பாறைகள்
- கனியங்களின் சேர்க்கையால் உருவான திண்மையான படையே பாறைகளாகும்.
- பாறைகள் கனிப்பொருள்,அளவு, வடிவம், வயது என்பனவற்றைக் கொண்டு பல வகைப்படுத்தலாம்.
- பாறைகள் உருவான விதத்தினை பொருத்து 03 வகைப்படுத்தலாம்.
1. தீப்பாறை
2. அடையற்பாறை
3. உருமாறிய பாறை
தீப்பாறை
- எரிமலையின் செயற்பாடுகளால் இப் பாறைகள் உருமாறுகின்றன.
- தள்ளல் தீப்பாறை புவியின் மேற்பரப்பில் குழம்பு வந்து படிவதால் தீப்பாறை உருவாகின்றது.
- ஏரிமலை குழம்பு பாறை படைகளுக்கு இடையே படிந்து இருகுவதனால் தலை தீப்பாறை உருவாகிறது.
- தலையீட்டு தீப்பாறையினை இரு வகையில் நோக்கலாம்.
- பாதாளப் பாறை
- கீழ் பாதாளப் பாறை
தீப்பாறையினை அவைக் கொண்டுள்ள சிலிக்காவின் அடிப்படையிலும் பாகுப்படுத்தலாம்.
மூலப்பாறைகள்
- கருமையானதாக இருக்கும்.
- தோலமைற்று, கப்ரோ பாறைகள் அதிகம்.
- இதில் சிலிக்காவின் அளவு 55% குறைவாகும்.
இடைத்தரப் பாறைகள்
- கருமை , இடைப்பட்ட நிறத்தில் காணப்படும்.
- சிலிக்காவின் அளவு 55%-75% வரை காணப்படும்.
அமிலப்பாறைகள்
- இளம் மென் நிறத்தைக் கொண்டவை.
- 70% சிலிக்கனும் 20% குறைவாக இரும்பும் காணப்படும்.
தீப்பாறைகளை அவைக் கெண்டுள்ள நுண் துணிக்கைகளைக் கொண்டு பாகுப்படுத்தலாம்.
- நுண் துணிக்கைகளை கொண்டது.
- நடுத்தர துணிக்கைகளை கொண்டவை.
- கரடுமுரடான துணிக்கைகளை கொண்டவை.
அடையற்பாறை
- புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற திண்மப்பாறைகள் பௌதீக, இரசாயன, உயிரியல் மனித செயற்பாடுகள் மற்றும் உரிவிக் கருவிகளின் செயற்பாடுகள் காரணமாக சிதைவிற்கு உட்பட்டு அவை காவிக்கருவிகளினால் தாழ் நிலங்கள், பள்ளங்கள், குளங்கள் மற்றும் கழிமுகங்கள் பகுதிகளிள் படிவு செய்யப்படுகின்றன இவையே அடையற்பாறைகளாகும்.
- இப்பாறை படைப்படையாக அமைந்துக் காணப்படும்.
- அடையற்பாறைகள் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் 03 வகைப்படும்.
பொறிமுறையால் உருவான பாறைகள்.
- வானிலை அழிதல் மூலம் உருவானப்பாறைகள்.
- தின்னல் கருவிகளால் அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் படிந்து உருவான பாறைகள்.
உதாரணம்: மணற்கள், பரல், மாக்கள்
இரசாயன முறையால் உருவானவை
- இரசாயனமுறை வானிலையால் உருவானவை.
- கரைசல் மூலம் இரசாயனப் பொருட்கள் படிந்து இருகுவதனால் உருவானவை.
உதாரணம்: தொலமைட் ஜிப்சம், நிக்கல், ஏமதைட்
உயிர் இரசாயன படிவுகள்
- சேதன முறை வானிலை அழிதலினால் உருவானவை.
- கடல் உயிர் சுவட்டுக்கள் மூலம் உருவானவை.
உதாரணம்: சுண்ணாக்கல் முருகைக்கற் பிழவுகள். - உயிருள்ள பொருட்களின் சுவடுகள் பிரிந்து இறுகி உருவானவை.
உதாரணம்: நிலக்கரிப் பாறை, க்லைனைட்
இவ் அடையற் பாறைகளில் சுண்ணகற் பாறைகள் முக்கியமானவை.
உருமாறிய பாறைகள்
- நேரடியாக தாய்பாறைகள் தமது ஆரம்ப நிலை கட்டமைப்பில் இருந்து மாற்றம் பெற்றவை.
- தீப்பாறை, அடையற் பாறை என்பன உருமாறிய பாறையாக உருவாகும்.
- தோற்றம், இயல்பு, கனிப்பொருள் சேர்கை, உறுதித்தன்மை என்பன மாற்றமடையும் போது பாறைகள் உருமாறிய பாறைகள என அழைக்கப்படும்.
உருமாற்றச் செயன்முறைகளில் கபலநிலை முக்கியம் பெறுகின்றது.
- வெப்பம் காரணமாக வெப்ப உருமாற்றம்.
- வேறுபட்ட இயக்க விசை செயற்பாடுகளினால் அமுக்க விசை உருமாற்றம்.
- வெவ்வேறு பிரதேசங்களுக்கு ஏற்ப பிரதேச உருமாற்றம்.
என பாறைகள் 03 செயன்முறைகளில் உருமாற்றமடைகின்றன.
திரேனைட்⇒ நயில் பாறை ⇒ மணற்கல் ⇒ தகடாகா பாறை ⇒ சுண்ணக்கள் ⇒ மாபில் பாறை
இலங்கையின் பாறைகள்
- இலங்கையில் காணப்படும் பாறைகளில் 90% சுமார் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றவை.
- இப்பாறைகள் பிரதான 03 கல்லியல் வளங்களாக பிரித்து நோக்கப்படுகிறது.
விஜயன் தொகுதி (உருமாறிய பாறைகள்)
- இவை இலங்கையின் தொல்கால தீப்பாறைகளாகும்.
- இவை கேம்பிரியன காலத்தற்கு முற்பட்டவை.
- வானிலையால் அழிதலால் கனிப் பொருட்கள் படை படையாக பளிங்கு அமைப்பில் காணப்படும்.
- இப்பாறைகள் கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு வரை காணப்படுகின்றது.
- மத்திய தலை நாட்டின் உயர் நிலப் பகுதிக்கு கிழக்கிலும் வடமேல் பகுதியிலும் காணப்படுகின்றது.
உயர் நிலத்தொடர் உருமாறிய பாறைகள்
- இதனை கொண்டலைற் பாறைகள் எனவும் அழைப்பர்.
- இலங்கையின் மத்திய பகுதியில் அதிகளவு பரந்துள்ளது.
- தீப்பாறை அடையற் பாறைகளின் உருமாற்றத்தால் உருவாகின்றது.
அடையற் பாறைகள்
- வடக்கு, வடமேற்கு மற்றும் கரையோர பகுதிகளில் காணப்படுகிறது.
- முல்லைத்தீவு, பரந்தன் தொடக்கம் புத்தளம் வரை காணப்படுகிறது.
- உருமாற்றம் அடையாத அடையற் பாறைகளால் உருவானவை.
பாறை வட்டம்
- பாறைகள் மாற்றத்திற்கு உட்பட்டு வட்ட செயன்முறையில் உருவாகின்றன.
- பூமியில் ஆரம்பத்தில் தோற்றம் பெற்றது தீப்பாறையாகும்.
- அப் பொருட்கள் மூலம் அடையற் பாறைகள் உருவாகின்றன.
- பின் தீப்பாறை, அடையற்பாறையாக மாற்றமுற்று உருமாறிய பாறைகளாக உருவாகின்றன.
- தொடர்ந்து மென்மையான இடத்தில் லாவா வெளி வந்து தீப்பாறை உருவாகிறது.
- இச் செயற்பாடு தொடர்ந்து நடைபெறுவதே கூட்டுச் செயன்முறையாகும்.
மண்
பாறைகள் சிதைவடைவதன் மூலம் உருவாகும் சேதன, அசேதன பொருட்கள் மண்ணாகும்.