நொதியை (yeast) உபயோகித்து நொதித்தல் மூலம் வெல்லத்திலிருந்து (சுக்குரோசு, C12H22O11) எதனோல் (கொதி நிலை 78.1oC) ஐத் தயாரிப்பதைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானதன்று?
(a) ஒரு மூல் வெல்லம் 4 மூல்கள் எதனோலையும் 4 மூல்கள் காபன் ஈரொட்சைட்டையும் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
(b) எதனோலின் உயர்ந்த செறிவு நொதித்தலை நிரோதிக்கும் (inhibit). அத்துடன் நொதிப்பின் விளைவிலுள்ள எதனோலின் செறிவு 15% இலும் குறைவாக இருக்கும்.
(c) கூடிய செறிவுடைய எதனோலை நொதிப்புக் கரைசலின் வடிதிரவத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் பெறலாம். அத்துடன் 78 – 80oC இல் காய்ச்சி வடிக்கப்பட்ட பகுதி 100% எதனோலைக் கொண்டிருக்கும்.
(d) 88oC இற்கு மேற்பட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடிக்கப்பட்ட பகுதிகள் உயர் அற்ககோல்களைக் கொண்டுள்ள பியூசல் எண்ணெயைக் கொண்டிருக்கும்.