வரையறுத்த ரேணுகா கம்பனியின் 31.03.2016 இலுள்ளவாறான பரீட்சை மீதியானது சமப்படவில்லை. இவ் வேறுபாடானது தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையானது
பின்வருவனவற்றை வெளிக்கொணர்ந்தது.
A – மின்சார செலவினங்களுக்காக செலுத்தப்பட்ட ரூ. 200 000 ஆனது காசுக் கணக்கில் மாத்திரம் பதியப்பட்டுள்ளது.
B – கொள்வனவு நாளேடானது ரூ. 60 000 இனால் கூடுதலாக கூட்டப்பட்டிருந்தது.
C – கடன்பட்டோரிடமிருந்து பெற்ற ரூ. 50 000 ஆனது கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் காசு கொடுப்பனவாக பதியப்பட்டிருந்தது.
D – ரூ. 40 000 விற்பனை விலைப்பட்டியலானது கடன்பட்டோர் பேரேட்டில் மாத்திரமே பதியப்பட்டுள்ளது.
மேலே தரப்பட்டுள்ள வழுக்கல்களில் எவை தொங்கல் கணக்கிலுள்ள மீதியிற்குப் பங்களித்துள்ளன?