சாந்தன் வியாபார நிறுவனத்தில் பரீட்சை மீதியை பரிசீலனை செய்தபோது பின்வரும் வழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவையாவன,
– ரூபா 5,000 விற்பனை ஒன்று ஏடுகளிலிருந்து முற்றாகத்தவறவிடப்பட்டிருந்தது.
– கொடுத்த வாடகை ரூபா 5,000 பெற்ற வாடகை கணக்கில் கொண்டு சென்று ரூபா 4,000 செலவில் பதியப்பட்டது.
– வங்கி மேலதிகப் பற்று மீதி ரூபா 3,000 பரீட்சை மீதியில் ஓர் வரவு மீதியாகச் சேர்க்கப்பட்டிருந்தது.
– தளபாடக் கொள்வனவு ரூபா 5,000 கொள்வனவுக் கணக்கில் கொண்டு சென்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவற்றின் காரணமாக தொங்கல் கணக்கில் காணப்படும் மீதியையும், இத் தவறுகள் தேறிய இலாபத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தினையும் காட்டுவன?