உற்பத்திக் கம்பனியொன்று மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சிக்கனக் கட்டளைத் தொகையினை மறுகட்டளைத் தொகையாகப் பயன்படுத்துகிறது.
பின்வரும் தகவல்கள் மூலப்பொருள் உருப்படி ஒன்றுடன் தொடர்பானவையாகும்.
கட்டளையிடற் கிரயம் – கட்டளையொன்றிற்கு ரூ. 750
இருப்பு வைத்திருத்தற் கிரயம் – வருடாந்தம் அலகொன்றுக்கு ரூ. 10
மாதாந்த கேள்வி – 5 000 அலகுகள்
மூலப்பொருளின் சிக்கனக் கட்டளைத் தொகை மற்றும் வருடாந்த கட்டளையிடற் கிரயம் என்பன பின்வருவனவற்றுள் யாவை?