Author : Admin
ஒவ்வொன்றிலும் மூன்று கூற்றுகளைக் கொண்ட ஐந்து சிறிய பந்திகள் உள்ளன. ஒரு பந்தியில் உள்ள மூன்று கூற்றுகள் ஒரு தருக்க ரீதியான தொடர்புடைமையைக் காட்டுகின்றன. தருக்க ரீதியான தொடர்புடைமையைக் காட்டும் பந்தியைத் தேர்ந்தெடுக்க.
கீதா திறமையான பெண். அவள் அலுவலகத்துக்கு காலையிலேயே வருகின்றாள். அவள் எட்டு மணித்தியாலத்துக்கு மேற்பட்ட காலத்துக்கு வேலை செய்கிறாள்.
கீதா அலுவலகத்துக்கு புகையிரதத்தில் வருகின்றாள். அவள் சில நாட்களில் வேலைக்குத் தாமதமாக வருகின்றாள். அவள் வேலை இல்லாதபோது நாவல்களை வாசிக்கின்றாள்.
கீதா பதவியுயர்வுச் சோதனை ஒன்றுக்கு தயாராகின்றாள். அவள் வார இறுதியில் அத்தகைய சோதனைகளுக்காக மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் வகுப்புக்குச் செல்கின்றாள். அவள் பதவியுயர்வுச் சோதனையில் சித்தியடைதல் கூடும்.
கீதா குடை வாங்க விரும்புகின்றாள். அவள் தற்போது பயன்படுத்தும் குடை பச்சை நிறமுள்ளது. அவள் அதனை இரு மாதங்களுக்கு முன்னர் வாங்கினாள்.
கீதா இரக்கமுள்ள பெண். அவள் எப்போதும் ஏனையோருக்கு உதவுகின்றாள். அவள் நாளைக்கு வேலைக்கு வரமாட்டாள்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human