Please Login to view full dashboard.

புவியின் பௌதிக வானிலை காலநிலை

Author : Admin Astan

0  
Topic updated on 05/23/2023 11:55am

பாறைகள்

  • கனியங்களின் சேர்க்கையால் உருவான திண்மையான படையே பாறைகளாகும்.
  • பாறைகள் கனிப்பொருள்,அளவு, வடிவம், வயது என்பனவற்றைக் கொண்டு பல வகைப்படுத்தலாம்.
  • பாறைகள் உருவான விதத்தினை பொருத்து 03 வகைப்படுத்தலாம்.
    1.  தீப்பாறை
    2. அடையற்பாறை
    3. உருமாறிய பாறை

தீப்பாறை

  • எரிமலையின் செயற்பாடுகளால் இப் பாறைகள் உருமாறுகின்றன.
  • தள்ளல் தீப்பாறை புவியின் மேற்பரப்பில் குழம்பு வந்து படிவதால் தீப்பாறை உருவாகின்றது.
  • ஏரிமலை குழம்பு  பாறை படைகளுக்கு இடையே படிந்து இருகுவதனால் தலை தீப்பாறை உருவாகிறது.
  • தலையீட்டு தீப்பாறையினை இரு வகையில் நோக்கலாம்.
  1. பாதாளப் பாறை
  2. கீழ் பாதாளப் பாறை

தீப்பாறையினை அவைக் கொண்டுள்ள சிலிக்காவின் அடிப்படையிலும் பாகுப்படுத்தலாம்.

மூலப்பாறைகள்

  • கருமையானதாக இருக்கும்.
  • தோலமைற்று, கப்ரோ பாறைகள் அதிகம்.
  • இதில் சிலிக்காவின் அளவு 55% குறைவாகும்.

இடைத்தரப் பாறைகள்

  • கருமை , இடைப்பட்ட நிறத்தில் காணப்படும்.
  • சிலிக்காவின் அளவு 55%-75% வரை காணப்படும்.

அமிலப்பாறைகள்

  • இளம் மென் நிறத்தைக் கொண்டவை.
  • 70% சிலிக்கனும் 20%  குறைவாக இரும்பும் காணப்படும்.

தீப்பாறைகளை அவைக் கெண்டுள்ள நுண் துணிக்கைகளைக் கொண்டு பாகுப்படுத்தலாம்.

  • நுண் துணிக்கைகளை கொண்டது.
  • நடுத்தர துணிக்கைகளை கொண்டவை.
  • கரடுமுரடான துணிக்கைகளை கொண்டவை.

அடையற்பாறை

  • புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற திண்மப்பாறைகள் பௌதீக, இரசாயன, உயிரியல் மனித செயற்பாடுகள் மற்றும் உரிவிக் கருவிகளின் செயற்பாடுகள் காரணமாக சிதைவிற்கு உட்பட்டு அவை காவிக்கருவிகளினால் தாழ் நிலங்கள், பள்ளங்கள், குளங்கள் மற்றும் கழிமுகங்கள் பகுதிகளிள் படிவு செய்யப்படுகின்றன  இவையே அடையற்பாறைகளாகும்.
  • இப்பாறை படைப்படையாக அமைந்துக் காணப்படும்.
  • அடையற்பாறைகள் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் 03 வகைப்படும்.

பொறிமுறையால் உருவான பாறைகள்.

  • வானிலை அழிதல் மூலம் உருவானப்பாறைகள்.
  • தின்னல் கருவிகளால் அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் படிந்து உருவான பாறைகள்.
    உதாரணம்: மணற்கள், பரல், மாக்கள்

இரசாயன முறையால் உருவானவை

  • இரசாயனமுறை வானிலையால் உருவானவை.
  • கரைசல் மூலம் இரசாயனப் பொருட்கள் படிந்து இருகுவதனால் உருவானவை.
    உதாரணம்: தொலமைட் ஜிப்சம், நிக்கல், ஏமதைட்

உயிர் இரசாயன படிவுகள்

  • சேதன முறை வானிலை அழிதலினால் உருவானவை.
  • கடல் உயிர் சுவட்டுக்கள் மூலம் உருவானவை.
    உதாரணம்: சுண்ணாக்கல் முருகைக்கற் பிழவுகள்.
  • உயிருள்ள பொருட்களின் சுவடுகள் பிரிந்து இறுகி உருவானவை.
    உதாரணம்: நிலக்கரிப் பாறை, க்லைனைட்

இவ் அடையற் பாறைகளில் சுண்ணகற் பாறைகள் முக்கியமானவை.

உருமாறிய பாறைகள்

  • நேரடியாக தாய்பாறைகள் தமது ஆரம்ப நிலை கட்டமைப்பில் இருந்து மாற்றம் பெற்றவை.
  • தீப்பாறை, அடையற் பாறை என்பன உருமாறிய பாறையாக உருவாகும்.
  • தோற்றம், இயல்பு, கனிப்பொருள் சேர்கை, உறுதித்தன்மை என்பன மாற்றமடையும் போது பாறைகள் உருமாறிய பாறைகள என அழைக்கப்படும்.

உருமாற்றச் செயன்முறைகளில் கபலநிலை முக்கியம் பெறுகின்றது.

  • வெப்பம் காரணமாக வெப்ப உருமாற்றம்.
  • வேறுபட்ட இயக்க விசை செயற்பாடுகளினால் அமுக்க விசை உருமாற்றம்.
  • வெவ்வேறு பிரதேசங்களுக்கு ஏற்ப பிரதேச உருமாற்றம்.

என பாறைகள் 03 செயன்முறைகளில் உருமாற்றமடைகின்றன.

திரேனைட்⇒ நயில் பாறை ⇒ மணற்கல் ⇒ தகடாகா பாறை ⇒ சுண்ணக்கள் ⇒ மாபில் பாறை

இலங்கையின் பாறைகள்

  • இலங்கையில் காணப்படும் பாறைகளில் 90% சுமார் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றவை.
  • இப்பாறைகள் பிரதான 03 கல்லியல் வளங்களாக பிரித்து நோக்கப்படுகிறது.

விஜயன் தொகுதி (உருமாறிய பாறைகள்)

  • இவை இலங்கையின் தொல்கால தீப்பாறைகளாகும்.
  • இவை கேம்பிரியன காலத்தற்கு முற்பட்டவை.
  • வானிலையால் அழிதலால் கனிப் பொருட்கள் படை படையாக பளிங்கு அமைப்பில் காணப்படும்.
  • இப்பாறைகள் கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு வரை காணப்படுகின்றது.
  • மத்திய தலை நாட்டின் உயர் நிலப் பகுதிக்கு கிழக்கிலும் வடமேல் பகுதியிலும் காணப்படுகின்றது.

உயர் நிலத்தொடர் உருமாறிய பாறைகள்

  • இதனை கொண்டலைற் பாறைகள் எனவும் அழைப்பர்.
  • இலங்கையின் மத்திய பகுதியில் அதிகளவு பரந்துள்ளது.
  • தீப்பாறை அடையற் பாறைகளின் உருமாற்றத்தால் உருவாகின்றது.

அடையற் பாறைகள்

  • வடக்கு, வடமேற்கு மற்றும் கரையோர பகுதிகளில் காணப்படுகிறது.
  • முல்லைத்தீவு, பரந்தன் தொடக்கம் புத்தளம் வரை காணப்படுகிறது.
  • உருமாற்றம் அடையாத அடையற் பாறைகளால் உருவானவை.

பாறை வட்டம்

  • பாறைகள் மாற்றத்திற்கு உட்பட்டு வட்ட செயன்முறையில் உருவாகின்றன.
  • பூமியில் ஆரம்பத்தில் தோற்றம் பெற்றது தீப்பாறையாகும்.
  • அப் பொருட்கள் மூலம் அடையற் பாறைகள் உருவாகின்றன.
  •  பின் தீப்பாறை, அடையற்பாறையாக மாற்றமுற்று உருமாறிய பாறைகளாக உருவாகின்றன.
  • தொடர்ந்து மென்மையான இடத்தில் லாவா வெளி வந்து தீப்பாறை உருவாகிறது.
  • இச் செயற்பாடு தொடர்ந்து நடைபெறுவதே கூட்டுச் செயன்முறையாகும்.

மண்

பாறைகள் சிதைவடைவதன் மூலம் உருவாகும் சேதன, அசேதன பொருட்கள் மண்ணாகும்.

RATE CONTENT
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank