மனிதன் ஒருவன் ஓர் ஆடு, ஒரு புற்கட்டு, ஒரு புலியுடன் ஓர் ஆற்றைக் கடக்க விரும்பினான். இங்கு ஒரு சிறிய படகு இருந்ததோடு அதன் மூலம் ஒரு தடவையில் இரண்டு விலங்குகளில் ஒன்றை அல்லது ஒரு புற்கட்டை மட்டுமே ஒரு தடவையில் அக்கரைக்குக் கொண்டு செல்ல முடியும். ஆட்டையும் புலியையும் ஒன்றாக விட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் புலி ஆட்டைத் தின்று விடும். இதுபோலவே ஆட்டை புற்கட்டுடன் விட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் ஆடு புற்கட்டைத் தின்று விடும். அவன் இந்தச் சிறிய படகைப் பல தடவைகள் ஆற்றில் அங்குமிங்கும் ஓட்டிச் சென்று எல்லாவற்றையும் அக்கரைக்குப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றான். கீழே தரப்பட்டுள்ள படங்கள் இக்கதையின் எட்டு சந்தர்ப்பங்களை ஒழுங்கு முறையின்றிக் காட்டுகின்றன. இச்சந்தர்ப்பங்களை வரிசைக் கிரமப்படி திருத்தமாகக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
