பறவைக் கூடு முன்பள்ளி வகுப்புகள் சீரான காலநிலை நாட்களில் மாத்திரம் நடாத்தப்படும். அத்துடன் சீரற்ற காலநிலை நாட்களில் நடாத்தப்படமாட்டா. மழை நாட்கள் அல்லது கடுங்காற்று வீசும் நாட்கள் மாத்திரம் சீரற்ற காலநிலை நாட்களாக கருதப்படுகின்றன. முன் பள்ளி அதிபரின் விவாகம் சென்ற ஜூலையின் கடைசி வியாழக்கிழமை நடைபெற்றது. அன்று முன்பள்ளி வகுப்புகள் நடைபெறவில்லை. தரப்பட்ட தகவல்களிலிருந்து இதற்கான காரணத்தை ஊகிக்கக் கூடியது யாதெனில்,