நிறுவனமொன்றின் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியானது 31.12.201இல் ரூபா 900,000 ஆகக் காணப்பட்டது. கடன்பட்டோர் பேரேட்டு பட்டியல் மீதியுடன் இணக்கம் செய்தபோது விற்பனை நாளேடு ரூபா 200,000 மிகையாகக் கூட்டப்பட்டதுடன் கடன்பட்டோர் ஒருவனின் மீதி ரூபா 50,000 பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளமையும் தெரிய வந்தது. தற்போதைய கடன்பட்டோர் கட்டுப்பாட்டு
மீதி அடிப்படையில் ஐயக்கடனுக்கு 10% ஏற்பாடு செய்யப்பட்டு கணிக்கப்பட்ட தேறிய இலாபம் ரூபா 625,000 ஆக இருந்தது. தேவையான திருத்தங்களினை மேற்கொண்ட பின் வருடத்திற்கான தேறிய இலாபம் யாது?