191 ஆம் 192 ஆம் வினாக்கள் பின்வரும் பந்தியை அடிப்படையாகக் கொண்டவை.
A, B ஆகிய இரு திரவங்கள் ஒன்றோடொன்று இலட்சியக் கரைசல்களை உருவாக்குகின்றன.தூய A யினதும் தூய B யினதும் சாதாரண கொதிநிலைகள் முறையே 80oC உம் 50oC உம் ஆகும். அறை வெப்பநிலையில் அவற்றின் ஆவியமுக்கங்கள் முறையே PA 0 உம் PB 0 உம் ஆகும். A யினதும் B யினதும் சமமூலர்க் கலவை ஒன்று வெற்றிடமாக்கப்பட்ட பாத்திரத்தினுள் வைக்கப்பட்டு அறை வெப்பநிலையில் சமநிலையை அடைவதற்கு விடப்படுகின்றது. சமநிலையிலே திரவ அவத்தையில் A, B ஆகியவற்றின் மூற் பின்னங்கள் முறையே XA உம் XB உம் ஆக இருக்கும் அதேவேளை ஆவி அவத்தையில் அவற்றின் பெறுமானங்கள் முறையே YA உம் YB உம் ஆகும். சமநிலை ஆவி அவத்தையில் A யினதும் B யினதும் பகுதி ஆவியமுக்கங்கள் முறையே PA உம் PB உம் ஆகும்.
பின்வரும் கோவைகளில் சரியானது / சரியானவை?
(a) XA > 0.5 > XB
(b) YA < 0.5 < YB
(c) YA > 0.5 > XB
(d) XA > 0.5 > YB