பட்கெரிகார் (Budgerigar) பறவைகள் நீலம், பச்சை,மஞ்சள், வெள்ளை என்னும் நான்கு வகை நிறங்க ளில் காணப்படும் இந் நான்கு வகைகளையும் தூயவழிகளில்பேணலாம்.தூயவழிவகைகள்இனங்கலக்கப்படும் போது பின்வரும் பெறுபேறுகள் பெறப்ப டுகின்றன.
மஞ்சள் நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் மஞ்சள் நிறமுள்ளனவாக இருந்தன.
நீல நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் நீல நிறமுள்ளனவாக இருந்தன.
பச்சை நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் பச்சை நிறமுள்ளனவாக இருந்தன.
மஞ்சள் நிறமுள்ள ஒன்றை நீல நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் பச்சை நிறமுள்ளனவாக இருந்தன.
நிறத்தின் தலைமுறையுரிமை தொடர்பாக இப்பெறுபேறுகளிலிருந்துமேற்கொள்ள முடியாத கருதுகோள் பின்வருவனவற்றுள் எது?