A,B என்னும் இரு ஆவிப்பறப்புள்ள கரைப்பான்கள் எல்லா விகிதசமங்களிலும் கலந்து இலட்சியக் கரைசல்களை உண்டாக்குகின்றன. ஒரு தரப்பட்ட வெப்பநிலையில் A, B ஆகிய தூய கரைப்பான்களின் ஆவியமுக்கங்கள் முறையே PA o, PB o ஆகும். அதே வெப்பநிலையில் கரைசலில் A, B ஆகியவற்றின் மூல் பின்னங்கள் முறையே XA, XB ஆகும். கரைசலுடன் சமநிலையில் இருக்கும்போது ஆவியவத்தையில் A, B ஆகியவற்றின் பகுதியமுக்கங்கள் முறையே PA, PB ஆகும். அத்தகைய ஒரு தொகுதிக்குப் பின்வரும் கணிதக் கோவைகளில் எது சரியானது?