பயற்றைத் தாவரத்தின் செந்நிறப் பூக்கள் (W) வெண்ணிறப் பூக்களுக்கு (w) ஆட்சியுடையவை. பச்சைநிற வித்துக்கள் (Y) மஞ்சள் நிற வித்துக்களுக்கு (y) ஆட்சியுடையவை. செந்நிறப் பூக்களையும், பச்சைநிற வித்துக்களையும் கொண்ட தாவரமொன்றைப் பின்னடைவான ஓரினநுகமுள்ள தாவரமொன்றுடன் பின்முகக் கலப்புச் செய்தபோது கிடைத்த தோன்றல் தாவரங்களுள் 52% ஆனவை செந்நிறப் பூக்களையும், பச்சை நிற வித்துக்களையும் கொண்டு காணப்பட்டன. 48% மானவை செந்நிறப் பூக்களையும் மஞ்சள் நிற வித்துக் களையும் கொண்டவையாகக் காணப்பட்டன. பின்முகக் கலப்புப் பிறப்பாக்கத்துக்குட்படுத்தப்பட்டன பெற்றார்த் தாவரத்தின் பிறப்புமையமைப்பு யாது?