அண்மையில் உலகில் பல்வேறு பிரதேசங்களில் காலநிலையுடன் தொடர்புபட்ட சுற்றாடல் மாற்றங்கள் ஏற்பட்டன. புவி வெப்பமாதல் அத்தகைய காலநிலையுடன் தொடர்புபட்ட சுற்றாடல் மாற்றங்களுக்குக் காரணம் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது. சுற்றாடலுக்குக் காபனை விடுவித்தலைக் குறைப்பதற்கான உலக உடன்படிக்கை 1997 ஆம் ஆண்டில் ஜப்பான் நகராகிய கியோற்றோவில் 150 நாடுகளின் பங்குபற்றுகையுடன் கைச்சாத்திடப்பட்டது. காலநிலை மாற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் முதலாவது முன் கியோற்றோ மாநாடு 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் நடைபெறற்றது. இம்மாநாடு எந்நகரத்தில் நடைபெற்றது?