தென்னையானது இலங்கையில் எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கி வளர்க்கப்படும் மூன்று பெருந் தோட்டப் பயிர்களில் ஒன்றாகும்.தென்னை 394 386 ஹெக்ரெயர் பரப்பளவை உள்ளடக்கும் அதேவேளை நெல்லிற்கு இரண்டாவதாக உள்ளது.பெருந் தென்னை வளர்க்கும் பிரதேசங்கள் மேல் மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் ஆகியனவாகும். வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டமும் புத்தளம் மாவட்டமும் கம்பஹா மாவட்டமும் (மேல் மாகாணத்தின் பகுதி) நாட்டின் மொத்தத் தென்னை வளர்க்கும் பிரதேசங்களின் 56.42% ஆக அமையும் அதேவேளை அவை தென்னை முக்கோணியை அமைக்கின்றன. பிரதேசத்தின் எஞ்சிய பகுதியில் (43.58%) தென் மாகாணமும் கிழக்கு மாகாணத்தினதும் வட மாகாணத்தினதும் பல பகுதிகளும் அடங்குகின்றன.
பின்வரும் கூற்றுகளில் எது மேற்குறித்த பந்தியில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை?