20.05.2012 இல் வரையறுக்கப்பட்ட நேத்ரா கம்பனியின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் நிறுவனத்தின் உள்ள சரக்குகள் அழிவுக்குள்ளாயின. பின்வரும் தகவல்கள் கணக்கேடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.
2012.03.31 முதல் 2012.05.20 வரை கொள்வனவுகள் ரூ. 900 000
2012.03.31 முதல் 2012.05.20 வரை விற்பனைகள் ரூ. 1 200 000
2012.03.31 இல் சரக்கிருப்பு ரூ. 120 000
கம்பனியானது கிரயத்துடன் 33 1/3% இலாபத்தை சேர்த்து பண்டங்களை விற்பனை செய்துள்ளது.
அழிவுற்ற சரக்குகள் தொடர்பாக 60% காப்புறுதிக் கம்பனி நட்ட ஈட்டினை வழங்குவதென ஒப்புக்கொண்டது.
2012.05.18 திகதி வழங்குநர் ஒருவரால் அனுப்பப்பட்ட ரூ. 20 000 கிரயமுள்ள பண்டங்கள் களஞ்சியசாலைக்கு வந்து சேரவில்லை. அழிவுற்ற சரக்கின் பெறுமதியாது?