பணத்தைச் சேமிப்பதற்கு நுகர்வோருக்கு போட்டி வழிவகுக்குமெனக் கருதப்பட்டமையால் ஒரு குறித்த நாட்டில் தொலைத் தொடர்புத் தொழிலில் போட்டி மனப்பான்மையை விருத்தி செய்யும் எதிர்பார்ப்புடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கொள்கைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பகலில் இப்போது பெற்றுக் கொள்ளப்படும் தொலைதூரத் தொலைபேசி அழைப்புகள் தீர்மானம் மேற்கொள்ளப்படு முன்பாக இருந்ததிலும் பார்க்க இப்போது மலிவானவை. எனினும் தொலைதூர அழைப்புகளுக்காகச் சராசரி வதிவுப் பயன்படுத்துநரின் கட்டணங்கள் 25% இனால் அதிகரித்துள்ளன. பின்வருவனவற்றில் எது உண்மையாக இருப்பின், வதிவுப் பயன்படுத்துநர்களுக்கான தொலைதூரத் தொலைபேசி கட்டணங்கள் உயர்வாக இருப்பதை நேரடியாக விளக்குகின்றது?