கழிவகற்றல்
அனுசேபத்தின் போது உருவாக்கப்பட்ட கழிவு விளைவுகளை உடலில் இருந்து அகற்றுதல் கழிவகற்றல் எனப்படும்.
கழிவகற்றலின் அவசியம்
- கழிவுகள் உடலில் தேக்கமடையுமாயின் கலங்களிற்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்.
- கழிவுகளின் தேக்கம் உடற் பாய்பொருட்களின் PH இல் மாற்றங்களை ஏற்படுத்தும்.
- உடலின் அகச் சூழலின் ஓர் சீர்திடநிலையைப் பேணல்.
கழித்தல் அங்கங்கள்
அனுசேபத்தின் போது உருவாக்கப்பட்ட உபயோகமற்ற கழிவு விளைவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் கட்டமைப்பு கழித்தல் அங்கம் எனப்படும்.
உடல் மேற்பரப்பு
- அங்கிகளது கலங்கள் சுற்றாடலுடன் நேரடியாகத் தொடர்புறும்
- ஒப்பீட்டு ரீதியில் எளிய கட்டமைப்பு
- உடல் மேற்பரப்பிலிருந்து கழிவுப் பதார்த்தங்கள் பரவல் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டு விடும்.
சுருங்கத்தக்க புன்வெற்றிடம்
- நன்னீரில் வாழும் தனிக்கல அங்கிகள் சிலவற்றில் சுருங்கத்தக்க புன்வெற்றிடம் எனும் புன்னங்கம் காணப்படும்.
- இது குழியவுருவில் காணப்படுகின்ற மென்சவ்வினால் சூழப்பட்ட பை போன்ற அமைப்பு
சுவாலைக் கலங்கள்
- தனிக்கலத்தாலான கழித்தல் கட்டமைப்பு ஆகும்.
கழிநீரகம்
- பல்கலத்தாலான கழித்தல் கட்டமைப்பு ஆகும்.
- உடலின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் திறந்த குழாயுருவான கட்டமைப்பு
- குருதிக் கலன் தொகுதியுடன் தொடர்புடையது.
மல்பீஜியன் சிறுகுழாய்கள்
- பூச்சிகளில் காணப்படும் கழித்தல் கட்டமைப்பு ஆகும்.
- இவை பூச்சிகளில் நடுக்குடலும் பின்குடலும் சந்திக்கும் பகுதியில் சிறுகட்டுக்களாகக் காணப்படும் ஒரு முனை மூடிய சிறுகுழாய்கள் போன்ற அமைப்பாகும்.
பசும் சுரப்பிகள்
- Crustacea களில் காணப்படும் கழித்தல் கட்டமைப்பு ஆகும்.
- இரண்டு பெரிய பசும் சுரப்பிகள் தலையின் வயிற்றுப் புறமாகவும் களத்துக்கு முற்புறமாகவும் காணப்படும்.
உப்புச் சுரப்பிகள்
- இது கடல்வாழ் பறவைகளிலும், Reptilia களிலும் கண்களுக்கு அண்மையில் காணப்படும் சோடியான சுரப்பிகள் ஆகும்.
- இவை கடல் நீர் வழியாக அதிகளவு உப்பை உள்ளெடுக்கின்றன.
- இவ் உப்புச் சுரப்பிகளால் குருதியிலிருந்து மேலதிக உப்புகள் கழிக்கப்படுகின்றன.
வியர்வைச் சுரப்பிகள்
- மனித உட்தோலில் காணப்படும் சுருளடைந்த குழாயுருவான சுரப்பி
- இது வியர்வைக் கானிற்கு இணைக்கப்பட்டு தோலின் மேற்பரப்பிலுள்ள துவாரத்தினூடு வெளித்திறக்கும்.
| கழித்தல் அங்கங்கள் |
உதாரணம் |
| உடல் மேற்பரப்பு |
Porifera கள், Amoeba போன்ற Protozoa கள், Hydra போன்ற Cnidaria கள் |
| சுருங்கத்தக்க புன்வெற்றிடம் |
நன்னீரில் வாழும் Amoeba, Paramecium |
| சுவாலைக் கலங்கள் |
Platyhelminthes |
| கழிநீரகம் |
மண்புழு போன்ற Annelida கள் |
| மல்பீசியன் சிறுகுழாய் |
பூச்சிகள், தரைக்குரிய Arthropoda கள் |
| பசும் சுரப்பிகள் |
Crustacea கள் |
| உப்புச் சுரப்பி |
கடல் பறவைகள், கடலில் வாழும் Reptilia கள் |
| சிறுநீரகம் |
முள்ளந்தண்டுள்ள விலங்குகள் |
| வியர்வைச் சுரப்பி |
மனிதனின் தோலில் காணப்படுகிறது |
- மனிதனில் காணப்படும் கழித்தல் அங்கங்களும் கழிவுகளும்
- சிறுநீரகங்கள் – யூரியா,யூரிக்கமிலம், Creatinine, கனியுப்புகள், பித்த நிறப்பொருட்கள்
- குடல் – பித்த நிறப்பொருட்கள்
- நுரையீரல் – CO2
- தோல் – யூரியா, யூரிக்கமிலம், கனியுப்புகள்












வெளிவாரி விளைவுகள்
- வெளிவாரி விளைவுகள் என்பது ஏதாவதொரு பொருளாதார நடவடிக்கை காரணமாக அதனுடன் தொடர்பற்ற வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை அல்லது தீமையாகும்.
- வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மையான நிலைமை நேர்க்கணிய வெளிவாரி விளைவுகளாகவும் தீமையான நிலைமை எதிர்க்கணிய வெளிவாரி விளைவாகவும் கருதப்படும்.
உற்பத்தியில் வெளிவாரி
உற்பத்தி நடவடிக்கை காரணமாக வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை அல்லது தீமை உற்பத்தியில் வெளிவாரி விளைவுகளாகும்.
உற்பத்தியில் நேர்க்கணிய வெளிவாரி விளைவு:
- புதிய தொழில்நுட்பம் காரணமாக செய்யப்பட்ட ஆய்வுகள்
- அழகான பூந்தோட்டம்
- தேனீ வளர்ப்பு
உற்பத்தியில் எதிர்க்கணிய வெளிவாரி விளைவு:
- எரிபொருள் தகனத்துடன் தொடர்பான உற்பத்திச்
செயற்பாடுகள்
- ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் உற்பத்திச்
செயற்பாடுகள்
நுகர்வில் வெளிவாரி
நுகர்வு நடவடிக்கை காரணமாக வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை அல்லது தீமை நுகர்வில் வெளிவாரி விளைவுகளாகும்.
நுகர்வில் நேர்க்கணிய வெளிவாரி விளைவு:
- புண்ணியக் கொடைகள்
- நோய்களைத் தடுக்கும் ஊசி மருந்துகள்
- கல்வி சார்ந்த ரூபவாஹினி நிகழ்ச்சிகள்
நுகர்வில் எதிர்க்கணிய வெளிவாரி விளைவு:
- கழிவுப்பொருட்கள் குவிக்கப்படுதல்.
- மோட்டார் வாகனங்களால் புகை வெளியேற்றப்படல்.
வெளிவாரிச் செலவு – வெளிவாரி நலன்
எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகள் காரணமாக வெளிவாரிச்
செலவுகளும் நேர்க்கணிய வெளிவாரி விளைவுகள் காரணமாக
வெளிவாரி நலன்களும் ஏற்படும்.
சமூக செலவு-சமூக நலன்
- வெளிவாரிச் செலவு மற்றும் வெளிவாரி நலன்களை
அடிப்படையாகக் கொண்டு சமூக செலவுகளும், சமூக நலன்களும்
ஏற்படும்.
தனியார் செலவு = வெளிவாரிச் செலவு + சமூக செலவு
தனியார் நலன் = வெளிவாரி நலன் + சமூக நலன்
- சந்தை முறைமையின் கீழ் தனியார் செலவுகளும் தனியார்
நலன்களும் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.
- வெளிவாரி விளைவுகளைக் கணக்கிலெடுக்காமை காரணமாக
சந்தை முறைமையின் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பான
தீர்மானங்கள் உத்தமமாக அமையாது.
இதனை பின்வரும் வரிப்படத்தின் அடிப்படையில் விளக்க முடியும்.
![screenshot-3]()
- தரப்பட்ட வரிப்படத்தில்:
- MSC- எல்லை சமூக செலவு
MSB- எல்லை சமூக நலன்
MPB- எல்லை தனியார் நலன்
- மேலுள்ள வரிப்படத்தின் படி சந்தையின் உத்தம சமநிலையாவது எல்லைச் சமூக செலவு (MSC ) எல்லை தனியார் நலன் என்பன(MPB) சமப்படுகின்ற A புள்ளியாகும். சமநிலை Q0 உற்பத்தி உத்தம உற்பத்தியாகும்.
- சமூகத்தின் பார்வையில் உத்தம சமநிலையாவது எல்லைச் சமூக செலவு (MSC), எல்லைச் சமூக நலன் (MSB) க்குச் சமப்படும் B புள்ளியாகும். Q1 சமநிலை உற்பத்தி உத்தம உற்பத்தியாகும்.
நுகர்வின் நேர்க்கணிய வெளிவாரிகள் காணப்படும் போது
சமூகத்தின் பார்வையில் உத்தம நுகர்வு சந்தையின் உத்தம
நுகர்வை விட உயர்வாக இருக்கும் என்பது,
![screenshot-5]()
- இவ் வரிப்படத்தில்:
- MSC = எல்லைச் சமூக செலவு
MSB = எல்லைச் சமூக நலன்
MPB = எல்லை தனியார் நலன்
- இவ் வரிப்படத்தின் படி சந்தையின் உத்தம உற்பத்தியாவது
எல்லை செலவு (MC) எல்லை சமூக நலன் என்பன (MSB)
சமப்படுகின்ற A புள்ளியாகும். Q0 சமநிலை உற்பத்தி உத்தம
உற்பத்தியாகும்.
- சமூகத்தின் பார்வையில் உத்தம உற்பத்தியாவது எல்லைச்
சமூக செலவு (MSC), எல்லைச் சமூக நலன் (MSB) க்குச்
சமப்படும் B புள்ளியாகும். அதேவேளை Q1 சமநிலை உற்பத்தி உத்தம உற்பத்தியாகும்.
- அதன்படி உற்பத்தி நேர்க்கணிய விளைவு காணப்படும்போது சந்தையின் உத்தம உற்பத்தியை விட சமூகத்தின் பார்வையின்படி உத்தம உற்பத்தி உயர்வாகும்.
- இதன்படி சந்தை முறைமையின் தோல்விக்கு வெளிவாரிகள்
காரணமாகும் என்பது தெளிவாகின்றது.
வெளிவாரி விளைவுகளால் ஏற்படும் தோல்விகளைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
- நட்டஈடு வழங்கல்.
- உள்வாங்கச் செய்தல்.
- பங்கீட்டு நடவடிக்கைகள்.
- உரிமைப்பத்திரக் கட்டணம் அறவிடல்.
- தண்டம் விதித்தல்.
- சட்டங்களை விதித்தல்.
வெளிவாரி விளைவுகளைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்கள் தாமாகவே மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
- பாதிப்புக்களை ஈடுசெய்ய இலாபத்தில் ஒரு பகுதியை
ஒதுக்குதல்.
- ஒலி மாசடைவதைத் தவிர்ப்பதற்கு தொழிற்சாலையினுள் நவீன
உபகரணங்களைப் பொருத்துதல்.
ஒழுங்கமைத்தல்








வணிகமொன்றின் இலக்கினையும் குறிக்கோளினையும் வினைத்திறனுடனும்,செயற்திறன் மிக்க வகையிலும் அடையும் பொருட்டு அவ்வணிகத்தின் மனித,பௌதீக,நிதி, தகவல் வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைப்பகிர்வு,திணைக்களப்படுத்தல்,ஒழுங்கமைப்பினை ஏற்படுத்தல்,தொடர்புபடுத்தல் பணிகள் என்பவற்றிற்கிடையிலான தொடர்பு ஆகும்.
ஒழுங்கமைத்தலின் பிரதான பணிகள்
- வேலைப்பகிர்வு
- திணைக்களப்படுத்தல்
- ஒழுங்கமைப்பினை ஏற்படுத்தல்
- தொடர்புபடுத்தல்
திணைக்களப்படுத்தக் கூடிய அடிப்படைகள்
- தொழிற்பாட்டு அடிப்படை
- உற்பத்திப்பொருள் அடிப்படை
- வாடிக்கையாளர் அடிப்படை
- பூகோள அடிப்படை
- கலவை அடிப்படை
சிறந்த ஒழுங்கமைப்பு ஒன்றிற்காக கவனம் செலுத்த வேண்டிய எண்ணக்கருக்கள்
- மையப்படுத்தல் அல்லது பன்முகப்படுத்தல்
- திணைக்களப்படுத்தல்
- கட்டளைச் சங்கிலி
- கட்டுப்பாட்டுத் தூரம்
- சிறப்புத்தேர்ச்சி
- சட்டதிட்டங்களும் செயற்பாட்டு விதிமுறைகளும்
- ஒருங்கமைவு
- பதவிகள்




















- மனிதன் தனது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்ற சமமான வாய்ப்பே சமத்துவம் எனப்படும்.
- மக்கள் அனைவரையும் ஒன்றாகக் கருதமுடியாது. ஆனால் ஒருவருக்கு இல்லாத சலுகைகள் மற்றவர்களுக்கு வழங்கப்படக்கூடாது என்பதே இதன் மூலம் கருதப்படுகின்றது.
சமத்துவம் நிலவுவதற்கு இருக்க வேண்டிய பிரதானப் பண்புகள்:
- தனிநபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமை
- சகலருக்கும் சமமான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல்
- சகலருக்கும் சமமான உரிமைகள் உரித்தாகுதல்
- சமத்துவத்தை வளர்ப்பதற்கு அரச தலையீடு அவசியமாக இருத்தல்
- சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு சமத்துவம் அத்தியாவசியமாக இருத்தல்
சமத்துவத்தின் வகைகள்:
- சமூக சமத்துவம்
- அரசியல் சமத்துவம்
- பொருளாதாரச் சமத்துவம்
- இயற்கைச் சமத்துவம்
- சட்டச் சமத்துவம்
சமத்துவத்தை மேலும் இரு வகைப்படுத்தலாம்:
- எதிர்மறையான சமத்துவம்
- நேர்மறையான சமத்துவம்
சமத்துவமானது,
- வர்க்க முரண்பாடுகள் தொடர்ந்திருக்கும் வரை சமத்துவம் நிலவ முடியாது.
- உள்ளோர் மட்டும் நடைமுறையில் சமத்துவத்தின் பயன்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
- சமத்துவம் எவருக்கும் சமூக சலுகைகள் இல்லை என்று ஏற்றுக் கொள்கிறது.
- சமத்துவத்தை வளர்ப்பதற்கு அரச தலையீடு அவசியம் ஆகும்.
- பூரணமான சமத்துவமும் பூரணமான சுதந்திரமும் ஒருங்கே இருக்க முடியாது.
சுதந்திரமும் சமத்துவமும்
- சுதந்திரமும் சமத்துவமும் ஒன்றை ஒன்று சார்ந்ததாகும்.
- சுதந்திரமும் சமத்துவமும் ஒன்றுக்கொன்று முரணான எண்ணக்கருக்களாகும்.
- பொருளாதார சமத்துவத்தை நடைமுறையில் தோற்றுவிக்கும் போது சுதந்திரத்தின் சில விடயங்கள் மட்டுப்படுத்தப்படும்.

























- சந்தையும் நிறுவனமும் சமனான கருத்தைக் கொண்ட எண்ணக்கரு.
- நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களும் சேவைகளும் பல்வேறு சந்தை நிலைமைகளின் கீழ் விநியோகிக்கப்படுகின்றது
- இச் சந்தை நிலைமைக்காக “சந்தை அமைப்பு” என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படும்.
- சந்தை அமைப்பின் வகைப்படுத்தலைப் பின்வரும் நிலைமைகள் பாதிக்கும்:
- சந்தையில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை.
- உற்பத்தி செய்யும் பொருட்களினதும் சேவைகளினதும் தன்மை.
- ஒரு நிறுவனத்திற்குச் சந்தையில் நுழையவும் சந்தையை விட்டு வெளியேறுவதற்குமுள்ள வாய்ப்பு.
- நிறுவனங்களுக்கிடையே காணப்படும் போட்டியின் தன்மை.
- இந் நிலைமைகளுக்கு ஏற்ப சந்தை அமைப்பைப் பின்வரும் 4 வகுதிகளாகக் காட்ட முடியும்.
- நிறைபோட்டி
- தனியுடைமை
- தனியுரிமைபோட்டி
- சிலருரிமை
உற்பத்தி














- மனிதத் தேவை விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக சந்தைக்கு வழங்கப்படும் அனைத்தும் உற்பத்தி
உற்பத்தி செயன்முறை
- இயற்கை வளங்களுக்கு பெறுமதி சேர்க்கும் செயற்பாடு
| உள்ளீடு |
உற்பத்தி செயன்முறை |
வெளியீடு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சந்தைக்கு வழங்கப்படும் உற்பத்திப் பொருட்கள்










- பொருள்
- தனிநபர்
- சேவை
- அமைப்பு
- எண்ணம்
- அனுபவம்
- நிகழ்வு
- தகவல்
- இடம்
- ஆதனம்
பொருள் – சேவை
| பொருள் |
சேவை |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
- உற்பத்தியாளரிடமிருந்து பிரிக்கலாம்
|
|
- வழங்கலும் நுகர்வும் வேறு வேறு நேரத்தில் இடம்பெறும்.
|
- ஒரே நேரத்தில் இடம் பெறும்
|
நுகர்வு பொருள்









- நுகர்வோனின் இறுதித் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்கள்.
கைத்தொழில் பொருள்
- மீள் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டு கொள்வனவு செய்யப்படும் பொருட்கள்
வசதிப் பண்டம்
- நுகர்வோரால் அடிக்கடி கொள்வனவு செய்யப்படும் பொருட்கள்
கடைப்பண்டம்
- ஒரே விதமான பண்டங்களின் விலை தன்மை தரத்தை ஒப்பிட்டு கொள்வனவு செய்தல்.
முறைமைகளின் வகைகள்


- மனிதனால் உருவாக்கப்பட்ட முறைமைகள்
- இயற்கை முறைமைகள்
- திறந்த முறைமைகள்
- மூடிய முறைமைகள்
- இணைந்த / தொகுதி முறைமைகள்
- இலகு முறைமைகள்
- தகவல் முறைமைகள்
தகவல் முறைமை



- நிறுவனமொன்றின் தீர்மானமெடுத்தல் மற்றும் நிர்வாகம் போன்றவற்றிற்கு அவசியமான தகவல்களைத் திரட்டுதல் , உருவாக்குதல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றுக்கான இடைத் தொடர்புடைய உபாயங்களின் சேர்க்கை தகவல் முறைமை ஆகும்.
தகவல் முறைமையின் கருமங்கள்
- உள்ளீடு ( INPUT)
- செயல்முறை ( PROCESSING)
- வெளியீடு (OUTPUT)
- களஞ்சியப்படுத்தல் ( STORING)
கணினி மயமாக்கப்பட்ட / இலத்திரனியல் தகவல் முறைமை
- மனித வலுவினால் செய்யப்பட்ட தகவல் முறைமைப் பணிகள் இலத்திரனியல் முறையில் மேற்கொள்ளப்படுவது கணினி மயமாக்கப்பட்ட / இலத்திரனியல் தகவல் முறைமை எனப்படும்.
இலத்திரனியல் தகவல் முறைமையின் கூறுகள்
- வன்பாகம் ( HARD WARE)
- மென்பாகம் (SOFT WARE)
- உயிரியல் பாகம்(LIVE WARE)
- தரவு (DATA)
- செயற்பாட்டு முறைமை (PROCEDURES)
இலத்திரனியல் தகவல் முறைமையினால் வணிகங்கள் பெறும் அனுகூலங்கள்
- வினைத்திறன் விருத்தி
- பயனுறுதித் தன்மை
- உற்பத்தித் திறன் விருத்தி
- தந்திரோபாய வளப் பயன்பாடு
- போட்டி நலன்கள்
- முகாமைத்திறன் விருத்தி
- சமூக பொருளாதார அபிவிருத்தி
அரசியல் விஞ்ஞானத்தை கற்பதற்கான அணுகுமுறைகள்
அரசியல் பாடநெறியினை ஆய்வு செய்வதற்காக அறிஞர்களால் பின்பற்றப்பட்ட பல்வேறு ஆய்வு நுட்பங்களே அணுகுமுறை எனப்படும்.
இவற்றை இரு முக்கிய பிரிவாகப் பிரிக்கலாம்.
- மரபுசார் அணுகுமுறை / பாரம்பரியமான அணுகுமுறை
- நவீன அணுகுமுறை
பாரம்பரியமான அணுகுமுறை
ஆரம்பகாலத்தில் அரசியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறைமைகள் பாரம்பரியமான அணுகுமுறைகள் எனப்படும்.
- வரலாற்று அணுகுமுறை
- மெய்யியல் அணுகுமுறை
- ஒப்பீட்டு அணுகுமுறை
- நிறுவன அணுகுமுறை
- சட்ட அணுகுமுறை
1.வரலாற்று அணுகுமுறை 

அரசு மற்றும் ஏனைய நிறுவனங்களின் வரலாற்று தோற்றத்தினை பரிசீலனை செய்து அவற்றின் தன்மையையும் செயற்பாட்டையும் விளங்கிக் கொள்வதற்கு பயன்படும் முறையாகும்.
இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்
- அரிஸ்டோட்டில்
- சோக்கிரட்டீஸ்
- பிளேட்டோ
- லஸ்கி
- சேபின்
- சீலி
இவ்வணுகுமுறையினால் கிடைக்கும் நன்மைகள்
- அரசியலைக் கற்பதற்கு வரலாறு ஒரு சிறந்த ஆய்வு கூடமாக இருத்தல்.
- அரசியல் தோற்றப்பாடுகளின் ஆரம்பம் வளர்ச்சி என்பவற்றை சரியாக விளங்கிக் கொள்வதற்கும் அவற்றின் எதிர்காலப் போக்குகளை புரிந்து கொள்வதற்கும் துணை புரிகின்றது.
- அரசியல் முறைமைகளின் படிமுறை வளர்ச்சியினைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகின்றது.
இவ்வணுகுமுறையின் குறைபாடுகள்
- வரலாற்று அணுகுமுறை அரசறிவியலின் வரலாற்றில் மட்டும் கவனம் செலுத்தி ஏனைய விடயங்களை தவிர்த்து விடுகிறது.
- வரலாற்று முறை தனிப்பட்டவர்களுக்கும், அரசியல் தற்செயல் நிகழ்ச்சிகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தினை வழங்கல்.
- அரசியல் வாழ்க்கையின் நன்மை தீமை, சரி பிழை மற்றும் அரசியல் நிறுவனங்களின் சாதக பாதக தன்மைகள் ஆகியன பற்றிய தகவல்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது.
- ஆய்வாளன் தனிப்பட்ட அரசியல் பிரிப்புக்கள், சமய நம்பிக்கைகள், இனச்சார்புகள், மற்றும் கருத்தியல் மனப்பாங்குகள் போன்ற காரணிகளின் தாக்கத்திற்கு உட்படலாம்.
- தற்கால நிலைகளையும்,எதிர்காலப் போக்குகளையும் விளங்கிக் கொள்வதற்கு துணைபுரிகின்ற சரியானதும், போதுமானதுமான தகவல்களை வரலாற்று முறையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாமை.
- எந்தவொரு வரலாறும் அக்காலகட்டத்தில் எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. அத்துடன் சில பிரதான தகவல்கள் தவறவிடப்பட்டிருக்கும் சந்தர்ப்பம் உருவாகும்.
- சரியான முறையில் கடந்தகால நிகழ்வுகள் தொகுக்கப்படவில்லையாயின் அதிலிருந்து முடிவுகளும் சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கும்.
2. மெய்யியல் அணுகுமுறை 



முன்வைக்கப்பட்ட கோட்பாட்டையும், தத்துவங்களையும் மையமாகக் கொண்டு அரசியலை ஆய்வு செய்யும் அணுகுமுறையே மெய்யியல் அணுகுமுறையாகும்.
அதாவது அரசு, அரசாங்கம் மற்றும் அரசாங்க நிறுவனம் எப்படி செயல்படுகிறது / இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளாமல் அவை எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அணுகுமுறையாக இது காணப்படுகின்றது.
இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்
இவ்வணுகுமுறையின் பண்புகள்
- நடைமுறை விடயங்களை இது கவனத்தில் கொள்வதில்லை. இதனால் இதனை கற்பனைவாத அணுகுமுறை என வரையறை செய்கின்றனர்.
- அரசியலுக்கான அணுகுமுறைகளில் மிகவும் பழமையானது.
- யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.
இவ்வணுகுமுறையின் நன்மைகள்
- ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய இலட்சியங்கள், அறநெறிகள், ஒழுக்கநெறிகள்,உயர்ந்த கோட்பாடுகளை ஆராய உதவுகிறது.
- அரசின் சரியான செயற்பாடுகளை இனங்காண உதவுகிறது.
இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்
- தமது முடிவுகளை நிரூபிக்க முடியாத இலட்சியங்களின் மீது நிறுவ முற்பட்டுள்ளது.
- பகுத்தறிவு இங்கு பயன்படுத்தப்படுவதில்லை.
- பிளேட்டோ – இலட்சிய அரசு
- ரூஸோ – சித்த அரசு
- தோமஸ் வோ – யுடோப்பிய அரசு
3. ஒப்பீட்டு அணுகுமுறை 

அரசாங்க நிறுவனத்தில் அவற்றின் கட்டமைப்பு, பணி என்பவற்றையும் ஒன்றோடொன்று ஒப்பீடு செய்வதன் மூலம் அரசியல் பற்றிய முடிவுகளை முன்வைக்கும் அணுகுமுறைகளே ஒப்பீட்டு அணுகுமுறை எனப்படும்.
இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்
- அரிஸ்டோட்டில்
- மொண்டஸ்கியூ
- பிறைஸ்
இவ்வணுகுமுறையிலுள்ள நன்மைகள்
- அரசியல் முறைமைகளிலும் நிறுவனங்களிலும் உள்ள குறைபாடுகளை கண்டறியலாம்.
- சிறப்பு மிகு அரசியல் முறைமையை ஒழுங்கமைப்பதற்கான கொள்கையை வகுக்கலாம்.
- இம்முறையினால் “ஒப்பீட்டு அரசியல்” என்கின்ற ஒரு கற்கைத்துறை வளர்ச்சியடைந்துள்ளது.
- அரசியல் சமுதாயத்தில் காணப்படுகின்ற சமூக பொருளாதார அரசியல் முரண்பாடுகளுக்கு தீர்வினை காண உதவுகிளது.
- ஒப்பீட்டின் மூலம் பெறப்படும் தகவல்கள் அதிகளவு உறுதித் தன்மை வாய்ந்ததாக காணப்படும்.
இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்
- ஒப்பீட்டுக்காகப் பெறப்படும் தரவுகள் தவறாக இருப்பின் முடிவுகளும் தவறாக வருவதற்கு வாய்ப்புண்டு.
- ஒரு நாட்டுக்கு தேவையான அரசியல் கொள்கைகள் என்பன அந்நாட்டின் அரசியல், சமூக,பொருளாதார சூழலுடன் தொடர்புபட்டவை. ஒப்பிட்டு பெறப்படும் கொள்கைகள் பயன்படுத்தப்படும் நாட்டுக்கு பொருந்தாததாக அமையலாம்.
4. நிறுவன அணுகுமுறை
அரசாங்க நிறுவனங்களான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் அரசியல் கட்சிகள் போன்ற நிறுவனக் கட்டமைப்புக்களை ஆய்வு செய்வதன் மூலம் அரசியல் தொடர்பான விளக்கங்களை முன்வைக்கும் அணுகுமுறையே நிறுவன அணுகுமுறை எனப்படும்.
இது தற்காலத்தில் அரசியல் ஆய்வுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை.
5. சட்ட அணுகுமுறை
அரசாங்கங்களிலே பயன்படுத்தப்படுகின்ற சட்டமுறைமைகளை அல்லது ஏற்பாடுகளை ஆய்வு செய்வதன் மூலம் அரசியல் தொடர்பான விளக்கங்களை முன்வைக்கும் அணுகுமுறை சட்ட அணுகுமுறை எனப்படும்.
அரசியல் யாப்புச் சட்டத்தை ஆய்வு செய்வதன் மூலம் அவற்றின் அடிப்படையிலே அரசாங்க முறையை வகைப்படுத்த இவ்வணுகுமுறை உதவுகிறது.
நவீன அணுகுமுறைகள்
விஞ்ஞான பூர்வமான அரசியலை ஆய்வு செய்கின்ற ஆய்வு முறைமைகளே நவீன அணுகுமுறைகள் எனப்படும்.
- முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை
- சமூகவியல் அணுகுமுறை
- நடத்தைவாத அணுகுமுறை
- புள்ளிவிபரவியல் அணுகுமுறை
- மார்க்ஸிச அணுகுமுறை
1. முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை 


இவ்வணுகுமுறை கட்டமைப்பு பணிப்பகுப்பாய்வு எனவும் அழைக்கப்படும்.
அரசாங்கத்தின் நிறுவன கட்டமைப்புக்களையும் அந்தக் கட்டமைப்பு மூலம் முன்னெடுக்கப்படும் பணிகளையும் மிக நுணுக்கமாக பரிசீலனை செய்வதன் மூலம் அரசியல் தொடர்பான நவீன விளக்கங்களை முன்வைக்கும் அணுகுமுறையே முறைமைப்பகுப்பாய்வு அணுகுமுறை எனப்படும்.
உயிரியல் விஞ்ஞானத்துறையில் பயன்படுத்தப்பட்ட இவ்வணுகுமுறை அரசியல் விஞ்ஞான ஆய்வுக்கும் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அமெரிக்க நாட்டின் அரசியல் விஞ்ஞானிகளான
- கப்ரியல் ஆல்மண்ட
- டேவிட் ஈஸ்ரன்
போன்ற அறிஞர்களால் இவ்வணுகுமுறை முன்வைக்கப்பட்டது.
- கப்ரியல் ஆல்மண்ட் – கட்டமைப்பு பணிப்பகுப்பாய்வு முறைமை
- டேவிட் ஈஸ்ரன் – உள்ளீட்டு வெளியீட்டு பணிப்பகுப்பாய்வு முறைமை என்பவற்றை முன்வைத்தனர்.
ஓர் அரசியல் முறைமையில் உள்ள எந்த அமைப்பு என்ன பணிகளை செய்கிறது என்பதை விளக்கும் ஓர் முறையே கட்டமைப்பு பணிப்பகுப்பாய்வு முறை எனப்படும்.
இவ்வணுகுமுறையினால் கிடைக்கும் நன்மைகள்
- அரசாங்கத்தின் நிறுவன கட்டமைப்புகளையும் அந்தக் கட்டமைப்பு மூலம் முன்னெடுக்கப்படும் பணியையும் மிக நுணுக்கமாக பரிசீலனை செய்வதன் மூலம் அரசியல் தொடர்பிலான நவீன விளக்கங்களை முன்வைக்கிறது.
- கட்டமைப்புக்கள், அவற்றுக்கான உள்ளீடுகள் சிறப்பாக அமையும் போது அவற்றின் மூலம் கிடைக்கின்ற வெளியீடுகள் சிறப்பாக அமையும்.
- அரசியல் ஒரு விஞ்ஞான பாடநெறியாக வளர்ச்சியடைய இவ்வணுகுமுறை உதவுகிறது.
இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்
- இவ்வணுகுமுறை சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாமல் பழமையை போற்றிப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக விளங்குகின்றது என பொதுவுடைமைவாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
- முதலாளித்துவ சமுதாய அமைப்பை காப்பாற்றும் பொருட்டு முதலாளித்துவ மனப்பாங்கு கொண்ட அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு என பொதுவுடைமைவாதிகள் எதிர்க்கின்றனர்.
- அரசியல் கட்டமைப்புக்களை மாத்திரம் நோக்குகின்ற முறையாகயிருப்பதனால் மனித அரசியல் நடத்தைகளது செல்வாக்கினை ஆராய்வதற்குப் பயன்படுத்த முடியாது.
2. சமூகவியல் அணுகுமுறை 


சமூகத்தினை மையமாகக் கொண்டு அரசியலை ஆய்வு செய்கின்ற ஒரு ஆய்வுமுறைமை ஆகும்.
சமூகத்திலுள்ள தனி மனிதர்களினதும் சமூக நிறுவனங்களினதும் அரசியல் செயற்பாடுகளை ஆய்வு செய்வதன் மூலம் அரசியலுக்கு விளக்கம் கொடுக்கின்ற அணுகுமுறை இதுவாகும்.
இந்த அணுகுமுறை இருதுறைகளை அடிப்படையாகக் கொண்டு தன் ஆய்வை மேற்கொள்கிறது.
- சமூகவியல்
- மானுடவியல்
சமூகவியல் அணுகுமுறையானது பின்வரும் ஆய்வு நுட்பங்களை பயன்படுத்துகிறது
- நேரடி அவதானிப்பு
- பங்குபற்றல் சோதனை
- நேர்முகம் காணல்
- வினாக்கொத்து
- விவகார ஆய்வு
கற்லின் எனும் அறிஞர் இவ்வணுகுமுறையை அரசியல் ஆய்வுக்காகப் பயன்படுத்தினர்.
சமூகவியல் அணுகுமுறையின் நன்மைகள்
- சமூகத்தின் அடிப்படையில் அரசறிவியலை விளங்கிக் கொள்வதற்கு இவ்வணுகுமுறை உதவுகின்றது.
மனிதன், சமூகம், சமூகக்குழுக்கள், சமூக நிறுவனங்கள் போன்றன இம்முறை மூலம் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுகின்றது.
- சமூகம் சார்ந்து நாட்டின் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்படுவதற்கு இவ்வணுகுமுறை உதவுகிறது.
சமூகவியல் அணுகுமுறையின் குறைபாடுகள்
- இவ்வணுகுமுறை சமூக அம்சங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் அரசறிவியலுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தவிர்க்கப்படுகின்றன.
- இவ்வணுகுமுறை சில சந்தர்ப்பங்களில் நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு சாதகமாக அமைந்து விடலாம். ஏனெனில் பெரும்பான்மை சமூகத்தின் நிறுவனங்களும் கருத்துக்களுமே அந்நாட்டில் மேலோங்கிய நிலையில் காணப்படும்.
- சில சமூக நிறுவனங்களும், குழுக்களும் தமது கொள்கைகளை மக்கள் மீது திணிக்க இவ்வணுகுமுறையை ஓர் ஊடகமாக பயன்படுத்த முற்படலாம்.
3.நடத்தைவாத அணுகுமுறை 





ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் சமுதாயத்தில் வாழுகின்ற பல்வேறு அரசியல் தரப்பினரதும் அரசியல் நடத்தையை கவனத்தில் கொண்டு அரசியலை ஆய்வு செய்கின்ற அணுகுமுறையே நடத்தைவாத அணுகுமுறை எனப்படும்.
இது இரண்டாம் உலகப் போரின் பின்னர் உயிரியலில் ஆரம்பமாகி சமூகவியலின் ஊடாக அரசறிவியலை வந்தடைந்த ஓர் அணுகுமுறையாகும்.
அரசியலில் ஈடுபடும் மனிதனினதும் மனிதக் குழுக்களினதும் அரசியல் நடத்தையினை விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்திக் கற்று அதனூடாக அரசியலை விளங்கிக் கொள்ளும் கற்கை நெறியாகும்.
இவ்வணுகுமுறையின் பிரதான கருப்பொருள் அரசியல் மனிதன் ஆவான்.
இவ்வணுகுமுறையை பயன்படுத்திய அறிஞர்கள்:
- டேவிட் ரோமன்
- டேவிட் ஈஸ்டன்
- டேவிட் அப்ரல்
- லாஸ்வெல்
நடத்தைவாத அணுகுமுறையின் பிரதான பண்புகள்
- உண்மையான நடத்தையை மட்டும் கவனத்தில் கொள்ளல்.
- தேவையற்ற மதிப்பீடுகளிலிருந்து விலகியிருத்தல்.
- கலாசார விடயத்தை கவனத்தில் கொள்ளாமை.
- விஞ்ஞான பூர்வமான துறையீடுசார் ஆய்வு முறைமை காணப்பட்டமை.
- அரசியல் மனிதனை பிரதான கருப்பொருளாகக் கொள்ளுதல்.
- பேரின விடயங்களன்றி சிற்றின விடயங்களே கற்கைத் தலைப்புக்களாகத் தெரிவு செய்யப்படுதல்.
இவ்வணுகுமுறையின் நன்மைகள்
- புதிய கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்கள் உருவாவதில் பங்காற்றியிருத்தல்.
- நடத்தைவாதத்தின் மூலம் பொதுமுறைப் பகுப்பாய்வு,அமைப்பு பணி அணுகுமுறை, உள்ளீட்டு – வெளியீட்டு அணுகுமுறை போன்ற புதிய அணுகுமுறைகள் அரசறிவியலில் வளர்ச்சியுறுவதில் பங்காற்றியுள்ளது.
- அரசறிவியலை விஞ்ஞான ரீதியாகவும் அனுபவம் சார்ந்த முறையிலும் கற்க முடியும் என்று வழிகாட்டியிருத்தல்.
- புதிய நுட்பமுறைகளை அறிமுகம் செய்ததன் மூலம் அரசறிவியலின் சகல துறைகளிலும் புதிய பரிமாணங்கள் செயற்பட்டிருத்தல்.
இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்
- நடத்தைவாதிகள் இயந்திர நோக்கில் மனிதனின் தனிப்பட்ட நலன்களையே கவனத்தில் எடுத்தல்.
- மனிதநடத்தையை பொதுமைப்படுத்த முடியும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மனித இயல்பானது நிதமும் மாற்றமுறும் பண்பினைக் கொண்டது.
- நடத்தைவாதிகள் நுட்பமுறைகளுக்கு அளவு கடந்த முக்கியத்துவத்தை வழங்கியிருத்தல்.
4. புள்ளி விபரவியல் அணுகுமுறை
அரசியலுடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களை கவனத்தில் கொண்டு அரசியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும் அணுகுமுறை புள்ளி விபரவியல் அணுகுமுறை எனப்படும்.
உதாரணம் :
- சனத்தொகை விபரம்
- வேலையற்றோர் விபரம்
- வாக்காளர் பற்றிய விபரம்
இவ்வணுகுமுறையை முன்வைத்தவர்கள்
- காலுப்
- சார்ள்ஸ் மெரியம்
- அண்டர்சன்
- டிவால்டோ
இவ்வணுகுமுறையினால் கிடைக்கும் நன்மைகள்
- அரசியல் பற்றிய எதிர்வு கூறலை முன்வைக்க இவ்வணுகுமுறை உதவுகிறது.
- அரசியற் செயற்பாடுகள் பற்றிய பொதுசன அபிப்பிராயத்தை பெறுவதற்கு சிறந்த அணுகுமுறையாக இது காணப்படுகிறது.
- ஜனநாயக ரீதியான விடயங்களை அளவு ரீதியாகக் கொடுப்பதற்கு இம்முறை உதவுகிறது.
- இம்முறை மூலம் அரசறிவியல் பற்றிய தெளிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்
- சரியான முறையில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படாவிட்டால் எடுக்கப்படும் முடிவுகளும் தவறாவதற்கு வாய்ப்புக்களுண்டு.
- அரசறிவியல் சம்பந்தப்பட்ட சகல விடயங்களுக்கும் புள்ளி விபர ரீதியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாது.
5. மார்க்ஸிச அணுகுமுறை
அரசு வர்க்க முரண்பாடுகளின் விளைவு என்பதை விளக்குகின்ற அணுகுமுறை மார்க்ஸிச அணுகுமுறையாகும்.
இயங்கியல் சமுதாயத்தின் அடிப்படையில் வர்க்கங்களின் நலனை பேணிவரும் அரசு, சமுதாயத்தின் இறுதிக்கட்டத்தில் வர்க்க பேதமற்ற சமதாயமொன்று எழுச்சி பெறும் பொழுது அரசும் அழிந்து விடும் என்பதை இவ்வணுகுமுறை விளக்குகின்றது.
கார்ல்மார்க்ஸ், ஏங்கல் போன்றவர்கள் இவ்வணுகுமுறையை அதிகம் கையாண்டுள்ளனர்.
இவ்வணுகுமுறையினால் கிடைக்கப்பெறும் நன்மைகள்
- சமூக முரண்பாடுகள் எவ்வாறு தனிமனத அரசியல் நடத்தையை நிர்ணயிக்கிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.
- பொருளாதாரத்தின் அடிப்படையில் அரசறிவியலை ஆய்வு செய்வதற்கு இவ்வணுகுமுறை உதவுகின்றது.
- அடித்தள மக்களின் யதார்த்த நிலையை வெளிக்கொணர்வதற்கு இவ்வணுகுமுறை உதவுகின்றது.
- இயங்கியல் முறைமையின் படி வரலாற்றின் வளர்ச்சிக்கட்டத்தில் அரசற்ற சமூகம் உருவாகும் எனும் புதிய கருத்தையும் இவ்வணுகுமுறை வெளிப்படுத்துகிறது.
இவ்வணுகுமுறையிலுள்ள குறைபாடுகள்
- சமூக அபிவிருத்தியினது மாற்றத்தின் இறுதிக் கட்டமாக அரசற்ற சமூகமொன்று உருவாகும் என இவ்வணுகுமுறை குறிப்பிடுகின்றது. இது நடைமுறைக்கு பொருந்துமென கூற முடியாது.
- அரசியற் செயற்பாடுகளுக்கு அடிப்படையாக பொருளாதார காரணிகளை மட்டும் குறிப்பிடுகிறது. ஏனைய காரணிகளை தவிர்த்து விடுகிறது.








அரச கடன்
- வட்டியுடன் மீண்டும் திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின்
அடிப்படையில் அரசாங்கம் பெறுகின்ற பணம் அரச கடன் என அழைக்கப்படும்.
- உள்நாட்டைப் போலவே வெளிநாட்டு மூலங்களிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறுகின்றது.
- அம் மூலாதாரங்களை வரிப்படம் ஒன்றின் மூலம் முன்வைக்கலாம்:
![screenshot-8]()
- பணச் சந்தையிலிருந்தும் மூலதனச் சந்தையிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் கடன் சந்தைக் கடனாகும்.
விரிவாக்க விளைவு கொண்ட கடன்
- வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை நிதியீட்டம் செய்வதற்காகப் பெறப்படும் கடன் நாட்டின் பண நிரம்பலை அதிகரிப்பதற்கு ஏதுவாகுமாயின் அக்கடன் விரிவாக்க விளைவு கொண்ட கடன் என அழைக்கப்படும்.
- விரிவாக்க விளைவு கொண்ட கடன்கள்
- அரசு மத்திய வங்கியிடம் கடன் பெறல்
- வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன்பெறல்
- வெளிநாட்டுக் கடன்பெறல்
சுருக்க விளைவு கொண்ட கடன்
- கடன் பெறும் வழிகளால் பண நிரம்பலுக்குப் பாதிப்பு ஏற்படாது விடின் அக்கடன் சுருக்க விளைவு கொண்ட கடன் என அழைக்கப்படும்.
- சுருக்க விளைவு கொண்ட கடன்கள்:
- வங்கியில்லா நிறுவனங்களிடமிருந்தான கடன்கள்
- பொது மக்களிடமிருந்து அரசு கடன்பெறல்
- சுருக்க விளைவு கொண்ட வரவு செலவுத் திட்டக் கொள்கைகளைப் பின்பற்றுவது விரிவாக்க விளைவு கொண்ட வரவு செலவுத்திட்டக் கொள்கையைப் பின்பற்றுவதை விட பொருளாதாரத்துக்கு மிகவும் உகந்தது.
அரச கடன் அதிகரித்துச் செல்வதனால் முகங்கொடுக்க வேண்டிய பொருளாதார விளைவுகள்:
- அரச வருமானத்தின் பெரும்பகுதி கடனையும் கடனுக்கான வட்டியையும் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படல்.
- வேறு தேவைகள் மற்றும் அபவிருத்தியை நோக்கமாகக் கொண்ட செலவுகளுக்கு மிகக் குறைந்தளவான பணமே எஞ்சுதல்.
- உள்நாட்டுச் சந்தையில் வட்டிவீதம் அதிகரித்தல்
- உள்நாட்டுப் பண அலகொன்றின் வெளிநாட்டுப் பெறுமதி வீழ்ச்சி
- தனியார் துறைக்குக் கிடைக்கக்கூடிய வளங்களின் அளவு குறைவடைதல் காரணமாக தனியார் முதலீடுகள் குறைவடைந்து பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமான நிலையொன்று ஏற்படல்.
- அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச கடன் முகாமைத்துவம் என்பன மிகவும் கடினமானதாக அமைதல்.
- வங்கி முறையிலிருந்து பெறுகின்ற கடன்களால் பணவீக்கம் ஏற்படல்.
- மொத்தச் செலவு அதிகரிப்பதனால் சென்மதி நிலுவைப் பிரச்சினை தோற்றம் பெறல்.
- சர்வதேச கடன் பிரச்சினையொன்றுக்கு முகங்கொடுத்தல்.
- உள்நாட்டுச் சேமிப்பு விகிதம் குறைவடைதல்.
- உள்நாட்டுப் பணவீக்கம் காரணமாக மெய்நாணயமாற்று வீதம் குறைவடையும் போது சர்வதேச போட்டி நிலைமைக்குப் பாதகம் ஏற்படல்.
அண்மையாண்டுகளில் இலங்கையின் அரச கடனின் போக்கு:
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகத் தீர்க்கப்படாத கடனின் தொகையானது தொடர்ச்சியாகக் குறைவடைந்து செல்கின்றமை அண்மைக் காலத்தில் அவதானிக்க முடியுமாக உள்ளது.
- மொத்த அரச கடனின் பெருமளவு உள்நாட்டுக் கடனாகும்
- முதிர்ச்சிக் காலத்தின் அடிப்படையில் நடுத்தர கால மற்றும்
நீண்ட காலக் கடன்கள் குறுங்காலக் கடன்களை விட அதிகமாக இருத்தல்.
- நிறுவனங்களின் அடிப்படையில் வங்கித்துறையை விட
வங்கியில்லாத் துறையின் மூலம் பெற்ற கடன்கள் அதிகரித்தல்.
- உள்நாட்டுத் தீர்க்கப்படாத கடன்களில் பிரதானமான உபகரணம் திறைசேரி முறிகளாகும்.
- வெளிநாட்டுக் கடன்களுள் சலுகைக் கடன்கள் கூடிய
முக்கியத்துவம் பெறுகின்றன.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு விகிதமாக அரச கடன் சேவைக் கொடுப்பனவுகளில் வீழ்ச்சியொன்று காணப்படுகிறது.