CGT 2001-48

Author : Admin

Topic updated on 07/26/2017 12:07pm

வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஒரு குளத்தில் இரண்டு ஆமைகள் வாழ்ந்து வந்தன. அவற்றுக்கு இரண்டு நாரைகள் உதவி செய்ய விரும்பின. ஒரு நாள் இரண்டு நாரைகளும் இக்குளத்திற்கு வந்து ஒரு புதிய குளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வதற்கு தம்முடன் வருமாறு ஆமைகளுக்கு அழைப்பு விடுத்தன. ஆமைகள் இணங்கியதுடன் ஓர் ஆமையை முதலில் எடுத்துச் செல்வதற்கு நாரைகள் ஆரம்பமாகின. அவை ஒரு கிராமத்தின் மேலாகப் பறந்து செல்லும்போது சிறு பிள்ளைகள் குழுவொன்று அவற்றைப் பார்த்துச் சத்தமிடத் தொடங்கியது. பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதற்கு ஆமை வாயை திறந்தது. அது ஆமைக்குப் பாரதூரமான விளைவினை ஏற்படுத்தியது. கவலையடைந்த இரண்டு நாரைகளும் அடுத்து இரண்டாவது ஆமையைப் புதிய குளத்திற்குக் கொண்டு செல்லத் தொடங்கின. அவை அக்கிராமத்தின் மேலாகப் பறந்து செல்லும்போது நாரைகளில் ஒன்று எவருக்கும் வாயைத் திறக்க வேண்டாமென ஆமைக்கு அறிவுரை கூறுவதற்கு விரும்பியது. உடனே நாரை தனது வாயைத் திறந்தது. தடி வலுக்கிச் சென்றது. இரண்டாவது ஆமையும் முதலாவது ஆமையின் கதியை அடைந்தது. இக்கதையின் பல சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ள படங்களில் ஒழுங்கு முறையின்றித் தரப்பட்டுள்ளன. இந்தச் சந்தர்ப்பங்களை வரிசைக் கிரமப்படித் திருத்தமாக குறிப்பிடும் விடையைத் தெரிவு செய்க.

Image Tip Image Tip
 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply