2012 டிசம்பர் 31 இல் தயான் நிறுவனத்தின் பரீட்சைமீதி இணங்கியிருக்கவில்லை. கணக்கேடுகளிலிருந்து பின்வரும் வழுக்கள் அறியப்பட்டுள்ளது.
A – கொள்வனவு நாளேட்டின் கூட்டுத்தொகை ரூபா 12 500 கட்டுப்பாட்டுக் கணக்கில் ரூபா 15 200 என பதிவு செய்யப்பட்டுள்ளது.
B – விற்பனை நாளேடு ரூபா 5 200 இனால் கூடுதலாக கூட்டப்பட்டிருந்தது.
C – வாடகை செலவினம் ரூபா 3 500 அச்செலவினக் கணக்கில் ரூபா 5 300 என பதிவு செய்யப்பட்டிருந்தது.
D – உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை ரூபா 4 000 வெளித்திரும்பல் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேற்தரப்பட்ட வழுக்களில் இலாபத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தாத வழுக்கள் பின்வருவனவற்றுள் எது?