வரையறுத்த GM கம்பனி குத்தகை அடிப்படையில் கணனி இயந்திரங்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்தது. கணனி இயந்திரங்களின் பெறுமதியில் உடன் காசு ரூபா 85 000 செலுத்தி உடன் குத்தகை கட்டணம் ரூபா 60 000 வீதம் 5 வருடாந்த தவணைகளில் செலுத்தி முடிக்கப்படும். 5 வருடங்களுக்கான குத்தகை வட்டி முறையே ரூபா 8 000, ரூபா 6 500, ரூபா 5 000, ரூபா 3 500, ரூபா 2 000 ஆகும். இத்தொகை வருடாந்த குத்தகை கட்டணம் 60 000 இல் உள்ளடங்கும் குத்தகை கட்டணம் ஆனது ஒவ்வொரு வருடமும் நிதி வருட முடிவில் செலுத்தப்படும்.
கணனி இயந்திரங்களுக்கு கிரயத்தில் 10% தேய்வு இடப்படும். மூன்றாம் ஆண்டு முடிவில் கணனி இயந்திரம், குத்தகை தொடர்பாக ஐந்தொகையில் நடைமுறையல்லா பொறுப்பாக வெளிப்படுத்தப்படும் தொகை யாது?