முறை உண்டு
• சேமிப்பாக கருத முடியும்
• மிகை , குறை காப்புறுதி பொருந்தாது |
மனித சொத்துக்களிற்கு தற்செயலான சம்பவங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு சொத்துடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்.
வகைகள்–
1. விபத்து அபாயக் காப்புறுதி
2. தீ அபாயக் காப்புறுதி
3. கடல் அபாயக் காப்புறுதி
விபத்து அபாயக் காப்புறுதியின் வகைகள்
1. மோட்டார் வாகன காப்புறுதி
2. பொறுப்பு காப்புறுதி
3. களவபாயக் காப்புறுதி
மோட்டார்வாகன காப்பறுதி
மோட்டார் வாகனங்களுக்கும் அவற்றில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அதனால் இழப்புக்கள் நிகழ்ந்துள்ள வெளிக்கட்சியினருக்கும் இழப்பீடு பெறுவதற்கான காப்புறுதி ஒப்பந்தமாகும்.
இதன் வகைகள்-
1. அகல் விரிவான காப்புறுதி
2.பகுதியளவான மோட்டார் வாகன காப்புறுதி
3. மூன்றாம் நபர் காப்புறுதி
ஈடுகோராத மிகை ஊதியம்– எதிர்வரும் ஆண்டில் குறைந்த காப்புறுதி கட்டணத்தை செலுத்தலாம் அல்லது கழிவைப் பெறலாம்.
பொறுப்புக்காப்புறுதி– ஒருநிறுவனம் or நபரின் ஏதேனும் நடவடிக்கைகள் காரணமாக பொது மக்களுக்கும் பொது ஆதனங்களுக்கும் ஏதேனும் இழப்புக்கள் வருமிடத்து அவ் இழப்புக்களை ஈடுசெய்து கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகும்.
1.குறைந்தபட்ச மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்புறுதி
2.தொழிலாளர் விபத்து காப்புறுதி
3.பிணை பொறுப்பு காப்புறுதி
4.பொதுசன பொறுப்பு காப்புறுதி
தீயபாயக்காப்புறுதி– குறித்த சொத்துக்களுக்கு தீ அபாயத்தினால் ஏற்படும் இழப்புக்களுக்கு நட்டஈட்டினை பெறுவதற்கான காப்புறுதி ஆகும்.
அபாயங்கள்-
- விமான விபத்து
- புயல்
- சூறாவளி
- மின்னல்
- இனக்கலவரம்
கடலபாயக் காப்புறுதி – கடல் அபாயம் காரணமாக கப்பலுக்கும் , கப்பலில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் இழப்புக்களுக்கு நட்டஈட்டினை பெறுவதற்கான காப்புறுதி ஆகும்.
வகைகள்-
1.பிரயாணம் குறித்த கடலபாயக்காப்புறுதி
2.காலம் குறித்த கடலபாயக்காப்புறுதி
3.கலப்பு கடலபாயக்காப்புறுதி
4.மிதக்கும் கடலபாயக்காப்புறுதி
இதன் பண்புகள்
• இழப்பீட்டுத்தத்துவம் பொருந்தும்
• பங்குலாபம் வழங்கப்படாது
• குறுங்காலகால தன்மை
• ஈடுகோராதமிகை ஊதியம் உண்டு
• சேமிப்பாக கருத முடியாது
• மிகை, குறை காப்புறுதி பொருந்தும் |
இலங்கை காப்புறுதிச்சபை
காப்புறுதித்தொழிலை விருத்தி செய்தல் ஒழுங்குபடுத்தல் பணிகளில் ஈடுபடுகின்றது.இதன் பணிகள்
- ஆலோசனை வழங்கல்
- தனியார் காப்புறுதி கம்பனிகளை பதிவு செய்தல்
- பதிவினை இரத்து செய்தல்
- நட்ட ஈடு வழங்கல்
- காப்புறுதி பூட்கைக்கு அனுமதி வழங்கல்
- CESS வரியை அறவிடல்
- முதலீட்டு பரப்பு எல்லைகளை தீர்மானித்தல்
இலங்கையில் உள்ள தனியார் காப்புறுதி கம்பனிகள்
- சிலின்கோ காப்புறுதி கம்பனி
- ஈகிள் காப்புறுதி கம்பனி
- ஜனசக்தி காப்புறுதி கம்பனி லிமிடெட்
- யூனியன் அஸ்யூரன்ஸ் காப்புறுதி கம்பனி
- வரையறுத்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்
01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50


- நிறுவனமொன்றில் செல்வாக்கு செலுத்துகின்றதும் நிறுவனத்தினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான சூழல் ஆகும்
- அகச்சூழல் காரணிகள்:
- உரிமையாளர்
- முகாமையாளர்
- ஊழியர்கள்
- நிறுவன கலாச்சாரம்
- நிறுவன ஒழுங்கமைப்பு
- நிறுவன வளம்
ஜனாதிபதியும் அமைச்சரவையும்































1978 அரசியலமைப்புச் சட்டத்தின் 30.2 உறுப்புரையில் குறிப்பிட்டுள்ளதன்படி இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி அரசின் நிறைவேற்றுத்துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவர் என்பதுடன் ஆயுதப்படைகளின் பிரதான கட்டளையிடும் அதிகாரயும் ஆவார்.
43.1 உறுப்புரையின் கீழ் குடியரசு நிர்வாகத்தை செயற்படுத்துவதற்காக நிர்வாகம் தொடர்பான ஆணையிடும் அதிகாரம் கொண்ட அமைச்சரவை ஒன்று இருக்கும். இவ் அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாகப் பொறுப்புக் கூறவும் பதிலளிக்கவும் கட்டுப்பட்டுள்ளது.
43.2 உறுப்புரையின் ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவராவதுடன் அதன் தலைவருமாவார். ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்புமேற்படி உறுப்புரையின் ஊடாக உருவாகின்றது.
- அமைச்சரவை தொடர்பாக ஜனாதிபதிக்குரிய கடமைக்கூறு. 43.3 உறுப்புரையில் காட்டப்பட்டுள்ள விதமாக பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதன் மூலம் ஆரம்பமாகிறது. ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பு இவ்வுறுப்புரை ஊடாக உருவாகிறது.
- பாராளுமன்றத்தில் அதிகமானோரில் நம்பிக்கை பெறுபவர் என ஜனாதிபதி கருதும் பிரதிநிதியை பிரதமர் பதவிக்கு நியமித்தல் வேண்டும்.
- அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிகையும் அமைச்சுகளின் எண்ணிக்கையும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் விடயங்களும் பொறுப்புகளும் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படுகின்றன.
- அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றப்பிரதிநிதிகளில் இருந்து அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். இதற்காக தேவையெனின் பிரதம அமைச்சரின் அபிப்பிராயத்தைப் பெறலாம்.
- அமைச்சரவையை நியமிக்கும் போது தன்னிடம் வைத்திருக்க வேண்டும் எனக் கருதும் எந்தவொரு அமைச்சையும் அதேபோன்று அமைச்சர்களுக்கு வழங்கப்படாத எந்தவொரு விடயத்தை அல்லது கருமத்தை தனக்குக் கீழ் வைத்திருக்கவும் ஜனாதிபதிக்கு முடியும்.
- இதன்படி ஜனாதிபதிக்குக் கீழ் வைத்திருக்கக்கூடிய அமைச்சுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பில் வரையறைகள் இல்லை என்பதோடு அது ஜனாதிபதியின் விருப்பப்படி தீர்மானிக்கப்படும்.
- ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் அமைச்சரவைக் கூட்டல் தலைமை வகித்தல் அமைச்சரவைக் கூட்டங்களின் நிகழ்ச்சிகள் நிரலைத் தயாரித்தல் என்பன அவரால் மேற்கொள்ளப்படும்.
- ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராக இருந்தபோதிலும் அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாக பொறுப்பு கூறவேண்டிய போதிலும் ஜனாதிபதி அத்தேவையில் இருந்து நீங்கியவராவார்.
- அமைச்சரவையின் கட்டமைப்பைத் தீர்மானித்தல் அமைச்சர்களை நியமித்தல் அவர்களுக்கு விடயங்களைப் பொறுப்பளித்தல் அரசாங்கத்தின் கொள்களைத் தீர்மானித்தல் ஆகிய அனைத்தும் தொடர்பாக ஜனாதிபதி ஒப்பாரும் மிக்காருமற்ற அதிகாரத்தை அனுபவிக்கின்றார்.
ஜனாதிபதியும் சட்டவாக்கத்துறையும்
- 42வது உறுப்புரையானது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவும் மக்கள் பாதுகாப்புத் தொடர்பாக நடைமுறையில் அமுலில் இருக்கும் சட்டங்கள் உள்ளடங்கலாக வேறு யாதாயினும் சட்டங்களின் கீழும் தனது அதிகாரம் பொறுப்பு கருமங்கள் என்பவற்றை உரியமுறையில் நிறைவேற்றல் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறுவார்.
- 65.1 உறுப்புரையானது 41ம் உறுப்புரைக்கமைய செயலாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்படும் நபர் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டியதுடன் அரசியலமைப்புச் சபை அதனை அங்கீகரித்தல் மாத்திரமே ஜனாதிபதி அந்நபரை நியமனஞ் செய்ய முடியும்.
- 65.1 உறுப்புரையானது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமத்தை அவரது பதவிக் காலத்திற்கு முன்னர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் உண்டு. எனினும் இவ்வதிகாரத்தைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே பிரயோகித்தல் வேண்டும்.
அ.65.5.(இ) உறுப்புரைக்கேற்ப செயலாளர் நாயகம் நோய்வாய்ப்படும்போது அல்லது உடல் உளவியல் ரீதியாக பலவீனமடையும் போதும்
அ.65.5.(ஈ) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றம் செயலாளர் நாயகத்துக்கு எதிராக நிறைவேற்றும் பிரேரணை ஒன்றின் மூலம்
- 65.6 உறுப்புரையானது செயலாளர் நாயகம் தமது பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள இயலாது போகுமிடத்து செயலாளர் நாயகத்துக்கு பதில் கடமையாற்ற 41.இ உறுப்புரைக்கு அமைய நபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
- 70 உறுப்புரையானது சட்டவாக்கத்துறையினரை கூட்டுதல் பிற்போடுதல் கலைத்தல் என்பன ஜனாதிபதியால் ஆற்றப்பட வேண்டும்.
அ.பிற்போடுதல். 70.2 உறுப்புரைக்கமைய ஜனாதிபதியால் பாராளுமன்றத்தின் கூட்டத்தைப் பிற்போடுவதற்கான பிரகடனத்தில் அதனை மீண்டும் கூட்டும் திகதியும் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அத்திகதி பிரகடனம் வெளியிடப்பட்ட திகதியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படலாகாது.
ஆ. கலைத்தல். 70வது உறுப்புரையில் ஏ பீ சி டி ஆகிய துணை உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தல் வேண்டும்.
- 70.ஏ உறுப்புரை பொதுத்தேர்தல் ஒன்றின் பின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றமொன்றினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடப்பட்டாலொழிய தெரிவுசெய்யப்பட்ட தினத்தில் இருந்து ஒரு வருடம் செல்லும்வரை பாராளுமன்றத்தைக் கலைத்தலாகாது.
- 70.பீ உறுப்புரை பொதுத்தேர்தல் ஒன்றின் பின் பாராளுமன்றம் கூடும் முதல் அமர்வின்ன போது முன்வைக்கப்படும் அரசாங்கக் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டாலும் கூட ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத’தல் கூடாது.
- 70.சி உறுப்புரை ஜனாதிபதிக்கெதிராக குற்றப்பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும். அது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வேளை பாராளுமன்றத்தைக் கலைத்தல் கூடாது.
- 70.டி உறுப்புரை வருடாந்த வரவுசெலவு அறிக்கை பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்படும் இரண்டாம் முறையும் அது நிராகரிக்கப்பட்டால் 70வது உறுப்புரையைக் கவனியாது பாராளுமன்றத்தைக் கலைக்கலாம்.
- 33.அ உறுப்புரை அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தைப் பாராளுமன்றத்தினால் சமர்பித்தல்.
- 33.ஆ உறுப்புரை பாராளுமன்ற முதல் அமர்வுகளுக்கு தலைமை தாங்குதல். இந்த ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக பாராளுமன்றம் ஜனாதிபதியுடனான தொடர்புகளை அமைச்சரவை ஊடாகச் செய்யலாம். அமைச்சரவை ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தையும் இணைக்கும் பிணைப்பு ஆகும்.
ஜனாதிபதியும் நீதித்துறையும்
1978 இன் 2ம் இலக்க நீதிமன்ற ஏற்பாட்டுச் சட்டத்தின் மூலம் கீழ்வரும் நீதிமன்றமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்றம்
- மேன்முறையீட்டு நீதிமன்றம்
- மேல் நீதிமன்றம்
- மாவட்ட நீதிமன்றம்
- நீதிவான் நீதிமன்றம்
- ஆரம்ப நீதிமன்றம்
- இவற்றில் முதல் மூன்று நீதிமன்றங்களும் உயர்நிலை நீதிமன்றங்கள் எனவும் ஏனையவை கீழ்நிலை நீதிமன்றங்க்ள எனவும் அழைக்கப்படும்.
- உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
- 107(1) பிரதம நீதி அரசரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் உச்ச நீதிமன்றத்தினதும் மேன்முறையிட்டு நீதிமன்றத்தினதும் அனைத்து நீதிபதிகளும் 41(இ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியால் தனது சுய கையொப்பத்தைக் கொண்ட ஆவணமொன்றின் மூலம் நியமிக்கப்படுவார்.
- 41(இ) உறுப்புரை மூலம் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்கு செய்யப்படும் சிபாரிசின் பேரில் அச்சிபாரிசை ஆராய்ந்து அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியதன் பின்னர் நீதித்துறைக்கான பின்வரும் நியமனங்களை ஜனாதிபதி மேற்கொள்ளலாம்.
1. பிரதம நீதியரசர் உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகள்
2. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஏனைய நீதிபதிகளும்
3. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள்
4. சட்டமா அதிபர்
- 107.4 உறுப்புரை பிரதம நீதியரசர் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஏனைய நீதிபதிகளும் ஜனாதிபதி முன்னிலையில் செய்யும் சத்தியப் பிரமாணத்தின் மூலம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றல் வேண்டும்.
- 109.1 உறுப்புரை உயர் நீதிமன்றத்தின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத அங்கத்தவர்கள் உட்பட ½ பங்கினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் பேரில் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
- 109.1 உறுப்புரை உயர் நீதிமன்றத்திலோ மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ தற்காலிகமாக ஏற்படும் வெற்றிடங்களுக்காக 42(இ) உறுப்புரையில் உள்ளபடி பதில் கடமை ஆற்றும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
- 110.1 உறுப்புரை உயர் நீதிமன்றத்தின் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவருக்கு மற்றுமொரு எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் பிறிதொரு கருமமொன்றைச் செய்யுமாறு விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
- 110.3 உறுப்புரை உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ நிரந்தர சேவையில் இருக்கும் நீதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் ஜனாதிபதியின் எழுத்து மூலமான விருப்பம் இன்றி நீதித்துறை நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகாது.
- 111.2 (அ) உறுப்புரை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல் வேண்டும்.
- 112(ஆ) உறுப்புரை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி பதவியில் இருந்து நிறுத்தி வைக்க முடியும். மேலும் அவர்கள் ஜனாதிபதியின் விடயக் கட்டுப்பாட்டுக்கு உட்படுவர்.
- 34.1 உறுப்புரை குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
- 129.1 உறுப்புரை ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம்
ஜனாதிபதியும் அரச சேவையும்
- அரசியலமைப்புச் சட்டத்தின் 30.1 உறுப்புரையக்கு அமைய ஜனாதிபதி நிறைவேற்றுத்துறையின் தலைவராவார். இதன் பிரகாரம் முழுமையான அரச சேவையையும் கட்டுப்படுத்தி தனி அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
- ஜனாதிபதி சுயவிருப்பப்படி அரச சேவையில் செய்யக்கூடிய நியமனங்கள் உயர் அரச உத்தியோகத்தர்கள் இவ்வகையில் அடங்குவர்.
- அரசியலமைப்புச் சட்டத்துடன் இணைந்து செய்யவேண்டிய நியமனங்கள் . இது இருவகை இயல்புகளைக் கொண்டது
- அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் செய்யப்பட வேண்டிய நியமனங்கள். இதில் பின்வரும் நியமனங்கள் அடங்கும்
1. தேர்தல் ஆணைக்குழு
2. அரச சேவை ஆணைக்குழு
3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு
4. லஞ்சம் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு
- அரசியலமைப்புச் சபையின் அனுமதியின் கீழ் ஜனாதிபதியால் வழங்கப்படும் நியமனங்கள். இதில் பின்வரும் நியமனங்கள் அடங்கும்.
1. சட்டமா அதிபர்
2. கணக்காய்வாளர் நாயகம்
3. பொலிஸ்மா அதிபர்
4. ஒம்பூட்மன்
5. பாராளுமன்றச் செயலாளர் நாயகம்
ஜனாதிபதியும் அரச சேவை ஆணைக்குழுவும்
அரச சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஒன்பது பேரும் அவர்களில் ஒருவர் தலைவராகவும் அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் சனாதிபதியினால் நியமிக்கப்படுவர்.
அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு. மேலும் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்கு லீவு அனுமதிக்கவும் அக்காலப்பகுதிக்காக மற்றுமொருவரை நியமிக்கும் அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு.
அரசியலமைப்புச் சட்டத்தின் 55.3 உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விதமாக அனைத்துத் திணைக்களத் தலைவர்களையும் நியமித்தல், பதவி உயர்த்துதல், இடமாற்றம் செய்தல், ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலை நீக்கம் செய்தல் ஆகியன அமைச்சரவைக்கு உரியவைகளாகும். ஆணைக்குழுவின் கருத்துக்களைப் பெற்று இந்த அதிகாரங்களை அமைச்சரவை செயற்படுத்துதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரு சரத்துக்களிலும் சனாதிபதி பதவியை ஒப்புநோக்குகையில் சனாதிபதி அமைச்சரவையின் உறுப்பினரும் அதன் தலைவரும் ஆவார் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது. சனாதிபதி, திணைக்களத் தலைவர்களை தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் நியமனம் செய்வதற்கான அதிகாரம் நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. ஏனைய விடயங்கள் எதுவும் சனாதிபதி அறியாமலோ சனாதிபதியின் அனுமதியின்றியோ நடைபெறுவதில்லை. அரச சேவையை நிர்வகிப்பதில் சனாதிபதி ஒப்புவமையற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. அரசியலமைப்புச் சபை செயலிழந்து காணப்படும் காலப்பகுதிகளில் அரச சேவையின் அநேக நியமனங்கள் சனாதிபதியினால் வழங்கப்படுகின்றன என்பதனை உதாரணங்களாகக் காட்டலாம்.
சோல்பரி அரசியல் யாப்பின் முக்கிய அம்சங்கள் 















1. மகாதேசாதிபதி
2. பாராளுமன்றம்
3. மந்திரிசபை
4. அரசாங்கச் சேவை, நீதிச்சேவை
5. சிறுபான்மையோர் காப்பீடுகள்
ஆரம்பம் 

























மனித வரலாறும் எங்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களினால் உலகில் ஆங்காங்கே, காலத்திற்குக் காலம், யுத்தங்கள் ஏற்பட்டன. மேலும் அவற்றைத் தவிர்க்க மனிதன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டான். இதனை நோக்காகக் கொண்ட பல்வேறு நிறுவனங்களும் நிறுவப்பட்டன. 1914 – 1918 காலப்பகுதியினுள் நடைபெற்ற முதலாம் உலக மகா யுத்தத்தின் விளைவாக அவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்படுவதன் தேவை வலுவாக ஏற்பட்டது. இதன் பயனாக 1920 இல் 27 அங்கத்தவர்களைக் கொண்ட சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படை நோக்கம் உலக சமாதானத்தை ஏற்படுத்துவதாக இருந்தபோதிலும் 1939 – 1945 ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இதன்போது அளவிட முடியாத பௌதிக, மானிட வளங்கள் அழிந்து போயின. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை உருவாகியது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதியிலிருந்து யூன் 26 ஆம் திகதி வரை சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பிரகடனம் தயாரிக்கப்பட்டது. பிரகடனத்தின் முன்னுரையில் ஐக்கிய நாடுகளின் அமைப்பை நிறுவுவதன் நோக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
- மூன்றாம் உலக யுத்தத்தை தடுத்தல்.
- அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மனித நேயத்தை கௌரவிக்கும், சமுதாயமுறையொன்றை உருவாக்குவதாகும்.
- ஒப்பந்தங்களுக்கும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கும் ஆவணங்களுக்கும் ஏற்ப செயற்பட வழிவகுக்கும் நிபந்தனைகளை உள்ளடக்குதல். மேற்படி நிபந்தனைகளை நிறைவேற்றி வாழ்க்கை நிலையை மேம்படுத்தி அதிக சுதந்திரமுள்ள சூழலில் செயற்படுவதற்குள்ள ஆற்றலை வலியுறுத்தல்.
- அவரவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து சமாதானமாக வாழச் செயற்படுத்தல்.
- சர்வதேச சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, எல்லா சக்திகளையும் அதிகாரங்களையும் ஒன்றிணைத்தல். பொதுநன்மை கருதியல்லாது வேறு காரணங்களுக்காக ஆயுதப் பலத்தை பயன்படுத்தும் கொள்கையை நிராகரித்தல்.
- எல்லா இனங்களினதும் பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக சர்வதேச மட்டத்திலான ஏற்பாடுகளைச் செய்தல்.
- இதன்படி ஐக்கிய நாடுகள் சபையை நிறுவுவதன் அடிப்படை நோக்கம் சர்வதேச சமாதானத்தைப் பேணலாகும். உருவாக்கிய சில வருடங்களில் பொருளாதார, சமூக துறைகளின் வளர்ச்சி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.