ACC-U10-65

Author : Admin

Topic updated on 04/27/2018 11:39am

பாலன், கேசவன் ஆகியோர் முறையே ரூ. 3 000 000, ரூ. 4 000 000 மூலதனமிட்டு 01.04.2012 இல் பங்குடைமையொன்றை, ஆரம்பித்துள்ளனர். அவர்கள் பின்வரும் நிபந்தனைகளிற்கு உடன்பட்டுள்ளனர்.

  • பாலன், கேசவன் ஆகியோர் முறையே ரூ. 450 000, ரூ. 750 000 வருடாந்த சம்பளம் பெற உரித்துடையவர்கள்.
  • ஒவ்வொரு பங்காளனும் மூலதனத்தில் 10% வருடாந்த வட்டிக்கு உரித்துடையவர்கள்.
  • பாலன், கேசவன் ஆகியோருக்கிடையில் இலாப நட்டங்கள் சமமாகப் பகிரப்படும்.

31.03.2013 இல் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமையானது ரூ. 2 400 000 இலாபம் ஈட்டியுள்ளது.

பங்காளர்கள் இவ்வாண்டில் தமது சம்பளம், வட்டி ஆகியவைகளை காசாக எடுக்கவில்லை. ஜமீல் என்பவர் 31.03.2013 இல் பங்காளனாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மூலதனமாக ரூ. 2 000 000 இனைக் கொண்டு வந்துள்ளார். இத்தினத்தில் பங்குடைமையின் நன்மதிப்பு ரூ. 800 000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நன்மதிப்பானது புத்தகங்களில் சொத்தொன்றாகப் பதியப்பட்டிருக்கப்படவில்லை. இது பங்காளரின் மூலதனக்கணக்குகளுடாக சீராக்கம் செய்யப்பட்டுள்ளது. பாலன், கேசவன், ஜமீல் ஆகியோர் 01.04.2013 இலிருந்து பங்குடைமையின் இலாபநட்டங்களை முறையே 2:2:1 என்னும் விகிதத்தில் பகிரச் சம்மதித்துள்ளனர்.

பங்காளரின் 01.04.2013 இலுள்ளவாறான மூலதனக் கணக்கு மீதிகள் எவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply