பியசீலி வணிகத்தின் 2016 சனவரி மாதம் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களும் மேலதிகத் தகவல்களும் பின்வருமாறு
பொருட்களின் கடன் கொள்வனவு ரூபா 20 000 வாக இருந்ததுடன் இவற்றுள் ரூபா 15 000 பெறுமதியான பண்டங்கள் மாதத்தினுள் கடனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அறவிடமுடியாக் கடன் பதிவழிப்பு ரூபா 3 000 ஆகும். கடந்த வருடத்தில் பதிவழிக்கப்பட்ட ரூபா 1 000 பெறுமதியான அறவிடமுடியாக்கடன் சனவரி மாதத்தினுள் மீளக் கிடைக்கப் பெற்றது.
சனவரி மாதத்திற்கான கிடைத்த மின் பட்டியல் ரூபா 5 000 ஆகும். 2016 பெப்ரவரி 10 ஆம் திகதி அது
செலுத்தப்பட்டது.
2016 சனவரி மாதத்திற்குரிய சம்பளமான ரூபா 10 000 அம்மாதத்தினுள் செலுத்தப்படவில்லை என்பதுடன், 2015 டிசம்பர் மாதத்திற்குரிய சம்பளம் ரூபா 8 000 செலுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட வணிகத்தின் 2016 சனவரி மாதத்தில் வருமானத்திற்கெதிராக சீராக்க வேண்டிய மொத்தச் செலவுகள் எவ்வளவு?