






- உற்பத்தி செயற்பாட்டின்போது அதற்குப் பங்களித்த சகல காரணிகளதும் உழைப்புக்களைக் கூட்டும்போது வருமான அணுகுமுறையின் கீழ் தேசிய வருமானத்தைக் கணிப்பிடலாம்.
- காரணி வருமானத்தை பிரதான மூலங்கள் ஐந்தின் அடிப்படையில் வகைப்படுத்த முடியும்.
- தொழிலில் உள்ளோரது வருமானம்
- வாடகை வருமானம்
- தேறிய வட்டி
- இலாபம் மற்றும் முயற்சியாளர் வருமானம்
- சுயதொழில் மற்றும் தொழிலாளர் வருமானம்
தொழிலில் உள்ளோரது வருமானம்
- தொழிலில் உள்ளோரது வருமானம் மூன்று மூலங்களைக் கொண்டிருக்கும்:
- சம்பளம்/ வேதனம்/ படிகள்
- சமூகப் பாதுகாப்பு முறைகளுக்காக தொழிதருனர் பங்களிக்கும் கொடுப்பனவுகள்
- தொழிலில் உள்ளோருக்குக் கிடைக்கும் காப்புறுதிச் சேவைகள்/ சுகாதார வசதி/ இடர் கொடுப்பனவுகள்/ தொழிலாளர் நட்டஈடு
வாடகை வருமானம்
- வாடகை வருமானம் பின்வரும் மூலங்களைக் கொண்டிருக்கும்:
- நிலையான சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் உழைக்கின்ற கூலி வருமானம்.
- வாடகை வீடுகளுக்குக் கிடைக்கின்ற வாடகை மற்றும் உரிமையாளர் குடியிருக்கும் வீடுகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட வாடகை.
- கழிவுகள் சொத்துக்களுக்கான வாடகை.
நிறுவனத்துறையின் தேறிய வட்டி மட்டும் தேசியக் கணக்கு மதிப்பீடுகளில் உள்ளடங்கும்.
இலாபம் மற்றும் முயற்சியாளர் வருமானங்கள்
இலாபம் மற்றும் முயற்சியாளர் வருமானங்கள் பின்வரும் மூலங்களைக் கொண்டிருக்கும்:
- கம்பனி வருமான வரி
- உரிமையாளருக்கு வழங்கப்படும் இலாபம் – பங்கிலாபம்
- பகிரப்படாத இலாபம்
சுய தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலில் உள்ளோரது வருமானங்களில் உள்ளடங்குபவை:
- கம்பனிகளாக பதிவு செய்யப்படாத தனி வியாபாரம்
- பங்குடைமையும் கூட்டுறவு முயற்சியும்
- விவசாயிகள்
- வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு கலைஞர்கள்
- வாண்மைத் தொழில்கள் (சட்டத்தரணிகள், வைத்தியர்கள்)
பல்கணிப்பீட்டுப் பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்வதற்கு மாற்றல் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தனியார் வருமானம் / வீட்டுத்துறை வருமானம் என்பவற்றைப் பின்வருமாறு கணிப்பிடலாம்
![Screenshot (94)]()
- வீட்டுத்துறை வருமானத்தில்/தனிநபர் வருமானத்தில் நேர்வரிகளைக் கழித்த பின்னர் செலவிடத்தக்க வீட்டுத்துறை வருமானத்தைப் பெறலாம்.
வெளிநாட்டுக் கணக்குகள் தேசிய கணக்குகளுடன் தொடர்புபடும் விதம்
![Screenshot (95)]()
![Screenshot (97)]()
![Screenshot (96)]()
காரணிச் செலவின் அடிப்படையில் தேறிய உள்நாட்டு வருமானம்
![Screenshot (98)]()
காரணிச் செலவு விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி
![Screenshot (99)]()
சந்தை விலையின் கீழ் மொத்த உள்நாட்டு வருமானம்
![Screenshot (100)]()
சந்தை விலையின் கீழான மொத்தத் தேசிய வருமானம்
![Screenshot (101)]()
தேசிய வருமானத்தை இரு முறைகளில் கணிப்பிடலாம்
![Screenshot (102)]()
மெய்த் தேசிய வருமானம்
![Screenshot (103)]()
உள்நாட்டுச் சேமிப்பு
![Screenshot (104)]()
தேசிய சேமிப்பு
![Screenshot (105)]()
விகாரம் 
![ad]()
- DNA இன் கட்டமைப்பில் அல்லது அளவுகளில் ஏற்படுகின்ற தலைமுறை உரிமைப்படுத்தப்படக் கூடிய மாற்றங்கள் விகாரங்கள் எனப்படும்.
- இயற்கையால் ஏற்படும் விகாரங்கள் தன்னிச்சையான விகாரங்கள் எனப்படும்.
- புறக்காரணிகளின் தூண்டலால் ஏற்படும் விகாரங்கள் தூண்டப்பட்ட விகாரம் எனப்படும்.
- விகாரத்தைத் தூண்டக் கூடிய காரணிகள் : UV கதிர், X கதிர்
- விகாரங்கள் பல பின்னடைவான இயல்புகளையே உருவாக்குகின்றன.
- பின்னடைவான எதிருருக்களை உருவாக்கிய விகாரங்கள் ஓரினநுக நிலையில் மட்டுமே வெளிக்காட்டப்படும்.
- ஆட்சியான விகாரங்கள் ஓரினநுக நிலையிலும், பல்லின நுக நிலையிலும் வெளிக்காட்டப்படக் கூடியன.
- விகாரங்கள் DNA இன் இரட்டித்தலின் போது, இழையுருப் பிரிவின் போது, ஒடுக்கற் பிரிவின் போது ஏற்படலாம்.
- விகாரங்கள் இரு வகைப்படும். அவையாவன,
- பரம்பரை அலகு விகாரம்
- நிற மூர்த்த விகாரம்
பரம்பரை அலகு விகாரம்


பரம்பரை அலகு ஒன்றின் நியுக்கிளியோதைடொன்றின் தொடர் ஒழுங்கில் ஏற்படும் மாற்றம் பரம்பரை அலகு விகாரம் எனப்படும்.
உதாரணம் : வெளிறல் இயல்பு
Huntingdon’s நோய்
குருதி உறையா நோய்
தலசீமியா
Cystic Fibrosis
![cystic-fibrosis-lung]()
நிறமூர்த்த விகாரம்


- நிறமூர்த்தங்களின் கட்டமைப்பு, எண்ணிக்கை என்பவற்றில் ஏற்படும் மாற்றம் நிறமூர்த்த விகாரம் எனப்படும்.
- நிறமூர்த்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் கிரமமில்மடியமாகவோ, அல்லது பன்மடியமாகவோ இருக்கலாம்.
- கிரமமில்மடியம் : இயல்பு நிலைக்குரிய நிற மூர்த்த எண்ணிக்கையிலும் பார்க்க நிறமூர்த்தமொன்றின் எண்ணிக்கை மேலதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருத்தல்.
உதாரணம் : டவுனின் சகசம், கிளின்பெல்டரின் சகசம், Turner இன் சகசம்
- பன்மடியம் : அங்கியொன்றின் இரண்டிற்கு மேற்பட்ட முழுமையான நிறமூர்த்தங்களின் தொகுதிகள் உள்ள நிலை ஆகும்.
- விகாரத்தினால் உருவாகும் சில எதிருருக்கள் ஓரின நுக நிலையில் இறப்பை ஏற்படுத்துமாயின் அது கொல்லும் விகாரம் எனப்படும்.
உதாரணம் : மனிதனில் குருதி உறையா நோய்
- உடற் கலங்களில் ஏற்படும் விகாரங்கள் உடல் மூர்த்தத்திற்கு உரிய விகாரம் எனப்படும்.
உதாரணம் : புற்றுநோய்க் கலங்கள்
![down-syndrome1]()
![b1]()
குடித்தொகையில் பாரம்பரியப் பல்வகைமை ஏற்படக் காரணங்கள்
- ஒடுக்கற் பிரிவின் போது, நிறமூர்த்தங்களின் சுயாதீனத் தனிப்படுத்துகை காரணமாக நிறமூர்த்தங்களின் தன்வயத்த தொகுப்பு இடம்பெறல்.
- குறுக்குப்பரிமாற்றம் காரணமாக மீளசேர்தல்கள் உருவாகும்
- விகாரங்கள் ஏற்படுவதால் புதிய பரம்பரை அலகுகள் அல்லது எதிருருக்கள் தோன்றுதல்.
- இலிங்கமுறை இனப்பெருக்கத்தின் போது, புணரிகளின் சேர்க்கை எழுமாறாக நிகழ்தல்.
- சில பாரம்பரிய இயல்புகள் பல பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படல்.
பரம்பரையலகுத் தடாகம்
குடித்தொகை ஒன்றிலுள்ள எல்லா அங்கத்தவர்களிலும் காணப்படுகின்ற எல்லா எதிருருக்களின் கூட்டு மொத்தம் பரம்பரையலகுத் தடாகம் எனப்படும்.
பரம்பரையலகு எதிருரு மீடிறன்
குடித்தொகை ஒன்றில் பரம்பரை அலகு ஒன்றில் எதிருரு அதன் ஒத்த தானத்தில் காணப்படக்கூடிய மற்றைய எதிருருவுடன் கொண்டுள்ள விகிதம் பரம்பரை அலகு எதிருரு மீடிறன் எனப்படும்.
p + q = 1
p – ஆட்சியான எதிருரு மீடிறன்
q – பின்னடைவான எதிருரு மீடிறன்
உற்பத்திச் சாத்திய வளையியின் நடைமுறைசார் உபயோகங்கள் 












- அமயச் செலவை விளக்க
- வளங்களின் அருமைத் தன்மையை அறிய
- வளங்களின் பயன்பாட்டை அறிய
- உற்பத்தி இயலளவில் ஏற்படும் மாற்றங்களை அறிய
- வள விளைதிறன் மாற்றமடைய காரணமாயுள்ள விடயங்களை விளக்க.
- பொருளாதார பின்னடைவு, பொருளாதார மந்தம், பொருளாதார மீட்சி, பொருளாதாரத் தடை, பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி போன்றவற்றால் பொருளாதாரமொன்றில் ஏற்படும் மாற்றங்களை அறிய உற்பத்திச் சாத்திய வளையி பயன்படும்.
அருமையை உற்பத்திச் சாத்திய எல்லையில் நோக்கினால்
- உற்பத்திச் சாத்திய எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள புள்ளி ஒன்றில் உற்பத்தி இடம்பெற முடியாமை வளங்களின் அருமையைக் காட்டும்.
![eco-3]()
உற்பத்தி சாத்திய எல்லைக்கு அப்பால் உள்ள B புள்ளி அருமையைக் காட்டும்.
வளங்களின் பூரணமான பயன்பாடு /பூரண நிறைதொழில் மட்டம்
- நாடொன்றில் வரையறுத்துத் தரப்பட்டுள்ள வளங்கள் யாவும் பூரணமாகவும் அதி உச்சமட்ட விளைதிறனாகவும் உற்பத்தியில் கையாளப்படும் போது உற்பத்திச் சாத்திய எல்லையில் உள்ள புள்ளியொன்றில் உற்பத்திச் சேர்க்கை இடம்பெறும்.
- இதனை பூரண நிறைதொழில் மட்டம் என்பர்.
- இதன்போது ஏதாவது ஒரு பண்டத்தின் உற்பத்தி அளவை அதிகரிக்கும்போது மாற்று உற்பத்தி அளவு குறைந்து அமையச் செலவு தோன்றும்.
![01-eco]()
உற்பத்தி சாத்திய எல்லையிலுள்ள புள்ளிகள் A,B,C,D பூரண நிறைதொழில் மட்டத்தைக் காட்டும்.
வளங்களின் பூரணமற்ற பயன்பாடு / குறைதொழில் மட்டம்
- நாடொன்றில் வரையறுத்துத் தரப்பட்ட வளங்கள் பூரணமாக உற்பத்தியில் பயன்படுத்தப்படாமலும், வளங்களின் அதி உச்ச மட்ட விளைதிறன் அடையப்படாமலும் காணப்படுமாயின் உற்பத்திச் சாத்திய எல்லைக்கு உட்புறமுள்ள புள்ளியொன்றில் உற்பத்தி இடம்பெறும்.
- இதனை குறைதொழில் மட்டம் /வேலையின்மை என்பர்.
- சாத்திய வளையிக்கு இடப்புறம் /உட்புறம் அமைந்த உற்பத்திச் சேர்க்கை புள்ளியொன்று எல்லைக்கு நகரும் போது அமயச் செலவு தோன்றாது
![eco-4]()
D புள்ளி குறைதொழில் மட்டத்தைக் கருதும். அது E,F,C இற்கு நகர்ந்தால் அமையச்செலவு 0 ஆகும்.
பொருளாதரப் பின்னடைவு நீங்கும் போது / பொருளாதார மீட்சி ஏற்படும் போது
உற்பத்திச் சாத்திய எல்லைக்கு உட்புறம் / இடப்புறம் உள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளி உற்பத்திச் சாத்திய எல்லைக்கு அண்மையிலுள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிக்கு / உற்பத்திச் சாத்திய எல்லையிலுள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிக்கு நகரும்.
C புள்ளி D க்கு நகருதல், அல்லது F புள்ளி E க்கு நகருதல்.
சாத்தியமான வள வெளியீட்டாற்றல் /சாத்தியமான வள உற்பத்தி இயலளவு
- நாடொன்றில் வரையறுத்துத் தரப்பட்டுள்ள வளங்களை பூரணமாகவும் அதி உச்ச விளைதிறனாகவும் பயன்படுத்தி பெறத்தக்க உற்பத்திச் சேர்க்கையே சாத்தியமான வள உற்பத்தி இயளலளவு ஆகும்.
- உற்பத்திச் சாத்திய எல்லையிலுள் உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிகள் சாத்தியமான வள வெளியீட்டாற்றலைக் காட்டும்.
உ – ம்
A, B, C புள்ளிகள்
![eco-5]()
பொருளாதார வளர்ச்சி / பொருளாதாரச் செழிப்பு
- நாடொன்றினது சாத்தியமான வள உற்பத்தி இயலளவு தொடர்ச்சியாக அதிகரிக்கும் நீண்ட கால செயற்பாடு பொருளாதார வளர்ச்சியாகும்.
- இதன்போது உற்பத்திச் சாத்திய வளையி வெளிப்புறம் / வலப்புறம் நகர்வடையும்.
- நாடொன்றின் உற்பத்தி இயலளவை அதிகரிக்கச் செய்யும் காரணிகள்
அ) வளக்கிடைப்பனவுகள் அதிகரித்தல்.
ஆ) வளவிளைதிறன்கள் அதிகரித்தல்.
உ – ம்
2003 முதல் 2012 வரையான காலத்தில் ஒரு பொருளாதாரமடைந்த 25% பொருளாதார வளர்ச்சியை வருமாறு காட்டலாம்.
![eco-6]()
AB வளையி CD க்கு நகர்தல் 25% பொருளாதார வளர்ச்சி
உற்பத்திச் சாத்திய எல்லை வலதுபுறம் / வெளிப்புறம் நகர்வடைய பொறுப்பாகவுள்ள காரணிகள்
- வளத்திரட்சி அதிகரித்தல்
- புதிய வளங்களின் பயன்பாடு
- புதிய முதலீட்டுப் பெருக்கம்
- சிறப்படைந்த தொழிற்படையின் குடிவருகை
- வெளிநாட்டு முதலீட்டு வருகை
- வெளிநாட்டு உதவி கிடைத்தல்
- கீழ்கட்டுமான விருத்திகள்
- வள விளைதிறன் அதிகரித்தல்
- நவீன நுட்பங்களின் வருகை
- முகாமைத்துவ மேம்பாடு
- மனித மூலதன விருத்தி
- தொழிற்படை சிறப்புத் தேர்ச்சியடைதல்
- உலகமயமாதல் விரிவடைதல்
பொருளாதார வீழ்ச்சி / பொருளாதார நலிவு
- நாடொன்றினது சாத்தியமான வளங்களின் உற்பத்தி இயலளவு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைதல் பொருளாதார வீழ்ச்சியாகும்.
- இதன்போது உற்பத்திச் சாத்திய வளையி இடதுபுறம் / உட்புறம் நகர்வடையும்
- உ – ம்
2005 முதல் 2015 வரையான காலத்தில் ஒரு பொருளாதாரம் அடைந்த 20% வீழ்ச்சியை வருமாறு காட்டலாம்.
AB வளையி CD க்கு நகர்தல் 20% பொருளாதார வீழ்ச்சி
நாடொன்றின் உற்பத்தி இயலளவை நலிவடையச் செய்யும் காரணிகள் /உற்பத்திச் சாத்திய வளையியை இடப்புறம் நகரச் செய்யும் காரணிகள்
- வளத்திரட்சி குறைதல் / வளங்கள் அழிவடைதல்.
- இயற்கை அனர்த்தங்களால் வளங்கள் அழிவடைதல்.
- போரினால் வளங்கள் அழிவடைதல்.
- பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல்/ வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படல்.
- வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுதல்.
- சிறப்படைந்த தொழிற்படையின் குடி அகல்வுகள்
- சனத்தொகை அழிவுகள்
- வளவிளைதிறன் திறன் குறைதல்.
- தொழில்நுட்ப தொகுதி அழிதல்.
- முகாமைத்துவத்தின் பின்னடைவு
- தொழிலாளர் வினைத் திறன் பின்னடைதல்
- தொழிற்படையின் சிறப்புத் தேர்ச்சியில் பின்னடைவு
வள விளைதிறன்
மெய்யான வெளியீட்டளவை உற்பத்திக்குப் பயன்படுத்திய மொத்த உள்ளீட்டின் அளவால் வகுத்துப் பெறப்படுவதே வளவினைதிறன் ஆகும்.
இது உள்ளீடு ஒன்றிற்கான சராசரி உற்பத்திக் காரணி விளைதிறன் எனப்படும்.
![econ]()
வளவிளைதிறனில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள்
- தொழில்நுட்பம்
- மனித மூலதனம்
- முகாமைத்துவம்
- தொழிற்பகுப்பும் சிறப்புத்தேர்ச்சியும்
- சமூக மூலதனம்
- இயற்கை மூலதனம்
- இக்காரணிகள் முன்னேற்றமடைந்தால் வளவிளைதிறன் அதிகரிக்கும்.
- மாறாக இக் காரணிகள் மோசமடைந்தால் வளவிளைதிறன் குறையும்.
- வளவளைதிறன் கூட PPC வளையி வலதுபுறம் நகரும்.
- வளவிளைதிறன் குறைய PPC இடதுபுறம் நகரும்.
வளவிளைதிறன் அதிகரிப்பும்
- முன்னைய உள்ளீட்டில் முன்னரைவிட கூடிய வெளியீடுகள் பெறப்படல் வளவிளைதிறன் அதிகரிப்பு எனப்படும்.
- வெளியீடொன்றுக்கான உள்ளீட்டின் அளவு குறைதல் எனவும் இதனைத் கூறலாம்.
- இதன் போது உற்பத்திச் சாத்திய எல்லை வலப்புறம் நகரும்.
வளவிளைதிறன் வீழ்ச்சியும்
- முன்னைய உள்ளீட்டில் முன்னரைவிட குறைந்த வெளியீடுகள் பெறப்படல் வளவிளைதிறன் வீழ்ச்சியாகும்.
- வெளியீடொன்றுக்கான உள்ளீட்டின் அளவு அதிகரித்தல் எனவும் இதனைக் கூறலாம்.
- இதன்போது உற்பத்திச் சாத்திய வளையி இடதுபுறம் நகரும்.
உ – ம்
வளவிளைதிறன் அதிகரிப்பதை AB வளையி CD ஆக நகர்வதாகவும் வளவிளைதிறன் குறைவதை AB வளையி EF ஆக நகர்வதாகவும் காட்டலாம்.
![eco-8]()
நெறிப்படுத்தல் செயன்முறையின் பிரதான கருமங்கள்





- தலைமைத்துவம்
- ஊக்குவித்தல்
- தொடர்பாடல்
தலைமைத்துவம்
- வணிகமொன்றின் இலக்கினையும் குறிக்கோளினையும் வினைத்திறனாகவும் செயற்திறன் மிக்க வகையிலும் அடைந்து கொள்ளும் பொருட்டு அந்நிறுவனத்திலுள்ள தொழிலாளர்களின் நடத்தையின் மீது செல்வாக்கு செலுத்துவதன் மூலம் அவர்களது வேலைகளையும், கடமைகளையும் செய்விக்கக் கூடிய ஆற்றல் தலைமைத்துவமாகும்.
தலைமைத்துவ வலுக்கள்
- அனுபவ வலு
- ஆளுமை வலு
- வசீகர வலு
- சீரமைக்கும் வலு
- வெகுமதி வலு
- மதிப்பளிக்கும் வலு
- தகவல் வலு
தலைமைத்துவ பாங்குகள்
- சர்வதிகார தலைமைத்துவம்
- ஜனநாயக தலைமைத்துவம்
- தடையில்லாத் தலைமைத்துவம்
முகாமையாளர் – தலைவர் வேறுபாடு
| முகாமையாளர் |
தலைவர் |
- அதிகார வலுவினை பயன்படுத்தல்
|
- தலைமைத்துவ வலுக்களை பிரயோகிப்பவர்
|
|
|
- தனிநபர்சார் வலுக்கள் காணப்படும்
|
- வளங்களையும் பணிகளையும் முகாமை செய்பவர்
|
- செல்வாக்கு செலுத்தி தலைமை தாங்குபவர்
|
|
|
- புத்துருவாக்கத்தில் ஈடுபடுபவர்
|
- குறுங்காலத்துடன் தொடர்புடையவர்
|
- நீண்டகாலத்துடன் தொடர்புடையவர்
|
ஊக்கப்படுத்தலின் வகைகள்
- பணரீதியான / நிதிசார் ஊக்குவிப்பு
- பணரீதியான/ நிதிசாரா ஊக்குவிப்பு




ஒரு நாட்டில் ஆட்சியை கொண்டு நடாத்துகின்ற அதிகாரம் சட்டத்திடமே காணப்படுகின்றது என்பதை வலியுறுத்தும் கோட்பாடே சட்டவாட்சி கோட்பாடாகும்.
சட்டவாட்சி எனும் கோட்பாட்டை ஏ.வி. டைசி 1885ஆம் ஆண்டு தான் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் எனும் நூலின் மூலம் முன்வைத்தார்.
சட்டவாட்சியின் பிரதான மூன்று அம்சங்கள்:
- சட்டம் அனைத்தினையும் விட மேலானதும் தனிமுதன்மையானதுமாகும்.
- சட்டத்தின் முன் சகலரும் சமன்; எவருக்கும் விசேட வரப்பிரசாதம் கிடையாது.
- சட்டத்தால் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
சட்டவாட்சியின் பண்புகள்:
- சட்டத்தால் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படல்.
- ஊடக சுதந்திரம் நிர்ணயம் செய்யப்படல்.
- அடிப்படை உரிமை மீறப்படாமை.
- அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு வழங்கல்.
- மத சுதந்திரம் பேணப்படல்.
- அரசியல் சுதந்திரம் பேணப்படல்.
சட்டவாட்சி கோட்பாட்டின் முக்கியத்துவம்
- மனித உரிமைகள் பாதுகாக்கப்படல்.
- தனிநபர் சுதந்திரம் பேணப்படல்.
- எதேச்சதிகாரம் தவிர்க்கப்படல்.
- சட்ட சமத்துவத்தை மேலோங்க செய்து ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையை உருவாக்கல்.
- நல்லாட்சிக்கு தூண்டுகோளாக இருத்தல்.
- ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல்.
சட்டவாட்சி கோட்பாட்டின் விமர்சனம்:
- சட்டத்தால் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் தற்காலத்தில் வலுவேறாக்கமின்மையால் நீதித்துறை சுதந்திரம் பேணப்படல்.
- சட்டவாட்சி கோட்பாடு சட்டத்தை மீறக் காரணம் எவை என்பது பற்றி கவனம் செலுத்தவில்லை.
- சட்டத்தின் முன் யாவரும் சமன் என்ற கருத்தானது விமர்சனத்துக்குள்ளாகின்றது. அதாவது சில நாடுகளில் அரச தலைவர்கள், இராணுவ வீரர்கள் போன்றோருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அரசியல் சமூகமயமாக்கல்


20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடத்தைவாத ஆய்வுத்துறை எழுச்சி பெற்ற பொழுது அரசறிவியலின் ஆய்வுப் பரப்பிலே புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட எண்ணக்கருவாகும்.
ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே வாழும் மக்கள் அனைவரையும் அந்த அரசியல் சமுதாயத்தின் அரசியல் செயற்பாடுகளிலே ஆர்வத்துடன் ஈடுபட ஊக்கமளிக்கும் மொத்த செயன்முறையே அரசியல் சமுதாயமயப்படுத்தல் எனப்படும்.
அறிஞர்களின் கருத்துக்கள்:-
பிரட் கிரீன்ஸ்டைன் – அரசியல் ரீதியாக பொருந்தும் மனித மனப்பாங்குகள் , நடத்தை பாங்குகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதில் தாக்கம் புரியும் மனிதனின் வாழ்நாள் பூராகவும் பரவிக் காணப்படும் சகல வகையான அரசியல் படிப்பினைகள் உள்ளடக்கிய மொத்தச் செயன்முறை.
ஆல்மென்ட் – மனிதர்களை அரசியல் ரீதியாக அறிவூட்டி , அரசியல் கலாசாரத்தைப் பேணி நடப்பதற்கும் அதன் மூலம் அரசியல் உறுதிப்பாட்டை பாதுகாத்துப் பேணுவதற்கும் மக்களைப் பழக்கப்படுத்தும் மொத்தச் செயன்முறை.
ரஸ் – மனிதரை அரசியல் முறைமைக்குப் பரீட்சயப்படுத்தி அதன் மூலம் அரசியல் முறைமையில் துலங்குவதற்கு பயிற்சியளிக்கும் செயன்முறை.
அரசியல் சமுதாயப்படுத்தலின் முகவர்கள்:-
• குடும்பம் • கல்வி நிறுவனங்கள்
• நண்பர்கள் குழாம். • சமய நிறுவனங்கள்
• ஊடகங்கள் • தொழில் அனுபவங்கள்
• நலன் பேணும் குழுக்கள் • அரசியல் குறியீடுகள்
• அரசாங்கம் • பால்நிலை , வயது மற்றும் புவியியல்
• அரசியல் கட்சிகள் • சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார பின்னணி
அரசியல் சமுதாயப்படுத்தல் ஏற்படும் இரு வழிமுறைகள் :-
- முறைசார் வழிமுறை
உதாரணம் : பாடசாலை , பல்கலைக்கழகம் , ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி நிறுவனம்
- முறைசாரா வழிமுறை
உதாரணம் : அரசியல் கட்சிகள் , நலன்நாடும் கழகம் , அபிப்பிராய தலைவர்கள் , அரசியல் ரீதியான கருத்தரங்கு , சமூக விழிப்புணர்வு செயற்றிட்டம்
அரசியல் சமுதாயப்படுத்தலின் நன்மைகள்:-
- ஜனநாயகத்தை வலுப்படுத்தி கொள்ள முடியும்.
- ஆரோக்கியமான நல்லாட்சியை கட்டியெழுப்பலாம்.
- வினைத்திறன் மிக்க அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கலாம்.
- சமூக வளம் வீணடிக்கப்படும் சூழல் இல்லாமை.
- மக்கள் மத்தியிலே அரசியல் புரிந்துணர்வு , நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டு தேசப்பற்று மிக்க சமூகத்தினை உருவாக்கலாம்.
- பொறுப்பு கூறும் அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்குகிறது.
- பங்கு பற்றும் அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப உதவுகிறது.
- சமூக மட்டத்திலே வறுமை , வேலையில்லாத திண்டாட்டம் , சமூக பாகுபாட்டு சூழ்நிலைகள் என்பவற்றை இல்லாதொழித்து விடுகிறது.
அரசியல் சமுதாயப்படுத்தலின் குறைபாடுகள்:-
- குறுந்தேசியவாத சிந்தனைகளின் அடிப்படையில் அரசியல் சமூகமயமாக்கல் இடம்பெற வாய்ப்பு ஏற்படுகிறது.
- மக்களுடைய பொருளாதார நிலை பாதகமாக அமையும் போது அரசியல் சமுதாயமயப்படுத்தலின் மூலம் எதிர்நோக்கப்பட்ட குறிக்கோளை அடைய முடியாது.
அரசியல் நடத்தை
அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த ஒரு சமூகத்தின் தனியாட்கள் அங்குள்ள அதிகாரப் பீடங்களுடன் இணைந்து செயற்பட்டு அதிகாரப் பீடங்களை சுற்றி நடந்து கொள்ளும் விதம் அரசியல் நடத்தை எனப்படும்.
அரசியல் நடத்தையானது மனிதனது நோக்கங்கள் , உணர்வுகள் , செயல்கள் , மனப்பான்மைகள் போன்றவற்றின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றன.
அரசியல் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்:-
• மக்களின் பொருளாதாரம்
• மக்களின் சமூகத்துவம்
• இனம்
• சாதி
• கல்வி
• ஆர்வங்கள்
அரசியல் நடத்தைகளை விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள்:-
- தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு நடவடிக்கைகளில்
- பொதுசன அபிப்பிராயத்தின் வெளியீட்டின் மூலம்
- கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல், தீர்மானம் மேற்கொள்ளல் போன்றவற்றில் பொதுமக்களின் பங்களிப்புகளில்
- அரசியல் கட்சிகளுடனான தொடர்புகளின் மூலம்
- அரசியல் உயர் பதவிகளை வகித்தல் போன்ற சந்தர்ப்பங்களில்
- வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் தலைமைத்துவ நடத்தை போன்ற வெளித்தெரியும் அரசியல் செயலொழுங்குகளின் போது
- தேசிய அரசுகளின் செயற்பாடுகளில்
- அரசில்லாத ஒழுங்கமைப்புக்களின் செயற்பாடுகளில்
- பயங்கரவாத அமைப்புக்களின் நடத்தைகளின் போது
- அரசியல் தொடர்பாடல்களில்
அரசியல் கலாசாரம்
ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே வாழும் மக்கள் தமது சமுதாயத்தில் நிலவும் அரசியல் முறைமை , சின்னம் , கொள்கை தொடர்பாக கொண்டிருக்கும் புரிந்துணர்வு , நம்பிக்கை , மனப்பாங்கு என்பவற்றின் கூட்டு மொத்தமே அரசியல் கலாசாரமாகும்.
அறிஞர்களின் கருத்துக்கள்:-
- லூசியன் பை – ஓர் அரசியல் சமுதாயத்தில் மக்கள் பின்பற்றும் கோட்பாடுகள் கருத்துக்கள் விழுமியங்கள் என்பன அரசியல் கலாசாரமாகும்.
- டெனிஸ் கவங்கா – ஓர் அரசியல் அமைப்பு எவ்வாறு செயற்படுகின்றது என்பதற்கான ஒரு சுருக்கமான பெறுமதிகளின் தொகுதி அரசியல் கலாசாரமாகும்.
அரசியல் கலாசாரமானது பின்வரும் இரு பகுதிகளை கொண்டுள்ளது.
- அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றி மக்களிடம் உள்ள தெளிவு.
- அரசாங்கம் எதனை செய்ய வேண்டும் , எதனை செய்யக் கூடாது என்பன தொடர்பாக மக்களுக்குள்ள புரிந்துணர்வு அல்லது இறுதி மதிப்பீட்டினை தீர்மானிப்பதற்கு மக்களிடம் உள்ள புரிந்துணர்வு.
அரசியல் கலாசாரத்தின் இயல்புகள்:-
- அரசியல் கலாசாரம் பொது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.
- அரசியல் நடத்தையை முதன்மைப்படுத்துகின்றது.
- பங்கிடப்படக் கூடிய விழுமியங்களை கொண்டது.
- அரசியல் முறையினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
- முறையான உள்ளடக்கத்தினைக் கொண்டது.
- அரசியல் சமூகமயமாக்கலை அடியொட்டியது.
- உணர்வுபூர்வமான அம்சங்களை கொண்டது.
- அரசியல் கருத்தியலை பிரதிபலிக்கின்றது.
- வெளிப்படை தன்மையானது.
அரசியல் கலாசாரத்தின் வகைகள்:-
1. குறுகிய அரசியல் கலாசாரம் அல்லது வளர்ச்சியற்ற அரசியல் கலாசாரம்.
2. கீழ்ப்படிந்து போகும் அரசியல் கலாசாரம் அல்லது குறைவிருத்தி அரசியல் கலாசாரம்.
3. பங்குபற்றும் அரசியல் கலாசாரம் அல்லது வளர்ச்சியடைந்த அரசியல் கலாசாரம்.
அரசியல் கலாசாரத்தின் முக்கியத்துவம்:-
- அரசியல் அபிவிருத்தியினை அளவிடும் குறிகாட்டியாக அரசியல் கலாசாரம் விளங்குகின்றது.
- அரசியல் முறைமையின் தொடர்ச்சியை பேணுகிறது.
- தேசிய வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றது.
- அரசியல் கலாசாரம் அரசியல் கொள்கை உருவாக்கத்திற்கு உதவுகின்றது.
- பல்வேறு அரசியல் முறைமையை ஒப்பீட்டு கற்பதற்கு உதவுகின்றது.
- அரசியல் நடவடிக்கைகளில் ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகின்றது.
- தனிமனிதனின் மீதான கவனத்திலிருந்து சமூகத்தின் மீதான கவனம் உருவாக வழியேற்படுகின்றது.
அரசியல் கலாசாரத்தின் நன்மைகள்:-
- மக்கள் மத்தியிலே அரசியலில் பங்கு பற்றும் ஆர்வத்தினையும் விருப்பத்தினையும் தூண்ட அரசியல் கலாசாரம் வழிகோலுகின்றது.
- ஆரோக்கியமான அரசியல் சூழலை கட்டியெழுப்ப வழிகோலுகின்றது.
- அரசியல் சமுதாயங்களிலே நல்லாட்சியை நிலைநிறுத்திக் கொள்ள துணைபுரிகின்றது.
- சிவில் சமூக அமைப்புக்கள் உருவாக்கம் பெறவும் , எழுச்சி பெறவும் இவ்எண்ணக்கரு வழிகோலுகிறது.
- சாதாரண பொதுமக்கள் அரசியலில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற உதவுகின்றன.
அரசியல் வன்முறை
அரசியல் ரீதியாக ஏற்றுகொள்ளப்பட்ட விழுமியங்களுக்கு புறம்பாக அரசியல் தலைவர்களோ அல்லது அரசியல் இயக்கங்களோ தமது அரசியல் இலட்சியங்களை அடைந்து கொள்ள முயலுமாயின் அதுவே அரசியல் வன்முறை எனப்படும்.
அறிஞர்களின் கருத்துக்கள்:-
நியுபெர்க் – ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கினை அடைந்து கொள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அப்பால் பலவந்தமாக வெளிவாரியாகப் பயன்படுத்தும் வன்முறை தழுவிய செயற்பாடுகள்.
ரி.ஆர். கர் – அரசியல் வன்முறைக்கு காரணம் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாது போகின்றமையாகும்.
அரசியல் வன்முறைகளுக்கான உதாரணங்கள் சில:-
- 1988 பிரித்தானியாவின் ஆங்கிலப் புரட்சி.
- 1776 அமெரிக்காவின் சுதந்திரப்போர்.
- 1789 பிரான்சியப் புரட்சி.
அரசியல் வன்முறையை ஆதரித்த அறிஞர்கள்:-
- ஹொப்ஸ்
- மாக்கியவல்லி
- கார்ல்மாக்ஸ்
அரசியல் வன்முறைக்கான காரணங்கள்:-
- அரசியல் அதிகார துஷ்பிரயோகம்
- ஸ்தாபனங்களில் வீழ்ச்சி ஏற்படல்.
- கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையெ இடைவெளி அதிகரித்தல்.
- மொழிக்கொள்கை சாதி ஒடுக்கு முறை
- இனப்பாகுபாடு
- சாதி அமைப்பு முறை
- அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அரசியல் வன்முறை ஏற்படுவதற்கான காரணங்கள்:
- அரசியல் அபிவிருத்தி இல்லாமை
- உலக வல்லரசுகளின் தலையீடு
- அதிகாரத்தின் மீதான ஆசை
- வறுமை
- நடைமுறையிலுள்ள அரசியல் முறைமைகள் மக்களுக்கு விருப்பமின்மை
- பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்
அரசியல் உயர்குழாம்
- எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்திலும் அரசியல் செயலொழுங்குக்கு தலைமை தாங்கும் மக்கள் குழு அரசியல் உயர்குழாம் எனப்படுவர்.
- பரேடோ – ஒவ்வொரு சமுதாயமும் பல்வேறு வகுப்புக்களை கொண்டுள்ளது. இவ்வகுப்புக்களில் ஆளும் வகுப்பினர் என்பவர்கள் சிலராகவே அமைகின்றனர். இவர்கள் சிறுபான்மையினராக உள்ளதோடு அரசியல் அதிகாரத்தினை கைபற்ற தேவையான பண்புகளை கொண்டிருப்பர். இவர்களில் மிகச்சிறந்தவர்கள் அரசியலில் மிக உயர் மட்டத்திற்கு செல்கின்றனர். இவர்களே அரசியல் உயர்குழாம் வகுப்பினர்.
- இவர்கள் அரசியல் தீர்மானங்கள் எடுப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதுடன் உறுதித்தன்மையின் பாதுகாவலர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
இவ் எண்ணக்கருவை முன்வைத்த அறிஞர்கள்:-
1. பரேடோ 2. மொஸ்கா
3. கேசட் 4. ஈஸ்டன்
5. ரொத்வெல்
உயர்குழாம் தோன்றுவதில் செல்வாக்கச் செலுத்தும் காரணிகள்:-
1. பரம்பரை 2.செல்வம்
3.சமயம் 4.கல்வி
5.வசீகர தலைமைத்துவம் 6.சாதி
7.பதவி 8.அதிகாரம்
9.அரசியல் ஆற்றல்கள்
இலங்கையின் சேவைத்துறையில் அடங்கும் உப பிரிவுகள்


- மொத்த , சில்லறை வர்த்தகம்
- சுற்றுலா, விடுதிகள், உணவகங்கள்
- போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்
- வங்கி, காப்புறுதி உண்மைச் சொத்து
- வதிவிட உரிமை
- அரச பணி
- தனியார் பணிகள்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிச் செயன்முறைக்கு சேவைத்துறையின் பங்களிப்பு
- விவசாயம், கைத்தொழில் துறையை விட சார்பளவில் GDP க்கு சேவைத்துறையின் பங்களிப்பு கணிசமாக உயர்வடைகிறது.
- மொத்த வேலைவாய்ப்பின் சேவைத்துறையின் பங்களிப்பு 45% ஆகும்.
- சேவைத்துறை நேர்கணிய வெளிவாரியை உருவாக்குதல்.
- சேவைத்துறை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.
வளர்முக நாடுகளில் சேவைத்துறையின் பங்களிப்பு அதிகரித்துச் செல்ல காரணம்
- பொருளாதார வளர்ச்சியின் போது சேவைத்துறைக்கான கேள்வி நெகிழ்ச்சியுடையதாக அமைவதால் சேவைத்துறை விரிவடைதல்.
- ஏனைய துறைகளை விட மிகக் குறைந்தளவு வளங்களைப் பயன்படுத்தி சேவைத்துறையை உருவாக்கலாம்.
- ஏனைய துறைகளை விட சார்பளவில் சேவைத்துறையின் விளைதிறன் உயர்வாக அமைதல்.
- கொடுக்கல் வாங்கல் செலவுகளைக் குறைக்க சேவைத்துறை பங்களிப்பை வழங்குதல்.
நாணயக் கொள்கை












- பொருளாதாரமொன்றின் பண வழங்கலில் செல்வாக்குச் செலுத்துவதற்காக அரசு பின்பற்றுவது நாணயக் கொள்கை.
- இதனை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்கின்றது.
- நாணய கொள்கையை நடைமுறைப்படுத்த,
- வட்டி வீதம் / கொள்கை வட்டிவீதம்
- சட்ட ஒதுக்க வீதம்
- திறந்த சந்தை நடவடிக்கை
- கழிவு வீதத்தை மாற்றுதல்
- கடன் அளவை வரையறுத்தல்
போன்ற சாதனங்கள் பயன்படுகின்றன.
- கொள்கை வட்டி வீதம் பிரதானமாக 03 வகைப்படும்
- வங்கி வட்டி வீதம்
- மீள் கொள்வனவு வீதம்
- மீள் விற்பனை வீதம்
- குறித்த காலத்தில் பொருளாதாரத்தில் செலவிடக் கூடிய பணத்தின் அளவு அந்நாட்டின் பண நிரம்பல்.
- நிதிக் கொள்கைக்கும் பணநிரம்பலுக்கும் நேரான தொடர்பு.
இறைக் கொள்கை
- அரச வருமானங்களுக்கும் செலவுகளுக்குமிடையிலினான தொடர்பு இறைக் கொள்கை ஆகும்.
அரச வருமான திரட்டலில்,
- வருமான வரி திணைக்களம்
- மதுவரி திணைக்களம்
- சுங்கத் திணைக்களம்
- மோட்டார் வாகன திணைக்களம்
- பிரதேச சபை, மாகாண சபை நிறுவனம் என்பன ஈடுபடுகின்றன.
வருமானத்திற்கு ஏற்ப வரி முறைகள் 03 வகைப்படும்
- விருத்தி முறை வரி
- வருமானம் அதிகரிக்க வரி விகிதம் அதிகரிக்கும்.
- ஒடுங்கு முறை வரி
- வருமானம் அதிகரிக்க வரி விகிதம் குறையும்.
- விகிதசம வரி
- வருமானம் அதிகரிக்கும் விகிதசமமாக வரி வீதமும் அதிகரிக்கும்.
அரச செலவீனம்
- குறித்த ஒரு காலப்பகுதியில் அரசு நாட்டு மக்களுக்காக செலவு செய்த மொத்த தொகை அரச செலவீனம்.
- இது 02 வகைப்படும்
- நடைமுறைச் செலவு
- மூலதனச் செலவு
- அரச சேவையை நடாத்த மேற்கொள்ளப்படும் செலவு நடைமுறைச் செலவு.
- அரசின் நீண்டகால திட்டங்களிற்கான முதலீடு மூலதனச் செலவு.
![b-s-1]()
மேற்பரப்பிழுவை
திரவமொன்றின் சுயாதீன மேற்பரப்பில் வரையப்பட்ட ஓரலகு நீளமான கற்பனைக் கோட்டுக்கு செங்குத்தாக ஒரு பக்கத்தில் தாக்கும் மேற்பரப்புத் தொடலிவிசை அத்திரவத்தின் மேற்பரப்பிழுவை ஆகும்.
T = F/l
அலகு- Nm-1
T = W/A
அலகு- Jm-2
![31]()
மேற்பரப்பு இழுவைக்கான காரணம்
திரவ மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகளில் கீழ்நோக்கி மட்டுமே கவர்ச்சி விசை தொழிற்படும். எனவே இதன் காரணமாக திரவ மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் திரவத்தினுள் புக முயற்சிக்கும்.
திரவத்தினுள் உள்ள மூலக்கூறை பொறுத்தமட்டில் எல்லா திசையிலும் கவர்ச்சி விசை தொழிற்படும். எனவே விளையுள் விசை பூச்சியமாகும்.
திரவத்தினுள் உள்ள மூலக்கூறுகளை விட திரவ மேற்பரப்பிலுள்ள மூலக்கூறுகள் அதிக சக்தி உடையன.![32]()
ஒருங்கிணையும் விசை
அயலிலுள்ள திரவ மூலக்கூறுகளினால் ஒரு திரவமூலக்கூறின் மேல் தாக்கும் விசை ஒருங்கிணையும் விசை எனப்படும்.
ஒட்டற்பண்பு விசை
திண்ம மேற்பரப்பிலுள்ள மூலக்கூறுகளினால் ஒரு திரவ மூலக்கூறின் மீது தாக்கும்விசை ஒட்டற்பண்பு விசை எனப்படும்.
ஒட்டற்பண்பு விசை > ஒருங்கிணையும் விசை{θ<90°}
திரவம் குழிவுப்பிறையுருவானது திரவம் சுவருடன் ஒட்டிக்கொள்ளும்.
ஒருங்கிணையும் விசை> ஒட்டற்பண்பு விசை{ θ>90° }
திரவம் குவிவுப்பிறையுருவாக இருக்கும். திரவமேற்பரப்பு சுவரிலிருந்து தள்ளப்படும்.
தொடுகைக் கோணம்
![33]()
திண்ம மேற்பரப்பும், திரவமேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியில் வரையப்படும்
திண்மத்தொடலி தளத்திற்கும், திரவத் தொடலி தளத்திற்கும் இடைப்பட்ட திரவத்தினூடு அமைந்த கோணம் தொடுகைக் கோணம் எனப்படும்.
தொடுகைக் கோணம் திண்மமேற்பரப்பு திரவத்தின் தன்மையில் தங்கியது.
தூய கண்ணாடிக்கும் தூய நீருக்கும் இடையில் தொடுகைக் கோணம் பூச்சியமாகும்
.
இரசத்திற்கும் கண்ணாடிக்கும் இடையேயான தொடுகைக்கோணம் 140° ஆகும்.
மேற்பரப்பை நனைக்கும் திரவங்களின் தொடுகைகோணம் பூச்சியமாகும்.
சுயாதீன மேற்பரப்பு சக்தி
சமவெப்பு நிபந்தனைக்கமைய திரவமொன்றின் மேற்பரப்பானது மேற்பரப்பிழுவைக்கு எதிராக ஒருசதுர மீற்றரினால் அதிகரிக்கப்படும் போது செய்யப்படும் வேலை சுயாதீன மேற்பரப்பு சக்தி ஆகும்.
σ = W/ A
அலகு – Jm-2
செய்யப்பட்டவேலை =விசை * தூரம்
W = 2LT Δ x
பரப்பு = 2L Δ x
σ = W/A = 2LT Δ x/ 2L Δ x
σ = T
மேற்பரப்பிழுவை = சுயாதீன மேற்பரப்பு சக்தி
வெப்பநிலையானது கூடும்போது மேற்பரப்பு இழுவிசை குறையும்.
![34]()
மயிர்த்துளைக் குழாயில் திரவ எழுகை
![35]()
ஓட்டற்பண்பு விசை ஒருங்கிணைவு விசையிலும் உயர்வாக இருக்கும் போது விளையுள் விசையின் நிலைக்குத்து கூறு திரவத்தை மேலே எழச் செய்யும். அவ் நிலைக்குத்து விசை திரவத்தின் நிறைக்கு சமனும் எதிரும் ஆனதும் திரவம் ஏறுவது நிற்கும்.
திரவநிரலின் நிறை = குழாயில் தாக்கும் விசையின் நிலைக்குத்து கூறு
Mg = 2πr TCOSQ
πr2 hpg = 2πr TCOSQ
h = 2TCOSQ/ rpg
தொடுகைக் கோணம் பூச்சியம் ஆயின் = 0
h = 2T/ rpg
![36]()
![16]()
h = 2T R/RΡg R-பிறையுருவின் ஆரை
தொடுகைக் கோணம் கூர்ங்கோணமாக உள்ள திரவங்கள் மயிர்த்துளைக் குழாய்களில் மேலே ஏறும். தொடுகைக் கோணம் விரிகோணமாக உடைய திரவங்கள் கீழ் நோக்கி இறங்கும்.
மயிர்த்துளை எழுகை வளிமண்டல அமுக்கத்தில் தங்காது.
கோளப்பிறையுருவுக்கு குறுக்கேயான அமுக்கவித்தியாசம்
திரவத்தினுள் உள்ள குமிழினுள் மிகை அமுக்கம்
அரைக்கோள குமிழியின் சமனிலைக்கு உள் அமுக்கம் (P1) ஆலான விசை = வெளி அமுக்கம் (P2) ஆலான விசை + மேற்பரப்பிழுவை
![37]()
![17]()
![38]()
PA – PB = 2T/r
PC – PD = 2T/r
வளியில் குமிழினுள் மிகை அமுக்கம்
அரைக்கோள குமிழியின் சமனிலைக்கு
உள் அமுக்கம் (P1) ஆலான விசை = வெளி அமுக்கம் (P2) ஆலான விசை+ மேற்பரப்பிழுவை
![39]()
![18]()
புவசேயின் சூத்திரத்தை உபயோகித்து திரவம் ஒன்றின் பிசுக்குமைக் குணகம் துணிதல்
![41_1]()
தரப்பட்ட உருவமைப்பை ஒழுங்கு செய்து உறுதி நிலை வ யில் அளவுச் சாடியில் சேகரிக்கப்படும் திரவத்தின் ஏ கனவளவு துணியப்படும்
புவசேயின் சூத்திரப்படி,
![19]()
![42]()
ஆரம்பத்தில் மயிர்த்துளைக் குழாயை முதலில் யே NaOH, HCL நீரினால் கழுவி பின் பின்வரும் அமைப்பை அமைத்து அளவுச்சாடியினுள் குறித்த நேரம் போதுமான அளவு நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அருவிக் கோட்டுப் பாய்ச்சலை பேணுவதற்காக குழாயினூடு திரவம் மெதுவாகப் பாய வேண்டும். ஏனெனில் அருவிக் கோட்டு பாய்ச்சலுக்கு மாத்திரமே புவசேயின் சமன்பாடு உண்மை.
மயிர்த்துளைக் குழாயினுள் இரசநிரலை புகுத்தி உள் ஆரை துணியப்படும் பின் இரசத்தின் நிறை முத்துலாத் தராசினால் அறியப்பட்டு ஆரை துணியப்படும்.
r4 பெறுமானம் மிகச்சிறியது என்பதால் திருத்தமாக அளவிடல் வேண்டும்.
ஸ்ரோக்கின் விதியை உபயோகித்து இருதிரவங்களின் பிசுக்குமையை ஒப்பிடல்
உயரமான பாத்திரத்தில் பிசுக்குமைக் குணகம் ஒப்பிடவேண்டிய திரவத்தை எடுத்து சிறிய உருக்கு கோளம் மேலிருந்து கீழே விழ விடப்படும்.A யிலிருந்து B க்கு செல்ல எடுக்கும் நேரம் t1 அளக்கப்படும்.
![43]()
முதலாவது திரவத்திற்கு![20]()
இரண்டாவது திரவத்திற்கு
Note :
* உருக்குக் கோளத்தின் ஆரை மிகச்சிறியதாக இருத்தல்வேண்டும். காரணம் ஆரை சிறிதாக இருக்கும்போதே முடிவு வேகம் சிறிதாக இருக்கும்.
*முடிவுவேகம் சிறிதாக இருக்கும்போதே ஸ்ரோக்கின் விதி உண்மையாகும்.
*இம்முறை பிசுக்குமை கூடிய திரவங்களுக்கும் அதிக அளவில் பெறக்கூடிய திரவங்களுக்குமே உகந்தது.
நுணுக்காட்டி வழுக்கியைப் பயன்படுத்தி திரவம் ஒன்றின் மேற்பரப்பு இழுவையை துணிதல்.
![44]()
தராசின் ஒருபுயத்தில் இருந்து ஒருநுணுக்குக்காட்டி வழுக்கி அதன் கீழ்ஓரம் கிடையாக இருக்குமாறு தொங்க விடப்படும்.
மறுபுயத்தில் நிறைப்படிகள் இடப்பட்டு நிறைப்படிகள் இடப்பட்டு தராசு சமனிலைப்படுத்தப்படும்.
வழுக்கியின் கீழ் ஓரத்தை மட்டுமட்டாக தொடுமாறு ஒரு முகவையில் உள்ள திரவம் பிடிக்கப்படும்.
மீண்டும் தராசு சமனிலை அடையும் வகையில் தராசுத் தட்டில் மேலதிக திணிவுகள் வைக்கப்படும்.
வழுக்கியின் மீது தொழிற்படும் =சுமை
பரப்பிழுவை
2(a + b) T = mg
T = mg/ 2(a + b)
T = abhpg/ 2(a + b)
நீளத்தை வேணியர் இடுக்கிமானியினாலும்ää தடிப்பை நுண்மானித் திருகு கணிச்சியாலும் அளக்கப்படும்.
பரிசோதனையின் ஆரம்பத்தில் நுணுக்குக்காட்டி வழுக்கியை எடுத்து முதலில் NaOH ஆலும் HCL கரைசலாலும்ää பின்னர் நீரிலும் நன்கு கழுவிச் சுத்திக்கரித்தல் வேண்டும்.
நீரின் பரப்பிழுவை வெப்பநிலையுடன் மாறும். எனவே வெப்பநிலையை குறித்துக் கொள்ளப்பட வேண்டும்.
மயிர்த்துளைக்குழாய் எழுகை முறையால் நீரின் பரப்பிழுவையை துணிதல்
![45]()
மயிர்த்துளைக் குழாய் முதலில் NaOH கரைசல் HCL கரைசல் பின் நீரினால் கழுவி பின்னர் உலர்த்திக் கொள்க.
நீரைக் கொண்ட முகவையின் உயரத்தை மாற்றத்தக்க விதத்தில் வாங்கியை வடிவமைக்க வேண்டும்.
பின் நகரும் நுணுக்குக்காட்டியை பிறையுருவின் அடிக்கு குவியப்படுத்தி வாசிப்பு பெறப்படும்.
. பின்னர் நீருடன் கூடிய முகவை அகற்றப்பட்டு நுணுக்குக் காட்டியை ஊசியின் கீழ் நுனிக்கு குவியபடுத்தி வாசிப்பு பெறப்படும்.
மயிர்த்துளை ஏற்றம் H = [H1 – H2
மயிர்த்துளையின் இடைவிட்டம் d = [x2 – x1] + [y2 – y1]
மயிர்த்துளை குழாயின் ஆரை = d/2
![46]()
![21]()
ஊசியை நீர்மட்டத்தை குறித்துக்கொள்ள பயன்படும்.
மயிர்த்துளைக்கு குழாய் எழுகை வளிமண்டல அமுக்கத்தில் தங்கியில்லை.
வெப்பநிலையுடன் மேற்பரப்பு இழுவிசை மாறுபடுவதால் மயிர்த்துளை எழுகை வெப்பநிலையுடன் மாறுபடும்.
யோகரின் முறையால் திரவத்தின் மேற்பரப்பு இழுவையை துணிதல்
![47]()
பரப்பு இழுவையை அளக்க வேண்டிய திரவத்தின் பரப்பிழுவை வு உம்ää அடர்த்தி – P
மெலிமானி உள்ள மண்ணெண்யெண் அடர்த்தி – P2
திரவ நிரல் வித்தியாசம் (மெலிமானி) – h1
திரவ மட்டத்திலிருந்து மயிர்த்துளைக் குழாயின் அந்தம் வரையான ஆழம் – h2 வளிமண்டல அமுக்கம் – π
குமிழினுள் அமுக்கம் – (P1) = π 10 h1p1g
குமிழுக்கு வெளியே அமுக்கம் – P2= π 10 h2p2g
மேலதிக அமுக்கம் = P1 – P2
= (h1p1g – h2P2)
=2T/r(h1p1 – h2p2)g
=T=gr (h1p1 – h2p2)/2
மெலிமானியில் போதுமான அளவு மண்ணெண்ணெய் (P1) இடுக.
உபகரணத்தில் உள்ள மயிர்த்துளைக் குழாய் நிலைக்குத்தாக அமையுமாறு தாங்கியொன்றின் மூலம் இணைக்க.
பரப்பு இழுவையைத் துணிய வேண்டிய திரவத்தைச் சிறிய முகவையில் இட்டு மயிர்த்துளைக் குழாயின் கீழ் அந்தம் அத்திரவத்தினுள் அமிழும் வகையில் அமிழ்த்துக.
பெரிய குடுவையினுள் நீர் பாயுமாறு T1 வாயிலை திறக்க பின் குடுவையினுள் உள்ள வளியின் அமுக்கம் படிப்படியாக அதிகரித்து மயிர்த்துளைக் குழாயின் திரவத்தில் அமிழ்ந்துள்ள அந்தத்தில் வளிக் குமிழியொன்று உருவாகிää மெதுவாக வளிக்குமிழி வெளியேறும்.
மெலிமானியின் 2 திரவப் பிறையுருவுக்கும் இடையிலான உயர வித்தியாசம் பெற யு புயத்தின் திரவப் பிறையுருவை நகரும் நுணுக்குக் காட்டியின் மூலம் அவதானித்தல் அளவிடையைப் பெறல்.
B புயத்தின் திரவப் பிறையுருவையும் நகரும் நுணுக்குக் காட்டியின் மூலம் அவதானித்து அளவிடையைப் பெறல்.
![48]()
h1 = (H4 – H3)
h2 = (H2 – H1)
d = [(y1 – y2) + (x1 – x2)]/2
- உற்பத்திக் காரணிகளுக்குக் காணப்படும் கேள்வி நிரம்பல் என்பவற்றினால் காரணிகளின் விலை நிர்ணயமாகிறது.
- உற்பத்திக்காரணி விலை மற்றும் காரணிச் சந்தையில் பரிமாற்றப்படும் காரணிகளின் தொகை என்பவற்றின் அடிப்படையில் காரணி வருமானங்கள் தீர்மானிக்கப்படும்.
- இறுதிப் பொருட்கள் சேவைகளுக்குக் காணப்படும் கேள்வியின் அடிப்படையில் உற்பத்திக் காரணிகளுக்கான கேள்வி இருப்பதனால் உற்பத்திக் காரணிகளுக்குக் காணப்படும் கேள்வி வழிவந்த கேள்வியாகும்.
- குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உற்பத்திச் செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றும் உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடுத்த எதிர்பார்க்கின்ற இயற்கை வளங்கள் நிலத்தின் நிரம்பல்.
- நிலத்தின் நிரம்பல் நெகிழ்வற்றது.
- புதிய வளக் கண்டுபிடிப்பு, வளங்களின் அழிவு அல்லது தேய்வு காரணமாக நிலத்தின் நிரம்பல் மாற்றமடையும்.
- தரப்பட்ட சந்தர்ப்பமொன்றில் பயன்வாய்ந்த பொருளாதார நடவடிக்கையொன்றில் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றும் பயன்படுத்த எதிர்பார்க்கின்ற உழைப்பு அலகுகளின் மொத்தம் உழைப்பின் நிரம்பலாகும்.
- உழைப்பின் நிரம்பல் பின்வரும் இரண்டு காரணிகளால் தீர்மானிக்கப்படும்:
- உழைப்பாளர் படை
- உழைப்பாளன் ஒருவன் வேலை செய்கின்ற சராசரி காலம்
- தரப்பட்ட சந்தர்ப்பமொன்றில் முதலீட்டுக்காக பயன்படுத்தப்படும் நிதிகளின் அளவு மூலதன நிரம்பலாகும்.
- கீழ்த் தரப்படும் அம்சங்களின் அடிப்படையில் மூலதனத்தின் நிரம்பல் தீர்மானிக்கப்படும்.
- உள்நாட்டுச் சேமிப்பு
- நேரடி வெளிநாட்டு முதலீடு
- வெளிநாட்டுக் கடன்களும் உதவிகளும்