கமல், விமல் ஆகியோர் தலா ரூபா 400 000 மூலதனத்துடன் போக்குவரத்துச் சேவையொன்றினை ஆரம்பிப்பதற்காக பங்குடைமை முயற்சியொன்றில் ஈடுபட்டு கனரக பேரூந்து ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ளனர். சேவையை ஆரம்பித்த மறுதினம் பேரூந்து துரதிஸ்ட வசமாக விபத்துக்குள்ளாகி முற்றாகச் சேதமடைந்தது. இவர்கள் இப்பேரூந்துக்கு முழுமையான காப்புறுதியினை மேற்கொள்ளாமல் மூன்றாம் நபர் காப்புறுதியினை மட்டும் செய்துள்ளனர். கமல், விமல் ஆகியோரின் இலாப நட்ட விகிதம் முறையே 2:1 ஆக இருந்தபோதிலும் விபத்தினால் ஏற்பட்ட நட்டம் ரூபா 1 200 000 ஆனது கமல், விமல் ஆகியோரிடையே முறையே ரூபா 400 000, ரூபா 800 000 எனப் பகிரப்பட்டுள்ளது.
இதற்கான வலுவான காரணமாகக் கருதக்கூடியது யாதெனில்