Author : Admin
ஒவ்வொன்றும் மூன்று கூற்றுகளைக் கொண்ட ஐந்து சிறிய பந்திகள் ஒழுங்கின்றி உள்ளன. மீளவொழுங்குபடுத்தும்போது ஒரு வரிசையில் உள்ள சம்பவங்களைக் கொண்ட பந்தியை இனங்காண்க.
டேவிட் தினமும் காலையில் காட்டுப் புறாக்களுக்குக் கடலையை ஊட்டுகின்றார். கடலை புரதம் மிக்கது. முளைக்கும் கடலை நுகர்ச்சிக்குச் சிறந்தது.
திலீப்பின் தந்தை திலீப்பையும் அவருடைய முழுக் குடும்பத்தையும் மத்தள விமான நிலையத்திற்குச் சுற்றுலாவில் அழைத்துச் சென்றார். தீலீப் மத்தள விமான நிலையத்தைப் பார்க்க விரும்புகின்றான். திலீப் தனது தந்தையாரிடம் மத்தள விமான நிலையத்திற்கான பேருந்துப் பாதைபற்றி விசாரித்தான்.
கமலா கோயிலிற்கு வழிபடச் சென்றாள். மருத்துவர் கமலாவிற்கு மருந்து கொடுத்தார். கமலா நோய்வாய்ப்பட்டுள்ளாள்.
IPL ஆனது விளையாட்டு வீரர்களுக்குப் பெருந் தொகையான பணத்தைக் கொடுக்கின்றது. கிறிக்கெற்றுச் சூதாட்டம் என்பது சட்டவிரோதமாகப் பணத்தை உழைக்கும் ஒரு முறையாகும். சில விளையாட்டு வீரர்கள் கிறிக்கெற்றுச் சூதாட்டம் தொடர்பாகச் சந்தேகிக்கப்படுகின்றனர்.
தாய்ப் பறவை தனது குஞ்சுகளுக்காக உணவு தேடிச்சென்றது. தாய்ப் பறவை குஞ்சுகளைக் கவனிப்பதில்லை. பறவையின் கூட்டில் ஐந்து குஞ்சுகள் உள்ளன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human