கம்பனியொன்றில் இரண்டு உற்பத்திக் கிரய நிலையங்களும் இரண்டு சேவைக் கிரய நிலையங்களும் காணப்படுகின்றன. கிரய நிலையங்களில் ஏற்பட்ட மேந்தலைகள் பின்வருமாறு உள்ளது :
உற்பத்திக் கிரய நிலையங்கள் : இயந்திரப் பகுதி – ரூ. 80 600, ஒன்று சேர்த்தல் பகுதி – ரூ. 43 000
சேவைக் கிரய நிலையங்கள் : களஞ்சியம் – ரூ. 37 000, தேநீர்சாலை – ரூ. 30 000
களஞ்சியமானது 80% ஆன தனது சேவைகளை இயந்திரப் பகுதிக்கும் 20% ஆனதை ஒன்றுசேர்த்தல் பகுதிக்கும் வழங்குகின்றது. தேநீர்சாலையானது 50% ஆன சேவைகளை இயந்திரப் பகுதிக்கும், 40% ஆனதை ஒன்று சேர்த்தல் பகுதிக்கும் 10% ஆனதை களஞ்சியத்திற்கும் வழங்குகின்றது. களஞ்சியத்தின் மேந்தலை மீள்பகிர்வானது தேநீர்சாலையின் மேந்தலைகளை மீள்பகிர்வு செய்த பின்னரே செய்யப்படுகிறது.
சேவைக்கிரய நிலையங்களின் மொத்த மேந்தலைகளை மீள் பகிர்வு செய்த பின்னரான இயந்திரப் பகுதியின் மொத்த மேந்தலைக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?