கிழக்கு நோக்கிக் குறித்த எண்ணிக்கையான அடிகளை வைத்து நடந்து மேற்கு நோக்கி அதே எண்ணிக்கையான அடிகளை வைத்து பின்னோக்கி நடத்தல் என்பது பூச்சிய மாற்றத்தை தரும் ஒன்றுக்கொன்று எதிரான இரு செயற்பாடுகள் பற்றிய உதாரணமாகும். பின்வருவனவற்றை வாசிக்க.
A – ஒரே எண்ணைக் கூட்டி, பின்னர் கழித்தல்
B – ஒரே எண்ணால் பெருக்கி, பின்னர் பிரித்தல்
C – 60% ஐக் கூட்டி, பின்னர் 60% ஐக் கழித்தல்
D– வலஞ்சுழியாகத் திரும்பி பின்னர் அதே கோணத்தினூடாக இடஞ்சுழியாகத் திரும்பல்
E – ஓர் ஏணியில் ஒரே எண்ணிக்கையான படிகளில் ஏறுதலும் இறங்குதலும்
இவ்வினாவின் ஆரம்ப வாக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டை ஒத்த செயற்பாடுகள் அடங்கும் செயற்பாடுகள் யாவை?