X என்ற நாட்டில் விலங்கு விசர் நோய் (Rabies) நுழைவதைத் தடுப்பதை இலக்காகக் கொண்டுள்ள தொற்றுநோய் பரவாத் தடைப் பிரமாணங்கள் இருப்பதன் காரணமாக தனியார் சிலர் செல்லப்பிராணிகளை அந்நாட்டினுள் சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கின்றனர். இவ்வாறான பிரமாணங்கள் இல்லையெனில், செல்லப்பிராணியை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை எழுந்திருக்கமாட்டாது. X என்ற நாட்டில் விலங்கு விசர் நோய் பரவுவதற்குப் பெருமளவிலா காரணம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் செல்லப்பிராணிகளே ஆகையால் தொற்றுநோய் பரவாத் தடைப்பிரமாணங்களை நீக்கிவிட்டால் விலங்கு விசர்நோய் பரவும் அபாயம் குறையக்கூடும்.
பின்வருவனவற்றில் இந்த வாதத்தில் உள்ள குறைபாட்டைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் கூற்று எது?