A,B,C,D,E எனப் பெயரிடப்பட்ட ஐந்து விலங்கு இனங்களின் உட்பிரதேசத்திற்குரிய இயல்பு, ஏராளம் (abundance),ஊட்டற் பழக்கம் என்பன பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
A:உட்பிரதேசத்துக்குரியது, பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றது, மிக அண்மைக் காலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது, அனைத்துமுண்ணி.
B:உட்பிரதேசத்துக்குரியதல்லாதது. பெரும் எண்ணிக்கையில் காணப்படுகிறது, ஊனுண்ணி, விசேட உணவுப் பழக்கம் உண்டு.
C:உட்பிரதேசத்துக்குரியது, சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது, தாவரவுண்ணி, விசேட உணவுப் பழக்கம் உண்டு.
D:உட்பிரதேசத்துக்கு உரியதல்லாதது சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது, தாவரவுண்ணி, விசேடமற்ற உணவுப் பழக்கம் உண்டு.
E:உட்பிரதேசத்துக்குரியது, சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது, அனைத்துமுண்ணி
மேற்குறித்த இனங்களில் எது கிட்டிய எதிர்காலத்தில் பெரும்பாலும் அழியும் ஆபத்துக்குள்ளாவதாக இருக்கலாம்?